Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மறு அறிவிப்பு வரும் வரை – உத்தரவு …!!

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் இந்த ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் மாநிலங்கள் அதற்கு தகுந்தார்போல் தளர்வுகளை அறிவித்துக் கொள்ளலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் நடைமுறை நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டாலும், மாநில அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது ரயில்வே துறை சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மறு அறிவிப்பு வரும் வரை பயணிகள் ரயில் மற்றும் […]

Categories
இந்திய சினிமா சற்றுமுன் சினிமா

தளபதிக்கே சவாலா…. ஒரே நாளில் வென்ற விஜய்…. உற்சாகத்தில் ரசிகர்கள் …!!

தெலுங்கு திரையுலகின் நடிகரான மகேஷ் பாபு நடிகர் விஜய்க்கு விடுத்த சவாலை அவர் ஏற்றுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களாக கொரோனா இந்திய நாட்டையே முடக்கி போட்டுள்ளது. ஒட்டுமொத்த பொருளாதாரமும் ஸ்தம்பித்துப் போயுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு, பொழுதுபோக்கு நிறுத்தப்பட்டு அனைத்து பிரபலங்களும் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றன. வீட்டில் இருந்து  கடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் ட்விட்டர் மூலமாக பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். இதனிடையே தெலங்கானா எம்.பி சந்தோஷ் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

பிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் …!!

முன்னாள் குடியரசுத் தலைவரும், மூத்த அரசியல்வாதியான பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்நேற்று மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக பிரணாப் முகர்ஜி உடல் நிலை கவலைக்கிடமாகி உள்ளது. பிரணாப் முகர்ஜி உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை நடைபெறுகின்றது என்றும் டெல்லி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்திய மக்களுக்கு ரஷ்ய கொரோனா தடுப்பூசி – அடுத்த அதிரடி

ரஷ்யாவில் இருந்து கொரோனா தடுப்பு மருந்தை வாங்குவதற்கு இந்தியா ஆலோசனை செய்து வருகின்றது. ரஷ்யா இன்று தான் உலகத்திலேயே முதன் முதலாக கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினே இதை நேரடியாக அறிவித்து இருக்கிறார். அவருடைய மகளுக்கு கூட ஊசி செலுத்தப்பட்டு முதல் தடுப்பூசி போடும் ஒருவராக  தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்ற விவரத்தையும் தெரிவித்திருக்கிறார். இத்தகைய சூழ்நிலையில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான  முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ரஷ்யாவில் இருந்து தடுப்பு மருந்து : மத்திய அரசு ஆலோசனை …!!

ரஷ்யாவில் இருந்து கொரோனா தடுப்பு மருந்தை வாங்குவதற்கு இந்தியா ஆலோசனை செய்து வருகின்றது. ரஷ்யா இன்று தான் உலகத்திலேயே முதன் முதலாக கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினே இதை நேரடியாக அறிவித்து இருக்கிறார். அவருடைய மகளுக்கு கூட ஊசி செலுத்தப்பட்டு முதல் தடுப்பூசி போடும் ஒருவராக  தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்ற விவரத்தையும் தெரிவித்திருக்கிறார். இத்தகைய சூழ்நிலையில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான  முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 2021ல் தான் பள்ளிகள் திறப்பு …!!

மனிதவள மேம்பாட்டிற்கான நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கல்வி ரீதியாக தற்போது நிலவ கூடிய சூழல்கள், கல்லூரிகள் திறப்பு தொடர்பான ஆலோசனைகள் குறித்து பேசப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் கலந்துகொண்ட மத்திய மனிதவள மேம்பாட்டு உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே கல்லூரி இறுதியாண்டு தேர்வு திட்டமிட்டபடி இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், நாடாளுமன்ற நிலைக்குழுவின் கூறியதாக தகவல்கள் […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியை போல ஆங்கிலத்தையும் கற்க வலியுறுத்துங்கள் – ப.சிதம்பரம்

விமான நிலையத்தில் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் பேசும்போது நீங்கள் இந்தியர் தான் என ஒரு CISF அதிகாரி கேள்வி கேட்டார் என்று  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட திமுக எம்.பி கனிமொழி, இந்தி மொழித் தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை உருவானது எப்போது எனவும் கேள்வி எழுப்பி இருந்தார். இது பெரிய அளவில் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டது, சம்மந்தபட்ட அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லப்பட்டது. இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவிக்கையில், மத்திய அரசு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தந்தை – மகன் லாக் அப் டெத் : எஸ்.எஸ்.ஐ. பால்துரை மரணம் ….!!

