Categories
மாநில செய்திகள்

தமிழக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்….. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

மைசூரு, யஸ்வந்த்பூரில் இருந்து நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் நாலு மற்றும் 11 ஆகிய தேதிகளில் யஸ்வந்த்பூரில் இருந்து பிற்பகல் 12:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மதுரை வழியாக காலை 4.30 மணிக்கு நெல்லையை சென்றடையும்.அதன் பிறகு அக்டோபர் ஐந்து மற்றும் 12ஆம் தேதி நெல்லையிலிருந்து காலை 10:40 மணிக்கு புறப்படும்.அதேபோல் தூத்துக்குடி மற்றும் மைசூர் சிறப்பு ரயில் நாளை மாலை 3 மணிக்கு தூத்துக்குடியில் […]

Categories
மாநில செய்திகள்

படிப்பை கைவிடும் தமிழக மாணவர்கள்….. அதுவும் எந்த வகுப்பில் தெரியுமா?….. ஷாக் ரிப்போர்ட்…..!!!!

தமிழகத்தில் எட்டாம் வகுப்பு உடன் படிப்பை கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பள்ளி கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சென்னை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இது அதிகமாக உள்ளது . அதனைப் போலவே தென்காசி,திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஐந்தாம் வகுப்பு உடன் படிப்பை கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. அடுத்ததாக திருப்பத்தூர்,பெரம்பலூர் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் பல பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கையை நடக்கவில்லை […]

Categories
மாநில செய்திகள்

ஆதார் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு…. இதனை உடனே செய்யுங்கள்…. UIDIA திடீர் எச்சரிக்கை…!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இந்திய குடிமகன்களுக்கு UIDAI-ன் அமைப்பு வழங்கும் 12 இலக்க அடையாள எண் தான் ஆதார் அட்டை ஆகும்.வங்கியில் கணக்கு தொடங்குவது முதல் அரசின் நலத்திட்டங்கள் பெறுவது வரையில் எண்ணற்ற சேவைகளுக்கு ஆதார் கார்டு அவசியமானது. நம் கையில் எப்போதுமே ஆதார் கார்டு இருப்பது அவசியம் என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்த ஆதார் அட்டை அரசின் நல திட்டங்களை பெறுவதற்கு, வங்கி பரிவர்த்தனை செய்ய, சிம்கார்டு வாங்க, கேஸ் இணைப்பு பெற பயன்படுகிறது. அதுமட்டுமில்லாமல் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் முரளிதர்…!!

டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் முரளிதரர். அவர் சென்னை மற்றும் தென்னிந்தியாவிலே நன்கு பரிச்சயமான பிரபல வக்கீல் ஆக இருந்து. பின்னர் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர். அவரை உச்சநீதிமன்றம் ஒரிசா மாநிலத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு அளித்திருந்தது; தற்பொழுது அவர் ஒரிசா நீதிமன்றத்திலே பணியாற்றிக் கொண்டிருக்கிறார் அப்படிப்பட்ட நிலையிலே அவரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக பணியிடை மாற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொலிஜியம் உத்தரவிட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலே மூத்த நீதிபதிகள் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே!….. மழைநீர் வடிகால் பணிகள் எப்போது நிறைவடையும் தெரியுமா?…. மேயர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டு பருவமழையின் போது சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. சுரங்க பாதைகள் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குடியிருப்புகள் நீர் புகுந்து மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. கனமழை வெள்ளத்தால் சென்னை பாதிக்கப்படுவதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே போட்டிக்கு ரெடியா?…. ரூ.2 லட்சம் பரிசுத்தொகை…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் விவசாயிகளுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த வருடம் திமுக தலைமையிலான அரசு முதல் முறையாக வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்தது. அப்போது விவசாய திட்ட பணிகளுக்காக 250 கோடி மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதை தொடர்ந்து விவசாயம் செய்வதில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு வேளாண் மற்றும் தோட்டக்கலை சார்பாக பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இயற்கை வேளாண்மை மற்றும் விளைபொருள் ஏற்றுமதி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளை பாராட்டி பரிசு […]

Categories
மாநில செய்திகள்

“நான் ஓசில வரமாட்டேன்”…. அமைச்சருக்கு பாட்டி கொடுத்த சரியான அடி…. இது தேர்தலில் எதிரொலிக்குமா?….!!!

