Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் மோதிக்கொள்ளும் ஒலிம்பிக் வீரர்கள்……!!

ராஜஸ்தான் மணிலா ஒரு மக்களவைத் தொகுதியில் முன்னாள் ஒலிம்பிக் வீரர்கள் இருவர் களம் காணுகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ஜெய்பூர் கிராமப்புற மக்களவைத் தொகுதியில் முன்னாள் ஒலிம்பிக் வீரர்களாக விளையாடிய ராஜ்யவர்தன் சிங் ராவுதர் (49) மற்றும் கிருஷ்ண பூணியா (36) ஆகியோர் வேட்பாளராக மோதுகின்றனர். ராஜ்யவர்தன் சிங் தற்போது பாஜக கட்சியில் நிர்வாகியாகவும், மத்திய அமைச்சரைவையிலும் இடம்பெற்றுள்ளார்.  இவர் கடந்த 2014_ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் இதே தொகுதியில் காங்கிரஸின் மூத்த தலைவர் ஜோஸியை தோற்கடித்தார். இந்நிலையில் பாஜக சார்பில் […]

Categories
தேசிய செய்திகள்

54,000 ஊழியர்கள் காலி…..பரிதாபத்தில் BSNL நிறுவனம்…..!!

BSNL  நிறுவனம் 54 ஆயிரம் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்தியத் தொலைத்தொடர்பு வர்த்தகத்தில் ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடஃபோன் போன்ற நிறுவனங்கள் பின்னடைவை சந்திக்க தொடங்கியது. இதைதொடர்ந்து பொதுத்துறை நிறுவனமான BSNL லும் சரிவையே சந்திக்க ஆரம்பித்தது. கடந்த 2017-18 ஆண்டு இறுதிவரைBSNL நிறுவனம் ரூ.31,287 கோடி இழப்பை சந்தித்துள்ளது. அத்துடன் பிப்ரவரி மாதத்தின் சம்பளம் சரியான நேரத்தில் கொடுக்கபடவில்லை.மார்ச் மாதத்தில் பாதியில்தான் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை BSNL தன் வரலாற்றில் முதல் முறையாக சந்தித்துள்ளது. இந்நிலையில், […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை பொய் , பாசாங்கு….. மோடி விமர்சனம்…!!

காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை பொய்களையும் ,  பாசாங்குதனத்தையும் கொண்டது என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மக்களவை தேர்தல் வருகின்ற 11_ஆம் தேதி முதல் 7 கட்டமாக நடைபெறுகின்றது.இதையடுத்து அரசியல் கட்சிகள் தொடர்ந்து தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதையடுத்து  அருணாச்சல பிரதேச மாநிலத்தின் கிழக்கு சைங் மாவட்டத்தில் இருக்கும் பசிகாட் என்ற இடத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் , வடகிழக்கு மாநிலங்களுக்கு காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் உரிய முக்கியத்துவம் […]

Categories
தேசிய செய்திகள்

“கல்யாண வீட்டு சாப்பாடு” 70 பேருக்கு வாந்தி பேதி….. ராஜஸ்தானில் அதிர்ச்சி…!!

ராஜஸ்தானில் திருமண விருந்தில் உணவு சாப்பிட்ட 70 பேருக்கு வாந்தி பேதி ஏற்பட்டு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  ராஜஸ்தான் மாநிலத்தின் கிசாங்கர் நகரில் உள்ள ஒரு  திருமண விழாவில் கடந்த திங்கட்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான விருந்தினர் பங்கேற்று நடைபெற்ற விருந்தில் உணவு உட்கொண்டனர். பின்னர் அனைவரும் வீட்டுக்கு சென்றனர். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு சென்ற பலரது உடல்நிலை பாதிக்கப்பட்டடு அவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடனடியாக பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

“நாங்கள் அதிரடி படையினர்” ரூ.1,70,00,000 பறித்த கும்பல்….!!

