Categories
அரசியல் சற்றுமுன்

அப்படியே அந்தர் பல்டி அடித்த நடிகை குஷ்பு … இதெல்லாம் அரசியலில் சாதாரணமப்பா…!!!

நேற்றுவரை காங்கிரசுக்கு சாதகமாக பேசிய குஷ்பு இன்று பிரதமர் மோடியின் தலைமை நாட்டிற்கு தேவை என்பதை உணர்ந்து பாஜகவில் இணைந்துள்ளேன் என அந்தர் பல்டி அடித்துள்ளார். நடிகை குஷ்பு பாஜாகவில் இணையவிருக்கின்றார் என்று சில நாட்களாக சலசலப்பு ஏற்பட்டதையடுத்து குஷ்புவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு இதை திட்டவட்டமாக மறுத்தார்.இன்று காலை ஜே.பி நட்டாவை சந்தித்து பாஜகவில் இணைவதற்காக டெல்லி புறப்படுகிறார் என்று வந்த செய்தியையடுத்து காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து காங்கிரஸில் இருந்து […]

Categories
அரசியல் சற்றுமுன்

இது தான் அரசியல் ஆட்டம்…. 10ஆண்டுகளில் 3கட்சிக்கு தாவிய குஷ்பு …..!!

பாஜகவில் இணைந்த குஷ்பு கடந்த 10ஆண்டுகளில் திமுக, காங்கிரஸ் என 3 கட்சிக்கு மாறி இருக்கின்றார். காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் மேல்மட்டத் தலைவர்கள் தன்னை செயல்படவிடாமல் ஒடுக்கியதாக குற்றம் சாட்டியிருந்தார். அதோடு இல்லாமல் தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வந்த குஷ்பு காங்கிரஸில் இருந்து விலகுவார் என்று சொல்லப்பட்டது. அதே நேரத்தில் டெல்லியில் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்து பேச சென்ற […]

Categories
அரசியல் சற்றுமுன்

பாஜக அலுவலகத்தில் தஞ்சமடைந்த நடிகை குஷ்பு…!!!

நடிகை குஷ்பு ஜே.பி நட்டா தலைமையில் பாஜகவில் இணையவிருப்பதாக வெளிவந்த தகவலை அடுத்து சற்றுமுன் பாஜக அலுவலகத்தை அடைந்தார். நடிகை குஷ்பு ஜே.பி நட்டா தலைமையில் பாஜகவில் இணையவிருப்பதாகவும் அதற்காக டெல்லி சென்றுள்ளதாகவும் இன்று காலை தகவல் கிடைத்தது.அதனையொட்டி நடிகை குஷ்புவை தேசிய செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்து காங்கிரஸ் கட்சி அதிரடியாக நீக்கியது.அதனையடுத்து சிலநிமிடங்களில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக நடிகை குஷ்பு சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார். மேலும் பணம்,புகழுக்காக நான் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டு வரலாற்றில் இடம்பிடித்த மோடி…!!!

மறைந்த பாஜக தலைவர் விஜய ராஜே  சிந்தியாவின் உருவம் பொறிக்கப்பட்ட 100 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி சற்று முன் காணொளி காட்சி மூலம் வெளியிட்டார். மறைந்த விஜய ராஜே சிந்தியா பாஜகவை தொடங்கிய மூத்த தலைவர்களுள் ஒருவராவார். இன்று அவரது நூறாவது பிறந்த நாள் ஆகும்.எனவே அவரது நூறாவது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி ரூபாய் 100 நாணயத்தை வெளியிட்டார். இந்திய வரலாற்றில் 100 ரூபாய் நாணயத்தை முதன்முதலாக வெளியிட்டு வரலாற்றில் இடம் பெற்றார்.

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சந்திக்க மறுத்த காங்கிரஸ்…. ஸ்கெட்ச் போட்ட பாஜக…. சாதித்து காட்டிய எல்.முருகன் …!!

