Categories
சினிமா செய்திகள் டிரெய்லர் தமிழ் சினிமா

கருணாஸ் நடிப்பில் உருவாகியுள்ள “ஆதார்”… டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பு…!!!

கருணாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஆதார் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகரான கருணாஸ் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் ஆதார் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்கும் கருணாஸ் ஆதார் திரைப்படத்தில் முதன்மையான வேடத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தை பிஎஸ் ராம்நாத் இயக்குகின்றார். ஹீரோயினாக ரித்விகா அடிக்கின்றார். இத்திரைப்படத்தில் அருண்பாண்டியன், ஆனந்த்பாபு, திலீப், பிரபாகர், மனிஷா யாதவ் ஆகியோர் நடிக்கிறார்கள். சசிகுமார் […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்ட இளையராஜா… பிரபல இயக்குனர் எதிர்ப்பு… இயக்குனருக்கு எதிர்ப்பு தெரிவித்து இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்…!!!

பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா போட்ட ட்விட்டர் பதிவிற்கு பிரபல இயக்குனர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இயக்குனர் நவீன் முகமதலி மூடர்கூடம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தற்போது தயாரிப்பாளராகவும் வலம் வருகின்றார். இவர் தற்போது அக்னி சிறகுகள் என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். சினிமா, அரசியல், சமூகம் சார்ந்த பிரச்சனைகள் பற்றி ட்விட்டரில் பதிவு போடுவார். இந்த நிலையில் இளையராஜா பிரதமர் மோடி பற்றி எழுதிய முன்னுரைக்கு […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா பேட்டி

“நான் வெர்ஜின் இல்லை”… “அவருடன் அப்படி இருந்தேன்”… பேட்டியில் கூறிய சகிலா…!!!

ஷகிலா அண்மையில் அளித்த பேட்டியில் கூறியுள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கவர்ச்சியில் சில்க் சுமிதாவுக்கு அடுத்ததாக நடிகை ஷகிலா தான் பிரபலமாக வலம் வந்தார். இவர் தமிழ் சினிமா உலகில் முதலில் துணை நடிகையாக சிறுசிறு காட்சிகளில் நடித்து பிறகு கவுண்டமணியுடன் நகைச்சுவை காட்சிகளிலும் நடித்திருப்பார். அதன் பிறகு குடும்ப சூழல் காரணமாக மலையாளத்தில் கரையோரம் ஒதுங்கி என்ற கவர்ச்சி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். கவர்ச்சி நடிகை என்ற பெயரை வாங்கிய சகிலா தற்போது அம்மா […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சீரியலில் நடிப்பதை நிறுத்திய சிவக்குமார்”… காரணம் ஒரு சீரியல் நடிகையாம்… பகிர்ந்த சித்ரா லக்ஷ்மணன்…!!!

நடிகர் சிவக்குமார் சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டதற்கான காரணம் பற்றி சித்ரா லக்ஷ்மணன் கூறியுள்ளார். 1960-களிலிருந்து பிரபல நடிகராக வலம் வந்தவர் சிவக்குமார். இவருடைய மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே தற்போது பிரபல நடிகர்களாக வலம் வருகின்றார்கள். இவர் சினிமாவில் மட்டும் அல்லாமல் சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் வீட்டுக்கு வீடு வாசப்படி பந்தம் சித்தி அண்ணாமலை உள்ளிட்ட தொடர்களில் நடித்து ஹிட்ஸ் தொடர்களாக மாற்றினார். கடைசியாக 2001 ஆம் வருடம் அஜித் நடிபில் வெளிவந்த பூவெல்லாம் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சினிமாவில் நடிக்க சம்மதிக்காத அப்பா”… லெட்டர் எழுதி விட்டு ஓடிப்போன விஜய்… சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்த எஸ்ஏசி…!!!

எஸ்ஏசி தன் மகனான விஜய் பற்றி சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். விஜயின் அப்பாவும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சி. யூட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றார். அதில் யார் இந்த எஸ்ஏசி என்ற தலைப்பில் தான் கடந்து வந்த பாதையை கூறி வருகின்றார். தன்னுடைய பிடிவாதம் பற்றியும் கூறி வந்த எஸ்.ஏ.சி பிறகு தன்னுடைய மகனான விஜய்யின் பிடிவாதம் பற்றி சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, 1992-ஆம் வருடம் நான் சினிமாவில் நடிக்க வேண்டும் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சக உதவி இயக்குனர் என்னை திட்டி கன்னத்தில் அறைந்தார்”…. உருக்கமாக வீடியோ வெளியிட்ட எஸ்ஏசி…!!!

