இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட் ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெறாதது ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஃபேப் 4 என அழைக்கப்படும் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோர் ஒருவருக்கொருவர் பேட்டிங்கில் போட்டியிட்டு ரன்களை சேர்ப்பர். இதனால் இவர்களிடையேயான ஒப்பீடு எப்போதும் சமூக வலைதளங்களில் நடந்துகொண்டே இருக்கும். இந்த நால்வரும் அந்தந்த அணிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட போது, இந்த வீரர்களின் மீதான எதிர்பார்ப்பு ஏற்பட்டது. […]
