Categories
விளையாட்டு

“காமன்வெல்த் போட்டி”…. இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் உறுதி…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

காமன் வெல்த் விளையாட்டு போட்டியில் பேட்மின்டன், டேபிள் டென்னிசில் இந்தியா இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது. இதன் வாயிலாக வெள்ளிப்பதக்கம் உறுதியாகியது. பேட்மின்டன் கலப்பு அணிகள் பிரிவு அரையிறுதியில் இந்திய அணி சிங்கப்பூரை எதிர் கொண்டது. இவற்றில் இந்திய அணி 3-0 எனும் கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது. சாத்விக் சாய்ராஜ்ரெட்டி சிராக் ஷெட்டி ஜோடி 21-11, 21-12 எனும் கணக்கிலும், பி.வி.சிந்து 21-11, 21-12 என்ற கணக்கிலும், லக்சியா சென் 21-18, 21-15 என்ற கணக்கிலும் […]

Categories
விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட் போட்டி: 78 வயதிலும் சாதிக்கும் வீராங்கனை…. குவியும் பாராட்டுக்கள்….!!!!!

செஸ்ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வயதான வீராங்கனை எனும் பெருமையை ஜூலியா லேபல் அரியாஸ் பெற்றிருக்கிறார். மொனக்கா நாட்டில் வசித்து வரும் அவருக்கு 78 வயதாகிறது. அர்ஜென்டினாவில் பிறந்து அந்த நாட்டு அணிக்கு விளையாடி பிறகு பிரான்ஸ் நாட்டுக்காக ஆடினார். இப்போது மொனாக்காவுக்காக ஆடுகிறார். நேற்றைய 4வது சுற்றில் அவர் 13 வயது சிறுமி மரியமை (துனிசியா) எதிர் கொண்டார். பின் 70-வது காய் நகர்த்தலுக்கு பிறகு ஜூலியா வெற்றியடைந்து இந்த வயதிலும் சாதித்தார். இதையடுத்து ஜூலியா கூறியதாவது […]

Categories
மற்றவை விளையாட்டு

“காமன்வெல்த்” இந்தியா இன்று மோதிக் கொள்ளும் போட்டிகள்…. இதோ முழு விபரம்…!!!

இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்ஹாமில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.‌ இந்த போட்டியில் மொத்தம் 77 நாடுகள் பங்கேற்றுள்ளது. இதில் இந்தியா இன்று பங்கேற்க இருக்கும் போட்டிகள் குறித்த விவரங்களை பார்க்கலாம். அதன்படி டேபிள் டென்னிஸ் ஆண்கள் அரை இறுதி சுற்று இன்று இரவு 11:30 மணியளவில் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு ஜூடோ போட்டியில்‌ 57 கிலோ எடை பிரிவில் சுகிலா டாரியலும், 48 கிலோ எடை பிரிவில் சுசிலா லிங்கபமும், 66 கிலோ எடை […]

Categories
மற்றவை விளையாட்டு

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி…. 3 சுற்றுகளில் இந்தியா முன்னிலை….!!!!

சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியானது 11 சுற்றுகளை கொண்டுள்ள நிலையில், 4-வது சுற்று ஆட்டம் இன்று மதியம் தொடங்குகிறது. இதுவரை நடந்த 3 சுற்றுகளிலும் இந்தியாவைச் சேர்ந்த 6 அணிகளும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் ஓபன் பிரிவில் இந்திய ஏ அணி 3-1 என்ற கணக்கில் சாரீஸை வெற்றி பெற்றுள்ளது. அதன் பிறகு பி அணியினர் 4-0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தையும், சி அணி 3-1 […]

Categories
விளையாட்டு

இவர்கள் 2 பேரும் சாம்பியன் பந்து வீச்சாளர்கள்…. புகழ்ந்து தள்ளிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன்….!!!!

6வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் கோவையில் நேற்று நடைபெற்றது. இவற்றில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர்கில்லீஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதியது. கனமழை காரணமாக ஆட்டம் துவங்குவதற்கு 2 மணிநேரம் தாமதமானது. இதன் காரணமாக போட்டியானது 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து முதலாவதாக ஆடிய கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்து குவித்தது. சாய்சுதர்ஷன் 42 பந்தில் 65 ரன்னும் ( 8 […]

Categories
விளையாட்டு

“காமன்வெல்த் போட்டி”… தங்கம் வென்ற இந்திய வீரர்…. வாழ்த்து சொன்ன தலைவர்கள்….!!!!

