சென்னை சிட்லபாக்கம் பக்கத்தில் நடந்த 2 மின் விபத்துகளுக்கு மின்சார வாரியம் பொறுப்பல்ல என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி விளக்கமளித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி சிட்லபாக்கம் சேது ராஜ் மரணத்திற்கு சேதமடைந்த மின்கம்பம் தான் காரணம் என்று கூறுவதை மறுத்தார். சேது ராஜ் இறப்பதற்கு முன்பாக அவ்வழியாக சென்ற காங்கிரீட் லாரி மின்கம்பத்தை சேதப்படுத்தி விட்டதாக குறிப்பிட்டு அந்த மின்கம்பம் நல்ல நிலையில் இருந்ததற்கு […]