Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING : பிரபல CSK வீரர் ஓய்வு…. பெரிய இழப்பு….!!!!

பிரபல கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். கர்நாடகாவை சேர்ந்த உத்தப்பா (36) 20 ஆண்டுகளாய் சர்வதேச கிரிக்கெட் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடர்களில் பெங்களூரு மற்றும் சிஎஸ்கே அணிகளுக்காக விளையாடி இருக்கிறார். இவர் 46 ஒருநாள் போட்டிகளிலும் 13 டி20 போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். போராட்ட குணமும், ஸ்டைலும் கொண்ட சிறந்த இவர்.

Categories
விளையாட்டு

உலகக்கோப்பை மகளிர் கால்பந்து போட்டி: துணை பயிற்சியாளராக தமிழக பெண் தேர்வு….!!!!!

17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை மகளிர் கால் பந்து போட்டியானது இந்தியாவில் முதன்முறையாக நடக்கிறது. இப்போட்டி அக்டோபர் 11-ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை புவனேஸ்வர், கோவா, நவி மும்பை போன்ற 3 இடங்களில் நடக்கிறது. இதில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. லீக முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதிபெறும். இந்திய அணியானது “ஏ” பிரிவில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்கா, மொராகோ, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஆசிய கோப்பை தோல்வி”…. என்ன காரணம்?…. ஆய்வு மேற்கொண்ட கிரிக்கெட் வாரியம்….!!!!

15-வது ஆசியகோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியானது ஐக்கிய அரபு எமிரேட்சில் அண்மையில் நடைபெற்று முடிந்தது. இவற்றில் பாகிஸ்தானை இறுதிப்போட்டியில் வீழ்த்தி இலங்கை ஆசியகோப்பையை கைப்பற்றியது. ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணியின் ஆட்டம் ஆசிய கோப்பையில் மோசமாக இருந்தது. பாகிஸ்தான், இலங்கையிடம் தோற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. பல்வேறு திறமையான வீரர்கள் இருந்தும் ஆசியகோப்பையில் ஏற்பட்ட தோல்வி ஏமாற்றமளித்தது. இப்போட்டிக்கு முன் சுழற்சி முறையில் பல வீரர்களுக்கு பல்வேறு தொடர்களில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவற்றில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அனுமதியளித்த சுப்ரீம் கோர்ட்….. பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, ஜெய் ஷா ஆகியோரின் பதவிக் காலம் நீட்டிப்பு..!!

பிசிசிஐ உறுப்பினர்களின் பதவிக்காலம் தொடர்பாக கிரிக்கெட் அமைப்பின் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி, செயலாளராக ஜெய்ஷா ஆகியோர் 2வது முறையாக அப்பதவியில் மேலும் 3 ஆண்டுகளுக்கு தொடர்கின்றனர். உச்ச நீதிமன்றம் புதன்கிழமை, செப்டம்பர் 14, போர்டு அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட திருத்தத்தை ஏற்றுக்கொண்டது, இது வாரியத்தில் ஒரு பதவியில் இருப்பவர் தொடர்ந்து இரண்டு முறை பதவியில் இருக்க அனுமதிக்கும். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

” Happy Birthday Sky”…. இன்ஸ்டாவில் வாழ்த்து சொன்ன கிங் கோலி…!!

இந்திய நட்சத்திரம் விராட் கோலி 32வது பிறந்தநாளை முன்னிட்டு தனது சக வீரர் சூர்யகுமார் யாதவுக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்தார்.  இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்  செப்.14, புதன்கிழமை அன்று 32 வயதை எட்டிய நட்சத்திர பேட்டர் சூர்யகுமார் யாதவுக்கு முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி பிறந்தநாள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

விராட் கோலி இப்போதே ஓய்வு பெறனும்….. “உங்கள மாதிரியா”….. ஷாஹித் அப்ரிடிக்கு தரமான பதிலடி கொடுத்த அமித் மிஸ்ரா..!!

விராட் கோலியின் ஒய்வு குறித்து பேசிய ஷாஹித் அப்ரிடிக்கு இந்திய அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா பதிலடி கொடுத்துள்ளார்.. ஆசியக்கோப்பை தொடரில் இரண்டு அரை சதங்கள் மற்றும் ஒரு டக் அவுட்டுக்கு பிறகு, விராட் கோலி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கடைசி ஆட்டத்தில் 122 ரன்களை எடுத்தார், 1020 நாட்களுக்கு பின் அவர் சதமடித்து பார்முக்கு வந்தார். அந்த மகிழ்ச்சியை ரசிகர்களை வெறித்தனமாக கொண்டாடினர்,  ​​கேப்டன் ரோஹித் ஷர்மா 2022 ஆசியக் கோப்பையின் கடைசி போட்டியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#ENGLvsSLL : 3 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்…. ஜெயசூரியா சுழலில் மூழ்கிய இங்கிலாந்து..!!

