Categories
கோயம்புத்தூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

JUST NOW: மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி – கோவையில் பெரும் சோகம் …!!

கோவையில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் வடவள்ளியை அடுத்த தொண்டாமுத்தூர் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு இருக்கிறது. இங்கே நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றார்கள். குடியிருப்பு வளாகத்துக்குள்ளேயே சிறுவர்கள் விளையாடுவதற்கு பூங்கா ஒன்று இருக்கிறது. இந்த பூங்காவில் பிரதீஷ் – சுகன்யா தம்பதியின் மகன் லக்சன் ஐந்தாம் வகுப்பு படித்துவரும் 10 வயது சிறுவன் விளையாடிக்கொண்டு இருந்தான்.பூங்காவில் பராமரிப்பு சில நாட்களாக இல்லை என கூறப்படுகிறது. அங்கே மின் விளக்குகளுக்கு […]

Categories
சற்றுமுன் சினிமா

FLASH NEWS: பிரபல தமிழ் நடிகர் காலமானார்….. பெரும் சோகம்….!!!!

பிரபல திரைப்பட நடிகர் சக்கரவர்த்தி காலமானார். அவருக்கு வயது 62. உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட அவர் மும்பையில் இன்று காலமானார். 80களில் பிரபலமான இவர் தமிழில் ரிஷிமூலம், முள் இல்லாத ரோஜா உள்ளிட்ட 80 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட பல்வேறு கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : நாளை தமிழகம் வருகிறார் அமித் ஷா….. வெளியான தகவல்….!!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மாலை தமிழகம் வருகிறார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 24-ந் தேதி புதுச்சேரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக நாளை மாலை சென்னை வருகிறார். இதையொட்டி நாளை இரவு சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள CRPF அலுவலகத்தில் தங்குகிறார். அதைத்தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலமாக நாளை மறுநாள் புதுச்சேரிக்கு சென்று நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். அதைத்தொடர்ந்து புதுவை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மகான் அரவிந்தரின் 150-வது ஆண்டு விழா, கதிர்காமம் அரசு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 1 To 8ம் வகுப்புகளுக்கு விடுமுறை….. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நடப்பு ஆண்டில் மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயம் தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதற்கான தேர்வு அட்டவணைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதனால் தேர்வுக்கு குறைந்த அளவிலான நாட்கள் மட்டுமே உள்ளதால் பாடத் திட்டங்களை விரைந்து நடத்தி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ராமஜெயம் கொலை வழக்கு…. துப்பு தருபவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு….!!!!!

ராமஜெயம் கொலை வழக்கில் துப்பு தருபவர்களுக்கு ரூபாய் 50 லட்சம் ரொக்கப்பரிசு அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர் கே என் நேரு சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் புதிய துப்பு கிடைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொலையாளிகள் பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூபாய் 50 லட்சம் ரொக்கப் பரிசும் அறிவிக்கப்பட உள்ளதாகவும், 198 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: மீண்டும் ஆஜரானார் டிடிவி தினகரன்…!!!!

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் அதிகாரிகளுக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. டெல்லி போலீசாரின் முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. மேலும் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் டி.டி.வி.தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இதனையடுத்து டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் டிடிவி தினகரன் கடந்த 12-ம் தேதி ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறையினர் 10 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#JUSTIN: மின்வெட்டு: அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்…!!!!!

தமிழகத்தில் சமீப நாட்களாக நிலவி வரும் மின் வெட்டு தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. தமிழகத்தில் மின் தேவை அதிகரித்துள்ளது. நிலக்கரியை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். வெளிமாநிலத்தில் இருந்து மின்சாரத்தை கொண்டு வர கடந்த ஆட்சியில் மின் பாதை அமைக்கப்பட்டது. மின் வெட்டு காரணமாக விவசாயிகள் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. மின்வெட்டு காரணமாக மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டது. எனவே மின்வெட்டை சரி செய்ய அரசு விரைந்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: அரசுப்பணியில் சேர 1000-க்கும் மேல் போலி சான்றிதழ்கள்…. அதிர்ச்சி…!!!!

