Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆ.ராசா பிராடு…! சீமான் பைத்தியம்… சொல்லுறது எனக்கு கவலை இல்லை… எச்.ராஜா ஆவேசம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜாவிடம், ஆ.ராசா பேசியதை சீமான் ஆதரிக்கின்றார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதுகுறித்து பேசிய எச்.ராஜா, ஐயோ நான் என்ன சொல்லுறேன், எல்லா பைத்தியமும் ( சீமான் ) ஒன்றாக சேர்ந்து இருக்கு. அவ்வளவுதான்… என்ன ஆதாரம் இருக்கு? நான் பகவத் கீதையில் இருந்து கோர் பண்றேன். அது மட்டும் இல்லை வேதவியாசர் வேதங்களை வகுத்துக் கொடுத்தவர். வேதவியாசர்  யாரு ? பச்சவத்தி என்கின்ற செம்மட தாயின் மகன். வால்மீகி யாரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷார்…. உங்க போனுக்கு இது வந்தா நம்பாதீங்க…. வருமான வரித்துறை திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பண மோசடி செய்யும் நோக்கில் வரும் இமெயில் மற்றும் கடிதங்களை நம்பி மக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என வருமானவரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறை கவனத்திற்கு வந்துள்ள நிலையில் தொலைபேசி அழைப்புகளும் தவறாக வருவதாக புகார் அளித்துள்ளது.அதனால் தங்களின் வங்கி கணக்கில் இருந்து ஏதாவது தொகை, வரிஅல்லது வேறு ஏதாவது ஒரு வகையில் பணம் செலுத்துவது குறித்து ஈமெயில் […]

Categories
மாநில செய்திகள்

ஒருவாரம் பள்ளிகள் விடுமுறை.. இன்று மீண்டும் திறப்பு…. ஆன்லைன் வகுப்பு….????

புதுச்சேரி மாநிலத்தில் காய்ச்சல் காரணமாக 1 முதல் 8ஆம் வகுப்பு வரை விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் ஒருவாரத்திற்கு பிறகு பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு இன்று முதல் காலாண்டு தேர்வு நடத்தப்படும் என்றும் 30 ஆம் தேதி வரை இந்த தேர்வுகள் நடைபெறும் என்றும் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், காய்ச்சல் இன்னும் குறையவில்லை என்பதால், பள்ளிகளை திறக்காமல், ஆன்லைனில் வகுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதேபோல். தமிழகத்திலும் காய்ச்சல் அதிகமாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(செப்…26)….. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உடனே செக் பண்ணிக்கோங்க……!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (செப்…26) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. உஞ்சனை துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்: உஞ்சனை, சாலப்பாளையம், குமரமங்கலம், ராயர்பாளையம், சடையகவுண்டம்பாளையம், ஆலங்காட்டு புதூர், சக்திநாயக்கன் பாளையம், போக்கம்பாளையம், மோளிப்பள்ளி, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆ.ராசா பேசுனது ஸ்டாலின் குடும்பத்துக்கும் பொருந்துமா ? உடனே கண்டிக்க சொன்ன கே.பி முனுசாமி …!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் கே.பி முனிசாமி, ஆ.ராசா அவருடைய பேச்சு என்பது மற்றவர்களுடைய மனதை புண்படுத்துகின்ற வகையிலே இருப்பதோடு மட்டுமல்லாமல்,  மற்றவர்களுடைய உரிமையை அவர் பறிக்கின்ற வகையிலே பேசிக்கொண்டு இருக்கிறார். அது மிகவும் கண்டிக்கத்தக்கது. திரு ராஜா அவர்களுடைய தலைவராக இருக்கக் கூடிய திரு .ஸ்டாலின் அவர்கள் கண்டிக்க வேண்டும். அப்படி அவர் கண்டிக்காத காரணத்தினால் தான் எங்களுடைய பொதுச்செயலாளர் கூட்டத்தில் கூட சொல்லும் போது, திரு.ராஜா சொன்ன கருத்துக்கள் திரு ஸ்டாலினுடைய குடும்பப் பெண்களுக்கும் சேருமா? என்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவுக்கு, பாஜகவுக்கு சங்கடம் வந்துடக் கூடாது – ஓஹோ அதான் இப்படி ஒரு முடிவா ? தெளிவுபடுத்திய சுப்புலட்சுமி ஜெகதீசன் ..!!

திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், அண்மையில் அரசியலில் இருந்து விலகுவதாக கூறி, திமுகவின் பொறுப்பை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அவர் அதிமுகவில் இணையப் போகிறார் என்றெல்லாம் செய்திகள் நேற்று பரவலாக பரவின. இதற்கு மறுப்பு தெரிவித்த அவர், நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக சொல்லிவிட்டேன். இனிமேல் எந்த அரசியல் கட்சியிலும் இணைய மாட்டேன். நான் மற்றொரு அரசியல் கட்சியில் இணைவதற்கு தகுதியான […]

Categories
மாநில செய்திகள்

உள்நாட்டு விமான கட்டணம் திடீர் உயர்வு…. பயணிகள் கடும் அதிர்ச்சி…!!!!

தமிழகத்தில் ஆயுத பூஜை. விஜயதசமி என தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு மக்கள் படையெடுத்து வருகிறார்கள். தமிழகத்தில் இந்த மாதம் முதல் பண்டிகை காலம் தொடங்குகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு வருவது உண்டு. இவ்வாறு வரும் மக்கள் தங்களுடைய பயணத்திற்காக ரயில் மற்றும் பேருந்துகளை தேர்வு செய்வார்கள். குறிப்பாக ஆம்னி பேருந்துகளில் இரு மடங்காக கட்டணம் உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி ரயில் மற்றும் பேருந்துகளில் டிக்கெட் புக்கிங் நிரம்பி விட்டது. இதனால், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது “கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன” கதை….. திமுக அரசை சாடிய OPS….!!!!

மாதந்தோறும் முதியோர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை திமுக அரசு ரத்து செய்துள்ளதாக வெளியான தகவல் ஏழை எளிய முதியோரை கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 60 வயதுக்கு மேற்பட்ட ஏழை எளிய முதியோருக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த நிலையில் தற்போது ஆட்சிக்கு வந்து 16 மாதங்கள் கடந்த நிலையிலும் இந்த வாக்குறுதி நிறைவேற்றாதது மட்டுமல்லாமல் பயனாளிகளுடைய எண்ணிக்கை தற்போது குறைத்துள்ளதாகவும் செய்தி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

எப்போதும் ஆன்லைன் ரம்மி…. கணவனை திருத்த மனைவி எடுத்த பகீர் முடிவு….. சோகம்…..!!!

சென்னையில் உள்ள பல்லாவரம் என்ற பகுதியைச் சேர்ந்த ஞான செல்வம் மற்றும் வகித்தாபுலோரா என்ற தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இதனிடையே ஞான செல்வன் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்துள்ளார். அதனால் கணவர் மனைவி இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் மனம் உடைந்த மனைவி அறையில் உள்ள மின்விசிறியில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அறையில் மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த கணவன் ஞான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காங்கிரஸ் எழுப்பிய நறுக் கேள்வி…! முழு செலவையும் ஏற்ற MGR… நெகிழ்ந்து போன C.M அண்ணா …!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொண்டர்களிடம் பேசும் போது, புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பற்றி அண்ணா அவருடைய பிறந்தநாளில் தான் சொல்ல வேண்டும். அண்ணா அவர்கள் முதலமைச்சராக பதவியேற்ற உடன் அவருக்கு ஒரு ஆறு மாதத்தில் புற்றுநோய் ஏற்பட்டுவிட்டது. அமெரிக்காவிற்கு சிகிச்சைக்கு சென்று விடுகிறார், சிகிச்சைக்கு சென்று அங்கு குணமடைந்து திரும்பி வந்து சட்டமன்றத்தில் பேசுகிறார். அப்போது காங்கிரஸ் கட்சி உடைய உறுப்பினர்கள் நீங்கள் அமெரிக்கா வரைக்கும் சென்று வந்து உயர் சிகிச்சை பெற்று வந்திருக்கிறீர்கள், இதற்கு பணம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தாங்களாகவே குண்டு வீசும் பாஜகவினர்…. இந்துத்துவ கும்பலின் சதி… அறிக்கை மூலம் ஷாக் கொடுத்த சீமான் …!!

மதவாத சக்திகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் தெரிவித்திருக்கிறார். சமூக அமைதியை கெடுக்கும் வகையில் தமிழகத்தில் பெரும் மதக்கலவரங்களை ஏற்படுத்த திட்டமிடும் மதவாத சக்திகளை உடனடியாக கடும் நடவடிக்கை எடுத்து ஒடுக்க வேண்டும் என்ற தலைப்பில் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நாடெங்கிலும் மத பூசல்கள் ஏற்பட்ட போது கூட அமைதி பூங்காவாக திகழ்ந்த தமிழகத்தில் மதக் கலவரங்கள் ஏற்படுத்துவதற்கென இந்துத்துவ இயக்கங்கள் செய்யும் பிரித்தாலும் சூழ்ச்சிகள் பெரும் அதிர்ச்சியை தருகிறது. திட்டமிட்ட […]

Categories
மாநில செய்திகள்

திடீர் மாரடைப்பு…. 1 கி.மீ தூரம் மூதாட்டியை தூக்கி வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்…..!!!!

