Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: 1 0 2 6 6 6….. சரவெடி காட்டிய இந்திய அணி….!!!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 208/6 ரன்கள் குவித்தது. ரோகித் 11 ரன்கள், கோலி 2 ரன்களில் அவுட்டாக, நிதானமாக ஆடிய ராகுல் 55 ரன்கள், சூர்யகுமார் 46 ரன்கள் எடுத்தனர். பிறகு வந்த அதிரடி காட்டிய ஹர்த்திக் பாண்ட்யா 71* ரன்கள் (30 பந்துகள், 7 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினார். இறுதி ஓவரில் 3 பந்துகளை சிக்சருக்கு விளாசினார். ஆஸி., தரப்பில் நாதன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#ICCRules : ‘மன்கட்’ செய்யலாம்….. எச்சிக்கு நோ….. இனி இப்படித்தான் ஆட வேண்டும்…. விதிமுறைகளில் சில முக்கிய மாற்றங்கள்… இதோ..!!

அக்டோபர் 1ம் தேதி முதல் கிரிக்கெட் விதிமுறைகளில் சில முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி தலைமையிலான ஆண்கள் கிரிக்கெட் கமிட்டி, MCC இன் புதுப்பிக்கப்பட்ட 2017 கிரிக்கெட் சட்டங்களின் 3வது பதிப்பில் விளையாடும் நிலைமைகளில் மாற்றங்களை பரிந்துரைத்துள்ளது. பரிந்துரைகளை அங்கீகரித்த மகளிர் கிரிக்கெட் கமிட்டியுடன் முடிவுகள் பகிரப்பட்டன. புதிய விளையாட்டு நிபந்தனைகள் அக்டோபர் 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும், அதாவது அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ICC ஆண்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் புது ரூல்ஸ்…. ஐசிசி வெளியிட்ட திடீர் அறிவிப்பு….!!!!

ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பல விதிகளை அதிரடியாக மாற்றி இருக்கிறது. இதன் வாயிலாக போட்டி மும்முரமாக மாறும் என ஐசிசி நம்பிக்கை தெரிவித்து உள்ளது. கங்குலி தலைமையிலான எம்.சி.சி. குழு இம்மாற்றத்தை செய்துள்ளது. வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இம்மாற்றம் வரவுள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் பந்தில் எச்சில் வைத்து தடவகூடாது. இத்தடை 2 வருடங்கள் தொடரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது இந்த தடை எப்போதும் தொடரும் என ஐசிசி அறிவித்துள்ளது. இதன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் டி20 போட்டி: விக்கெட் கீப்பர் இவரா?… இந்திய அணியின் பட்டியல் வெளியீடு….!!!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டி20 போட்டியானது இன்று நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் விதமாக இத்தொடரில் தன் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இப்போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெறுகிறது. முன்பாக உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் ரிஷப்பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இரண்டு பேருமே இடம் பிடித்துள்ளதால் 11 பேர் அணியில் விளையாடப் போவது யார் என்ற மிகப்பெரிய விவாதம் இந்திய வட்டாரத்தில் நடந்து வருகிறது. இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டிராவிட்டின் சாதனையை நெருங்கும் விராட் கோலி….. டி20 தொடரில் இது சாத்தியமா….?

இந்திய அணியில் முன்னணி வீரரான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் தனது 75 ஆவது சதத்தை பதிவு செய்துள்ளார். தற்போது மீண்டும் பார்மிற்கு திருமயுள்ள வீராட்கோலி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அசத்தலாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையான முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது. இந்நிலையில் இந்த தொடரில் விராட் கோலி ராகுல் டிராவிட்டின் மிகப்பெரிய சாதனையை தகர்க்கும் வாய்ப்பினை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கிரிக்கெட்ல தோனியும், கோலியும் ஹீரோக்களா?….. மொதல்ல நிறுத்துங்க….. ரசிகர்களை வெளுத்து வாங்கிய கம்பீர்.!!

