ஊரடங்கு நீட்டிப்பு உத்தரவை தொடர்ந்து IPL போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கை மே 3 வரை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதிலும் 21 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் (ஏப்ரல் 14), முடிவடையும் நிலையில், மேலும் 19 நாட்களுக்கு நீடித்துள்ளார். இன்று காலை 10 மணிக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர் இந்த 19 நாட்கள் நீட்டிப்பு அறிவிப்பை […]
