Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: முதன்முறையாக கடம்பூர் பேரூராட்சியை கைப்பற்றிய திமுக….!!!!!

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் சாதாரண தேர்தலுக்கான வாக்குப்பதிவு செப்.29ல்  நடைபெறது. இந்த நிலையில் தேர்தல் நடந்த ஒன்பது வார்டுகளில் எட்டு இடத்தில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்று கடம்பூர் பேரூராட்சியை கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 12 வார்டுகளில் மூன்று உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதனால் திமுக செம மகிழ்ச்சியில் உள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING: வணிக கேஸ் சிலிண்டர் விலை ரூ.35.50 குறைந்தது….!!!

19 கிலோ எடை கொண்ட வர்த்தகரீதியான கேஸ் சிலிண்டர் விலை ரூ.35.50 குறைக்கப்பட்டு, ரூ.2,008.50ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைகொண்ட எல்பிஜி சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் ரூ.1068.50ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறதது. அதேசமயம், இயற்கை எரிவாயு விலை வரலாறு காணாத அளவுக்கு 40% சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 நாள் பொதுவிடுமுறை…. இந்த நாளும் லீவு விடுங்க…. அரசு ஊழியர்கள் கோரிக்கை …!!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக பண்டிகைகள் வருவதால் மக்கள் வெளியூர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு வருகின்றனர். அதுமட்டுமின்றி காலாண்டு விடுமுறையும், பண்டிகைக்காக அரசு விடுமுறையும் சேர்ந்து வருகிறது. எனவே பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு வருகின்றனர். ஆனால் அரசின் பொது விடுமுறையில் மூன்று நாட்கள் விடுமுறையில் இடையில் திங்கள்கிழமை வேலை நாள் இருப்பதால் அரசு ஊழியர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. நாளை அக்.2ஆம் தேதி காந்தி ஜெயந்தி பொதுவிடுமுறை ( ஞாயிறு வார விடுமுறை), அக்.3ஆம் தேதி திங்கட்கிழமை வேலை […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (01.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 01) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

“இனி இப்படி செய்யக்கூடாது” ஹோட்டல்களில் நடத்தப்படும் திடீர் சோதனை….. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமார் உணவகங்களில் ஆய்வுக்கு செல்லும் பொழுது ஊடகங்களையும் கூடவே அழைத்து சென்று வீடியோ எடுத்து வெளியிடுவதாகவும், இதனால் உணவகங்களின் பெயர் கெட்டுபோவதகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரித்த நீதிபதி, கெட்டுப்போன உணவு என்பதை ஆய்வகத்தில் உறுதி செய்த பிறகு நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு அதிகாரம் இருப்பதாகவும், ஆனால் அப்படி இல்லாமல் முன்கூட்டியே ஊடகங்களை […]

Categories
மாநில செய்திகள்

“தப்பா டைப் பண்ணிட்டீங்களா இனி பிரச்சினை இல்லை”… twitter பயனர்களுக்கு ஒரு செம அப்டேட்…!!!!

உலகம் முழுவதும் அதிக அளவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூக வலைதளங்களில் மிகவும் ஆர்வமுடன் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். சமூக வலைதளங்களில் நன்மைகள் போலவே தீமைகளும் அதிக தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதனால் பயனர்கள் மிகவும் கவனமுடன் இவற்றை கையாள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சமூக வலைதள செயலிகள் இதனால் தங்கள் பயனர்களை அதிகரிப்பதற்காக புதுப்புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகின்றார்கள். இந்த சூழலில் twitter செயலி தற்போது அதிகாரப்பூர்வமாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதாவது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்துகளில்… மக்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!!!

தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சிக்கு வந்ததும் தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வருடம் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்தத் திட்டத்தால் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதே சமயம் போக்குவரத்து துறை நஷ்டத்தை சந்தித்துள்ளது. மேலும் பெண்கள் தனியார் பேருந்து மற்றும் ஆட்டோகளில் செல்வது குறைந்துள்ளது. ஏற்கனவே […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களின் கவனத்திற்கு… அரிய வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க..!!!!!