சாத்தான்குளம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால்துரை கரோனா சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை-மகன் இருவர் காவல் நிலையத்தில் அடித்து துன்புறுத்தப்பட்டு உயிரிழந்த இரட்டை கொலை வழக்கில், அதே காவல்நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை உள்பட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே கடந்த 24ஆம் தேதி கரோனா பாதிக்கப்பட்டு சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நீங்கள் இல்லாமல் நான் இல்லை – நடிகர் ரஜினி ட்விட்

நடிகர் ரஜினிகாந்த தனது ட்விட்டர் பக்கத்தில், என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி என பதிவிட்டுள்ளார். #நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. 🙏🏻#நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை 🤘🏻 — Rajinikanth […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 27 மாவட்டம் – அதிர வைத்த ரிப்போர்ட் …!!

நேற்று மட்டும் தமிழகத்தில் 10 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களிலும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 5,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,96,901 ஆக அதிகரித்தது. 6,020 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,38,638 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, 53,336 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் 989 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 1,09,117  பேர் பாதிக்கப்பட்டு, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஹாட்ரிக் போட்ட சென்னை…. மீண்டெழும் தலைநகர்…. குஷியான தமிழக அரசு …..!!

சென்னையில் இன்று 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்றும் புதிய உச்சம்… மிரட்டும் மரணம்…. 5000ஐ நெருங்கும் கொரோனா பலி …!!

தமிழகத்தில் இன்று 119 கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

101 ராணுவ தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை …. மத்திய அரசு அதிரடி முடிவு …!!

101 ராணுவ தளவாடங்கள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய பாதுகாப்புத் துறையில் உபயோகப்படுத்தப்படும் பொரும்பாலான உயர் தொழில்நுட்பம் உள்ள பொருட்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல் போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்களிடம் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில்தான் புதிதாக 101  தளவாடங்கள் கொண்ட ஒரு பட்டியலை ராஜ்நாத் சிங் வெளியிட்டு அந்த பட்டியலில் உள்ள பொருட்கள் அனைத்தும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து – 4 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கரோனா சிகிச்சை மையத்தில் இன்று அதிகாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவந்த கரோனா மையத்தில் இன்று (ஆக.09) அதிகாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் சிகிச்சை மையம் முழுவதும் அடர்த்தியான புகை பரவியது. இதனால் கரோனா நோயாளிகள் பீதியடைந்தனர். இருப்பினும், அப்பகுதிக்கு விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று பாதிப்பை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை குறைவு..!!

தமிழகத்தில் இன்று 5,043 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

2ஆவது நாளாக கெத்து காட்டும் சென்னை… நிம்மதி பெருமூச்சு விட்ட மக்கள் …!!

சென்னையில் இன்று 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 5,883 பேருக்கு கொரோனா.!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,883 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்றும் எகிறி சென்ற இறப்பு…. தமிழகத்தை திணறடிக்கும் கொரோனா …!!

தமிழகத்தில் இன்று 118 கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த […]

Categories
சற்றுமுன் சினிமா தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதி …!!

