Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு கவர்ச்சி உடையில் நடனமாடிய பிக்பாஸ் பிரபலம்”…. குவியும் லைக்குகள்…!!!

விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு கவர்ச்சி உடையில் நடிகை ஷிவானி நடனமாடிய வீடியோ வைரலாகி வருகின்றது. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். இதற்கு முன்னதாக விஜய் டிவியில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா, பகல் நிலவு உள்ளிட்டு சீரியலில் ஹீரோயினாக நடித்து வந்த நிலையில் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் கார்த்திக்கு முறைப்பெண்ணாக நடித்திருப்பார். இவர் தற்போது கமலுடன் இணைந்து விக்ரம் திரைப்படத்தில் பணியாற்றி வருகின்றார். சமூக […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கல்லூரி காதல் பற்றி மனம் திறந்த நடிகை சாக்ஷி அகர்வால்”… அப்ப யார் அந்த காதலர்..? கேள்வி கேட்கும் ரசிகர்கள்…!!!

தனது கல்லூரி காதல் பற்றி மனம் திறந்து பேசிய நடிகை சாக்ஷி அகர்வால். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ்-க்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. பங்கேற்பாளராக சாக்ஷி அகர்வால் இருந்தது மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் அவர் கல்லூரியில் படிக்கும் பொழுது ஒருவரை உருகி உருகி காதலித்ததாக கூறி இருக்கின்றார். பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் ஆர்யாவுடன் இணைந்து டெடி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த போது அவர் கூறியுள்ளதாவது, அண்ணா […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

என்னப்பா சொல்றீங்க… “தளபதி 66 படத்தில் அது இல்லையா?”… கசிந்த தகவலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!!

விஜய் நடிக்கும் தளபதி 66 திரைப்படத்தைப் பற்றி தகவல் ஒன்று கசிந்துள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். மேலும் தமன் இசையமைக்க விவேகா பாடல்களை எழுதி இருக்கின்றார். இத்திரைப் படத்தில் 6 பாடல்கள் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அண்மையில் படத்தின் பூஜை சென்னையில் தொடங்கியது. இந்நிலையில்  இத்திரைப்படம் […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள்

பிரபல நடிகையை கடத்தி காரில் பாலியல் தொந்தரவு… “காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருப்பதாக வெளியான தகவல்”…!!!

பிரபல நடிகையை காருக்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில் நடிகை காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. பிரபல மலையாள நடிகை சென்ற 2017 ஆம் வருடம் படப்பிடிப்பு முடிந்து விட்டு காரில் வரும் போது மர்ம கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இந்த வழக்கில் மலையாள நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து போலீஸ் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்தார். இந்த வழக்கின் விசாரணையானது நடைபெற்று […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தமிழ்தான் இணைப்பு மொழி”…. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு குவியும் பாராட்டுக்கள்…!!!

பத்திரிக்கையாளர் கேள்வி கேட்டபோது ஏ.ஆர்.ரகுமான் தமிழ் மொழிதான் இணைப்பு மொழி என்று கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். எந்த இடத்திலும் எந்த சூழ்நிலையிலும் தனது சிரிப்பை மட்டும் கைவிடாமல் இருப்பதால் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. அண்மையில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தமிழன்னை ஓவியத்தை பகிர்ந்திருந்தார். அந்த ஓவியத்தில் தமிழணங்கு என்ற வார்த்தையோடு “இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்” என்ற […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பான் இந்தியா திரைப்படத்தில் நடிக்க உள்ள தனுஷ்”… அட வேற லெவல் ஜாக்பாட்…!!!

தனுஷ் நடிக்கவிருக்கும் பான் இந்தியா திரைப்படம் பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம். இத் திரைப்படமானது சுதந்திரத்திற்கு முன்னதாக உள்ள காலகட்டத்தில் நடக்கும் கதையைப் படமாக்குகிறார்கள். இந்த படத்தில் தனுஷ் கடற்படை அல்லது இராணுவத்தின் கேப்டனாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்திரைப்படத்தை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா கேட்ட சம்பளம்”… பரபரப்பாக பேசும் கோடம்பாக்கத்தினர்…!!!

ஜெயம் ரவி, நயன்தாரா இணையும் திரைப்படத்திற்கு நயன்தாரா கேட்ட சம்பளம் கோடம்பாக்கத்தினரிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி அகமது இயக்கத்தில் ஜனகனமன திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில் கொரோனா தாக்கத்தின் காரணமாக சூட்டிங் பாதிக்கப்பட்டு நின்றது. இந்நிலையில் இந்த திரைப்படம் முடிவடைவதற்குள் இவர்கள் இருவரும் அடுத்த திரைப்படத்தில் பணிபுரிய இருக்கின்றனர். அத்திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். அந்த படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கின்றது. இந்த நிலையில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நேர்காணலில் அப்பா பற்றி பேசிய விஜய்”… எஸ்.ஏ.சி மிகவும் மகிழ்ச்சி… என்ன சொன்னாங்க தெரியுமா…???

