Categories
மாநில செய்திகள்

தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு….. போக்குவரத்து மாற்றம்….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

மானாமதுரை – மேல கொன்னகுளம், திண்டுக்கல் – அம்பாத்துரை ராஜபாளையம் – சங்கரன்கோவில் மற்றும் சூடியூர் – பரமக்குடி ரயில் நிலையங்கள் இடையே செப்டம்பர் மாதத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக ராமேஸ்வரம் – மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் நாளை முதல் செப்டம்பர் 30 வரை வியாழக்கிழமை தவிர ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11.00 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 01.30 மணிக்கு 150 நிமிடங்கள் காலதாமதமாகவும், மதுரை – […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும்…. வானிலை ஆய்வு மையம்…!!

தமிழகம், புதுச்சேரியில் 19ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரியில் 19ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: ஓபிஎஸ்-க்கு எதிரான வழக்கு தள்ளுபடி – நீதிமன்றம் அதிரடி உத்தரவு ..!!

போலீஸ் பாதுகாப்பை தவறாக பயன்படுத்திய ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னத்துக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை அவர் தவறாக பயன்படுத்தி உள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஈபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்ற பன்னீர்செல்வம் தனக்கு பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட போலீஸோடு ஆயுதங்களுடன் சென்று தாக்குதல் […]

Categories
மாநில செய்திகள்

“மண்டலம் மேன்மை விருது” வழங்கும் விழா….. தபால்துறை மூலம் 9 லட்சம் கோடிகள் விற்பனை….. அஞ்சல் துறை தலைவர் பெருமிதம்…..!!!!

சென்னை நகர மண்டலத்தில் தபால் துறையின் 2021-2022 ஆம் ஆண்டு சிறப்பாக பணியாற்றிய கிளைகள், அதன் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு ‘மண்டலம் மேன்மை விருது’ என்ற பெயரில் விருதுகள் வழங்கும் விழா சென்னை எழும்பூரில் உள்ள ஒட்டலில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி.நடராஜன் தலைமை தாங்கினார். அஞ்சல் துறை இயக்குனர் கே.சோமசுந்தரம் முன்னிலையை வகித்தார். தமிழக வட்ட முதன்மை அஞ்சல் துறை பி.செல்வகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து […]

Categories
மாநில செய்திகள்

தசரா விழா….. ஆபாச நடனங்களுக்கு தடை….. மதுரை கோர்ட் அதிரடி உத்தரவு…..

தூத்துக்குடி மாவட்ட குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தசரா விழா விமர்சனையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விரைவில் தசரா கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டில் தசரா விழா குறித்து மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில், இந்த தசரா விழாவில் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஏராளமான பணம் செலவழித்து சென்னை, மும்பையில் இருந்து நடன பெண்கள், துணை நடிகைகள், சின்னத்திரை நாடக நடிகர்களை அழைத்து வந்து […]

Categories
மாநில செய்திகள்

நடப்பு கல்வியாண்டில்….. பொது காலாண்டு தேர்வு கிடையாது….. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பெரும் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகள் சரியாக இயங்கவில்லை. மாணவர்களிடையே கற்றல் இடைவெளி ஏற்படாமல் தவிர்க்க மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. பொது தேர்வு ரத்து செய்யப்பட்டு, இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆனால் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் இயல்பாக பள்ளிகளுக்கு சென்று வருகின்றன. மேலும் இந்த […]

Categories
மாநில செய்திகள்

“பசி சுமையை போக்குவது தான் முதல் கடமை” இந்த திட்டம் வரலாற்றில் என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும்…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்….!!!!

தமிழகத்தில் பள்ளி குழந்தைகளுக்காக முதல்வர் ஸ்டாலின் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். இந்த திட்டத்தை அண்ணா பிறந்த நாளான இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி முதல் கட்ட துவக்கமாக நகராட்சி, மாநகராட்சி மற்றும் கிராமங்களில் உள்ள 1545 பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: TNPSC தேர்வு….. புதிய பணியிடம்….. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

