ஆகஸ்ட் 12 முதல் பி.இ ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுமென்று அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் கீழ் இயங்க கூடிய பொறியியல் கல்லூரிகள் கல்வியாண்டுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடப்பட்டிருக்கிறது. இது கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆகஸ்ட் 12ம் தேதி முதல் அவர்களுக்கான (இந்த பருவத்திற்கான) வகுப்புகள் தொடங்கும் என கூறப்பட்டிருக்கிறது. தற்போதைக்கு கல்வி நிறுவனங்களை திறப்பதற்கான சூழல் இல்லாத காரணத்தினால் அந்த வகுப்புகள் அனைத்துமே இணைய வழியில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. […]
