மீன ராசி அன்பர்களே…! இன்று போட்டிகளை சமாளித்து வெற்றி காணும் நாளாக இருக்கும். திடீர் செலவுகள் இருந்தாலும் அதை ஈடுசெய்ய புதிய வரவுகள் வந்து சேரும். தந்தை வழியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்து சேரும். புத்துணர்வுடன் இன்று காணப்படுவீர்கள். பண வரவு கூடுதலாக கிடைக்கும். சேமிப்பு உயரும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். நண்பர்களுக்கு இடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கி நேசத்தோடு வாழ்வீர்கள். தடைப்பட்டுவந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். […]