Categories
மாநில செய்திகள்

“திடீர் பந்த்” அத்துமீரும் பாஜக…. கடைக்காரர்களிடம் அடாவடி…. வெளியான பகீர் வீடியோ….!!!!

திமுக கட்சியின் எம்பி ஆ. ராசா இந்துக்கள் குறித்து பேசிய வீடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்து அமைப்பினர் ஆ.‌ ராசாவை கண்டித்து நீலகிரி தொகுதி முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதனால் கோவை, மேட்டுப்பாளையம், அன்னூர் போன்ற பகுதிகளில் கடை அடைப்பு போராட்டம் நடத்துவதற்கு ஒத்துழைப்பு தருமாறு இந்து அமைப்பினரும் பாஜகவும் கூறினர். இதன் காரணமாக திமுக மற்றும் அதன் கூட்டணி […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!….. சாலையில் மட்டும் இந்த தவறை செய்யாதீர்கள்….. காவல்துறை எச்சரிக்கை….!!!

சாலையில் போக்குவரத்து அதிகரித்ததால் நடந்து செல்பவர்களும், சைக்கிள் செல்பவர்களும் நிலையும் பரிதாபத்துக்குரியதாக மாறியுள்ளது. குறுகிய சாலைகளில் கிடைக்கும் சந்து பொந்துகளில் எல்லாம் வாகனத்தை நுழைத்து நெரிசலை மேலும் சிக்கலாக மாற்றுவதில் வல்லவர்களாக வாகன ஓட்டிகள் இருக்கிறார்கள். வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்கும்போது செல்போனை பயன்படுத்த வேண்டாம் என்று பலரும் எச்சரித்து வருகிறார்கள். இந்நிலையில் ஈரோடு காவல்துறை சார்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில், “வாகன ஓட்டும்போது மட்டுமமில்லாமல் பொது […]

Categories
மாநில செய்திகள்

“கல்விக் கொள்கை எதிர்க்க நியாயமான காரணம் இல்லை”…. மத்திய கல்வி அமைச்சர் புதிய அதிரடி….!!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக அரசு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழக அரசு சார்பில் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை வந்துள்ள மத்திய கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழ் ஒரு தேசிய மொழி. தாய் மொழியில் கல்வி பயில வேண்டும். தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக நியாயமான எதிர்ப்பை நான் இதுவரை பார்க்கவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் நாளை முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.அதனால் மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளும் முழுமையாக திறக்கப்பட்ட மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழக பள்ளிகளில் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முதல் பருவ தேர்வு மற்றும் காலாண்டு தேர்வு நாளை தொடங்குகிறது.அரசு […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா!…. வேற லெவலில் மாறப்போக தமிழக அரசு துறை அலுவலர்கள்…. அமைச்சர் மனோ தங்கராஜ் சூப்பர் அறிவிப்பு….!!!!

நாமக்கல் மாவட்டத்தில் மின் அலுவலகம் நடைமுறைப்படுத்த பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியராக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் முன்னிலை வைத்தார் முன்னிலை வகித்தார். அரசின் அனைத்து துறை அலுவலக கலந்து கொண்ட இந்த ஆய்வு கூட்டத்தில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் காகிதம் இல்லா அலுவலகம் நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள், வாய்ப்புகள் […]

Categories
மாநில செய்திகள்

“வேகமாக பரவும் காய்ச்சல்” கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரம்…. அரசு பள்ளிகளில் திடீர் நடவடிக்கை….!!!!

தமிழக மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்த வைரஸ் காய்ச்சலின் தாக்கம் தற்போது கடலூர் மாவட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவருக்கும் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடலூர் மட்டுமின்றி கடலூரை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும்  காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு உடல் சோர்வு, உடம்பில் […]

Categories
மாநில செய்திகள்

இளநிலை மருத்துவ மாணவர்களுக்கு….. தமிழக அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் மருத்துவம் படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்காக கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு 490 நகரங்களில் 3500 மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது. 18 லட்சத்திற்கு அதிகமான மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 2022-2023 ஆம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை(செப்…21) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை(செப்..21) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சிவகங்கை மாவட்டம்: சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி பகுதியில் புதன்கிழமை (செப்.21) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சிவகங்கை செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதகுபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை நடைபெற உள்ளன. எனவே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் 2G-யை பார்த்தவன்… என்கிட்ட வச்சுக்காதீங்க… அசால்ட் கொடுத்த ஆ.ராசா …!!

