மீனம் ராசி அன்பர்களே..!! இன்று இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும் நாளாக இருக்கும். எதிர்பார்ப்புகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பக்குவமாக பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உறவினர்களின் வருகை உண்டாகும். இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். இன்று குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் நேரிடும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவது வெற்றியை கொடுக்கும். சக மாணவரிடம் பொறுமையாக நடந்துகொள்வது அவசியம். […]
