Categories
மாநில செய்திகள்

“ரொம்ப நேரமா தேடிட்டு இருக்கோம்” யாரோ வந்து எய்ம்ஸ் மருத்துவமனையை திருடிட்டு போயிட்டாங்க…. எம்பி மாணிக்கம் தாகூர் செம கலாய்….!!!!

தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா வருகை புரிந்துள்ளார். இவர் மதுரையில் உள்ள பல்வேறு துறை சார் வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின் ஜே.பி நட்டா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் 95 சதவீதம் கூறினார். இதன் காரணமாக மதுரை மாவட்டத்தில் உள்ள தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் நேரில் சென்று பார்வையிட்டார். இது தொடர்பான வீடியோவை ட்விட்டர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அக்டோபர் 17 வர தான்”அதுக்குள்ள எல்லாமே மாறிடும்…. இபிஎஸ்-ன் புதிய திட்டம்….. அதிமுகவில் நிகழப்போகும் அதிரடி மாற்றம்….!!!!

அதிமுக கட்சியில் சமீப காலமாகவே உட்கட்சி பூசல்கள் அதிகரித்துவிட்டது. இந்த உட்கட்சி பூசல்களால் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவால் சரிவர கடமையை ஆற்ற முடிவதில்லை. கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாகவே வந்தது. இதனால் ஓபிஎஸ்  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இருப்பினும் இபிஎஸ் நிரந்தர […]

Categories
மாநில செய்திகள்

FLASH : தமிழகத்தில் இங்கு மட்டும்…. பெட்ரோல், டீசல் இப்படி கொடுக்க தடை….. அதிரடி உத்தரவு….!!

திருவாரூர் மாவட்டத்தில் பெட்ரோல், டீசலை கேன்களில் வழங்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை, திண்டுக்கல், சென்னை என பல இடங்களில் பாஜக நிர்வாகிகள், இந்து அமைப்பினர் இடங்களில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுவீச்சு தாக்குதல் நடைபெற்றதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து 2000க்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், பெட்ரோல் குண்டு வீச்சு, கார் எரிப்பு சம்பவங்கள் தொடர்பாக காணொலி மூலம் கோவை ஐ.ஜி.சுதாகர், ஆட்சியர், ஆணையருடன் ஆலோசனை நடத்திய இறையன்பு, பிரச்சனையை சுமூகமாக தீர்க்க உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அடுத்தடுத்து […]

Categories
மாநில செய்திகள்

“பல்கலைக்கழக வேந்தர்” யுஜிசி விதிகளின்படி முதல்வரை நியமிக்க முடியாது…. ஆளுநர் திட்டவட்டம்…..!!!!

தமிழகத்தில் 13 அரசு பல்கலைக்கழகங்கள் இருக்கிறது. இந்த பல்கலைக்கழகங்களின் வேந்தராக தமிழக ஆளுநர் ஆர்என்‌ ரவி இருக்கிறார். இவர் தான் பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிப்பார். துணை வேந்தர்களை தேர்வு செய்யும் போது செனட் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்களில் ஒருவர் மற்றும் ஆளுநர் சார்பில் ஒருவர் என மொத்தம் 3 பிரதிநிதிகள் நியமிக்கப்படுவார்கள். இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வருவதற்காக தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசு நியமிப்பதற்கான நடைமுறையையும், துணைவேந்தரை மாநில அரசே நீக்கம் […]

Categories
மாநில செய்திகள்

“அடுத்தடுத்து 7 பெட்ரோல் குண்டுகள் வீச்சு” கோவையில் நீடிக்கும் பதட்டம்….. தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாகவே பெரும் பதற்றம் நீடித்து வருகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள இந்து அமைப்பினர், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினரை குறிவைத்து 7 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது‌. அதோடு வாகனங்களை அடித்து நொறுக்குதல் மற்றும் தீ வைத்தல் போன்ற சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணிக்காக தமிழ்நாடு கமாண்டோ படையை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனியாமூர் பள்ளியில் வெடிபொருள்…. “கலவரத்தில் பயன்படுத்தப்பட்டதா?”…. போலீசார் தீவிர விசாரணை..!!

கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சீரமைப்பு பணியின்போது சாக்கு மூட்டையில் நாட்டு துப்பாக்கியில் பயன்படுத்தும் வெடி மருந்து கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஜூலை மாதம் 13ம் தேதி மாணவி ஸ்ரீமதி மரணமடைந்தார்.. இதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் 17ஆம் தேதி வன்முறை ஏற்பட்டு பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது. இந்த நிலையில் கடந்த 70 நாட்களுக்கு மேலாக பள்ளியில் மறு சீரமைப்பு செய்யாமல் இருந்து வந்த நிலையில், […]

Categories
திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சற்றுமுன்….. வாட்டர் பாட்டில்களில் பெட்ரோல், டீசல் வழங்கக்கூடாது…. போலீசார் அதிரடி உத்தரவு..!!