ஸ்ரீலங்கா லெஜெண்ட்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து லெஜெண்ட்ஸை வீழ்த்தியது.  முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்று விளையாடும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.. கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் என 8 அணிகளின் வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.. இந்நிலையில் நேற்று இங்கிலாந்து லெஜெண்ட்ஸ் மற்றும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ரோஹித் நீங்க 4ஆவது இடத்துல ஆடுங்க….. “இவர ஓப்பனிங் ஆட வைங்க”…. புது யோசனை தெரிவிக்கும் வாசிம் ஜாபர்…. இந்த ஐடியா ஓகேவா..!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் ரிஷப் பண்ட் கேஎல் ராகுலுடன் ஓபன் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான போட்டியாளர்களில் இந்திய அணியும் ஒன்று.இந்த டி20 உலக்கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.  ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் கேஎல் ராகுல் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். பேட்டிங்கில்  விராட் கோலி, சூர்யகுமார் யாதவ்,  ரிஷப் பந்த் ஆகியோரும், ஆல்ரவுண்டராக தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ஹர்திக் […]

Categories
கிரிக்கெட் சினிமா விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

முடியாது…. ” தோனி, கோலி தொழிலே அதுதான்”…. வழக்கை தள்ளுபடி செய்த கோர்ட்..!!

ஷாருக்கான், தோனி, கோலி மற்றும் சர்மா போன்ற தனி நபர்கள் எந்த விளம்பரமும் செய்யக்கூடாது என்று தடை விதிக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் தோனி, கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் ஆன்லைன் கேமிங் செயலிகளை விளம்பரப்படுத்துவதற்கு தடை கோரிய பொது நல வழக்கை மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விவேக் ருசியா மற்றும் அமர்நாத் கேஷர்வானி ஆகியோர் அடங்கிய டிவிஷன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

விராட் கோலி ஓய்வை அறிவிக்க வேண்டும்….. “இதை செய்வார் என்று நம்புகிறேன்”…. முன்னாள் பாக்.ஜாம்பவான் சொல்வதென்ன?

நீங்கள் (விராட்) புகழின் உச்சத்தில் இருக்கும்போது ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான்  ஜாம்பவான் ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.. 2022 ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 ஸ்டேஜில் கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற விராட் கோலியின் 71வது சதம் உதவியது.. இந்நிலையில் முன்னாள் பாகிஸ்தான்  ஜாம்பவான் ஷாஹித் அப்ரிடி 34 வயதான கோலிக்கு ஓய்வு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இதுகுறித்து அஃப்ரிடி சாமா டிவியிடம் கூறியதாவது “விராட் விளையாடிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

விராட் கோலி ஓப்பனிங் ஆடினால்….. சிறந்த தேர்வாக இருக்கும்…. முன்னாள் இந்திய வீரர் கருத்து..!!

டி20 போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக விராட் கோலி பேட்டிங்கைத் தொடங்குவது அணிக்கு சிறந்த தேர்வாக இருக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஹன் கவாஸ்கர் கூறியுள்ளார்.. சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலி கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக பேட்டிங்கில் ஃபார்ம் இல்லாமல் தவித்து வந்ததால் கடும் விமர்சனங்களை சந்தித்ததால் மனதளவில் சோகத்தில் இருந்தார் என்பது தான் உண்மை.. இதற்கிடையே இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் கோலி விலகி பார்மை மீட்டெடுக்க முயன்றார்.. […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்த 3 பேரை ஏன் சேர்க்கல….. “கிரிக்கெட் பார்க்க மாட்டேன்”….. என்ன காரணம்?….. ஆவேசமான காங்கிரஸ் தலைவர்..!!

