அம்பேத்காரை கொச்சைப்படுத்தியதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய தொல்.திருமாவளவன், தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கானவர்கள் என்கின்ற அடிப்படையில் திரண்டு நின்று, போர்க்குரல் எழுப்பி கொண்டிருக்கிறோம். ஏன் ? எத்தனையோ போராட்டங்களை இந்த வள்ளுவர் கோட்டம் அருகே நடத்தியிருக்கிறோம். எத்தனையோ பிரச்சினைகளுக்காக நாம் ஒரு நாள் இடைவெளியில் கூட போராட்டத்தை அறிவித்து வெற்றிகரமாக முடித்துவிட்டு இருக்கிறோம். இதுவரையில் நடந்த போராட்டங்களில் இருந்து, இந்த போராட்டங்கள் முற்றிலும் மாறுபட்ட போராட்டம். […]