இந்தியாவில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவர் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் என்னும் மத்திய அரசு நீட் என்னும் நுழைவு தேர்வு தேர்வு கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இந்த மருத்துவ நுழைவு தேர்வு ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி,ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும்  உள்ளிட்ட 13 முறைகளில் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நடப்பு ஆண்டிற்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றுள்ளது. அதனை தொடர்ந்து தேர்வு முடிவுகள் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா?….. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…. ரெடியா இருங்க…..!!!!

தமிழகத்தில் தீபாவளி சிறப்பு ரயில்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியேற்றுள்ள செய்தியில், யுவர் பிளாட்பார்ம் என்ற மாதாந்திர இதழ் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் தமிழகத்தில் உள்ள பல ரயில்களிலும் டபுள் டக்கர் ரயிலில் பயணித்தோருக்கு இந்த இதழ் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. இந்த இதழை தமிழ்,இந்தி மற்றும் மலையாள உள்ளிட்ட மொழிகளில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(அக்…1)….. மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க……!!!!

தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக இன்று(அக்டோபர் 1) மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் பல்லடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9. 00 மணி முதல் மாலை 5. 00 மணி வரை பல்லடம் நகரம், மங்கலம் ரோடு, கொசவம்பாளையம் ரோடு, செட்டிபாளையம் ரோடு, மாணிக்காபுரம் ரோடு, திருச்சி ரோடு ஒரு பகுதி, வடுகபாளையம், சித்தம்பலம், புள்ளியப்பன்பாளையம், வெங்கிட்டாபுரம், பனப்பாளையம், மாதப்பூர், ராசாகவுண்டன்பாளையம், […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: இன்று 5 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல கீழெடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் இன்று ஐந்து மாவட்டங்களில் கடமலை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர்,திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி…. தீவிர சிகிச்சை….!!!!

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செயல்பட்டு வரும் அமைச்சர் அன்பில் மகேஷ் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் தற்போது தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்ய நாதன் உடல் நலக்குறைவால் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.ராமேஸ்வரம் விரைவு ரயில் திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வழியில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்களுக்கான வேலைவாய்ப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…. ரெடியா இருங்க…..!!!!

தமிழக முழுவதும் பெரும்பாலான ரேஷன் கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுவதால் அவை அனைத்தும் விரைவில் நிரப்பப்படும் என சமீபத்தில் தமிழக அரசு அறிவித்திருந்தது.இதனுடைய அது குறித்து அறிவிப்பு எப்போது வெளியாகும் என பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான ரேஷன் கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் 13ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 14ஆம் தேதி வரை புதிய ஆட்களை நியமிக்க விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன. அதன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் இன்று முதல் 5 நாட்களுக்கு விடுமுறை…. மக்களுக்கு அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளது. 1,2 ஆகிய இரண்டு நாட்களும் சனி ஞாயிறு விடுமுறையாகும்.இடையில் மூன்றாம் தேதி மட்டும் வேலை நாள் என்பதால் அரசு ஊழியர்களுக்கு மட்டும் அன்று விடுமுறை கிடைக்கும் பட்சத்தில் அவர்கள் தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறையில் இருப்பார்கள்.இந்த நாட்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்படும். அவ்வகையில் காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

இனி கவலைய விடுங்க…. போலீஸ் தேர்வுக்கு இப்படியும் பயிற்சி….. வெளியான சூப்பர் நியூஸ்…!!!!!

போலீஸ் தேர்வுக்கு யூடியூப் வழியாக பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் முதன்மை பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி அரசு துறைகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் பணிபுரிபவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. இந்த பயிற்சியின் தன்மையை விரிவுபடுத்தவும், மூலை முடுக்கெல்லாம் உள்ளவர்களுக்கு சென்றடைய வேண்டுமென்ற எண்ணத்திலும் இந்த கல்லூரியின் சார்பாக youtube சேனல் ஆரம்பிக்கப்பட்டு அதில் பயிற்சி காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது […]

Categories
மாநில செய்திகள்

“இதை கட்டாயம் செய்யணும்” தமிழகம் முழுவதும்…. ரேஷன் கடைகளுக்கு பரந்த திடீர் உத்தரவு….!!!!