திமுக தேர்தல் வாக்குறுதில் ஒன்றான பெண்கள் இலவச பேருந்து பயணம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருநங்கைகளும் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த திட்டத்தை குறித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பெண்கள் ஓசில்தானே பேருந்தில் போறீங்க என்றும் மற்ற இலவச திட்டத்தையும் குறித்து ஏளனமாக பேசினார். இதனால் பயனாளிகள் மட்டுமில்லாமல் மக்களும் வேதனை அடைந்தனர். இலவசம் என்பதை பெருமையாக வழங்கி வரும் அரசு தனது பயனாளிகளை பார்த்து ஒசி தானே என கேட்பதைப் போல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மகன் திருமணத்திற்கு ரூ.3 கோடி செலவு….. 1.5 கோடி சாப்பாட்டுக்கு மட்டும்….. அமைச்சர் மூர்த்தி விளக்கம்….!!!!

தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தியினுடைய மகன் திருமண சமீபத்தில் நடந்து முடிந்தது இந்த திருமணம் வெகு விமர்சையாக மிகவும் பிரம்மாண்டமாக கோடிக்கணக்கான செலவில் நடந்தது. இந்த திருமணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் மூர்த்தி தன்னுடைய மகன் திருமணத்தை ஆடம்பரமாக செய்துள்ளார் என்று எதிர்க்கட்சியினர் சிலர் விமர்சித்து வந்தனர். அந்த வரிசையில் எடப்பாடி பழனிச்சாமியும் விமர்சித்து இருந்தார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மூர்த்தி, என்னுடைய மகன் திருமணத்திற்கு மூன்று கோடி […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. பண்டிகை கால சிறப்பு ரயில்கள் தொடக்கம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை போன்ற பண்டிகைகளை முன்னிட்டு நாளை முதல் தொடர் விடுமுறை வருகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 5-ம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் விடுமுறை அளித்துள்ளது. அதோடு பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வதால் சேலம் ரயில்வே கோட்டம் சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கும், மைசூரில் […]

Categories
மாநில செய்திகள்

இந்த கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு மட்டும் தான் திமுகவில் உச்சப் பதவி…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

திமுகவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உட்க்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி சமீபத்தில் நடைபெற்ற 15வது தேர்தலில் மாநகர, மாவட்ட அளவில் கட்சியின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகியோரின் அதிகாரப்பூர்வ பட்டியலை திமுக தலைமை வெளியிட்டது. இதில் முக்கியமாக திமுகவில் உச்சப் பதவியாக கருதப்படும் மாவட்ட செயலாளர் பொறுப்புக்கு மொத்தம் 64 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 7 மாவட்ட செயலாளர்கள் அந்த பதிவில் […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பதியப்பட்ட நிலமோசடி வழக்கு ரத்து…. ஐகோர்ட் உத்தரவு..!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரது மகள் ஜெயப்பிரியா மற்றும் மருமகன் ஆகிய 3 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் மீன்வள உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன் குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ் குமாருக்கும் பிரச்சனை இருந்து வந்தது. இந்த விவகாரத்தில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்துக் கொண்டதாகவும், […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை பெருநகர் காவல் துறையின் சார்பில்….. கேட்பாரற்று கிடந்த 695 வாகனங்கள் ஏலம்…. வெளியான அறிவிப்பு…..!!!!

சென்னை பெருநகர காவல் துறையின் சார்பில் நேற்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் சென்னை பெருநகர காவல் துறைக்கு உட்பட்ட பகுதிகளில் கேட்பாரற்று கிடந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 595 மோட்டார் சைக்கிள், 11 ஆட்டோக்கள் மற்றும் 1 கார் என மொத்தம் 695 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் புதுப்பேட்டை பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை பொது ஏலத்தில் விடுவதற்கு காவல்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குடும்பம் மீதான நிலமோசடி வழக்கு ரத்து..!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குடும்பம் மீதான நிலமோசடி வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மருமகனின் சகோதரரின் சொத்துக்களை அபகரித்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. நில மோசடி புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவரது மகள் மற்றும் மருமகன் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

திராவிட மாதம்….. ட்விட்டர் ஸ்பெஷலில் கடைசி நாளில் இறங்கிய ஸ்டாலின்…. மகிழ்ச்சியில் திமுகவினர்….!!!!

