மீன ராசி அன்பர்களே…! இன்று பணவரவு திருப்தி தரும் நாளாக இருக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு உதவியவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வீட்டை விரிவுபடுத்த கூடிய எண்ணங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஆர்வம் செல்லும். ஆடம்பர பொருட்களின் சேர்க்கை உண்டாகும். வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் சற்று தாமதமாகவே நடக்கும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நன்மையை கொடுக்கும். திருமண முயற்சிகள் ஓரளவு கைகூடும். பணம் வரவு தடை நீங்கி கையில் வந்து சேரும். குழந்தைகள் பற்றிய கவலை இருக்கும். […]