நேர்காணலில் விஜய் பேசியதைப் பார்த்த எஸ்.ஏ.சி மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார். விஜய் நேர்காணல் ஒன்றில் பேசியது அவரின் அப்பாவான சந்திரசேகருக்கு மிகவும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளதாம். விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக சன் டிவி தொலைக்காட்சிக்கு சிறப்பு நேர்காணல் அளித்திருந்தார் விஜய். 10 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் சந்திக்கும் நேர்காணலில் இயக்குனர் நெல்சன் தான் தொகுப்பாளராக இருந்தார். நேர்காணலில் விஜயிடம் அப்பா எஸ்.ஏ.சிக்கும் உங்களுக்கும் இடையிலான மனஸ்தாபம் பற்றி கேள்வி எழுப்பினார். அப்போது […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தனுஷை தொடர்ந்து ரஜினியும் கொண்டாட்டம்”… சந்தோசத்தில் ரசிகர்கள்…!!!

நேற்று முன்தினம் தனுஷ் ரசிகர்கள் கொண்டாடிய நிலையில் நேற்று ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சென்ற 2021 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி வெளியான கர்ணன் திரைப்படமானது ரசிகர்களிடையே கொண்டாடப்பட்ட திரைப்படமாகும். இத்திரைப்படம் ரிலீஸாகி 1 வருட காலம் முடிவடைந்ததால் தனுஷ், ‘மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் தாணு, சந்தோஷ் நாராயணன் மற்றும் பட குழுவினருக்கு நன்றி கூறி ட்விட்டர் பதிவு செய்திருந்தார். நேற்று முன்தினம் கர்ணன் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“புரோமோவில் விஜய் செய்த காரியம்”… ரசிகர்களை கவர்ந்த சேட்டை…!!!

பீஸ்ட் திரைப்படத்தின் புரோமோ வீடியோவில் விஜய் செய்த காரியம் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்க பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படமானது வருகின்ற ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்றை சன் பிக்சர்ஸ் வெளியிட்டிருக்கின்றது. அந்தப்புரோமோவில் பூஜா ஹெக்டே பயமாக இருந்தால் என் கையை வேணும்னா பிடிச்சுக்கோங்க சார்ன்னு சொல்ல அதற்கு விஜய் நான் வேணும்னா […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பீஸ்ட் படம் போய் பாருங்க”… அரைநாள் விடுமுறை விட்ட தனியார் நிறுவனம்…!!!

தனியார் நிறுவனம் ஒன்று விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தை பார்க்க அரைநாள் விடுமுறை தந்துள்ளது. தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகரான விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைத்த இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இத் திரைப்படமானது வருகின்ற ஏப்ரல் 13ம் தேதி ரிலீசாக உள்ளது. அதனால் படத்தை முதல் நாளே பார்க்க வேண்டும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை வாங்கி வருகின்றார்கள். இதனால் கல்லூரி […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விஜய் பற்றி செல்வராகவன் சொன்னது சரிதான்”… கூறும் ரசிகர்கள்…!!!!

விஜய் பற்றி செல்வராகவன் சொன்னது சரிதான் என்கிறார்கள் ரசிகர்கள். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் ஹீரோவாக நடிக்க ஹீரோயினாக பூஜா கெக்டே நடிக்க வில்லனாக செல்வராகவன் மிரட்ட இருக்கும் திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் வீரராகவன் என தகவல் வெளியானது.இந்த திரைப்படமானது வருகின்ற ஏப்ரல் 13ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றது. அந்த புரோமோவில் விஜய் வில்லங்கமாகவே பேசுகின்றார். இதைப் பார்த்த […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ரஜினியின் ‘அருணாச்சலம்’ வெளியாகி 25 ஆண்டாச்சு”… மீண்டும் இணையுமா அந்த கூட்டணி…!!!

ரஜினி நடித்த அருணாச்சலம் திரைப்படம் வெளியாகி 25 வருடங்கள் ஆகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்பா, ரகுவரன், ரவிச்சந்திரன் ஆகியோர் நடிப்பில் அருணாச்சலம் திரைப்படமானது 1997ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 10 தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ரஜினி அப்பாவாக வேதாச்சலம் கதாபாத்திரத்திலும் மகனாக அருணாசல கதாபாத்திரத்திலும் நடித்து இருந்தார். ரஜினி எப்படி இருக்க வேண்டும் என ரசிகர்கள் நிஜத்தில் எதிர்பார்க்கிறார்களோ அதை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“லெஜெண்ட்” திரைப்படம்… “அண்ணாச்சியுடன் ஐட்டம் பாடலுக்கு நடனமாடிய பிக்பாஸ் பிரபலம்”…!!!

