மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசு சொந்தமாக்குதல் என்பது கொள்கை முடிவு என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழக முதலமைச்சராக இருந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் வாழ்ந்து வந்தார். அவர் வாழ்ந்த இடத்தை நினைவிடமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்து அரசுக்கு சொந்தமாக்கிக்கொண்டது. இது பற்றிய தகவல் அரசிதலிலும் வெளியிடப்பட்டது. மேலும் அந்த இல்லத்திற்கான தொகையை நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தி இருந்தது. இதனை எதிர்த்து ஜெ.தீபா […]