திருவாரூர் மாவட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு வாட்டர் பாட்டில்களில் பெட்ரோல், டீசல் வழங்கக்கூடாது என காவல்துறை அறிவித்துள்ளது.  கடந்த 3 தினங்களாக கோவை, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு என்பது மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மூன்று நாட்களில் மட்டும் 15 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு என்பது நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கோவை உட்பட தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். குறிப்பாக பாஜக நபர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: மதத் தலைவர்களுடன் போலீஸ் ஆலோசனை …!!

கோவை மாநகரில் பதற்றமான சூழல் நிலவுவதை தொடர்ந்து மத தலைவர்களுடன் போலீசார் ஆலோசனை ஈடுபட்ட இருக்கின்றனர். கடந்த மூன்று நாட்களாக கோவையில் ஒரு பதற்றமான சூழலில் ஏற்பட்டு கொண்டிருக்கும் நிலையில் ஹிந்து மற்றும் முஸ்லிம் அமைப்பின் நிர்வாகிகளை அழைத்து போலீசார் ஆலோசனை ஈடுபட்டு இருக்கின்றனர். கோவையில் பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  வழக்கமான சோதனை சாவடிகளை விட அதிக சோதனை சாவடிகளை அமைத்து போலீசார் கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். கோவையில் பல்வேறு இடங்களில் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: 3நாட்களில்… 15இடங்களில்…. பெட்ரோல் குண்டுவீச்சு… பெரும் பரபரப்பில் தமிழகம் ..!!

தமிழகத்தைப் பொறுத்தவரை சமீப நாட்களாக, குறிப்பாக கடந்த மூன்று நாட்களில் மட்டும் 15 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்று இருக்கிறது. குறிப்பாக பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து முன்னணி பிரமுகர்கள் இருக்கக்கூடிய வீடு, அதே போல் கட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து இந்த தாக்குதலானது நடத்தப்பட்டு வருகிறது. கோவை மாநகரில் மட்டும் கடந்த மூன்று நாட்களில் ஐந்து இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்றிருக்கிறது. மேட்டுப்பாளையத்தில் இரண்டு இடத்திலும், ஈரோட்டில் இரண்டு இடத்திலும், அதேபோல […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…. 75 ஆயுள் கைதிகள் இன்று விடுதலை…!!

தமிழக சிறைகளிலிருந்து நன்னடத்தை அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்த மேலும் 75 ஆயுள் கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 21 கைதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில், புழல் வேலூர், திருச்சி, கடலூர் உள்ளிட்ட சிறைகளில் இருந்து மொத்தம் 96 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புழல் சிறையில் 13, வேலூர் 2, கடலூர் 5, சேலத்தில் ஒருவர், கோவையில் 12, மதுரையில் 22, […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: கோவை மாநகருக்குள் 4000 போலீசார் குவிப்பு …!!

கோவையில் பதற்றம் அதிகமாக இருப்பதால்,  கோவை மாநகரில் மட்டும் கிட்டத்தட்ட நான்காயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட்டிருக்கின்றார்கள். வெளி மற்றும் உள் மாவட்ட போலீசார் வரவைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாநகருக்குள் வரக்கூடிய அனைத்து சாவடிகளிலும் இருசக்கர வாகனங்களில் வரவருவதை கண்காணிக்கின்றார்கள். இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து கொண்டு முக கவசம் அணிந்து கொண்டு வருபவர்களும் போலீஸ் சோதனைக்குட்பட்டுள்ளனர். அதேபோல வெளிமாவட்டங்களில் இருந்து 1700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை ரயில் நிலையம் மக்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவையில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு…. மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில்…. மதத்தலைவர்களுடன் ஆலோசனை..!!