ஒருவரை மட்டும் ஹீரோவாக கொண்டாடும் கலாச்சாரத்தில் இருந்து வெளியே வாருங்கள் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இது குறித்து நேர்காணல் ஒன்றில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் பேசியதாவது, “இந்திய அணியில் பெரிய பிராண்டை உருவாக்காதீர்கள். பெரிய பிராண்ட் என்றால் அது இந்திய கிரிக்கெட்டாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர தனி நபராக இருக்க கூடாது. ஹீரோக்களாக கொண்டாடும் கலாச்சாரம் வேறொருவர் வரும் போது மறைந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : கேன் வில்லியம்சன் தலைமையில் நியூசிலாந்து அணி அறிவிப்பு….. 7ஆவது முறை களமிறங்கும் கப்தில்..!!

ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடைபெற இருக்கிறது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ளது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகளும் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இது ஜெர்ஸியா…. “இல்ல தர்பூசணி பழமா?”….. டவுட்டா இருக்கு…. கிண்டல் செய்யும் இந்திய ரசிகர்கள்..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சியை சமூக வலைத்தளங்களில் இந்திய ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். வரவிருக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022க்கான இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி அதிகாரப்பூர்வ கிட் ஸ்பான்சரால் நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) அறிமுகப்படுத்தப்பட்டது. செப்டம்பர் 20 முதல் (இன்று) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 ஐ தொடரின் போது இந்திய அணி இந்த ஜெர்சியை முதன்முறையாக அணிந்து விளையாடுகிறது. மேலும் செப்டம்பர் 28 முதல் தொடங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : நியூ தண்டர் ஜெர்சியுடன் களமிறங்கும் பாகிஸ்தான்….!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய ஜெர்சியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிமுகம் செய்துள்ளது.. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடைபெற இருக்கிறது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ளது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகளும் நேரடியாக சூப்பர் 12 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvAUS : இன்று முதல் டி20 போட்டி…. வெற்றியுடன் தொடங்குமா இந்தியா?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டி20 தொடர் இன்று (செப்டம்பர் 20) மாலை மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் ஐஎஸ் பிந்த்ரா ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. ஆஸ்திரேலிய அணி 2020-க்குப் பிறகு முதல்முறையாக இருதரப்பு தொடருக்காக இந்தியாவந்துள்ளது. முதல் போட்டியை வெல்ல இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.. வரவிருக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இரு நாடுகளும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இது என்னது..! ஹோட்டலுக்குள் புகுந்த பாம்பு… அதிர்ச்சியடைந்த கிரிக்கெட் வீரர்… வைரலாகும் பதிவு.!!

முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குள் பாம்பு வந்ததால் அவர் அதிர்ச்சியடைந்தார்.. தற்போது நடைபெற்று வரும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டுக்காக இந்தியாவிற்கு வந்துள்ளார். இந்தியா கேப்பிட்டல் அணிக்காக ஆடி வரும் ஜான்சன் லக்னோவில் ஒரு விடுதியில் தங்கியுள்ளார்.  இந்நிலையில் அவரது ஹோட்டல் அறையில் ஒரு பாம்பு நுழைந்தது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அவர் வயசு தெரியல…. “ஆனா இன்ஸ்விங் எனக்கு சவாலா இருந்துச்சு”…. இந்திய வீராங்கனையை புகழ்ந்த ஹிட்மேன்..!!

ஜூலன் கோஸ்வாமியின் இன்ஸ்விங் எனக்கு சவாலாக இருந்தது என்று இந்திய ஆடவர் அணி கேப்டன் ரோஹித் சர்மா புகழ்ந்து பேசியுள்ளார்… இந்திய கிரிக்கெட்டின் ஆல் டைம் ஜாம்பவான்களில் ஒருவரான ஜூலன் கோஸ்வாமி 250க்கும் மேற்பட்ட சர்வதேச  போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.. தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஒருநாள் தொடருக்கு பின்  ஓய்வை அறிவிக்க இருக்கிறார்.. மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டியில், கோஸ்வாமி மீண்டும் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்..  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

தெரியும்..! அவர் ஃபார்முக்கு வந்துட்டாரு…. எங்களுக்கு சவால்…. ஓப்பனாக பேசிய பாட் கம்மின்ஸ்.!!