மத்திய அரசு பணிகளில் சேர விண்ணப்பித்துள்ள 2,500க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை ஆய்வு செய்ததில், 1,000க்கும் மேலான சான்றிதழ்கள் போலி என அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான போலி சான்றிதழ் உ.பி.யில் அச்சடிக்கப்பட்டிருக்கலாம் என போலீஸ் சந்தேகம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: இனி மாஸ்க் போடலனா ரூ.500 அபராதம்…. தமிழக அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள சூழலில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளன. அதனால் மக்கள் முக கவசம் அணியாமல் அலட்சியமாக உள்ளனர். சென்னையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பொது இடங்களில் மாஸ்க் போடாவிட்டால் 500 ரூபாய் அபராதம் வசூலிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டி….. டாஸ் வென்ற சென்னை…. பந்துவீச்சை தேர்வு….!!!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. அதேபோல் மும்பை அணியும் 6 ஆட்டங்களில் தோற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று இரவு மும்பையில் டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: சென்னை ஐஐடியில் 10 பேருக்கு கொரானா….. வெளியான முக்கிய தகவல்…..!!!!

சென்னை ஐஐடி வளாகத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னை கிண்டி ஐஐடியில் மாணவர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோனா தொற்று உறுதியான 10 பேரில் 3 பேருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை, 7 பேருக்கு லேசான அறிகுறிகள் மட்டும் இருந்துள்ளன. இதையடுத்து ஐஐடி வளாகத்தில் பரிசோதனை அதிகரிக்கவும், கொரோனா தடுப்பு முறையை கண்டுபிடிக்கவும் மருத்துவ செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார் இதனால் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை தொடங்கியது…!!!!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவிடம் இன்று காலை 10 மணிக்கு விசாரணை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சென்னை தி.நகரில் உள்ள வீட்டில் சசிகலாவுடன் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது. கொடநாடு எஸ்டேட்டின் உரிமையாளர் என்ற அடிப்படையில் சசிகலாவிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: மே-1 முதல் பேருந்து கட்டணம் உயர்வு…? பயணிகளுக்கு ஷாக் நியூஸ்…!!!!

மே 1ம் தேதி முதல் பேருந்து, டாக்சி, ஆட்டோ கட்டணங்களை அதிகரிக்க மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி அரசு பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 8 இலிருந்து ரூ.10 ஆகவும் ஆட்டோக்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 25 லிருந்து ரூபாய் 30 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்தததையடுத்து பல மாநிலங்கள் பேருந்து கட்டணத்தை உயர்த்த ஆலோசிக்கும் நிலையில் தமிழ்நாடு அரசும் உயர்த்தலாமா என்று யோசனையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

BREAKING: இன்றைய ஐபிஎல் போட்டி நடைபெறுமா? வெளியான தகவல்…!!!!

பஞ்சாப் அணியை எதிர்த்து இன்று டெல்லி அணி விளையாட இருந்த நிலையில் மேலும் ஒரு வெளிநாட்டு வீரருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.  ரேபிட் பரிசோதனை தொற்று உறுதியான நிலையில் RT-PCR பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் டெல்லி – பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. இதில் டெல்லி அணி வீரருக்கு கொரோனா உறுதியான நிலையில், புனேவில் நடைபெறவிருந்த போட்டி மும்பைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN : பண மோசடி புகார்….. நடிகர் விமல் நேரில் விளக்கம்….!!!!

தயாரிப்பாளர் கோபி கொடுத்த புகார் தொடர்பாக, விசாரணை அதிகாரியிடம்நடிகர் விமல் விளக்கம் அளித்தார். சென்னை பெரவள்ளூரைச்  சேர்ந்த கோபி என்பவர் சினிமா தயாரிப்பாளராக இருக்கிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் களவாணி, களவாணி 2 உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்த விமல், மன்னர் வகையறா என்ற படத்தை எடுத்தபோது என்னிடம் கடனாக 5 கோடி வாங்கினார். அந்த படத்தின் லாபத்தில் பங்கு தருவதாக கூறினார். ஆனால் என்னிடம் வாங்கிய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUSTIN : நலிவுற்ற பயனாளிகளுக்கு….  1 லட்சம் தனி வீடுகள்…. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!!!

