கடகம் ராசி அன்பர்களே..! இன்று பெரியோரின் ஆலோசனை உங்களுக்கு நல்வழியை கொடுக்கும். வெற்றிகள் வந்து சேரும். மனதில் மகிழ்ச்சி உருவாகும். குழந்தைகளின் மீது அளவற்ற பாசம் காட்டுவீர்கள். மனைவியின் உதவியால் தன்னம்பிக்கை கூடும். இன்று பிரச்சனைகளில் தலையிடுவது மட்டும் தவிர்க்கவும். யாருக்கும் பஞ்சாயத்துகள் ஏதும் செய்ய வேண்டாம். பணி நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருந்தால் கொஞ்சம் தள்ளிப் போடுங்கள், ரொம்ப நல்லபடியாகவே இருக்கும். உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்து செல்ல நேரிடும் பார்த்துக்கொள்ளுங்கள். […]