Categories
அரசியல் மாநில செய்திகள்

“நீ ஒரு பைத்தியம், நீ என்ன வேணா பேசுவ” நாங்க அப்படி பேச முடியுமா….? எச். ராஜாவுக்கு சீமான் பதிலடி….!!!!

சென்னையில் உள்ள தியாகராய நகரில் சுதந்திர போராட்ட தியாகி சிலம்புச் செல்வன் மபொசியின் திருவுருவச் சிலை மற்றும் திருவுருவ படத்திற்கு 27-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அவர் கூறியதாவது, பொதுமக்களால் சிலம்பு செல்வர் என்று மாபொசி அன்போடு அழைக்கப்படுகிறார். இவருக்கு ஒரு மணி மண்டபம் கட்ட வேண்டும். அதோடு தமிழக அரசும் மாபொசியின் பெயரால் […]

Categories
மாநில செய்திகள்

“சிறுத்தையின் மர்ம மரணம்” ஓபிஎஸ் மகனை உடனடியாக கைது செய்ய வேண்டும்…. விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பு….!!!!

தேனி மாவட்டத்திலுள்ள பெரிய குளம் அருகே கோம்பை வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் அதிமுக எம்.பியும், பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்துக்கு சொந்தமான ஒரு தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சோலார் மின் வேலியில் சிக்கி கடந்த 28-ஆம் தேதி 2 வயதுடைய சிறுத்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. இது தொடர்பாக தோட்டத்தில் தற்காலிகமாக ஆட்டுமந்தை அமைத்திருந்த அலெக்ஸ் பாண்டியன் என்ற விவசாயியை கடந்த மாதம் 29-ஆம் தேதி வனத்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் கால்நடை வளர்ப்போர் […]

Categories
மாநில செய்திகள்

“விடுமுறை தினத்தில் சிறப்பு வகுப்புகள்” பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி….!!!

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் காலாண்டு தேர்வு முடிவடைந்து தற்போது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 13-ஆம் தேதி வரையிலும், 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 10-ஆம் தேதி வரையிலும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறை தினத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக தற்போது பள்ளி கல்வித்துறைக்கு […]

Categories
மாநில செய்திகள்

“மியான்மரில் மோசடி கும்பலிடம் சிக்கிய 13 தமிழர்கள்”… விமான மூலம் இன்று தாயகம் வருகை…!!!!!

மியான்மரில் மோசடி கும்பலிடம் சிக்கிய 13 தமிழர்கள் இன்று தாயகம் திரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மியான்மரில் மோசடி கும்பல் இடம் சிக்கிய தமிழர்கள் 13 பேரை வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று இரவு 8 மணிக்கு அவர்கள் தாயகம் திரும்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் சிலர் மியான்மர் நாட்டிற்கு கடத்தி செல்லப்பட்டுள்ளனர். தகவல் தொழில்நுட்ப பணிகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டு அதன் […]

Categories
மாநில செய்திகள்

செயற்கை கருத்தரிப்பு மையங்கள்… தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!!

  செயற்கை கருத்தரிப்பு மையங்கள் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல் படி கருமுட்டை சேமிப்பு வங்கி, கருமுட்டை கருப்பையில் செலுத்தும் மையம், கருத்தரிப்பு மையங்கள் மற்றும் வாடகைத்தாய் மையம் என நான்கு வகை மருத்துவமையங்களாக பிரிக்கப்பட்டு பதிவு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கருமுட்டை சேமிப்பு வங்கிக்கு 50 ஆயிரம் ரூபாயும், கருப்பையில் செலுத்த ஐம்பதாயிரம் ரூபாயும் வாடகைத்தாய் மையத்திற்கு 2 லட்சம் ரூபாயும் பதிவு […]

Categories
மாநில செய்திகள்

நித்தியானந்தா தோற்றத்தில் இருந்த சாமியார்… ஆசிரமத்தை இடித்ததாக போலீசில் புகார்…!!!!!!