அதிரடிப்படை என்று தொழிலதிபரின் காரில் சோதனையிட்டு, ரூ.1.70 கோடி பணத்தை பறித்துச் சென்ற மோசடி கும்பல் சிக்கியது. பாராளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகிய நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து தேர்தலில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள் மற்றும் பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படை ,  போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முறையான ஆவணமில்லாதவற்றை பறிமுதல் செய்கின்றனர். இதை தங்களுக்கு சாதகமாக்கி சோதனை என்ற பெயரில் பணம் பறிக்கும் கும்பலும் சில இடங்களில் கைவரிசை காட்டுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

வாக்குப்பதிவு எந்திரத்தில் குளறுபடி செய்தாவது ஜெயிக்க வேண்டும்….. சிவசேனா எம்.பி சஞ்செய் ராவத் கருத்து…!!

தேர்தல் நடத்தை விதியை மீறியதாக சிவசேனா எம்.பி சஞ்செய் ராவத்திற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்னையாகுமார் நாடாளுமன்ற தேர்தலில் பீகார் மாநிலத்தில் உள்ள பெகுசராய் பாராளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.அவருக்கு எதிராக சிவசேனாவின் சாம்னா பத்திரிகையில் ‘ரோக் தோக்’ என்ற தலைப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்டுரை ஓன்று வெளியானது. இதில், கன்னையா குமார் ஒரு விஷம் என்றும் , அவரை கட்டாயமாக நாடாளுமன்றத்துக்குள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“நீட் தேர்வு இரத்து” விவசாயிகளுக்கு தனி அமைச்சகம்….. அசத்தும் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை…!!

காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு இரத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.   பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்குகின்றது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு தீவிரமாக தேர்தல் அறிக்கையை  தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ராகுல் காந்தி….!!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி  வெளியிட்டார். பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்குகின்றது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகின்றது. ஏற்கனவே தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு தீவிரமாக தேர்தல் அறிக்கையை  தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை […]

Categories
தேசிய செய்திகள்

உயிரை கொள்ளும் ஜான்சன் அண்ட் ஜான்சன்….. கதிகலங்கும் மக்கள்….!!

 ஜான்சன் அண்ட் ஜான்சன் ஷாம்புவில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள் இருப்பதாக  ராஜஸ்தானில் நடைபெற்ற ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  ராஜஸ்தான் மாநிலத்தின் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைச்சகம், கடந்த பிப்ரவரி மாதம் ஒரு ஆய்வை நடத்தியது. அதில் 2021_ஆம் ஆண்டு காலாவதியாகும் ஜான்சன் அண்ட் ஜான்சன் னோ டியர்ஸ் பேபி ஷாம்பு, மற்றும் , பவுடர்  பாட்டில்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன. மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதியின் 24 இடங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட்து. இந்த ஆய்வில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிப்பு பொருட்களில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் விளையாட்டு

பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் வீராங்கனை……!!

காங்கிரஸ் கட்சியின் சார்பில்  வட்டு எறியும் இந்திய வீராங்கனை கிருஷ்ண பூனியா ஜெய்ப்பூர் ஊரக தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.  பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11 தேதி தொடக்கி 7 கட்டமாக நடைபெறுகின்றது. இந்நிலையில்  அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் வேட்பாளர்களை அறிவித்து  தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில்  ராஜஸ்தான்,  மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநில பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் ராஜஸ்தான் மாநிலத்தின் தற்போதைய சடுல்பூர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார் ராகுல் …..!!

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று ராகுல் காந்தி வெளியிடுகிறார் . பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்குகின்றது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகின்றது. ஏற்கனவே தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு தீவிரமாக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்ற சூழலில் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைவர் […]

Categories
தேசிய செய்திகள்

வருடம் முழுவதும் “உல்லாசமாக இருக்கலாம்” ரூ 46,00,000 மோசடி செய்த கும்பல் .!!