உதவி புள்ளியியல் புலனாய்வாளர், புள்ளியியல் தொகுப்பாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாகவுள்ள 217 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று TNPSC சற்றுமுன் அறிவித்துள்ளது. தகுதியானவர்கள் (BC,MBC,SC/ST) இன்று முதல் அக்.14ம் தேதி வரை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அக்.19 21 வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு 2023 ஜனவரி 29ஆம் தேதி கணினி வழித் தேர்வாக நடைபெறும் என அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

கொரோனாவை விட…… தமிழகம் முழுவதும் மிரட்டும் புதிய காய்ச்சல்….. அச்சத்தில் மக்கள்….!!!!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தீவிரம் சற்று குறைந்துள்ள நிலையில் தற்போது குழந்தைகளுக்கு ப்ளூ காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. எழும்பூர் மருத்துவமனையில் நேற்று ஒரே நாளில் 100 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது போன்று கோவை, மதுரை, திருச்சி, நெல்லை உட்பட பல்வேறு இடங்களிலும் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் இன்று சென்னை குழந்தைகள் மருத்துவமனையில் 18 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதியாகியுள்ளது. சாதாரண காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 282 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடா…..? “அந்தப் பேச்சுக்கே இடமில்லை” போலியான தகவல்களை பரப்புவது ஏன்….? அமைச்சர் செம காட்டம்…..!!!!

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக போலியான தகவல் பரவுவதாக அமைச்சர் கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் அருகே பேரண்டபள்ளி கிராமத்தில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் கைத்தறி அமைச்சர் காந்தி ஆகியோர் திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினர். அதன்பின் மகப்பேறு உதவி திட்டம், பிறப்பு சான்றிதழ் மற்றும் சக்கர நாற்காலிகள் போன்றவைகளை 25 பயனாளிகளுக்கு அமைச்சர்கள் வழங்கினார்கள். இதனையடுத்து அமைச்சர் மா. […]

Categories
மாநில செய்திகள்

பண்டிகை காலம்…. தமிழகத்தில் 2 மடங்கு உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம்…. வெளியான ஷாக் நியூஸ்….!!!

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்துகளை டிக்கெட் விலை முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். அதன் படி சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு ரூ.2500 முதல் அதிகபட்ச மாக ரூ.3,200 வரை கட்டணம் உயர்ந்துள்ளது. அதனைப் போல திருநெல்வேலிக்கு அதிகபட்சமாக ரூ.3950, மதுரைக்கு 3100 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 2 முதல் 3 மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே […]

Categories
மாநில செய்திகள்

ஒருங்கிணைந்த இலங்கை வாழ் தமிழர் முகாம்….. “17.84 கோடி மதிப்பீட்டில் 321 வீடுகள்” தொடங்கி வைத்தார் முதல்வர்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோட்டனூத்து, அடியனூத்து, கோபால்பட்டி ஆகிய பகுதிகளில் இலங்கை வாழ் தமிழர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் உள்ள இலங்கை வாழ் மக்கள் கடந்த சில வருடங்களாகவே அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வந்தனர். இதனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தமிழக சட்டமன்ற பேரவையில் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி தோட்டனூத்து, அடியனூத்து, கோபால்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள இலங்கை வாழ் தமிழர்களின் முகாம்களை […]

Categories
மாநில செய்திகள்

உள்துறை அமைச்சரே! “இது இந்தியா தான், ஹிந்தியா அல்ல” இந்தி மொழி பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி….!!!!

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஹிந்தி மொழி தொடர்பான பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் தக்க பதிலடி கொடுத்துள்ளார். இந்தியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 14-ஆம் தேதி இந்தி திவஸ் என்ற பெயரில் இந்தி மொழி நாள் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா நமது கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் ஆன்மாவை புரிந்து கொள்வதற்கு அனைவரும் ஹிந்தி மொழியை கற்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதோடு நாட்டின் ஆட்சி நிர்வாகம், ஆராய்ச்சி ஆகியவற்றை நம்முடைய உள்ளூர் மொழி மற்றும் அலுவல் […]

Categories
மாநில செய்திகள்

அப்படிப்போடு…! இந்திய அளவில் ட்ரெண்டிங் நம்பர் 1ல்…. டுவிட்டரை தெறிக்கவிடும் ஹேஷ்டேக்…..!!!!