நித்தியானந்தா தோற்றத்தில் இருந்து சாமியார் ஒருவர் அவரது ஆசிரமம் இடிக்கப்பட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்திற்கு நேற்று சொகுசு காரில் நித்தியானந்தா போலவே சாமியார் ஒருவர் வந்துள்ளார். அவர் கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த பாஸ்கரானந்தா என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் பல்லடத்தை அடுத்த காரணம் பேட்டை அருகே செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஆசிரமம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு கட்டப்பட்டு வந்த ஆசிரமத்தில் இருந்த தனது அறையில் […]

Categories
மாநில செய்திகள்

பதிவு கட்டணம்: இனி போலி கருத்தரிப்பு மையங்களுக்கு ஆப்பு…. தமிழக அரசு அதிரடி…..!!!

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கருமுட்டை சேமிப்பு வங்கி, கருமுட்டை கருப்பையில் செலுத்தும் மையம்,கருத்தரிப்பு மையங்கள் மற்றும் வாடகை தாய் மையம் என நான்கு வகை மருத்துவ மையங்களாக பிரிக்கப்பட்டு பதிவு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கருமுட்டை சேமிப்பு வங்கிக்கு 50000 கருப்பையில் செலுத்த 50 ஆயிரம் ரூபாய், வாடகை தாய் மையத்திற்கு 2 லட்சம் ரூபாயும் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். எனவே இந்த பதிவு கட்டணத்தை இணையதளம் மூலமாக செலுத்தலாம். இதன் மூலமாக போலி கருத்தரிப்பு […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் வேலை தாங்க…. இல்லாவிட்டால் இதெல்லாம் திருப்பி கொடுப்போம்….. பெரும் பரபரப்பு….!!!!

கள்ளக்குறிச்சி உளுந்தூர் பேட்டை சுங்கச்சாவடியில் 28 பணியாளர்கள் திடீரென்று பணிநீக்கம் செய்யப்பட்டதால் ஊழியர்கள் வசூல் மையங்களை பூட்டிவிட்டு சுங்கச்சாவடி அலுவலகம் எதிரில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 3 நாட்களாக நீடித்து வந்த இப்போராட்டம் காரணமாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் கட்டணம் இல்லாமல் சுங்கச்சாவடியை கடந்து சென்று வருகிறது. இதன் காரணமாக சுமார் 1 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக சுங்கச்சாவடி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களிடம் வருவாய்த்துறை மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

“கூலி படையின் பலே ஸ்கெட்ச்” பிரபல ரவுடியின் தலை துண்டித்து பயங்கர கொலை…. பகீர் பின்னணி இதோ……!!!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே தைலாவரம் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்துரு (அ) வைகோ (28) என்ற மகன் இருந்துள்ளார். இவர் வினிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு வைகோ கொலை, கொள்ளை மற்றும் கஞ்சா விற்பனை போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருக்கிறார். இவர் மீது 3 கொலை வழக்குகள்,‌ 6 கொலை முயற்சி வழக்குகள் என மொத்தம் 18 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் இவர்கள் அனைவருக்கும் பென்ஷன்….. அமைச்சர் வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்….!!!!

விருதுநகர் மாவட்ட அருப்புக்கோட்டையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மற்றும் வருவாய் துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 150 கற்பிணி பெண்களுக்கு வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஊட்டச்சத்து பொருட்களையும், வளைகாப்பு பொருட்களும் வழங்கினார். அதனை தொடர்ந்து வருவாய் துறை சார்பில் 141 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, மின்னணு குடும்ப அட்டை, ஆதரவற்ற விதவை சான்று, சாலை விபத்து நிவாரண உதவி தொகை ரூ.20,29,600 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஐடி துறையில் இந்த திட்டங்கள் விரைவில்…. அமைச்சர் மனோ தங்கராஜ் அதிரடி….!!!!