ஹிந்துக்கள் குறித்து ஆ.ராசா பேசியது தொடர்பாக விளக்கம் அளித்து பேசிய போது, நான் 2G-யை பார்த்தவன். இந்த தில்லாலங்கடி வேலை எல்லாம் வச்சுக்க கூடாது. நீங்க சொல்றது கரெக்ட் அப்போ இருந்த இந்துமதம் இப்ப இல்லைன்னு சொல்றீங்க. எனக்கு ஒரு கேள்வி. ஏன் பெரியார் திடலில் இந்து மதத்தில் இப்படி இருக்குன்னு நான் சொன்னேன் ? இந்துக்களுக்கு ராசா எதிரியா ? இந்துக்களுக்கு கருணாநிதி எதிரியா ? கண்ணப்பன் எதிரியா ? வேல் எதிரியா ? இல்ல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சாகுற வரை கலைஞர் தான்…! அமெரிக்காவில் 300 ஏக்கர் இடம்… நெகிழ்ந்து போன நெப்போலியன் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் நெப்போலியன், நான் பிறந்து வளர்ந்தது விவசாய குடும்பம். எனக்கு ரொம்ப நாளா ஆசையாக அமெரிக்காவுக்கு சென்று 12 ஆண்டு காலம் ஆகிவிட்டது. இருந்தாலும் அங்கு போய் நான் விவசாயம் பண்ணனும்னு ரொம்ப ஆசை. அதற்கு உண்டான இடம் அமையவே இல்லை. கடந்தாண்டு ஒரு 300 ஏக்கர்ல நிலம் வாங்கினேன். அதுல விவசாயம் தொடங்கி இருக்கேன். அங்க 200  ஏக்கர்ல புல்லு போட்டு இருக்கோம். இங்கு எல்லாம் 3போகம் நெல்லு விதைக்கிற மாதிரி,  அங்க […]

Categories
மாநில செய்திகள்

“மின்னல் வேகத்தில் பரவும் வைரஸ் காய்ச்சல்” தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு திடீர் விளக்கம்….!!!!

தமிழக மற்றும் புதுச்சேரியில் நாளுக்கு நாள் குழந்தைகளுக்கு பரவும் வைரஸ் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளிடையே வைரஸ் காய்ச்சலின் தாக்கம் அதிக அளவில் பரவுவதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் காய்ச்சலின் காரணமாக புதுச்சேரியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகிற 25-ம் தேதி முதல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழகத்திலும் பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து […]

Categories
மாநில செய்திகள்

இனி யாரும் தப்பிக்க முடியாது” சிற்றுண்டி திட்டத்தை கண்காணிக்க அறிமுகப்படுத்தப்பட்ட புதிய செயலி…. எச்சரிக்கை விடுத்த அதிகாரி….!!!!

காலை உணவு திட்டத்தை கண்காணிப்பதற்காக புதிய செயலி  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 15-ஆம் தேதி 1-ஆம்  வகுப்பு முதல் 5-ஆம்  வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு மற்றும் தரவுகளின் அடிப்படையில் இனிவரும் ஆண்டுகளில்  திட்டத்தை விரிவு படுத்துவது பற்றி பரிசீலனை செய்யப்படும் என்று தமிழக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவினர் உத்தமர்கள் இல்லை…! பாஜக மேல பழி போடுறீங்க… கொந்தளித்த பிரேமலதா …!!

தேமுதிக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா, இன்னைக்கு ஆட்சி முடிஞ்சு,  அவங்க வீட்ல ஓய்வில் இருக்கிற ( அதிமுக ) மந்திரிகள் வீட்டுக்கு எதுக்கு நீங்க வந்து ரைடு அனுப்புறீங்க ? அதுவும் ஒரே மாதிரி வீட்டுக்கு பத்து வாட்டி . அவர்களை உத்தமர்கள் என்று நான் சொல்ல வரவில்லை. உண்மையில் நீங்கள் உத்தமர்களாக இருந்தால்,  உங்கள் மந்திரி வீட்டிற்கு முதலில் ரைடு அனுப்பி,  இந்த ஆட்சி ஒரு சுத்தமான ஆட்சி […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளுக்கு விடுமுறையா…..? தமிழக அரசின் முடிவு இது தான்…!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா அச்சுறுத்தி வந்தது. இதன் தாக்கம் தற்போது குறைந்ததால் மக்களும் நிம்மதியாக இருக்கிறார்கள். தற்போது தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளிலும் புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. இதனை தடுக்க புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில்தமிழகத்தில் ஃப்ளூ காய்ச்சல் பரவலை தடுக்க பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “3 நாட்களில் சரியாகிவிடும் காய்ச்சலுக்கு எப்படி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஐயா OPS பத்தி கொஞ்சம்….! கையெடுத்து கும்பிடுறேன் சாமி….! இடத்தை காலி செய்த EPS….!!!!