கொரோனா பேரிடர் காலத்தில் ஒட்டுமொத்த இந்தியாவும், நோய்த் தொற்றுக்கு எதிராக ஒரே வரிசையில் நின்று வலுவாக போராடி வருகிறது. தன்னார்வலர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களால் இயன்ற உதவிகளை நிவாரணமாக வழங்கி வருகின்றார்கள். இந்த நிலையில்தான் தற்போது நடிகை ஜோதிகா கொரோனா தடுப்பு பணிக்கான நிவாரணம் வழங்கியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு நடிகை ஜோதிகா ஒரு நிகழ்ச்சியில் பேசிய தாக ஒரு வீடியோ உலா வந்தது. அதில் தஞ்சை பெரிய கோவிலுக்கு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

துரைமுருகனுக்கு அதிமுக அழைப்பு – தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு

திமுகவின் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் கு.க செல்வம் மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்ததாக சொல்லப் பட்ட, நிலையில் பாஜக தலைவர்களை சந்தித்தார். இதைத்தொடர்ந்து அவர் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த விவகாரம் முடிவதற்குள் திமுகவில்  பொதுச்செயலாளர் பதவி கிடைக்கவில்லை என்று பொருளாளர் துரைமுருகன் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதைத்தொடர்ந்து மறுப்பு தெரிவித்து துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் துரைமுருகனை அதிமுகவில் இணைய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: மும்பை விமான விபத்து தவிர்ப்பு ….!!

ராஞ்சியில் இருந்து மும்பை செல்ல இருந்த ஏர் ஏசியா விமானம் விபத்துக்குள்ளானது தவிர்க்கப்பட்டது. பறவை மோதியதைத்தொடர்ந்து விமானி விமானத்தை நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர். முன்னதாக நேற்று கேரள மாநிலம் கோழிக்கோடுவில் விமானம் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து இரண்டாக நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் அடங்குவதற்குள் தற்போது மும்பையிலும்  நடைபெற இருந்த விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

விமான விபத்து : உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் …!!

கேரளா விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் விபத்து நடந்த இடத்தை மத்திய வான்வழிபோக்குவரத்து அமைச்சர்  ஹர்திப்சிங் புரி பார்வையிட்டார். அதற்குப் பிறகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் என்பது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 12 வயது குறைந்தவர்களாக இருந்தால் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: மூணாறு நிலச்சரிவு : உயிரிழப்பு 25ஆக உயர்வு …!!

கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளா மாநிலத்தில் உள்ள மூணாறு பகுதியில் பெய்த கனமழை காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இது மிகப் பெரிய அதிர்ச்சிகர சம்பவமாக பார்க்கப்படுகின்றது.  நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் 32 குடியிருப்புகள் இருந்தன. மலையடிவாரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தால் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பாறைகள் உருண்டு வந்து வீடுகளை எல்லாம் முழுவதுமாக மூழ்க செய்தன. தற்போது தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு பணிகளை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி …. அரசு ஊழியர்களுக்கு செக்….!!

லஞ்சம் பெற்று இ-பாஸ் வழங்கும் அதிகாரிகள் மீது இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய தனியார் நூற்பாலையில் சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்டுள்ள திருவண்ணாமலையைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அதே பகுதியை சேர்ந்த சிவ பாபு என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அரசு ஊழியர்கள் ?.. ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் …. ஐகோர்ட் அதிரடி கருத்து …!!

திருப்பூரில் சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்டுள்ள மாணவிகளை மீட்கக் கோரி வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில், ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல செயல்படும் ஊழல் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம் என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தார்கள். இ-பாஸ் வழங்க லஞ்சம் பெறும் அதிகாரிகள் மீது இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுங்கள் என கொரோனா காலத்திலும் லஞ்சம் வாங்கும் ஊழியர்கள் பற்றி நீதிபதிகள் கருத்து தெரிவித்து, […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

இ-பாஸ்…. இதைத்தானே நாங்க எதிர்பார்த்தோம்… முக்கிய அறிவிப்பு ….!!

தமிழகத்தில் பரவி வந்த கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.  குறிப்பாக தலைநகர் சென்னை கொரோனாவின் கோர பிடியில் இருந்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவதற்கு அங்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளே காரணம்.  இதனால் தான் தலைநகர் மீண்டு கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு வருகிறது. தமிழகம் முழுவதும் பிற மாவட்டங்களுக்குச் செல்ல இ-பாஸ் கட்டாயமாக்கப் பட்டு இருந்தது. தொடர்ந்து ஐந்து மாதங்களாக இ-பாஸ் நடைமுறையில் இருந்து வருவதால் அதிலிருந்து விலக்கு வேண்டும் என்ற […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மோடி பிரதமராக… நாங்க வீடுவீடா போனோம்…. நீங்க எங்க போனீங்க…. முதல்வர் அதிரடி கேள்வி ..!!