நேற்று மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு 60 வயது மூதாட்டி ஒருவர் தர்ப்பணம் கொடுப்பதற்காக தனது உறவினர்களுடன் மாமல்லபுரம் சென்றுள்ளார். அப்போது மூதாட்டிக்கு திடீரென கடற்கரையில் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அதனால் பதறிப்போன உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்த நிலையில் ஆம்புலன்ஸ் கடற்கரைக்குச் செல்ல முடியாததால் நுழைவு வாயில் பகுதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன் பிறகு 700 மீட்டர் தூரம் உள்ள மணல் பரப்பிலேயே மருத்துவ பணியாளர்கள் மூதாட்டியை தூக்கி வந்து, முதலுதவி சிகிச்சை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

OMG: தூக்கு மாட்டுவது எப்படி?…. சிறுவனின் விளையாட்டு விபரீதமான சோகம்….!!!!!

சென்னை புழல் அடுத்த புத்தகரம் காமராஜர் என்ற பகுதியில் கார்த்திக் என்ற 11 வயது சிறுவன் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து சிறுவனை மீட்ட பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த சிறுவன் கார்த்திக் அவரின் சகோதரனும் வீட்டில் கண்ணாம்பூச்சி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது தூக்கு மாட்டுவது […]

Categories
மாநில செய்திகள்

வைரஸ் காய்ச்சல் எதிரொலி: இன்று(26.09.22) காலாண்டு தேர்வுகள் நடைபெறுமா….? மாநில அமைச்சர் தகவல்….!!!

புதுச்சேரி மாநிலத்தில் புதிய வைரஸ் காய்ச்சல் பரவியதையடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு மாதம் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு இடையில் காலாண்டு தேர்வு தொடங்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த நிலையில் வைரஸ் காய்ச்சல் தொடர்ந்து பரவி வருவதால் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை விடப்படுமா? என்று மக்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் புதுவையில் இன்று ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். மேலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவுக்கு தகுதியே இல்ல..! MGR_ரே வேண்டாம்னு வந்தேன்… கெத்தாக பேசிய சுப்புலட்சுமி ஜெகதீசன் ..!!

திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், சில நாட்களுக்கு முன்பாக அரசியலில் இருந்து விலகுவதாக கூறி திமுகவில் பொறுப்பை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து நேற்று அவர் அதிமுகவில் இணைய இருக்கின்றார் என்ற செய்திகள் பலவராக பரவினர், இந்த செய்தி பரவிய உடனே மறுப்பு தெரிவித்த சுப்புலட்சுமி ஜெகதீசன் 40 ஆண்டுகளாக திமுக கட்சியில் உள்ளேன். நிச்சயமாக அதிமுக இணைய மாட்டேன் எந்த கட்சியிலும் இணையும் திட்டம் இல்லை என தெரிவித்தார். மேலும் அவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதற்கு இதுவே சாட்சி…! நா ரெடி…! நீங்க அதுக்கு ரெடியா…? சவால் விட்ட செல்லூர் ராஜு…!!!!!

இபிஎஸ் தலைமையில் அதிமுக பொதுக்கூட்டம் வரும்29ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது. இதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுக ஆட்சிக்காலத்தில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் பரிந்துரையின் அடிப்படையில் மக்களுக்கு நகை கடன், பயிர் கடன் தள்ளுபடி ஆகியவை செய்யப்பட்டது. அப்படி இருக்கையில் தகுதியே இல்லாதவர்களுக்கு எப்படி தள்ளுபடி செய்ய முடியும். எங்கள் ஆட்சி காலத்தில் அதிமுக கூட்டடுறவு துறை சிறப்பாக செயல்பட்டது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எவன், எவனோ சவால் விடுகிறான்… ஊர் பெயர் தெரியாத உலறுவாயன் பேசுகிறான்.. பாஜகவை சீண்டும் ஆர்.எஸ் பாரதி ..!!