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தப் பின் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.அரசியல் பேசவில்லை. தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் பற்றி ஆலோசித்தேன். தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்தை விரைவுப்படுத்த கோரிக்கை வைத்தோம். நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை துரிதமாக செயல்படுத்த கோரிக்கை விடுத்தோம். பிரதமர் நரேந்திர […]

Categories
மாநில செய்திகள்

மிரட்டும் காய்ச்சல்: தமிழ்நாடு முழுவதும் நாளை 1,000 இடங்களில்…. மக்களே மறக்காம போங்க….!!!!

பருவநிலை மாற்றம் காரணமாக வருடம் தோறும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் சாதாரண மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுவது வழக்கமான ஒன்று. தற்போது மழை, வெயில் என்று பருவநிலை மாறுபாடு காரணமாக தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னையில் வைரஸ் காய்ச்சல் அதி வேகமாக பரவி வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த காய்ச்ச பாதிப்பு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சாதாரண காய்ச்சல் என்பது மூன்று நாட்களில் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : மருத்துவப் படிப்புகளுக்கு அக்., 22ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் – தமிழக மருத்துவத்துறை..!!

மருத்துவ படிப்புகளுக்கு வரும் 22ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 – 2023 ஆம் ஆண்டின் மருத்துவ படிப்பான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பதற்காக வருகின்ற 22ஆம் தேதி முதல் கொண்டு அக்டோபர் 3ஆம் தேதி வரை www.tnhealth.tn.gov.in , www.tnmedicalselection.org என்ற  இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று தமிழக மருத்துவத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க அக்டோபர் 3ஆம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

“போதைக்கு அடிமை ஆவது தான் அவமானம்.. திருத்திக் கொள்வது அவமானம் அல்ல”… அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு…!!!!!!

போதை விழிப்புணர்வு பிரச்சார பயணம் பற்றி போஸ்டரை தொடங்கி வைத்த பின் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது, ஒவ்வொரு வருடமும் பள்ளிகள் தொடங்கும் போது விழிப்புணர்வு நிகழ்ச்சியோடு தொடங்கும். தொலைக்காட்சிகளும் புதுமையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் அதில் நாங்களும் கலந்து கொள்வோம். மேலும் கற்றல் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்து வருகின்றோம் போதையில் ஈடுபட்டவர்கள் உடன் இருப்பவர்கள் சொல்வதைக் கேட்டு விளையாட்டாக தான் ஆரம்பிக்கின்றார்கள். போதைக்கு அடிமையாவது தான் அவமானம் அதனை […]

Categories
மாநில செய்திகள்

அக்டோபர் 1 முதல் 4 ஆம் தேதி வரை…. கூடுதல் சிறப்பு பேருந்துகள்….. தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….!!!!

தசரா திருவிழாவையொட்டி குலசேகரப்பட்டினத்திற்கு அக்.,1 முதல் 10-ந் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரபட்டினம் என்ற ஊரில் தசரா திருவிழா வெகு விமர்சையாக வருடம் தோறும் கொண்டாடப்படும். அந்த ஊரில் உள்ள முத்தாரம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. வருடம் தோறும் தசரா விழாவானது பத்து நாட்கள் நடைபெறும். இந்த விழாவில் லட்சக்கணக்கான மக்கள் விரதம் இருந்து அம்மனை வழிபடுவார்கள். வெவ்வேறு மாநிலங்களில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மன்னிப்பு கேட்க ரெடி…! என்ன மன்னிப்புனு சொல்லுடா லூசு ? H Rajaவுக்கு பதிலடி கொடுத்த A Raja ..!!