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர், SV சேகரை பெரிய அரசியல் கட்சித் தலைவராக நாங்கள் எண்ணவில்லை. யார் வேண்டுமானாலும் பேசுவாங்க, அதற்கு எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டு இருக்க முடியுமா ? அவர் பாரதிய ஜனதா கட்சியில் இருக்கேனு  சொன்னா…. நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தாலும், நாங்க எல்லாம் வீடு வீடா சென்று ஓட்டு கேட்டோம். பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்திய நாட்டின் பிரதமராக வரவேண்டும் என்று எங்களுடைய அனைத்திந்திய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மூணாறு நிலச்சரிவு : பலி எண்னிக்கை 22 ஆக உயர்வு

கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தால் 22பேர் உயிரிழந்துள்ளனர். கேரளா மாநிலத்தில் உள்ள மூணாறு பகுதியில் பெய்த கனமழை காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இது மிகப் பெரிய அதிர்ச்சிகர சம்பவமாக பார்க்கப்படுகின்றது.  நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் 32 குடியிருப்புகள் இருந்தன. மலையடிவாரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தால் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பாறைகள் உருண்டு வந்து வீடுகளை எல்லாம் முழுவதுமாக மூழ்க செய்தன. தற்போது தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு பணிகளை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

விமான விபத்து : கைப்பற்றப்பட்ட கருப்பு பெட்டி …!!

கோழிக்கோட்டில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள விமான விபத்தில் டிஜிட்டல் பிளைட் டேட்டா ரெக்கார்டர் மற்றும் வாய்ஸ் ரெக்கார்டர் என்று சொல்லப்படும் முக்கிய கருவிகள் ( கருப்பு பெட்டி ) கிடைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. விமான போக்குவரத்து துறையின் இயக்குனர் அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள் விமான விபத்து நடைபெற்ற இடத்தில் தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருந்த போது நேற்று இரவு நேரம் என்பதால் தேட முடியாத நிலையில் தற்போது […]

Categories
சற்றுமுன் பல்சுவை

16 நாட்களாக எகிறிய தங்கம்…. கிடுகிடுவென சரிந்தது…. எதிர்பார்ப்பில் மக்கள்

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தது. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சமமற்ற நிலை இதற்க்கு காரணம் என்று முன்பு சொல்லப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா தாக்கம் ஏற்பட்ட சமயத்தில் விற்பனை இல்லை என்றாலும் தங்கத்தின் விலை நிர்ணயம் என்பது தினமும் அதிகரித்து கொண்டே சென்றது. விலையில் புதிய வரலாற்றை தினம்தோறும் படைத்துக் கொண்டிருந்தது. அந்த வகையில் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் தங்கம் ஒரு சவரன் 43 ஆயிரத்தை கடந்து 44ஆயிரத்தை நெருங்கி கொண்டு இருக்கின்றது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

விமான விபத்தில் உயிரிழந்தவருக்கு கொரோனா – கேரள சுகாதாரத்துறை

நேற்று கேரள கோழிக்கோடு விமான நிலையத்தில் விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் விமானி உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது உயிர் இழந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தின் சுகாதாரத்துறை இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் விமானத்தில் பயணம் செய்து, செய்து சிகிச்சை பெற்று வரும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கேரளா விமான விபத்து…. 170பேர் மீட்பு… 15பேர் பலி…. பேரிடர் மீட்பு படை

கேரள மாநிலத்தில் கடும் மழை பெய்து வரும் நிலையில், துபாயிலிருந்து கோழிக்கோடு கரிப்பூர் விமானநிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. தரையிறங்கும்போது ஓடுதளப்பாதை வழுக்கியதன் காரணமாக அங்கிருந்து விலகியதால் இந்த விபத்து நேர்ந்துள்ள்ளது. இந்த விபத்தில் விமானம் இரு துண்டாக உடைந்து, அதன் பாகங்கள் ஓடுதளப் பகுதியில் சிதறியுள்ளன. விமானத்தில் ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் உள்பட 191 பேர் பயணம் செய்துள்ளனர். இவ்விபத்தில் விமானி, குழந்தை  உள்பட 15 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

விமான விபத்து – குழந்தை உட்பட பலி 14ஆக உயர்வு …!!

