சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று தேவையில்லாத விஷயங்களில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டியிருக்கும். திடீர் கோபங்கள் உண்டாகக் கூடும். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாலித்தனத்தால் எதையும் நீங்கள் சமாளிப்பீர்கள். விஷயங்களை தள்ளிப்போடாமல் உடனடியாக செய்ய வேண்டும். நிதானம் கண்டிப்பாக தேவை. தெளிவான சிந்தனையில் இருக்கும் பொழுது முடிவுகளை எடுக்க வேண்டும். எந்தவொரு காரியத்திலும் அலட்சியம் காட்ட வேண்டாம். ஆலோசித்து முடிவுகளை எடுக்க வேண்டும். முக்கிய தேவைக்காக கடன்கள் வாங்க வேண்டியதிருக்கும். […]