தனியார் நிறுவன ஊழியரின் உல்லாசமாக ஆசைக்கு ரூ 46 லட்சத்தை மோசடி செய்த கும்பல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மும்பையில் உள்ள குரார் என்ற பகுதியில் 65 வயதான ஓய்வு பெற்ற தனியார் நிறுவன அதிகாரி வசித்து வருகின்றார். இவர் பொழுதுபோக்குக்காக இணையதளத்தை பார்ப்பது வழக்கம். அப்போது ஆபாச படம் பார்த்ததாக தெரிகின்றது. அப்போது ஆபாச ஆசைக்கு ஆளான அவர் தனது பெயர் மற்றும் முகவரியை பதிவு செய்து அதில் இணைந்துள்ளார். மேலும் அழகிகளுடன் உல்லாசமாக இருக்கலாம் என்ற ஆசையில் […]

Categories
தேசிய செய்திகள்

“சரத்பவார் பிரதமர் கனவில் இருந்தார்” மோடி விமர்சனம்……!!

ஒரு காலத்தில் சரத் பவார் பிரதமர் ஆக வேண்டுமென்ற கனவில் இருந்ததாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். நாடளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகின்றது. மத்தியில் ஆட்சியை பிடிக்க வேண்டுமென்று பிஜேபி , காங்கிரஸ் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் பிஜேபியுடன்  கூட்டணி அமைத்து தேர்தலை சந்திகின்றது. இதையடுத்து வேட்பாளர்களை ஆதரித்து வார்தாவில் நேற்று  தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது தொண்டர்களிடம் பேசிய மோடி , காங்கிரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

‘எமிசாட்’ மற்றும் 28 செயற்கைகோள்கள் விண்ணில் பாய்கின்றது…!!

‘எமிசாட்’ மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்து 28 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றது. இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட’எமிசாட்’ செயற்கைக்கோளான பி.எஸ்.எல்.வி.சி45 மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பயன்பாட்டுக்கு இந்த செயற்கைக்கோள்  உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல அமெரிக்காவின் 24 செயர்க்கைக்கோள்கள் , சுவிட்சர்லாந்து , ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒரு செயற்கைக் கோள்கள் மற்றும் லுதுவோனியவை சேர்ந்த 2 செயற்கைக்கோள்கள் என நான்கு நாடுகளைச் சேர்ந்த 28 செயற்கைக்கோள்கள் வணிக ரீதியில் […]

Categories
தேசிய செய்திகள்

பிரசாரத்துக்கு வந்த தலைவரின் தங்கையிடம்……. தொண்டர்கள் இப்படி செய்யலாமா…?

YSR காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த ஜெகன்மோகன் சகோதரியிடம் மோதிரம் திருடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. தேர்தலில் போட்டியிடும் YSR  காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ‌ஷர்மிளா தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று குண்டூரில் YSR காங்கிரஸ் கட்சி தொண்டர்களை ஆதரித்து பிரசாரம் செய்த ஷர்மிளா_வை கான ஏராளமான தொண்டர்கள் திரண்டிருந்தனர். அப்போது […]

Categories
தேசிய செய்திகள்

பாகிஸ்தான் பீரங்கி தாக்குதல்…. இந்திய எல்லையில் பரபரப்பு…..!!

இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி எல்லை தாண்டி தாக்குதல் நடத்தி வருகின்றது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி தாக்குதல் கொடுத்து வருகின்றது. இந்தநிலையில் நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ராஜவுரி மாவட்டத்தின் எல்லை அருகே பாகிஸ்தான் ராணுவம் தீடிரென தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் ராணுவத்தினர்  இந்திய எல்லைப்பகுதியில் உள்ள கிராமங்களை நோக்கி பீரங்கி குண்டுகள் மூலமாக  தாக்குதல் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

4ஜி வசதியில் இந்திய நகரங்கள் மோசமான நிலை…. ஆய்வில் வெளியானது தகவல்…!!

