மீனம் ராசி அன்பர்களே, இன்று வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாளாகவே இருக்கும். ஏட்டிக்குப், போட்டியாக பேசியவர்கள் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். இன்று இணக்கமான சூழ்நிலையை காணப்படும். உடன்பிறப்புகள் வகையில் ஒத்துழைப்பு ஏற்படும். குடும்பத்தில் இருந்த குழப்பமான நிலை மாறும். இன்று உத்தியோகஸ்தர்கள் அலுவலக பொறுப்புகளை கவனமாக செய்வது நல்லது. எந்திரங்களில் பணிபுரிபவர்கள், ஆயுதங்களை கையாளுபவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இன்று கூடுமானவரை நிதானத்தை மேற்கொள்ளுங்கள். பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். கொடுக்கல், வாங்கல்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள். […]