திமுக கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, அகில இந்தியாவிலேயே 1957இல் இருந்து ஒரே சின்னத்தில் வெற்றி பெறுகின்ற ஒரு இயக்கம் உண்டு என்றால், திமுகவை தவிர வேற எந்த கட்சியும் கிடையாது. 1957இல் இந்த தியாகராயர் நகர் தொகுதியில் ஜேசுபாலன் என்றவர் போட்டியிட்டார். அந்த ஜேசுபாலனுக்கு உதயசூரியத்திலே ஓட்டு கேட்டவர்கள். இன்று ஜே.கருணாநிதிக்கு கேட்கிற வரை, ஒரே சின்னத்திற்கு கேட்கிற யோக்கியதை இங்கு முன்னாலே உட்கார்ந்து இருக்கிற திமுக […]

Categories
மாநில செய்திகள்

“எஸ் பி ஐ யின் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டம்”… மீண்டும் ஒரு வாய்ப்பு… இந்த தடவை மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

எஸ்பிஐயில் மூத்த குடிமக்களுக்காகவே செயல்படும்  ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டம் SBI ‘WECARE’. இந்தத் திட்டம் ஆரம்பத்தில் செப்டம்பர் 2020 வரை மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் கொரோனா தொற்றும் காரணமாக சிறப்பு எப்டி திட்டமானது இது பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தற்போது மீண்டும் வங்கி சார்பில் இந்த ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டம் அடுத்த வருடம் மார்ச் இறுதிவரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. “SBI WECARE ” டெபாசிட் திட்டம் term deposit பிரிவில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எப்படி இருந்த தமிழகம் இப்படி ஆகிவிட்டது…. பொங்கிய செல்லூர் ராஜூ…!!!!

எப்படி இருந்த தமிழகம் இப்படி ஆகிவிட்டது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரையில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் எப்படி இருந்தது தற்போது 18 மாதங்களில் எப்படி இருக்கிறது என்பதை பாருங்கள். திமுக ஆட்சிக்கு வருவதற்கு காரணமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தான். ஆனால், தற்போது எங்கு பார்த்தாலும் ஆர்ப்பாட்டம் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்….. கோவையில் 2 பேர் அதிரடி கைது….!!!!

தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கே பெட்ரோல் குண்டு வீச்சு வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் தென் மாவட்டத்தில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், கோவையில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஜேசுராஜ் மற்றும் இலியாஸ் என்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்டவர்கள் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகளாக உள்ளனர். சிசிடிவி மற்றும் நுண்ணுறிவு பிரிவு விசாரணை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி மெகா தடுப்பூசி முகாம்…… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு மெகா தடுப்பூசி முகாம்களை ஒவ்வொரு வாரமும் நடத்தி வருகிறது. தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் இன்றோடு நிறைவு பெறுவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இனி தடுப்பூசி முகாம்கள் அக்டோபர் முதல் புதன் கிழமை அரசு மருத்துவமனைகளில் நடைபெறும். இன்றோடு மெகா தடுப்பூசி முகாம்கள் முடிவடைகிறது. அதேபோல் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியும் செப்.,30 உடன் நிறைவடைகிறது. […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்: தமிழக அரசிடம் அறிக்கை கேட்கும் மத்திய அரசு….!!!!

தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கே பெட்ரோல் குண்டு வீச்சு வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் தென் மாவட்டத்தில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பெட்ரோல் குண்டு வீசுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேவைப்பட்டால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்றும் தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ராகர்க் தெரிவித்துள்ளார். கோவை பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில் ஜேசுராஜ் மற்றும் இலியாஸ் ஆகியோர் கைது […]

Categories
மாநில செய்திகள்

அரசியலமைப்புச் சட்டத்தை சிதைக்கும் பாஜக…. 3 நாள் நடை பயணம் மேற்கொள்ளும் காங்கிரஸ்….!!!!!

காங்கிரஸ் கட்சியினர் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர். தற்போது பாஜக அரசு ஆட்சி நடத்தி வருகிறது. ஆனால் பாஜக அரசியலமைப்புச் சட்டத்தை சிதைப்பதற்கு முயற்சி செய்வதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநில காங்கிரஸ் கமிட்டிகளுக்கு நடைப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி இன்று முதல் மூன்று நாட்களுக்கு தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியமூர்த்தி பவனில்  இருந்து ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடம் […]

Categories
மாநில செய்திகள்

எய்ம்ஸ் மருத்துவமனையின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?…. உண்மை நிலையை மக்களுக்கு கூற வேண்டும்…. மக்கள் நீதி மய்யம் கேள்வி….!!!!