கேள்வி நேரத்துடன் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நடைபெற்றுவரும் சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் ஊரக தொழில் வளர்ச்சித் துறை அமைச்சர் தா மோ அன்பரசன் பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில், நில உரிமையுள்ள பொருளாதாரத்தில் நலிவுற்ற பயனாளிகளுக்கு தாமாகவே வீடு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUSTIN : இளநிலை திட்டமிடல் பாடத்திட்டம் அறிமுகம்….. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

கேள்வி நேரத்துடன் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நடைபெற்றுவரும் சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் ஊரக தொழில் வளர்ச்சித் துறை அமைச்சர் தா மோ அன்பரசன் பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலை. கட்டடக்கலை, திட்டமிடல் பள்ளியில், இளநிலை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன்….. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு….!!!!

சிவசங்கர் பாபாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். கடந்த ஜூன் மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் கடந்த அக்டோபரில் அளித்த புகாரின் பதிவான வழக்கில் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு டிசம்பர் 1-ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மக்களே மீண்டும் “மாஸ்க்”…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்ததன் காரணமாக படிப்படியாக குறைந்தது. இதனால் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கொரோனா படிப்படியாக அதிகரிக்க தொடங்கி இருப்பதால் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவ துறை செயலர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழகத்தின் தினசரி கொரோனா பாதிப்பு 25 கீழே இருந்த நிலையில் நேற்று 30 ஆக அதிகரித்துள்ளது. எனவே பொது இடங்கள் மற்றும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்…. சுகாதாரத்துறை அலெர்ட்….!!!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு வெளியீட்டுக்குள்ள சுற்றறிக்கையில், டெல்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்? இன்று முக்கிய ஆலோசனை..!!!!!

இந்தியாவில் கொரோனா 3-வது அலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் திடீரென தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இந்தியாவில் கொரோனாவின் அடுத்த அலை தாக்காமல் இருக்க தனியார் மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வருவது குறித்து டெல்லி அரசு இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தகவல் […]

Categories
உலகசெய்திகள் சற்றுமுன்

BREAKING: துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு…. பெரும் பரபரப்பு…!!!!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய பொருட்கள் மட்டுமல்லாமல் எரி பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக இன்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காக இலங்கை காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஆளுநருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலா? – அண்ணாமலை..!!!

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மயிலாடுதுறையில் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றபோது  அவருடைய கால்வாய் மீது திமுகவினர் கல் மற்றும் கொடிக் கம்பங்களை வீசினர். இதற்கு  அதிமுக மற்றும் பாஜக தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆளுநருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்குமோ என சந்தேகம் ஏற்படுகிறது. ஆளுநர் ரவியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயல்பட்டது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST IN: இந்தியாவை உளவு பார்க்கும் அண்டைநாடுகள்…. வெளியான தகவல்…!!!!

சமூக வலைதளங்கள் மூலம் இந்திய ராணுவ அதிகாரிகளை  சீனா மற்றும் பாகிஸ்தான் தரப்பினர் தொடர்பு கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து அண்டை நாடுகளின் உளவு பார்க்கும் பணிக்கு துணை போனவர்களை கண்டறியும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN : ‘சிங்கக்குட்டி பொறந்தாச்சு’…. ஆண் குழந்தைக்கு அம்மாவான காஜல்….. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். தமிழில் நடிகர் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு கௌதம் கிசுலு என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் அவர் கர்ப்பமாக இருந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் […]

Categories
அரசியல் சற்றுமுன்

BREAKING : முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார்….? இபிஎஸ் கேள்வி….!!!!

ஆளுநர் வாகனம் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு முதல்வர் என்ன பதில் சொல்லப்போகிறார் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக ஆளுநர் மயிலாடுதுறையில் ஞான யாத்திரை தூங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் மர்ம நபர்கள் சிலர் ஆளுநரின் வாகனம் மீது கல்லை எறிந்து, கருப்புக் கொடியை வீசியுள்ளனர். மேலும் இதற்கு பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் முக ஸ்டாலினிடம் கேள்வி ஒன்றை […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன்

BREAKING : வீரருக்கு கொரோனா….. நாளைய ஐபிஎல் போட்டி இடமாற்றம்….!!!