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்பப் போகிறார் என்று கூறியுள்ளார்.. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, கடந்த சில ஆண்டுகளாக ஃபார்மில் இல்லை. இந்த சூழலில்  ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2022 ஆசிய கோப்பையில் தனது முதல் டி20 சதத்துடன் மீண்டும் கோலி ஃபார்மிற்கு திரும்பினார். இந்த சதம் உலக கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கும் விராட் எச்சரிக்கை விடுக்கும் விதமாக இருந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இன்னும் 2 தான்…. சாதனை படைப்பாரா ஹிட் மேன் ரோஹித்?…. எதிர்பார்க்கும் ரசிகர்கள்..!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இன்றைய டி20 போட்டியில் ரோஹித் சர்மா ஒரு புதிய சாதனையை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று (செப்டம்பர் 20) இரவு 7:30 மணிக்கு பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள  ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இந்த டி20 போட்டியில் ரோகித் சர்மா 2 சிக்சர் அடித்து விட்டால் அதிக சிக்சர் அடித்தவர் பட்டியல் முதல் இடத்திற்கு சென்று விடுவார்.. தற்போது நியூசிலாந்து அணியின் மார்ட்டின் […]

Categories
மற்றவை விளையாட்டு

“உலக மல்யுத்த போட்டி” இந்தியாவை சேர்ந்த வீரர்-வீராங்கனை சாதனை….. பிரதமர் மோடி பாராட்டு…!!!!

பெல்கிரேட் நகரில் உலக  மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட பஜ்ரங் பூனியா 65 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கமும், வினேஷ் போகத் மகளிருக்கான 53 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர். இதில் பஜ்ரங் பூனியா கடந்த 2013 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் வெண்கல பதக்கமும், கடந்த 2018-ம் ஆண்டு வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார். இதேபோன்று வினேஷ் ஏற்கனவே ஒரு முறை பதக்கம் வென்றிருந்த நிலையில், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: CSK ஏலத்தில் எடுத்த புதிய வீரர்கள்….. டாப் டக்கர்….!!!!

தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள SA 20 லீக் தொடரில் சிஎஸ்கே 4 வீரர்களை தற்போது ஏலத்தில் எடுத்துள்ளது. இந்த தொடருக்கான ஏலம் கேப்டவுனில் நடந்து வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியுள்ள ஜோபர்க் அணி தெ.ஆ., வீரர்கள் ஜென்னமேன் மலன் (2.7 மில்லியன்), ரீசா ஹென்ரிக்ஸ் (4.50 மில்லியன்) மற்றும் இங்கி., வீரர் ஹேரி புரூக் (2.10 மில்லியன்), கேல் வெரேன்னே (175 ஆயிரம் டாலர்) ஆகியோரை ஏலத்தில் எடுத்துள்ளது. ஏலத்தின் நேரலை சோனியில் ஒளிபரப்பாகிறது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

விராட் கோலி or கேஎல் ராகுல்?…. டி20 உலகக் கோப்பையில் யார் ஓப்பனிங்…. கேப்டன் ரோஹித் பதில் இதுதான்..!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கே.எல் ராகுல் தான் தொடக்க ஆட்டக்காரர் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.  பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நாளை (செப்டம்பர் 20 ஆம் தேதி) இரவு 7: 30 மணிக்கு  ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது.. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சிகளை செய்து வருகின்றனர்.இந்நிலையில் கேப்டன் ரோஹித் செய்தியாளர்களிடம் பேசியதாவது, ஆசிய கோப்பை தொடரில்  ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியில் ஓப்பனிங் […]

Categories
கால் பந்து விளையாட்டு

கொஞ்சம் தள்ளி போப்பா…. “மறைக்குது”….. கேப்டனை தள்ளிய ஆளுநர்…. விமர்சிக்கும் நெட்டிசன்கள்..!!

மணிப்பூர் மற்றும் மேற்கு வங்க ஆளுநரான இல. கணேசன் விருது வழங்கும் விழாவின் போது இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரியை ‘தள்ளிய’ வீடியோ வைரலாகி வருகிறது. 20 அணிகள் இடையேயான 131-வது தூரந்த் (டுராண்ட்) கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி போட்டியில் பெங்களூரு எப்.சி மற்றும் மும்பை சிட்டி எப்.சி அணிகள் மோதியது. கொல்கத்தாவின் சால்ட் லேக் ஸ்டேடியத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த  கால்பந்து போட்டியின் இறுதி போட்டியில் மும்பை சிட்டி எஃப்சியை 2-1 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

6, 6, 6, 6, 6, 6, பார் மகனே…. “அப்பா எப்படி அடிக்குறேன்னு”…. கண் சிமிட்டாமல் பார்த்த குழந்தை…. கொண்டாடிய யுவராஜ்…. வைரல் வீடியோ.!!