இந்தியாவிலேயே ஜார்க்கண்ட் மாநிலத்தின் தன்பாத் நகரில்தான் 4ஜி வசதி சிறப்பாக இருப்பதாக ஆய்வு வெளியாகியுள்ளது. லண்டனைச் சேர்ந்த ஓபன் சிக்னல் என்ற தனியார் நிறுவனம் இந்தியாவில் 4ஜி வசதி குறித்த ஆய்வை மேற்கொண்டது. இந்திய அளவில் உள்ள முக்கிய நகரங்களில் ஆய்வு செய்யப்பட்டு அங்கு உள்ள 4ஜி_யின் வசதி குறித்து தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத்  நகரில் 95.3 சதவீதம் 4ஜி வசதி சிறப்பாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அடுத்தபடியாக 95% பெற்ற ஜார்கண்ட் தலைநகரம் ராஞ்சி இருக்கிறது. அதே […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அடுத்தடுத்து 10 M.L.A_க்கள் காலி….. காங்கிரஸ் கதை அம்போ…. திணறும் தலைமை…!!

தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் 10_ஆவது MLA_வாக தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு தாவியுள்ளார் . தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான ராஷ்ட்ரிய சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தலில் அக்கட்சியை எதிர்த்து 119 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் தங்கள் கட்சியில் இருந்து விலகி சந்திரசேகரராவ் கட்சியில் இணைவது தெலுங்கானாவில்  அதிகரித்தது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சந்திரசேகர ராவின் வளர்ச்சித் திட்டங்கள் சிறப்பாக இருப்பதால் அங்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஜம்மு காஷ்மீர் மாநில நிலைப்பாட்டில் நேரு எடுத்த முடிவு தவறு” அருண் ஜெட்லி குற்றசாட்டு…!!

ஜம்மு காஷ்மீர் மாநில நடவடிக்கைகளில் நேரு எடுத்த  கொள்கைகள் அனைத்தும் தவறானவை என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி குற்றம் சாட்டியுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வசிக்கின்ற பிற மாநில மக்கள் நிலம் மற்றும் சொத்துக்கள் அங்கு வாங்க முடியாது. ஏனென்றால் ஜம்மு-காஷ்மீர் அரசு பூர்வகுடி மக்களுக்கு மட்டும் சில சிறப்பு உரிமைகளை , அதிகாரங்களை அரசு வழங்கி உள்ளது. இதனை இந்திய அரசு அரசியலமைப்பு சட்டப்பிரிவு 37_யின் வாயிலாக வழங்கியுள்ளது. அதன்படி ஜம்மு காஷ்மீரில் […]

Categories
தேசிய செய்திகள்

வெளியான திடுக்கிடும் தகவல்….. பழைய திட்டத்தை புதிதாக அறிவித்த மோடி…!!

இன்று பிரதமர் நரேந்திர மோடி  அறிவித்த ‘மிஷன் சக்தி’ என்ற திட்டம் பல வருடங்களுக்கு முன்பே அறிவித்தது என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளதாக தெரிவித்தார்.இந்நிலையில் விண்வெளி சாதனை பற்றி நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார்.அவரது உரையில், விண்வெளித் துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனையை இன்று நிகழ்த்தியுள்ளது. நமது நாட்டின் செயற்கைக்கோளை அழிக்கும் முயற்சியை தடுக்கும் ‘மிஷன் சக்தி’சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

2,10,00,000 பெண்களை காணவில்லை……. எதிர்க்கட்சிகள் பரபரப்பு குற்றசாட்டு…!!

 2 கோடியே 10 லட்சம் பெண் வாக்காளர்கள் பெயரை காணவில்லை என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக கொண்டாடப்படும் மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டமாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகிய நாள் முதல் தேர்தல் நடத்தை விதி அமுலுக்கு வந்து பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் .மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றோடு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ரூ 539,99,20,000 பறிமுதல்…… தமிழகம் முதலிடம்….. தேர்தல் ஆணையம் தகவல்…!!

இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதியை உட்படுத்தி ரூ 539 கோடியே 992 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது . நாடு முழுவதும் 7 கட்டமாக நடக்கும் மக்களவை தேர்தல் வரும் 11_ஆம் தேதி தொடங்குகிறது . தேர்தல் நடத்தை விதிகள் அமலில் வந்த நாள் தொடங்கி தேர்தல் பறக்கும் படையினர் நாடு முழுவதும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்த சோதனைகளில் பிடிபட்டது குறித்து மார்ச் 25_ஆம் தேதி வரையிலான புள்ளி […]

Categories
தேசிய செய்திகள்

“கட்டு கட்டாக வெளிநாட்டு பணம்” ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் பறிமுதல்…!!

ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் கட்டு கட்டாக வெளிநாட்டு பணம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது   நாடு முழுவதும் 7 கட்டமாக நடக்கும் மக்களவை தேர்தல் வரும் 11_ஆம் தேதி தொடங்குகிறது . தேர்தல் நடத்தை விதிகள் அமலில் வந்த நாள் தொடங்கி தேர்தல் பறக்கும் படையினர் நாடு முழுவதும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்த சோதனைகளில் சட்டவிரோதமாக உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

பாரபட்சமின்றி செயல்படுவதில் இந்திய ஊடகம் முதலிடம்…..!!

அரசியல் பாரபட்ச உணர்வோடு ஊடகங்கள் செயல்படுவதில் இந்தியா கடைசி இடத்தில் உள்ளதாக  PEW  ஆய்வில் தெரிய வந்துள்ளது. அரசியல் பாரபட்ச உணர்வோடு  ஊடகங்கள் செயல்படுவதில் உலகிலேயே இந்தியா கடைசி இடத்தில் உள்ளது . அதாவது இந்திய ஊடகங்கள் அதிக பாரபட்சமின்றி செயல்படுவதாக ஆய்வு தெரிவிக்கின்றன . ஊடகங்களில் அரசியல் பாரபட்சம் கொண்ட நாடுகளில் பட்டியலை PEW என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது . அதன்படி அதிகளவு பாரபட்சம் காட்டுவதில் லெபனான் ஊடகம் முதலிடம் வகிக்கிறது . அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை பாதுகாக்க தனது சொத்தை பயன்படுத்துங்கள் ….விஜயமல்லையா அதிரடி பதிவு !!…

ரூபாய் 9 ஆயிரம் கோடிக்கும் மேல் மோசடி செய்துவிட்டு லண்டனில் மறைந்துள்ள  விஜய் மல்லையா அவர்கள் தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை பாதுகாக்க கோரி வேண்டுகோள் விடுத்துள்ளார் ஜெட் ஏர்வேஸ் விமான நிலைய நிறுவனமானது தற்போது சரிவை சந்தித்து கொண்டுவருகிறது .அந்நிறுவனம் சரிவை சந்தித்து கொண்டுவரும் இந்நிலையில் பல்வேறு பொதுத்துறை வங்கிகள் அதற்கு உதவி வருகின்றனர் மேலும்  ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை பாதுகாக்க கோரி விஜய் மல்லையா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார் ஜெட் ஏர்வேஸ் […]

Categories
தேசிய செய்திகள்

அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட மும்பை to சிங்கப்பூர் விமானம்… பயணிகள் அதிர்ச்சி !!!..

மும்பையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் திடீரென வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலின் காரணமாக  அவசரஅவசரமாக சர்வ்வதேச விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது . இந்தியாவில் சில வாரங்களுக்கு முன்பாக புல்வாமா தாக்குதல் ஆனது நடைபெற்றது இதனையடுத்து அந்த தாக்குதலுக்கு பின்பு இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் தொடுத்தது மேலும் இன்றைய தினம்  வரை எல்லைப் பகுதிகளில் இந்தியா பாகிஸ்தான் இடையே பதட்டம் என்பது நிலவி வருகிறது. மேலும் இவ்வாறு தொடர்ந்து நடைபெற்று வரும் தாக்குதலால் எல்லைப் பகுதிகள் மட்டும் அல்லாமல் இந்தியாவின் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம்” ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்றது…!!