கேரள மாநிலத்தில் கடும் மழை பெய்து வரும் நிலையில், துபாயிலிருந்து கோழிக்கோடு கரிப்பூர் விமானநிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. தரையிறங்கும்போது ஓடுதளப்பாதை வழுக்கியதன் காரணமாக அங்கிருந்து விலகியதால் இந்த விபத்து நேர்ந்துள்ள்ளது. இந்த விபத்தில் விமானம் இரு துண்டாக உடைந்து, அதன் பாகங்கள் ஓடுதளப் பகுதியில் சிதறியுள்ளன. விமானத்தில் ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் உள்பட 191 பேர் பயணம் செய்துள்ளனர். இவ்விபத்தில் விமானி, குழந்தை  உள்பட 14  பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் […]

Categories
சற்றுமுன் தமிழ் சினிமா

நடிகர் விஜய் ஒரு ரவுடி – நடிகை பரபரப்பு குற்றசாட்டு …!!

கடந்த சில நாட்களாக பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை மீரா மிதுன், முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார்.  இவர்களின் குடும்பத்தையும் விமர்சித்து நடிகர் சூர்யாவிற்கு நடிக்கத் தெரியாது என்று கூறிய மீரா மிதுன்,  விஜயையும் விட்டுவைக்கவில்லை. சினிமாவின் மாபியா என்றெல்லாம் விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் விஜய்  ரசிகர்களும் விமர்சித்து வந்தனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் கொண்ட மீராமிதுன் தற்போது புதிதாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட்10இல் – வெளியான மிக முக்கிய அதிரடி அறிவிப்பு …!!

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிடப்படும் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு தேர்வுகள் துறை ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்கள் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த  மாதம் வெளியிடப்பட்டது. அவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை அவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தற்போது அந்த தேர்வுகள் துறை  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதோடு சேர்த்து 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. வருகின்ற திங்கட்கிழமை பத்தாம் வகுப்பு தேர்வு காலை 9.30 மணிக்கு பத்தாம் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

திங்கள்கிழமை 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு – தேர்வுத்துறை அறிவிப்பு ..!!

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிடப்படும் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு தேர்வுகள் துறை ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்கள் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த  மாதம் வெளியிடப்பட்டது. அவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை அவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தற்போது அந்த தேர்வுகள் துறை  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதோடு சேர்த்து 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. வருகின்ற திங்கட்கிழமை பத்தாம் வகுப்பு தேர்வு காலை 9.30 மணிக்கு பத்தாம் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

தங்கம் விலை கிடுகிடு உயர்வு…. நடுங்கி போகும் சாமானியர் வாழ்க்கை ….!!

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தது. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சமமற்ற நிலை இதற்க்கு காரணம் என்று முன்பு சொல்லப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா தாக்கம் ஏற்பட்ட சமயத்தில் விற்பனை இல்லை என்றாலும் தங்கத்தின் விலை நிர்ணயம் என்பது தினமும் அதிகரித்து கொண்டே சென்றது.விலையில் புதிய வரலாற்றை தினம்தோறும் படைத்துக் கொண்டிருந்தது. அந்த வகையில் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் தங்கம் ஒரு சவரன் 43 ஆயிரத்தை கடந்து 44ஆயிரத்தை நெருங்கி கொண்டு இருக்கின்றது. தங்க […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக அரசுக்கு உத்தரவு – அதிரடி காட்டிய ஐகோர்ட் …!!

