Categories
மாநில செய்திகள்

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில்….. இந்திய வணிகப் போட்டி ஆணையம் அதிரடி ரெய்டு..!!

சென்னை இந்தியா சிமெண்ட் நிறுவன அலுவலகத்தில் இந்திய வணிகப் போட்டி ஆணைய அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். இந்திய வணிகப் போட்டி ஆணையம் இன்று காலை சென்னை எம்ஆர்சி நகரில் இருக்கக்கூடிய இந்தியா சிமெண்ட் சில் இன்று காலை முதல் போலீஸ் பாதுகாப்புடன் ரெய்டு நடத்தி வருகிறது. கிட்டத்தட்ட 8 அதிகாரிகள் அந்த அலுவலகத்தில் தொடர்ந்து ரெய்டு நடத்தி வருகின்றனர். முறையற்ற வணிக போட்டியில் ஈடுபட்டது தொடர்பான புகாரில் இந்தியா சிமெண்ட்ஸில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. சிமெண்ட் […]

Categories
மாநில செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு: தமிழக அரசுக்கு உத்தரவு …!!

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை உள்ளரங்கில் நடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி  காந்தி ஜெயந்தி அன்று 50க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் தரப்பில் காவல்துறையில் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் சில மனுக்கள் முடிவு எடுக்கப்படாத நிலையிலும், 50 இடங்களில் அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த […]

Categories
அரசியல் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING : தூத்துக்குடியில் சசிகலா புஷ்பா இல்லத்தில் கல்வீசி தாக்குதல்…. பரபரப்பு..!!

தூத்துக்குடியில் முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா இல்லத்தில் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. தூத்துக்குடியில் உள்ள தபால் தந்தி காலணி 8ஆவது தெருவில் வசித்து வருகிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா. பாஜக நிர்வாகியான இவரது வீட்டை மர்ம நபர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அதாவது, பூந்தொட்டி மற்றும் ஜன்னல் கதவுகளை உடைத்து எறிந்து, சசிகலா புஷ்பாவின் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடிகளை உடைத்து எறிந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் […]

Categories
மாநில செய்திகள்

கால் இருக்காது!… நாக்கு இருக்காது!… அமைச்சர் கீதாஜீவனுக்கு எச்சரிக்கை…. பொங்கி எழுந்த சசிகலா புஷ்பா….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பா.ஜ.க தெற்கு மாவட்ட சிறுபான்மை அணியின் சார்பாக கிறிஸ்துமஸ் விழா மற்றும் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது தனியார் மண்டபத்தில் இன்று நடந்தது. இவற்றில் சட்டமன்ற குழு தலைவரான நயினார் நாகேந்திரன், மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா, மாநில பொதுச் செயலாளர் பொன்.பால கணபதி போன்றோர் பங்கேற்று ஏழை- எளிய கிறிஸ்தவ, இந்து, முஸ்லிம் பெண்களுக்கு தையல் மிஷின், மற்றும் சேலைகளை வழங்கினர். இதையடுத்து சசிகலா புஷ்பா பேசியதாவது ” 24 […]

Categories
மாநில செய்திகள் வானிலை

வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. குமரியை நோக்கி நகரும்…. புயலாக மாறுமா?

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம். தென் தமிழகம், குமரி கடலை ஒட்டி உள்ள பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம். இந்த முன்னதாக காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்க கடலில் உருவானது. அதனை தொடர்ந்து நகர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

புதியவகை கொரோனா…. வெளிநாட்டு பயணிகளை பரிசோதனை செய்ய வேண்டும்…. முதல்வர் ஸ்டாலின்..!!

விமானங்களில் வரும் வெளிநாட்டு பயணிகளை பரிசோதனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனா உள்ளிட்டா சில நாடுகளில் புதியவகை பிஎப். 7 கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக இந்தியாவில் 3 பேருக்கு புதியவகை கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அனைத்து மாநிலங்களும் விழிப்புடன் இருக்கவேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் பல்வேறு நாடுகளுக்கு மக்கள் சென்று தமிழகத்திற்கு வரக்கூடிய நிலையில், அவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல 600 சிறப்பு பேருந்துகள் : அரசு போக்குவரத்து கழகம்.!!