தமிழக அரசு அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழக முழுவதும் கிராம சபை கூட்டங்களை நடத்த அனுமதி அளித்துள்ளது. மேலும் சுழற்சி முறையை பின்பற்றி காலை 11 மணி அளவில் கிராம சபை கூட்டங்களை நடத்த உத்தரவிட்டுள்ளது. கிராம சபை கூட்டம் நடைபெற அனைத்து ஊராட்சிகளிலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும். கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் டெங்கு பரவுவது பற்றி விவாதிக்க கூட்டத்தில் அறிவுறுத்த வேண்டும். அது மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக யூடியூப் பிரபலம் டிடிஎஃப் வாசன் கைது…. Police அதிரடி…. ஆனா கடைசியில டிவிஸ்ட்…!!!

கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் டிடிஎஃப் வாசன். இவர் யூட்யூபில் twin throttlers என்ற சேனல் நடத்தி வருகிறார். இந்த சேனலில் இவர் நீண்ட தூரம் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களில் பயணம் செய்து அதை வீடியோவாக பதிவிட்டு 2கே கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் டிக் டாக் பிரபலமான ஜி பி முத்துவை தன்னுடன் பைக்கில் வைத்துக்கொண்டு அதிவேகமாக இரு சக்கர வாகனத்தை ஓட்டியதற்காக டிடிஎப் வாசன் மீது சாலை விதிகளை […]

Categories
மாநில செய்திகள்

பயணிகளே…! இன்று(அக்டோபர் 1) முதல் இந்த கட்டணம் உயர்வு…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

சென்னை கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள எட்டு முக்கிய ரயில் நிலையங்களிலும் இன்று அக்டோபர் 1ஆம் தேதி முதல் அடுத்த வருடம் ஜனவரி 31 ஆம் தேதி வரை ஒரு தனி நபருக்கான பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ரூபாய் 10 லிருந்து 20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் பண்டிகைகள் தொடர்ச்சியாக வர உள்ளதால் ரயில் நிலையங்களில் கூட்டத்தை தவிர்க்கும் விதமாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

இவ்வளவு பேருந்துகளா?…. ஆயுத பூஜையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள்…. வெளியான தகவல்கள்….!!!!

விஜயதசமி மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு 2500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டும் என  அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். வருகின்ற ஞாயிற்றுக்கிழமை காந்தி ஜெயந்தியும், செவ்வாய்க்கிழமை ஆயுத பூஜையும், புதன்கிழமை விஜயதசமியும்  கொண்டாடப்படுகிறது. இதனால் தொடர்ந்து மூன்று நாட்கள் அரசு விடுமுறையாகும். மேலும் அக்டோபர் 3-ஆம் தேதி மட்டும் வேலை நாளாக உள்ளது. எனவே 3-ஆம்  தேதியும் விடுமுறையாக அரசு அறிவித்தது. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவன பணியாளர்கள் என அனைவரும் 5  நாட்கள் தொடர் […]

Categories
மாநில செய்திகள்

ஃபைல்களுடன் திடீரென டெல்லிக்கு பறந்த ஆளுநர்…. செம அப்செடில் பாஜக…. அப்படி என்ன நடந்தது…..?

நாடு முழுவதும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டபோது திருமாவளவன் உள்ளே புகுந்து குட்டையை குழப்பியதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினை தடை செய்ய வேண்டும் என்றும் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பாஜக மாநில […]

Categories
மாநில செய்திகள்

காலிப்பணியிடங்கள் நிரப்புவதில்…. அரசியல் தலையீடு இருக்காது…. அமைச்சர் உறுதி…!!!

நியாயவிலை கடைகளில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் 4403 பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இந்த காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.‌ பெரியசாமி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது நியாய விலை கடைகளில் உள்ள 4403 காலி பணியிடங்கள் இருக்கிறது. இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காலி பணியிடங்கள் 10 மற்றும் 12-ம் […]

Categories
மாநில செய்திகள்

“தன்னார்வ ரத்த தானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலம்”… முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!!!