எஸ்ஏசி அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றிய போது நடந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார். விஜயின் அப்பாவும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றார். அதில் யார் இந்த எஸ்ஏசி என்ற தலைப்பில் தான் கடந்து வந்த வாழ்க்கைப் பாதை பற்றி கூறி வருகின்றார். தற்போது அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது, அசிங்கப்படலனா வாழ்க்கையில் மேலே வரமுடியாது. கருப்பாக இருக்கிறாரே இவர் எப்படி நடிகனாக முடியும் என்று கேட்டார்கள். ஆனால் அவரே பின்னாளில் சூப்பர் ஸ்டார் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பீஸ்ட் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்த முதல்வரின் பேரன்”…. இவரும் விஜய் ஃபேன்தாம்பா…!!!

விஜய்யின் தீவிர ரசிகரான ஸ்டாலினின் பேரன் பீஸ்ட் படத்தை முதல் நாள் முதல் காட்சியை தியேட்டரில் பார்த்துள்ளார். தமிழ் சினிமா உலகின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப்படமானது ஏப்ரல் 13ஆம் தேதி ரிலீசானது. தற்போது இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. ஆனால் விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றார்கள். பாக்ஸ் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் கேட்ட கேள்வி”… அதிரடி பதிலைத் தந்த அஜித்…!!!!

பயில்வான் ரங்கநாதன் கேட்ட கேள்விக்கு அதிரடி பதிலை தந்துள்ளார் அஜித்.‌ தமிழ் சினிமா படங்களில் வில்லனாக நடித்து தற்போது பத்திரிகையாளராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். இவன் நடிகர், நடிகைகளை பற்றி பேசி வெளியிடும் வீடியோவானது பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றது. இவரின் பேச்சுக்கு சினிமாவில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள். இவர் சினிமாவில் நடித்துக் கொண்டு இருந்ததை விட தற்போது பத்திரிக்கையாளராகி மிகவும் பிரபலமாகியுள்ளார். இந்த நிலையில் அஜித்தை ஒருமுறை பேட்டி எடுக்கும் போது இவர், […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா விமர்சனம்

“இயக்குனர் ராம் கோபால் வர்மா போட்ட டுவிட்”… விமர்சனம் செய்யும் விஜய் ரசிகாஸ்…!!!

இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் போட்ட பதிவால் விஜய் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சென்ற ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்கில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படம் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. நெல்சனின் முந்தைய படங்களில் இருந்த சுவாரசியத்தை இத்திரைப்படத்தில் இல்லாமலும் நகைச்சுவை சலிப்பூட்டுவதாகவும்  பல குறைபாடுகளை கூறிவருகின்றனர். ஆனால் விஜய் ரசிகர்கள் இத்திரைப்படத்தை கொண்டாடி வருகின்றார்கள். இந்த நிலையில் இயக்குனர் ராம்கோபால் வர்மா டுவிட்டரில் கூறியுள்ளதாவது, “கேஜிஎஃப் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பிறப்புறுப்பில் மதுபாட்டிலை சொருகி பாலியல் ரீதியாக கொடுமை செய்தார்”… அம்பர் ஹெட் மாஜி கணவர் மீது குற்றச்சாட்டு…!!!

தனது முன்னாள் கணவர் பிறப்புறுப்பில் மதுபாட்டில் திணித்து தன்னை கொடுமைப்படுத்தியதாக நீதிமன்றத்தில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஆம்பர் ஹெர்ட். நடிகர் ஜானி டெப், பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானார். இத்திரைப்படத்தில் கேப்டன் ஜாக் ஸ்பேரோ என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் பல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். இவர் அன்னி அல்லிசன் என்பவரை சென்ற 1983ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டு இரண்டு வருடங்கள் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

நிவேதா பெத்துராஜ் நடிக்கும் “பிளடி மேரி”… “ஆஹா” ஓடிடி தளத்தில் வெளியீடு…!!!

நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவான பிளடி மேரி திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது. நடிகை நிவேதா பெத்துராஜ் ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் தற்போது பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்போது ஹீரோயினாக பிளடி மேரி என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார். இத் திரைப்படமானது சந்து மொண்டேடி இயக்கி இருக்கின்றார். இப்படத்தின் மூலம் நிவேதா ஓடிடியில் அறிமுகமாக உள்ளார். இத்திரைப்படமானது ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீஸாக […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சுந்தர் சி நடிப்பில் உருவாகும் புதிய படம்”…. வில்லனாக மிரட்டும் பிரபல பாலிவுட் இயக்குனர்…!!!

சுந்தர்.சி நடிக்கும் புதிய படத்தின் வில்லனாக அனுராக் காஷ்யப் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் சுந்தர் சி. இவர் தற்போது பட்டாம்பூச்சி, தலைநகரம் 2 மற்றும் வல்லன் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வருகின்றார். இந்நிலையில் திரிஷா நடிப்பில் வெளியான பரமபதம் விளையாட்டு படத்தை இயக்கிய திருஞானம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கின்றார். சுந்தர்.சி நடிக்கும் இந்த படத்திற்கு தரமாக மிரட்டும் ஒரு வில்லனை தேடிக் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

பார்த்திபனின் “இரவின் நிழல்”… ஆசியா மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்து சாதனை…!!!