தமிழ்நாட்டின் மாநகராட்சி, நகராட்சி, ஊரகம் (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் (1 முதல் 5ஆம் வகுப்பு வரை) படிக்கும் 1,14,095 மாணவ, மாணவிகளுக்கு முதல் கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக 33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் என்ற பெயரில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான இன்று, மதுரை நெல்பேட்டையிலுள்ள ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில், 1 முதல் 5ஆம் […]

Categories
மாநில செய்திகள்

இந்த பள்ளியின் +1, +2 மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற….. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…..!!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் இடையே நல்ல மதிப்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் +1, +2 வகுப்பில் குறைவான மாணவர்கள் இருந்தால் அருகில் உள்ள வேறு பள்ளிக்கு மாற்ற பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் 30க்கும் குறைவான, ஊரகப் பகுதிகளில் 15க்கும் குறைவான மாணவர்கள் இருந்தால், வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் 600க்கும் […]

Categories
மாநில செய்திகள்

பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க இன்றே(15.09.22) கடைசி நாள்….. எப்படி விண்ணப்பிப்பது….? முக்கிய அறிவிப்பு….!!!!

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும் 2023 ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு கடந்த மே 1 முதல் 2022 செப்டம்பர் 15 ம் தேதி (இன்று) வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. பத்ம விருதுகளுக்கு https://awards.gov.in என்ற முகவரியில் உள்ள தேசிய விருதுகளுக்கான இணையதளத்தில் ஆன்லைன் வழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த விருதுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் விருதுகள் […]

Categories
மாநில செய்திகள்

திங்கள் முதல் வெள்ளி வரை மாணவர்களுக்கு…… முதல்வர் சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்திற்கான சிற்றுண்டி வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். காலை 8 மணிக்கு மதுரை ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் இத்திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு காலை உணவு வழங்கி அவர்களுடன் அமர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உணவு அருந்தினார். இத்திட்டத்தின் மூலம் 1 -5ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு வேலை நாட்களில் காலை உணவு வழங்கப்படுகிறது. திங்கட்கிழமை – உப்புமா வகை ரவா உப்புமா […]

Categories
மாநில செய்திகள்

ஏன் டயர்டா இருக்க ? கேட்டதும் அதிர்ந்த C.M …. உடனே உத்தரவு போட்ட ஸ்டாலின்… தமிழகத்தில் இனி செம திட்டம் ..!!

மதுரை மாநகராட்சி ஆதிமூலம் தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்த பின் அங்கு பேசிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், கருணை வடிவமான திட்டம் தான் இந்த காலை சிற்றுண்டி திட்டம்.  நான் சென்னையில் அடிக்கடி மாநகராட்சி பள்ளி, அரசு பள்ளிகளுக்கு ஆய்வு மேற்கொள்கின்ற போது, ஒரு முறை ஒரு பள்ளிக்கு நான் சென்றேன். ஒரு நிகழ்ச்சிக்காக போயிருந்தேன். அப்போ அங்க இருக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புதிய தமிழகம் கட்சியை முடக்க சதி – கிருஷ்ணசாமி பரபரப்பு பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, அண்மைக்காலமாக புதிய தமிழகம் கட்சியினுடைய அரசியல் ரீதியான நடவடிக்கைகளுக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டைகள் போடுகின்ற சூழ்நிலை உருவாகி வருகின்றன. குறிப்பாக காவல்துறையை பயன்படுத்தி எங்களுடைய  அரசியல் ரீதியான நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கும், முடக்கி போடுவதற்கு உண்டான சதி செயல்கள் நடைபெறுகின்றன. புதிய தமிழகம் கட்சியின் சார்பாக ஆண்டுக்கு மூன்று நிகழ்ச்சிகளை தொடர்ந்து தவறாமல் நடத்தி வருகிறோம். ஒன்று ஜூலை மாதம் 23ஆம் தேதி அதாவது 1999 ஆம் ஆண்டு மாஞ்சோலை தேயிலைத் […]

Categories
மாநில செய்திகள்

சாப்பாடு நல்லா இருக்கா…. குழந்தைகளுக்கு உணவு பரிமாறி… தரையில் அமர்ந்து சாப்பிட்ட தமிழக முதல்வர் ..!!

தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் என்பது இன்று மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டது. மதுரையில் தொடங்கி வைக்கப்படும் இந்த திட்டம் என்பது தமிழகம் முழுவதும் இன்று முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது. அரசு பள்ளி மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாடு போகவும், இடைநிற்றலை  தவிர்க்கவும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் என்ற பேரில் இந்த திட்டம் என்பது தொடங்கப்படும் என ஏற்கனவே சட்டப்பிரிவையில் 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொழைக்க வந்த இடத்துல இப்படி பேசும் H Raja வுக்கு சேட்டை திமிரு.. Seeman கோபம்..!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  எங்க ஆள் சுடிதார் போட்டு இருக்கிறார், மோடி என்ன வேட்டி சட்டை போட்டு இருக்கிறாரா? கவிப்பேரரசு வைரமுத்து சுடிதார் போட்டு இருக்கிறாரா ? சுடிதார் இப்படித்தான் இருக்குமா? சும்மா அவரையே  பேசிட்டு, பீகாரில் இருந்து வந்து, மானத் தமிழ் மண்ணில் பிழைக்க வந்த இடத்தில், தமிழருக்கு இருக்கும் பெருமைமிக்க அடையாளமாக இருக்கும் ஒரு கவிஞரை வந்து, சும்மா ஏதாவது பேசிட்டு இருக்க கூடாது. இவர் சுடிதார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொத்தாக சிக்கிய ADMK…! நடுங்க வைக்கும் ஸ்டாலின்.. கலைஞரை ஸ்கோர் செய்து கலக்கல் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்,  முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெறுகின்ற சோதனை என்பது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பழிவாங்கும் நடவடிக்கை. ஏற்கனவே இரண்டு முறை சோதனை நடத்தி எந்த ஆவணங்களும் கைப்பற்ற முடியாத நிலையில், மீண்டும் புதிதாக ஒரு வழக்குகளைபோட்டு, சோதனை என்ற பெயரில் எதிர்க்கட்சிகளை அடக்கி, ஒடுக்கி, அழிக்கலாம் என்று ஆளுகின்ற திராவிட முன்னேற்றக் கழகம் அரசு நினைக்கின்றது. ஸ்டாலின் ஆள தெரியாத முதலமைச்சராக செயல்பட்டு கொண்டிருக்கின்றார். முதல்வர் முக.ஸ்டாலினுடைய  […]

Categories
மாநில செய்திகள்

இனி காலை 6 முதல் மதியம் 2 மணி வரை வேலை….. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

மருத்துவத்துறையில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள் ஷிப்ட் முறையில் பணியாற்றும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை, மதியம் ஒரு மணி முதல் இரவு 9 மணி வரை, இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை என மூன்று ஷிப்டாக பணியாற்ற வேண்டும். இதில் முதல் ஷிப்டில் 50 சதவீதம் பேரும், இரண்டாவது சிப்டியில் 25 சதவீதம் பெயரும் மூன்றாவது ஷிப்டில் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (15.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(செப்…15) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (செப்..15) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. கோவை டாட்டாபாத் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , பீளமேடு துணை மின் நிலையம், ஆர்கஸ் நகர், பெருமாள் கோவில், ரங்கவிலாஸ் மில், மீனா எஸ்டேட், பாரதி நகர், பி. எஸ். ஜி மருத்துவமனை, இந்துஸ்தான் மருத்துவமனை, கருணாநிதி நகர், கண்ணபிரான் மில் ரோடு ஒரு பகுதி, ஸ்ரீபதி நகர், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ்நாடே வேண்டாம்…! வேறு மாநிலம் போய்டலாம்… புலம்ப வைத்த திராவிட மாடல்… செல்லூர் ராஜீ பரபரப்பு பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, வீட்டு வரி உயர்வு 100 % , மின்சார கட்டணமும் 100 சதவீதம் உயர்வு என்னும் போது , மக்கள் இருக்கின்ற பொருளாதார நெருக்கடியில் மிகப்பெரிய துன்பம். நம்முடைய வணிக பெருமக்களே பல எதிர்ப்புகளை தெரிவித்து இருக்கிறார்கள், சிறுகுறு வியாபாரிகள், வணிகர்கள் எல்லாம் நாங்கள் பேசாமல் இந்த தொழிலை விட்டுட்டு வேற தொழில் போக வேண்டும் அல்லது வேறு மாநிலத்துக்கு தான் போகணும் என்கிறார்கள். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு மொபைல் போனில் தேர்வு?…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தொடக்கக்கல்வி மாணவர்களுக்கு மொபைல் போனில் தேர்வு நடத்துவதற்கு பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில்,அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மொபைல் போனில் என்னும் எழுத்தும் செயலி மூலமாக வருகின்ற 19ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தொகுத்தறி மதிப்பீடு தேர்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே பள்ளிக்கல்வித்துறையின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சாதகமான தீர்ப்பு வந்துடுச்சு..! ஆளுநர் மாளிகை ஓடிய பாஜக… அமைச்சர் பதவிக்கு ஆப்பு .. ஷாக்கில் C.M ஸ்டாலின்.. பெரும் பரபரப்பில் DMK