திமுகவின் மக்களவை உறுப்பினர் ஆ.ராசா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது, எப்படி பிடல் காஸ்ட்ரோ இறந்ததற்குப் பிறகு,  ராகுல் காஸ்ட்ரோ  ”எங்கள் புரட்சிக்கு மூப்பிலை” என்று சொன்னாரோ, அதைப் போல கலைஞருக்கு பின்னாலும் ”திராவிட மாடலுக்கு மூப்பில்லை” என்று சொல்லக்கூடிய ஒரு மகத்தான தலைவரை இன்றைக்கு நாம் பெற்றிருக்கிறோம். அதனால்தான் சங்கிகளுக்கு எல்லாம் கோபம். இப்போ என்ன சொல்றாங்க ? ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும். இந்துக்களை புண்படுத்தி விட்டார். மன்னிப்பு கேட்பது ”ஒன்றும் பெரிய விஷயம் […]

Categories
மாநில செய்திகள்

சட்டம் ஒழுங்கு சரியல்ல….. ஏதாச்சும் பார்த்து பண்ணுங்க….. அமித் ஷா மூலம் மோடிக்கு தூது அனுப்பும் இபிஎஸ்…..!!!!

அதிமுக இடைச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றார். தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்க அவர் சென்றிருப்பதாக தகவல் வெளியானது. பின்னர் இன்று காலை 11:30 அணியளவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடங்கள் அவர்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர். அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது: “இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை […]

Categories
மாநில செய்திகள்

கமிஷன்…! கலெக்ஷன்…! கரெக்ஷன்….! முடியலப்பா சாமி…..! டெல்லி போய் கம்பளைண்ட் பண்ண இபிஎஸ்….!!!!

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா-வை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அதிகாலை சந்தித்து பேசினார். இவர் டெல்லி செல்லும் போது ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் அதைப் பற்றி அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதை தொடர்ந்து அவரை சந்தித்து விட்டு மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ் மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்து வருகிறோம் என்று தெரிவித்தார். திமுக அரசு, மெத்தனமாக இருக்கின்ற காரணத்தினால்…  அலட்சியமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டாக்குமெண்ட்டோடு சந்திப்பு…! திமுகவில் திக், திக்… டெல்லியில் பற்ற வைத்த எடப்பாடி…!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் சந்தித்து பேசி இருக்கிறார். அதிமுக ஒற்றைத் தலைமை விகாரத்தில் ஓபிஎஸ் உடனான மோதல் தீவிரமடைந்திருக்கும் நிலையில் அமித்ஷாவை சந்தித்தார் இபிஎஸ். உள்துறை அமைச்சருடனான இந்த சந்திப்பில் இரண்டு முக்கிய விஷயங்களை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டியது இருக்கிறது. இந்த சந்திப்பு என்பது உள்துறை அமைச்சரின் வீட்டில் இல்லாமல், உள்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தில் நடந்திருக்கிறது. டெல்லியில் இருக்கக்கூடிய உள்துறை அமைச்சர் அலுவலகத்தில் இந்த சத்திய்ப்பு நடைபெற்றிருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

பேருந்து கட்டண கொள்ளை….. கொஞ்சம் கூட நியாயம் வேண்டாமா?…. ஓபிஎஸ் கண்டனம்….!!!!

ஆம்னி பேருந்துகளில் அபரிவிதமாக வசூலிக்கப்படும் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ” ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அளவுக்குமீறி கட்டணத்தை உயர்த்துவதும், இதனை அரசு வேடிக்கை பார்ப்பதும் வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில், இந்த ஆண்டு ஆயுத பூஜை, விஜய தசமி போன்ற பண்டிகைகளை முன்னிட்டு, தங்கள் சொந்த ஊர்களுக்கு மக்கள் புறப்பட திட்டமிட்டிருக்கும் சூழ்நிலையில், குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் சென்னையில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

மர்மமான முறையில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி…. கொளுத்தப்பட்ட மாணவர்களின் சான்றிதழ்கள்….. கோரிக்கை விடுத்த பெற்றோர்கள்….!!!!