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல 600 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம்  முடிவு செய்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு 600 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளது. வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை தலா 300 பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. அதாவது சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை 300 அரசு பேருந்துகள், சனிக்கிழமை 300 அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி அரையாண்டு தேர்வு விடுமுறையும் வருவதால் […]

Categories
மாநில செய்திகள்

கிறிஸ்துமஸ் பண்டிகை…. சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று தான் கிறிஸ்துமஸ். ஒவ்வொரு வருடமும் இயேசுவின் பிறப்பு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கொண்டாடப்படுவது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். இந்த நாள் 12 நாட்கள் தொடர்ச்சியாக கொண்டாடப்படுகிறது. இந்த தினம் இயேசுவின் பிறந்த தினம் தொடங்கி அடுத்த 12 நாட்கள் வரை நீடிக்கின்றது. இதனை அனைவரும் கொண்டாடி மகிழ்வது வழக்கம். இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எர்ணாகுளம் மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே சேலம் […]

Categories
மாநில செய்திகள்

JEE தேர்வு எழுதுவதில் தமிழக மாணவர்களுக்கு சிக்கல்…. தீர்வு குறித்து அமைச்சர் விளக்கம்….!!!!

தமிழக மாணவர்கள் JEE தேர்வு எழுதுவதில் சிக்கல் இருப்பதால் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தேசிய தேர்வு முகமையுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. 2020 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்காமல் தேர்ச்சி என்று மட்டுமே வழங்கப்பட்டது. அதனால் ஜேஇஇ விண்ணப்பிப்பதில் தமிழக மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் உள்ளீடு செய்வதில் இருந்து விளக்கு கோரி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாணவர்கள் JEE தேர்வு எழுத உரிய தீர்வு காணப்படும் என […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : மீண்டும் மாஸ்க் கட்டாயமா?…. புதிய வகை கொரோனா பரவல்…. சற்று நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை..!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. சீனா உள்ளிட்டா சில நாடுகளில் புதியவகை கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக இந்தியாவில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு  அறிவுறுத்தி வருகின்றது. இந்த நிலையில் பல்வேறு நாடுகளுக்கு மக்கள் சென்று தமிழகத்திற்கு வரக்கூடிய நிலையில் அவர்கள் மூலமாக புதிய வகை உருமாறிய கொரோனா தொற்று பரவக்கூடாது என்பதற்காக தடுப்பு நடவடிக்கைகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேவர் போட்டாலும் ஒன்னு தான்… தேவேந்திரன் போட்டாலும் ஒன்னு தான்… சீமான் ஆவேசம்

நாம் தமிழர் கட்சி நடத்திய போராட்டத்தில் பேசிய அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்,  நம்ம எல்லாரும் குறவர்கள் குறப்பய மக்கள்… கோன் என்றால் யாரு ? அரசன்.  நீ அரசன் என்பதை விட உனக்கு பெருமையா என்ன இருக்க்கு ? அப்பறோம் எதுக்கு யாதவ் போட்ட ? உனக்கு என்ன பிரச்சனை ? உனக்கு இந்த நோய் என்றைக்கு போகும். யாதவ் எந்த மொழி சொல்லுச்சு… அவனும் மாடு மேய்க்கிறான்,  நானும் மாடு மேய்க்கிறேன்.  நான் கோன் … […]

Categories
மாநில செய்திகள்

விலைவாசி வியர்வை கண்டித்து அனுமதியின்றி அதிமுக போராட்டம் – 33 வழக்குகள் பதிவு..!!

விலைவாசி வியர்வை கண்டித்து அதிமுக சார்பில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் பால்விலை உயர்வு, மின் கட்டணம், சொத்து வரி, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றுக்காக தமிழக முழுவதும் அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில்  விலைவாசி வியர்வை கண்டித்து அதிமுக சார்பில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் நேற்று சென்னை முழுவதும் 33 இடங்களில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்க கிட்டயேவா…! காலும் இருக்காது, நாக்கும் இருக்காது…. எச்சரிக்கை விடுத்த பாஜக சசிகலா புஷ்பா….!!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பாஜக தெற்கு மாவட்ட சிறுபான்மை அணி சார்பில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பாஜக தலைவர் அண்ணாமலை 24 மணி நேரமும் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். அவரைப் பற்றி பேசும் தகுதி யாருக்கும் இல்லை. மரியாதையாக பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK பெயருக்கு யோசனை சொன்ன ”மதி”…. திமுகவுக்கு கிடைத்த பொக்கிஷம் மதி… உணர்ச்சி பெருக்கில் பேசிய வைகோ …!!