காமன் வெல்த் போட்டி பளுதூக்குதலில் இந்திய வீரர் அச்சிந்தா ஷூலி தங்கம் வென்றார். ஆண்களுக்கான 73 கிலோ எடைப் பிரிவில் 313 கிலோ எடையை தூக்கிய அவர், இந்தியாவுக்கு 3வது தங்கப்பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார். இந்த நிலையில் அச்சிந்தா ஷூலி இந்தியாவை பெருமைப்படுத்தி இருக்கிறார் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று மூவர்ணக் கொடியை உயரப் பறக்கவைத்தார். […]

Categories
விளையாட்டு

“22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி”…. இன்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதல்…. வெளியான அறிவிப்பு….!!!!

22வது காமன் வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் நாட்டின் பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது. இன்று நடைபெற உள்ள மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தன் 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. முதல் ஆட்டத்தில் இந்திய மகளிர்அணி, ஆஸ்திரேலிய மகளிர் அணியிடம் தோல்வியடைந்திருந்தது. இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்ற இந்திய வீராங்கனைகள் தீவிரமாக போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டி […]

Categories
விளையாட்டு

“காமன்வெல்த் போட்டி”…. பதக்கம் வென்றவர்களுக்கு வாழ்த்து சொன்ன இந்திய பிரதமர்….!!!!

காமன்வெல்த் போட்டியில் இந்திய பளுதூக்கும் வீராங்கனை பிந்த்யா ராணி தேவி வெள்ளிப்பதக்கம் வென்றதற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி டுவிட்டர் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் “பர்மிங்காமில் காமல்வெல்த் போட்டியில் 55 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றதற்காக பிந்த்யா ராணி தேவிக்கு வாழ்த்துகள். இந்த சாதனையானது அவரது விடாமுயற்சியின் வெளிப்பாடாகும். அத்துடன் இது ஒவ்வொரு இந்தியருக்கும் மிகவும் மகிழ்ச்சியை உருவாக்கி இருக்கிறது. அவரின் எதிர் கால முயற்சிகள் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்” என்று அவர் தெரிவித்துள்ளார். […]

Categories
விளையாட்டு

காமன்வெல்த் போட்டி…..  இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்…. குவியும் பாராட்டு….!!!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியின் பளுதூக்கும் பிரிவில் இந்தியா 2வது தங்கத்தை தட்டி வந்துள்ளது. ஆண்களுக்கான 67 கிலோ எடைப்பிரிவில் ஜெரேமி லால்ரின்னுங்கா தங்கத்தை வென்றார். ஸ்னாட்ச் பிரிவில் 140 கிலோ கிளீன் & ஜெர்க் பிரிவில் 160 கிலோ என மொத்தம் 300 கிலோ எடையை தூக்கி அசத்தியுள்ளார். பெண்கள் பிரிவில் ஏற்கனவே மீராபாய் சோனு தங்கப்பத்தகம் வென்றுள்ளார். காமன்வெல்த் போட்டியில் இந்தியா 2 தங்கம் உட்பட 5 பதக்கங்களை வென்றுள்ளது.

Categories
மற்றவை விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு….. மக்களிடம் சிறுதானிய விழிப்புணர்வு…. 44 கிலோ எடையில் பிரம்மாண்ட தம்பி சின்ன இட்லி…!!!!.

சர்வதேச அளவிலான 44-வது தேர்வு ஒலிம்பியாட் போட்டி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் சின்னமான தம்பி உருவத்தில் 44 கிலோ எடை கொண்ட இட்லி செய்யப்பட்டுள்ளது. இந்த இட்லி காசிமேடு கடற்கரையில் மாலை 4:30 மணி முதல் 6 மணி வரையிலும், மெரினா கடற்கரையில் இரவு 7 மணி முதல் 8:30 மணி வரையில் காட்சிக்கு வைக்கப்படுகிறது. இந்த 44 கிலோ எடை கொண்ட இட்லி அரிசி மாவுடன் சேர்த்து சிறு தானியங்களும் […]

Categories
மற்றவை விளையாட்டு

“44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி” 2-வது சுற்றில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி…!!!!

சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியின் தொடக்க விழா நேற்று சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் இன்று நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்றில் நார்வே வீரரும் உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன் […]

Categories
மற்றவை விளையாட்டு

“செஸ் ஒலிம்பியாட் போட்டி” ஆட்டத்தை மாற்றுவதற்கு தாமதமானது….. முதல் சுற்றில் வெற்றி பெற்ற வைஷாலி….!!!

சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த வைஷாலி பெண்கள் பிரிவில் ஏ அணியில் இடம் பெற்றுள்ளார். இவர் தஜகிஸ்தான் வீராங்கனை சபரீனா உடன் முதல் சுற்றில் விளையாடினார். இந்த போட்டி4 மணி நேரம் நீடித்த நிலையில், ஆரம்பத்தில் இருந்து ஆட்டத்தை தன வசம்  வைத்திருந்து, சிறப்பாக ஆடி வைஷாலி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“டி20 மேட்ச்” 64 ரன்களுடன் புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா….!!!!

இந்திய அணிக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் இடையே டி20 மேட்ச் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா முதலில் களம் இறங்கியது. இந்த மேட்சில் இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 190 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் அணியினர் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்களும் எடுத்தனர். இதன் காரணமாக 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த மேட்சில் தினேஷ் கார்த்திக் 19 பந்தில் […]

Categories
விளையாட்டு

“வெஸ்ட் இண்டீஸ்”…. புது சாதனை படைத்த ஷிகர் தவான்…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3 மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியானது நேற்று குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடந்தது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் முன்பே வெற்றிகளைப் பெற்று தொடரை கைப்பற்றிய இந்தியா இந்த சம்பிரதாய போட்டியில் டாஸ் வென்று முதலாவதாக பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து களம் இறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ஷிகர் தவான்-சுப்மன் கில் போன்றோர் முதல் விக்கெட்டுக்கு நிதானமாகவும், அதிரடியாகவும் பேட்டிங் செய்து 113 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச்சிறப்பான […]

Categories
விளையாட்டு

அதியா ஷெட்டி, கேஎல் ராகுல் போட்டோ…. இன்ஸ்டாகிராமில் வெளியீடு…. வைரல்….!!!!!

இந்திய கிரிக்கெட்அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக கே.எல் ராகுல் விளங்கி வருகிறார். இப்போது அவர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார். இவருடன் ஹிந்தி நடிகையான அதியா ஷெட்டியை இணைத்து பல்வேறு வதந்திகள் வந்த சூழ்நிலையில், அதியா ஷெட்டியும் கே.எல்.ராகுலும் தங்களுடைய உறவைப் பற்றி வெளிப்படையாக தெரிவித்தனர். இருவரும் கூடியவிரைவில் திருமணம் செய்யவுள்ளனர். இந்த நிலையில் அதியா ஷெட்டியும், கேஎல் ராகுலும் உள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் அதியா ஷெட்டி பதிவுசெய்தார். மிகவும் பிடித்தமான ஒன்று என்று அதில் குறிப்பிட்டு இருந்தார். […]

Categories
மற்றவை விளையாட்டு

“செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஜோதி” சென்னையில் வலம் வந்த போது உற்சாக வரவேற்பு….!!!

சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் நிலையில், நாளை நடைபெற இருக்கும் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். இந்த போட்டயில்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரிஷப் பந்தின் இன்ஸ்டா லைவில்…. வந்த தோனி மற்றும் சாக்ஷி…. இணையத்தில் வீடியோ வைரல்….!!!!!

இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்டரும், உலக கோப்பை வென்ற கேப்டனுமான எம்எஸ் தோனி மிகவும் அமைதியான நபர். பல ஆண்டுகளாக டீம் இந்தியாவை வழிநடத்தும் போது, தோனி களத்தில் எந்த உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தவில்லை. களத்தில் மட்டுமல்ல, களத்திற்கு வெளியேயும் தோனி எந்த விவாதத்திலும் ஈடுபடுவதில்லை, மேலும் அவர் தனது கருத்துக்களை பகிரங்கமாக வெளிப்படுத்த மாட்டார்.. இதற்கு உதாரணமாக தற்போதைய இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்தின் இன்ஸ்டாகிராம் நேரடி வீடியோவின் போது தோனி தனது முகத்தை […]

Categories
மற்றவை விளையாட்டு

“44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி…. சென்னைக்கு வருகை புரிந்த 12 வீரர்கள்…. வெளியான தகவல்….!!!

தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த போட்டி வருகிற 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் சென்னைக்கு வர ஆரம்பித்துள்ளனர். அதன்படி ஜாங்கியா, அம்பேரி, ஆப்பிரிக்கா கண்டத்தைச் சேர்ந்த மடகாஸ்கர், வியட்நாம், செர்பியா, […]

Categories
மற்றவை விளையாட்டு

“போல்வால்ட் போட்டி” அர்மன்ட் டுப் உலக சாதனை…. அமெரிக்காவுக்கு முதலிடம்….!!!