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைவர்கள் நயினார் நாகேந்திரன்  தலைமையில் ஆளுநரை சந்தித்துள்ளார்கள். முக்கியமான காரணம் என்னவென்றால், தமிழகத்தினுடைய ஊழல் அமைச்சராக, ஊழலுக்கு எல்லாம் ஒரு தலைவராக இருக்கக்கூடிய அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் பதவி விலக வேண்டும் என்கின்ற ஒரு கோரிக்கையோடு ஆளுநரிடம் சென்றுள்ளோம். செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் பண்ணனும், உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்று வலியுறுத்துவதற்காக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் சென்றிருக்கின்றார்கள். காரணம் […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு பணி…. இலவச வகுப்பில் சேர உடனே இதை பண்ணுங்க…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்பதற்கு வேலை வாய்ப்பு துறை அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி கம்பைன்ட் கிராஜுவல் லெவல் தேர்வுக்கான அறிவிப்பை விரைவில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட உள்ளது.அதனால் சென்னை தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகின்ற செப்டம்பர் 21ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்தத் தேர்வு எழுத ஏதேனும் ஒரு பட்டப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தீடிரென கசிந்த தகவல்…! நகரவே விடாத போலீஸ்…. ஷாக் ஆன சீமான்…, மதுரையில் பரபரப்பு ..!!

பழம்பெருமை வாய்ந்த விக்டோரியா எட்வார்ட் மன்றம் என்பது ஒரு பொது சொத்து. உள்ளே மக்கள் படித்து பயன்பெற நூலகம், திரையரங்கு, அரங்க கூட்டம் நடத்துவதற்கான அரங்கு இதெல்லாம் இருக்கிறது, இதெல்லாம் ஒரு பொதுச்சொத்து. அதுபோக இங்கே பல வணிக நிறுவனங்கள் கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டிருக்கிறது ஒரு நாள் திடீர்னு நான் மட்டும் யாருக்கும் சொல்லாமல் உள்ளே சென்று பார்த்தால் என்ன செய்வீர்கள்? அடிக்கடி மதுரைக்கு வருவேன். வரும்போது இன்றைக்கு சுவரொட்டி ஓட்டிவிட்டார் நான் பார்க்க போகிறேன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK ஹாட்ரிக் தோல்வி… படுத்துக்கொண்டே ஜெயிச்ச ADMK… காலரை தூக்கிவிட்ட ஆர்.பி உதயகுமார் …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்,  இன்றைக்கு டிஜிட்டல் உலகம். இன்றைக்கு உள்ளங்கையில் உலகத்தை கொண்டு வரும் டிஜிட்டல் உலகத்திலே.. வீட்டிலிருந்து  அனைத்து நூலகத்தையும் கூகுளில் போனால் எல்லா நூலகத்தையும் விவரங்களையும் நாம் பெற முடியும். ஆனால் இன்றைக்கு அவருடைய தந்தையார் பெயரை நிலை நிறுத்துவதற்காக அவர் எடுத்திருக்கின்ற முயற்சி, அவர் காட்டுகின்ற அக்கறை, இந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு ஒரு முறை கூட அவர் நேரில் சென்று  ஆய்வு செய்வதற்கு ஆர்வம் காட்டவில்லை. அதற்கு […]

Categories
மாநில செய்திகள்

நரிக்குறவர் மக்களுக்குப் பழங்குடியினர் தகுதி….. “நீண்ட போராட்டத்தின் வெற்றி இது”….. ஒன்றிய அரசு இசைந்துள்ளதை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்..!!