மாணவர்களுக்கு  புதிய சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் பகுதியில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் விடுதியில் தங்கி படித்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரின் சாவுக்கு நீதி கேட்டு  நடந்த போராட்டத்தில் பள்ளி வாகனங்கள் சூறையாட்டப்பட்டதோடு, மாணவர்களின் சான்றிதழ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. மேலும் பள்ளி கட்டிடம் மிகவும் சேதம் அடைந்தது. இந்நிலையில்  பள்ளி மூடப்பட்டு காலவரையின்றி  விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமித் ஷாகிட்ட ஆதாரம்…! தூக்கி கொடுத்த எடப்பாடி… டெல்லியில் செம ஸ்கெட்ச்… DMKவுக்கு புது சிக்கல் ..!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் சந்தித்து பேசி இருக்கிறார். அதேபோல் மத்திய உள்துறை அமைச்சரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தால், அதிமுக கட்சியில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் எல்லாம் பேசப்பட்டு இருக்கின்றது. முக்கியமான விஷயங்கள், சட்டரீதியான விஷயங்கள், விவாதிக்கப்பட்டு இருக்கிறது. மத்திய அமைச்சர் அமித் ஷாவுடனான சந்திப்பின்போது எஸ்பி வேலுமணி அவர்களும் உடன் இருக்கிறார். அதேபோல் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், அதிமுகவின் முக்கியமான சட்டம் சார்ந்த முக்கிய ஆலோசனை வழங்கக்கூடிய சிவி […]

Categories
மாநில செய்திகள்

நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்?….. இந்து மதம் குறித்து பேசிய எம்.பி. ஆ. ராசா…. மாநிலம் முழுவதும் அளிக்கப்பட்ட பல புகார்கள்….!!!!

எம்.பி. ஆ. ராசா தான் பேசியது குறித்து விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் உள்ள வேப்பேரி பகுதியில் கடந்த 6-ஆம்  தேதி ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க.  எம்.பியான  ஆ. ராசா கலந்து கொண்டு இந்து மதம் குறித்து பேசினார். இவர் பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இதனால் இவர் மீது மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில்  புகார் அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது. நான் மன்னிப்பு கேட்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்…… வானிலை எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நாளை முதல் ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து மழை நீடிக்கும். சென்னை பொறுத்தவரை அடுத்து 48 மணி நேரத்திற்கு வானம் […]

Categories
மாநில செய்திகள்

“முதல்வர் கொடுத்த வீட்டு மனை பட்டா செல்லாது” அதிர்ச்சியில் நரிக்குறவர் மக்கள்…. கலெக்டரிடம் முறையீடு….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே கெலவரப்பள்ளி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் 72 நரிக்குறவர் இன மக்களுக்கு கடந்த 2000-ம் ஆண்டு இலவச வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது. இந்த வீட்டு மனை பட்டா கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை சென்னை மேயராக இருந்த ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. இந்த வீட்டு மனை பட்டா வழங்கி 20 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது அதிகாரிகள் வீட்டுமனை […]

Categories
மாநில செய்திகள்

தொடக்கத்திலிருந்து ஆய்வு செய்யப்படும்…. இனி தமிழக அரசு புதிய கட்டுமானங்களை இணைந்த ஆய்வு செய்யும்…. வெளியான தகவல்கள்….!!!!

நமது தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வாழும் நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டு வசதிகளை ஏற்படுத்துவதற்காக முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 1970-ஆம் ஆண்டு குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு  தமிழ்நாடு நகர்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள், கட்டுமானங்களை ஆய்வு செய்ய நமது தமிழக அரசு  அண்ணா பல்கலைக்கழகத்துடன்  புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து அறிக்கை ஒன்று […]

Categories
மாநில செய்திகள்

டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்ய கோரிய எஸ்.பி. வேலுமணி மனு வேறு அமர்வுக்கு மாற்றம்..!!

தம்மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரும் எஸ்.பி. வேலுமணி மனுவை எம்.பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு அமர்வு விசாரிக்கும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி தனக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். எம்.பி, எம்.எல்.ஏ வழக்குகளை விசாரிக்கும் பிரகாஷ் டீக்காராமன் அமர்வு இனி வேலுமணி மனு குறித்து விசாரணை நடத்தும்..

Categories
மாநில செய்திகள்

BREAKING: நாளை தமிழகம் முழுவதும்….. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகம் முழுவதும் காய்ச்சல் தொடர்பாக நாளை 1000 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இன்புளுயன்ஸா காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், சளி, காய்ச்சல் என எந்த அறிகுறி இருந்தாலும் இந்த சிறப்பு முகாமில் மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார். இந்த முகாமை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

முகம் ஒரே வாட்டமா இருக்கே….! போன காரியம் என்னாச்சு….. பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் இபிஎஸ்….!!!!