இங்கிலாந்துக்கு எதிராக சிக்ஸர் அடித்து 15 ஆண்டுகள் ஆன நிலையில், தனது மகனுடன் வீடியோ பார்த்து கொண்டாடினார் யுவராஜ் சிங்.. இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் 15 ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வரலாறு படைத்தார். 2007 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் டி20 உலகக் கோப்பையின் லீக் போட்டியில் யுவராஜ் T20I கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்த முதல் பேட்டர் ஆனார்.. இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

“சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி” இரட்டையர் பிரிவில் கனடா, பிரேசில் ஜோடி சாம்பியன் பட்டம்….!!!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவில் கனடாவை சேர்ந்த கேப்ரியல்லா டாப்ரோஸ்கி மற்றும் பிரேசிலைச் சேர்ந்த லுசா ஸ்டெபானி ஜோடி, ஜார்ஜியாவின் நடிலா ஜலாமிட்ஸ் மற்றும் ரஷ்யாவின் அன்னா லின்கோவா ஜோடியுடன் மோதியது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய கேப்ரியல்லா டாப்ரோஸ்கி-லுசா ஸ்டெபானி ஜோடி 6-1,6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றனர்

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“உமேஷ் யாதவ் ஒரு தரமான பந்துவீச்சாளர்” தன்னுடைய திறமையை பலமுறை நிரூபித்துள்ளார்….. ரோகித் சர்மா பாராட்டு….!!!!

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியினர் கலந்து கொள்கின்றனர். இதில் முதல் டி20 ஓவர் போட்டி வரும் 20-ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே மெகாலியில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக முகமது ஷமி டி20 உலக கோப்பை போட்டியில் இருந்து விலகியுள்ளார். இவருக்கு பதிலாக டி20 போட்டியில் உமேஷ் யாதவ் விளையாட இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: இந்தியாவின் புதிய ஜெர்சி வெளியீடு….. போடு செம மாஸ்….!!!!

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி வெளியாகியுள்ளது. பல ஆண்டுகளாக இந்திய அணி ‘டார்க் ப்ளூ’ நிற ஜெர்சியை அணிந்து வந்த நிலையில், தற்போது புதிதாக வெளியாகியுள்ள ஜெர்சியில் பெரும்பாலும் ‘லைட் ப்ளூ’ நிறமே இடம்பெற்றுள்ளது. வரவிருக்கும் ஆஸ்திரேலியா தொடரில் இருந்து இந்தியா இந்த ஜெர்சியை அணிந்து விளையாடும் என்று கூறப்படுகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஜடேஜாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது” அவர் இல்லாதது அணிக்கு பெரும் பின்னடைவு….. முன்னாள் கேப்டன் கருத்து…..!!!!

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. இவர் காயம் காரணமாக முழங்காலில் தற்போது அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனால் டி20 உலக கோப்பை போட்டியில் ஜடேஜாவால் விளையாட முடியவில்லை. இது குறித்து ஐசிசி ரிவ்யூ நிகழ்ச்சியில் இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே பேசியுள்ளார். அவர் கூறியதாவது, 5-வது இடத்தில் ஜடேஜா மிகச்சிறப்பாக விளையாடக் கூடியவர். ஜடேஜாவும், பாண்டியாவும் சிறந்த ஆல்ரவுண்டர்கள். இவர்களால் இந்திய அணிக்கு வலுவான பேட்டிங் ஆர்டர் இருந்தது. ஜடேஜா காயம் காரணமாக விலகியதால் இடது […]

Categories
விளையாட்டு

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய லிண்டா, மக்டா லினெட்….!!!!!

சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டியானது நுங்கம்பாக்கத்திலுள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் வைத்து நடந்து வருகிறது. இதன் அரை இறுதி ஆட்டங்கள் நேற்றிரவு 7 மணிக்கு நடந்தது. முதல் அரை இறுதியில் அர்ஜெண்டினாவின் நாடியா போடோரோஸ்கா, செக் குடியரசைச் சேர்ந்த லிண்டாவுடன் மோதினார். இவற்றில் முதல் செட்டை இழந்த லிண்டா, அடுத்த இருசுற்றுகளை கைப்பற்றினார். இறுதியில் லிண்டா 5-7, 6-2 6-4 எனும் செட்கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்டார். 2வது அரை இறுதியில் போலந்தின் மக்டாலினெட், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முகமது ஷமிக்கு கொரோனா! ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இவருக்கு பதில் யார்?…. வெளியான தகவல்…!!!