மாவட்ட ஆட்சியர், கோவை காவல் ஆணையர் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளுடன் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில்  ஆலோசனை நடைபெற்று வருகிறது.. கோவையில் கடந்த 2 தினங்களாக பதற்றம் நிலவி வருகிறது.. நேற்று முன்தினம் பாஜக அலுவலகத்தில் வீசப்பட்ட பெட்ரோல் பாட்டில் குண்டை தொடர்ந்து, அடுத்தடுத்து கோவை புறநகர் மற்றும் நகர பகுதிகளில் மொத்தம் 8 இடங்களில் பெட்ரோல் பாக்கெட் வீச்சு மற்றும் பாட்டில் குண்டு வீழ்ச்சி என்பது நடைபெற்று வந்தது. இந்து அமைப்புகள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

இரட்டை ரயில் பாதை பணி நடைபெற உள்ளதால் சில விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அதன்படி நாகர்கோவில் பகுதியில் இரட்டைப் பாதை பணிகள் நடைபெற உள்ளதால் இந்த தடத்தில் சில ரயில்களின் சேவை மாற்றம் செய்யப்படுகிறது. மதுரை மற்றும் புனலூர் விரைவு ரயில் வருகின்ற செப்டம்பர் 26 மற்றும் 29 ஆகிய தேதிகள்,புனலூர் மற்றும் மதுரை விரைவு ரயில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. கர்நாடக […]

Categories
மாநில செய்திகள்

அனுமதியில்லா உதவி பேராசிரியர் பணியிடம்…. பல்கலைகளுக்கு தமிழக அரசு போட்ட உத்தரவு…..!!!!

தமிழகத்தில் அரசு நிதிக்குழு ஒப்புதல் இல்லாமல் உதவி பேராசிரியர் பணியிடங்களை உருவாக்கி அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திலுள்ள கல்லூரிகளில் உதவி பேராசிரியர் மற்றும் பணியாளர்கள் என 793 பணியிடங்களுக்கு மாதாந்திர செலவினம் 2.19 கோடி ரூபாய் என 6.58 ரூபாய் காண கல்லூரி கல்வி இயக்குனரின் கடிதத்திற்கு நிதி ஒப்புதல் செய்யப்படுகின்றது. இதில் நிதிக்குழுவின் ஒப்புதல் இல்லாமல் பணியிடங்கள் உருவாக்கிய அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: கோவை உளவு பிரிவு உதவி ஆணையர் மாற்றம் …!!

கோவை மாநகர உளவுப் பிரிவு உதவியாளராக இருந்த முருகவேல் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். கோவை மாநகர உளவு பிரிவு உதவி ஆணையராக இருந்த முருகவேல் மாற்றப்பட்டு,  அவருக்கு பதிலாக பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார்.  அதேபோல கோவை மாநகரில் கிட்டத்தட்ட நான்காயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுப் படுத்தப்பட்டுள்ளனர். உள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்த்து நான்காயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகரத்தில் மட்டுமே முக்கியமான கோவில்கள், அதேபோல் மசூதிகள், சுங்க சாவடிகள் என அனைத்து பகுதிகளிலும் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் அக்டோபர் 9 வரை…. இதெல்லாம் நடத்த தடை….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

திருச்சி மாவட்டத்தில் இன்று முதல் அக்டோபர் 9ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு பொதுக்கூட்டம், ஊர்வலங்கள் நடத்த திருச்சி காவல் ஆணையர் கார்த்திகேயன் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாநகரில் இன்று முதல் அக்டோபர் ஒன்பதாம் தேதி வரை பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. பொது அமைதி பாதுகாப்பிற்காக தமிழ்நாடு நகர காவல் சட்டம் 1888 பிரிவு 41 கீழ் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

“வேளாண் கூட்டுறவு சங்கங்கள்” ரூ. 120 கோடி கடன் வழங்க இலக்கு…. கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்….!!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடைகளை கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அந்த ஆய்வின்போது வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள நேரடி கொள்முதல் நிலையம் மற்றும் வேளாண் கூட்டுறவு வங்கியில் உள்ள உரங்கள் மற்றும் இடுபொருள்கள் போன்றவற்றையும் பார்வையிட்டார். அதன் பிறகு ‌2 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கினார். இதனையடுத்து நியாய விலை கடைகளில் ஆய்வு செய்த போது பொது மக்களிடம் அரிசியின் தரம் குறித்து கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து கூட்டுறவுத்துறை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