லெஜெண்ட் திரைப்படத்தில் ஐட்டம் பாடல் ஒன்றிற்கு பிக்பாக்ஸ் பிரபலமான யாஷிகா ஆனந்த் நடனமாடி உள்ளதாக தகவல் வந்துள்ளது. லெஜண்ட் திரைப்படத்தில் தி லெஜன்ட் சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் அருள் நடிக்கின்றார். இத்திரைப்படத்தை ஜேடி ஜெர்ரி இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா நடிக்கின்றார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கின்ற நிலையில் படத்தின் அப்டேட்கள் அவ்வபோது வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் டிராக் நேற்று வெளியாகியது. இதை எஸ்.எஸ்.ராஜமவுலி, இயக்குனர் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ஜெயம் ரவி நடிக்கும் அகிலன்… ஓடிடியில் ரிலீஸாக உள்ளதாக தகவல்…!!!

ஜெயம் ரவி நடிக்கும் அகிலன் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி தற்போது அகிலன் திரைப்படத்தில் கல்யாண் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் சிராஜ் ஜானி வில்லனாக மிரட்டுகிறார். பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடிக்க ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கின்றார். கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகிவரும் இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தனுஷின் போட்டோவை பகிர்ந்து செல்வராகவன் போட்ட டுவிட்”… இணையத்தில் வைரல்…!!!

தனுஷின் புகைப்படத்தை பகிர்ந்து செல்வராகவன் போட்ட ட்விட்டர் பதிவானது வைரலாகி வருகின்றது. துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் தனுஷ். அதன் பிறகு தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார் தனுஷ். அதன் பிறகே இவர்கள் இணைந்து படம் பண்ணாத நிலையில் பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் நானே வருவேன் திரைப்படத்தின் மூலம் இருவரும் இணைந்திருன்றார்கள். For a long time […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விஜய்க்கு பீஸ்ட் படத்தில் ஒரே ஒரு காஸ்டியூம் தான்”… பேட்டியில் கூறிய நெல்சன்…!!!

பீஸ்ட் திரைப்படத்தை பற்றி பல சுவாரசியமான தகவல்களை நெல்சன் மற்றும் பூஜா ஹெக்டே பகிர்ந்து கொண்டுள்ளனர். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய், நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது. சமீபத்தில் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வருகின்ற 13-ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்கில் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் பூஜா ஹெக்டே […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அட சொல்லவே இல்ல… “திடீரென சம்பளத்தை உயர்த்திய நயன்”…. என்னாது இத்தனை கோடியா…!!!

நயன்தாரா எந்த ஒரு அறிவிப்பும் இன்றி தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் தற்போது பாலிவுட்டிலும் தடம் பதித்து வருகின்றார். இவர் தனது காதலரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் கூடிய விரைவில் ரிலீசாக உள்ளது. நயன்தாரா முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பதற்கு 10 கோடி சம்பளமாக வாங்கி வந்த நிலையில் தற்போது திடீரென […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கிறிஸ் ராக்கை பளார் விட்ட வில் ஸ்மித்”… ஆஸ்கர் அகாடமி வில் ஸ்மித்க்கு பத்து ஆண்டு தடைபோட்டு அதிரடி நடவடிக்கை…!!!

ஆஸ்கர் விருது விழா மற்றும் பிற நிகழ்ச்சிகளில் வில் ஸ்மித் பங்கேற்க 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் 94 வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த விழாவை நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் தொகுத்து வழங்கினார். இந்த விருது விழாவில் நடிகர் வில் ஸ்மித் தனது மனைவியுடன் சிறந்த நடிகருக்கான விருது வாங்க வந்திருந்தார். அப்போது கிறிஸ் ராக், வில் ஸ்மித் மனைவியின் ஹேர் ஸ்டைலை கிண்டல் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“மீண்டும் தேசிய விருதுக்கு தயாராக உள்ள ஜிகர்தண்டா 2″… ஹீரோ யார் தெரியுமா…???

ஜிகர்தண்டா 2 திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. கார்த்திக் சுப்பராஜ் இயக்க சித்தார்த் ஹீரோவாக நடிக்க பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ஜிகர்தண்டா. இத்திரைப்படத்தை சந்தோஷ் நாராயணன் இசையமைக்க கதிரேசன் தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளை தட்டிச்சென்றது. ஒன்று சிறந்த துணை நடிகருக்கான பாபி சிம்ஹாவுக்கும் மற்றொன்று பட தொகுப்பிற்கும் கிடைத்தது. இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏழு […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

வைபவ் நடிக்கும் “பபூன்” திரைப்படம்… படத்தின் பாடலை வெளியிட்ட பிரபல இசையமைப்பாளர்…!!!