டெல்லி பிரகதி மைதானத்தில் ஒன்றிய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களுக்கான இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் நேற்று பங்கேற்று உரையாற்றினார். அந்த துறையின் முதன்மைச் செயலாளர் நீரஜ் மித்தலும் உரையாற்றினார். அதன் பிறகு அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், கடந்த இரண்டு நாட்களாக தேசிய அளவிலான டிஜிட்டல் இந்தியா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாணவர்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ்… பள்ளிகளுக்கு அரசு திடீர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு முடிவடைந்ததைய்டுத்து 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 13ஆம் தேதி வரையும், 6 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதி வரையும் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறை நாட்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சில தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக பள்ளிக் கல்வித் துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை […]

Categories
மாநில செய்திகள்

ஹைடெக்காக மாறும் சென்னை சிட்டி…. கிளாம்பாக்கத்தை தொடர்ந்து இன்னும் 2 இடங்களில்….. CMDA-வின் வேற லெவல் பிளான்….!!!!

சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் விரிவாக்கம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மக்களின் பயணங்களை எளிதாக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவைகள் தற்போது சென்னையில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. அதோடு புறநகர் பேருந்து நிலையங்களும் கட்டப்படுகிறது. அதாவது பிராட்வேயில் இருந்த பேருந்து நிலையம், கோயம்பேட்டிற்கு மாற்றப்பட்ட நிலையில் இட நெருக்கடி அதிகரித்ததால் மாதவரத்தில் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இருப்பினும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கோயம்பேட்டில் கூட்ட […]

Categories
மாநில செய்திகள்

திமுக-வினர் சொல்லிலும், செயலிலும் கவனமா இருங்க!…. இல்லன்னா தயங்க மாட்டேன்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

தி.மு.க.-வினரின் சொல்லிலும், செயலிலும் கவனமிருக்க வேண்டும் என்றும் இல்லையெனில் நடவடிக்கை மேற்கொள்ள தயங்க மாட்டேன் என்றும் தி.மு.க தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “திராவிட அரசியல் பேரியக்கமான தி.மு.க  கழகத்தின் 15வது அமைப்புத் தேர்தல் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக்கழகங்கள் என அனைத்து நிலைகளிலும் நிறைவு பெற்று நிர்வாகிகள் தேர்வு பெற்றுள்ளனர். தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான பொதுக் குழு அக்டோபர் 9ஆம் தேதி […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“மின்சாரத்துறை தனியார் வசம் போகாது” அரசின் உறுதியால் போராட்டம் வாபஸ்….!!!!

புதுச்சேரியில் மின்சார துறை தனியார்மயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து மின்துறை ஊழியர்கள் கடந்த 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மின் கட்டண வசூல், மின் கணக்கிடும் மற்றும் பராமரிப்பு பணிகள் அனைத்தும் முடங்கியது. அதோடு பல்வேறு இடங்களில் அடிக்கடி மின் வெட்டும் ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டதால், எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்நிலையில் மின்சார துறை ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் […]

Categories
மாநில செய்திகள்

“உங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டேன்”….. அமைச்சர்களுக்கு ஸ்டாலின் கடும் எச்சரிக்கை……!!!+

தமிழக முதல்வர் ஸ்டாலின் எக்காரணம் கொண்டு சொல்லிலும், செயலிலும் அலட்சியமான போக்கு வேண்டாம். இரண்டையும் கவனத்துடன் கையாளங்கள். சொற்கள் அதனை வெளிப்படுத்தும் உடல் மொழி, நம்மை நாடிவரும் மக்களை அணுகுமுறை என அனைத்திலும் கவனமுடன் பொறுப்புடனும் கண்ணியம் துளியும் குறைந்து விடாமல் செயலாற்றுங்கள் என்று அமைச்சர்களுக்கு கட்சி நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார். திராவிட அரசியல் பேரியக்கமான திமுக கழகத்தின் 15 வது அமைப்பு தேர்தல் மாவட்ட-ஒன்றிய-நகர- பேரூர்-கிளை கழகங்கள் என அனைத்து நிலைகளிலும் நிறைவு பெற்று நிர்வாகிகள் தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்ததால் மருத்துவ கலந்தாய்வில் அனுமதி மறுப்பு” கோர்ட்டின் அதிரடி உத்தரவு….!!!!