ஆஸ்திரேலியா அணியானது இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. செப்டம்பர் 20ஆம் தேதி மொஹாலியில் முதல்போட்டி நடைபெற இருகிறது. இந்த நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமதுஷமிக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் ஷமி விளையாட மாட்டார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. அத்துடன் ஷமிக்கு பதில் உமேஷ் யாதவ் அணியில் சேர்க்க்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரிலிருந்து முகமதுஷமி விலகியுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

என்ன டீம் இது…. “பாகிஸ்தான் வெளிய போயிரும்”….. எனக்கு பயமா இருக்கு…. விளாசிய முன்னாள் பாக் வீரர்..!!

முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி தேர்வு குறித்து அந்நாட்டின் தேர்வுக் குழு மீது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அடுத்த மாதம் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி கடந்த 15ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் பாபர் அசாம் அணிக்கு தலைமை தாங்குவார் என்றும், அவருக்கு துணை தலைவராக ஷதாப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பண்ட் இல்லை….. இவர்கள் தான் ஆட வேண்டும்…. இந்திய லெவனை அறிவித்த முன்னாள் இந்திய வீரர்..!!

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி விளையாடும் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார்.. ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது.. இதில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கிறது.. நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் என 8 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvAUS: கடைசி நேரத்தில் இப்படியா..! முகமது ஷமிக்கு கொரோனா…. மாற்று வீரர் இவர்தான்….. யார்தெரியுமா?

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி,கோவிட்-19 தொற்று இருப்பது உறுதியானதையடுத்து வரவிருக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு, கோவிட்-19 தொற்று உறுதி  செய்யப்பட்டதையடுத்து, வரவிருக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கிரிக் பஸ் (Cricbuzz) இன் அறிக்கையின்படி, செப்டம்பர் 20, செவ்வாய்கிழமை நடைபெறவிருக்கும் முதல் டி20 க்கு கேப்டன் ரோகித் சர்மா உட்பட அனைத்து வீரர்களும் வந்துள்ள நிலையில், மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஷமி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இவர் இல்லாதது பெரும் இழப்பு…. “ஆனால் அவர் பார்முக்கு வந்தது ப்ளஸ்”…. ஜெயவர்த்தனே கருத்து..!!

இவர் இல்லாதது இந்திய அணிக்கு பேரிழப்பு என்று இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே கருத்து தெரிவித்துள்ளார்.. ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் தான் அறிவித்தது. இந்த அணியில் ஆசிய கோப்பை தொடரில் விளையாடிய வீரர்களே பெரும்பாலானோர் இடம்பெற்றுள்ளனர்.. பெரும் மாற்றங்கள் இருக்கும்  எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் சில வீரர்கள் நீக்கப்பட்டதற்கு அதிருப்தியையும் தெரிவித்து வருகின்றனர். ஆசியக்கோப்பை தொடரில் விளையாடாமல் இருந்த ஜஸ்பிரித் பும்ரா மற்றும் […]

Categories
மற்றவை விளையாட்டு

“தேசிய ஜூனியர் தடகளப் போட்டி” தமிழகத்தில் 53 வீரர்-வீராங்கனைகள் தேர்வு…. முழு விபரம் இதோ….!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபாலில் 17-வது தேசிய இளையோர் தடகளப் போட்டி இன்று முதல் 19-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் தமிழக வீரர்-வீராங்கனைகளின் பட்டியலை தமிழக தடகள சங்க செயலாளர் லதா வெளியிட்டுள்ளார். அதன்படி 23 ஆண்கள் மற்றும் 30 பெண்கள் என 53 பேர் பங்கேற்கின்றனர். இந்த அணியின் விவரம் பின்வருமாறு, டி. பரணிதரன், எஸ். பரணிதரன், கீர்த்தி வாசன், கனிஷ்கர், கவின் ராஜா, முகேஷ், விஷ்ணுவரதன், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“19 வயதுகுட்பட்ட மகளிருக்கான டி20 உலக கோப்பை போட்டி” ஐசிசி அட்டவணை வெளியீடு….!!!