துப்பில்லை….திறனில்லை…. டிக்கெட் விற்கும் அமைச்சர்… பரபரப்பை கிளப்பிய சி.வி சண்முகம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற விட்டாலும் பரவாயில்லை, ஆனால் எங்களுடைய அம்மாவுடைய அரசில்,  முதலமைச்சராக இருந்த கழகத்தினுடைய பொதுச் செயலாளர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் கொடுக்கப்பட்ட பல்வேறு ஏழை எளிய பெண்களுக்கு, முதியோர்களுக்கும், மாணவர்களுக்கு, தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கும் கொடுத்த திட்டங்களை நிறுத்தி இருக்கிறது, முடக்கி இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் அதை ரத்து செய்திருக்கிறது. இதுவரை ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் நெருங்கப் போகிறது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உழைத்து வந்தவர் எடப்பாடி…! மக்கள் சந்தோஷமே போச்சு… இதான் திராவிட மடல்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, மின்சார கட்டணம் உயர்ந்து விட்டது. சரி.. மின்சாரத்தையாவது  ஒழுங்காக கொடுக்கிறார்களா என்று கேட்டால், அதுவும் கிடையாது. மின்சாரம் எப்ப வரும் ? எப்ப போகும் ? என்ற நிலை தான் திமுக ஆட்சியில்… எனவே மக்கள் ஏகாபித்த கோவத்தில் இந்த அரசாங்கத்தின் மீது இருக்கிறார்கள். இதில் திராவிட மாடல் என்று சொல்கிறார், என்ன மாடல் ? மக்கள் மீது வரி சுமத்துவது தான் திராவிட மாடலா? மின்கட்டணத்தை மாதம் […]

Categories
மாநில செய்திகள்

“திமுக போட்ட பக்கா பிளான்” நெல்லையின் முக்கிய புள்ளிதான் டார்கெட்…. அதிர்ச்சியில் அண்ணாமலை….!!!

திருநெல்வேலியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய திட்டங்கள் தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இந்த விழாவில் பாஜக கட்சியை சேர்ந்த எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். இவர் நிகழ்ச்சியில் பேசியதாவது, திருநெல்வேலிக்கு வந்த முதல்வரிடம் மருத்துவமனை தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தேன். முதல்வர் அங்கிருந்து கிளம்பிய பிறகு அமைச்சர் மா. சுப்பிரமணியன் எனக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நான் நெல்லைக்கு வரும்போது உங்களுடைய கோரிக்கைக்கு உத்தரவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடிக்கு உடம்பு சரியில்லனா… ரூ.35 லட்சத்துக்கு விக்குறாங்க…! சீமான் பரபரப்பு பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், 35 லட்சத்திற்கு நீட் தேர்வின் வினாத்தாளை விற்கிறார்கள். சத்தீஸ்கரில் பார்த்து, பார்த்து எழுதுவதற்கு சூப்பர்வைசர் யாராவது வருகிறார்களா என்று பார்த்து எழுத சொல்கிறார்கள், இதில் என்ன நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது? எதுக்கு நீட் தேர்வு? தகுதியான மருத்துவரை உருவாக்குவதற்காகவா ? அப்போ இதற்கு முன்னாடி இருந்த தேர்வு முறையில் தகுதியான மருத்துவர் உருவாகவில்லையா? ஐயா மோடிக்கு உடம்பு முடியவில்லை என்றால் எந்த மருத்துவத்தை பார்ப்பார் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

செப்.20-ல் 496, 21-ல் 509, 22-ல் 522, 23-ல் 526…. தமிழக அரசை எச்சரிக்கும் ஓபிஎஸ்….!!!!

கடந்த இரண்டு வருடங்களாக தமிழகம் முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்து மக்களை பாடாய் படுத்தியது. இதனையடுத்து அரசு எடுத்த ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் மூலம் பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியது. மேலும் மக்களும் முக கவசம் அணிதல், தனி மனித இடைவெளி கடைபிடித்தல், கிருமிநாசினி பயன்படுத்துதல், தடுப்பூசி போடுதல் ஆகிய பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்ததால் கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. இதற்கிடையில் தற்போது புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி மக்களிடையே அச்சத்தையும் குழப்பத்தையும் […]

Categories
மாநில செய்திகள்

சென்னைக்கு புது ஆபத்து…. 5 வருஷத்தில் 29 சதவீத பகுதி வெள்ளத்தால் பாதிப்படையுமா?…. எச்சரிக்கை தகவல்….!!!!!

வட கிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 20 கோடி ரூபாய் நிதிஒதுக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பெங்களூருவில் ஏற்பட்ட வரலாறுகாணாத வெள்ளத்தை அடுத்து தமிழகம் முன்கூட்டியே தயாராக இருக்கவேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். பேரிடர்களை எதிர்கொள்ளத் தயாராக வேண்டியது ஒருபுறம் இருந்தாலும், அதை தவிர்க்க காலநிலை மாற்றத்தையும் அதன் தீவிரத்தையும் உலகநாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே சூழலியல் ஆர்வலர்களின் நீண்டகால எதிர்பார்ப்பு ஆகும். இந்நிலையில் தான் சென்னைக்கான […]

Categories
மாநில செய்திகள்

“95% நிறைவடைந்ததாக கூறிய மதுரை எய்ம்ஸ் எங்கே…..?” மக்களை ஏமாற்ற நினைக்கிறார்களா…..? பாஜகவை கடுமையாக சாடிய எம்பி….!!!!

பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக 540 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். இதன் காரணமாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை விருதுநகர் எம்.பி மாணிக்க தாகூர், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின்போது மதுர எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம் காலி இடமாகவே இருந்தது. […]

Categories
மாநில செய்திகள்

கேரளாவில் நீடிக்கும் பதற்றம்!…. தமிழக பேருந்துகள் கேரள எல்லையில் நிறுத்தம்…. வெளியான தகவல்….!!!!

கேரளாவில் தொடர் பதற்றம் நீடித்து வருவதால் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி போகும் தமிழக பேருந்துகள் கேரளா எல்லை பகுதியான களியக்காவிளை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுதும் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பினருக்கு சொந்தமான இடங்களில் என்ஐஏ அமைப்பினர் சோதனை மேற்கொண்டனர். தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து நூற்றுக்கும் அதிகமான நிர்வாகிகள் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அடிப்படையில் கேரளாவில் நேற்று ஒருநாள் முழு அடைப்பு போராட்டத்தை பாப்புலர் பிரண்ட்ஸ்ஆப் […]

Categories
மாநில செய்திகள்

ஸ்விக்கி, அமேசான் தொழிலார்களுக்கு தனி சட்டம்?…. அரசுக்கு சீமான் முக்கிய கோரிக்கை….!!!!

ஸ்விக்கி, சொமேட்டோ, அமேசான், ஓலா, ஊபர் ஆகிய இணையவழிசேவை நிறுவனங்களில் பணியாற்றும் நிலையற்ற தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று சீமான் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “இணையவழி உணவுச் சேவை நிறுவனமான ஸ்விக்கி தம் ஊழியர்களின் ஊதியத்தைக் குறைத்தும், ஊக்கத்தொகையை நிறுத்தியும் தொழிலாளர் உரிமையைப் பறிப்பது அவர்களின் உழைப்பை உறிஞ்சும் கொடுஞ்செயல் ஆகும். இரவு, பகல் பாராது மக்கள் பசியைத் […]

Categories
மாநில செய்திகள்

“தினமும் 4 ஷூட்டிங்” முதல்வர் விளம்பர ஆட்சி செய்கிறார்…. திமுகவை கடுமையாக விமர்சித்த மாஜி அமைச்சர்….!!!

அதிமுக கட்சியின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 144-வது பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகே பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கினார். அவர் பொதுக்குழு கூட்டத்தின் போது பேசியதாவது, திமுகவினர் அண்ணாவின் பெயரையும், புகழையும் குப்பையில் போட்டு விட்டனர். தன்னுடைய குடும்பம் வாழ்வதற்காக கலைஞர் திமுகவை பயன்படுத்தினார். கலைஞரும் தற்போதுள்ள முதல்வர் ஸ்டாலினும் மக்களைப் பற்றி சிறிதும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி… சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு பண்ணுங்க… சீமான் வலியுறுத்தல்….!!!!

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பாக அணிவகுப்பு நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பாக தமிழகத்தில் அணி வகுப்பு நடத்தப்பட இருக்கிறது. அணி வகுப்பு நடத்துவதற்கான நிபந்தனைகள் பற்றி விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். உயர்நீதிமன்றத்தில் இத்தீர்ப்புக்கு தமிழகத்தில் பலரது மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. மேலும் ஆளுங்கட்சியான திமுக-வையும் பலர் சமூகவலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் […]

Categories
மாநில செய்திகள்

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது கட்டாயம்….. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

பருவநிலை மாற்றம் காரணமாக வருடம் தோறும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் சாதாரண மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுவது வழக்கமான ஒன்று. தற்போது மழை, வெயில் என்று பருவநிலை மாறுபாடு காரணமாக தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னையில் வைரஸ் காய்ச்சல் அதி வேகமாக பரவி வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சாதாரண காய்ச்சல் என்பது மூன்று நாட்களில் […]

Categories
மாநில செய்திகள்

BIG NEWS: ஆசிரியர் தகுதித்தேர்வு தேதி அறிவிப்பு….. TNTRB வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!!

தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகின்றன. டெட்எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாள் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை நடத்த தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் திட்டமிட்டு இருந்தது. இந்த தேர்வு எழுதுவதற்காக 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் . இம்மாதம் 15ஆம் தேதி நடைபெற இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-1 நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 கணவன்களை ஏமாற்றி….. 7 ஆவதுக்கு ரெடி…. வசமாக சிக்கிய 20….!!!!

மதுரையைச் சேர்ந்தவர் சந்தியா. 26 வயதான இவர் ஆறு பேரை திருமணம் செய்து தற்போது ஏழாவதாக திருமணம் செய்ய தயாரான நிலையில் இவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சந்தியா என்ற பெண் தனபால் என்ற இளைஞரை ஆறாவதாக திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார். இவர் இதற்கு முன்னதாக ஐந்து பேரை திருமணம் செய்து மோசடி செய்துள்ளார். இந்நிலையில் சில தினங்களிலேயே வேறொரு பகுதியில் வேறொரு மாப்பிள்ளையை நிச்சயம் செய்ய தன்னுடைய போலியான குடும்பத்தோடு சென்றுள்ளார். அப்போது ஆறாவதாக திருமணம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இன்று தமிழகம் முழுவதும்… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. உடனே போங்க….!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் இன்ஃப்ளுயன்சால் காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.தமிழகத்தில் தொடர்ந்து பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.எந்த பகுதியில் 3 பேருக்கு அதிகமாக காய்ச்சல் உள்ளதோ அந்த இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று முன்தினம் முதல் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழக முழுவதும் காய்ச்சல் தொடர்பாக இன்று ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறும் என அமைச்சர் சுப்பிரமணியன் […]

Categories
மாநில செய்திகள்

B.Ed மாணவர் சேர்க்கை…. இன்று முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பிஎட் படிப்புகளில் சேர இன்று  முதல் அக்டோபர் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இது குறித்த விபரங்களை மாணவர்கள் https://www.tngasaedu.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.மேலும் அக்டோபர் ஆறாம் தேதி தரவரிசை பட்டியல் வெளியாகும் என்றும் அக்டோபர் 12ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பி எட் மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவில் 3 பேருக்கு குறி வைக்கும் பாஜக…. அந்த மூணு பேர் இவங்க தான்…. டெல்லிக்குப் போன ரிப்போர்ட்….!!!!

திமுகவின் 3 அமைச்சர்கள் மீது பாஜக கண் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அமைச்சர் செந்தில் பாலாஜி கொங்கு மண்டலத்தில் பாஜகவிற்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச செல்வாக்குகளையும் குறைத்து வருகிறாராம். அதேபோன்று நிதி அமைச்சர் பி டி ஆர் மத்திய அரசை ஆதாரப்பூர்வமாக விமர்சித்து வருகிறார். மேலும் ஆ.ராசாவின் சமீபத்திய பேச்சுகள் பாஜகவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது . இதனால் அவர்கள் சம்பந்தப்பட்ட பல ரிப்போர்ட்டுகள் டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இனி பொதுச் செயலாளர் பதவி எனக்கு தான்”…. EPS- க்கு ஆப்பு வைக்க ஓபிஎஸ் தீட்டிய திட்டம்…. செம மாஸ்டர் பிளான்….!!!!

அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் நிலையில் அதிமுகவை கைப்பற்றும் போரில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஈடுபட்டுள்ள நிலையில் மாறி மாறி வழங்கப்படும் தீர்ப்புகளால் அந்த கட்சியின் தொண்டர்கள் யார் பக்கம் நிற்பது என தெரியாமல் திணறி வருகிறார்கள்.இதனிடையே  அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் வசம் ஒப்படைக்க அண்மையில் நீதிமன்ற உத்தரவிட்டது. இதற்கு எதிராக ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.அதனால் இந்த வழக்கில் இபிஎஸ் தரப்பு பதில் […]

Categories
மாநில செய்திகள்

கால்நடை மருத்துவ படிப்பு…. அக்டோபர் 3 வரை கால அவகாசம் நீட்டிப்பு…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 3ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்பான BVSc&AHபட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடப்பிரிவில் படித்திருக்க வேண்டும். செப்டம்பர் 26 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பல தரப்பினரும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் அந்த கோரிக்கைக்கு ஏற்றவாறு தற்போது அக்டோபர் 3ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