தேர்தல்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீடு கோரும் வழக்கில் அரசு தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. நாடாளுமன்றம், சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தல்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக ஏற்கனவே தமிழக அரசிடமும் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் இதற்கான வழக்கு தொடர்ந்த நிலையில் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

Categories
சற்றுமுன் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகம் முழுவதும் இ-பாஸ் இரத்து ? .. போக்குவரத்து சேவை – முதல்வர் அதிரடி

திருநெல்வேலியில் கொரோனா ஆய்வு பணிகளை மேற்கொண்ட தமிழக முதல்வர் செய்தியாளர்களிடம் பேசிய போது, இ-பாஸ் ரத்து செய்வது என்பது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோய் எப்படி பரவியது என்று தெரியும். திருநெல்வேலி மாவட்டம், தென்காசி மாவட்டத்தில் கொரோனா ஒன்றுமே இல்லாமல் இருந்தது. வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்று தற்போது பரவி விட்டது. பொது போக்குவரத்து ஏற்கனவே மண்டல வாரியாக விடப்பட்டது. என்ன ஆயிற்று ? கூடுதலாக தொற்று பரவி விட்டது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தலா ரூ.5000 – முதல்வர் அதிரடி அறிவிப்பு ….!!

தமிழகம் முழுவதும் நடைபெறுகின்ற கொரோனா தடுப்பு பணிகளை மாவட்ட வாரியாக தமிழக முதல்வர் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது தென் மாவட்டங்களில் ஆய்வு பணியை துவங்கியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நேற்று திண்டுக்கல், மதுரை போன்ற மாவட்டங்களில் ஆய்வு பணிகளை முடித்து இன்று தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் கொரோனா ஆய்வு பணிகளை மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடனும், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு தடுப்பு பணிகள் குறித்து பேசிய தமிழக […]

Categories
அரசியல் சற்றுமுன்

2021இல் அரியணை யாருக்கு ? தமிழக முதல்வர் பதில் …!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தென்மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடத்தி வருகிறார். அந்த வகையில் இன்று திருநெல்வேலி, தென்காசி மாவட்ட ஆய்வுக் கூட்டங்கள் நடத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கலைஞர் கருணாநிதி மறைந்த ஒரு ஆண்டு குறித்தும்,  திமுக தலைவர் மு க ஸ்டாலின் 2021ல் வெற்றிபெற்று பெறுவோம் என்ற சூளுரை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க்கு முதல்வர், அவர் ஒரு மூத்த அரசியல் தலைவர். நீண்ட காலமாக தமிழகத்தின் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழக மக்களுக்கு எச்சரிக்கை…. ”3மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்”…. வானிலை ஆய்வு மையம்

நெல்லை, தூத்துக்குடி, குமரி,தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேனி, நீலகிரி, கோவை ( ரெட் அலர்ட்) மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. கடலில் 3.5 மீட்டரிலிருந்து 4 மீட்டர் உயரம் வரை அலைகள் எலும்பக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மாநில மையம் தெரிவித்துள்ளது.

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

வெளிய போகணும்னு நினைச்சா…. என்ன வேணும்னாலும் பேசுவாங்க… உதயநிதி ஸ்டாலின்

திமுகவின் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கு.க செல்வம் திமுகவில் இருக்கப்பிடிக்க வில்லை என்று கூறி பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். இதையடுத்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் சென்ற அவர் திமுகவில்குடும்ப அரசியல் நடக்கிறது என்றும், என்னை மதிக்கவில்லை என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் திமுக இளைஞரணி செயலாளர்  […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்திற்கு மிகப்பெரிய துரோகம்…. மத்திய அரசின் சர்வாதிகாரம்…. ஆர்.எஸ் பாரதி கண்டனம் ..!!

சுற்றுச்சூழல் மதிப்பீடு அறிக்கை 2020ஐ முழுமையாக கைவிட வேண்டும். இந்த வரைவு அறிக்கை அமலுக்கு வந்தால் தமிழகம் மிக கடுமையாக பாதிக்கப்படும். மத்திய அரசு இந்த அறிக்கையை கைவிடாவிட்டால் திமுக நீதிமன்றத்திற்கு செல்லும். சுற்றுச்சூழல் மதிப்பீடு அறிக்கை 2020 தமிழகத்திற்கு மிகப்பெரிய துரோகம். இந்த வரைவு அறிக்கை மத்திய அரசின் சர்வாதிகார நடவடிக்கையை காட்டுகிறது என்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி பேட்டியளித்துள்ளார்.