தமிழகத்தில் மு க ஸ்டாலின் ஆட்சி பெற்றதில் இருந்து இருந்து மக்களுக்கு பல்வேறு நல திட்டங்களை கொண்டு வந்துள்ளார் . மக்கள் நல பணித்திட்டங்கள் மட்டுமில்லாமல் கொள்கை ரீதியாவும் பல்வேறு விஷயங்களை மேற்கொண்டு வருகிறார். அதிலும் திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் குறித்த பயிற்சி பாசறை கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் திராவிட இயக்க வரலாறு ,திராவிட இயக்கத் தலைவர்கள், திராவிடக் கொள்கைகள், திராவிடத்திற்கு எதிரான சக்திகளை எப்படி எதிர்கொள்வது உள்ளிட்ட விஷயங்களை […]

Categories
மாநில செய்திகள்

வாரிசு சான்றிதழ் பெற புதிய வழிகாட்டு நெறிமுறைகள்….. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

வாரிசுதாரர் சான்று வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து நிர்வாக ஆணையரகத்துக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், வாரிசுதாரர் சான்று பெற விரும்புவோர். வட்டாட்சியரிடம் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இறந்த நபர் எந்த இடத்தில் வசித்தாரோ அந்த வசிப்பிடத்திற்கு உள்ளிட்ட பகுதியை சேர்ந்த வட்டாட்சியரிடம் விண்ணப்பம் செய்ய வேண்டும். வாரிசு சான்றிதழ் என்பது பொதுவான ஆவணம். இதனை சாதி மதம் பார்க்காமல் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (30.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 30) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

இந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.4000 உதவித்தொகை…. விண்ணப்பிப்பது எப்படி….? வெளியான முக்கிய தகவல்….!!!!

மத்திய அரசு ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக பல திட்டங்களை அமல்படுத்தி செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் mission vatsalya எனப்படும் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பெற்றோர் இழந்த குழந்தைகள், தாய் தந்தை இருவரில் ஒருவரை இழந்த குழந்தைகள், எச்ஐவி, எய்ட்ஸ் போன்ற நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களை கொண்ட குழந்தைகள், சிறையில் வசிக்கும் பெற்றோர்களின் குழந்தைகள், கணவரால் கைவிடப்பட்டு பாதுகாவலர் பராமரிப்பில் வளரும் குழந்தைகள் […]

Categories
மாநில செய்திகள்

பயணிகள் கவனத்திற்கு….! இந்த 8 ரயில் நிலையங்களில்…. நாளை முதல் பிளாட்பாரம் கட்டணம் உயர்வு….!!!!

சென்னை கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள எட்டு முக்கிய ரயில் நிலையங்களிலும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அடுத்த வருடம் ஜனவரி 31 ஆம் தேதி வரை ஒரு தனி நபருக்கான பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ரூபாய் 10 லிருந்து 20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் பண்டிகைகள் தொடர்ச்சியாக வர உள்ளதால் ரயில் நிலையங்களில் கூட்டத்தை தவிர்க்கும் விதமாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் சென்னை […]

Categories
மாநில செய்திகள்

இனி பொருட்கள் வாங்க புதிய முறை அறிமுகம்….. ரேஷன் அட்டைதாரார்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கான மின்னணு பதிவேட்டில் கைரேகை பதியும் பொழுது கோளாறுகள் ஏற்படுவதால் மின்னணு பதிவேடுக்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்கள் கருவிழி மூலமாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் இது சாத்தியமானால் அனைத்து ரேஷன் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கலெக்டர்களை சஸ்பெண்ட் செய்வோம் – தமிழக அரசுக்கு ஐகோர்ட் பரபரப்பு எச்சரிக்கை…!!

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதை தடுக்காத ஆட்சியர்களை சஸ்பெண்ட் செய்ய நேரிடும் என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளை மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 2013-ஆம் ஆண்டு கைகளால் மலம் அள்ளுவதை தடுப்பதற்கான சட்டம் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் தூய்மை பணியாளர்கள் தங்களது கைகளால் பாதாள சாக்கடை சுத்தம் செய்வது, சாக்கடைகளை சுத்தம் செய்வது, குப்பைகளை அள்ளுவது போன்ற பணிகளை மேற்கொண்டு வந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

ஆ.எஸ்.எஸ் ஊர்வலம் அனுமதி மறுப்பு : கோர்ட்டுக்கு சென்ற தமிழக போலீஸ்..!!