நரிக்குறவர் மக்களுக்குப் பழங்குடியினர் தகுதி வழங்கியிருக்கும் ஒன்றிய அரசின் முடிவினை தமிழ்நாடு அரசின் சார்பில் வரவேற்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நரிக்குறவர் மக்களை #ST பட்டியலில் சேர்க்க வேண்டுமெனக் கழக அரசும், எம்.பி.க்களும் மேற்கொண்ட தொடர் முயற்சிகளுக்கு ஒன்றிய அரசு இசைந்துள்ளதை வரவேற்கிறேன். விளிம்புநிலையிலுள்ள அம்மக்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் சமூகநீதியைப் பெற்றுத் தருவதற்கான நீண்ட போராட்டத்தின் வெற்றி இது! என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆசைப்பட்ட ஸ்டாலின்…! ஓகே சொன்ன வைகோ… கலைஞர் போன அதே ரூட்டில் DMK ..!!

வைகோ அரசியல் வாழ்வு குறித்த ஆவணப்பட வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், கலைஞர் அவர்கள் உடல் நலிவுற்று  அவர் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்தில் சென்னை கோபாலபுரத்தில் தன்னுடைய இல்லத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது நம்முடைய அண்ணன் வைகோ அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தலைவரை பார்க்க வேண்டும், கலைஞரை பார்க்க வேண்டும் என்று கேட்டார். உடனடியாக அவருக்கு தலைவர் இடத்தில் என்ன சூழலில் பார்க்க வைக்க முடியும் என்று மருத்துவர்கள் இடம் கலந்து […]

Categories
மாநில செய்திகள்

“முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள்”…. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 3236 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த காலி பணியிடங்களை நிரப்பற்காக தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை தேர்வு வாரியம் மேற்கொண்டது. இதற்கான கணினி வழி தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், 17 பாடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு செப்டம்பர் 2 முதல் 4 வரை நடைபெற்றது. இந்நிலையில் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களில் தாவரவியல் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு இந்த நாட்களில் “இனிப்பு பொங்கல்”….. தமிழக அரசின் இனிப்பான உத்தரவு….!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் இடையே நல்ல மதிப்பை பெற்று வருகிறது. மேலும் மாணவர்களுக்கு சத்துணவு திட்டமும் செயல்படுத்த பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் முக்கிய பிரமுகர் மற்றும் முக்கிய தலைவர்களின் பிறந்தநாளன்று சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், எம்ஜிஆர் ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

இந்த நாளில் இருந்து தான் புதிய மின் கட்டணம் வசூல்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு அண்மையில்  அமலுக்கு வந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. 2027 வரை புதிய மின் கட்டண உயர்வு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பின் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய மின்கட்டண உயர்வில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இனி 101 […]

Categories
மாநில செய்திகள்

11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான….. காலாண்டு பாடத்திட்டம் என்ன….? இதோ முக்கிய அறிவிப்பு….!!!!

கடந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் அனைத்து மாணவர்களுக்கும் இடைப்பருவ தேர்தல் நடத்தப்பட்டது. தற்போது காலாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக நடத்தப்பட வேண்டும் என்று அறிவித்தப்பட்டுள்ளது. அதன்படி, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் செப்.,22 முதல் 30-ந் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறும் என தெரிவித்துள்ளது. விரிவான கால அட்டவணை மாவட்டம் […]

