மிதுனம் ராசி அன்பர்களே..! அரசு உதவியால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். மனதில் உள்ளதை வெளிப்படுத்துங்கள். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள். மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். யோகா அல்லது தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். மாலை நேரத்தில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். குடும்பத்தாரிடம் முன்கோபத்தை வெளிப்படுத்த வேண்டாம். […]