புதுச்சேரியை சேர்ந்த டாக்டர் ஹேமா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் புதுச்சேரியை சேர்ந்த நான் தமிழகத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டேன். நான் மருத்துவ மேற்படிப்பில் சேர்வதற்காக பிறப்பிடச் சான்று, இருப்பிட சான்று மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்று கேட்டு விண்ணப்பித்திருந்தேன். ஆனால் என்னுடைய கணவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் எனக்கு சான்றிதழ் வழங்குவதற்கு தாசில்தார் அனுமதி மறுத்துவிட்டார். நாட்டில் 90% பேர் பிறந்தது […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லாத மனைவி…. சோகத்தில் கணவன் தற்கொலை…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

சென்னையில் பிறந்த நாளுக்கு மனைவி வாழ்த்து சொல்லாத காரணத்தால் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் பகுதியில் ஜெய் கிருஷ்ணன் மற்றும் இந்துமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மனைவி இந்து தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனிடையே கணவன் ஜெய் கிருஷ்ணனுக்கு பிறந்தநாள் வந்துள்ளது.அதனால் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.ஆனால் அவரின் மனைவி மட்டும் வாழ்த்து சொல்லாமல் இருந்துள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தல்…. போட்டியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…. அதிரடி அறிவிப்பு……!!!!!

லைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான பொதுக்குழு அக்டோபர் 9 ம் தேதி சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி ‘விங்க்ஸ்’ கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவிருக்கிறது.இந்நிலையில் கழகத் தலைவர் என்ற பொறுப்பை கண்ணும் கருத்துமாக எனது இதயத்திலும் தோளிலும் சுமந்திருக்கும் உள்ளங்களில் ஒருவரான நான் உடன்பிறப்புகளின் உளமார்ந்த வாழ்த்துக்களையும் ஒரு மனதான நல்லாதரவையும் எதிர்நோக்கி அக்டோபர் 7ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு…. அரசுக்கு 3000 கோடி செலவு அதிகரிப்பு…. அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் மின்வாரியம் வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் வழங்கி வருகிறது. மேலும் விசைத்தறி மற்றும் கைத்தறி சங்கங்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது. இதற்கு ஏற்ப செலவு தொகையை மின்வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு ஒவ்வொரு வருடமும் மானியமாக வழங்குகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இதனிடையே கடந்த மாதம் மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் இலவசம் மற்றும் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (04.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 04) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

முதியோர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை மீண்டும்…. முதல்வர் போட்ட உத்தரவு…. சூப்பர் நியூஸ் மக்களே…!!!!

தமிழக அரசு மக்களுடைய நலனை கருத்தில்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தப் பட்டு வருகிறது. அந்த வகையில் ஆதரவற்ற மற்றும் உணவுக்கு வழியில்லாமல் வசிக்கும் முதியவர்களுடைய துன்பத்தை போக்கும் விதமாக தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டம் தமிழக அரசு முதியோர் உதவி தொகை திட்டம். கணவன் அல்லது மனைவி போன்ற நெருங்கிய உறவுகள் இல்லாமல் இருப்பவர்கள், மிக நெருங்கிய உறவுகள் அல்லது பிள்ளைகள் இருந்தும் அவர்களால் ஆதரவு கிடைக்காமல் துன்பப்படும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆதரவற்ற […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! தமிழகம் முழுவதும் 380 பேருக்கு….. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…!!!!

தமிழகத்தில் 380 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போது வரை தமிழகத்தில் பன்றி காய்ச்சலால் 380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 17 பேர் மருத்துவமனையில் உள்ளனர். மற்றவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 3-4 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டாலே போதும். தமிழகம் முழுவதும் பருவநிலை மாற்றங்களால் காய்ச்சல் ஏற்பட்டு இருப்பதால் தமிழக முழுவதும் காய்ச்சல் முகாம்களை நடத்த முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. பெரும் பரபரப்பு…!!!