மதிமுக பொதுச்செயலாளர் அரசியல் சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய போது, ரத்தம் சிந்தி, கண்ணீர் சிந்தி, வியர்வை சிந்தி, திராவிட இயக்கத்தை நிலை நாட்டினோம் என்று நாம் சொல்கிறோம் என்றால் அதிலே ”மதி” அவர்களுடைய இரத்தம் இருக்கிறது. ”மதி” அவர்களுடைய குருதி இருக்கிறது.  திராவிட இயக்கக் கொடியை ஏற்றுவதிலேயே அவருடைய ரத்தம் கலந்து இருக்கிறது. அப்படிப்பட்ட ”மதி” அவர்கள்… முதல் வகுப்பிலே முதல் இடத்திலே பல்கலைக்கழகத்தில் அவர் வெற்றி பெற்ற பிறகு…  பெரியாரின்,  அண்ணா அவர்களுடைய  கருத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்கள் ஜே.இ.இ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் உள்ள சிக்கலுக்கு தீர்வு காணப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

தமிழக மாணவர்கள் ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் உள்ள சிக்கலுக்கு தீர்வு காணப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஜே.இ.இ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பத்தில் 10ஆம் வகுப்பு மார்க் குறிப்பிடுவதில் இருந்து விலக்கு தேவை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உட்பட பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளரிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழக மாணவர்கள் ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் உள்ள சிக்கலுக்கு […]

Categories
மாநில செய்திகள்

சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான…. கலந்தாய்வு தேதி அறிவிப்பு…!!!!

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டாரில் ஆயுர்வேத மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த ஐந்து அரசு கல்லூரிகளிலும் உள்ள 330 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் ஒதுக்க ப்படுகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ்-க்கு இபிஎஸ் நோட்டீஸ்…. அரசியலில் புதிய பரபரப்பு….!!!!

தமிழகத்தில் அதிமுகவில் உட்கட்சி பூசல் காரணமாக சமீப காலமாகவே பெரும் பிரச்சினைகள் நிலவி வருகிறது. தலைமை வகிப்பது யார் என்ற போட்டியில் ops-eps இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் ஓபிஎஸ்-க்கு பரபரப்பு நோட்டீஸ் அனுப்பி இபிஎஸ் தமிழக அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளார். நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், “அதிமுக கட்சிக் கொடி, பெயர், லெட்டர் பேடை பயன்படுத்தியது குறித்து பயன்படுத்தியது ஏன்?, அது குறித்து உரிய விளக்கமளிக்க வேண்டும். இல்லையென்றால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்” […]

Categories
மாநில செய்திகள்

12 மணி நேரத்தில்… காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்…. வானிலை மையம்…!!!

வங்க கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆனது 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான பிறகு இலங்கை நோக்கி நகரும் எனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தாழ்வு மண்டலம் குமரிக்கடல் பகுதியை நோக்கி நகருவதால், வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்துமஸ் தினத்தன்று தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நன்றி மறந்து துரோகம் செஞ்ச எடப்பாடி அரசியல் அனாதையாகி விடுவார்”…. சாபம் விட்ட அதிமுக மாஜி அமைச்சர்…..!!!!

சென்னை வேப்பேரியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்த அவர் பேசியதாவது, அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் எடப்பாடி பழனிச்சாமி அரசியல் அனாதையாக மாறிவிடுவார். அதன் பிறகு கட்சியில் தான் சேர காரணமாக இருந்த சேலம் கண்ணன், தன்னை முதல்வராக்கிய ‌ சின்னம்மா சசிகலா, […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகம் விளையாட்டு துறையில் முன்னோடி மாநிலமாக உருவாகும்”…. அமைச்சர் உதயநிதி அறிவிப்பு….!!!!!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியில் உள்ள ரூர்கேலாவில் ஜனவரி 13-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டியில் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் விதமாக இந்தியா முழுதும் ஹாக்கி உலகக் கோப்பை பயணம் செய்கிறது. அந்த வகையில் மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு ஹாக்கி உலகக் கோப்பை வந்தது. இந்த ஹாக்கி உலகக் கோப்பை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்ட நிலையில், அவர் இளைஞர் மற்றும் விளையாட்டு […]

Categories
மாநில செய்திகள்

“தமிழினத்தின் உரிமையை காக்க திராவிட இயக்கம்”…. இசையிலும் தமிழிசையே சிறப்பு…. CM ஸ்டாலின் ஸ்பீச்….!!!!

சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் தமிழ் இசை சங்கத்தின் 80-ம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது, தமிழ் இசை சங்கத்தின் 80-ம் ஆண்டு விழாவில் நானும் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி‌ அடைகிறேன். தமிழகத்தில் தமிழிசை இன்று கொடிகட்டி பறக்கிறது என்றால் அதற்கு காரணம் இந்த தமிழ் இசை சங்கம் தான். வரலாற்று புகழ் பெற்ற ராஜா அண்ணாமலை கட்டிடமானது கம்பீரத்தின் அடையாளமாகவும், கலைச்சின்னமாகவும், இசை […]

Categories
மாநில செய்திகள்

#Breaking: திமுக முன்னாள் எம்பி மஸ்தான் காலமானார்…!!!

மாநிலங்களவை திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான் உடல்நலக்குறைவால் சற்றுமுன் காலமானார். இவர் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவராகவும் இருந்தவர். கருணாநிதி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் மிகவும் நெருக்கமாகவும், அன்பாகவும் இருந்தவர். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்துவார் என கூறப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

“இனி கொரோனா பரிசோதனை கட்டாயம்”…. மத்திய அரசுக்கு அவசர கடிதம் எழுதிய தமிழக அரசு….!!!!

உலக அளவில் சீனா, அமெரிக்கா, ஜப்பான், ஹாங்காங், தென்கொரியா போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் தற்போது வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் ஆன பிஎப் 7 ஒமைக்ரான் வைரஸ் தொற்று குறித்த அறிவுறுத்தல்களை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. இதற்கிடையில் இந்தியாவிலும் பிஎப் 7 வைரஸ் தொற்று ஆனது தற்போது கண்டறியப்பட்டுள்ளதால், சீனாவுடனான விமான போக்குவரத்தை […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (22.12.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (டிசம்பர் 22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகளிலிருந்து, டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

வழக்குகள் போட்டாலும்.. பிரச்சனைகளில் சிக்க வைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.. Vijayabaskar அதிரடி பேச்சு

அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நான் என்ன சொல்கிறேன். எனக்கு ஆயிரம் கஷ்டத்தை கொடுக்கிறீர்கள்,  சோதனை பண்ணுறீங்க, வழக்கு போடுறீங்க,  வம்பு பண்ணுறீங்க, விஜயபாஸ்கர் நடக்கவே கூடாது, முடக்கி கதையை முடிச்சிறனும் என முடிவு நீங்க பண்ணிட்டீங்க. அது நடக்கவே நடக்காது. ஆனால் நம்முடைய தொகுதியைச் சார்ந்த ஏழை மக்களில் கண்களில் வரக்கூடிய ஒரு சொட்டு  கண்ணீர் இந்த ஆட்சியை கவிழ்த்துவிடும் என்பதை நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும். ஆட்சியில் இருப்பவர்கள், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

$ 203க்கு வாங்கும் மத்திய அரசு… $ 133க்கு வாங்கும் தமிழக அரசு… மோடி சர்க்காருக்கு டப் கொடுத்த திராவிட மாடல் ..!!

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, நான் உங்க மூலமா    ஒன்றே ஒன்று கேட்டுக்கொள்கிறேன். பொதுவா இது என்னன்னு கேட்டீங்கன்னா…  தொடர்ந்து அரசியல் மீது,  பல்வேறு துறைகள் மீது அவதூறுகளை பரப்பி வருவதாலும்…  எதற்கெடுத்தாலும்  குற்றச்சாட்டுகளை சொல்வதாலும்….  சொல்லுகின்றோன்… கடந்த ஆண்டு 143 டாலருக்கு மின்சாரம் வாரியம் நிலக்கரி கொள்முதல் செய்து இறக்குமதிக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு,  டெண்டர் விடப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டது. அதுவே ஒன்றிய அரசு 2௦3 டாலர் விலையை நிர்ணயம் செய்து,  மின்வாரியங்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கலைஞர் ”வாரிசு” என்பதால் வரல….! ஏன் இதையும் பேச மறுக்குறீங்க ? C.Mயை வாரிசு அரசியல்னு சொல்பவர்களுக்கு திருமா பதிலடி …!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அண்ணன் அவர்கள் ( ஸ்டாலின் ) இன்றைக்கு இந்த தலைமை பொறுப்பிற்கு வந்திருக்கிறார் என்று சொன்னால்,  அதற்கு அவர் பட்டபாடு என்பது ? அவர் சந்தித்த சவால்கள்,  அவர் சந்தித்த நெருக்கடிகள் சாதாரனது அல்ல.  கலைஞரின் பிள்ளை என்பதினால் வந்து விடுவதில்ல. கலைஞரின் பிள்ளைகள் எல்லாம் இந்த இடத்திற்கு வர முடியவில்லை. தளபதியால் மட்டும் தான் வர […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே குடும்பத்தில் 2 அமைச்சர்கள்.. இது தான் முதல்வர் C.Mயின் சமூகநீதியா.. ? NTK சீமான் கடும் கோபம் …!!

நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஐயா ராமதாஸ் வந்தால் என்னாளு என்று கேப்பான்,  ஐயா திருமாவளவன் வந்தால் என்னாளு கேட்பான், சீமான் வந்தா என்னாளு கேட்பான்,  கார்த்திக் வந்தா என்னாளு, சரத்குமார் வந்தா என்னாளு, ஆனா ஸ்டாலின் வந்தா நம்ம ஆளு. ஏன் சாதி தான் தமிழர் அடையாளம் என்று சொல்ல வைக்கிறான் என்றால் ? தமிழ் பெருங்குடி இனத்து பிள்ளைகளே உங்களிடம் சொல்றேன்.. ஆந்திராவில் சந்திரசேகர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திடீர்னு சாமிக்கு மாலை போட்டு… வேட்டியை கட்டிய சேகர்பாபு… ஓஹோ இதான் காரணமா ? அண்ணாமலை பரபர !!

தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, திமுக சொல்கிறார்கள் பிஜேபிக்காரர்கள் எப்ப பாத்தாலும் கோவிலே சுற்று சுற்றி வருகிறார்கள் என்று, உண்மைதான், பிஜேபி காரர்கள் எப்போதும் கோவிலை சுற்று சுற்றி தான் வருகிறோம், ஏனென்றால் நாங்கள் சுற்றி சுற்றிவரவில்லை என்றால் அங்கு இருப்பதையும் நீங்கள் ஆட்டைய போட்டுட்டு போயிருவீங்க. 70 ஆண்டுகளாக எவ்வளவு ஆட்டைய போட முடியுமோ போட்டுடீங்க.  இப்போது தங்கத்தை வேற உருக்குகின்றேன் என்று ஒரு குரூப் கிளம்பி இருக்கிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினி, விஜய், அஜித் யாராக இருந்தாலும்…. நாங்க போராளிகள் கூட்டம்…. சினிமா பற்றி கேட்காதீங்க… நச்சுன்னு பேசிய வேல்முருகன்…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இனி  தமிழ்நாடு அரசு பதவிகள் பெற வேண்டும் என்று சொன்னால், தமிழ் எழுத – படிக்க தெரிய வேண்டும். பேச தெரிய வேண்டும். தமிழில் வைக்கின்ற தேர்வில்  தேர்ச்சி பெற வேண்டும் என்கின்ற ஒரு சட்டத்தை கொண்டு வந்து சட்டமன்றத்தில், போராடி பேசி – வாதாடி – போராட்டத்தின் மூலமாக சட்டமன்ற பேச்சின் மூலமாக கொண்டு வந்தது தமிழக வாழ்வுரிமை கட்சி. தமிழ்நாட்டில் இருக்கின்ற பெப்சி தொழிலாளர்களோ, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெறும் ஒன்றை வருஷம் தான்…! DMK அரசு சரித்திர சாதனை… காலரை தூக்கிவிடும் அமைச்சர் …!!

திமுக சுரப்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி,  நான் இந்த நேரத்தில் இங்கே வருகை தந்திருக்கும் கழக  நிர்வாகிகளுக்கும்…  கழகத்தினுடைய செயலாளர்களுக்கும்….  பொது மக்களுக்கும் வேண்டுகோளாக வைப்பது ? வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலை நாம் மனதில் வைக்க வேண்டும். கொஞ்ச நாளைக்கு முன்னாடி இங்கே வந்து பேசின டெட் பாடி இல்ல எடப்பாடி. SORRY  கொஞ்சம் தடுமாற்றம் வந்துடுச்சு. தேர்தலுக்கு முன்னாடி கொரோனா வந்துச்சு. நம்முடைய கழகத் தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது,  இந்த கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. இனி சூப்பர் பேருந்தில் போகலாம்…. அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் இயங்கும் பழைய பேருந்துகளுக்கு பதிலாக ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு பேருந்து 42 லட்சம் ரூபாய் என்ற மதிப்பீட்டில் BS-VI வகை டீசல் பேருந்துகளை வாங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதில் அறுபது சதவீதம் நகரப் பகுதிகளிலும் 40 சதவீதம் தொலைதூர பேருந்து சேவைக்கும் பயன்படுத்தப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பழைய பேருந்துகளில் மழைக்காலங்களில் மழை நீர் உள்ளே சிந்துவதாக பல புகார்கள் தொடர்ந்து எழுந்த நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

5 வது தலைமுறை…! நாளை DMK தலைவராக வரப்போகும் உதயநிதி… பிள்ளையார் சுழி போட்ட துரைமுருகன்…!!

திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன், பேராசிரியர் அன்பழகன் என்னிடத்திலே சொல்லி இருக்கிறார், நான் கூட அவரை என்னவென்று நினைத்தேன். ஆனால் அவர் அப்பாவை விட கெட்டிக்காரனாக இருக்கிறான். எனக்கு என்ன குறை, வயசாகி விட்டது.  நாளைக்கு போலாம்.. அதற்கு மறுநாள் போகலாம்… ஆனால் இந்த இயக்கம் போய் விடக்கூடாது. இன்னொரு இயக்கத்தை உருவாக்குவதற்கு நம்மிடம் ஆள் இல்லை, இந்த ஆட்சி போகிறது, வருகிறது. நாளைக்கு போகும், நாளை […]

Categories
மாநில செய்திகள்

10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள்…. டிசம்பர் 26 முதல் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்….!!!!

தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் பொது தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் ஜனவரி 3ஆம் தேதி வரையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு […]

Categories
மாநில செய்திகள்

நாளையுடன் முடிவடைகிறது தேர்வு…. தமிழக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் அரையாண்டு தேர்வு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் நாளையுடன் அரையாண்டு தேர்வு முடிவடைகின்றது. இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் அதாவது டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு வரை மாணவர்கள் அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்படுகின்றது. மீண்டும் ஜனவரி இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். நாளை தேர்வு முடிந்தவுடன் மாணவர்கள் சொந்த ஊர் மற்றும் உறவினர்களின் ஊர்களுக்கு கிளம்புவார்கள் என்பதால் கூடுதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு இனி இதற்கு சர்டிபிகேட் தேவையில்லை…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்கள் இரண்டு வருடங்களுக்குப் பிறகு முழு பாடத்திட்டத்தின் படி பொது தேர்வு எழுத உள்ளனர். அதனால் அரையாண்டு தேர்வுக்கு முன்பே முழு பாடத்திட்டத்தையும் நடத்தி முடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்ட நிலையில் அனைத்து பாடங்களும் நடத்தி முடிக்கப்பட்டன. அரையாண்டு தேர்வு முடிவுகளுக்கு பின்னர் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு மற்றும் செய்முறை தேர்வுகள் தொடங்கி விடும். இந்நிலையில் தமிழகத்தில் பொதுத்தேர்வு மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இளைஞர்களே…! நல்லா கட்சிக்கு வேலை செய்யுங்க; உங்க உழைப்புக்கு மரியாதை கிடைக்கும்; உதயநிதி அட்வைஸ்!!

திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  நாசர் அண்ணன் பேசும்போது சொன்னார்கள்….  இளைஞர் அணி அமைப்பாளராக நம்முடைய தலைவர் அவர்கள், இப்போது முதல்வர்.. அப்போது  மாநில இளைஞரணி அமைப்பாளராக இருக்கும்போது…  நம்முடைய ஆவடி நாசர் அவர்கள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருந்தார். இப்போது நம்முடைய தலைவர் முதலமைச்சராகிவிட்டார், நம்முடைய நாசர் அவர்கள் அமைச்சராகிவிட்டார். அவர் அமைச்சரானாலும், அதற்கு முன்பு மாவட்ட அமைப்பாளராக இருந்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது வெறும் ஆரம்பம் தான்… “தி.மு.க-விற்கு விரைவில் முடிவுரை எழுதப்படும்”.. 2024-ல் டார்கெட் 25… அண்ணாமலை பேச்சு…!!!!!!!