வைபவ் நடிக்கும் பபூன் திரைப்படத்தின் பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார். ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள பபூன் திரைப்படத்தை அசோக் வீரப்பன் இயக்க வைபவ் கதாநாயகனாக நடிக்க கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிக்கின்றது. நடிகை அனகா ஹீரோயினாக நடிக்க ஆந்தகுடி இளையராஜா, ஜோஜு ஜார்ஜ், நரேன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர். படப்பிடிப்பு பணிகள் வெகுவாக நடந்து வருகின்ற நிலையில் டீசர் ஏற்கனவே வெளியாகியதை தொடர்ந்து தற்போது இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா பேட்டி விமர்சனம்

“நேரடியாக ரசிகனுக்கு அறிக்கை கூட வெளியிட முடியாதா?”… விஜய்யை விமர்சித்த பிரபல தயாரிப்பாளர்…!!!

விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி மூலம் அறிக்கையை வெளியிட்டததால் கே.ராஜன் விமர்சித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த கே.ராஜனிடம் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை பற்றி கேட்டபோது அவர் கூறியுள்ளதாவது, ஒரு ரசிகனுக்கு அறிக்கையை வெளியிட ஒரு ஆள் வேண்டுமா? நீ நேரடியாக அறிக்கை வெளியிட முடியாதா? ரசிகர்கள் உன் வீட்டு வேலைக்காரனா? என விளாசியுள்ளார். உச்சநட்சத்திரமான விஜய் அண்மையில் திருமண வரவேற்பு ஒன்றில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். இதற்குப் பிறகு ரசிகர்கள் யாரும் அரசியல் தலைவர்களை விமர்சிக்க […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா பேட்டி

“அந்த விஷயத்திற்காக முதல்வரை விஜய் சந்திக்கவில்லை”… பேட்டியில் கூறிய பிரபல தயாரிப்பாளர்…!!!

நடிகர் விஜய் ஸ்டாலினை சந்தித்தது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் கே.ராஜன். பிரபல தயாரிப்பாளரான கே.ராஜன் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம் பீஸ்ட் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருவது குறித்து கேள்வி கேட்ட பொழுது அவர் கூறியுள்ளதாவது, சென்சாருக்கு சென்று வந்த பிறகு படத்தை தடை செய்யக்கூடாது என தெரிவித்துள்ளார். கோடி கோடியாக பணம் போட்டு படம் எடுத்தால் தடை செய்வீர்களா? அனுமதி தந்த சென்சார் போர்டுகிட்ட போய் போராடுங்கள் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஜெய் நடிக்கும் குற்றம் குற்றமே”… திரைப்படம் நேரடியாக பிரபல தொலைக்காட்சியில் ரிலீஸ்…!!!

ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள குற்றமே குற்றம் திரைப்படம் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. வீரபாண்டியபுரம் திரைப்படமானது சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் அண்மையில் வெளியாகி தோல்வியை தழுவியதால் அடுத்த திரைப்படத்தில் கண்டிப்பாக வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார் ஜெய். இவர் தற்போது எண்ணித் துணிக, பிரேக்கிங் நியூஸ், மேலும் பெயரிடப்படாத திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். வீரபாண்டியபுரம் படத்தில் இணைந்த இயக்குனருடன் மீண்டும் குற்றமே குற்றம் திரைப்படத்தில் நடித்துள்ளார் ஜெய். இத்திரைப்படத்தில் திவ்யா துரைசாமி ஹீரோயினாக […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

எஸ்.ஜே.சூர்யாவின் ‘கடமையை செய்’… “ரிலீஸ் பற்றி வெளியான அறிவிப்பு”…!!!

எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் கடமையை செய் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வந்த எஸ்.ஜே.சூர்யா தற்போது கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்து வருகின்றார். அண்மையில் வெளியான மாநாடு திரைப்படத்தில் தனது கலக்கமான நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டி இருந்தார். இவர் தற்போது வெங்கட்ராகவன் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தில் யாஷிகா ஆனந்த் ஹீரோயினாக நடிக்க மொட்டை ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், ராஜசிம்மன், மோகன் வைத்யா, சேஷு, ராம்ஜி, […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா தேசிய செய்திகள்

“தமிழணங்கு”… இந்தித் திணிப்புக்கு எதிராக ட்விட் செய்த ஏ.ஆர்.ரகுமான்…!!!