நாடாளுமன்ற தேர்தலையடுத்து காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம்  நடைபெற்றது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தேர்தல் அறிவிப்பு வெளியாகியதையடுத்து தேசிய கட்சிகள் அடுத்தடுத்து தேர்தல் பணியை  வேகப்படுத்தினர்.இதையடுத்து அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் , பாரதீய ஜனதா கட்சியும் தேர்தல் வெற்றிக்காக வியூகங்களை வகுக்க ஆரம்பித்தனர். மேலும் மாநில அளவிலான நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டனர். இந்நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின்  செயற்குழுக்கூட்டம் அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி […]

Categories
தேசிய செய்திகள்

பணக்கார முதலமைச்சர்….. 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்த சொத்து….. சந்திரபாபு நாயுடு_க்கு 667 கோடி சொத்து…..!!

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு_வின் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்துள்ளது. இந்திய நாட்டின் பணக்கார முதலமைச்சர் என்ற பெயரை ஆந்திர மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு தன்வசப்படுத்தியுள்ளார். கடந்த 2014_ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தின் சட்டசபை தேர்தலில் குப்பம் தொகுதியில் அவர் போட்டியிட்ட போது அவர் அளித்த வேட்பு மனுவுடன் தாக்கலில் தனது குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.177 கோடி என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது அவர் குப்பம் சட்டசபை தொகுதியில் தாக்கல் செய்துள்ள  வேட்புமனுவுடன் இணைந்த பிரமாண பத்திரத்தில்இந்த நிதியாண்டில் ஆண்டு வருமானம் ரூ.64, […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சமாஜ்வாடி கட்சியின் நட்சத்திர வேட்பாளர் பட்டியல்…. ஓரங்கட்டப்பட்ட முலாயம் சிங் யாதவ்…..!!

நாடாளுமன்ற தேரர்தலில் சமாஜ்வாடி கட்சி சார்பாக போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலையடுத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு கட்சிகளின் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.  இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி மற்றும் மாயாவதி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து  தேர்தலை சந்திக்கின்றது . இதையடுத்து அங்குள்ள 80 தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சி 37 தொகுதியும் , பகுஜன் சமாஜ் கட்சி 38 தொகுதியும் தொகுதி பங்கீடு செய்து வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

ஹோலி கொண்டாடிய பாஜக MLA மீது துப்பாக்கிசூடு…..!!

ஹோலி பண்டிகையின் போது பாஜக MLA மீது துப்பாக்கிசூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் குறிப்பாக வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை வெகுவிமர்சையாக , சிறப்பாக கொண்டாடப்படும் . இன்று அதே போல மக்கள் அனைவரும் ஹோலி பண்டிகையை கொண்டாடினர். அதே போல உத்தரப் பிரதேச மாநிலத்தின் நேபாள எல்லை உள்ளது லக்கிம்பூர் கேரி தொகுதி மக்கள் கலர் பொடியை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடினர். இதில் அந்த தொகுதியை சேர்ந்த பிஜேபி  சட்டமன்ற உறுப்பினர் யோகேஷ் வர்மா கலந்துகொண்டார்.   […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

வாக்காளர் அடையாளஅட்டை இல்லையா கவலை வேண்டாம் வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்க புதிய திட்டம்

தேர்தல் நெருங்கும் பட்சத்தில் வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்த 11 ஆவணங்களைக் கொண்டு வாக்களிக்கலாம் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது இதனை அடுத்து ஏப்ரல் 18-ம் தேதி என்று தமிழகத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் சேர்த்து மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் அறிக்கையாக வெளியாகின. இதனையடுத்து தேர்தல் குறித்த பிரச்சாரங்கள் கொண்டாட்டங்கள் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது […]

Categories
தேசிய செய்திகள்

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு வழக்கு – சாமியார் உட்பட 4 பேர் விடுதலை…!!

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் இரயில் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 4-பேரை விடுதலை செய்து என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அரியானா மாநிலத்தில் உள்ள பானிபட் அருகே கடந்த 2007ம் வருடம் பிப்ரவரி மாதத்தில் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் இரயிலில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 68-பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த தாக்குதல்  காரணமான 4-பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு பஞ்ச்குலாவில் அமைந்துள்ள என்.ஐ.ஏ நீதி மன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

13,000 கோடி மோசடி செய்த நிரவ் மோடி லண்டனில் கைது…!!