மக்கள் நீதி மய்யம்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம்  சார்பில் நேற்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் நமது இந்திய நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி கடந்து 2019 -ஆம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அடி கல்லை  நாட்டினார். ஆனால் பணி தொடங்கப்பட்டு 3  ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்நிலையில் சுற்றுச்சூழல் தவிர வேறு எந்த ஒரு கட்டுமான பணியும் தொடங்கப்படவில்லை. ஆனால் பூர்வாங்கத்  திட்டமிடல் பணிகள் இறுதி நிலையை எட்டியுள்ளதாகவும் […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களுக்கு தோல்வி என்பது ஒரு பாடம்…. நடைபெற்ற பட்டமளிப்பு விழா…. கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி….!!!!!

டிஜி வைணவக்  கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கத்தில் டிஜி வைணவக்  கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 55-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொண்டார். மேலும் இதில் கல்லூரியின் செயலாளர் அசோக்குமார், முதல்வர் எஸ். சந்தோஷ், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆர். வெங்கட்ராமன், கல்லூரியின் துணைத் தலைவர் கோபால் அகர்வால் அசோக், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் […]

Categories
மாநில செய்திகள்

“இனி ஆர் டி ஓ ஆபிஸ் செல்ல வேண்டாம்”… மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, ஓட்டுநர் உரிமம் தொடர்பான சேவைகள் வாகன பதிவு மற்றும் உரிமையை மாற்றுதல் போன்ற 58 குடிமக்கள் தொடர்பான சேவையை ஆதார் வைத்து ஆன்லைன் மூலமாக செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தை செயல்படுத்தி வரும் மத்திய அரசு திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது முதல் சான்றிதழ்கள் பெறுவது வரை பல விஷயங்களில் ஆன்லைனில் கொண்டு வந்திருக்கிறது. தற்போது நாட்டில் நாளுக்கு நாள் வாகனங்களின் […]

Categories
மாநில செய்திகள்

ஓட்டுநர் உரிமம் பெற 3 நாட்கள் தேர்வு…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

ஓட்டுநர் உரிமம் பெற 3 நாட்கள் தேர்வு ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று ஓட்டுநர் உரிமம் பெறுபவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மற்ற மூன்று நாட்கள் பொது மக்கள் தேர்வில் பங்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது இதனையடுத்து அனைத்து வேலை நாட்களிலும் அனுமதி வழங்க வேண்டும் என்று ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு கொடுத்திருந்தனர். சிவகங்கை வட்டார போக்குவரத்து கழக அலுவலகம் மற்றும் காரைக்குடி […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. இனி எங்கு இருந்தாலும் தமிழ் படிக்கலாம்…. பரப்புரை கழகத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்….!!!!

தமிழக முதலமைச்சர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். தமிழக சட்டசபையில் வளர்ச்சி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க தமிழ் பரப்புரை கழகம் உருவாக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதற்கான தொடக்க விழா நேற்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நடைபெற்றது. இதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தகவல் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் தடை….. பரபரப்பு அறிவிப்பு…!!!!

தமிழகம் முழுவதும் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோலை பாட்டில்களில் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் இரண்டு நாட்களாகவே வன்முறை சம்வங்கள் அதிகரித்து வரும் நிலையில் 20000 போலீசார் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தென் மாவட்டங்களில் உள்ள முக்கிய நபர்களின் வீடுகள், அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவை, திண்டுக்கல், சென்னை என பல இடங்களில் பாஜக நிர்வாகிகள், இந்து அமைப்பினர் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுவீச்சு தாக்குதல் நடைபெற்றதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து  பாஜக, ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் […]

Categories
சிவகங்கை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவி அடித்துக் கொலை – காதலன் வெறிச்செயல்… காரைக்குடியில் பரபரப்பு சம்பவம் ..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். கூலி தொழிலாளியான இவரது இளைய மகள் சினேகா, வயது 21. நர்சிங் முடித்துவிட்டு அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று மதியம் மாத்தூர் ரேஷன் கடை அருகே ஒரு இளம் பெண் தலையில் அடிபட்டு உயிருக்கு போராடுவதாக ஊர் மக்களுக்கு தகவல் தெரிய வர, அவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். காவல் துறையினரும், ஊர் மக்களும் சேர்ந்து தலையில் பலத்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பாஜகவில் இணைவதை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை” மத நம்பிக்கையை இழிவு படுத்துகிறார்கள்…. வேலூர் இப்ராஹிம் ஆவேசம்….!!!!.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் பாஜக மற்றும் அதன் மாநில நிர்வாகிகள் சார்பில் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா சமீபத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் சிறுபான்மை பிரிவு தலைவர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டார். அவர் விழாவில் பேசியதாவது, தேசத்தில் உள்ள அனைத்து மதத்தையும் இணைத்து செயல்படக்கூடிய கட்சி தான் பாஜக. இதற்காக பிரதமர் […]