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி காவல்துறை சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.  தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்து பல இடங்களில் காவல்துறை உத்தரவு பிறப்பித்திருந்ததாக ஆர்எஸ்எஸ் தரப்பில் காலையில் முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டால் அந்த மனுக்கான நடைமுறை நாளைக்கு விசாரிக்கப்படும் என்று நீதிபதி இளந்திரையன் தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில் காவல்துறை ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கடந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ.100 கொடுன்னு கேட்குறாங்க…! அண்ணாமலை இதெல்லாம் தெரிஞ்சுக்க…! நச்சுன்னு சொன்ன பொன்முடி …!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,  அரசு பள்ளியில் படிச்சிட்டு காலேஜுக்கு போற பெண்கள் எல்லாம் எவ்வளவு மகிழ்ச்சியா தலையாட்டுறீங்க பாருங்க…  உங்க பொண்ணுங்க எல்லாம் காலேஜ் போகணும்…  உங்க சகோதரிகள் காலேஜுக்கு போகணும்…. அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்….   இங்க இருக்கிற பொண்ணுங்க யாருன்னா பக்கத்துல இருக்குற பாரதி காலேஜுக்கு போகணும்னு அவனுங்க அம்மா கிட்ட பத்து ரூபா இருந்தா குடும்மா கேட்குமா ? கேட்காதா ? இனிமே உங்ககிட்ட கேக்க […]

Categories
மாநில செய்திகள்

அண்ணாமலை இட்லி சாப்பிட்டாரா ? தேங்காய் சட்னி தொட்டுக்கிட்டாரா ? C.Mக்கு உளவுத்துறை ரிப்போர்ட் .. பெரும் பரபரப்பு தகவல் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தினுடைய புலன் இன்டெலிஜென்ஸ் ரொம்ப பெயர் வாங்கியது. 15 மாத காலமாக அது சரியில்லை என்பது இன்னொரு விஷயம். அதை திரும்ப ஆக்டிவேட் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் எங்களுடைய ஒரு கோரிக்கை. கடந்த சில நாட்களாக காவல்துறை வேகவேகமாக சென்று முதலமைச்சரை எதிர்த்து போஸ்ட்  ஓட்டுபவர்களை கைது செய்கிறார்கள். ஆ.ராஜா அவர்கள் சொன்ன கருத்துக்கு தமிழ்நாட்டில் இதுவரை ஒரு எஃப்ஐஆர் கூட கிடையாது. திருச்சியில் ஒரே ஒரு […]

Categories
மாநில செய்திகள்

1 நாள் முழுவதும் அம்மா மெஸ்ல சாப்பிடலாமே – ஐகோர்ட் நீதிபதி கருத்து …!!

ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் உள்ள கட்டழகர் கோயிலுக்கு செல்ல பக்தர்களிடம் வனத்துறையினர் ரூபாய் 20 வசூலிப்பதாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. கட்டழகர் கோயிலுக்கு செல்ல வனத்துறையினர் 20 ரூபாய் வசூலிக்க தடை விதிக்க கோரி ஆனந்தகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு வனத்துறையினர் சார்பாக வனப் பகுதியை சுத்தம் செய்வதற்காகவே அந்த பணம் வசூலில் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் வனப்பகுதியை சுத்தம் செய்ய தேவையான நிதியை அரசிடமிருந்தே பெற்றுக் கொள்ளலாமே. 20 ரூபாய் இருந்தால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி மாநில செய்திகள் விமர்சனம்

குதிரையில் வந்து பொன்னியின் செல்வனுக்கு வணக்கத்தப் போட்ட கூல் சுரேஷ் ..!!

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரான மணிரத்தினம் தற்போது பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுமான், பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ( இன்று முதல் ) உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியது. பெரும் […]

Categories
மாநில செய்திகள்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல்….. வெளியான குஷியோ குஷி அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் அனைத்தும் இன்றோடு முடிவடைகிறது. இதனை தொடர்ந்து நாளை விடுமுறை விடப்படுகிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் 13ஆம் தேதியும் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு 10ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு வரும் 10, 11 மற்றும் 12ம் தேதிகளில் எண்ணும் எழுத்தும் பயிற்சி நடத்தப்படுகிறது. இதில் ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் ஒரு அப்பாவி…! சீமான், திருமாவை கைது பண்ணுங்க….! கொம்பு சீவி விடுறாங்க…. ஜாக்கிரதை….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு அப்பாவி என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார். மேலும், ஸ்டாலினுக்கு ஒருபுறம் சீமானும் மற்றொரு புறம் திருமாவளவனும் கொம்பு சீவி விடுகிறார்கள். எனவே அவர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சர்வதேச பயங்கரவாதிகளுக்கு தமிழகத்தில் யாரும் ஆதரவாக செயல்பட அனுமதிக்க கூடாது. அதேசமயம் தமிழக அரசு தேசவிரோதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. 1991 இல் அரசு தகவல்களை எல்டிடி இயக்கத்திற்கு கசிய விட்டதால் திமுக அரசு கலைக்கப்பட்டது. இந்தியாவுக்கு ஆதரவாக விசிக […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இனி சாலையில் மாடுகள் திரிந்தால் 3000 ரூபாய் அபராதம்….. சென்னை மாநகராட்சி அறிவிப்பு….!!!