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மதியம் ஒரு மணி அளவில் மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு பேசி போனை துண்டித்தார். இதனால் உடனே ரயில் நிலைய காவல்துறையினருக்கு உடனடியாக எச்சரிக்கை தகவல் கொடுக்கப்பட்டது. இதனால் ரயில் நிலைய வளாகத்திற்குள் போலீசார் மோப்ப நாய்களோடு விரைந்து ரயில் நிலையம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…! இன்று வண்டலூர் பூங்காவிற்கு விடுமுறை அல்ல…. ஜாலியா போய்ட்டு வாங்க….!!!!

தீபாவளி பண்டிகை, மிலாடி நபி, நவராத்திரி, துர்கா பூஜை, ஆயுத பூஜை என்று பண்டிகைகள் தொடர்ச்சியாக வருவதால் மக்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு வருகின்றனர். இதனால் ரயில், பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது. ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை தினமாகும். இந்நிலையில், வழக்கமாக செவ்வாய்கிழமை வண்டலூர் பூங்காவிற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும். விடுமுறை தினம் என்பதால், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட்…! இன்று முதல் 5 நாட்களுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!!!

மத்திய மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதால், தமிழகத்தில் அடுத்த  5 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இன்று முதல் அக்டோபர் 7 வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அடுத்த […]

Categories
மாநில செய்திகள்

கேவலம்..! அருண்மொழி சோழன் இந்து மன்னரா…? கொந்தளித்த சீமான்…!!!

சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழா நடைபெற்றது. இதில் இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ராஜராஜ சோழனை இந்து அரசனாக்க முயல்கிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று பேசினார். இவருடைய இந்த பேச்சு சர்ச்சையானது. இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அருண்மொழி சோழனை இந்து மன்னன் என்று பேசுவது வேடிக்கையான ஒன்று. கேவலமான ஒன்று. அந்த காலத்தில் […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு மதிப்பெண்…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!

நீட் தேர்வு விடைத்தாள் மற்றும் மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றில் உள்ள மதிப்பெண்களில் தவறு உள்ளதாக மாணவி கிறிஷ்மா விக்டோரியா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.அவரின் மனுவில் நீட் தேர்விற்கான விடைத்தாளின் படி 196 மதிப்பெண்கள் பெற்ற நிலையில் மதிப்பெண் பட்டியலில் 65 மதிப்பெண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது என கூறியிருந்தார். இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம் விடைத்தாளை மாணவியிடம் காண்பிக்க தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை…. விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

பொருளாதாரத்தில் நலிவடைந்த திறமையான மாணவர்கள், எட்டாம் வகுப்பில் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடும் மாணவர்கள் மீண்டும் கல்வியை தொடரும் நோக்கத்தில் தேசிய அளவிலான தகுதி மற்றும் திறமையான மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு வருடமும் சுமார் ஒரு லட்சம் புதிய மாணவர்களுக்கு இந்த திட்டத்தின் மூலமாக உதவி தொகை வழங்கப்படுவதன் மூலம் அவர்கள் ஒன்பதாம் வகுப்பில் பள்ளி படிப்பை தொடர முடியும். இந்த மாணவர்களுக்கு வருடத்திற்கு பன்னிரண்டாயிரம் உதவி தொகை வழங்கப்படும். இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பள்ளிகளில் கலை பண்பாட்டுத் திருவிழா…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக பள்ளிக்கல்வித்துறையில் பல மாற்றங்கள் அவ்வப்போது செய்யப்பட்டு வருகிறது.அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கலை பண்பாட்டு திருவிழா போட்டி நடத்துவதற்கான தேதிகளை […]