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பூ பாஜகவில் இணைய இருப்பது அரசியல் அரங்கில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்து தலைவர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் தன்னைப் புறக்கணித்து வந்ததாக வெளிப்படையாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். உத்தரபிரதேசம் ஹாத்ரஸ் பகுதியில் இளம்பெண் பாலியல் கொலை சம்பவத்தை கண்டித்தும், இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றும் தமிழகத்தில் நடந்த போராட்டத்தில் தமிழக காங்கிரஸ்  சார்பாக கலந்து கொண்ட […]

Categories
அரசியல் சற்றுமுன்

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார் குஷ்பு… சோனியாவிற்கு கடிதம்…!!!

காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்து குஷ்பு  நீக்கப்பட்டதையடுத்து காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்து வருபவர் நடிகை குஷ்பு .இவர் சில நாட்களாகவே காங்கிரஸில் இருந்து விலகி இருக்கிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது.இதை சில நாட்களுக்கு முன் திட்டவட்டமாக மறுத்தார் நடிகை குஷ்பு.இந்நிலையில் அவர் இன்று ஜே.பி நட்டா தலைமையில் பாஜகவில் இணையவிருப்பதாகவும் அதற்காகவே டெல்லி சென்றுள்ளதாகவும்  தகவல் வந்தது. இந்த […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சமரசம் செய்து கொள்ளலாம்…. டெல்லிக்கு சென்ற குஷ்பூ….. புறக்கணித்த காங்கிரஸ் …!!

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து நடிகை குஷ்பூ நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நடிகை குஷ்பு அவர்கள்  நீக்கப் பட்டு இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை தெளிவுபடுத்துகிறது. ஏனென்றால் அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணையலாம் என்று தொடர்ச்சியாக தகவல்கள் பரவியது. கடந்த வாரம்கூட டெல்லிக்கு வந்து காங்கிரஸ் கட்சியின் தலைமையுடன் ஒரு சமரச சூழலில் ஈடுபடுவதற்கான பேச்சுவார்த்தை […]

Categories
அரசியல் சற்றுமுன்

செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்து குஷ்பு நீக்கம்… காங்கிரஸ் அதிரடி…!!!

நடிகை குஷ்பு இன்று பாஜகவில் இணைய உள்ளார் என்று வெளியான தகவலை அடுத்து அவர் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைமையிடம் குஷ்புவை சில நாட்களாக ஒதுக்கி வருகின்றது என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இதனையொட்டி நடிகை குஷ்புவும் தனது மன வருத்தத்தை தெரிவித்து இருந்தார். நடிகை குஷ்புவின் பிறந்தநாளுக்கு பாஜக தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்ததையடுத்து குஷ்பு பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகின.இந்நிலையில்  நடிகை குஷ்பு நான் பாஜகவில் இணைய வில்லை என […]

Categories
கொரோனா சற்றுமுன்

கொரோனா ரிசல்ட் 1 மணி நேரத்துக்குள் கைக்கு கிடைக்கும்… புதிய பரிசோதனை அறிமுகம்…!!!

பெலுடா எனப்படும் புதிய பரிசோதனை முறை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். உலகளவில் கொரோனா தொற்றினால்  பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இந்தியா தற்பொழுது இரண்டாம் இடத்தில் உள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றினை கண்டறிவதற்காக பிசிஆர் எனப்படும் பரிசோதனை முறை நடைமுறையில் உள்ளது. இந்த பரிசோதனையில் ஒரு பரிசோதனைக்கு ரூபாய் 2400 வரை செலவாகும். மேலும் இப்பரிசோதனையில் கோரானோ முடிவினை தெரிந்துகொள்ள இரண்டு நாட்கள் வரை காத்திருக்க வேண்டியதிருக்கும். தற்போது இந்திய […]

Categories
சற்றுமுன் வானிலை

மக்களே உஷார்… தமிழகத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு…!!!

தமிழகத்தில் இன்று சேலம், ஈரோடு, நீலகிரி  உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலளித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியுள்ளதெனவும் , மேலும் ஆந்திராவின் விசாகப்பட்டினதிற்கு தென்கிழக்கு பகுதியில்  நிலைகொண்டுள்ள இந்த தாழ்வு மண்டலமானது நாளை இரவு வடக்கு ஆந்திர கடலோர பகுதியை ஒட்டி கரையை கடக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கோவை, திருப்பத்தூர், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மக்களே குட் நியூஸ்…இன்று மட்டும் 5,005 பேர் டிஸ்சார்ஜ்…!!!