தேசிய தன்னார்வ ரத்ததான நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, ரத்ததானம் மூலமாக மதிக்கத்தக்க மனித உயிர்களை காப்பாற்றுவது புனிதமான செயலாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் முதல் திங்கள் கிழமை தேசிய தன்னார்வ ரத்த தான தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரத்த தானத்தின் முக்கியத்துவத்தை அறிந்திடும் விதமாக விழிப்புணர்வை தமிழ்நாடு அரசு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு….. 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை… வானிலை மையம் அறிவிப்பு….!!!

ஆந்திரா கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக இன்று தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளுவர், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிசில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதனை தொடர்ந்து நாளை தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில […]

Categories
மாநில செய்திகள்

வந்தே பாரத் ரயில் பற்றி உங்களுக்கு தெரியாத 10 விஷயங்கள்… இதோ முழு விவரம்..!!!!

மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநில தலைநகரங்களுக்கு இடையே இயக்கப்படும் நாட்டின் மூன்றாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். மேக் இன் இந்தியா பிரச்சாரத்தின் கீழ் உருவாக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் இணைக்கும் விதமாக இது போன்ற மொத்தம் 75 ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதிவேக ரயிலான வந்தே பாரத் மணிக்கு 170 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் மேலும் இது 52 வினாடிகளில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆம்னி பேருந்து கட்டணம்… எங்கெங்கு எவ்வளவு….? இதோ முழு விவரம்…!!!

தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் பணி நிமித்தமாக வசித்து வருகின்றனர். இவர்களின் பெரும்பாலும் தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை போன்ற பண்டிகை நாட்கள்ண் தொடர் விடுமுறை நாட்களிலும் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் ரயில், பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் புதிய […]

Categories
மாநில செய்திகள்

“மழலை குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் அலட்சியம் காட்டும் அரசு”… அதிர்ச்சி அளிக்கும் வீடியோ…!!!!!

உத்திர பிரதேசத்தில் அரசு பள்ளியில் மதிய உணவு பரிமாறப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு பள்ளியில் மதிய உணவு பரிமாறப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து வெளியாகியிருக்கும் இந்த இரண்டு நிமிட வீடியோவில் தரையில் அமர்ந்தபடி பள்ளி குழந்தைகள் மதிய உணவு திட்டத்தில் சாதம் மற்றும் உப்பு சாப்பிடுவது பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அயோத்தியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“தெரு நாய்களை கட்டுப்படுத்துவது மிகவும் சவால்”….. அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்….!!!!

சென்னையில் தெரு நாய்களை கட்டுப்படுத்துவது மாநகராட்சிக்கு பெரும் சவாலாக உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர்,20 முதல் 30 ஆண்டுகளுக்கு முன்பு பிடிக்கப்படும் நாய்கள் கொல்லப்பட்டன. ஆனால் இப்போது கருத்தடை செய்யப்பட்டு மீண்டும் விடப்படுகிறது.தெரு நாய்களால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க ரேபிஸ் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது. எச்1என்1க்கு தினம் தோறும் 1000 இடங்களில் தடுப்பூசிபோடும் பணிகள் நடைபெற்று வருகிறது. 374 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் இனி இப்படித்தான்…. அமைச்சர் திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் அட்டையில் பெயர் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் தங்களின் கைரேகை மூலமாக பொருட்களை வாங்கி செல்கிறார்கள்.ஆனால் சில சமயங்களில் மின்னணு பதிவேட்டில் கோளாறு ஏற்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் 60% மதிப்பெண்: ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு…!!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அது மட்டும் இன்றி மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்கவும், மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தவும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. குறிப்பாக அரசு பள்ளிகளில் தரத்தை உயர்த்துவதற்கு பல கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா கூறியுள்ளார். சென்னையில் பள்ளி கல்வித்துறை […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் 11 லட்சம் மெட்ரிக் டன் எடையுள்ள நெல் சேமிப்பு கிடங்குகள்” அமைச்சர் சொன்ன குட் நியூஸ்….!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வீடற்றவர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார். இவர் 1168 பயனாளிகளுக்கு 11 கோடியை 60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பின் அமைச்சர் சக்கராபாணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார். விவசாயிகள் எந்த இடத்தில் நேரடி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளது. 1,2 ஆகிய இரண்டு நாட்களும் சனி ஞாயிறு விடுமுறையாகும்.இடையில் மூன்றாம் தேதி மட்டும் வேலை நாள் என்பதால் அரசு ஊழியர்களுக்கு மட்டும் அன்று விடுமுறை கிடைக்கும் பட்சத்தில் அவர்கள் தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறையில் இருப்பார்கள்.இந்த நாட்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்படும். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் – டிஜிபி உத்தரவு..!!

கோடநாடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக தனிப்படை போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். ஆறு குட்டி, சசிகலா, விவேக் ஜெயராமன்  உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது தனிப்படை போலீசாரிடம் இருந்து இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் வைத்த வாதங்கள்….. “நவ.,6ஆம் தேதி ஊர்வலம் நடத்த அனுமதி”….. காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு..!!

நவம்பர் 6தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 2ஆம் தேதி தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்ததை அடுத்து ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் […]

Categories
மாநில செய்திகள்

“பள்ளி மாணவியை மருமகளே என அழைத்த அடாவடி ஆசிரியர்”… முதன்மை கல்வி அலுவலர் அதிரடி நடவடிக்கை..!!!!

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த காரத்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் சாந்தி பிரியா என்பவர் கணித பாட முதுகலை ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவர் மீது மாணவிகள் தொடர்ச்சியாக பல்வேறு புகார்களை எழுப்பி வருகின்றார்கள். அதாவது மாணவி ஒருவரிடம் தீண்டாமை உணர்வுடன் நடந்து கொண்டதாகவும் வேதியல் ஆய்வகத்தில் அமிலக் குடுவைகளின் அருகில் தனியாக அமர வைத்ததாகவும், பள்ளிகளில் பாடம் நடத்தாமல் குடும்ப விஷயங்கள் பற்றி பேசுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. மேலும் மற்றொரு மாணவியை மருமகளே என அழைத்து […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : நவம்பர் 6ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி- ஐகோர்ட் உத்தரவு..!!

நவம்பர் 6ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக நவம்பர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க முடியாது என தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த  நிலையில் நம்பர் 6 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆர்எஸ்எஸ் தொடர்ந்த […]

Categories
மாநில செய்திகள்

“பேருந்து கட்டணம் பற்றி விளையாட்டாக பேசியதை இவ்வளவு பெரிதுபடுத்த வேண்டியது இல்லை”.. அமைச்சர் பொன்முடி பேச்சு…!!!!

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாவது சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. வரும் அக்டோபர் 13-ஆம் தேதி மூன்றாவது கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் பி ஆர் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் அக்டோபர் ஐந்தாம் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளார். பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை 4 கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றதும் அக்டோபர் மாத இறுதியில் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படுகிறது. மேலும் 12 ஆம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

அக்டோபர் 9ம் தேதி பொதுக்குழு கூட்டம்… தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கு தேர்தல்… வெளியான தகவல்…!!!!!

திமுக பொதுக்குழு கூட்டம் வருகிற அக்டோபர் ஒன்பதாம் தேதி நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடந்த 28ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சென்னை அமைந்த கரையில் உள்ள செயின் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் காலை 9 மணிக்கு கூட்டம் நடைபெறும் என தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் போன்றோரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழு கூட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த சூழலில் அக்டோபர் ஒன்பதாம் தேதி நடைபெறும் பொது குழு கூட்டத்தில் தலைவர் பொதுச்செயலாளர், பொருளாளர் […]

Categories
மாநில செய்திகள்

“பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த தடை” உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் உற்சாகத்தில் ஓபிஎஸ்…..!!!

அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இதை எதிர்த்து ஓபிஎஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். முதலில் வழக்கு ஓபிஎஸ்-க்கு சாதகமாக வந்தாலும், அதன் பின் இபிஎஸ்க்கு சாதகமா-க வந்தது. இதனால் ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பொதுக்குழு தொடர்பான வழக்கை தசரா பண்டிகைக்கு பிறகு விசாரிக்கலாம் என்று கூறினார்கள். அதற்கு ஓபிஎஸ் தரப்பு எடப்பாடி […]