Categories
மாநில செய்திகள்

இந்த வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில்….. இன்று(செப்டம்பர் 15) முதல்….. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனாவுக்கு பிறகு 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வானது கடந்த மே மாதம் ஐந்தாம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன் பிறகு பொது தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படது. தனித்தேவர்களுக்கும்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. முன்னதாக தேர்வு முடிவுகள் வெளியானவுடன் பள்ளிகள் வாயிலாக தான் மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இணையதளத்தில் வெளியிடப்பட்டு அதை பதிவிறக்கம் செய்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ்சுக்கு DMKவுடன் தொடர்பு : உறுதிப்படுத்திய ஸ்டாலின் பேச்சு… பெரும் ஷாக்கில் ADMK ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா, திமுக 1, 2 சதவீதம் நல்லதாக செய்தால் கூட பாராட்ட வேண்டிய அவசியம் இல்லை எங்களுக்கு, ஓபிஎஸ்ஸும்,  அவருடைய செல்வனும் திமுக அரசை பாராட்டிக் கொண்டிருக்கிறார் என்றால், தொண்டர்களை புண்படுத்துகிறார் என்று தானே அர்த்தம். திராவிட முன்னேற்ற கழகத்தை வீழ்த்த வேண்டிய கடமை இருக்கிறது, மதிப்பிற்குரிய மு.க. ஸ்டாலின் இதே மதுரையில் சொல்கிறார் எடப்பாடியார் தற்காலிக பொதுச் செயலாளர். இது யாருடைய தூண்டுதல், ஓபிஎஸ் சொல்கின்ற வாசகத்தை தானே இவரும் சொல்கிறார், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(செப் 15) போக்குவரத்து மாற்றம்….. இப்படித்தான் போகணும்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) விருதுநகர் வருகை தர உள்ளார். ஆதலால் கீழ்க்கண்ட நேரங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி காலை 8 மணி முதல் மதுரையிலிருந்து கோவில்பட்டி நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மதுரை ரிங்ரோடு கருப்பசாமி கோவிலில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கி செல்லும் நான்கு வழிச்சாலையில் (தேசிய நெடுஞ்சாலை) இடது புறமாக திரும்பி ஆவியூர், காரியாபட்டி, கல்குறிச்சி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, எட்டையாபுரம், கோவில்பட்டி வழியாக செல்ல வேண்டும். திண்டுக்கல்லில் இருந்து வரும் வாகனங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. இன்று(செப்…15) முதல் பள்ளிகளில் …. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக இரண்டு வருடங்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.இதில் தேர்வை எழுதாதவர்கள் மற்றும் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில் பள்ளி மூலமாக மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் உடனே வழங்கப்படும். அவ்வகையில் ஜூலை மாதம் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பேருந்து கட்டணம் திடீர் உயர்வு?…. பொதுமக்கள் அதிர்ச்சி…..!!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால் மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல பேருந்துகளில் டிக்கெட்களை முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனியார் பேருந்துகள் டிக்கெட் விலையை இரண்டு முதல் மூன்று மடங்கு வரை உயர்த்தி உள்ளன. பொதுவாகவே தமிழகத்தில் தீபாவளி மற்றும் பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மக்கள் சொந்த ஊருக்கு திரும்புவதால் ஒரு மாதத்திற்கு முன்பாகவே முன்பதிவு செய்வது வழக்கம். அவ்வகையில் இந்த வருடத்திற்கான தீபாவளி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு….. இன்று முதல் மகிழ்ச்சி தான்….. சரவெடியாய் வெடிக்கும் முதல்வர்….!!!!!

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, அரசுப் பள்ளிகளில் 1-5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை மு க ஸ்டாலின்  இன்று(செப்டம்பர் 15)  மதுரையில் தொடங்கி வைக்கிறார். அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிட்டுள்ளார். அதன் பிறகு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஈபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்கலாம்…! ADMKவுக்கு பெரும் ஷாக்…! நீதிபதி அதிரடி உத்தரவு …!!

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மீதான நடவடிக்கைக்கு தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை அவரது உறவினர்களுக்கு வழங்கி 4,800 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்ததாக கூறி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. சிபிஐ விசாரணை: இதை எதிர்த்து கடந்த 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் […]

Categories
மாநில செய்திகள்

4 டீ குடிச்சுட்டே இருக்கணும்… ரூ.703,00,00,000 செலவு செய்யுறாங்க… தமிழக அரசிடம் கேட்கும் ADMK ..!!

செய்தியாளர்களை சந்தித்த ராஜன் செல்லப்பா, மக்கள் விரோத திராவிட முன்னேற்றக் கழக அரசு, மின் கட்டணத்தை உயர்த்துவதால் பெருவாரியான மக்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த கட்டண உயர்வால் பாதிப்புக்கு உள்ளாகிற மக்கள் எந்த வகையிலும் நிச்சயமாக இந்த அரசை மனதார ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலைதான் உருவாகி இருக்கிறது. வீட்டு வரியும் நூறு விழுக்காடு உயர்த்திருக்கிறார்கள். வீட்டு வரியை கட்டணத்தை குறைக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. எல்லா வகையிலும் இது  மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபடுகின்றது.இந்த திமுக ஆட்சியில் ஒரே […]

Categories
மாநில செய்திகள்

அக்டோபர் 1 ம் தேதி முதல் புதிய திருத்தங்கள்… அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்… வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!!