அமெரிக்காவில் உள்ள யூஜின் நகரில் 18-ஆவது உலக சாம்பியன்ஷிப் தடகள போட்டி நடைபெற்று வருகிறது. இன்று போல்வால்ட் பந்தயம் நடைபெற்றது. இதில் ஸ்வீடன் வீரர் அர்மன்ட் டுப் லான்ட்ஸ் 6.21 மீட்டர் தாண்டி உலக சாதனை படைத்து வெற்றிபெற்றார். அதன் பிறகு அமெரிக்க வீரர் கிறிஸ்டோபர் நீல்சன் 5.94 மீட்டர் தாண்டி வெள்ளி பதக்கமும், பிலிப்பைன்ஸ் வீரர் எர்சைட் 5.94 மீட்டர் தாண்டி வெண்கல பதக்கமும் வென்றுள்ளார். இதனையடுத்து பெண்களுக்கான 4×400 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வீரருக்கு ஆண் குழந்தை….. குவா குவா…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் க்ருணால் பாண்ட்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 2017ஆம் ஆண்டு பிரபல இந்திய மாடல் பன்குரி ஷர்மாவை க்ருணால் பாண்ட்யா திருமணம் செய்தார். இந்நிலையில் அவர்களுக்கு இன்று முதல் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு முத்தம் செய்வது போல புகைப்படத்தை வெளியிட்ட அவர், கண்விர் க்ருணால் பாண்ட்யா என்று அந்த குழந்தைக்கு பெயரிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories
விளையாட்டு

“நாம் சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவோம்”…. நம்பிக்கை கொடுத்த இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான்….!!!!

இந்திய கிரிக்கெட் அணியானது வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. ஒரு நாள் போட்டி தொடரில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, கோலி, ரிஷப்பண்ட், ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி, பும்ரா போன்றோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்தியா, வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி போர்ட்-ஆப்-ஸ்பெயினில் நடைபெற இருக்கிறது. இந்த ஆட்டம் […]

Categories
விளையாட்டு

“அவரை போல் மீண்டு வரணும்”… விராட் கோலிக்கு அட்வைஸ் கூறிய திலீப் வெங்சர்க்கார்…..!!!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட்கோலியின் பேட்டிங் பார்ம் இப்போது அதிகளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால் சென்ற 2019 ஆம் வருடம் வங்கதேச அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியின்போது சதமடித்த விராட்கோலி, கடந்த 3 வருடங்களாகவே சதம் அடிக்காமல் திணறிவருகிறார். மேலும் அண்மையில் நடந்துமுடிந்த இங்கிலாந்து தொடர் அவருக்கு மறக்கக்கூடிய ஒரு தொடராக மாறி இருக்கிறது. இத்தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய அவர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் அந்த தொடர் முடிந்ததும் அவர் மீது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS வெஸ்ட் இண்டீஸ்…. முதல் ஒருநாள் தொடரில் ஜடேஜா ஓய்வு…. வெளியான தகவல்….!!!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற இருக்கிறது. இன்று முதல் ஒருநாள் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் ஓய்வு பெற்றதால் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப் பட்டுள்ளார். அதன் பிறகு துணை கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மேட்சில் இருந்து ஜடேஜா விலகுவதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜடேஜாவின் மூட்டில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக மருத்துவமனையில் அவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி.என்.பி.எல் தொடர்….. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் VS திருப்பூர் தமிழன்ஸ்…. வெற்றி யாருக்கு….?

தமிழ்நாடு டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்றுள்ளது. இன்று சேலத்தில் 25-வது லீக் ஆட்டம் இரவு 7:15 மணியளவில் தொடங்குகிறது. இந்த மேட்சில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும்  திருப்பூர் தமிழன்ஸ் அணியினர் மோதுகின்றனர். இதுவரை நடைபெற்ற 6 தொடர்களில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4 வெற்றி பெற்று 2-து இடத்தில் இருக்கிறது. இந்த அணியினர் ஆட்டத்தில் வெற்றி பெற்றால் ப்ளே ஆப் சுற்றை கைப்பற்றி அடுத்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே.எல். ராகுலுக்கு கொரோனா….. ரசிகர்கள் ஷாக்….!!!!

இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே.எல். ராகுலுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் டி20 தொடரில் இடம்பெற்றுள்ள அவருக்கு துணை கேப்டன் பொறுப்பும் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா உறுதியாகி உள்ளதால் அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

Categories
விளையாட்டு

இவரை போன்ற திறமைமிக்க ஒரு வீரரை ஒருபோதும் தவிர்க்க முடியாது…. தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்….!!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விராட்கோலி மோசமான பேட்டிங் காரணமாக கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரில் விராட்கோலி இடம் பெறவில்லை. இதையடுத்து அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஓய்வா..? அல்லது நீக்கமா..? என்ற விவாதம் ரசிகர்கள் இடையில் எழுந்துள்ளது. இந்தநிலையில் விராட்கோலிக்கு விக்கெட் கீப்பர் மற்றும் தமிழகத்தை சேர்ந்தவருமான தினேஷ்கார்த்திக் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது ” சென்ற காலங்களில் […]

Categories
விளையாட்டு

4-வது வெற்றியை தட்டி தூக்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!!