ஐபிஎல் தொடரின் 15 வது சீசன் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. நாளை நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் டெல்லி அணி வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல்-ரவுண்டர். இதனையடுத்து டெல்லி வீரர்களை அவர்கள் தங்கியிருக்கும் அறைகளிலேயே இருக்கும்படி பிசிசிஐ உத்தரவிட்டது. நாளை நடைபெறும் போட்டிக்காக புனே செல்ல தயாராக இருந்த வீரர்கள் அறைகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு தொற்று […]

Categories
அரசியல் சற்றுமுன்

BREAKING : டெல்லி சென்றாலே இடமாறுதலா…..? தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி….!!!

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடிக்கு பதிலாக தமிழிசை சௌந்தரராஜன் கூடுதலாக பொறுப்பேற்றார். அன்று முதல் தற்போது வரை தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராகவும், புதுச்சேரி மாநிலத்தின் துணை செயலாளராகவும் இரண்டு பதவிகளை வகித்து வந்தார். இந்நிலையில் தெலுங்கானா மாநில ஆளுநர் பொறுப்பில் இருந்து தமிழிசை […]

Categories
அரசியல் சற்றுமுன்

BREAKING : ஊ சொல்லவா? ஊஊ சொல்லவா?…. இதெல்லாம் பாடலா….? நாயினார் நாகேந்திரன் கேள்வி….!!!!

ஊ சொல்லவா…. ஊஊ சொல்லவா…. ஆலுமா டோலுமா… ஐசாலக்கடி மாலுமா… என்பதெல்லாம் பாடலா? என்று பாஜக எம்எல்ஏ நாயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்றைய தினம் சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நாகேந்திரன் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது அப்போது பேசிய அவர் ஊ சொல்லவா…. ஊஊ சொல்லவா…. ஆலுமா டோலுமா… ஐசாலக்கடி மாலுமா… என்பதெல்லாம் பாடலா? தமிழ் திரைப்படங்களில் பல பாடல்கள் அர்த்தம் புரியாமல் வருகின்றது. […]

Categories
சற்றுமுன் சினிமா

BREAKING : நடிகர் திலீப்புக்கு எதிரான வழக்கு….. ரத்து செய்ய மறுப்பு….!!!

கடந்த 2017ஆம் ஆண்டு பிரபல மலையாள நடிகை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகர் திலீப் குமார் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இதை தொடர்ந்து அவரின் நண்பர், இயக்குனர் பாலச்சந்திரன் குமார் அளித்த பேட்டியில் நடிகை வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரியை கொலை செய்ய திட்டமிட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் பரபரப்பானது. நடிகர் திலீப் மற்றும் 6 பேர் மீது போலீசார் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : போலீஸ் விசாரணைக்கு சென்றவர் மரணம்…. காவல்துறை விசாரணை….!!!

போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞர் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கஞ்சா வைத்திருந்ததாக காவல் நிலையம் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் என்ற இளைஞர் உயர்ந்துள்ளார். புரசைவாக்கம் சிக்னல் பகுதியில் ஆட்டோவில் கஞ்சா வைத்திருந்ததாக இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்தனர். குற்ற வழக்குகள் உள்ள திருவல்லிக்கேணி ரமேஷ் மற்றும் பட்டினபக்கம் விக்னேஷ் ஆகியோரை விசாரித்தனர். விக்னேஷிடம் முதலில் அயனாவரம் காவல் நிலையத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்திற்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மதுக்கடைகளை மூட நேரிடும்…. உயர்நீதிமன்றம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தின் மலைப்பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை திரும்பப் பெறுவதற்கான திட்டத்தை வகுக்க டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. வருகின்ற ஏப்ரல் 25-ஆம் தேதிக்குள் திட்டத்தை வகுக்கவில்லை என்றால் மதுபான கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மலைப்பகுதிகளில் உள்ள மதுபான கடைகளில் கண்ணாடி பாட்டில்களை வனப்பகுதிகளில் வீசுவதால் வனப்பகுதி மற்றும் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாக நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது. அந்த வழக்கு விசாரணையில் தமிழகத்திற்கு அதிரடி உத்தரவு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழக இளம் டேபிள் டென்னிஸ் வீரர் மரணம்…. பெரும் சோகம்…!!!!

தமிழகத்தின் இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் மேகலாயாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் இன்று உயிரிழந்துள்ளார். மேகாலயாவில் இன்று தொடங்கும் 83ஆவது தேசிய டேபிள் டென்னிஸ் தொடரில் பங்கேற்க காரில் சென்றபோது விபத்து ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவருடைய மரணம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் கார் டிரைவரும் உயிரிழந்துள்ளார்.