முதல்வர் தலைமையின் கீழ் நடைபெற்ற கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனையின் படி நல்ல ஊதியத்தில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் ஆசிரியர்களை நியமிப்பது மட்டுமல்லாமல் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு புதிய ஊதிய விகிதங்கள் வழங்கவும் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. யுஜிசி ஊதிய விகிதத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு புதிய ஊதிய தொகை வழங்கப்படும் அது மட்டுமல்லாமல் தற்போது பணிபுரியும் கூடுதல் ஆசிரியர்களுக்கு இன்னும் கூடுதலாக ரூபாய் 33600 அதிகரிக்கப்படுவதோடு 1200 பணியிடங்களை நிரப்பவும் […]

Categories
மாநில செய்திகள்

“200% உயர்வு” தமிழக அரசின் அடுத்த ஷாக் நடவடிக்கை….?‌ காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் எம். யுவராஜா ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் கடந்த 2012-ம் ஆண்டு நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு சீரமைக்கப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு மக்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தில் நிலங் களுக்கான வழிகாட்டி மதிப்பு 33 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்த வழிகாட்டி மதிப்பை தற்போது 200 சதவீதம் வரை உயர்த்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஒரு கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலத்திற்கு வழிகாட்டி […]

Categories
மாநில செய்திகள்

“தேயிலைத் தோட்டத்தில் ஒரு சுசீலா” பல மொழிகளில் பாடி அசத்தும் பெண்மணி…. குவியும் பாராட்டு….!!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் ரெஜினா லூக்காஸ் (48) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் தேயிலை தோட்டத்தில் தேயிலை பறிக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் சிறு வயது முதலே இசையின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக பாடல்களை பாடி வருகிறார். அதன் பெண் ரெஜினா தமிழ் மொழி மட்டுமின்றி மலையாளம், ஹிந்தி மற்றும் படுகர் இன மக்களின் மொழியிலும் பல்வேறு பாடல்களை பாடி வருகிறார். இவர் பல முறை மேடைகளில் பாடுவதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக எங்கே என கேட்ட கலைஞர்… 1 பக்கம் எழுதிய ஸ்டாலின்DMK… ஹேப்பி மோடில் தமிழகBJP ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை,  நான் டாய்லெட் பேப்பர் என்று முரசொலியை விமர்சித்து இருந்தேன். அதை டாய்லெட் பேப்பர் கூட பயன்படுத்தக் கூடாது என்று…  கலைஞர் அவர்கள் கேட்டார்கள்,  பிஜேபி எங்கே இருக்கு ? இங்கேயும், அங்கேயும் ஒன்னு, ஒன்னா இருக்கின்றது சொன்னார்கள். இன்றைக்கு அந்த முரசொலியில் ஒரு பக்கம் எனக்கு கொடுக்கிறார்கள், ஒரு பேஜ் பப்ளிசிட்டி முதல் வரியில் ஆரம்பித்து கடைசிவரை வரைக்கும் திட்டுகிறார்கள், திட்டுகிறார்கள், திட்டுகிறார்கள். அதை அவர்கள் வீட்டிலிருந்து பெண்கள் படித்தாலே […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி விவகாரம்… ஹைகோர்ட் உத்தரவிற்கு எதிராக மாணவியின் தாய் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு…!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் தனியார் பள்ளியில் மாணவி கடந்த ஜூலை 13ஆம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்துள்ளார். இதனை அடுத்து அந்தப் பள்ளி வளாகம் சூறையாடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி வள்ளி, தலைமை ஆசிரியர் சிவசங்கரன், வேதியல் ஆசிரியர் ஹரிப்பிரியா, கணித ஆசிரியர் கீர்த்திகா போன்ற ஐந்து பேரையும் சின்னசேலம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் ஐந்து பேருக்கும் ஜாமீன் […]

Categories

Tech |