டி.என்.பி.எல் போட்டியில் சேலம் ஸ்பார்டன்சை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4வது வெற்றியை அடைந்தது. சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலாவதாக விளையாடிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது. இதில் கோபிநாத் அதிகபட்சம் 42 ரன் (4 பவுண்டரி, 1 சிக்சர் ) எடுத்தார். இதையடுத்து மணி மாறன் சித்தார்த் ஒரே ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தி முத்திரை பதித்தார். […]

Categories
மற்றவை விளையாட்டு

#BREAKING: தமிழக வீராங்கனை நீக்கம்….. வெளியான தகவல்…..!!!!

காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து தமிழக வீராங்கனை தனலட்சுமி நீக்கப்பட்டுள்ளார். ஊக்கமருந்து சோதனையில் தோல்வியுற்றதால், அவர் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் ஜூலை 28-ம் தேதி தொடங்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 4×100ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க தனலட்சுமி தேர்வாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனலட்சுமி இந்தியாவின் முன்னணி தடகள் வீராங்கனையாவார்.  

Categories
விளையாட்டு

கே.எல்.ராகுல் திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி…. உண்மை இதுதான்…. அதியா வெளியிட்ட டுவிட்….!!!!

இந்திய வீரர் கே.எல்.ராகுல் பிரபல பாலிவுட் நடிகர் சுனில் செட்டியின் மகளும், நடிகையுமான அதியாவை காதலித்து வருகிறார்.இந்நிலையில் இவர்களின் திருமணம் இன்னும் மூன்று மாதங்களில் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து அதியா தன்னுடைய இன்ஸ்டாகிராமில், “இன்னும் மூன்று மாதங்களில் நடைபெற இருக்கும் இந்த திருமணத்திற்கு நான் அழைக்கப்படுவேன் என்று நம்புகிறேன். கேலிக்கூத்தாக உள்ளது என்பது போல கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னதாக மே மாதம், அதியாவின் சகோதரர் திருமண வதந்தி குறித்து கூறுகையில். “கல்யாணத்தைப் பொறுத்த […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

“நான் என் தோழியை காதலிக்கிறேன்”….. பிரபல டென்னிஸ் வீராங்கனை அறிவிப்பு….. வைரலாகும் புகைப்படம்…..!!!

பிரபல டென்னிஸ் வீராங்கனை டாரியா தனது தோழியான நடாலியாவை காதலிப்பதாக வெளிப்படையாக அறிவித்துள்ளார். ரஷ்யாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை டாரியா. இவர் சமீபத்தில் நடந்து முடிந்த பிரஞ்சு ஓபன் தொடரில் அறையிறுதி போட்டி வரை முன்னேறினார். இந்நிலையில் தற்போது தனது தோழியான நடாலியாவை காதலிப்பதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஒரே பாலினத்தை சேர்ந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள பல நாடுகள் சட்டபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும் சில நாடுகள் இதற்கு தடை வழங்கியுள்ளன. ரஷ்யாவில் ஒருபால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி” பிரதமர் மோடிக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பிதழ்….!!!!

சென்னையில் உள்ள மாமல்லபுரத்தில் சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த போட்டி ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த போட்டியின் தொடக்க விழா ஜூலை 28-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வர இருக்கிறார். இதன் காரணமாக பிரதமர் நரேந்திர மோடியை அழைப்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லிக்கு செல்ல இருந்தார். ஆனால் திடீரென முதல்வருக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன்…. சர்வதேச போட்டியிலிருந்து திடீர் ஓய்வு…. வெளியான அறிவிப்பு….!!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் தினேஷ் ராம்தின். இவர் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் தனது கடைசி டி20 போட்டியை விளையாடினார். இவர் 71 டி20 போட்டிகள், 139 ஒரு நாள் போட்டிகள், 74 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு ராம்தின் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஆக நியமிக்கப்பட்டார். அதிலிருந்து  மேற்கு இந்திய தீவுகளை 17 போட்டிகளில் வழி நடத்தினார். இவர் தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் […]

Categories
விளையாட்டு

“உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி”… வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை…..!!!!

உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அஞ்சும் முட்கில் வெண்கலம் வென்றார். அதுமட்டுமல்லாமல் தரவரிசையில் நம்பர் 1 இடத்தையும் பிடித்து அவர் சாதனை புரிந்திருக்கிறார். தரவரிசை சுற்றுக்கு நடந்த தகுதிச் சுற்றில் அஞ்சும் முட்கில் 586 புள்ளிகள் பெற்றார். இதையடுத்து தரவரிசை சுற்றில் 402.9 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்தார். இதற்கு முன்னதாக சில மாதங்களுக்கு முன் நடந்த உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் அஞ்சுல் முட்கில் வெள்ளிவென்றார். இது தொடர்பாக அஞ்சும் முட்கில் கூறியிருப்பதாவது […]

Categories
விளையாட்டு

ஒருநாள் கிரிக்கெட்: புது சாதனை நிகழ்த்திய ஹர்த்திக் பாண்ட்யா…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி போட்டி நேற்று நடைபெற்றது. இவற்றில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்து தொடரையும் கைப்பற்றியது. இதற்கிடையில் ஆட்டநாயகனாக ரிஷப்பண்ட் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து தொடர் நாயகன் விருதை ஹர்த்திக் பாண்ட்யா தட்டிச்சென்றார். இப்போட்டியில் ஹர்த்திக் பாண்ட்யா பந்துவீச்சில் 4 விக்கெட்டும், பேட்டிங்கில் 71 ரன்களும் எடுத்து இருந்தார். இதன் வாயிலாக அவர் புது சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் வெளிநாட்டு மண்ணில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

JUST IN: பிரபல கிரிக்கெட் வீரர் ஓய்வு அறிவிப்பு….!!!!

இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இதுவரை 104 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 21 அரை சதம், மூன்று சதம் என 2919 ரன்கள் குறித்துள்ளார். பவுலிங்கிலும் கலக்கிய ஸ்டோக்ஸ் 74 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நாளை நடைபெறும் இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா இடையான போட்டி அவரது கடைசி ஒரு நாள் போட்டியாக அமையும்.

Categories
விளையாட்டு

நியூசிலாந்து, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர்…. மீண்டும் இணையும் ஜம்பா….!!!!!

ஆஸ்திரேலியா அணி ஆகஸ்டு மாதம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும், அதனை தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் விளையாட இருக்கிறது. இந்த இருஅணிகளுக்கு எதிரான ஆஸ்திரேலியா ஒரு நாள் அணி அறிவிக்கப்பட்டது. இவற்றில் ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் கேப்டன் பேட் கம்மின்சுக்கு ஓய்வு வழங்கப்பட்டது. அத்துடன் சுழற் பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா ஒரு நாள் அணியில் இடம்பிடித்துள்ளார். இதற்கு முன்னதாக இலங்கை அணிக்கு எதிரான தொடரில் அவர் இடம்பெறவில்லை. அவருடைய மனைவிக்கு […]

Categories
விளையாட்டு

“டி.என்.பி.எல். போட்டிகள்” நாளை சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதல்…. வெளியான அறிவிப்பு….!!!!

6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியானது சென்ற 23ஆம் தேதி நெல்லையில் துவங்கியது. அங்கு 6 ஆட்டங்கள் நடைபெற்றது. இதையடுத்து திண்டுக்கல்லில் 7 போட்டிகள் மற்றும் கோவையில் 8 ஆட்டங்கள்  நடை பெற்றது. இதுவரையிலும் 21 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளது. நெல்லை ராயல் கிங்ஸ் 6 வெற்றியுடன் 12 புள்ளிகள் பெற்று பிளேஆப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. அதன்பின் மதுரை பாந்தர்ஸ் 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளியும், கோவை கிங்ஸ் 3 வெற்றி, […]

Categories
விளையாட்டு

நடிகர் மாதவன் மகன்….. நீச்சல் போட்டியில் தேசிய சாதனை….. குவியும் பாராட்டுக்கள்….!!!!

புவனேஸ்வரில் நடைபெற்ற நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் தேசிய சாதனை படைத்துள்ளார். நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் வீரர் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் புவனேஸ்வரில் நடைபெறும் 48வது ஜூனியர் நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் கலந்து கொண்டார். இந்த போட்டியில் அவர் தேசிய சாதனையுடன் தங்கப்பதக்கமும் வென்றுள்ளார். கலிங்கா அரங்கத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 1500 மீ ப்ரீஸ்டைல் போட்டியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

FLASH NEWS : பிரபல இந்திய வீரருக்கு காயம்….. திடீர் விலகல்…. ரசிகர்கள் அதிர்ச்சி…..!!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரெட்ஸ் ஓல்டு டிராஃப்ட் மைதானத்தில் தொடங்கியது. இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் காயம் காரணமாக பும்ரா விலகியுள்ளார். இவருக்கு பதிலாக சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் இல்லை. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளுமே 1-1 என்ற சமநிலையில் உள்ளதால் இந்த போட்டியில் வெற்றி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்து VS இந்தியா…. 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி…. யார் வெற்றி பெறுவார்….?