ஆசியா மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்துள்ளது பார்த்திபனின் இரவின் நிழல் படம். தமிழ் சினிமா உலகின் பிரபல நட்சத்திரமான பார்த்திபன் அவரே இயக்கி நடித்து வருகின்ற திரைப்படம் இரவின் நிழல். இத்திரைப்படம் புதிய சாதனை படைத்திருக்கின்றது. தமிழ் சினிமா உலகில் பார்த்திபன் பல சோதனை படங்களை எடுத்து சாதனை படங்களாக்கி வருகின்றார். இவர் ஒத்த செருப்பு திரைப்படத்தை கையிலெடுத்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இவர் தற்போது இரவின் நிழல் படத்தில் புதிய […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா பேட்டி

“நேரடியாக அட்ஜஸ்ட் பண்ண சொல்றாங்க”… சினிமா அனுபவத்தை பகிர்ந்த கார்த்தி பட நடிகை…!!!

நடிகை ஜீவிதா தனது சினிமா அனுபவங்கள் பற்றி பகிர்ந்துள்ளார். படங்களில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்து பிரபலமாக வலம் வருபவர் நடிகை ஜீவிதா. இவர் பல தொடர்களிலும் நடித்து வருகின்றார். சென்ற 2018 ஆம் வருடம் பாண்டிராஜ் இயக்கத்தில் ரிலீசான கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் கார்த்திக்கு அக்காவாக நடித்திருப்பார் ஜீவிதா. இந்த படத்தில் நடித்ததன் மூலம் இவர் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் தன்னுடைய சினிமா அனுபவங்களைப் பற்றி பகிர்ந்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“அம்மா பிறந்தநாள் போட்டோவில் மிஸ்ஸான தனுஷ்”…. தனுஷ் எங்கே என கேள்வி கேட்கும் ரசிகர்கள்…!!!!

தனுஷின் அம்மா பிறந்த நாள் புகைப்படத்தில் தனுஷ் இல்லாமல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான தனுஷ் துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தனுஷ் தற்போது நானே வருவேன், வாத்தி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் நடிப்பு மட்டுமல்லாமல் நடனமாடுவது பாடல் பாடுவது என தனக்குள் பன்முகத்தன்மைகளை கொண்டுள்ளார். அண்மையில் தனது மனைவியான இயக்குனர் ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தனுஷ் அம்மாவின் பிறந்தநாள். இதனால் […]

Categories
சினிமா செய்திகள் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நாட்டுப்புற கலைஞர் தங்கராஜ்-க்கு கட்டித்தரப்பட்ட புதிய வீடு”…. திறந்து வைத்த கலெக்டர், இயக்குனர்…!!!!

பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்த நாட்டுப்புற கலைஞருக்கு மாவட்ட கலெக்டர் மற்றும் இயக்குனர் புதிய வீட்டை திறந்து வைத்தார்கள். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டையில் இருக்கும் இளங்கோ நகரில் வாழ்ந்து வருபவர் நாட்டுப்புற கலைஞரான தங்கராஜ். இவர் பல படங்களில் நடித்தாலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகனுக்கு தந்தையாக நடித்து பிரபலமானார். இவர் பாளையங்கோட்டையில் இருக்கும் மார்க்கெட்டில் எலுமிச்சை பழம் விற்பனை செய்து வாழ்க்கையை நடத்தி வந்த நிலையில்  கொரோனா தொற்றின் போது  வியாபாரம் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“வடையெல்லாம் சுடலை தம்பிகளா…. நிஜம்.”… பீஸ்ட் படம் பற்றி ட்விட் செய்த பிரபல தயாரிப்பாளர்…!!!!

விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கின்றார். இத்திரைப்படத்தை நெல்சன் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. மேலும் அனிருத் இசையமைத்துள்ளார். நேற்று முன்தினம் இத்திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. ஆனால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள். #Beast Received Box Office collection numbers of TN. […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ஐஸ்வர்யா போட்ட டுவிட்… “காலையில இருந்து சும்மா இருந்துட்டு தனுசுக்காகவே வீம்புக்கு பண்றீங்களா…” கலாய்க்கும் நெட்டிசன்ஸ்…!!!

ஐஸ்வர்யா டுவிட்டரில் பகிர்ந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்த நிலையில் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் பிரபல ஜோடிகளான தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. பிரிவுக்கு பின் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றனர் ஐஸ்வர்யா. இவர் தனது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார். அண்மையில் இவர் இயக்கிய முசாபீர் ஆல்பம் பாடல் வெளியானது. இதை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“அம்மாவுக்காக உருக்கமான ட்விட் செய்த தனுஷ்”…. பலரும் வாழ்த்து…!!!