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, இன்றைய தினம் மாண்புமிகு உள்துறை அமைச்சரை சந்தித்து விட்டு வந்து இருக்கின்றோம். நானும் சகோதரர் வேலுமணி அவர்களும், சகோதரர் சண்முகம் அவர்களும் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து,  இப்போது பத்திரிக்கையாளர்களை சந்திக்கின்றோம் . இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. தமிழகத்தை பொறுத்த வரைக்கும் இரண்டு பிரதான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று மாண்புமிகு அம்மா அரசு இருக்கின்ற போதே, நான் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தீண்டத்தகாத சாதி எது?….. பருவத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை….. விளக்கமளித்த பள்ளி நிர்வாகம்..!!

தீண்ட தகாத சாதி எது என மதுரையில் உள்ள சிபிஎஸ்சி பள்ளியின் ஆறாம் வகுப்பு பருவத் தேர்வில் கேள்வி கேட்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. பழங்காலத்தில் இருந்த சமத்துவமின்மை பற்றி மாணவர்களுக்கு விளக்க பாடத்தில் இருந்து கேள்வி கேட்கப்பட்டதாக தனியார் பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மதுரையில் இருக்கக்கூடிய தனியார் சிபிஎஸ்சி வல்லபா வித்யாலயா பள்ளியில் தற்போது பருவத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று சமூக அறிவியல் பாடத் திட்டத்திற்கான பருவத் தேர்வு நடைபெற்ற நிலையில், அந்த […]

Categories
மாநில செய்திகள்

“3000 ரூபாய்க்கு விற்ற மல்லிகை 300 ரூபாய்”….. இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் பருவமழை காரணமாக மல்லிகை பூ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்து இருந்தது. அது மட்டும் இல்லாமல் ஆவணி மாதம் முழுவதும் தொடர் பண்டிகை மற்றும் சுப முகூர்த்த தினங்கள் அதிக அளவில் இருந்த காரணத்தினால் பூக்களின் விலை உச்சத்தை எட்டி இருந்தது. அதுவும் மல்லிகை பூவின் விலை அதிக அளவில் இருந்ததால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது மதுரை மல்லிகை பூ 3000 […]

Categories
மாநில செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர் யாருன்னு தெரியுமா….? நானும் ரொம்ப நாளா அவரத்தான் தேடிட்டு இருக்கேன்…. அமைச்சர் துரைமுருகன் செம கலாய்….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 15-ஆம் தேதி திமுக கட்சியின் சார்பில் முப்பெரும் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு கலைஞர் கருணாநிதி தொண்டர்களுக்கு எழுதிய 4041 கடிதங்கள் அடங்கிய, 21,510 பக்கங்கள் கொண்ட நூலை 54 தொகுதிகளாக வெளியிட்டார். இதை அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். இதேபோன்று முதல்வர் ஸ்டாலின் எழுதிய திராவிட மாடல் புத்தகத்தை அமைச்சர் துரைமுருகன் வெளியிட, டிஆர் பாலு பெற்றுக்கொண்டார். அதன்பின் அமைச்சர் துரைமுருகன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் […]

Categories
மாநில செய்திகள்

ஓபிஎஸ் நடத்திய சிறப்பு ஹோமம்…. இபிஎஸ்ஸை வீழ்த்துமா?…. வெளியான தகவல்…..!!!

அதிமுக ஒற்றை தலைமை விவாகரத்தில் கட்சி ரீதியாகவும் சட்டரீதியாகவும் ஓபிஎஸ் அன்கோவை வெற்றி பெற்று இபிஎஸ் வீர நடை போட்டு வருகிறார். இதனால் செம அப்சட்டில் இருக்கும் ஓபிஎஸ்-ஐ மேலும் வெறுப்பேற்றும் வகையில் இன்று இரவு டெல்லி செல்கிறார். எடப்பாடி பழனிச்சாமி அங்கு மூன்று நாட்கள் முகாமிட்டு இருக்கும் இபிஎஸ் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அதுமட்டுமில்லாமல் கட்சியின் தலைமை விவகாரம் குறித்து, […]

Categories
மாநில செய்திகள்

JUST NOW: தமிழக, காரைக்கால் மீனவர்கள் 12 பேர் விடுவிப்பு …!!