இந்தி திணிப்புக்கு எதிராக ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டரில் போட்டோ ஸ்டில் தற்போது வைரலாகி வருகின்றது. அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி பேசாத மாநிலங்கள் இனி இந்தி பேச வேண்டும் எனவும் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை கொண்டு வரும் நேரம் வந்துவிட்டதாகவும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்திய பேச வேண்டும் எனவும் கூறியிருந்தார். இவரின் இந்த பேச்சால் தென்னிந்தியாவில் பெரும் எதிர்ப்பு கிளம்பி இருக்கின்றது. இணையத்தின் மூலம் தங்களின் எதிர்ப்புகளை பலரும் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“மொக்க கதையைக் கூட கேட்குமாறு ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அறிவுறுத்திய பிரபல நடிகர்”… யார் தெரியுமா…???

விஜய் சேதுபதி ஐஸ்வர்யா ராஜேஷிடம் மொக்க கதையைக் கூட கேட்குமாறு டிப்ஸ் கொடுத்துள்ளார். தமிழ் சினிமா உலகில் விஜய்சேதுபதியும் ஐஸ்வர்யாவும் வித்தியாசமான திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள். அதனால் இவர்கள் இருவரும் இணைந்து நடித்தால் ரசிகர்களிடையே பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றது. இவர்கள் இருவரும் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை, க/பெ ரணசிங்கம் என இணைந்து நடித்த அனைத்து திரைப்படங்களுமே வெற்றியைப் பெற்று தந்தது. இவர்கள் இருவரும் நடித்த க/பெ ரணசிங்கம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்திலும் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பிரபல திரைப்பட இயக்குனர் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு”… திரையுலகினர் இரங்கல்…!!!

பிரபல திரைப்பட இயக்குனர் பாபா விக்ரம் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வந்த பாபா விக்ரம் தென்காசியை சேர்ந்தவர். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கதை வசனத்தில் கண்ணம்மா என்ற திரைப்படத்தை இயக்கியும் தயாரித்தும் இருந்தார். இத்திரைப்படத்தில் கருணாஸ், கோவை சரளா, நாசர், ராதாரவி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். 2005ஆம் வருடம் வெளியான இத்திரைப்படம் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்ட து. இந்நிலையில் தற்போது அதிர்ஷ்டம் என்ற […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“என் படம் டிராப் ஆனதற்கு மோடிதான் காரணம்”… பிக்பாஸ் பிரபலத்தின் பேச்சால் பரபரப்பு…!!!

செய்தியாளர் சந்திப்பின்போது பிக்பாஸ் பிரபலம் ஆரி, என் படம் டிராப் ஆனதற்கு காரணம் மோடி தான் என கூறியுள்ளார். பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி சூர்யா பிலிம்ஸ் புரோடக்சன் தயாரிப்பில் பயஸ் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள சிட்தி திரைப்படத்தின் சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பேசியது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. அவர் பேசியுள்ளதாவது, “நான் உள்ளே வரும்போதே யார் யார் வந்திருக்கிறார்கள் என கேட்டேன். ராஜன் சார் உதயகுமார் சார் வந்து இருக்கிறார்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

பேட்டியில் கூறிய பதில்… “தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்த மகேஷ் பாபு”…வேற லெவெல்ப்பா…!!!

ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தபோது மகேஷ் பாபு கூறியது தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்துள்ளது. தெலுங்கு சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் என்று மக்களால் அழைக்கப்படுபவர் மகேஷ்பாபு. இவரை இந்தியா முழுவதும் அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர் பாலிவுட் திரைப்படங்களில் நடித்தது இல்லை. இந்நிலையில் ஹைதராபாத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த போது அவரிடம் பாலிவுட்டுக்கு செல்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் கூறியுள்ளதாவது, நேரடி இந்திப் திரைப்படங்களில் நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பதன் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

விஷால் நடிக்கும் “லத்தி”… வெளியாகிய படத்தின் அப்டேட்…!!!

விஷால் நடிக்கும் “லத்தி” திரைப்படத்தை பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகரான விஷால் தற்போது அறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் “லத்தி” திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சுனைனா ஹீரோயினாக நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ராணா தயாரிப்பு நிறுவனம் படத்தை தயாரிக்கின்றது. அண்மையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிய நிலையில் தற்போது படத்தைப் பற்றிய தகவல் கிடைத்திருக்கிறது. காவலர் கதாபாத்திரத்தில் விஷால் இந்த படத்தில் நடிக்கின்றார். ஒரு காவலர் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ரோஷன் செய்த காரியம்… கோபத்தில் இருக்கும் நயன்… “கர்மா சும்மா விடுமா…?”