சென்னை மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் ஏற்படும் சிரமங்களை கட்டுப்படுத்தும் வகையில் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த அபராத தொகையை 1550 ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக மாநகராட்சி தற்போது உயர்த்தியுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக தெருக்களில் சுற்றி தெரியும் மாடுகள் மாநகராட்சி பொது சுகாதாரத் துறையினரால் பிடிக்கப்பட்டு மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு 1550 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

ரயில் நிலையங்களில் நாளை (அக்டோபர் 1) முதல் நடைமேடை டிக்கெட் உயர்வு…. பயணிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!!

அக்டோபர் மாதத்தில் ஆயுத பூஜை, தீபாவளி அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து கிறிஸ்துமஸ்,புத்தாண்டு மற்றும் பொங்கல் என பண்டிகை நாட்கள் வர உள்ளதால் மும்பை,புது டெல்லி மற்றும் சென்னை போன்ற முக்கியமான ரயில் நிலையங்களில் பயணிகளின் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். இதனால் கூட்ட நெரிசலை குறைக்கவும் பயனியர் அல்லாதவர்களின் வருகையை குறைக்கும் நோக்கத்திலும் நடைமேடை கட்டணத்தை தற்காலிகமாக உயர்த்த ரயில்வே வாரியம் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணத்தை உயர்த்தியுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விசிக பேரணிக்கு அனுமதி இல்லை – தமிழக அரசு அனுமதி மறுப்பு … கடும் ஷாக்கில் திருமாவளவன் ..!!

தமிழகம் முழுவதும் அக்டோபர் 2இல் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் மற்றும் விசிக மனித சங்கிலிக்கும் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு விதிகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கு வேண்டும் அல்லது பரிசீலிக்கலாம் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நிலையில்,  சட்ட ஒழுங்கு காரணமாக இந்த ஊர்வலத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் மாநிலத்தில் சட்ட ஒழுங்கை பாதகத்துக்காக காவல்துறையினர் முழுவீச்சில் இரவு பகலாக அனைத்து இடங்களிலும் ரோந்து உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல்….. சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…..!!!!!!

தமிழகத்தில் அக்டோபர் மாதத்தில் பொதுவாக ஆயுத பூஜை,விஜயதசமி மற்றும் தீபாவளி பண்டிகைகள் என அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ள நிலையில் அரசை விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் அக்டோபர் 4 ஆயுத பூஜை மற்றும் 5 விஜயதசமி கொண்டாடப்பட உள்ள நிலையில் பெரும்பாலான மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.இந்நிலையில் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அக்டோபர் இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை காந்தி ஜெயந்தி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK அரசுக்கு நாம் தமிழர் ஆதரவு…! C.M ஸ்டாலினுக்கு நன்றி… ட்விட் போட்டு மெர்சலாகிய சீமான் ..!!

அக்டோபர் 2ஆம் தேதி தமிழகத்தில் 51 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம்  நடத்ததிட்டமிட்டு இருந்தனர். இதற்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், நீதிமன்றத்தை நாடிய ஆர்எஸ்எஸ் நிபந்தனையோடு அனுமதி பெற்றது. இந்நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்து உத்தரவிட்டது. இதுகுறித்த தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்ட சீமான், மக்கள் மனதில் மதவெறியைத் தூண்டி, தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற திட்டமிட்டிருந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(செப்…30)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மாதம்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஏதாவது ஒரு நாள் மின்தடை செய்யப்படுவது வழக்கம்.அவ்வகையில் செப்டம்பர் 30ஆம் தேதி தமிழகத்தில் மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகள் குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மதுரை மதுரை மாவட்டம் மாணிக்கம்பட்டி துணை மின் நிலையம் மற்றும் வாடிப்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், இந்த பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் […]

Categories
மாநில செய்திகள்

இன்றே(செப் 30) கடைசி நாள்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு….!!!!!

குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கான அலங்கார ஊர்திகளின் தகவல்களை அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 2023 குடியரசு தினவிழாவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பதற்கான மாதிரிகளை இன்றே(செப் 30) தேதிக்குள் அனுப்ப தமிழக உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சுதந்திர போராட்டம், 75 ஆண்டு சாதனை, தீர்வுகள் என்ற தலைப்பில்  அலங்கார ஊர்திகளின் மாதிரிகள் இடம்பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு குடியரசு தினவிழாவில், வேலுநாச்சியார், பூலித்தேவன், வீரன் சுந்திரலிங்கம், மருது சகோதரர்கள் அடங்கிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெரும் பரபரப்பு…! ஓபிஎஸ் போட்ட வழக்கு : உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை ..!!

அதிமுக பொதுக்குழு உத்தரவுக்கு எதிராகவும், ஓபிஎஸ்சுக்கு சாதகமாகவும் ஒற்றை நீதிபதி உத்தரவு பிறப்பித்ததற்கு தடைவிதிக்க கோரிய வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் ஒற்றை நீதிபதியின் பொதுக்குழு செல்லாது  என்ற உத்தரவை எதிர்த்து இபிஎஸ் மேல்முறையீடு செய்திருந்தார். அவ்வழக்கு விசாரணையை இரட்டை நீதிபதி அமர்வு  விசாரித்த போது, அதிமுக பொதுக்குழு செல்லும் என உத்தரவு வந்திருந்தது. இந்நிலையில் அதனை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து சார்பில் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு  மனு செய்யப்பட்டது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் உரிமம் பெறாத 5000 கடைகளுக்கு சீல்?…. இன்றே கடைசி நாள்…. மாநகராட்சி திடீர் எச்சரிக்கை….!!!

சென்னை மாநகராட்சியில் சிறு கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை ஏராளம் உள்ளன.அந்தக் கடைகள் தொழில் செய்வதற்கு கட்டாய மாநகராட்சி இடம் உரிமை பெற வேண்டும். அது மட்டுமல்லாமல் தொழில் வரியும் செலுத்த வேண்டும்.ஆண்டுக்கு இரண்டு முறை தொழில் வரியை நிறுவனங்கள் மற்றும் சிறு கடைக்காரர்கள் செலுத்த வேண்டும்.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 70 ஆயிரம் கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது தொழில் வரி வசூலை மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தி […]

Categories
மாநில செய்திகள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை…. இன்றே(செப்…30) கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் ஏராளமான இளைஞர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக சமீபத்தில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் புதிய வேலைவாய்ப்பை தேடி வருவோர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.இந்நிலையில் அரசு வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதாவது மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்பு கிடைக்காமல் பல வருடங்களாக காத்திருப்பவர்களுக்கு உதவி தொகை அரசு சார்பாக வழங்கப்படுகிறது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஞாயமே இல்லாம பேசுறாங்க…! கொஞ்சம் கூட சென்ஸ் இல்ல… ஈ பிஎஸ் கோஷ்டிக்கு மூளை கிடையாது… போட்டு தாக்கிய புகழேந்தி …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, அதிமுக அலுவலகம் புரட்சித்தலைவி அம்மா அதிமுகவோடு ஒன்றினையும் போது, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களால் அதைக் கொடுத்திருன்னு ஜானகி அம்மையார் அவர்களுக்கு சொல்லி, திருமதி ஜானகி அம்மையார் இனாமாக கொடுத்த அலுவலகம். அதிமுகவுக்கு யாரு தலைமையோ, அவர்கள் அதை பராமரித்துக் கொள்ளலாம் என அந்த உயில்ல இருக்கு, அவ்வளவுதான். இப்போ அந்த டாக்குமெண்டை எடுத்துட்டு வந்து,  சுபாஷ்,  ராமா,  கோவிந்தா என யாரோ ஒருத்தர்  எப்படி  டாக்குமெண்ட்டோட பெயரை மாத்திக்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ஓய்வூதியதாரர்களே….! இன்றே கடைசி நாள் உடனே போங்க…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

ஓய்வூதியதாரர்கள் வருடத்திற்கு ஒருமுறை வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். இது ஓய்வூதியதாரர் உயிருடன் இருக்கிறாரா என்பதற்கான சான்று ஆகும்.2022 வருடத்திற்கான வாழ்நாள் சான்றை வரும் செப்டம்பர் மாதத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென்று தமிழக அரசு தெரிவி த்துள்ளது. இந்நிலையில் ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றினை செப்.,30-ந் தேதிக்குள் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு நேரில் வருவதன்மூலம், இந்திய அஞ்சல் துறை வங்கி சேவை மூலம், இ-சேவை மையம் மற்றும் பொது […]

Categories
மாநில செய்திகள்

ஓய்வூதியதாரர்களே…. இன்றே(செப்…30) கடைசி நாள்…., தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…….!!!!!

