ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று தெய்வ பக்தியால் மனதில் நிம்மதி கூடும். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். புனிதப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த இடையூறுகள் விலகிச் செல்லும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழக்கூடும். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனையும் அதிகரிக்கும். பெரியவர்கள் மூலம் காரிய அனுகூலங்களும் ஏற்படும். திறமை வெளிப்படும். காரியத்தில் நிதானமான போக்கு காணப்படும். மனம் தைரியமாக இருக்கும். சுயசிந்தனை அதிகரிக்கும். […]