தமிழகத்தில் இன்று 5,005 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனாவிலிருந்து மீண்டு வரும் தமிழகம்… சட்டென குறைந்த கொரோனா பலி…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த பலி எண்ணிக்கை சில நாட்களாக குறைந்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு… நிம்மதியடையும் மக்கள்…!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது இடத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்… அதிரடி உத்தரவை பிறப்பித்த தமிழக அரசு…!!!

தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் உட்பட 6 அதிகாரிகளை இடமாற்றம் செய்வதாக தமிழக அரசின் தலைமைச் செயலர் சண்முகம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, சமரச சிக்ஷா திட்ட கூடுதல் இயக்குனர் என் வெங்கடேஷ் என்பவர் பள்ளிக்கல்வித் துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வித் துறை ஆணையர் சிஜி தாமஸ் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக மேலாண் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். ஈரோடு வணிக வரித்துறை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பட்டியலினத்தை சேர்ந்த ஊராட்சித் தலைவர்  அவமதிக்கப்பட்ட விவகாரம்… ஊராட்சி செயலர் சிந்துஜா கைது…!!!

கடலூர் மாவட்டத்தில் ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் ஊராட்சி செயலர் சிந்துஜா புவனகிரி காவல்துறையினரால்  கைது செய்யப்பட்டுள்ளார் . கடலூர் மாவட்டம் புவனகிரி அருகில் உள்ள தெற்குதிட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி. கடந்த ஜூன் 17ஆம் தேதி நடந்த ஊராட்சி மன்ற கூட்டத்தின்போது ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்ட சம்பவம் தற்போது தமிழகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  ஊராட்சி மன்ற கூட்டத்தின் போது ராஜேஸ்வரி கீழே தரையில் […]

Categories
அரசியல் சற்றுமுன்

யாரா இருந்தாலென்ன… எங்க கூட கூட்டணி வைக்கணும்னா இததான் பண்ணனும்…!!!

அதிமுக கூட்டணி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு எந்த கட்சியாக இருந்தாலும் எங்களால் அறிவிக்கப்பட்டவர்களை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே கூட்டணியில் இடம்பெற முடியும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி கூறியுள்ளார். வருகிற ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுக முதல்வர் வேட்பாளராக திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலமாக நீண்ட நாட்களாக அதிமுகவில் நிலவி  வந்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை முடிவுக்கு வந்தது. அடுத்த கட்டமாக கூட்டணி கட்சிகள் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணம்… இரண்டாம் கட்ட பட்டியலை கைப்பற்றியது இந்தியா…!!!

கருப்பு பணக் கடத்தலை தடுக்கும் விதத்தில் சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்களின் விவரங்களை இரண்டாம் கட்டமாக கைப்பற்றியுள்ளது இந்தியா. கருப்பு பணத்தை கைப்பற்றுவதற்காக மத்திய அரசின் சார்பில் சில ஆண்டுகளாக பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது, 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது ஆகியவை இதில் முக்கியமானவை ஆகும். இந்நிலையில் கருப்பு பணம் பதுக்குவதை தடுக்கும் விதமாக, சுவிட்சர்லாந்து வங்கிகளில் விதிமுறை மீறி பணம் வைத்துள்ளவர்களின்  விவரங்களை வெளியிட இந்தியா மற்றும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று துவங்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பபதிவானது கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுதும் உள்ள 109 கல்லூரிகளில் உள்ள 87 ஆயிரம் இடங்களில் 75 ஆயிரம் இடங்கள் நிரம்பின. இந்நிலையில் முதுநிலைப் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவானது இன்று முதல் தொடங்கியுள்ளது.அக்டோபர் 20-ம் […]

Categories
சற்றுமுன் மாவட்ட செய்திகள்

பட்டியலினத்தை சேர்ந்த கடலூர் பெண் ஊராட்சி மன்ற தலைவருக்கு அவமரியாதை…!!!