ஐசிசி 19 வயதுகுட்பட்ட மகளிருக்கான முதல் டி20 உலக கோப்பை போட்டிக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த வருடம் ஜனவரி மாதம் 14-ஆம் தேதி முதல் ஜனவரி 29-ஆம் தேதி வரை டி20 போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா உட்பட 16 அணிகள் பங்கேற்க 41 போட்டிகள் நடைபெற இருக்கிறது. அதோடு இந்தோனேஷியா மற்றும் ருவாண்டா அணிகளும் முதல் முறையாக டி20 போட்டியில் பங்கேற்கிறது. இந்நிலையில் டி20 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஒரு சிறந்த வீரரின் மருத்துவ செலவுக்கு கூட உதவவில்லை” கிரிக்கெட் வாரியத்தின் மீது முன்னாள் கேப்டன் பரபரப்பு குற்றச்சாட்டு…!!!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முண்ணனி வேகப்பந்து வீச்சாளர் ஷகீன்சா அப்ரிடி. இவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஷகீன்சா சிகிச்சைக்காக லண்டன் சென்றதால் ஆசிய கோப்பை போட்டியில் விளையாடவில்லை. ஆனால் தற்போது ஷகீன்சாவின் காயம் குணமானதால் டி20 உலக கோப்பை விளையாட்டில் விளையாடுவதற்கு தேர்வு செய்யப் பட்டுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக சாடியுள்ளார். அவர் கூறியதாவது, ஷகீன்சா தன்னுடைய சொந்த பணத்தில் விமான டிக்கெட் புக் […]

Categories
விளையாட்டு

“ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி”…. காலிறுதிக்கு தகுதியான வர்வரா கிராச்சேவா….!!!!

சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டியானது நுங்கம்பாக்கத்திலுள்ள எஸ்.டிஏ.டி. ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் கனடாவின் கரோல் ஜாவோ-ரஷியாவின் வர்வரா கிராச்சேவா மோதினர். இவற்றில் கிராச்சேவா 6-1, 7-5 எனும் நேர்செட் கணக்கில் வெற்றியடைந்து காலிறுதிக்கு தகுதிபெற்றார். மற்ற ஆட்டங்களில் போடோரோஸ்கா (அர்ஜென்டினா), மெக்டா லினெட் (போலந்து) கேட்டி ஸ்வான் (இங்கிலாந்து) போன்றோர் காலிறுதிக்கு முன்னேறினர். இன்று ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்களானது நடைபெறுகிறது. மாலை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 மகளிர் கிரிக்கெட்: இங்கிலாந்து அதிரடி…. தோல்வியை தழுவிய இந்திய அணி….!!!!

இந்தியபெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் 3வது மற்றும் கடைசிபோட்டி நேற்று பிரிஸ்டலில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியானது பந்துவீச்சை தேர்வுசெய்தது. அந்த அணியின் அதிரடி பந்துவீச்சில் இந்தியா விக்கெட்டுகளை இழந்து திணறியது. தொடக்கவரிசையில் முதல் 5 வீராங்கனைகள் ஒற்றை இலக்கில் அவுட்டாகினர். இதையடுத்து தீப்திசர்மா, ரிச்சா கோஷ் தாக்கு பிடித்து விளையாடினர். இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பக்கர் ஜமான் எங்கே?….. கேப்டன் பாபர் மட்டும் நல்லாவா ஆடுனாரு…. தேர்வு குழுவை சாடும் ரசிகர்கள்.!!

டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் பக்கர் ஜமான் இடம்பெறாததற்கு ரசிகர்கள் தேர்வுக்குழுவை சாடி வருகின்றனர். டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ளது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகளும் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை : நாங்களும் ரெடி…. “களமிறங்கும் ஷாஹீன் அப்ரிடி”…… அணியை அறிவித்த பாகிஸ்தான்….!!

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடைபெற இருக்கிறது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ளது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகளும் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

BREAKING : பிரபல NO.1 வீரர் திடீர் ஓய்வு….. ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி….!!!!

நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற பெருமைக்கு உரியவர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர். ஓய்வு பற்றி பெடரர் கூறும்போது, “தற்போது எனக்கு 41 வயதாகிறது. 24 ஆண்டுகளில் 1,500 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளேன். நான் கனவு கண்டதை விட டென்னிஸ் என்னை பெருமையாக நடத்தியது. தற்போது ஓய்வுக்கான நேரத்தை நான் அடையாளம் காண வேண்டியுள்ளது” என்றார்.

Categories
டென்னிஸ் விளையாட்டு

BREAKING : ஓய்வை அறிவித்தார் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர்..!!

2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார். 20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான இவர், கடந்த 3 ஆண்டுகளாக முழங்கால் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததால், இப்போது விலகுவதற்கான நேரம் இது என்று முடிவு செய்துள்ளார் ஃபெடரர்.. அடுத்த வாரம் லண்டனில் நடக்கும் லாவர் கோப்பையில் விளையாடுவார் ரோஜர் பெடரர். ஆஸ்திரேலியா, பிரெஞ்சு, விம்பிள்டன், அமெரிக்க ஓபனில் விளையாடியுள்ள பெடரர் இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை […]

Categories
விளையாட்டு

“ஓபன் மகளிர் டென்னிசின் இரட்டையர் பிரிவு”… காலிறுதிக்கு முன்னேறிய இந்திய ஜோடி…. வெளியான தகவல்….!!!!

சென்னை ஓபன் மகளிர் டென்னிசில் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற முதல்சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய ஜோடியான கர்மன் தண்டி-ருதுஜா போசலே 3-6, 7-6 (7-5), 10-4 எனும் செட் கணக்கில் ஜெசி ரோம்பிஸ் (இந்தோனேசியா) பிரார்த்தனா தோம்பரே (இந்தியா) ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிபெற்றது. இன்று நடைபெறும் காலிறுதியில் கர்மன் தண்டி-ருதுஜா போசலே ஜோடி லூயிசா ஸ்டெபானி (பிரேசில்) கேப்ரியேபா டப்ரோவ்ஸ்கி (கனடா) ஜோடியுடன் பலப் பரீட்சை நடத்துகிறது. மற்றொரு இந்திய ஜோடியான ரியாபாட்டியா, ஷர்மதா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை : முகமது நபி தலைமையில் ஆப்கான் அணி அறிவிப்பு..!!

டி20 உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடைபெற இருக்கிறது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ளது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகளும் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கின்றது.. இந்த தொடருக்கான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: விற்றுத் தீர்ந்த இந்தியா- பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள்….!!!!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இவற்றில் மொத்தம் 16 நாடுகள் கலந்துகொள்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இந்தியா தன் முதல்போட்டியில் வருகிற அக்டோபர் 23ம் தேதி பாகிஸ்தான் அணியுடன் மோத இருகிறது. இப்போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் வைத்து நடைபெறவுள்ளது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

T20 World Cup 2022 : இந்தியா – பாகிஸ்தான் போட்டி….. “சில நிமிடத்தில் காலியான டிக்கெட்”…. மொத்தம் 5,00,000….. ஐசிசி மகிழ்ச்சி..!!

இந்தியா -பாகிஸ்தானுக்கு இடையிலான ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிக்கான டிக்கெட் விற்றுத் தீர்ந்துவிட்டது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடைபெற இருக்கிறது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ளது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகளும் நேரடியாக சூப்பர் 12 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : ஆண்ட்ரே ரசலுக்கு இடமில்லை…. அப்போ யாரு தான் இருக்கா….. 15 பேர் கொண்ட அணியை அறிவித்த விண்டீஸ்..!!

ஆஸ்திரேலியாவில் நடைபெறும்  2022 டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  ஐசிசி t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான வீரர்களை ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து உட்பட பல்வேறு நாடுகளும் ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்த நிலையில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பிரபல கிரிக்கெட் நடுவர் மாரடைப்பால் மரணம்…… பெரும் அதிர்ச்சி…..!!!

