குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்துள்ளார். மேட்டூர் அணையில் இருந்து 8 கண் மதகு வழியாக முதற்கட்டமாக 2,000 கன அடி தண்ணீர் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப படிப்படியாக வினாடிக்கு 10,000 கன அடி வரை தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி, கருப்பண்ணன், செங்கோட்டியன், கே.பி.அன்பழகன், சரோஜா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101.73 அடியாக உள்ளது, நீர் இருப்பு 64 டிஎம்சி, […]