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தெற்குதிட்டை ஊராட்சி மன்ற தலைவர் அவமதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகேயுள்ள தெற்குதிட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக ராஜேஸ்வரியும், துணைத் தலைவராக மோகன் என்பவரும் இருக்கின்றனர். இந்நிலையில் தெற்குதிட்டையில் ஜூலை-17-ம் தேதி நடந்த ஊராட்சி மன்ற கூட்டத்தின்போது பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் தலைவர் ராஜேஸ்வரியை துணைத் தலைவர் மோகன் தரையில் உட்கார வைத்ததாக சமூக வலைதளங்களில் நேற்று புகைப்படம் வெளியானது. இதை பற்றி புகார் எழுந்ததும் காவல்துறையினர் […]

Categories
கடலூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பஞ்சாயத்து து.தலைவர் மீது SC/ST தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு …..!!

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவராக ராஜேஸ்வரியும், துணைத் தலைவராக மோகனும் இருந்துள்ளார். இந்நிலையில் துணைத் தலைவர் மோகன் ஊராட்சி மன்ற தலைவரை தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்திற்காக அவரை தரையில் அமர்த்தி  கூட்டம் நடத்தியதற்காக சமூக வலைதளங்களில் நேற்று ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் என்பது 17.7. 2020 அன்று நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்த புகார் வந்ததும் காவல்துறை உடனடியாக அவர்களை அழைத்து புவனகிரி காவல் நிலையத்தில் […]

Categories
கடலூர் சற்றுமுன் மாநில செய்திகள்

நான் உயர்ந்த ஜாதி….. நீங்க கீழ் ஜாதி….. கீழே உக்காருங்க… பஞ். தலைவருக்கு அவமரியாதை…!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவர் அவமதிக்கப்பட்ட தாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவராக ராஜேஸ்வரியும், துணைத் தலைவராக மோகனும் இருந்துள்ளார். இந்நிலையில் துணைத் தலைவர் மோகன் ஊராட்சி மன்ற தலைவரை தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்திற்காக அவரை தரையில் அமர்த்தி  கூட்டம் நடத்தியதற்காக சமூக வலைதளங்களில் நேற்று ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் என்பது 17.7. […]

Categories
கடலூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: பட்டியலின் ஊராட்சி மன்றத் தலைவருக்கு அவமரியாதை …!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவர் அவமதிக்கப்பட்ட தாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவராக ராஜேஸ்வரியும், துணைத் தலைவராக மோகனும் இருந்துள்ளார். இந்நிலையில் துணைத் தலைவர் மோகன் ஊராட்சி மன்ற தலைவரை தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்திற்காக அவரை தரையில் அமர்த்தி  கூட்டம் நடத்தியதற்காக சமூக வலைதளங்களில் நேற்று ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் என்பது 17.7. […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

சீனாவிற்கு  அடுத்தடுத்த பன்ச்… டிக் டாக் செயலியை தடை செய்தது பாகிஸ்தான்…!!!

இந்தியா அமெரிக்காவினை தொடர்ந்து தற்போது பாகிஸ்தானும் டிக்-டாக் செயலிக்கு தடை விதித்துள்ளது. இந்தியா சீன எல்லை பிரச்சனை காரணமாக ஏற்பட்ட ராணுவ  போரில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர்.இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக டிக் டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.இதன் மூலம் சீனாவிற்கு பெருமளவு இழப்பு ஏற்பட்டது என கூறப்பட்டது.டிக் டாக் செயலியினை பதிவிறக்கம் செய்வதில் முன்னணி நாடுகளில் ஒன்றாக இருந்த இந்தியா அதை தடை செய்ததன் மூலம் சுமார் […]

Categories
சற்றுமுன் சினிமா

பொய் சொல்கிறார் சூரி… விஷ்ணு விஷால் பாய்ச்சல்…!!!

நடிகர் சூரி கொடுத்துள்ள புகார் பொய்யானது என்றும் அதை சட்டரீதியாக சந்திக்க தயார் என்றும் நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு சூரி நடித்த “வீர தீர சூரன்” என்ற திரைப்படத்திற்கான சம்பள பாக்கி 40 லட்சம் ரூபாயினை அப்படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா ஆகியோர் தர மறுப்பதாக நடிகர் சூரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.மேலும் நிலம் வாங்கி தருவதாக கூறி 2 கோடியே 70 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வீடு திரும்பினார் விஜயகாந்த்…!!!

சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். கொரோனா தொற்றின் காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தொடர்ந்து அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் அவர்களும் தொற்றின் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து தொற்று குணமடைந்து இருவரும் நலமுடன் வீடு திரும்பினர்.இதற்கிடையே விஜயகாந்த் அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவரது உடல்நிலை […]

Categories
சற்றுமுன் சினிமா

கோவில் கோவிலாக சுற்றி வரும் நடிகர் சிம்பு… காரணம் என்ன…???

நேற்று திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் சிம்பு இன்று மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு  சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணமாக  வேண்டும் என்பதற்காக அவருடைய ரசிகர்கள் முருகன் கோவிலில் முட்டியிட்டபடி படிக்கட்டுகள் ஏறி சுவாமி தரிசனம் செய்தனர் . இதனையொட்டி நடிகர் சிம்பு நேற்று திருமலை திருப்பதி கோவிலில் சுவாமி தரிசனத்துக்காக வந்திருந்தார்.அங்கு ரசிகர்கள் யாரையும் சந்திக்காத சிம்பு முகத்தை மூடியபடி வேகமாக காரில் ஏறி விரைந்தார். இதுகுறித்து கேட்கப்பட்டபோது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மத்திய அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி…காரணம் என்ன???

தொல்லியல் துறை பட்டப்படிப்பில் தமிழ் மொழியை ஏன் முதலிலேயே சேர்க்கவில்லை என்று தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தொல்லியல் கல்லூரியில் முதுகலை  படிப்பிற்கான பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.பட்டப்படிப்பிற்கான தகுதி மொழியில் செம்மொழியான தமிழ்மொழி சேர்க்கப்படவில்லை. இதனையொட்டி தமிழகத்தில் உள்ள மூத்த தமிழறிஞர்கள்,அரசியல் தலைவர்கள் முதலானோர்  தங்கள்  அதிருப்தியினை வெளிப்படுத்தினர். இதனையடுத்து தமிழக முதல்வர் அவர்கள், தமிழ் மொழியின் தொன்மையை கருத்தில்கொண்டு செம்மொழியான தமிழ்மொழியினை தகுதி மொழியாக சேர்க்க […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

தமிழகத்தில் அக்.14 முதல் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ….!!

தமிழகத்தில் அக்டோபர் 14ஆம் தேதி முதல் 11, 12ஆம் வகுப்புக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. மாணவர்கள் பயிலும் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வு மையங்களிலும் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என்றும், தலா 600 மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 1, பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ்கள் தனித்தனியாக தரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன்

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் மூடல்!

கோவில் அர்ச்சகர் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் அக்டோபர்-15 ம்  தேதி வரை மூடப்படுகின்றது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல்  நாடு முழுவதும் ஊரடங்கினை அறிவித்தது மத்திய அரசு. இந்நிலையில் மக்களின் பொருளாதார சிக்கல்களை கருத்தில் கொண்டு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள்  கொண்டுவரப்படுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன், ஒரு சில கட்டுப்பாடுகளுடன் கோயில்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் கேரளாவில் தற்போது […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பிரபு – சவுந்தர்யா திருமணம் – பரபரப்பு தீர்ப்பு …!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பேசுபொருளாக மாறியுள்ளது எம்எல்ஏ பிரபு – சௌந்தர்யா காதல் திருமணம். கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு கல்லூரி மாணவி சௌந்தர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். மாணவியின் தந்தை எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல், பிரபு தன் மகளை கடத்தி கட்டாயப்படுத்தி திருமணம் செய்து விட்டார் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் சௌந்தர்யாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இன்று சவுந்தர்யா நீதிபதி முன்பு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி …!!!

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். மத்திய நுகர்வோர் மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சராக இருந்தவர் ராம்விலாஸ் பஸ்வான். 74 வயதுடைய பஸ்வான் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் ஈடுபட்டு வருபவர். திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையொட்டி சிகிச்சை பலனின்றி ராம்விலாஸ் பஸ்வான் நேற்று உயிரிழந்தார். மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் மறைவிற்கு பிரதமர்,உள்துறை […]

Categories
சற்றுமுன் சினிமா

நடிகர் சூரியை மோசம் செய்த தயாரிப்பாளர்…!!!