Categories
மாநில செய்திகள்

“மனித கழிவுகளை சுத்தம் செய்தல்” கலெக்டர்கள் சஸ்பெண்ட்….. நீதிமன்றத்தின் அதிரடி எச்சரிக்கை….!!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் மதுரையில் உள்ள ஹைகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கடந்த 2013-ஆம் ஆண்டு தூய்மை பணியாளர்கள் பாதாள சாக்கடை அள்ளும்போதும், மனித கழிவுகளை அகற்றும் போதும்  உயிரிழந்ததால் மனித கழிவுகளை அகற்றுதல் மற்றும் பாதாள சாக்கடை அள்ளுதல் போன்ற பணிகளுக்கு மனிதர்களை பயன்படுத்தக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. அதோடு பாதாள சாக்கடை மற்றும் மனித கழிவுகளை சுத்தம் செய்வதற்கு இயந்திரம் மற்றும் ரோபோக்களை பயன்படுத்த வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

விவாகரத்து வழக்கு….. முன்னாள் கணவனுக்கு தேநீர் கிடையாதா?….. தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம்….!!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை குறித்து விவாகரத்து பெற்றுள்ளனர். இந்நிலையில் மனைவியின் பராமரிப்பில் இருக்கும் குழந்தையை சந்திக்க கோரி கணவன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிரிந்து வாழும் தம்பதியர் தங்களை கணவர் மனைவியாக கருதாமல் விருந்தினராக கருதி குழந்தையுடன் சேர்ந்து அவர்களுடன் உணவருந்த வேண்டும். அதுமட்டுமில்லாமல் குழந்தையை காண வரும் முன்னாள் கணவருக்கு தேநீர் வழங்கி உபசரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் அரியானா மாநிலம் குருகிராமில் […]

Categories
சினிமா மாநில செய்திகள்

BREAKING: விஷால் வீட்டில் கல்வீச்சு – 4 பேர் கைது ..!!

நடிகர் விஷால் வீட்டில் கல் வீச்சு சம்பவம் தொடர்பாக நாலு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் விஷால் வீட்டில் கல் வீசி தாக்குதல் சம்பவம் நடந்தது. சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரண நடத்திய போலீசார்,  நாலு பேரை கைது செய்துள்ளனர்

Categories
அரசியல் மாநில செய்திகள்

டெல்லியில் சொல்லி அடிச்ச ஓபிஎஸ்.. பரபரப்பு உத்தரவு போட்ட நீதிபதி … என்ன நடந்தது உச்சநீதிமன்றத்தில் ?

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையில் ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால், பொதுக்குழு தொடர்பாக 15 நாட்களாக்கு முன்னதாகவே அனைவருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகு பொதுக்குழுவை கூட்டி முடிவுகள் எடுக்க வேண்டும். ஆகவே பல்வேறு விதிமுறைகள் மீறப்பட்டிருக்கின்றன, சரியான முறையில் பொதுக்குழு பின்பற்றப்படவில்லை. மாநிலங்களவை தேர்தல் நடைபெற்ற போது அதற்கான வேட்பாளர்களை கூட ஒன்றாக தான் தேர்ந்தெடுத்தோம். ஆனால் அதன் பிறகு பல்வேறு விதமான முடிவுகள் தன்னிச்சையாக எடுக்கப்பட்டுள்ளன என்ற புகாரை முன்வைத்து ஓபிஎஸ் தரப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

CongressPresidentPolls: சசி தரூர் மனு தாக்கல் … களைகட்டிய காங்கிரஸ் தலைமையகம் ..!!

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட சசிதரூர் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை கேரளாவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் சற்று நேரத்துக்கு முன்பு தாக்கல் செய்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தான் அவருடைய வேட்பு மனு தாக்கல் என்பது  செய்யப்பட்டிருக்கிறது. ஏராளமான தொண்டர்கள் தற்போது கூடியிருக்கிறார்கள். இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவராகவும்,  மாநிலங்களவை தலைவருமாக இருக்கக்கூடிய மல்லிகார்ஜுனா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ்-ஸின் ஒற்றை கோரிக்கை…! ஓகே சொல்லி ”ஈபிஎஸ்-க்கு செக்” தடை போட்ட நீதிபதி …!!