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

புதிய கல்விக் கொள்கை… ”எந்த பாகுபாடும் இல்லை” பிரதமர் மோடி உறுதி …!!

புதிய கல்விக் கொள்கையில் உயர் கல்வி சீர்திருத்தங்கள் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அதில், தேசிய கல்விக் கொள்கையில் எந்த விதமான சார்புகளும் இல்லை. பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு சித்தாந்தங்களைச் சேர்ந்தவர்கள் கல்வி கொள்கை குறித்து கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். 21-ம் நூற்றாண்டில் புதிய இந்தியாவுக்கு அடித்தளம் அமைப்பதற்கான தேசிய கல்வி கொள்கை. பல ஆண்டுகளாக இந்திய கல்வி முறையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. புதிய கல்வி கொள்கை முக்கிய மாற்றமாக உள்ளது: புதிய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஆக. 10 கடையடைப்பு போராட்டம் இல்லை – விக்கிரமராஜா அறிவிப்பு …!!

தமிழகம் முழுவதும் கொரோனாவால் மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட மாவட்ட அளவிலான காய்கறி, பழ மார்கெட்ட்களை திறக்க கோரி மாநிலம் தழுவிய போராட்டம் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் நடைபெறும் என்று வணிகர் சங்க தலைவர் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப் பட இருப்பதை கருத்தில் கொண்டும், முதலமைச்சர் – துணை முதல்வருடன் பேசி முடிவுகளை தெரிவிப்பதாக அதிகாரிகள் கூறியதாக குறிப்பிட்டு போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

கலகம் ஏற்படுத்த முயற்சிக்க வில்லை – துரைமுருகன் விளக்கம்

இன்று காலை ஒரு செய்தி வெளியானது. அதில் பொதுச் செயலாளர் பதவி கிடைக்காததால் துரைமுருகன் அதிருப்தியில் இருப்பதாக ஒரு செய்தி வந்தது. அதற்கு பதில் அளிக்க கூடிய துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஏதோ எனக்கு பொதுச் செயலாளர் பதவி கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தில் கழகத்தில் கலகத்தை உருவாக்குவது போல ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். அது முற்றிலும் என்னுடைய கற்பனையானது. இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என்று கண்டனத்தை தெரிவித்துள்ளார். எனக்கு எம்எல்ஏ பதவி எம்பி பதவி […]

Categories
சற்றுமுன்

வெள்ளியும் புதிய உச்சம்…. தங்கம் கிடுகிடு உயர்வு…. சவரன் 43,000 தாண்டியது ….!!

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தது. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சமமற்ற நிலை இதற்க்கு காரணம் என்று முன்பு சொல்லப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா தாக்கம் ஏற்பட்ட சமயத்தில் விற்பனை இல்லை என்றாலும் தங்கத்தின் விலை நிர்ணயம் என்பது தினமும் அதிகரித்து கொண்டே சென்றது.விலையில் புதிய வரலாற்றை தினம்தோறும் படைத்துக் கொண்டிருந்தது. அந்த வகையில் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் தங்கம் ஒரு சவரன் 42 ஆயிரத்தை கடந்து 43ஆயிரத்தை நெருங்கி கொண்டு இருக்கின்றது. தங்க […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: கேரளாவில் நிலச்சரிவு – 80 பேரை காணவில்லை …!!

கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 80 பேர் சிக்கி காணாமல் போனதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த 4 நாட்களாக கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக பல்வேறு  சின்ன அணையில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக கேரளாவில் மழை காரணமாக  மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கொடுமுடி பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் – மிக மிக முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையில் நிலையில் பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கும் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. இது தொடர்பாக அரசு சார்பில் தெரிவிக்கும் கருத்தாக… பள்ளி திறப்பு குறித்து தற்போதைக்கு முடிவெடுக்க முடியாது. கொரோனா முடிந்த பிறகு,  பள்ளி திறப்பு குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இருந்தும் உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களின் கல்வி காலதாமதம் ஆவதால் இந்த கேள்வி […]

Categories

Tech |