மிதுனம் ராசி அன்பர்களே..!!இன்று நன்மைகள் நடைபெறும் நாள் ஆக இருக்கும். நாடாளும் நபர்களின் நட்பு கிட்டும். பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் விலகி முன்னேற்றம் ஏற்படும். இன்று எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும், லாபம் உயரும், பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு ஏற்படும். வேலைப்பளு குறையும். […]