Categories
மாநில செய்திகள்

3 ஆண்டுகள் ஒரே அலுவலகத்தில்…. இடமாற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்களை இடம் மாற்றம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்களில் பணிபுரியக்கூடிய மாவட்ட கல்வி அலுவலகங்களில் உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் இடைநிலை உதவியாளர்கள் 2022 ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி நிலவரப்படி மூன்று ஆண்டுகளாக ஒரே அலுவலகத்தில் பணி செய்திருந்தால் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாவட்டத்திலும் உள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

பணி ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு….. அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் பணி ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கும் படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் பணி ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்த்தி வழங்க வேண்டும் என்று கடந்த 2012 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை என்பதற்காக ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் நல சங்கம் சார்பாக 2014 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு மீண்டும் விசாரணைக்கு […]

Categories
மாநில செய்திகள்

“பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டால்”… டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை…!!!!!

தமிழகத்தில் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவர்கள் எனவும் சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, சில அமைப்புகளை சேர்ந்தவர்களின் வீடுகள் வாகனங்களில் மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசிய வழக்குகளில் புலன் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் குற்ற செயல்களில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய தனிப்படைகள் […]

Categories
மாநில செய்திகள்

ஆந்திர மாநில முதல்வரின் திடீர் அறிவிப்பு… அதிர்ச்சியில் தமிழக விவசாயிகள்…!!!!!

ஆந்திர மாநிலம் குப்பம் சட்டசபை தொகுதியைச் சேர்ந்த அணிமிகனிபள்ளே என்ற இடத்தில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் அந்த மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசிய போது, தமிழக மற்றும் ஆந்திர எல்லையில் கனக நாச்சியம்மன் கோவில் அருகே இருக்கும் பாலாறு நீர்த்தேக்கத்தின் உயரத்தை அதிகரிக்காமல் தண்ணீர் சேமிக்கும் அளவை அதிகரிக்க இருக்கிறோம். அதற்காக 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் விரைவில் பணிகள் தொடங்கப்படும் குடிப்பள்ளியில் 77 டிஎம்சி சாந்திபுரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

“பாஜக இல்லை திமுகவினர் தான் சிறை செல்ல அஞ்சுவார்கள்”… மீண்டும் சர்ச்சையை கிளப்பும் அண்ணாமலை…!!!!!

முதல்வர் ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதாகவில்லை.  ஆனால் மிசா சட்டத்தில் கைதானது போல் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார் எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழ்நாடு வந்துள்ளார் மதுரை மற்றும் காரைக்குடியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் காரைக்குடியில் நடைபெற்ற பாஜக கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கட்சி நிர்வாகிகளிடம் பேசியுள்ளார். இதனை அடுத்து பாஜக தலைவர் அண்ணாமலை […]

Categories
மாநில செய்திகள்

சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் 3 அறிக்கைகள்…. முதல்வரின் முடிவு என்ன….? கலக்கத்தில் அதிமுக….!!!!

தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டம் 6 மாதங்களுக்கு ஒரு முறை கூட்டப்படும். கடந்த மே மாதம் சட்டப்பேரவை கூடிய நிலையில் அடுத்ததாக நவம்பர் மாதம் சட்டப்பேரவை கூட்டப்பட வேண்டும். ஆனால் முதல்வர் நவம்பர் மாதத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு பயணம் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தீபாவளி பண்டிகைக்கு முன்பு சட்டப் பேரவையை கூட்டுவதற்கு முதல்வர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சட்டப்பேரவை கூட்டத்தின் போது ஆன்லைன் ரம்மி தடை தொடர்பான மசோதா நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போயும் போய் இபிஎஸ் தலைமையில் இணைவேனா ? – சுப்புலெட்சுமி ஜெகதீசன்