தனுஷ் நேற்று தனது அம்மாவின் பிறந்தநாளுக்கு ட்விட்டரில் வாழ்த்துக்களை கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ் பல வெற்றிப்படங்களை தந்தவர் தனுஷ். அவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த ஜகமே தந்திரம், அத்ராங்கி ரே, மாறன் உள்ளிட்ட திரைப்படங்கள் தோல்வியை தழுவி இருக்கின்றது. Happy birthday Amma !! I love you to the moon and back ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘😘😘😘🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗 pic.twitter.com/TvaZnYsi12 — Dhanush (@dhanushkraja) April 14, 2022 இவர் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பீஸ்ட் படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டுவது தவறு”… பிரேமலதா விஜயகாந்த் கருத்து…!!!!

பீஸ்ட் படம் பற்றி பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நேற்று முன்தினம் வெளியாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படம் பலவிதமான நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகின்றது. இத்திரைப்படத்தில் விஜய் இராணுவ உளவாளியாக நடித்துள்ளார். ஒரு அசம்பாவிதம் நடந்தால் வேலையை விட்டுவிட்டு தமிழகம் வரும் விஜய் ஷாப்பிங் மாலில் இருக்கும்போது தீவிரவாதிகளால் மால் ஹைஜாக் செய்யப்படுகின்றது. அப்போது மாலில் உள்ள மக்களை விஜய் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா மாவட்ட செய்திகள்

“பீஸ்ட் படத்தில் இந்தி திணிப்பு பற்றி விஜய் பேசிய வசனம்”… கருத்து தெரிவித்த அண்ணாமலை…!!!

பீஸ்ட் திரைப்படத்தில் இந்தி திணிப்பு பற்றி விஜய் பேசிய வசனம் பற்றி அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் நேற்று முன் தினம் வெளியாகிய பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. படம் எதிர்பார்த்தபடி இல்லை எனவும் கதை சொதப்பப்பட்டிருப்பதாகவும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றார்கள். ஆனால் வசூலில் எந்தவித பாதிப்பும் இல்லை என படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது. பீஸ்ட் படம் பல வசூல் சாதனைகளை முறியடித்து […]

Categories
சினிமா செய்திகள் ஹாலிவுட் சினிமா

“ரன்பீர் கபூர், அலியா பட்-க்கு எளிய முறையில் நடந்த திருமணம்”…. குவிந்து வரும் வாழ்த்துக்கள்…!!!

ரன்பீர் கபூர் மற்றும் அலியா பட் எளியமுறையில் திருமணம் செய்து கொண்டார்கள். பாலிவுட் பிரபலங்களான ரன்பீர் கபூர் மற்றும் அலியா பட் பிரம்மாஸ்திரா என்ற படத்தில் நடிக்கும் போது இருவரும் காதலிக்க ஆரம்பித்தார்கள். இவர்கள் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இவர்கள் இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்த வில்லை. அதன் பிறகு இவர்கள் இருவரும் காதலிப்பதை வெளிப்படுத்தினார்கள். இவர்களது திருமணம் ஆகாத 2020-ஆம் வருடம் நடக்கவிருந்த நிலையில் கொரோனா சூழல் காரணமாக தள்ளிப்போனது. இந்நிலையில் ஏப்ரல் 14-ஆம் தேதியான நேற்று […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

விஜய் நடிக்கும் “தளபதி 66″… படத்தின் சில தகவல்கள் கசிவு…!!

விஜய் நடிக்கும் தளபதி 66 திரைப்படத்தை பற்றி தகவல் கசிந்துள்ளது. நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் நேற்று முன் தினம் வெளியாகிய பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக தளபதி 66 திரைப்படத்தில் வம்சி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றார். மேலும் தமன் இசையமைக்கின்றார். சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு துவங்கப் பட்ட நிலையில் இந்த படத்தில் சரத்குமார் நடித்த […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தமிழகத்தில் பீஸ்ட் ஒரு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா…?” மாவட்ட வாரியாக இதோ உங்களுக்காக…!!!

நெகட்டிவ் விமர்சனங்களால் பீஸ்ட் திரைப்படத்தின் வசூல் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படமானது நேற்று முன்தினம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இந்த நிலையில் இத்திரைப்படமானது பாக்ஸ் ஆபீஸில் வசூலித்த தொகை பற்றி தகவல் வெளியாகி இருக்கின்றது. சென்னை 2 கோடி, செங்கல்பட்டு 10 கோடி, தெற்கு ஆற்காடு 5 கோடி, கோவை 5.9 கோடி, சேலம் 3.8 கோடி, மதுரை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா பேட்டி

டாணாக்காரன் இயக்குனர் தமிழ்… “பேட்டியில் பகிர்ந்த பல சுவாரஸ்யமான தகவல்கள்”…!!!

டாணாக்காரன் இயக்குனர் தமிழ் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகரான விக்ரம் பிரபு தற்போது டாணாக்காரன் திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். தமிழ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தை எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ளார். கதாநாயகியாக அஞ்சலி நாயர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அண்மையில் இத் திரைப்படமானது வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளை பெற்று வருகின்றது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் தமிழ் பேட்டி ஒன்றில் டாணாக்காரன் படம் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டபோது அவர் கூறியுள்ளதாவது, நான் காவல் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கல்வியை தனியார் மயமாக்குவதை எதிர்த்து தனியாளாக போராடும் தனுஷ்”… வெளியான பரபரப்பு தகவல்…!!!