இலங்கை கடற்படையால் கடந்த 6ஆம் தேதி சிறை பிடித்து செல்லப்பட்ட தமிழக மற்றும் காரைக்கால் மீனவர்கள் 12 பேர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். மீண்டும் எல்லை தாண்டினால் மூன்றாண்டுகள் சிறை தண்டனை என்ற நிபந்தனையோடு திரிகோணமலை நீதிமன்றம் மீனவர்களை விடுவித்து இருக்கின்றது.

Categories
மாநில செய்திகள்

“இரட்டை வேஷம்” நம்ப வச்சு ஏமாத்திட்டாங்க…. கொடுத்த வாக்குறுதிய நிறைவேற்றல…. ஜிகே வாசன் ஆவேசம்…..!!!

தமிழகத்தில் திமுக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் சேலம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் எதிரே போராட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்திற்கு பிறகு ஜிகே வாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, திமுக […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்கு….. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பெரும்பாலும் எந்த பண்டிகையாக இருந்தாலும் அதனை சொந்த ஊரில் கொண்டாட வேண்டும் என்பது பலரின் விருப்பமாக உள்ளது. வேலைக்காக படிக்க வெளியூர் சென்றவர்கள் விடுமுறை கிடைத்தால் எப்படியாவது பஸ், ட்ரெயின் எதையாவது பிடித்துக் கொண்டு ஊருக்கு சென்று சொந்த பந்தத்துடன் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று விரும்புவது வழக்கம். அந்த வகையில் ரயிலில் முன்பதிவு முடிந்து விட்டால் பலரும் பேருந்துகளில் தான் செல்வார்கள். ஒரு சிலர் தனியார் பேருந்துகளில் பயணம் செய்வார்கள். ஆனால் தற்போது தனியார் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே…. இனி ஓராண்டிற்கு இந்த பிரச்சனை இருக்காது…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த வருடங்களில் குடிநீர் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்தது. அதற்கு முக்கிய காரணம் பருவநிலை மாற்றத்தால் மழை இன்று ஏரி மற்றும் குளங்கள் வறண்டு காணப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் அவதிக்கு உள்ளாகினர். அத்தியாவசிய தேவைகளில் மிகவும் முக்கியமான குடிநீருக்கு பல மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டது.இந்த அவல நிலை குறித்து குடிநீர் வாரியத்தின் கவனத்திற்கு பொதுமக்கள் கொண்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து சென்னைக்கு குடிநீர் வழங்கும் இணைப்புகளில் […]

Categories
மாநில செய்திகள்

சார்பதிவாளரை பணியிடை நீக்கம் செய்யாதது ஏன்?…. அங்கீகரிக்கப்படாத மனைகள் எவ்வாறு பத்திரப்பதிவு செய்யப்படுகின்றன?…. ஐகோர்ட் கிளை எச்சரிக்கை..!!

அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்யப்படும் நிலை தொடர்ந்தால் துறை செயலாளர் ஆஜராக நேரிடும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது. அங்கீகரிக்கப்படாத மனைகள் எவ்வாறு பத்திர பதிவு செய்யப்படுகின்றன? இது போன்ற நிலை தொடர்ந்தால் அந்த துறை செயலர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.. வழக்கின் பின்னணி என்னவென்றால் தேனி மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த சரவணன் என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டு முதல் வருடத்திற்கு ஆறு நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீர் நாள் மற்றும் உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகின்றது.அதன்படி வருகின்ற அக்டோபர் இரண்டாம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

