ஷிகர் தாவனுக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக நியூசிலாந்து தொடரில் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கின்போது, ஆரோன் ஃபிஞ்ச் அடித்த பந்தை ஷிகர் தவான் பிடிக்க முயன்றபோது இடது தோளில் காயம் ஏற்பட்டது. இதனால் ஃபீல்டிங்கில் இருந்து பாதியிலேயே தவான் வெளியேறினார். இதையடுத்து இந்திய பேட்டிங்கின்போதும் தவானுக்கு பதிலாக ராகுல் தொடக்க வீரராகக் களமிறங்கினார். […]