கோவை குறிச்சி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள், காது கேட்கும் கருவி உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இந்த விழாவில் சுமார் 100 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் கட்சி தொண்டர்கள் மற்றும் பயனாளிகள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதன் பின் சிறப்புரை ஆற்றி  பேசிய பா.ஜ.க  தலைவர்அண்ணாமலை, “ஆண்டவன் எங்கள் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ வைக்கிறார். தேசத்தை […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: புதிய பேருந்துகள் வாங்க அரசாணை வெளியீடு….!!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகில் கழகத்தில் இயங்கும் பழைய பேருந்துகளுக்கு பதிலாக புதிதாக 10,00 புதிய பேருந்துகளை வாங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒரு பேருந்து 42 லட்சம் என்ற மதிப்பீட்டில் BS-VI வகை டீசல் பேருந்துகளை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் இதில் 60% நகர பகுதிகளிலும், 40 சதவீதம் தொலைதூரப் பேருந்து சேவைக்கும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்கள் நாத்திகம் பேசவில்லை….! தடம் மாறி செல்லும் DMK …!! எங்கே போச்சு திராவிட கொள்கை…!!

உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு விழா குறித்தான கேள்விக்கு பதில் அளித்த டி.கே.எஸ். இளங்கோவன், உதயநிதி ஸ்டாலின் கட்சி வெற்றிக்கு சுத்தி சுத்தி பிரச்சாரம் செய்தார். அவரை கட்சி ஏற்றுக் கொண்டது. இதில் என்ன வாரிசு அரசியல் இருக்கிறது ? அவர் திமுகவின் குடும்பம். பிஜேபி கட்சியில் வாரிசு இல்லையா ? நாத்திகம் நாங்கள் பேசவில்லை. ஒன்றே குலம்,  ஒருவனே தேவன் என்று  எங்கள் கட்சியை உருவாக்கிய அறிஞர் அவர்கள் சொன்னார்கள். நாங்கள் இதுபோன்ற மக்கள் சமத்துவத்தை முன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாட்ச் விவாகரத்தை வைத்தே…. 25 MPக்களை பாஜக வெல்லும்…. ஸ்கெட்ச் போடும் அண்ணாமலை….!!!!

ரபேல் வாட்ச் விவகாரத்தை வைத்தே பாஜக 25 எம்பிக்களை வெல்லும் என அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை தனக்கு ரபேல் விமானத்தை ஓட்டும் வாய்ப்பு தான் கிடைக்கவில்லை. அதன் காரணமாக தன் உடம்பில் உயிர் இருக்கும் வரை ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் செய்யப்பட்ட கைக்கடிகாரம் தன்னுடைய உடம்பில் இருக்கும் என்று கூறினார். இந்த கைக்கடிகாரத்தின் விலை 5 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து அண்ணாமலை வாட்ச் பற்றிய […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வு தேதி…. தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஒரு சில தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றன. இந்நிலையில் கடந்த வாரம் தமிழகத்தில் மாண்டஸ்புயல் காரணமாக கடந்த பத்தாம் தேதி நடைபெற இருந்த தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் வனத்தொழில் பழகுணர் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு: முதல்வர் அறிவிப்பு…. தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை மிக கோலாகலமாக கொண்டாடப்படும். அதனால் அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏதுவாக பொங்கல் பரிசு தொகுப்பு ஒவ்வொரு வருடமும் அரசு தரப்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த வருடம் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் வருகின்ற ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் பொங்கல் பரிசு குறித்து முதல்வர் ஸ்டாலின் விரைவில் அறிவிப்பாளர் என அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…! “இதற்கு” “இந்த” சர்டிபிகேட் கட்டாயமில்லை…. பள்ளிக்கல்வித்துறை திடீர் உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் நடப்பு கல்வியாண்டில் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு மாணவர்கள் முழு பாடத்திட்டத்தின் படி பொது தேர்வை எழுத உள்ளார்கள். இதனால் அரையாண்டு தேர்வுக்கு முன்னதாகவே முழு பாடத்திட்டமும் மாணவர்களுக்கு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வு முடிந்த பிறகு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு மற்றும் செய்முறை தேர்வு தொடங்கி பொது தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரிக்கும் பணிகள் பள்ளிகளில் தீவிரமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் தப்பு பண்ணிருந்தா சொல்லுங்க…. பகிரங்கமா மன்னிப்பு கேட்கிறேன்…. OPS வருத்தம்…!!!

அதிமுகவில் உட்கட்சி பூசல் விவகாரம் பூதாகாரமாக வெடித்துள்ளது. இதனால் OPS மற்றும் EPS இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் OPS தனது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை சென்னையில் நேற்று காலை 10 மணிக்கு கூட்டினார் சென்னை வேப்பேரி ரிதர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் இந்த் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், துணை முதலமைச்சர் டம்மி பதவி என்று எனக்கு தெரியும் . 4 வருட ஆட்சியில் நான் எதும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்பாவை விட கெட்டிக்காரனாக இருக்கிறான்: பெருமையோடு சொன்ன துரைமுருகன்…!!

திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன், பேராசிரியர் அன்பழகன்  தலைவர் கலைஞரை தலைமையேற்று மூன்றாவது தலைமுறை பார்த்தவர், அதற்குப் பிறகு அவருடைய மறைவிற்குப் பிறகு தளபதியை தலைவராக ஏற்று நாலாவது தலைமுறையும் பார்த்தவர், நாளை வரப்போகின்ற உதயநிதிக்கு வாழ்த்து கூறி,  ஐந்தாவது தலைமுறையும் பார்த்தவர். நம்மை விட கட்சி பெரிது என்று கருதுகிறவன் தான், இந்த கட்சியிலே நிலைக்க முடியும் என்று சொன்னார். மற்ற கட்சிக்கும்,  நம்ம கட்சிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

மின்வாரியத்தில் மாத வருவாய் ரூ.1000 கோடியாக உயர்வு… அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!!

தமிழகத்தில் மின் கட்டணம்  உயர்த்தப்பட்ட பின் மின்வாரியத்தின் மாத வருவாய் ரூ.1000 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனாலும் இது திட்டமிட்டதை விட சற்று குறைவாக தான் இருக்கிறது எனவும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். தமிழக மின்வாரியத்திற்கு கூடுதலாக ரூ.19,000 கோடி வருவாய் ஈட்ட வேண்டும் என திட்டமிட்டு இருந்தோம். தற்போது வரை சில கட்டணங்களை நாங்கள் சில பிரிவுகளுக்கு அறிவிக்கவில்லை. இந்நிலையில் மாதத்திற்கு மின்வாரியத்திற்கு வருவாய் ஆயிரம் கோடியாக உள்ளது என செந்தில் பாலாஜி கூறியுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

உங்களுக்கு தைரியம் இருந்தால் அதை பண்ணுங்க?…. இபிஎஸ்-ஐ கடுமையாக சாடிய ஓ.பன்னீர்செல்வம்…..!!!!

எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக செயல்படும் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட செயலாளர்களையும், மாநில நிர்வாகிகளையும் ஓ.பன்னீர்செல்வம் நியமித்துள்ளார். தன்னால் 88 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், 100க்கும் அதிகமான மாநில நிர்வாகிகளும் ஓ.பன்னீர்செல்வம் அணியில் செயலாற்றி வருகின்றனர். இந்நிலையில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உடன் சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையிலுள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை கூட்டத்தை இன்று நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது, எனக்கு சோதனை வந்தபோது என்னை தாங்கிப்பிடித்தது […]

Categories
மாநில செய்திகள்

“கருணாநிதி குடும்பத்தை விட அந்த கும்பலே மேல்”…. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ஸ்பீச்…..!!!!!

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், சொத்துவரி உள்ளிட்ட விலைவாசி அதிகரிப்பை கண்டித்தும் இபிஎஸ் தலைமையிலான அதிமுகவினர் மாவட்டங்கள்தோறும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த அடிப்படையில் வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் எதிரில் தி.மு.க அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேட்டையும், பல வகையிலான விலைவாசி உயர்வை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அவற்றில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்றார். அப்போது கே.சி.வீரமணி பேசியதாவது “இந்தியாவில் 520 வாக்குறுதிகளை கொடுத்தது தி.மு.க கட்சி மட்டும்தான். எனினும் அதில் […]

Categories
மாநில செய்திகள்

“கோரிக்கைகள் வரும் பட்சத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்”… அமைச்சர் மா.சுப்ரமணியன் பேச்சு…!!!!!

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது, கடந்த 2021 ஆகஸ்ட் 5-ஆம் தேதி மக்களை தேடி மருத்துவம் முதல்வர் ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. இந்நிலையில் அந்தத் திட்டத்தின் மூலம் மக்கள் தொடர்ந்து பயனடைந்து வந்த நிலையில் தற்போது அது ஒரு கோடியை எட்டியுள்ளது. இதற்காக ஒரு கோடியாவது பெட்டகத்தை பெறும் நபர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதில் திருச்சி மாவட்டம் சன்னாசிப்பட்டியை  சேர்ந்த அந்த நபருக்கு முதல்வர் […]

Categories

Tech |