அதிமுக பொதுக்குழு வழக்கின் விசாரணை இன்று தொடங்கியபோது உச்ச நீதிமன்றம் விடுமுறைக்கு பிறகு அடுத்த வாரத்திலேயே தசரா விடுமுறை வரவுள்ளது. அந்த விடுமுறை காலத்திற்குப் பிறகு இந்த வழக்கை விசாரிக்கலாம். நிலுவையில் உள்ள பிற வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கலாம் என்று ஆலோசனை தெரிவித்தது. அந்த சமயத்திலே ஓபிஎஸ் தரப்பிலிருந்து இதற்கு இடையே தற்போதைய பொறுப்பாளர்கள் தேர்தல் நடத்த முடிவெடுத்திருக்கிறார்கள். அப்படி தேர்தல் நடத்த கூடாது என தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்கு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது. இந்த நிலையில் இன்று சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும், சென்னையை பொறுத்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த தடை – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு …!!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிமுகவின் தற்போது இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.இந்த நிலையில் பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த தடை விதித்து உச்சநீதிமன்ற உத்தரவிட்டிருக்கிறது. ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அதிமுகவின் அனைத்து பதவிகளையும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தான் நியமிக்க முடியும் என்று ஓபிஎஸ் தரப்பில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கட்சிக்கு எல்லாமே சரியாக செஞ்சுட்டு இருந்தேன்; என்னை வெளியே சொல்லுங்கள் என நீக்கிட்டாங்க – ஓபிஎஸ் வாதம்

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடங்கியது. இதில் அதிமுக கட்சிக்கு தேவையான அனைத்தையும் நான் செய்வதற்கு தயாராகவே இருந்தேன். ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அனைத்து விஷயங்களையும் நான் சரிவர செய்து வந்தேன். ஆனால் திடீரென இவர்கள் நீங்கள் வெளியே செல்லுங்கள் என சொல்லி என்னை கட்சியிலிருந்து நீக்கிவிட்டு அவர்களாகவே முடிவெடுக்க விரும்புகிறார்கள். அதுவும் அவர்கள் செய்த அனைத்தும் சட்ட விதிகளுக்கு எதிரானதாக இருக்கிறது.குறிப்பாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழு: ஓபிஎஸ் மனு மீதான விசாரணை தொடங்கியது …!!

11ஆம் தேதி அதிமுக வின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டதற்கு எதிராகவும்,  அதில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு எதிராகவும், அதனை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதற்கு எதிராகவும் ஓபிஎஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் மனுதாரர்களான ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து சார்பில் வாதங்கள் என்பது முன்வைக்கப்பட்டு வருகிறது. இதில் அதிமுக கட்சிக்கு தேவையான அனைத்தையும் நான் செய்வதற்கு தயாராகவே இருந்தேன். […]

Categories
மாநில செய்திகள்

ஆர்எஸ்எஸ் பேரணி : திருமா வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட்..!!

ஆர்எஸ்எஸ் பேரணி தொடர்பாக திருமாவளவன் தாக்கல் செய்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.. தமிழகத்தில் அக்டோபர் 2ஆம் தேதி ஆர்எஸ்எஸ் தரப்பில் அணிவகுப்பு நடத்துவதற்கு அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தை நாடிய பிறகு நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி  28ஆம் தேதிக்குள் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி ஆர்எஸ்எஸ் உட்பட அனைத்து கட்சி ஊர்வலம், […]

Categories
மாநில செய்திகள்

சானிடரி நாப்கின் விவகாரம்….. மற்ற மாநிலங்கள் விட தமிழகம் தான் பெஸ்ட்…. வெளியான தகவல்…!!!

பீகார் மாநிலத்தில் “அதிகாரம் பெற்ற மகள்கள் வளமான பீகார்” என்ற தலைப்பில் கருத்துரங்கம் நடைபெற்றது. அதில் ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத் கவுர் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் கலந்து உரையாடினார். அப்போது பேசிய மாணவி ஒருவர், அரசு நிறைய இலவசங்களை வழங்குகிறது. எங்களுக்கு குறைந்த விலையில் அதாவது ரூ.20, ரூ.30 சானிட்டரி நாப்கின்கள் அரசால் வழங்க முடியாதா?என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஹர்ஜோத் கவுர், இன்று நாப்கின் கேட்பீர்கள், நாளைக்கு […]

Categories

Tech |