கும்பம் ராசி அன்பர்களே, இன்று காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாளாகவே இருக்கும். எந்த காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். பிறருக்கு பொறுப்புச் சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். இன்று வாழ்வில் முன்னேற்றம் காண்பதில் ஆர்வம் உண்டாகும். மனதில் உற்சாகம் ஏற்படும். பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடியும். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதை மட்டும் தவிர்ப்பது நல்லது. இன்று கூடுமானவரை பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். […]