பெண் குழந்தைகளின் பெற்றோரே…. தமிழகத்தில் அக்டோபர் 11 வரை…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் செல்வமகள் சேமிப்பு திருவிழா அக்டோபர் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.இந்த திட்டத்தின் மூலம் பத்து வயது உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒரு நிதியாண்டில் 250 ரூபாய் முதல் 1.50 லட்சம் வரை கணக்கில் செலுத்தலாம். இதற்கு தற்போதைய வட்டி 7 .6 சதவீதமாகும். சேமிப்பு கணக்கு 21 ஆண்டுகளுக்கு நடப்பில் இருக்கும். குழந்தை பத்தாம் வகுப்பு முடித்ததும் அல்லது 18 வயது அடைந்ததும் மேற்படிப்புக்காக 50 சதவீதம் தொகை, திருமணத்தின் […]

Categories
மாநில செய்திகள்

உயர் கல்வியில் சேராத மாணவர்கள்…. தமிழக பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் பலரும் உயர் கல்வி தொடராமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் கடந்த கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் நடப்பு கல்வி ஆண்டில் உயர் கல்வியில் அனைவரும் சேர்ந்துள்ளதா என்பதை கண்டறிய வேண்டும்.ஒருவேளை உயர் கல்வியில் சேரவில்லை என்றால் சம்பந்தப்பட்ட மாணவர்களை தொடர்பு கொண்டு காரணத்தை கேட்டறிய வேண்டும். அவர்கள் உயர் கல்வியில் சேர்ந்திட தேவையான […]

Categories
மாநில செய்திகள்

மின் வாரிய ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு மூன்று சதவீதம் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,தமிழகத்தில் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அகல வேலைப்படி உயர்வு 31 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் மூன்று சதவீதம் உயர்வுடன் இந்த அகலவிலைப்படி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு  மின்வாரிய ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

“அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை”… வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்ட தகவல்…!!!!!!

தமிழகம் மாவட்ட மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை அரசு வேலை வாய்ப்புக்கான பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்பான விவரங்களை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி தமிழகத்தில் மொத்தம் 73 லட்சத்து 99 ஆயிரத்து 512 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இதில் 34 லட்சத்தி 53 ஆயிரத்து 350 ஆண்களும், 39 லட்சத்து 45 ஆயிரத்து 861 பெண்களும் 273 ஆம் பாலினத்தவரும் இருக்கின்றனர் […]

Categories
மாநில செய்திகள்

“மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கவனத்திற்கு”…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  தூத்துக்குடியில் இன்று  மக்கள் நல்வாழ்வு துறை   அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் தொடர்ந்து மருந்து தட்டுப்பாடு குறித்து புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. இது குறித்த புகார் அளிப்பதற்காக 104 என்ற  எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நமது தமிழக முதலமைச்சர் கூறியது போல் இரண்டு மாதங்களுக்குள் புதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தற்போது தமிழகத்தில் அதிக […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்கள் கவனத்திற்கு”…. நாளை நடைபெறும் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்…. முழு விவரம் இதோ….!!!!

திறந்த நிலை பல்கலைக்கழக பதிவாளர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கு.ரத்தினகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வருகிறது. அதில் கடந்த 3  ஆண்டுகளில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர். அதன் தொடர்ச்சியான இந்த ஆண்டுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பல்கலைக்கழக வழக்கத்தில் வருகின்ற […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. மத்திய அரசின் கல்வி உதவித்தொகை…. கடைசி தேதி எப்போம் தெரியுமா?….!!!!!

மத்திய அரசின்  சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை குறித்து  சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி அணைக்கு அரசு கல்லூரிகளுக்கும்  சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் நடப்பு கல்வி ஆண்டில் உயர் கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு மத்திய அரசின்  சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனை விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் WWW. scholarship.gov .in எந்த இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கான இறுதி நாள் அக்டோபர் மாதம் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. ரயிலில்” பட்டாசு எடுத்துச் சென்றால் கடும் நடவடிக்கை”…. எச்சரிக்கை விடுத்த தமிழக அரசு….!!!!

பட்டாசுகளை ரயிலில் எடுத்து சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு  மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவது வழக்கம். அதேபோல் வெளியூர்களில் வேலை செய்யும் பெரும்பாலான மக்கள் பட்டாசுகளை வாங்கிக்கொண்டு ரயில்களில் தங்களது சொந்த ஊருக்கு வருகின்றனர். ஆனால் ரயிலில் பட்டாசு, டீசல், பெட்ரோல், போன்ற தீப்பற்றும் பொருட்களை எடுத்துச் செல்ல அரசு தடை விதித்துள்ளது. மேலும் இதனை கண்காணிக்கும் வகையில் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெறுகிறது.  இது […]

Categories
மாநில செய்திகள்

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2022… இந்த வங்கியில் கணக்கு இருக்கா…? அப்போ ஆஃபர்களை அள்ளலாம்…!!!!

