கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு இந்து மக்கள் கட்சியினர் தற்பொழுது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அர்ஜுன் சம்பத் தலைமையில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இருக்கக்கூடிய மெயின் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்து இயக்க தொண்டர்கள் மீது நடத்தப்படும் பெட்ரோல் குண்டு வீழ்ச்சிகளை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் தற்பொழுது நடைபெற்று வருகிறது. அதே போல அவர்கள் தரப்பிலிருந்து பல்வேறு முழக்கங்களும் எழுப்பினர். உடனடியாக ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் […]