Categories
மாநில செய்திகள்

இனி அரசுப்பள்ளிகளில் இந்த திட்டம் கிடையாதா….? வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பள்ளிகளில் விஜயதசமி அன்று மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது. விஜயதசமியன்று பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பை ஒவ்வொரு வருடமும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு வந்த நிலையில் இந்த வருடம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. விஜயதசமி நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் இதுவரை அறிவிப்பு வெளியாகாததால் விஜயதசமியில் மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசு பள்ளி ஆசிரியர்கள் மேற்கொள்ளாமல் இருக்கின்றனர். தனியார் பள்ளிகள் விஜயதசமி அன்று போட்டி போட்டுக்கொண்டு மாணவர் சேர்க்கையை சேர்க்கும் நிலையில் அரசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2,748 பணியிடங்கள்…. அரசு புதிய அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு துறையிலும் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதே சமயம் துறைவாரியாக காலியாக உள்ள பணியிடங்களும் நிரப்பப்பட்டு வருகிறது.கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தேர்வுகளாக நடைபெற்ற வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழக அரசு அறிவிப்பு வெளியிடவில்லை…. பெற்றோர்கள் குழப்பம்…!!!!

2018 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் விஜயதசமி என்ற எல்கேஜி, யுகேஜி மற்றும் ஒன்றாம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கைஅறிவிப்பை வெளியிடும் பள்ளிக்கல்வித்துறை இந்த வருடம் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. தனியார் பள்ளிகள் விஜயதசமி என்று போட்டி போட்டுக் கொண்டு மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளும் நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தை தமிழக அரசு கைவிடுகிறதா என கேள்வி எழுந்துள்ளது. பொதுவாக ஒவ்வொரு வருடமும் […]

Categories
மாநில செய்திகள்

இவ்வளவு பணிகளை ஒரு அரசு மேற்கொள்வது இதுவே முதல்முறை…? அமைச்சர் சேகர்பாபு பேச்சு…!!!!!

வட சென்னை பேசின் பாலசாலையில் அமைந்துள்ள மண்டலம் ஐந்தில் இன்று மழை நீர் வடிகால்வாய் பணிகளுக்கான ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி அதிகாரிகளோடு நடைபெற்று உள்ளது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மேயர் பிரியா போன்றோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் பணிகளின் விவரங்கள் பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சரும் மேயரும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளனர். அப்போது தற்போது உள்ள தமிழக […]

Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே…. 7 ஆண்டுகளாக பெண்னை ஏமாற்றி “உல்லாசமாக இருந்த ராணுவ வீரர்”…. அதிரடி நடவடிக்கையில் அதிகாரிகள்….!!!!!

பெண்ணை  பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில்  குல்வந்த்  சிங் என்ற ராணுவ வீரர்  வசித்து வருகிறார். இவர் தற்போது அந்தமான் நிக்கோபார் தீவில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் குல்வந்த்  சிங் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண்ணை கடந்த 7  ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சொல்லிலும் செயலிலும் கவனம் தேவை” திமுக உடன் பிறப்புகளுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் எச்சரிக்கை….!!!!

திமுக கட்சியின் எம்பி ஆர் ராசா இந்துக்கள் குறித்து பேசியது சமீபத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதற்கு பாஜகவினரும், இந்து அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்த பிரச்சனையே ஓயாத நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பெண்களுக்கு பஸ்ஸில் ஓசி பயணம் என்று கூறியது அடுத்த சர்ச்சையாக வெடித்தது. இதனால் தற்போது பல்வேறு பகுதிகளில் பேருந்தில் செல்லும் பெண்கள் நாங்கள் இலவசமாக பயணம் செய்ய மாட்டோம் என்று கூறி நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணத்தை கொடுத்து […]

Categories
மாநில செய்திகள்

அடடே!…. சூப்பரா மாறிப்போச்சு போங்க….. வேற லெவலில் அப்டேட் ஆன MTC பேருந்துகள்…. உற்சாகத்தில் சென்னை மக்கள்…..!!!

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு வரலாற்று சிறப்பு வாய்ந்த காலை சிற்றுண்டி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு “முதலமைச்சர் காலை உணவு திட்டம்” என்று பெயரிட்டப்பட்டுள்ளது. இது 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை அரசு தொடக்கப்பள்ளியில் முதல் கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. வாரத்தில் 5 நாட்கள் வெவ்வேறு விதமான உணவுகள் மாணவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க மாநிலம் முழுவதும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“3 நிமிட ஆடியோ” இபிஎஸ் செஞ்ச துரோகம்…. பகீர் கிளப்பும் ஓபிஎஸ்…. அதிமுகவில் திடீர் பரபரப்பு….!!!!