வாத்தி திரைப்படத்தில் தனுஷ் கதாபாத்திரமும் கதை பற்றிய சில தகவல்களும் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது வெங்கி அட்லூரி  இயக்கத்தில் வாத்தி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். தனுஷ் வாத்தி, நானே வருவேன் உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து வாத்தி படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் எடுக்கப்படுகின்றது. இத்திரைப்படத்தில் தனுஷ் கல்லூரி பேராசிரியராக நடிப்பதாகக் கூறப்படுகின்றது. […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“துணை நடிகைகளை கேவலமாக நடத்தும் சினிமா உலகம்”… உருக்கமாக பேட்டியளித்த நீலு ஆண்டி…!!!

துணை நடிகைகள் படம் கஷ்டம் பற்றி உருக்கமாக பேட்டியில் பகிர்ந்துள்ளார் நடிகை நீலு. படங்களில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்து பிரபலமானவர் நீலு. இவர் சிங்கம் புலி  படத்தில் ஜீவாவுடன் சில காட்சிகளில் நடித்து இருப்பார். சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் அதன் மூலம் அவர் இளைஞர்களை கவர்ந்தார். இவர் ஆயுத எழுத்து, புலி, ஆஞ்சநேயா உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து இருக்கின்றார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் துணை நடிகைகள் படும் கஷ்டங்களைப் பற்றி […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

பா.ரஞ்சித் தயாரித்த “ரைட்டர்”… “படத்தை பார்த்த பிரபல இயக்குனர்”… புகைப்படம் இணையத்தில் வைரல்…!!!

பா.ரஞ்சித் தயாரித்த ரைட்டர் திரைப்படத்தை பிரபல இயக்குனர் பார்த்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அறிமுக இயக்குனரான பிராங்கிளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் ரைட்டர் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் இனியா, போஸ் வெங்கட் ஆகிய பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்த நிலையில் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் மற்றும் கோல்டன் ரேஷன் பிலிம்ஸ் ஆகியவற்றுடன் பா.ரஞ்சித்தின் நீளம் புரோடக்சன்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்தது. இந்த […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“மைக் மோகன் ஆக்ஷன் ஹீரோவா அசத்தும் “ஹரா”… படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு…!!!!

நடிகர் மைக் மோகன் நடிக்கும் ஹரா திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் 80-களில் முன்னணி நடிகர்கராக வலம்வந்த மைக் மோகன் தற்போது நீண்ட வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இவர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் ஹரா என்ற திரைப் படத்தில் ஹீரோவாக நடித்து வருகின்றார். மேலும் இத்திரைப்படத்தில் குஷ்பு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். குஷ்புவும் மைக் மோகனும் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறையாகும். எஸ்.பி மோகன்ராஜ் தயாரித்து […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சன் பிக்சர்ஸ் அலுவலகத்தில் “பீஸ்ட்” பார்த்த ரஜினி”… வெளியான தகவல்…!!!

விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் அலுவலகத்தில் ரஜினி பார்த்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படமானது நேற்று திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. Super Star #Rajinikanth is watching #Beast now in Sun Tv office… — Karthik […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா விமர்சனம்

“பீஸ்ட் படத்திற்கு மீம் போட்டு விமர்சித்த ப்ளூ சட்டை”… கலாய்த்து தள்ளும் விஜய் ரசிகாஸ்…!!!

பீஸ்ட் திரைப்படத்திற்கு மீம் போட்டு விமர்சித்துள்ள ப்ளூ சட்டை மாறன். நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் பீஸ்ட் திரைப்படம் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் ட்ரெய்லரும் பாடல்களும் அமைந்தது. இந்நிலையில் நேற்று பீஸ்ட் திரைப்படமானது உலக முழுவதும் ரிலீஸானது. பீஸ்ட் படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடினாலும் பொதுவான ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. pic.twitter.com/wLb3MOk2c6 — Blue Sattai Maran […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ராம், நிவின் பாலி, சூரி கூட்டணியில் உருவாகியுள்ள புதிய படம்”… முடிவடைந்த படப்பிடிப்பு… கேக் வெட்டி கொண்டாட்டம்…!!!

இயக்குனர் ராம் இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கின்ற புதிய படத்தை ராம் இயக்கி வருகின்றார். இத்திரைப்படத்தில் அஞ்சலி ஹீரோயினாக நடிக்க நகைச்சுவை நடிகராக சூரி நடிக்கிறார். இத்திரைப்படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பாக சுரேஷ் காமாட்சி என்பவர் தயாரிக்கின்றார். மேலும் படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். இத்திரைப்படமானது தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் ரிலீசாக உள்ளது. சென்ற அக்டோபர் மாதம் ராமேஸ்வரத்தில் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பீஸ்ட் பட வசூல் எப்படி…?” சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு…!!!

பீஸ்ட் திரைப்படத்தின் வசூல் பற்றிய தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படமானது நேற்று வெளியாகியுள்ள நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இத்திரைப்படமானது விஜய் ரசிகர்களுக்கு மட்டுமே பிடித்ததாக அமைந்திருக்கின்றது. படத்தின் பின்னடைவுக்கு காரணம் கதையில் சுவாரசியம் இல்லாத தே என கூறிகின்றனர் . ஆனால் படத்தில் காமெடி காட்சிகளும் சண்டைக் காட்சிகளும் நன்றாக அமைந்து இருப்பதாக ரசிகர்கள் கூறியுள்ளனர். மேலும் நெல்சன் விஜயை படத்தில் ஸ்டைலிஸாக காண்பித்து இருப்பதாக கூறுகிறார்கள். […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நெல்சன் விஷயத்தில் விஜய் மாதிரி இல்லாமல் ரொம்ப தெளிவாக செயல்பட்ட ரஜினி”…. என்ன பண்ணாரு தெரியுமா…???

விஜயை போல் ரஜினி சொதப்பாமல் தெளிவாக செயல்பட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கிய இத்திரைப்படமானது நேற்று ரிலீஸாகி விஜய் ரசிகர்கள் இடையே ஏமாற்றத்தை தந்துள்ளது. ஒரு மாஸ் ஹீரோவுக்கு இப்படி மொக்கை கதையை நெல்சன்  சொல்லிவிட்டாரே என ரசிகர்கள் கோபத்தில் இருக்கின்றார்கள். நெல்சன் அடுத்ததாக ரஜினியை வைத்து இயக்க உள்ளார். அதில் என்ன பண்ண போகிறாரோ என ரசிகர்கள் பயந்த நிலையில் விஜய் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தனுஷ், செல்வராகவன் பற்றி பகிர்ந்த நானே வருவேன் ஹீரோயின்”… என்ன சொன்னாங்க தெரியுமா…???

நானே வருவேன் திரைப்படத்தின் ஹீரோயின் தனுஷ் மற்றும் செல்வராகவன் பற்றி கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தில் கதாநாயகியாக எல்லி அவ்ரம் நடிக்கிறார். இந்நிலையில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த எல்லி அவ்ரம்  தனுஷ் பற்றி கூறியுள்ளதாவது, தனுஷுடன் இணைந்து நடித்தது ஒரு கனவு போல இருக்கின்றது. சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அனைத்து மொழி திரைப்படங்களில் நடித்தாலும் பந்தாவே இல்லாமல் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பீஸ்ட் படத்தில் இந்திக்கு எதிராக குரல் கொடுத்த விஜய்”… வைரலாகும் வசனம்…!!!!

பீஸ்ட் படத்தில் இந்திக்கு எதிராக விஜய் பேசியுள்ள வசனம் வைரலாகி வருகின்றது. நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் நேற்று பீஸ்ட் திரைப்படம் ரிலீஸாகி உள்ளது. இதற்கு முன்னதாக படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. இந்த நிலையில் நேற்று படம் வெளியாகியதால் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் சொல்லிச்சொல்லி விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள். வணிக வளாகத்தில் உள்ள மக்களை தீவிரவாதிகள் தங்களின் பிடியில் வைத்திருப்பார்கள். மக்களை மீட்க […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விக்ரம் படப்பிடிப்பில் கமல் முழு சுதந்திரம் கொடுத்தார்”… பேட்டியில் பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்…!!!!

விக்ரம் திரைப்படத்தின் ஷூட்டிங்கின்போது கமல் முழு சுதந்திரம் வழங்கியதாக லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது கமல்ஹாசன் விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சென்ற வருடம் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இத்திரைப்படம் படப்பிடிப்பு பற்றி லோகேஷ் கனகராஜ் பேசியது சமூக வளைதளத்தில் வைரலாகி வருகின்றது. லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது, இப்போது யோசித்தால் கூட படத்தில் எந்தவிதமான குறுக்கீடும் கமல் சார் செய்ததாக ஞாபகம் இல்லை. […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள்

“அதை விளம்பரம் செய்த நிதி அகர்வால்”… மீண்டும் சர்ச்சை… என்ன தெரியுமா…???

நடிகை நிதி அகர்வால் மீண்டும் சர்ச்சைக்குரிய விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். நடிகை நிதி அகர்வால் முன்னால் மைக்கேல் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஆளும் தெலுங்கில் சவ்யசாச்சி என்ற திரைப்படம் தான் அவரை பிரபலமாக்கியது. இவர் தமிழில் அண்மையில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த ஈஸ்வரன் திரைப்படம் வெளியாகியது. இன்ஸ்டாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நிதி அகர்வால் 21 மில்லியன் பாலோவர்களை கொண்டு தென்னிந்திய நடிகைகளிலேயே அதிக பாலோவர்களை கொண்ட நடிகையாக இருக்கிறார். இந்த நிலையில் இவர் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த கஸ்தூரி”… காரணம் இதுதான்… இன்ஸ்டாவில் பதிவு…!!!