ரோஷன் செய்த காரியத்தால் கோபத்தில் இருக்கும் நயன்தாரா.` தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நயன்தாரா இயக்குனர் யுவராஜ் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நயன்தாராவை ஒருதலையாக காதலிக்கும் கதாபாத்திரம் இருக்கின்றது. இந்த கதாபாத்திரத்தில் விஜய் டிவியின் பிரபலம் ஒருவரை நடிக்க வைக்க இயக்குனர் திட்டமிட்டிருந்தார்.ஆனால் நயன்தாரா அவருடன் நடிக்க முடியாது என கூறிவிட்டார். மேலும் ரோஷன் மேத்யூடன்  நடிக்க வைக்குமாறு நயன்தாரா கூறியுள்ளார். அதனால் இயக்குனர் யுவராஜ் அவரிடம் பேசியபோது நயன்தாராவுடன் நடிக்க முடியாது என்று […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ஐஸ்வர்யா பகிர்ந்த வீடியோ… “தனுஷ் கண்டிப்பா இதுக்கு ஒரு மீம் போடுவாரு”…. விளாசும் நெட்டிசன்ஸ்…!!!

ஐஸ்வர்யா பகிர்ந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவும் நடிகர் தனுஷும் 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஜனவரி மாதம்பிரிவதாக அறிவித்தனர். பிரிவுக்குப் பின் ஐஸ்வர்யா இயக்கத்தில் கவனம் செலுத்தி வருகின்றார். அண்மையில் இவர் இயக்கத்தில் ஆல்பம்பாடல் வெளியாகியிருந்த நிலையில் அடுத்ததாக லாரன்ஸுடன் துர்கா படத்தில் பணியாற்ற உள்ளார். இதைத்தொடர்ந்து இரண்டு ஹாலிவூட் திரைப்படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார். […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பீஸ்ட் படத்தின் டிக்கெட் விலையை உயர்த்திய புதுச்சேரி தியேட்டர்”… வைரலாகும் பேனர்…!!!

விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தின் டிக்கெட் விலையை உயர்த்தி புதுச்சேரி தியேட்டர் வைத்த பேனர். விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகின்ற 13ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் அம்மாநிலத்தின் முதலமைச்சர் ரங்கசாமி புகைப்படத்தையும் விஜய்யின் புகைப்படத்தையும் வைத்துள்ள பேனர் தற்போது வைரலாகி வருகின்றது. தியேட்டரில் 13-ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை ஆறு காட்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதித்திருக்கின்றது. இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் வேண்டுகோளை நிறைவேற்றும் விதமாக திரையரங்க […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

முகேன் ராவ் நடிக்கும் “மதில் மேல் காதல்”… “இன்று மாலை வெளியாகும் டீசர்”… வெளியான சூப்பர் அப்டேட்…!!!

முகேன் ராவ் நடிக்கும் மதில் மேல் காதல் திரைப்படத்தின் டீஸர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. முகேன் ராவ் ஆல்பம் பாடல்களில் பணியாற்றி வந்து பின்னர் பிக்பாக்ஸ் மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவில் ஹீரோவாக “வேலன்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து தற்போது மதில் மேல் காதல் என்ற திரைப்படத்தில் இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தை சீரடி புரொடக்ஷ்ன் தயாரிக்க கே.பிரசன்னா இசையமைக்கின்றார். […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

பிரசாந்த் நீல் “சலார்” திரைப்படம் குறித்து வெளியிட்ட அப்டேட்… குஷியில் ரசிகர்கள்…!!!

பிரசாந்த் நீல் “சலார்” திரைப்படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். கேஜிஎஃப் திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில் கேஜிஎஃப்2 திரைப்படம் உருவாகியிருக்கின்றது. இத்திரைப்டமானது யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் நேற்று நடந்த இந்தப் படத்தின் பிரமோஷன் விழாவில் இயக்குனர் பிரசாந்த் நீல் பேசியுள்ளதாவது, இவரின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் சலார் திரைப்படத்தை பற்றி அப்டேட்டை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“என்னாது பீஸ்ட் படத்தை பார்க்க விஜய் வருவாரா?”… வெளியான தகவல்…!!!

பீஸ்ட் திரைப்படத்தை விஜய் மாறுவேடத்தில் வந்து பார்ப்பார் என கூறப்படுகின்றது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் ஆரம்பக் கட்டத்தில் சினிமாவிற்கு வந்த போது பல விமர்சனங்களுக்கு உள்ளாகி அதையும் தாண்டி தன் விடாமுயற்சியின் மூலம் வெற்றிகண்டவர். இந்நிலையில் இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் விஜய் தனது படம் ரிலீஸ் ஆகும் பொழுது முதல் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தான் நடிக்கும் தமிழ் படங்களில் சொந்தமாக டப்பிங் பேசுவேன்”… புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய யாஷ்…!!!

நடிகர் யாஷ் இனி தமிழில் தான் நடிக்கும் திரைப்படங்களில் தானே டப்பிங் பேச உள்ளதாக கூறியுள்ளார். பிரபல நடிகரான யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கே ஜி எஃப் 2. இத்திரைப்படத்தில் சஞ்சய்தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கின்றார்கள். கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 5 மொழிகளில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தென்னிந்திய சினிமாவில் எனக்கு பிடித்த ஹீரோ இவர்தான்”… பேட்டியில் கூறிய இயக்குநர் ராம் கோபால் வர்மா…!!!