நிலம் வாங்கித் தருவதாக நடிகர் சூரியை  மோசம் செய்ததற்காக திரைப்பட தயாரிப்பாளர் உட்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தமிழ் திரைப்பட உலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் சூரி. கவுண்டமணி, செந்தில்,வடிவேல், விவேக் ஆகியோரை தொடர்ந்து  இவருக்கும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. கடந்த 2015-ஆம் ஆண்டு சூரி நடித்த வீர தீர சூரன் என்ற திரைப்படத்திற்கான சம்பளம் 40 லட்சம் ரூபாய் பாக்கி இருந்துள்ளது. அப்படத்தின் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

எடப்பாடியின் கடிதத்திற்கு உடனே ஓ.கே சொன்ன மோடி…!!!

பட்டய படிப்புக்கான தகுதியில் தமிழ் மொழியையும் சேர்க்குமாறு மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி எழுதிய கடிதத்தையடுத்து மத்திய அரசு தமிழ் மொழியினை பட்டயப் படிப்புக்கான தகுதிப் பட்டியலில் தற்போது சேர்த்துள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் மத்திய அரசின் தொல்லியல் துறை கல்லூரி இயங்கி வருகின்றது. இக்கல்லூரியில் தொல்லியல் துறை சார்ந்த இரண்டு ஆண்டுகாலம் முதுகலை பட்டயப் படிப்புக்கான அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. ஆனால் அக்கல்லூரியில் தமிழ் மொழி தவிர்த்து வேறு சில மொழிகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

புதிய உலக சாதனை…. அதகளம் செய்த வார்னர்… பஞ்சாப்பை தும்சம் செய்தார் ..!!

இன்றைய ஐ.பி.எல் போட்டியில் டேவிட் வார்னர் புதிய உலக சாதனையை படைத்தது அசத்தியுள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் சன்ரைசர்ஸ் VS ஹைதராபாத் சன்ரைசஸ் அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியில் முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளாசித் தள்ளியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்த சன் ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் – பர்ஸ்டோவ்  அதிரடி காட்டினார். 100 ரன்கள் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பர்ஸ்டோவ் எதிர்பாராதவிதமாக […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

ரன் மழை பொழிந்த… வார்னர் – பர்ஸ்டோவ் ஜோடி…. பஞ்சாப்புக்கு இமாலய இலக்கு …!!

பஞ்சாப் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் 22ஆவது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதல் பேட்டிங் செய்து  இலக்கை நிர்ணயித்தது. ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு துளியும் பஞ்சமின்றி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று (அக்.08) நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான ஹதராபாத் சன் ரைசஸ் அணி, கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்த்து விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி […]

Categories
சற்றுமுன் சினிமா

முகத்தை மூடி காரில் பறந்த நடிகர் சிம்பு…!!!

தரிசனத்துக்காக திருப்பதி மலைக்கு வந்த நடிகர் சிம்பு தனது புதிய படத்தின் கெட்டப் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக முகத்தை மூடியபடி காரில் வேகமாக ஏறினார். நடிகர் சிம்புவிற்கு விரைவில் திருமணம் ஆக வேண்டும் என்பதற்காக சிம்புவின் ரசிகர்கள் சில நாட்களுக்கு முன் முருகன் கோவிலில் முட்டியிட்டபடி படியில் ஏறி வேண்டுதலை நிறைவேற்றினர். இந்நிலையில் நடிகர் சிம்பு சாமி தரிசனத்திற்காக திருப்பதி மலைக்கு வந்துள்ளார். தரிசனம் முடிந்து சிம்பு தன் முகத்தை யாருக்கும் காட்டாமல் துணியால் மூடியபடி வேகமாக  நடந்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#BREAKING: மத்திய அமைச்சர் காலமானார்….. தொண்டர்கள் அதிர்ச்சி …!!

மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சரும் லோக் ஜன சக்தி கட்சி நிறுவன வருமான ராம்விலாஸ் பஸ்வான் காலமானார். 74 வயதான இவரின் மரணச் செய்தி தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை காரணமாக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .இவரின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

உயர்நீதிமன்றத்திற்கு பதிலடி கொடுத்த மோடி…!!!