சூப்பில் மிதந்த “ஈ”…. ஷாக்கான மருத்துவர்…. கூலாக பதில் சொன்ன ஹோட்டல் ஊழியர்…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் பிரபலமான அடையார் ஆனந்த பவன் சைவஉணவகமானது செயல்பட்டு வருகிறது. இங்கு பிசியோ தெரபி மருத்துவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது உணவு சாப்பிடுவதற்கு முன் சர்வர் ஸ்வீட்கான் வெஜ்சூப் கொடுத்துள்ளனர். அதை மருத்துவர் ஸ்பூன் வாயிலாக கிளறிய போது சூப்பிலிருந்து “ஈ” ஒன்று வெளியே மிதந்து வந்துள்ளது. அதை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர் ஹோட்டல் ஊழியரை அழைத்து கேட்டார். அப்போது ஊழியர் அலட்சியமாக ஈ -யை எடுத்து கீழே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 300க்கும் மேற்பட்ட அரசு சேவைகள் இ-சேவை மையங்களோடு இணைப்பு…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இ-ஆபிஸ் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் தலைமையில், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் என் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், இ-ஆபிஸ் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த தலைமைச் செயலகத்தில் 3425 பணியாளர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அரசுக்கும் மக்களுக்குமான இடைவெளியே குறைக்க இந்த ஆண்டுக்குள் 300க்கும் மேற்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வேகமெடுக்கும் வைரஸ்…. இதனை தமிழகத்திற்கு அனுப்புங்கள்….. மத்திய மந்திரிக்கு பறந்த அண்ணாமலை கடிதம்….!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குழந்தைகளுகிடையே வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அதிலும் பள்ளி செல்லும் குழந்தைகளிடையே இந்த வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ப்ளூ காச்சல் காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் பல தரப்பினரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து தமிழக பாஜக […]

Categories
மாநில செய்திகள்

B.V.Sc. & A.H., B.Tech படிப்புகள்….. செப்.26 வரை மட்டுமே….. மாணவர்களே உடனே போங்க….!!!!

கால்நடை மருத்துவ படிப்புக்கு 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் செப்.26-ம் தேதி மாலை 5 மணி வரை https://adm.tanuvas.ac.in/660M இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

BREAKING: அமித் ஷாவுடன் ஈபிஎஸ் சந்திப்பு …!!

ஒற்றை தலைமை விகாரத்தில் ஓபிஎஸ் உடன் முதல் தீவிரமடைந்திருக்கும் நிலையில் அமித்ஷாவை சந்திக்கிறார் ஈபிஎஸ். இந்த சந்திப்பு குறித்து இரண்டு விஷயங்களை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டி இருக்கிறது. ஒன்று இந்த சந்திப்பு என்பது உள்துறை அமைச்சரின் வீட்டில் இல்லாமல் உள்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தில் நடந்திருக்கிறது. டெல்லியில் இருக்கக்கூடிய அலுவலகத்தில் இந்த சந்திப்பு என்பது நடைபெற்றிருக்கிறது. எனவே பெரும்பாலும் இது அரசு சார்ந்த விஷயமான சந்திப்பாக இதனை நாம் கருத வேண்டி இருக்கிறது. காலை 11 மணிக்கு […]

Categories
மாநில செய்திகள்

மது விற்க தடையாக இருந்த கவுன்சிலர்…. ஆத்திரத்தில் பெண்ணின் கொடூர செயல்…. பெரும் பரபரப்பு….!!!!

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சியிலுள்ள எட்டியாபுரம் எட்டியம்மன் கோயில் தெருவில் வசித்து வந்தவர் சதீஷ்(31). இவர் நடுவீரப்பட்டு ஊராட்சியில் 7வது வார்டு உறுப்பினராக இருந்தார். இந்நிலையில் அதேபகுதியை சேர்ந்த ஏற்கனவே தன் கணவனை கொலை செய்த லோகேஸ்வரி என்ற எஸ்தர் (45) என்பவர் டாஸ்மாக்கில் இருந்து சரக்கு வாங்கி வந்து வீட்டில் வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்து வந்துள்ளார். இது தொடர்பாக சதீஷ் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததோடு, தொடர்ந்து எஸ்தரிடம் இப்பகுதியில் சரக்கு விற்கவேண்டாம் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

Breaking: தி.க – இந்துமுன்னணி மாறிமாறி தாக்குதல் – பெரும் பரபரப்பு …!!

திமுக எம்.பி ஆ.ராசா இரண்டு தினங்களுக்கு முன்பாக இந்துக்களுக்கு எதிராகவும்,  பெண்களுக்கு எதிராகவும் பேசியதாக போராட்டங்கள் வலுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போவதாக அறிவித்தனர். அவர்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆர்ப்பாட்டத்தில்  நாட்டின் பெரும்பான்மை மக்களான எஸ் சி/ எஸ் டி மக்களை பஞ்சமர்கள்  என்றும்,  எம்பிசி / ஓபிசி மக்களை சூத்திரர்கள் என்றும், பெண்களை விபச்சாரிகள் என்றும் கூறும் மனுதர்ம  […]

Categories

Tech |