மிஸ்டர் பிரக்னண்ட் திரைப்படத்தின் கெட்டப்தான் அந்த கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். சர்ச்சை நாயகி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகை கஸ்தூரி சினிமா, அரசியல், விளையாட்டு, சின்னத்திரை என எல்லா டாபிக்கையும் பேசி துணிச்சலுடன் தனது கருத்துக்களை பதிவிட்டும் விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். அண்மையில் கர்ப்பமாக இருப்பது போல் உள்ள போட்டோவை பகிர்ந்துள்ளார். போட்டோவை பகிர்ந்து அவர் கூறியுள்ளதாவது, “புதிய தொடக்கம், இந்த […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விகள்”…. வீடியோ மூலம் பதிலளித்த பீஸ்ட் பட ஹீரோயின்…!!!!

ரசிகர்கள் இணையத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார் பூஜா ஹெக்டே. நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் பூஜா ஹெக்டே. இத்திரைப்படமானது பிரம்மாண்டமாக இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் இணைந்து பார்க்க வேண்டும் என பூஜா ஹெக்டே திட்டமிட்டிருக்கிறார். இந்த நிலையில் இணையத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு வீடியோ மூலம் பதில் அளித்துள்ளார் பூஜா ஹெக்டே. பீஸ்ட் படத்தில் தன்னுடைய பெயர் ப்ரீத்தி என கூறியுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா பேட்டி

“வாய்ப்பை தவறவிட்ட பூஜா”… குஷியில் ராஷ்மிகா…!!!

தளபதி 66 படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட பூஜா ஹெக்டே. விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் பிரமாண்டமாக இன்று பீஸ்ட் திரைப்படமானது ரிலீசாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு அடுத்ததாக விஜய் தளபதி 66 படத்தில் நடித்து வருகின்றார். அண்மையில் படத்திற்கான பூஜை போடப்பட்டது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றார். இவர் விஜய்யின் தீவிர ரசிகையாம். படப்பிடிப்பின் பூஜையில் விஜய்யை பார்த்ததும் அவருக்கு திருஷ்டி எடுத்தார் ராஷ்மிகா மந்தனா. அந்தப் புகைப்படமானது இணையத்தில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

நடிகை சிருஷ்டி டாங்கே பகிர்ந்த வீடியோ”… வாயைப் பிளக்கும் நெட்டிசன்கள்….!!!

நடிகை சிருஷ்டி டாங்கே பகிர்ந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகின்றது. நடிகை ஸ்ருஷ்டி டாங்கே காதலாகி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி யுத்தம் செய், டார்லிங், எனக்குள் ஒருவன், புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம், கத்துக்குட்டி, வில்லம்பு, நவரச திலகம், சரவணன் இருக்க பயமேன் ஆகிய பல திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் நடித்து வருகின்றார். ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். ஆனால் எட்டாவது நாளிலேயே அங்கிருந்து வெளியேறினார். https://www.instagram.com/reel/CcDODq_JG_Z/?utm_source=ig_embed&ig_rid=6fdcfbd0-10c9-4380-b8e1-0df3b25a4774 […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஆதி என்னை மிகவும் நேசிக்கிறார்”… “நான் நடிப்பதற்கு தடை போட மாட்டார்”… பேட்டியில் கூறிய நிக்கி…!!!

ஆதி என்னை மிகவும் நேசிப்பதாகவும் திருமணத்திற்குப் பிறகும் நான் நடிப்பதற்கு தடை போட மாட்டார் என பேட்டியில் நிக்கி கல்ராணி கூறியுள்ளார். 2014ஆம் வருடம் வெளியான டார்லிங் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் தந்தார் நிக்கி கல்ராணி. இவர்  ஜீவா, விஷ்ணு விஷால், ஜிவி பிரகாஷ், ஆதி போன்ற பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். நிக்கி கல்ராணி யாகவராயினும் நாகாக்க, கலகலப்பு-2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மரகதநாணயம், ஹர ஹர […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“மூன்று ஆண்களுக்கு நிகரான நடிப்பை வெளிப்படுத்திய ஆண்ட்ரியா”… இயக்குனர் மிஷ்கின் புகழாரம்…!!!