தமிழக ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் வருடத்திற்கு ஒருமுறை கட்டாயம் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். நவம்பர் 30ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும். கொரோனா காரணமாக இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதனை சமர்ப்பிக்காவிட்டால் பென்ஷன் கிடைக்காது. எனவே பென்சனை தொடர்ந்து பெறுவதற்கு நவம்பர் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாசிச சக்திகள் தலைவிரித்து ஆடுது…! வேதனையா இருக்குதும்… செம ஷாக்கில் திருமாவளவன் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,  வருகிற அக்டோபர் 2 தமிழகம் தழுவிய அளவில் அனைத்து ஒன்றியங்களிலும் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க பேரணியை நடத்துகின்றோம். காந்தியடிகள் பிறந்தநாள்,  அவரை சுட்டுக்கொன்ற பாசிச சக்திகள் இன்றைக்கு இந்தியா முழுவதும் காந்தியடிகளை ஓரம் கட்ட கூடிய வகையில், வரலாற்றில் இருந்து அப்புறப்படுத்தக் கூடிய வகையில்..  அவருக்கு எதிரான சமூக விரோத சக்திகளை எல்லாம் உயர்த்தி பிடிக்கிறப்போக்கு தலை விரித்து ஆடுகின்றது. அது மிகவும் […]

Categories
மாநில செய்திகள்

அக்.,1 முதல் நடைமேடை டிக்கெட் உயர்வு…. தெற்கு ரயில்வேயின் அறிவிப்பால் பயணிகள் அதிர்ச்சி…!!

ரயில் நிலையங்களில் நடை மேடை டிக்கெட் விலை உயர்த்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தெற்கு ரயில்வே நேற்று (29ஆம் தேதி) வெளியிட்டுள்ள அறிக்கையில், டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய 8 ரயில் நிலையங்களில் உள்ள பிளாட்ஃபார்ம் டிக்கெட்டின் விலை அக்., 1ஆம் தேதி முதல் 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்த்தப்படும். பண்டிகை காலங்களில் கூட்டம் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் RSS ஊர்வலத்துக்கு தடை – தமிழக அரசு அனுமதி மறுப்பு …!!

அக்டோபர் 2 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தமிழ்நாடு முழுவதும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆர் எஸ் எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி கோரியிருந்தது. இதற்கு தமிழக அரசு, காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து ஆர்எஸ்எஸ் அமைப்பு அனுமதியை பெற்றது. சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு  நிபந்தனைகள் விதித்து  ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கியிருந்தது.. இந்நிலையில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ.4000 வழங்கிய ஒரே C.M ..! உலகத்திலேயே நாம தான்… கெத்து காட்டும் திராவிட மாடல் ஆட்சி ..!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஒண்ணுமே தெரியாத ஒருத்தன் வந்துட்டு இன்னைக்கு தளபதியை பத்தி தர குறைவாக பேசுகிறான் என்று சொன்னால்,  மனசாட்சி உள்ளவர்களே எண்ணிப் பார்த்திட வேண்டாமா? தமிழகத்தினுடைய முதலமைச்சர் தளபதி அவர்கள்,  இந்த குறுகிய காலத்திலே….  இந்த ஆட்சி வந்து இன்னும் 1 1/2 ஆண்டு முடியல. அதுக்குள்ளே எவளோ செஞ்சிருக்காரு. பெண்களுக்காக 50 சதவீதம் உள்ளாட்சி தேர்தலில் இடம் கொடுத்திருப்பது மட்டுமல்ல, பெண்கள் படிக்க வேண்டும் என்பதற்காக அவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

C.M செயல்பாட்டில் திருப்தி இல்லை..! அமித் ஷா கொடுத்த உறுதி… குஷி மோடில் அண்ணாமலை…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாண்புமிகு டிஜிபி அவர்கள் யாரெல்லாம் இது போன்ற வன்முறையில் ஈடுபடுகின்றார்களோ, சட்ட ஒழுங்கை சீர்குலைக்கின்றார்களோ, அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயப்படும் என்று சொல்லி இருக்கின்றார்கள். நிச்சயமாக வரவேற்கின்றேன்.  யாரெல்லாம் இது போன்ற சட்ட ஒழுங்கு சீர்கேட்டிலே பொதுமக்களுடைய சொத்தை சேதப்படுத்துகின்றார்களோ,  ஒரு அமைதி பூங்காவாக இருந்த தமிழகம் 15 மாதங்களாகவே நாம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றோம். காவல்துறையினுடைய கைகளை கட்டப்பட்டிருக்கின்றது, அதனால் அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை […]

Categories
மாநில செய்திகள்

“மருத்துவ மாணவர்கள் கவனத்திற்கு”…. அரசு வெளியிட்ட தரவரிசை பட்டியல்…. அமைச்சர் தகவல்….!!!!