இயக்குனர் ராம் கோபால் வர்மா, தென்னிந்திய சினிமாவில் தனக்கு பிடித்த நடிகர் பற்றி கூறியுள்ளார். இந்திய சினிமா உலகின் பிரபல இயக்குனரான ராம்கோபால் வர்மா தன்னுடைய படங்களிலும் கருத்துக்களிலும் சர்ச்சைகளில் சிக்கிவிடுவார். இந்நிலையில் தற்போது அவர் இயக்கத்தில் ரிலீசாகி உள்ள “காதல் காதல் தான்” என்ற படம் உறவைப் பற்றிக் கூறுவது ஆபாசமாக இருப்பதாக இதை தடை செய்ய கோரி பலர் கூறி வருகின்றனர். பிரச்சனையில் சிக்கியுள்ள இந்த படம் பற்றி ராம்கோபால் வர்மா கூறியுள்ளதாவது, “ஆணுக்கும் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“மீண்டும் உண்மை கதையில் சூர்யா படம்”… படத்தின் அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர்…!!!

சூரரை போற்று படத்தை தொடர்ந்து அடுத்து சூர்யா நடிக்கும் படம் குறித்து இயக்குனர் சுதா கொங்கரா கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான சூர்யா அடுத்தடுத்த படங்களில் நடித்து வெற்றி படங்களாக்கி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று உண்மைக்கதையை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து ஜெய்பீம் திரைப்படமும் உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட நிலையில் அதுவும் மக்களிடையே நல்ல ரீச்சை பெற்றது. இந்நிலையில் பாலாவின் திரைப்படத்தைத் தொடர்ந்து […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“உ சொல்றியா மாமா” தொடர்ந்து… இளசுகளுக்காக புதிய பாடலை பாடிய ஆண்ட்ரியா…!!!

“உ சொல்றியா மாமா” பாடலை தொடர்ந்து அந்த மாதிரி புதிய ஐட்டம் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார் ஆண்ட்ரியா. தமிழ் சினிமாவில் நடிகை, பாடகி என தனக்குள் பன்முகத்தன்மையை கொண்டு விளங்குகின்றார் ஆண்ட்ரியா. ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகின்ற நிலையில் அண்மையில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் ” உ சொல்றியா மாமா” என்ற பாடலை பாடியிருந்தார். இந்தப்பாடல் கிராமம் வரை ரீச்சாகி முணுமுணுக்க செய்து வருகின்றது. இந்நிலையில் அறிமுக இயக்குனர் ஹாரூன் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பீஸ்ட் கதையை லீக் செய்த தியேட்டர்”… அப்ப கதை இதுதானா…? ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

விஜய் படத்தின் கதையை அமெரிக்க திரையரங்கம் கசியவிட்டு இருக்கின்றது. பிரபல இயக்குனரான நெல்சன் திலீப்குமார் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி வருகின்றார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் அடுத்த வாரம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்தை அமெரிக்காவில் வருகின்ற 12ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் படத்தின் கதையை அமெரிக்காவின் கேலக்ஸி தியேட்டர் லீக் செய்துள்ளது. தீவிரவாத […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள்

“தொழிலதிபரின் அனுமதியால் அவரின் மனைவியுடன் உடலுறவு செய்தேன்”…. தெஹ்சீன் ஓபன் டாக்…!!!!

லாக் ஆப் நிகழ்ச்சியில் கூறிய ரகசியத்துக்கு விளக்கமளித்துள்ளார் தெஹ்சீன். லாக் ஆப் நிகழ்ச்சியை கங்கனா ரனாவத் தொகுத்து வழங்கி வருகின்றார். இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் தெஹ்சீன் பூனாவாலா கூரிய ரகசியம் ஒன்று தவறாக புரிந்து கொண்டு விட்டதாகவும் ரியாலிட்டி ஷோவுக்காக நான் அப்படி பேசியதாகவும் அவர் கூறியுள்ளார். இவர் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய தொழிலதிபர் மனைவியுடன் உடலுறவு கொண்டேன் என கூறினார். இது பற்றி விளக்கமளிக்கும் போது அதில் கூறியுள்ளதாவது, நான் சொன்ன விஷயம் மிகவும் பழையது […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஏன் விஜய் அண்ணா இப்படி இருக்காரு…?” அவருக்கு என்னதான் ஆச்சு?”… கவலையில் ரசிகர்கள்…!!!