அணி தேர்வு முறை சரியில்லை என்று குற்றம் சாட்டிய அவர், இந்திய அணியில் நியாயமான தேர்வு நடக்கும் வரை கிரிக்கெட்டை பார்க்க மாட்டேன் என்று காங்கிரஸ் தலைவர் தௌசீப் ஆலம் கூறியுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த டி20 உலக கோப்பையில் பங்கேற்கும் நாடுகள்  தங்களது அணிகளை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஹர்ஷல் படேலுக்கு வேகம் பத்துமா?…. ஈஸியா சிக்ஸ் அடிப்பாங்க…. ரசிகர்கள் கேள்வியால் கடுப்பான சுனில் கவாஸ்கர்..!!

ஹர்ஷல் படேலின் இந்திய டி20 உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியதற்கு முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கடுப்பான பதிலளித்துள்ளார்.. ஆஸ்திரேலியாவில் அடுத்த அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்கான அணிகளை ஒவ்வொரு நாடுகளும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கெடு விதித்திருந்தது. அதன்படி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஏற்கனவே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

எனக்கு ஆச்சரியம்…! ஹூடா, ஹர்ஷல் பட்டேலுக்கு பதிலாக என்னோடே சாய்ஸ் இவங்க தான்…. முகமது அசாருதீன் ட்விட்..!!

இந்திய அணியின் முக்கிய டி20 உலகக் கோப்பை 2022 அணியில் இருந்து இவர்கள் இருவரும் நீக்கப்பட்டது  ஆச்சரியமாக இருப்பதாக முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்த ஆசியக் கோப்பையில் சூப்பர் 4 சுற்றோடு வெளியேறியது இந்திய அணி. இந்நிலையில் ஆஸ்திரேலியாலில் அடுத்த அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.. இந்த டி20 அணியில்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#ENGvIND : மந்தனா மரண அடி….. 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அசத்திய இந்தியா…!!

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வென்ற நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி டெர்பியில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அஸ்வினுக்கு பதிலா….. இந்த பையன எடுத்துருக்கனும்…. ஏன் தெரியுமா?…. பாக் வீரர் சொல்றதுக்கு காரணம் இதுதான்..!!

ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக பிஷ்னோய் இடம்பிடித்திருக்க வேண்டும் என்று பாகிஸ்தானின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்த ஆசியக் கோப்பையில் சூப்பர் 4 சுற்றோடு வெளியேறியது இந்திய அணி. இந்நிலையில் ஆஸ்திரேலியாலில் அடுத்த அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.. இந்த டி20 அணியில்  கிட்டத்தட்ட ஆசிய கோப்பை தொடரில் ஆடிய வீரர்களே பெரும்பாலானோர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அம்மாடியோ…. இத்தனை பாலோயர்ஸ்ஸா?…. ட்விட்டரில் கெத்து காட்டும் விராட் கோலி….!!!!

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் விராட் கோலி. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ள நிலையில் சமீபத்தில் 71 வது சதத்தை அடித்து ரசிகர்களை மிரள வைத்தார். இந்நிலையில் இந்திய அணி வீரர் விராட் கோலியை சமூக வலைத்தளங்களில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை ஏராளம். அவ்வகையில் தற்போது ட்விட்டரில் அதிகம் பெயர் அதாவது ஐந்து கோடி பேர் பின்பற்றும் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளா. ர் வேறு எந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா செஞ்ச தவறையே மீண்டும் செய்து!….. வருத்தம் தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்…!!!!

அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள  டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ரோகித்சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் காயத்தால் விலகி இருந்த ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் போன்றோர் மீண்டும் திரும்பியுள்ளனர். இதற்கிடையில் ரவீந்திர ஜடேஜா காயத்தால் வெளியேறி இருக்கிறார். இந்த நிலையில் டி20 கிரிக்கெட்டில் அண்மை காலங்களில் சுமாரான பார்மில் உள்ள ரிஷப் பண்ட்டை மீண்டும் மீண்டும் தேர்வுசெய்து தேர்வுக்குழு அதே தவறை செய்து […]

Categories
விளையாட்டு

“முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமை”…. கெத்து காட்டும் விராட் கோலி…. குஷியில் ரசிகர்கள்….!!!!

இந்திய அணியின் நட்சத்திரவீரர் விராட் கோலி ஆவார். இவர் சென்ற 3 வருடங்களாக சதம் அடிக்காமல் பல விமர்சனங்களுக்கு தள்ளப்பட்டார். இதனால் அவருக்கு பல டி20 தொடர்களில் ஓய்வும் வழங்கப்பட்டது. கிரிக்கெட்டில் எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் சமூகவலைதளங்களில் விராட்கோலி சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். களத்தில் சாதனைகளை முறியடித்ததோடு, அண்மையில் 50 மில்லியன் டுவிட்டர் பின் தொடர்பவர்களைக் கொண்ட முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை விராட்கோலி பெற்றார். இதேபோன்று இன்ஸ்டாகிராமில் விராட்கோலியை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

என்ன தவறு செய்தார்?…. சொதப்பும் பண்டுக்கு இடமா?….. நானாக இருந்திருந்தால்…. சஞ்சுக்கு ஆதரவு கொடுக்கும் பாக் வீரர்.!!