ஆண்ட்ரியாவின் நடிப்பை பார்த்து இயக்குனர் மிஷ்கின் புகழ்ந்துள்ளார். பிரபல இயக்குனரான மிஸ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பிசாசு2 திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்க விஜய் சேதுபதி, பூர்ணா, சந்தோஷ் பிரதீப் மற்றும் அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். ஆண்ட்ரியா பாடகியாக வலம் வந்த நிலையில் தற்போது தனது நடிப்பின் மூலம் சிறந்த கதாநாயகியாகவும் வலம் வருகின்றார். மிஸ்கின் இயக்கத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் இத்திரைப்படமானது ஹாரர் பின்னணியில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ஐஸ்வர்யா பகிர்ந்த இன்ஸ்டா பதிவு… “அவரையும் நீங்க விட்டு வைக்கலையா”… கலாய்க்கும் நெட்டிசன்ஸ்…!!!!

ஐஸ்வர்யா பகிர்ந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டு 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் சென்ற ஜனவரி மாதம் இருவரும் பிரிந்தார்கள். பிரிவுக்குப் பின் ஐஸ்வர்யா தனது கெரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். முசாபிர் என்ற ஆல்பம் பாடலை இயக்கி வெளியிட்டிருக்கின்றார். இதற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்த பதிவுகளானது வைரலானதை தொடர்ந்து அடுத்ததாக ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நான் ரியல் லைஃப்ல இப்படிதான்”… நேர்காணலில் மனம் திறந்த விஜய்…!!!

விஜய் தான் நிஜ வாழ்கையில் எப்படி என நேர்காணலில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய்.  இவர் குழந்தைகள் முதல் பெரியவர் வரை தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கின்றார். எப்போதும் முகத்தில் புன்சிரிப்புடன் இருப்பதால் அனைவரையும் கவர்ந்து விடுவார். விஜய் சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலகட்டத்தில் பல விமர்சனங்களுக்கு உள்ளாகி தனது விடா முயற்சி மற்றும் திறமையின் மூலம் வெற்றி கண்டார். விஜய் நடிப்பு மட்டுமல்லாமல் பாடல் பாடுவது நடனம் ஆடுவது […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

இது வேலைக்காகாது அப்பு… “அதிரடியாக அடுத்த பணியில் களமிறங்கிய நெல்சன்”…!!!!

ரஜினியின் படத்தை தொடர்ந்து நெல்சன் அடுத்த படத்தின் கதையை எழுத ஆரம்பித்து விட்டாராம். தமிழ் சினிமாவின் இளம் இயக்குனரான நெல்சன் தற்போது முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றார். டாக்டர் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பை எப்படிப்பெற்றாரோ அதுபோலவே விஜய்யின் பீஸ்ட் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக ரஜினியின் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் நெல்சன். இந்நிலையில் விஜய்- நெல்சன் கூட்டணியான பீஸ்ட் திரைப்படம் இன்று திரையில் வெளியாகியுள்ளது. ரஜினி-நெல்சன் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ரஜினியின் சாதனையையே முறியடித்த விஜய்யின் பீஸ்ட்”…. உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

வெளிநாட்டில் ரஜினியின் சாதனையை முறியடித்த விஜய்யின் பீஸ்ட் திரைப்படம். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படம் பற்றி தான் எங்கு பார்த்தாலும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். பெரிய ஹீரோக்களின் படம் என்றாலே எதிர்பார்ப்பு அதிகரிக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் விஜய் திரைப்படத்திற்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. விஜய் மற்றும் நெல்சன் கூட்டணி இணைய போகின்றார்கள் என்ற தகவல் வந்ததிலிருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரிக்கச் செய்தது. இந்த படத்தில் இருந்து பாடல்கள் வெளியாகி […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நம்ம விஜய்க்கே இப்படி பண்ணிட்டாங்களா?”… வெளியான நியூஸால் ஷாக்கான ரசிகர்கள்…!!!

பீஸ்ட் திரைப்படத்தை விட கேஜிஎஃப் திரைப்படத்திற்கு அதிக காட்சிகள் ஒதுக்கியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமான விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படமானது இன்று வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். நெல்சன் திலிப் குமார் இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது அனிருத் இசை அமைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு பீஸ்ட் திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கிய நிலையில் சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுபோனது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை […]

Categories
கிசு கிசு சினிமா செய்திகள் தமிழ் சினிமா பேட்டி

“ஹரிஷ் கல்யாண்-ரைசா மீதான கிசுகிசுப்பு”… பேட்டியில் அதிரடி முற்றுப்புள்ளி…!!!

கிசுகிசுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை ரைசா வில்சன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ரைசா வில்சன். பிக்பாஸில் இருந்து வெளியேறிய உடன் வேலையில்லா பட்டதாரி திரைபடத்தில் நடித்திருப்பார். இதைத் தொடர்ந்து பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து ரைசா வில்சன் பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலம் ஹீரோ ஹீரோயினாக நடித்தார். இத்திரைப்படத்தில் நடைமுறையிலுள்ள காதலையும் லிவிங் டுகதர் முறையையும் அழகாக தங்களின் நடிப்பில் வெளிபடுத்தி இருப்பார்கள். இத்திரைப்படமானது ரைசா வில்சனுக்கு முதல் […]

Categories

Tech |