Categories
சற்றுமுன் விளையாட்டு

அதிரடியாக ஆடிய சென்னை….. 169 ரன்கள் குவிப்பு….. சென்னை வெற்றி பெறுமா?….!!!

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 5 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இன்று சென்னை அணி குஜராத் அணியுடன் விளையாடி வருகிறது. முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஏப்ரல்-24 இல் கிராமசபை கூட்டம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

நீடித்த வளர்ச்சி இலக்கு தொடர்பாக ஏப்ரல் 24ஆம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டதற்கான விவரங்களை meeting.online.gov.in என்ற இணையதளத்தில் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மீண்டும் விசாரணைக்கு ஆஜராகிறார் டிடிவி தினகரன்….!!!!

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் அதிகாரிகளுக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. டெல்லி போலீசாரின் முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. மேலும் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் டி.டி.வி.தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இதனையடுத்து டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் டிடிவி தினகரன் கடந்த 12-ம் தேதி ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறையினர் 10 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: சுற்றுசூழலை பாதிக்காத மின் மயானங்கள்…. அமைக்க அதிரடி உத்தரவு….!!!

சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாத  மின் மயானங்களைஅமைக்க அனைத்து மாநில யூனியன் பிரதேச அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு உடலை எரியூட்ட 450 கிலோ வரை மரக்கட்டைகள் தேவைப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பை குறைப்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த தீர்ப்பு என்று குறிப்பிட்டுள்ளது.

Categories
சற்றுமுன் விளையாட்டு

BREAKING : ஒரே ஓவரில் 4 4 4 6 6 4….. வெளுத்து வாங்கிய தமிழன்….!!!!

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணியில் அதிரடியாக ஆடிய தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து கெத்துக்காட்டியுள்ளார். முஸ்தாபிஜூர் ரகுமான் வீசிய 18-வது ஓவரில் மட்டும் தினேஷ் கார்த்திக் 4 4 4 6 6 4 என ரன்கள் விளாசினார். தொடர்ந்து பெங்களூரு அணி அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து நிலையிலும் தினேஷ் கார்த்திக் மரண அடி அடித்துள்ளார்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: வைகை ஆற்றில் கம்பீரமாக எழுந்தருளினார் கள்ளழகர்….!!!!

கொரோனா குறைவால் இரண்டு வருடங்களுக்கு பிறகு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடந்தது. ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளினால் மும்மாரி பெய்து விவசாயம் செழிக்கும் என்பது மக்களுடைய நம்பிக்கை. இந்த நிலையில் இன்று கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார். முன்னதாக அழகர் மலையிலிருந்து புறப்பட்ட கள்ளழகர் வழிநெடுக சுமார் 450 மண்டகப்படிகளில் எழுந்தருளி னார். வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளினார். லட்சக்கணக்கான பக்தர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் இந்த […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா ராஜினாமா…. சற்றுமுன் வெளியான தகவல்…!!!!

கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியைச் சேர்ந்த அரசு சிவில் ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டில் அமைச்சர் கே.எஸ் ஈஸ்வரப்பா அரசு ஒப்பந்தங்களை பெறுவதற்கு 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி சந்தோஷ் பாட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவர் தன்னுடைய மரணத்திற்கு கே.எஸ். ஈஸ்வரப்பா தான் காரணம் என கடிதம் ஒன்றினை எழுதி வைத்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அமைச்சர் கே.எஸ் ஈஸ்வரப்பா மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் […]

Categories
சற்றுமுன் சினிமா

BREAKING: ‘KGF 2’ முதல் நாள் வசூல்…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று உலகமெங்கும் வெளியான கே ஜி எஃப் 2 திரைப்படம் இந்தியா முழுவதும் ஒரே நாளில் 134.5 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் இந்திய அளவில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் ஆர் ஆர் ஆர் திரைப்படம் 156 கோடி வசூல் பெற்று முதலிடத்திலும், பாகுபலி 152 கோடி வசூல் பெற்று இரண்டாவது இடத்திலும் உள்ளது. இதையடுத்து மூன்றாவது இடத்தை கே ஜி எஃப் 2 பிடித்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: நரிக்குறவர் இல்லத்தில்…. இட்லி சாப்பிட்ட முதல்வர் ஸ்டாலின்….!!!!