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி எதிரெதிர் துருவங்களாக மாறிய தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது இபிஎஸ் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் முதலில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் இபிஎஸ்சுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால் உச்ச நீதிமன்றத்தை நாடினார் ஓபிஎஸ். அங்கு தற்போது ஓபிஎஸ்-க்கு சாதகமாகவே நீதிபதிகள் […]

Categories
மாநில செய்திகள்

UPSC தேர்வர்களுக்கு…. இலவசப் பயிற்சி…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….. யாரும் மிஸ் பண்ணிடாதீங்க….!!!

மத்திய அரசின் குடிமைப்பணி தேர்வான யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வுக்கான பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழக அரசின் சென்னை, அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையங்கள் கோயம்புத்தூர், மதுரை ஆகிய பயிற்சி மையங்களில் தமிழகத்தை சேர்ந்த இளம் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் ஆகியோருக்கு 2023 ஆம் ஆண்டு மே 28ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெளுத்து வாங்கும் மழை…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு….!!!

சென்னையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதில், மத்திய மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதனைப் போல வருகின்ற 5 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை […]

Categories
மாநில செய்திகள்

MBBS, BDS படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான நீர் நுழைவுத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு வருகின்ற செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அக்டோபர் மூன்றாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அக்டோபர் ஆறாம் தேதி மாலை 5 மணி வரை […]

Categories
மாநில செய்திகள்

ட்விட்டர் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…”இனி உங்க ட்வீட்களை எடிட் செய்யலாம்”… வெளியான சூப்பர் அப்டேட்…!!!!!!

உலக மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்றாக ட்விட்டர் விளங்குகிறது. இந்த ட்விட்டரில் உலகம் முழுவதும் பலரால் பயன்படுத்தப்பட்டு அவர்களின் கருத்துக்களை தெரிவிக்க வசதியாக இருக்கிறது. இந்த நிலையில் தற்போது இதில் புதிய வசதியாக எடிட் செய்யும் வசதி இடம் பெற்றிருக்கிறது. இந்த வசதி முதலில் ட்விட்டர் ப்ளூ பயனர்களுக்கு வழங்கப்படும் எனவும் இவர்கள் செய்யும் ட்வீட் அனைத்தையும் இனி எடிட் செய்து கொள்ளலாம். இந்த ட்விட்டர் ப்ளூ என்பது வெளிநாடுகளில் 4.99$(407.12) மாதம் […]

Categories
மாநில செய்திகள்

அடடே இது சூப்பரா இருக்கே!… தமிழக பேருந்துகளில் இனி கலர் கலரா…. அரசு போட்ட பலே திட்டம்….!!!!

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக தமிழக அரசின் திட்டங்களான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்டம் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அடிப்படையில் சென்னை மாநகர பேருந்துகளில் விளம்பரம் செய்யப்பட்டு பேருந்துகள், பல்லவன் இல்லத்திலிருந்து இன்று இயக்கப்படுகிறது. சென்னை மாநகரில் முதற்கட்டமாக காலை உணவுத்திட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த 5 பேருந்துகளும், புதுமைப்பெண் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 5 பேருந்துகள் என 10 பேருந்துகள் ரோஸ், மஞ்சள், நீலம், பச்சை போன்ற […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!! … இனி இதை பொது இடங்களில் பண்ணக்கூடாது…. வேண்டுகோள் விடுத்த அன்புமணி ராமதாஸ்….!!!!!

பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று செய்தி ஒன்றை  பதிவிட்டுள்ளார். அதில் நமது இந்தியாவில் பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்வதற்கான சட்டம் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி ஜெயந்தியன்று நான் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது நீண்ட அரசியல் மற்றும் சட்டப் போராட்டத்திற்கு பிறகு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது வரை அந்த சட்டம் […]

Categories
மாநில செய்திகள்

“நீ காணாமல் போய்டுவ” …..சீமானை மிரட்டியை எச்.ராஜா தீயாய்…. தீயாய் பரவும் செய்தி…!!!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சாதியும், மதமும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு இரண்டு கண்கள் மாதிரி. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் கோட்பாடே இந்த இரண்டு தான் வெளிப்பாடு. இது தேசிய கல்விக் கொள்கையில் ஒரு அங்கமாக பள்ளி மாணவர்களிடம் தலைவர்களின் சாதி குறித்து கேள்வி கேட்கப்பட்டது கண்டனத்துக்குரியது. ஆர்எஸ்எஸ் கொள்கைகளை நேரம் வரும்போது தீ வைத்து கொளுத்துவோம் என சீமான் ஆவேசமாக கூறினார். இதனையடுத்து ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை வேறொரு தேதியில் நடத்த […]

Categories
மாநில செய்திகள்

“இந்தியாவிலேயே நம் மாநிலத்தில் தான் இது முதன்முறை”….. பெருமிதமாக கூறிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்….!!!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு, இரும்பு பெண்மணி திட்டம் மற்றும் பிரதமர் ஆவாஸ் பிளஸ் திட்டத்தின் கீழ் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மேகநாதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அதன் பிறகு 250 கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சமுதாய வளைகாப்பு […]

Categories
மாநில செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. இந்து மத தலைவர்களுக்கு பலத்த பாதுகாப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

இந்து முன்னணி அமைப்பின் தலைவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா  என்ற அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் தேசிய புலனாய்வு முகமை  அதிகாரிகள் கடந்த 22- ஆம் தேதி பல மாநிலங்களில் உள்ள இந்த அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகள் போன்ற இடங்களில் சோதனை நடத்தினர். இதனையடுத்து 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் . இவர்கள்  கைது செய்யப்பட்டதை கண்டித்து  கேரளாவில் கடந்த […]

Categories
மாநில செய்திகள்

அக்டோபர் 20ல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!

இந்த வருடம் வடகிழக்கு பருவமழையானது இயல்பான அளவில் பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் வடகிழக்கு பருவமழை காலங்களில் கடந்த வருடங்களை விட அதிக புயல்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நடப்பாண்டு சென்னை உட்பட 17 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை சராசரியை விட அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கணித்திருக்கிறது. அதன்படி வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, […]

Categories
மாநில செய்திகள்

தபால் துறையில் வேலை வாய்ப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!!!

சென்னையில் உள்ள தபால் துறை அலுவலக மெயில் மோட்டார் சர்வீஸ் விரைவில் காலியாக இருக்கின்ற skilled artisans பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றது அறிவிப்பு எண்: MSE/B9-4/XI/2022 பணி: skilled artisans பிரிவு வாரியான காலி பணியிடங்கள் விவரம்: 1.M.V.Mechanic-2 2.M.V.Electrician-1 3.painter-1 4.tyreman-1 சம்பளம் மாதம் 19,900 முதல் 63,200 வயதுவரம்பு: 1.7.2021 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: பணி சம்பந்தப்பட்ட பிரிவில் […]

Categories
மாநில செய்திகள்

தசரா சப்பர பவனியில் இதை பயன்படுத்த தடை…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் திருவிழா வருடம் தோறும் நடைபெறும். இந்த திருவிழாவானது 11 நாட்கள் நடக்கும். இந்த விழாவில் ஒவ்வொரு வருடமும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த திருவிழா தென் மாவட்டங்களில் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்நிலையில் தசரா திருவிழாவின் போது சப்பர பவனியில் உலோக கம்பிகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அலங்கார விளக்குகளுக்காக உபயோகப்படுத்தும் ஜெனரேட்டரில் மின்கசிவு தடுப்புக்கருவி பயன்படுத்த வேண்டும். மின்கசிவு விபத்துகளை தவிர்க்க தமிழ்நாடு மின்சார வாரியம் […]

Categories

Tech |