அண்மையில் திமுகவிலிருந்து விலகி,  அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த சுப்புலட்சுமி ஜெகதீசன் அதிமுகவில் இணைவதாக இன்று காலை முதல் பரவலாக செய்திகள் வெளியாகின. இது குறித்து விளக்கம் அளித்த சுப்புலட்சுமி ஜெகதீசன், நான் வீட்டில் தான் இருக்கின்றேன். நான் எங்கேயும் போகவில்லை. அரசியலில் இருந்து ஓய்வு என்று என்னுடைய அறிக்கையிலேயே தெரிவித்துள்ளேன். அப்படி இருக்கும்போது ஏன் நான் திரும்பவும் அரசியலுக்குள்ள போக போறேன். எம்ஜிஆர் முதலமைச்சராக இருக்கின்ற காலத்திலேயே நான் அந்தக் கட்சியின் செயல்பாடு பிடிக்கவில்லை […]

Categories
மாநில செய்திகள்

இவ்வளவு பாதுகாப்பா?…. முன்னோர்களை நினைத்து வழிபடும் மகாளய அமாவாசை…. குமரி கடலில் குவிந்த பொதுமக்கள்….!!!!

மகாளய அமாவாசை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துள்ளனர். ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசை வரும். இந்த அமாவாசையில் மக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். அதில் குமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும்  அமாவாசை அன்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். இந்நிலையில் இன்று ஏராளமானோர்  கடல் பகுதியில்  குவிய தொடங்கினர். மேலும் அவர்கள் கடலில் நீராடி விட்டு ஈரத்துணியுடன் கரைக்கு வந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

EPFO சந்தாதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்… இனி நீங்களும் விரைவில் அரசின் காப்பீடு உதவியை பெறலாம்…!!!!!!

கடந்த 2018 ஆம் வருடம் நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் பயன் பெறும் விதமாக ஆயுஸ்மான் பாரத் எனும் மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தகுதியுள்ள நபர்களுக்கு மத்திய அரசு வழங்கக்கூடிய ஆயுஸ்மான் அட்டை வைத்திருக்கும் பயனாளிகள் எந்த ஒரு அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் வருடத்திற்கு 5 லட்சம் வரை சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும். முன்னதாக சமூக பொருளாதார கணக்கெடுப்பின் அடிப்படையில் பயனாளர்கள் அடையாளம் காணப்படுகின்றார்கள். கூலித்தொழிலாளர்கள் கட்டுமான தொழிலாளர்கள்,  சாலையோர […]

Categories
மாநில செய்திகள்

காந்தி ஜெயந்தி… தமிழகம் முழுவதும் அக்டோபர் 2ம் தேதி காலை 11 மணிக்கு… அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!!!

காந்தி ஜெயந்தி முன்னிட்டு தமிழக அரசு மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சுழற்சி முறையை பயன்படுத்தி அக்டோபர் இரண்டாம் தேதி காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டங்கள் நடத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது. மேலும் இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, குறைவின் வரம்பின்படி உறுப்பினர்கள் வருகையை உறுதி செய்து கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் சேருவதற்கு அதிமுக தகுதி இல்ல…! பாஜக முகத்திரையை தோலுரிப்பேன்… சுப்புலெட்சுமி ஜெகதீசன் விளக்கம்

அண்மையில் திமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சுப்புலெட்சுமி ஜெகதீசன் அதிமுகவில் இணைய போவதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து கூறிய அவர், இன்று காலை முதல் எல்லோரும் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாற்று இயக்கத்துக்கு செல்ல போவது உண்மையா என கேட்கிறார்கள். நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று ஏற்கனவே தெளிவா சொல்லி விட்டேன். நான் இன்னைக்கு திமுகவிலிருந்து இன்னொரு கட்சியில் போய் சேர அளவுக்கு எந்த கட்சிக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: அதிமுகவில் இணைகிறேனா ? சுப்புலட்சுமி ஜெகதீசன் மறுப்பு …!!

அதிமுகவில் இணைய போவதாக வெளியான தகவலுக்கு முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மறுப்பு தெரிவித்து இருக்கிறார். அதிமுகவில் இணைகிறேனா என்று கேள்விக்கு சுப்புலட்சுமி ஜெகதீசன் மறுப்பு தெரிவித்து இருக்கிறார். 40 ஆண்டுகளாக திமுகவிலிருந்து உள்ளேன், நிச்சயமாக அதிமுகவில் இணைய மாட்டேன் என அவர் கூறியிருக்கிறார். எந்த கட்சியிலும் இணையும் திட்டம் இல்லை என்று சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்திருக்கிறார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: அதிமுகவில் இணைகிறார் சுப்புலெட்சுமி ஜெகதீசன்?