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டார். மேலும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் செந்தில்குமார், மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, மருத்துவத் தேர்வு குழு செயல் டாக்டர் .முத்துச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் அவர்  மருத்துவ  தரவரிசை பட்டியலை வெளியிட்டார். மேலும் அவர் செய்தியாளர்களை சந்தித்து அறிக்கை ஒன்றை அளித்துள்ளார். அதில் எம்.டி, எம்.எஸ். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது பெரியார் மண்… RSS கட்டுப்பாட்டில் ADMK… பாஜக ஜம்பம் எடுபடாது… கவலைப்பட்ட திருமாவளவன் ..!!

அதிமுக ஒரு திராவிட இயக்கமாகவே நீடித்திருக்க வேண்டும் என்ற கவலையிலிருந்து நாங்கள் விமர்சனம் முன் வைக்கின்றோம் என தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், திமுகவா ? அ திமுகவா ?  என்று விவாதத்தை மடைமாற்றம் செய்ய வேண்டிய தேவை இல்லை. ஆர்.எஸ்.எஸ் என்கிற பாசிஸ்டுகளா? அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளா ? என்று தான் இந்த அரசியலை பார்க்க வேண்டியிருக்கிறது. அதிமுகவை பொறுத்தவரையில், ஜெயலலிதா அம்மையாருக்கு பிறகு 100 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 கொடுக்க…. சில்லரை மாற்றிக்கொண்டிருக்கிறோம்…. அமைச்சர் கேலி பேச்சு….!!!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. திமுக அரசு அறிவித்துள்ள தேர்தல் அறிவிப்பு அறிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த தொகையானது விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன், தமிழக அரசு அனைத்து தரப்பு மக்களின் நலன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்னும் கேவலமா கூட பேசுவாங்க…! டிஜிபி வேடிக்கை பார்த்துகிட்டு இருக்காரு..! C.Mக்காக வேதனைப்பட்ட புகழேந்தி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, நானு,  அண்ணன் வைத்தியலிங்கம், மிஸ்டர் மனோஜ் பாண்டியன், மிஸ்டர் ஜே.டி.சி பிரபாகரன் நாங்க எல்லாரும் இருந்தோம். ஆனால்  என்ன பொறுத்த வரைக்கும் எந்த ஆவணங்களோ, போய் கார்ல வச்சதையோ நான் பாக்கல. நம்ம பார்வை உள்ள இருக்கும். கீழ இருக்கின்ற ஆபீஸ் ரைட் சைடுல ஓபிஎஸ் அண்ணன் ரூம். லேப் சைட்ல இபிஎஸ் ரூம். மேல அம்மா ரூம். அம்மா ரூமுக்கு யாரும் போகவே இல்ல. மேலே யாரும் ஏறவே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடேங்கப்பா…! ரொம்ப அக்கறையா இருக்காரே… அடிக்கடி சொல்லும் சேகர்பாபு… நெகிழச் செய்த மாடல் திராவிட ஆட்சி ..!!

திமுக சார்பில் நடந்த விழாவில் பேசிய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மகளிர் இவ்வளவு பேர் உட்கார்ந்து இருக்கீங்க. இன்னைக்கு எவனோ சொல்றான் பெரியார் அது சொன்னாரு. இது சொன்னாரு ? அப்படின்னு. அது கிடையாது நோக்கம்.. ஆணும், பெண்ணும் சமமாக இருக்க வேண்டும். எல்லா ஜாதிக்காரங்களும் சமமாக நடத்தப்பட வேண்டும். தீண்டாமை இருக்கக் கூடாது.  யாரையும் ஒருவருக்கு ஒருவர் வெறுக்க கூடாது. சமூக நீதி இருக்க வேண்டும். இதைச் சொல்லி தான் பெரியார் செயல்பட்டார். பெரியார் […]

Categories

Tech |