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நடுவர் ஆசாத் ரவூப். இன்று மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 66 வயது கிரிக்கெட் நடுவரான அசாத் ரவூப் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்தார். இந்த செய்தியை அவரது சகோதரர் உறுதி செய்துள்ளார். மேலும் லாகூரில் உள்ள லாண்ட் பஜாரில் தனது துணி கடையை மூடிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது திடீரென்று அவருக்கு நெஞ்சில் ஒருவித வலி ஏற்பட்டதை உணர்ந்ததாக தெரிவித்துள்ளார். 13 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ENG vs IND : டி20 போட்டிகளில் ஸ்மிருதி -ஷபாலி வர்மா ஜோடி புதிய சாதனை…!!

இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஜோடி ஒரு புதிய சாதனையை  படைத்துள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வென்ற நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி டெர்பியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பெண்கள் அணியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்த முறை கப் அடிச்சே ஆகனும்….. “மைக்கேல் ஹசியை தூக்கிய இங்கிலாந்து”….. ஏன் தெரியுமா?

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான மைக்கேல் ஹசியை பயிற்சி ஆலோசகராக பணியமர்த்துவதற்கு அந்த இங்கிலாந்து அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த அக்டோபர் மாதம் 16ஆம் தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது.. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலக கோப்பை தொடரை வென்று நடப்பு சாம்பியன் ஆக வெற்றி நடைபோடும் ஆஸ்திரேலியா அணி இந்த முறை சொந்த மண்ணில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20Ranking : ஒரே தொடரில் மெகா முன்னேற்றம்…. அசத்திய கோலி….. எந்த இடம் தெரியுமா?

சர்வதேச டி20 கிரிக்கெட் தரவரிசைப்பட்டியலில் விராட் கோலி முன்னேற்றம் அடைந்துள்ளார்.. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வபோது 3 வகையான கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் தற்போது ஆசிய கோப்பை தொடர் நடந்து முடிந்த நிலையில், டி20 கிரிக்கெட்டுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.. இதில் இந்திய அணி வீரர்கள் சிலர் ஆசியக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டதால் முன்னேற்றம் கண்டுள்ளனர்.. அதில் முக்கியமாக விராட் கோலி முன்னேற்றம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ரோஹித்துடன் இவர் ஓப்பனிங் ஆட வேண்டும்…. இதுதான் சரியா இருக்கும்…. முன்னாள் இந்திய வீரர் கருத்து..!!

டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தொடக்க வீரர்களாக களம் இறங்க வேண்டும் என்று பார்த்தீவ் பட்டேல் கருத்து தெரிவித்துள்ளார்.. ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியுடன் தோல்வியடைந்து வெளியேறியது.. இந்நிலையில் இந்திய அணி அடுத்ததாக டி20 உலக கோப்பைக்கு தயாராகி வருகிறது. இந்த டி20 தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிசிசிஐ விதிமுறைகளை மாற்ற அனுமதி…. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் பதவியில் தொடரும் ஜெய்ஷா, கங்குலி…..!!!!

டெல்லி உச்சநீதிமன்றத்தில் மாநில கிரிக்கெட் சங்கங்கள், பிசிசிஐ போன்றவற்றில் நிர்வாகிகளின் பதவி காலத்தை நீட்டிக்கும் வகையில் சட்ட விதிகளில் மாற்றம் செய்ய அனுமதி தர வேண்டும் என்று கூறி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதாவது பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் ஒருவர் தொடர்ந்து 6 ஆண்டுகள் பதவி வகித்தால் அடுத்து 3 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு தான் பதவியில் அமர வேண்டும் என்ற விதி இருக்கிறது. இந்த விதியை மாற்றுவதற்கு அனுமதித்தரமாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20 World Cup: எதுக்காக அவங்கள சேத்தீங்க…..? 2 பேரையும் இப்பவே டீம்ல இருந்து தூக்கிடுங்க….. அசாருதீன் திடீர் வேண்டுகோள்….!!!!

டி20 உலக கோப்பை போட்டி அக்டோபர் 16 முதல் நவம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் வங்கதேசம், தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா உட்பட 16 அணிகள் பங்கேற்க்கிறது. இந்நிலையில் டி20 உலக கோப்பை போட்டியில் பங்கேற்க இருக்கும் இந்திய அணி வீரர்களின் பட்டியல் குறித்த விவரங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி ஆசிய கோப்பையில் பேட்டிங்கில் பங்குபெற்ற வீரர்களே தற்போது டி20 உலக கோப்பை போட்டியிலும் இடம் […]

Categories

Tech |