கடகம் ராசி அன்பர்களே..! இன்று முடிவெடுக்க முடியாமல் திணறும் நாளாக இருக்கும். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். பணவரவில் தாமதம் உண்டாகும். ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். வீண் அலைச்சலை கட்டுப்படுத்த வேண்டும். ஜாமீன் கையெழுத்து எதுவும் போட வேண்டாம். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். இறை வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்குங்கள். மனதை ஒருநிலைப் படுத்துங்கள். தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள். […]