திமுகவில் இருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசன், தற்போது அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் இன்று மாலை சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில், அவரை சந்தித்து அதிமுகவில் இணைய உள்ளதாக தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது.  சில நாட்களுக்கு முன்பு திமுகவினிலிருந்து விலகுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனை அடுத்து அவர் பல்வேறு கட்சிகளுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவலும் பரவிய நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒருவரையும் விட மாட்டோம் – கோவை போலீசுக்கு எச்சரிக்கை… அண்ணாமலை பரபரப்பு …!!

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை,  கோயம்புத்தூர் பகுதியில் காலகாலமாக இருந்த, கோவையை பற்றி புரிந்த போலீஸ் அதிகாரிகளை எல்லாம் டிரான்ஸ்பர் செய்துவிட்டு,  பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் கைது செய்ய வேண்டும் என்று அதிகாரிகளை நியமனம் செய்துள்ளார்கள். நாங்கள் ஒருவரையும் விடமாட்டோம். அதிகாலை 5 மணிக்கு எல்லாம் போய் கோழியை பிடிப்பது போன்று பிடித்து வருகிறீர்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் பகலில் கைது செய்யுங்கள் பார்ப்போம். நானும் காவல் […]

Categories
மாநில செய்திகள்

1இல்ல… 2இல்ல… 14மாவட்டங்களில் கனமழை… அலெர்ட் கொடுத்து வானிலை ..!!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. தென்மேற்கு பருவமழை காலத்தினுடைய இறுதி கட்டத்தில் நாம் இருக்கின்றோம். இந்த நிலையில் தென்மேற்கு பருவமழையினுடைய நிலையானது கடந்த ஒரு வார காலமாக வறண்ட வானிலை என்ற அளவிலே நீடித்து வந்தது. இந்த நிலையில் நாளைய தினத்திலிருந்து மேற்கு திசை காற்றினுடைய வேக மாறுபாடு காரணமாக கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறார்கள். இன்றைய தினம் […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: பாஜக நிர்வாகி வாகனங்களை எரித்தவர் கைது – போலீஸ் அதிரடி

திண்டுக்கல் குடைபாறைப்பட்டிபாறை பட்டியை சேர்ந்த பாஜக பிரமுகரின்  வாகனம் தீவைக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் பாஜக நிர்வாகி செந்தில் பால்ராஜ். இவர் குடைபாறைப்பட்டிபாறை பட்டியில் ஆட்டோ கன்சல்டிங் தொழில் செய்து வருகிறார். பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு மாவட்ட திண்டுக்கல் மாநகர் மேற்கு மண்டல தலைவரான இவரது வாகனங்களை நேற்று நள்ளிரவு சுமார் 3 மணி அளவில் மர்ம நபர்கள் கார் மற்றும் ஐந்து இருசக்கர வாகனங்களை தீ வைத்து கொளுத்தினர். இந்த […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: சேலத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு – 2பேரை கைது செய்து போலீஸ் அதிரடி …!!

சேலம் மாநகர் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் ராஜன் என்பவர் வீட்டில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டானது வீசப்பட்டது. இதனை அடுத்து சேலம் மாநகர போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணைக்காக 7 நபர்களை அம்மாபேட்டை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்திய நிலையில் தற்போது இருவரை சேலம் மாநகர போலீசார் கைது செய்திருக்கிறார்கள். குறிப்பாக எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த மாவட்ட தலைவர் சையது அலி மற்றும் எஸ்டிபிஐ கட்சி பொறுப்பாளர் காஜா […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அண்ணாமலை ஆர்ப்பாட்டம் – போலீஸ் அனுமதி மறுப்பு …!!

 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் கோவையில் நாளை நடைபெற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. கோவை பிஜேபி மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டிக்கும் விதமாக நாளை சிவனாந்தா காலனி பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஒரு மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காவல்துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளனர். இந்த அனுமதி தற்போது மறுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பிஜேபி […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: இன்று மாலைக்குள் குற்றவாளிகள் கைது – டிஜிபி உறுதி

பெட்ரோல் பெட்ரோல் குண்டு வச்சு சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் இன்று மாலைக்குள் கைது செய்யப்படுவார்கள் என டிஜிபி உறுதி அளித்திருக்கிறார். தொடர் பெட்ரோல்  குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை மேற்கொள்ள வேண்டிய சூழல் இல்லை எனவும் அவர் தெரிவித்து இருக்கிறார். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் சிறப்பாக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

Categories

Tech |