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை நடைபெறுகிறது. இந்த போட்டி மான்செஸ்டரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் முதல் சுற்றில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் 2-வது சுற்றில் 247 ரன்கள் எடுக்க முடியாத இந்திய அணி வெறும் 100 ரன்கள் மட்டுமே எடுத்து 146 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் விராட் கோலி தொடர்ந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அவர் பார்முக்கு வர வேண்டும்” விராட் கோலி ஒரு மிகப்பெரிய வீரர்…. கபில்தேவ் கருத்து…!!

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் நடைபெற்று வரும் மேட்சில் விராட் கோலி சரியாக ஆடாததால் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டுக்கு பிறகு விராட் கோலி எந்த சதமும் அடிக்கவில்லை. இவர் ஐ.பி.எல் வரலாற்றில் முதன் முறையாக 3 கோல்டன் டக் அவுட் ஆகியுள்ளார். இவரை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் விராட் கோலியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதாவது எத்தனை நாட்களுக்கு சதம் அடிக்காமல் காலத்தை தள்ளப் போகிறீர்கள் என்றும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு […]

Categories
விளையாட்டு

ஹாட்ரிக் வெற்றி பெறுமா சேப்பாக் சூப்பர் கில்லீஸ்?…. திண்டுக்கல் டிராகனுடன் இன்று நடைபெறவுள்ள போட்டி….!!!!

6வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியானது சென்ற 23ஆம் தேதி நெல்லையில் துவங்கியது. அங்கு ஆறு ஆட்டங்கள் நடைபெற்றது. இதையடுத்து திண்டுக்கல்லில் 7 போட்டிகள் நடந்தது. இப்போது கோவை எஸ்.என்ஆர். கல்லூரி மைதானத்தில் டி.என்.பி.எல். போட்டிகள் நடந்து வருகிறது. நேற்றுடன் மொத்தம் 19 லீக்ஆட்டங்கள் முடிந்திருக்கிறது. நெல்லை ராயல் கிங்ஸ் அணி 6 வெற்றியுடன் 12 புள்ளிகள் பெற்று பிளேஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதிபெற்றுள்ளது. மதுரை பாந்தர்ஸ் 8 புள்ளி உடனும், சேப்பாக் சூப்பர் […]

Categories
விளையாட்டு

“சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி”… இறுதிபோட்டிக்கு முன்னேறிய பி.வி.சிந்து….!!!!!

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியானது சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இவற்றில் நேற்று நடைபெற்ற கால்இறுதி சுற்றில் இந்திய வீராங்கனையான பிவி.சிந்து மற்றும் சீனாவின் ஹான்யூ போன்றோர் மோதி கொண்டனர். இந்த ஆட்டத்தில் முதல் சுற்றை துய்ஹான் யூ கைப்பற்றினார். இதையடுத்து சிறப்பாக விளையாடிய சிந்து அடுத்த 2 சுற்றுகளை கைப்பற்றினார். இதன் காரணமாக 17-21, 21-11, 21-19 எனும் செட் கணக்கில் சிந்து வெற்றிபெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார். இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதி சுற்றில் இந்திய […]

Categories
பேட்மிண்டன்

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்… அடுத்தடுத்த போட்டிகள் எப்போது?…. இதோ முழு விவரம்…!!!

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்து பி.வி.சிந்து, சாய்னா நேவால், கிடாம்பி ஸ்ரீகாந்த், ஆகியோர் கலந்து கொண்டனர். நேற்று நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் சிந்து, சாய்னா, பிரனாய், அஷ்மிதா ஆகியோர்கள் வெற்றி பெற்றிருந்தனர். இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் பிங் ஜியோவை எதிர்த்து விளையாடினார்கள். இதில் உலக தரவரிசையில் 9 வது இடத்தில் உள்ள பிங் ஜியோவை சாய்னா நேவால் தோற்கடித்து காலிறுதி […]

Categories
விளையாட்டு

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்; இந்திய வீராங்கனை அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்….!!!!