கடந்த மாதம் ஆவடி பகுதியில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் பகுதியில் உள்ள அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யுமாறு முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்ததையடுத்து அவர்களிடம் முதல்வர் முக ஸ்டாலின் தங்களது பகுதிக்கு நேரில் வருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். இந்த நிலையில் இன்று ஆவடி பகுதியில் உள்ள நரிக்குறவர் இன மக்களை முதல்வர் முக ஸ்டாலின் சந்தித்து பேசினார். அதன் பின்னர் திருமுல்லைவாயில் நரிக்குறவர் குடியிருப்பில் மக்களுக்கு  குடும்ப அட்டை, கடன் உதவி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: நரிக்குறவர் இன மக்களுக்கு…. முதல்வர் ஸ்டாலின் அசத்தல்…!!!!!

தமிழகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்தததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த மாதம் ஆவடி பகுதியில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் பகுதியில் உள்ள அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யுமாறு முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்ததையடுத்து அவர்களிடம் முதல்வர் முக ஸ்டாலின் தங்களது பகுதிக்கு நேரில் வருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். இந்த நிலையில் இன்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!!!

சென்னை திருமுல்லைவாயலில்  சிவசக்தி நகரில் சம்பிலிருந்து விஷவாயு தாக்கியதில் பிரமோத், பிரேம்குமார், தந்தை பிரதீப் குமார் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சாரநாத் என்பவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: ஆளுநரை சந்தித்தது ஏன்…? அமைச்சர்கள் விளக்கம்….!!!!

சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என் ரவியை தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் மா சுப்பிரமணியன் ஆகியோர் இன்று சந்தித்துள்ளார்கள். இந்த சந்திப்பின்போது நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களின் நிலை குறித்துப் பேசுவார்கள் என்று கூறப்பட்டது. இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்துக்கு அனைத்துக் கட்சிகளுக்கும் ஆளுநர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா சுப்பிரமணியன் முதல்வரிடம் உறுதி […]

Categories
அரசியல் சற்றுமுன்

#BREAKING: ஆளுநர் ரவியுடன் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு…!!!!!

சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என் ரவியை தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் மா சுப்பிரமணியன் ஆகியோர் இன்று சந்தித்துள்ளார்கள். இந்த சந்திப்பின்போது நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களின் நிலை குறித்துப் பேசுவார்கள் என்று கூறப்படுகிறது. இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்துக்கு அனைத்துக் கட்சிகளுக்கும் ஆளுநர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST IN: புத்தாண்டு, வெற்றிகளையும் சந்தோஷங்களையும் தரட்டும்…. பிரதமர் புத்தாண்டு வாழ்த்து…!!!!

சித்திரை முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகின்றது. இந்நிலையில் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்… குறிப்பாக எனது தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு என்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புத்தாண்டு வெற்றிகளையும், சந்தோஷங்களையும் தரட்டும். அனைத்து லட்சியங்களும் நிறைவேறட்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகம் முழுவதும் இன்று மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதனால் இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுக் கூடங்கள் செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மறைமுகமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: நாளை இங்கு இறைச்சி கடைகள் இயங்காது…. அதிரடி அறிவிப்பு…!!!!

ஏப்ரல் 14ம் தேதியன்று (நாளை) மகாவீரர் ஜெயந்தி தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சென்னை, நாமக்கல், திருப்புத்தூர், தென்காசி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுக் கூடங்கள் மற்றும் உரிம வளாகங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை ஜெயின் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இறைச்சி கடைகள் மூடப்படும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்றம்…? வெளியான தகவல்…!!!!

10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வுகளில் கொடுக்கப்பட்ட பாடங்களை(UNITS) மட்டும் பொதுத்தேர்விற்கும் கேட்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி, பத்தாம் வகுப்பு அறிவியல், பன்னிரண்டாம் வகுப்பு வேதியியல், கணக்குபதிவியல், புவியியல் தேர்வுக்கு மாணவர்கள் தயார் செய்து கொள்ள போதுமான நேரம் இல்லாததால் அத்தேர்வுகளை வேறு தேதிக்கு மாற்ற வலியுறுத்தி உள்ளனர். இதனால் பொது தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |