கஷ்டத்தை தன்னுள்ளே வைத்துக்கொண்டு வெளியே சிரித்து கொண்டிருக்கும் கும்பராசி அன்பர்களே..!! இன்று உங்களிடம் பலரும் நல்ல எண்ணம் கொள்வார்கள். உற்சாக மனதுடன் பணியில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபார வளர்ச்சி இலக்கு திட்டமிட்டபடி நடைபெறும். கூடுதல் பணவரவும் கிடைக்கும்.. உறவினர் வீட்டில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இன்று கணவன் மனைவிக்கிடையே வெளியே சொல்ல முடியாத மனக்குறைகள் வரக்கூடும். பிள்ளைகள் கல்வி மற்றும் அவர்கள் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். விருப்பம் இல்லாமல் பயணம் செல்ல நேரிடும். […]