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இவற்றில் இன்று நடைபெற்ற கால்இறுதி சுற்றில் இந்திய வீராங்கனையான பிவி.சிந்து மற்றும் சீனாவின் ஹான்யூ போன்றோர் மோதி கொண்டனர். இந்த ஆட்டத்தில் முதல் சுற்றை துய்ஹான் யூ கைப்பற்றினார். இதையடுத்து சிறப்பாக விளையாடிய சிந்து அடுத்த 2 சுற்றுகளை கைப்பற்றினார். இதன் காரணமாக 17-21, 21-11, 21-19 எனும் செட் கணக்கில் சிந்து வெற்றிபெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார்.

Categories
மாவட்ட செய்திகள் விளையாட்டு

“சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்”… இவர்கள் 3 பேர் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்….!!!!

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெஹ்வால் மற்றும் எச்.எஸ்.பிரணாய் போன்றோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியிருக்கின்றனர். சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில்  கால் இறுதிக்கு முந்தைய 2-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றது. இவற்றில் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் வியட்நாம் வீராங்கனையுடன் மோதிய பி.வி.சிந்து 19-21 என முதல்செட்டை இழந்தாலும், பிறகு 21-19, 21-18 என்று அடுத்த இருசெட்களை கைப்பற்றி வெற்றியடைந்தார். இதன் வாயிலாக பி.வி.சிந்து கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணியில் இருந்து கோலி நீக்கம் ஏன்?….. வெளியான முக்கிய தகவல்…..!!!!

வெ.இண்டீஸ் உடனான இந்திய டி20 அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோகித் (c), இஷான் கிஷன், கே.எல்.ராகுல், சூரியகுமார், தீபக் ஹூடா, ஷ்ரேயஸ், தினேஷ் கார்த்திக், பண்ட், ஹர்திக், ஜடேஜா. அக்சர், அஸ்வின், பிஷ்னாய், குல்தீப், புவனேஷ்வர், ஆவேஷ் கான், ஹர்ஷல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். சரியான ஃபார்மில் இல்லாத காரணத்தால், கோலி அணியில் இடம்பெறவில்லை. வெ.இண்டீஸ்க்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் கோலி, பும்ரா, யுஸ்வேந்திர சஹால் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஃபார்ம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இது எப்படி நியாயமாகும்….? எல்.பி.டபிள்யூ முறையில் மாற்றம் தேவை… அஸ்வின் வலியுறுத்தல்…!!!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சில பேட்ஸ்மேன்கள் வித்தியாசமான முறையில் பந்தை அடிக்க முயற்சி செய்வார்கள். அதாவது வலது கை பக்கம் உள்ளவர்கள் இடது கை பக்கமாகவும், இடது கை பக்கம் உள்ளவர்கள் வலது கை பக்கமாகவும் பேட்டிங் செய்வார்கள். அதுமட்டுமின்றி சிலர் உடலை திருப்பாமல் பேட்டிங் செய்யும் ஸ்டைலை கொண்டு இருக்கின்றனர். இது கிரிக்கெட்டில் சகஜமாகி விட்டதால் எல்.பி.டபுள்யூ விதிமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என மூத்த பந்துவீச்சாளர் அஸ்வின் கூறியுள்ளார். இது தொடர்பாக அஸ்வின் […]

Categories
விளையாட்டு

பரோடா பெண்கள் அணி: ருமேலி தார் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமனம்…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!!

சில வாரங்களுக்கு முன்னதாக ருமேலி தார்(38) கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த நிலையில் இவர் பரோடா கிரிக்கெட் சங்கத்தின் மூத்த பெண்கள் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இதில் ருமேலி தார் கடந்த 2003 முதல் 2018 வரை இந்திய அணியின் ஆல்ரவுண்டராக இருந்தார். அவர் 4 வருட அனுபவத்துடன் பிசிசிஐ லெவல் 2 சான்றிதழ் பெற்ற பயிற்சியாளராக இருக்கிறார். 2003 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக […]

Categories
விளையாட்டு

“சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி”…. 2-வது சுற்றுக்கு தகுதியான சிந்து, சாய்னா….!!!!

சிங்கப்பூர் ஓபன்பேட்மிண்டன் போட்டியானது சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இவற்றில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றுஆட்டம் ஒன்றில் முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-15, 21-11 என்ற நேர் செட்டில் பெல்ஜியத்தின் லியானி டானை தோற்கடித்து 2வது சுற்றுக்கு முன்னேறினார். இதையடுத்து மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னாநேவால் 21-18, 21-14 எனும் நேர்செட்டில் சக நாட்டவரான மாளவிகா பான்சோத்தை வீழ்த்தி இந்திய ஓபன் போட்டியில் அவரிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தார். […]

Categories

Tech |