இந்தியா 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்து பொருட்களை வழங்கி உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். நாம் மருந்து மூலப்பொருட்களுக்கு 90% சீனாவை நம்பி உள்ளதாகவும்  நம் நாட்டின் ஆராய்ச்சியையும், ஆராய்ச்சியாளர்களையும் ஊக்குவிக்க வேண்டும் எனவும் மத்திய மற்றும் மாநில அரசுகளை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும் மக்களுக்கு தரம் குறைந்த மருந்து பொருட்கள் கிடைப்பதாகவும் உயர்நீதிமன்ற நீதிபதி வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில் பிரதமர் மோடி கொரோனா  காலத்தில் உலக நாடுகளுக்கு மருந்துகள் வழங்குவதில் இந்தியா முக்கிய […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

10,00,000 புதிய உடன்பிறப்புகள்… 53% பேர் இளைஞர்கள்…. கலக்கிய திமுக …!!

10,00,000 புதிய உறுப்பினர்களை திமுக இணைத்து உள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கின்றது, இதனை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் வியூகங்களை வகுத்து வருகின்றன. ஏற்கனவே கொரோனா பேரிடர் நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும் அரசியல் காட்சிகள் ஊரடங்கு காலத்திலும் தேர்தலுக்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திமுக உறுப்பினர் சேர்க்கை இணையத்தில் நடத்தியது. எல்லோரும் நம்முடன் என்ற வாசகத்துடன் திமுக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஆராய்ச்சியாளர்களை ஊக்கப்படுத்துங்க… மத்திய,மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்…!!!

ஆராய்ச்சியினையும் ஆராய்ச்சியாளர்களையும் ஊக்கப்படுத்த மத்திய. மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியானது விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளையும்,ஆராய்ச்சிகளையும் பொருத்தே மதிப்பிடப்படுகின்றது .ஆராய்ச்சியாளர்களை ஊக்கப்படுத்தினால்  நம் நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் காணமுடியும். தற்போது நாம் மருந்துகள் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களுக்கு 90% சீனாவை நம்பியிருப்பதாக நீதிபதி கிருபாகரன் கவலை தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஒரு நாட்டையே நம்பி இருப்பதால்  தரம் குறைந்த மருந்துகள் விற்பனைக்கு வருவதாக நீதிபதி வேதனை அடைந்துள்ளார். மேலும் உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கவும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கர்நாடகாவின் தமிழ்ப்பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்… எடியூரப்பாவிற்கு முதல்வர் பழனிசாமி கடிதம்…!!!

கர்நாடகாவில் மூடப்பட்ட தமிழ் பள்ளிகளை திரும்பத் திறக்கக் கோரியும் ,தமிழ் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரியும்  தமிழக முதலமைச்சர், எடியூரப்பாவிற்கு கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகாவில் தங்கியுள்ள தமிழ் மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக கர்நாடகாவில் பல தமிழ்வழி கல்வி பள்ளிகள் செயல்பட்டன. ஆனால் தற்போது புதிதாக தமிழ்ப் பள்ளிகள் தொடங்குவதற்கு அனுமதியளிக்கப்படவில்லையெனவும் ஏற்கனவே செயல்பட்டு வந்த தமிழ்ப்பள்ளிகள் மூடப்பட்டதாகவும் கர்நாடகாவில் உள்ள ஆசிரியர்கள் சங்கத்திலிருந்து தமிழக முதலமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கர்நாடக முதலமைச்சர் […]

Categories
சற்றுமுன் வானிலை

12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை…வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

அந்தமான் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அக்டோபர்-5 ம் தேதி அறிவித்திருந்தது.இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பில் அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியானது  நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வலுப்பெறும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ மனைவி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு…!!!

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணையும் அவரது தந்தையையும் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏவாக இருந்து வரும் பிரபு கடந்த சில நாட்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து அவர் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் அப்பா பிரபு தன் பெண்ணை கடத்தி திருமணம் செய்துகொண்டதாக ஆட்கொணர்வு மனு ஒன்றை அளித்தார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் என் மகளை கடத்திச் சென்று […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம்… பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் …!!!