பண்டிகை காலம் ஆரம்பம் ஆகிவிட்டாலே பல நிறுவனங்களும் பல்வேறு விதமான சிறப்பு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றது. அதேபோல் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களும் மக்களை கவரும் விதமாக பல கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் பண்டிகை காலம் வருவதே முன்னிட்டு தற்போது இந்தியாவில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2022 ஆரம்பமாகி இருக்கிறது. பிரைம் சந்தாதாரர்களுக்கான அமேசான் நவராத்திரி விற்பனை நேற்று முதல் கோலாகலமாக தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு எத்தகைய தள்ளுபடிகள் கிடைக்கப் போகிறது […]

Categories
மாநில செய்திகள்

OMG: காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்… தண்ணீர் திறப்பு 800 கன அடியாக அதிகரிப்பு….!!!!

மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகரித்துள்ளது. இதனால் அந்த தண்ணீர்  மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அணையின் முழு கொள்ளளவை 120 அடியாக நீடிப்பதால் அணைக்கு வரும் தண்ணீர் கடந்து சில நாட்களாக அப்படியே காவிரியில் வெளியேற்றப்படுகிறது. அதன்படி அணையில் இருந்து காவிரியில் கடந்த […]

Categories
மாநில செய்திகள்

விபத்தில் சிக்கிய பள்ளி வாகனம்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய சிறுமி…. பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் சாலையில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 31  மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு மினி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மினி வேன் பார்வதிநகர் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எமர்ஜென்சி கதவு பக்கத்தில் அமர்ந்து இருந்த 7வயது சிறுமி ரியோனா திடீரென கதவு உடைந்து வேனில் இருந்து கீழேவிழுந்தார். இதனால் சிறுமிக்கு முகம், கை, கால் போன்ற பகுதிகளில் காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் சிறுமியை […]

Categories
மாநில செய்திகள்

மாயமான கணவன்…. கொழுந்தன் பாலியல் தொல்லை…. கண்ணீருடன் ஒற்றை ஆளாக போராடும் பெண்….!!!!

மயிலாடுதுறை மாவட்டம் மன்னப்பந்தல் தெற்கு வெளி தெருவில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பிரவீனா என்பவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 25 சவுரன் நகை, என்பீல்ட் புல்லட், ரூ.3 லட்சம் செலவில் திருமணம் சீர்வரிசை என்று வெகு விமர்சையாக மாப்பிள்ளைக்கு அளித்து திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு மூன்று மாதம் இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில் பிரவீனாவுக்கு மேலும் வரதட்சனை கேட்டு நெருக்கடி தரப்பட்டது. இந்நிலையில் வெளியூருக்கு வேலை தேடி செல்வதாக […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் குறித்து அவதூறு போஸ்டர்….. “ஒட்ட நிதி கொடுத்தது பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர்”…. ஐகோர்ட்டில் போலீசார் தகவல்..!!

முதல்வரை அவதூறாக சித்தரித்து சுவரொட்டி ஒட்டியதன் பின்னணியில் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டவர் உள்ளதாக ஐகோர்ட்டில் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 11ஆம் தேதி வட சென்னையின் பல்வேறு பகுதியில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை அவதூறாக சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இது தொடர்பாக துறைமுகம் கிழக்குப் பகுதி திமுக செயலாளர் ராஜசேகர் அளித்த புகார் அடிப்படையில், வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி மண்ணடியை சேர்ந்த ரமேஷ், […]

Categories
மாநில செய்திகள்

அத்துமீறி பேசிய ஆ.ராசா… கண்டிக்க பயப்படும் முதல்வர்?…. செல்லூர் கே.ராஜூ ஓபன் டாக்….!!!!!

முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சரும், மதுரை மேற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான செல்லூர் கே.ராஜூ தன் தொகுதிக்கு உட்பட்ட பைகரா பகுதியில் பூமிபூஜை மற்றும் அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட நிகழ்வில் நேற்று (செப். 22) பங்கேற்றார். இந்நிலையில் பைகரா மாநகராட்சி பள்ளியில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது “ராஜா என்ற பெயர் பிரச்னையான பெயரில்லை. என்னுடை பெயர்கூட ராஜாதான். எங்களுடைய பெயர்களுக்கு கலங்கம்விளைவிக்கும் விதமாக ஆ.ராசா செயல்பட்டு வருகிறார். இது போன்ற, பிள்ளையை பெற்றதற்கு அவரின் தாய்தான் […]

Categories

Tech |