துலாம் ராசி அன்பர்களே..! இன்று வாய்ப்புகள் அதிகமாக கிட்டும். தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த தகவல் வந்துச்சேரும். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சகோதர ஒற்றுமை வலுப்படும். குடும்பத்தார் அன்பாக நடந்துக் கொள்வார்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். முக்கிய பணிகளை முடித்து வெற்றிப் பெறுவீர்கள். பாராட்டுகள் கிடைக்கும் நாளாக இருக்கும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்ல வேண்டும். யாரையும் நம்ப வேண்டாம். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். […]