சன் டிவி புரோமோ வீடியோவில் விஜயை பார்த்த ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் வருகின்ற ஏப்ரல் 13ஆம் தேதி ரிலீசாக உள்ள திரைப்படம் பீஸ்ட். இந்நிலையில் சன் தொலைக்காட்சிக்கு 10 வருடங்களுக்கு பிறகு பேட்டி அளித்துள்ளார் விஜய். சன் டிவியில் ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியில் நெல்சன் பேட்டி எடுக்க விஜய் பங்கேற்றுள்ளார். அப்போது நெல்சன் வாக்களிப்பதற்காக காரில் செல்லாமல் ஏன் சைக்கிளில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஐஸ்வர்யா செய்ததை பின்பற்றும் சௌந்தர்யா”… என்ன பழக்கம் தெரியுமா…???

ஐஸ்வர்யாவை தொடர்ந்து சௌந்தர்யாவும் ஒரு பழக்கத்தை தன் கையில் எடுத்துள்ளார். இயக்குனர் ஐஸ்வர்யாவுக்கு யோகாவும் சைக்கிளிங்கும் பிடித்த விஷயங்கள். ஐஸ்வர்யாவிற்கு அதிகாலையில் யாரும் இல்லாத போது தனியாக சைக்கிளிங் செய்வது மிகவும் பிடித்தமான ஒன்று. இதனால் அடிக்கடி சைக்கிளிங் சென்று விடுவார். சைக்கிளிங் செய்யும்போது இவருக்கு சந்தோசமாகவும் நிம்மதியாகவும் இருப்பதாக தெரிவித்திருக்கும் நிலையில் ஐஸ்வர்யாவை தொடர்ந்து தங்கை சௌந்தர்யாவுக்கும் சைக்கிளிங் செல்ல ஆசை வந்துவிட்டதாம். அக்கா மாதிரி ப்ரோபசனாளாகா இல்லை என்றாலும் ஒரு நாள் அக்காவின் இடத்திற்கு […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பீஸ்ட் கதைப்பற்றி கூறிய நெல்சன்”… பகிர்ந்த சுவாரசியமான தகவல்…!!!!

பீஸ்ட் திரைப்படம் குறித்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை கூறியுள்ளார். பிரபல இயக்குனரான நெல்சன் திலீப்குமார் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி வருகின்றார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் அடுத்த வாரம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் பீஸ்ட். இந்நிலையில் இத்திரைப்படம் குறித்த தகவல்கள் சிலவற்றை நெல்சன் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, இந்த படத்தின் கதையை முழுக்க முழுக்க விஜய்யை நினைத்து எழுதினாராம். […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ரஜினியின் தலைவர்-169… “முதல் கட்ட பணிகள் ஆரம்பம்”…!!!

ரஜினியின் 169 திரைப்படத்தின் முதல் கட்ட பணிகள் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் நெல்சன் திலீப்குமார் தற்போது பீஸ்ட் திரைப்படத்தை முடித்துள்ள நிலையில் ரஜினியின் 169-வது திரைப்படத்தை இயக்க உள்ளார். ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் ரஜினி அடுத்த திரைப்படத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என இளம் இயக்குனரான நெல்சன் திலீப்குமாரை தேர்ந்தெடுத்துள்ளார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பாலிவுட் படத்தை தழுவி எடுத்த பாலுமகேந்திரா”… அதே வேலையைச் செய்யும் விக்னேஷ் சிவன்…!!!

காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தைப் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து டப்பிங் பணிகள் நடந்து வருகின்றது. இப் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், டீசரில் இந்த படம் நகைச்சுவை திரைப்படமாக இருக்கும் என்பது தெரிகின்றது. இந்நிலையில் பாலுமகேந்திரா ஹாலிவுட் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“வினய் பிரபல நடிகையை காதலிக்கின்றாம்”… கூடிய விரைவில் திருமணம்…!!!

நடிகர் வினய் பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ள போகிறாராம். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வந்த வினய் தற்போது வில்லனாக மிரட்டிய வருகின்றார். மிஸ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தி இருந்தார். சமீபத்தில் இவர் வில்லனாக நடித்த டாக்டர், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் 42 வயதாகும் இவர் 40 வயதாகும் பிரபல நடிகை விமலா ராமனை காதலித்து வருகின்றாராம். சில வருடங்களாக […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“மேடையில் நடனமாடிய ரஜினியின் பழைய வீடியோ”… இணையத்தில் செம வைரல்…!!!

முன்னதாக நடித்த திரைப்படத்தின் நிகழ்ச்சியின் மேடையில் ரஜினி நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் மட்டுமல்லாமல் உலக அளவில் தனக்கென தனிப் பெயரை தக்க வைத்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் திரையுலகில் முதலில் குணசித்திர வேடத்தில் தோன்றி பிறகு வில்லனாக நடித்து ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இவரின் நடிப்பில் அண்மையில் அண்ணாத்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இதையடுத்து நெல்சன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார் ரஜினி. […]

Categories

Tech |