ஊரடங்கு தளர்வுகள்  படிப்படியாக அமலுக்கு வந்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய நிலையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு தழுவிய ஊரடங்கினை அறிவித்தது மத்திய அரசு. சில மாதங்கள்  நீடித்த இந்த ஊரடங்கில் பொதுமக்கள் பெரும்பாலான பொருளாதார பிரச்சினைகளை சந்தித்தனர். எனவே  நாட்டின் பொருளாதார நலனை கருத்தில் கொண்டும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டும் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை  மத்திய மற்றும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வாழ்நாளின் இறுதிவரை நன்றிக்கடன் பட்டிருப்பேன் … எடப்பாடி பழனிசாமி நெகிழ்ச்சி…!!!

வருகிற மே மாதம் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக ஆட்சியை கைப்பற்றும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக கூறியுள்ளார். இன்று காலை 10 மணி அளவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில் என் வாழ்நாளில் கடைசி நிமிடம் வரை அதிமுக விற்கு நன்றி சொல்லிக் கொண்டிருப்பேன் எனவும் 2021 ஆம் ஆண்டிலும் அதிமுக ஆட்சியை தொடரும் எனவும் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சசிகலாவின் 2000 கோடி ரூபாய்சொத்துக்கள் முடக்கம்… வருமான வரித்துறை அதிரடி…!!!

சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான ரூபாய் 2000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. சசிகலா இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் ,சிறுதாவூர் பங்களா போன்றவற்றை வருமான வரித்துறை முடங்கியுள்ளது.கடந்த 2017 ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் சசிகலாவிற்கு சொந்தமான 200 இடங்களில் சோதனை நடத்தினர்.இச்சோதனையின் மூலம் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் ரூபாய் 2000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. சொத்துக்குவிப்பு வழக்கின் கீழ் கைது […]

Categories
Uncategorized அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று மாலை பன்னீர்செல்வத்தை சந்திக்கும் எடப்பாடி பழனிச்சாமி…!!!

அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் இன்று காலை  அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் துணை முதலமைச்சர் அவர்களை இன்று மாலை அவரது வீட்டில் சந்திக்க உள்ளார். இன்று காலை 10 மணியளவில் அதிமுக தலைமை செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவும்,அதிமுகவின் சட்டமன்ற தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளரும் அறிவிக்கப்பட்டனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ் பி வேலுமணி ,ஜெயக்குமார்,சி வி சண்முகம், காமராஜ், ஜே சி டி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ்… மியாட் மருத்துவமனை தகவல்…!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மியாட் மருத்துவமனை நிர்வாகம் தற்போது தெரிவித்துள்ளது. தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் அவர்கள் கோரோனா தொற்றின் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைத் தொடர்ந்து அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் அவர்களும் தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருவரும் தொற்றிலிருந்து  பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனவே விஜயகாந்தின் […]

Categories
அரசியல் சற்றுமுன்

எதிரிகள், துரோகிகளை புறமுதுகிட்டு ஓட வைத்துள்ளோம் – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி …!!

எதிரிகளையும், துரோகிகளையும் புறமுதுகிட்டு ஓட வைக்கும் முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளோம். எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் 2021 பொருத்தவரை எதிரிகள், துரோகிகள் புறமுதுகிட்டு ஓடுகின்ற வகையில் புதிய புறநானூற்று வரலாற்றை நிச்சயமாக படைத்து, மீண்டும் தமிழ் மண்ணில், தமிழ்நாட்டில் பொன்மனச்செம்மல், சரித்திர நாயகன், வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி…  மக்களின் மனதில் அன்றும், இன்றும், என்றென்றும் நிற்கின்ற மாபெரும் தலைவர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் ஆட்சி அமைப்போம். அதே போல உலகம் முழுமையும் இருக்கின்ற, கற்றறிந்தவர்கள், தமிழர்கள் […]

Categories
அரசியல் சற்றுமுன்

பொண்ணு கிடைச்சாலும், புதன் கிடைக்காது…. நினைப்பில் மண் விழுந்துட்டு…. அசால்ட் கொடுத்த அமைச்சர் …!!

எதிரிகள், தூரோகிகள் நினைப்பில் மண் விழுந்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி வருகின்ற சட்டப் பேரவையில் அதிமுகவின் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகளும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். […]

Categories

Tech |