2022 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பந்திற்குப் பதிலாக சஞ்சு சாம்சனை தேர்வு செய்திருப்பேன் என்று பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா கூறினார். 2022 டி20 உலகக் கோப்பை மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உள்நாட்டுத் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. இதில் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை.. 3 தொடரில் ஒன்றில் கூட இடம்பெறாததால் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.. 27 வயதான விக்கெட் கீப்பர்-பேட்டர் சஞ்சு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

உலகின் முதல் கிரிக்கெட் வீரர்….. ட்விட்டரில் புதிய சாதனை படைத்த கிங் கோலி….!!

மைக்ரோ-பிளாக்கிங் தளமான ட்விட்டரில் 50 மில்லியன் பின்தொடர்பவர்களை நிறைவு செய்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை இந்திய நட்சத்திரம் விராட் கோலி பெற்றுள்ளார். 211 மில்லியன் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களைக் கொண்ட இந்திய நட்சத்திர பேட்டர் விராட் கோலி, ட்விட்டரில் 50 மில்லியன் பின்தொடர்பவர்களை எட்டிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். 33 வயதான அவர், உலகில் அதிகம் பின்தொடரும் கிரிக்கெட் வீரர் மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ (450M) மற்றும் லியோனல் மெஸ்ஸி (333M) […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தானின் தோல்வி…. இந்தியாவிற்கு மகிழ்ச்சி…. சர்ச்சையை கிளப்பிய கிரிக்கெட் வாரிய தலைவர்….!!

2022 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று முன்தினம் துபாயில் வைத்து நடைபெற்றது. இதில் இலங்கை பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட நிலையில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் 171 ரன்கள் எடுத்தால் பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பையை வெல்லலாம் என்ற நிலையில் 147 ரன்கள் மட்டுமே எடுத்து பாகிஸ்தான் அணி ஆல் அவுட் ஆனது. இதனால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

மிஸ் யூ ஜடேஜா…. அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது… கவலையில் ரசிகர்கள்..!!

நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பங்கேற்காததால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் அடுத்த அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்கான அணிகளை ஒவ்வொரு நாடுகளும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கெடு விதித்திருந்தது. அதன்படி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஏற்கனவே அணியை அறிவித்து விட்டன.. இந்த நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஐசிசி ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த வீரர்….. முதல் முறையாக ஜிம்பாப்வேக்கு பெருமை சேர்த்த ராசா..!!

ஆண்களுக்கான ஐசிசி மாதத்தின் சிறந்த வீரர் விருதை வென்ற முதல் ஜிம்பாப்வே வீரர் என்ற பெருமையை சிக்கந்தர் ராசா பெற்றார். ஐசிசி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரரை தேர்வு செய்து மாதம் தோறும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது..இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை தேர்வு செய்ய வீரர் மற்றும்  வீராங்கனைகள் பெயர்களை சமீபத்தில் பரிந்துரைத்தது ஐசிசி. மூத்த ஆல்-ரவுண்டர் சிக்கந்தர் ராசா ஐசிசி ஆடவர் ஆகஸ்ட் மாதத்திற்கான விருதை வென்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பைக்குப் பின்….. தென்னாப்பிரிக்கா தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகும் மார்க் பவுச்சர்..!!

டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு தென்னாப்பிரிக்கா தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து மார்க் பவுச்சர் விலகுகிறார். இங்கிலாந்தில் தென்னாப்பிரிக்கா தனது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இழந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்தது. தென்னாப்பிரிக்கா பயிற்சியாளர் மார்க் பவுச்சர், இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, “தனது எதிர்கால வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட நோக்கங்களுக்கு ஏற்ப மற்ற வாய்ப்புகளைத் தொடர” தனது பதவியை விட்டு விலகுவார் என்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

யப்பா… ஒருவழியா இவர மட்டும் டீம்ல எடுக்கல…. நிம்மதியடைந்த ரசிகர்கள்…!!

