அடுத்த ஐபிஎல் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் களமிறங்கவுள்ள ஆஸ்திரேலிய அதிரடி வீரர் கிறிஸ் லின் பதிவிட்ட ட்வீட்டிற்கு மும்பை இந்தியன்ஸ் வீரர் பும்ரா கிண்டலாகப் பதிலளித்துள்ளார். ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 13ஆவது சீசனுக்கான ஏலம் நேற்று கொல்கத்தாவில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் முதல் வீரராக ஏலத்தில் விடப்பட்ட கிறிஸ் லின்னை, அடிப்படை தொகையான ரூ.2 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது. இவர் கடந்த சீசன்களில் கொல்கத்தா அணியில் விளையாடியவர் ஆவார். […]
