விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் 18 மாத ஆண் குழந்தை கொரோனாவுக்கு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு வருகின்றது. தொடர்ந்து மூன்றாவது முறையாக மூவாயிரத்து 500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 335 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் 1,025 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ள நிலையில் 44,094 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டதில் […]