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஆவேஷ் கான் இடம்பெறாதது ரசிகர்களை நிம்மதியடைய செய்துள்ளது.. ஆஸ்திரேலியாவில் அடுத்த அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்கான அணிகளை ஒவ்வொரு நாடுகளும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கெடு விதித்திருந்தது. அதன்படி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஏற்கனவே அணியை அறிவித்து விட்டன.. இந்த நிலையில் ஆசிய கோப்பை முடிவடைந்த அடுத்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : மறுபடியும் அதே டீம்…… “இவங்க 2 பேரையும் ஏன் சேர்க்கல”…. என்ன குறை இவங்களுக்கு?…. கேள்வியெழுப்பும் நெட்டிசன்கள்..!!

இந்திய அணியின் முகமது ஷமி மற்றும் தீபக் சாஹர் ஆகிய இருவரையும் அணியில் சேர்க்காமல் ஸ்டாண்ட் பை வீரர்களாக தேர்வு செய்துள்ளதற்கு ரசிகர்கள் தேர்வு குழுவை விமர்சனம் செய்து வருகின்றனர்.. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர்4 சுற்றோடு வெளியேறிய நிலையில், இந்த டி20 உலக கோப்பை அணியில் பெரிய மாற்றம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கனவுகள் நனவாகும்….. “மகிழ்ச்சியில் தினேஷ் கார்த்திக்”….. அதற்கு ஹார்திக் செய்த கமெண்ட்…. வைரலாகும் பதிவு..!!

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள தினேஷ் கார்த்திக் மகிழ்ச்சியை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.. 2007 ஆம் ஆண்டு தொடக்க ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற எம்எஸ் தோனியின் தலைமையிலான இந்திய அணியில் இருந்த தினேஷ் கார்த்திக், 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் சேர்க்கப்பட்டுள்ளார்.  ஐபிஎல் 2022 இல் RCB அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக் அதிரடி பேட்டிங்கால் அனைவரது கவனத்தையும் தன் மீது திரும்ப வைத்தார்.. பெங்களூர் அணியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvAUS , #INDvSA : ஷமி, தீபக் சாஹருக்கு இடம்…. வேறு யாருக்கெல்லாம் வாய்ப்பு…. இதோ நீங்களே பாருங்க..!!

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2022, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா டி20 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்த ஆசியக் கோப்பையில் சூப்பர் 4 சுற்றோடு வெளியேறியது இந்திய அணி. இதனையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாலில் அடுத்த அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறும் டி20 உலக கோப்பையில் பங்கேற்க உள்ளது. இதற்கிடையே ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 டி20 […]

Categories
கிரிக்கெட் மாநில செய்திகள் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஆசிய கோப்பை வென்ற இலங்கைக்கு வாழ்த்துக்கள்….. பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆசிய கோப்பை வென்ற இலங்கை அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை இறுதி போட்டியில் நேற்று முன்தினம் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் துபாய் மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழந்து 170 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பானுகா ராஜபக்சே 45 பந்துகளில் (6 பவுண்டரி, 3 சிக்சர்) […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#SLvPAK : அய்யய்யோ போச்சே…… “டிவியை உடைக்கும் ரசிகர்கள்”….. பாகிஸ்தானை கலாய்க்கும் மீம்ஸ் வைரல்..!!

ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணி சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில், பாகிஸ்தானை கலாய்த்து வெளியிடப்பட்டுள்ள மீம்ஸ் வைரலாகி வருகிறது. ஆசிய கோப்பை இறுதி போட்டியில் நேற்று இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் துபாய் மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழந்து 170 ரன்கள் குவித்தது. இலங்கை அணியில் நிஷாங்கா 8, குஷால் மெண்டிஸ் 0, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சாம்பியன் ஆன இலங்கை….. “ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய ஆப்கான் ரசிகர்கள்”….. ஏன் தெரியுமா?…. அதுக்கு ஒரு காரணம் இருக்கு..!!

இலங்கை அணி வெற்றி பெற்றதை அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடியதை விட ஆப்கானிஸ்தான் ரசிகர்களும், ஒட்டுமொத்த நாடும் கோலாகலமாக கொண்டாடியது வைரலாகி வருகிறது. 15வது முறையாக நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதி போட்டியில் நேற்று இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் துபாய் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழந்து 170 ரன்கள் குவித்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலக கோப்பை போட்டி : இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு….. யாரெல்லாம் இடம்பெற்றுள்ளனர் தெரியுமா…..?

ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை போட்டி வருகிற அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 13-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 8 நாடுகள் கலந்து கொள்கிறது. இதில் இந்திய அணி வருகிற அக்டோபர் 23-ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இந்நிலையில் டி20 உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணி வீரர்களின் பட்டியல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட்…. வெற்றியடைந்த இலங்கை…. கம்பீர் செய்த திடீர் செயல்…. வைரல்….!!!!

15வது ஆசியகோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டம் துபாயில் நடந்தது. இவற்றில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதி கொண்டனர். முதலாவதாக பேட் செய்த இலங்கை அணியானது 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 171 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகியது. இதன் காரணமாக 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றியடைந்தது. மேலும் 6-வது முறையாக ஆசியகோப்பையையும் கைப்பற்றி அசத்தியது. இறுதிப் போட்டிக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

என்னை மன்னிக்கவும்.! நான் தான் தோல்விக்கு காரணம்….. சோகத்திலும் இலங்கைக்கு வாழ்த்து தெரிவித்த சதாப் கான்..!!

இலங்கை அணி கோப்பையை வெல்வதற்கு நான் தான் காரணம் என்று ஆல்ரவுண்டர் சதாப் கான் ட்விட் செய்துள்ளார்.. 15வது முறையாக நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதி போட்டியில் நேற்று இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் துபாய் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழந்து 170 ரன்கள் குவித்தது. இலங்கை அணியில் நிஷாங்கா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : ஜடேஜா இல்லை….. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு…!!

டி20 உலகக்கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலக கோப்பை வருகின்ற அக்டோபர் மாதம் 16ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இதற்கான 15 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே அறிவித்துவிட்டன. இதற்கிடையில் ஆசிய கோப்பை தொடர் தற்போது நடந்து முடிந்துள்ளது. இதில் இந்திய அணி பரிதாபமாக தோற்று வெளியேறியது. இதில் இலங்கை நேற்று இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.. இதையடுத்து டி20 உலக கோப்பைக்கான இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

catches win matches : இது தேவையா…. களத்தில் மோதல்….. எங்கிருந்தோ வந்து பாய்ந்து கேட்சை கோட்டை விட்ட பாக் வீரர்…. வைரல் வீடியோ..!!

ஆசிப் அலியிடம் சென்ற கேட்சை எங்கிருந்தோ வேகமாக வந்து உள்ளே புகுந்த மற்றொரு பாகிஸ்தான் வீரர் சதாப் கான் மோதி கேட்சை பிடிக்காமல் அது சிக்சருக்கு சென்றதால் பாக் ரசிகர்கள் அவரை திட்டி வருகின்றனர். 15வது முறையாக நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதி போட்டியில் நேற்று இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் துபாய் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

6ஆவது முறை கோப்பையை வெல்ல….. “சிஎஸ்கே தான் காரணம்”….. மேட்ச பாத்தோம்…. நம்பினோம்…. கேப்டன் சானாகா பேசியது இதுதான்..!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் இந்த பைனலில் நாங்கள் கோப்பையை வெல்வதற்கு உத்வேகமாக இருந்ததாக இலங்கை கேப்டன் தசுன் சானாகா வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் 15வது முறையாக நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதி போட்டியில் நேற்று இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் துபாய் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 […]

Categories
விளையாட்டு

“#PAKvsSL இறுதி போட்டி” இந்தியன் ஜெர்சிக்கு அனுமதி இல்லை…. தடுத்து நிறுத்தப்பட்ட இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்….!!

ஆசிய கோப்பை 2022 இறுதிப்போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் பாகிஸ்தான் அணியுடன் மோதி இலங்கை அணி வெற்றி பெற்றது. இந்த இறுதி போட்டியை காண பாகிஸ்தான் இலங்கை மட்டுமல்லாது மற்ற நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் குவிந்தனர். இந்நிலையில் இந்தியன் கிரிக்கெட் ரசிகர்கள் துபாய் ஸ்டேடியத்தில் நுழையும்போது இந்தியன் ஜெர்சி அணிந்திருந்த காரணத்தினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் அல்லது இலங்கை ஜெர்சி அணிந்து வாருங்கள் இந்தியன் ஜெர்சியுடன் உள்ளே அனுமதிக்க முடியாது என்று தடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AsiaCup2022Final: அடிதூள்… கலக்கிய ஸ்ரீலங்கா…. பாகிஸ்தானை பந்தாடி 6வது முறை சாம்பியன் ..!!

இந்தியா, பாகிஸ்தான், காங்காங், ஆப்கானிஸ்தான், ஸ்ரீலங்கா, வங்கதேசம் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்ற ஆசிய கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. 20 ஓவராக நடைபெற்ற இந்த போட்டி குரூப் எ, குரூப் பி என்று இரு சுற்றுங்களாக நடந்து முடிந்தன. ஒவ்வொரு சுற்றிலும் இரண்டு அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தேர்வாகின. அதன்படி ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தானும் பி பிரிவில் ஆப்கானிஸ்தான், ஸ்ரீலங்காவும் சூப்பர் 4 சுற்றில் மோதிய நிலையில் 3 போட்டி விளையாடி, வெளியேறிய இந்தியா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AsiaCup2022Final: பாகிஸ்தானை 23 ரன்னில் வீழ்த்தி… 6முறை ஆசிய கோப்பை வென்ற ஸ்ரீலங்கா…!!

ஆசியா கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய இறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஸ்ரீலங்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாக்கிஸ்தான் முதலில் பந்து வீசியது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணியின் ராஜபக்சாவில் 71 ரன் அதிரடியால் இலங்கை அணி 20ஓவர்களில் 6 விக்கெட் கிளப்புக்கு 170 ரன் எடுத்து. பின்னர் 172 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் ரிஸ்வான் 55 , இப்டிகார் அஹ்மத் 32 ரன் எடுக்க ஏனைய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஜடேஜாவுக்கு பதில் மாற்று வீரர் யார்…..? 4 பேர் போட்டி….. யாருக்கு ஜாக்பாட் அடிக்கும்…..!!!!

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஜடேஜா காயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு பதிலாக டி20 உலகக்கோப்பை போட்டியில் யாரை சேர்ப்பது என்று பிசிசிஐ தற்போது ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஜடேஜாவுக்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்படும் வீரர்களின் பட்டியலில் 4 பேர் இருக்கின்றனர். அதன்படி ஜடேஜாவுக்கு பதில் அக்சர் படேலை தேர்வு செய்யலாம். ஆசிய கோப்பை தொடரில் கூட ஜடேஜாவுக்கு பதிலாக அக்சர் படேல் தான் விளையாடினார். இவர் பந்து வீசுவது மற்றும் டெத் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலக கோப்பை போட்டி….. இந்திய அணிக்காண வீரர்களை தேர்வு செய்வதில் 3 பிரச்சனைகள்….. எப்படி தீர்வு காணலாம்….. நீடிக்கும் குழப்பம்.‌….!!!!

ஆசிய கோப்பை போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த ஆசிய கோப்பை போட்டிக்கு பிறகு டி20 உலக கோப்பை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் பங்கு பெற இருக்கும் வீரர்களின் பட்டியலை வருகிற செப்டம்பர் 15-ம் தேதிக்குள் கொடுத்தாக வேண்டும். அதன் பிறகு ஆசிய கோப்பை போட்டியில் நடைபெறும் சமயத்தில் ரோகித் சர்மா ஆசிய கோப்பை போட்டியில் இடம் பெற்ற பெரும்பாலான வீரர்கள் டி20 உலக கோப்பையில் இடம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

என்னை விட அவருதான் பெஸ்ட்!…. ஓபனாக பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி…..!!!!

ஆசிய கோப்பை டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட்கோலி சதமடித்தார். இந்த நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலியுடன், விராட் கோலியின் ஆக்ரோஷமான ஆட்டத்தை ஒப்பீட்டு செய்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு கங்குலி அளித்துள்ள பதிலில் “ஒரு வீரரின் திறமையின் அடிப்படையில் ஒப்பீடு இருக்க வேண்டும். விராட்கோலி என்னைவிட திறமையானவர் என நான் கருதுகிறேன். நாங்கள் வெவ்வேறு தலைமுறைகளில் கிரிக்கெட்விளையாடி இருக்கிறோம். அத்துடன் நாங்கள் பல்வேறு போட்டிகள் விளையாடி இருக்கிறோம் . நான் என் தலைமுறையில் […]

Categories
விளையாட்டு

மாநில கைப்பந்து போட்டி…. சென்னையில் இன்று தொடக்கம்…. பங்கேற்ற அணிகளின் விபரம் இதோ….!!!!

தமிழ்நாடு கைப்பந்து சங்கம் சார்பாக எஸ்.என்.ஜே. நிறுவன ஆதரவுடன் 70வது மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியானது சென்னையில் நடத்தப்படுகிறது. அதாவது நேரு ஸ்டேடியத்தில் இன்று முதல் வரும் 15ஆம் தேதி வரை நடக்கிறது. லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடத்தப்படும் இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம்., இந்தியன் வங்கி, தமிழ்நாடு போலீஸ், சென்னை ஸ்பைக்கர்ஸ், சுங்க இலாகா, வருமன வரி, ஐ.ஓ.பி.செயின்ட் ஜோசப் உட்பட 32 அணிகளும், பெண்கள் பிரிவில் டாக்டர் சிவந்தி கிளப், தமிழ்நாடு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup2022 : தீபக் சாஹர், ஷமி இல்லை…. 15 பேரை தேர்ந்தெடுத்த ஆஷிஷ் நெஹ்ரா….. இது கரெக்ட்டான டீம் தானா..!!

முன்னாள் இந்திய வீரர் ஆஷிஷ் நெஹ்ரா வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான தனது இந்திய அணிப் பட்டியலைத் தேர்ந்தெடுத்தார்,  தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2022ல் இருந்து இந்திய அணி வெளியேறிய நிலையில், ரசிகர்கள் மற்றும் நிபுணர்கள் ஏற்கனவே இந்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர். கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி  கோப்பையை வெல்லமுடியாமல் வெளியேறி ஏமாற்றமளித்தது. இந்த ஆண்டு நடைபெறும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அவரோட போக்குல விடுங்க…… சுதந்திரமாக ஆடினால்…. எதிரணியை அச்சுறுத்துவார் கோலி….. சொல்கிறார் சபா கரீம்..!!

கோலியை அவரது சொந்த டெம்ப்ளேட்டில் விளையாடவும், அவரை சுதந்திரமாக பேட் செய்யவும் இந்தியா அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சபா கரீம் கருத்து தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்பினார். வலது கை பேட்டர் கோலி போட்டியில் இரண்டு அரை சதங்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக கடைசி லீக் போட்டியில்  61 பந்துகளில் 6 சிக்ஸர், 12 பவுண்டரியுடன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அட சூப்பரா இருக்காரே….. “ருசித்து சாப்பிடும் ‘க்யூட்’ குட்டி கோலி”….. வைரலாகும் இன்ஸ்டா போட்டோ..!!

சமீபத்தில் டி20 கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்த விராட் கோலி, தனது குழந்தைப் பருவத்தில் இருந்த ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர, அது வைரலாகி வருகிறது. முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி ஆசிய கோப்பையில் மீண்டும் ஃபார்முக்கு திரும்பினார். இரண்டு அரைசதங்கள் மற்றும் ஒரு சதத்துடன் இந்தியாவின் அதிக ரன் அடித்த வீரராக இருப்பது மட்டுமில்லாமல் ஆசியக்கோப்பையிலும் அதிக ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். தனது 71வது சர்வதேச சதத்தை எட்டிய பிறகு, கோலி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

“ஹனிமூன் காலம் முடிந்துவிட்டது”….. அவருக்கு தெரியும்…… இனிதான் நெருக்கடி…. டிராவிட்டை விளாசிய முன்னாள் வீரர்..!!

முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சபா கரீம், இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு இது நெருக்கடியான நேரமாக இருக்கும் என்றும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தனது தேனிலவு காலம் முடிந்துவிட்டதை அறிந்திருப்பதாகவும் கூறியுள்ளார். ஆசியக் கோப்பை தொடரில் லீக் போட்டியில் அற்புதமாக விளையாடி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணி  இலங்கை மற்றும் பாகிஸ்தானிடம் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தது. இதனால் இறுதிப் போட்டிக்கு வரவில்லை. கடைசியாக நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் மட்டும் வெற்றி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AsiaCup2022 : பாகிஸ்தான் vs இலங்கை…… சாம்பியன் யார்?…. இன்று அனல் பறக்கும் இறுதிப்போட்டி…!!

ஆசிய கோப்பை 2022 இறுதிப் போட்டி பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே செப்டம்பர் 11 ஆம் தேதி இரவு 07:30 மணி முதல் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில்  15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 27-ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஹாங்காங் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்றது. கடந்த 2-ம் தேதி லீக் ஆட்டங்கள் முடிவடைந்த […]

Categories

Tech |