இந்தியாவில் பண மோசடி செய்து விட்டு வெளிநாடான  பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் நிரவ் மோடி லண்டனில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில்  குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்  பிரபல வைர வியாபாரியான  நிரவ் மோடி. இவருக்கு வயது 48. நிரவ் மோடியும் அவரின்  நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்தாமல்  மோசடி செய்துவிட்டு  வெளிநாட்டுக்கு தப்பி சென்று  விட்டனர். இந்த மோசடி  தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அவர்கள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

” சாப்பாடு முதல் சகலமும் ” விலையை தீர்மானித்தது தேர்தல் ஆணையம்…!!

வேட்பாளர்களர் செலவு செய்யும் போது அதற்கான விலை இவ்வளவு தான் இருக்க வேண்டுமென்று தீர்மானித்துள்ளது .    மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19 வரை ஏழு கட்டமாக நடை பெறுவதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . மேலும் தேர்தல் நடத்தை விதிமுறை அமுலுக்கு வந்துள்ளது . இந்நிலையில் தேர்தல் ஆணையமும் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது .   மேலும் மக்களவைத் தேர்தலுக்கு ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக  70 லட்சம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

” வழிபட்டு தளங்களில் தேர்தல் பரப்புரை ” தேர்தல் ஆணையம் வேண்டுகோள்…!!

வழிபட்டு தளங்களை தேர்தல் பரப்புரை செய்ய பயன்படுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளை வலியுறுத்தியுள்ளது. மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19 வரை ஏழு கட்டமாக நடத்தைப் பெறுவதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . இதில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறை அமுலுக்கு வந்துள்ளது . இந்நிலையில் தேர்தல் ஆணையமும் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது .இந்நிலையில் கோவில் மற்றும் வழிபாட்டுத் தலங்களை தேர்தல் பரப்புரைக்காக பயன்படுத்தக் […]

Categories
தேசிய செய்திகள்

ரூபாய் 550 கோடி கடன் …. கைது நடவடிக்கை….. தப்பிய அனில் அம்பானி ….!!

எரிக்சன் நிறுவனத்திற்கு ரூபாய் 550 கோடி கொடுக்க வேண்டிய கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளார் அனில் அம்பானி. ஸ்வீடன் நாட்டிலுள்ள எரிக்ஸன் தொலைத்தொடர்பு நிறுவனம் ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்குத் தொழில்நுட்பங்கள், கருவிகள் மற்றும் சேவைகளை அளிக்க கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து 7 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்ததில் எரிக்ஸன் நிறுவனத்துக்கு ரூ.1500 கோடி ரூபாயை ரிலையன்ஸ் நிறுவனம் கொடுக்க வேண்டி இருந்தது . ரூ.45 ஆயிரம் கோடி ரிலையன்ஸ் நிறுவனம் கடனில் இருப்பதால்  ரூ.550 கோடி பெற்று கொள்ள எரிக்ஸன் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கோவா மாநில புதிய முதல்வர்…… இன்று இரவு 11 மணிக்கு தேர்வு……!!

கோவா மாநிலத்தின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் இன்று இரவு 11 மணிக்கு பதவி ஏற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவா மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் (63 வயது ) . இவர் கடந்த ஒரு வருட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு இருந்தார் . இந்நிலையில் புற்றுநோயின் தாக்கத்திலும் கூட அவர் சட்ட பேரவைக்கு மருத்துவ சிகிக்சை கருவிகளுடன் வந்து தன்னுடைய பணியை தொடர்ந்தார் . இந்நிலையில் தொடர்ந்து ஒரு வருட காலமாக […]

Categories
தேசிய செய்திகள்

முதல்வர் மனோகர் பாரிக்கர் மரணம்….. 1 நாள் நாடு தழுவிய துக்கம் அனுசரிப்பு……!!

கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவையொட்டி இன்று ஒருநாள் நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்க படுகின்றது  கோவா மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் (63 வயது ) . இவர் கடந்த ஒரு வருட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு இருந்தார் . இந்நிலையில் புற்றுநோயின் தாக்கத்திலும் கூட அவர் சட்ட பேரவைக்கு மருத்துவ சிகிக்சை கருவிகளுடன் வந்து தன்னுடைய பணியை தொடர்ந்தார் . இந்நிலையில் தொடர்ந்து ஒரு வருட காலமாக […]

Categories
தேசிய செய்திகள்

கடன் நெருக்கடியில் அனில் அம்பானி …… எரிக்சன் வழக்கில் சிறை செல்வாரா..?

எரிக்சன் நிறுவனத்திற்கு ரூபாய் 453 கோடி கொடுக்க வேண்டிய கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளார் அனில் அம்பானி. ஸ்வீடன் நாட்டிலுள்ள எரிக்ஸன் தொலைத்தொடர்பு நிறுவனம் ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்குத் தொழில்நுட்பங்கள், கருவிகள் மற்றும் சேவைகளை அளிக்க கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து 7 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்ததில் எரிக்ஸன் நிறுவனத்துக்கு ரூ.1500 கோடி ரூபாயை ரிலையன்ஸ் நிறுவனம் கொடுக்க வேண்டி இருந்தது . ரூ.45 ஆயிரம் கோடி ரிலையன்ஸ் நிறுவனம் கடனில் இருப்பதால்  ரூ.550 கோடி பெற்று கொள்ள எரிக்ஸன் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது . […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எதிர்கட்சிகளை விட கூடுதலாக பிரசாரம்…… மோடியின் தேர்தல் யூக்தி….!!

உத்தரபிரதேசத்தில் மோடி எதிர்கட்சிகளை விட கூடுதலாக 20 பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார். உத்தரபிரதேசத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11-ல்  தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறுகின்றது. முதல் கட்ட வாக்கு பதிவு  உத்தரபிரதேச மாநிலத்தின் சஹரான்பூர், கைரனா, முசாபர் நகர், பிஜ்னோர், மீரட், பாக்பத், காஜியாபாத், அலிகர் மற்றும் கவுதம்புத் நகர் உள்ளிட்ட மக்களவை தொகுதிகளில் நடைபெறுகிறது.   உத்தரபிரதேசத்தில் வருகின்ற ஏப்ரல் 7_ஆம் தேதி உ.பி.யின் சஹரான்பூரில் மாயாவதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் அகிலேஷ், மாயாவதி இணைந்து பேசும் முதல் பிரசார […]

Categories
தேசிய செய்திகள்

பட்டாசு தடைக்கு நீதிபதி ஆவேசம் வாகனங்களால் ஏற்படும் மாசுபாட்டை நிறுத்த முடியுமா சரமாரி கேள்வி

இந்தியாவில் பட்டாசு தடை விதிக்கப்பட்டதன் காரணமாக பல தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர் இதனால் ஆவேசமடைந்த நீதிபதி வாகனங்களால் ஏற்படும் மாசுபாட்டை தடுக்க முடியுமா என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார் பட்டாசு தயாரிப்பினாலும் பட்டாசுகள் வெடிப்பதினாலும் அதிக அளவிலான மாசுகள் வழிபட்டு சுற்றுச்சூழலை பாதிக்கிறது என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் புகார் அளித்த நிலையில் அதனை படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சிலர் வழக்கு தொடர்ந்து உள்ளனர்   இதனை தொடர்ந்து பட்டாசுகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

3 தொகுதியில் இடை தேர்தல் நடத்த என்ன பிரச்னை…… தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் கேள்வி…!!

திருப்பரங்குன்றம் ஓட்டப்பிடாரம் மற்றும் அரவக்குறிச்சி உள்ளிட்ட மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த என்ன பிரச்சனை என்று பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . திருப்பரங்குன்றம் ,அரவக்குறிச்சி மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகளில் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் . இந்த வழக்கில் ஆஜரான திமுகவின் வழக்கறிஞர்  வழக்கறிஞர் அபிஷேக் , வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் – பஞ்சாப் எல்லையில் இந்திய விமானப்படை போர் ஒத்திகை…..!!

காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் இந்திய விமானப்படை போர்  விமானங்கள் அதிவேகத்தில் பறந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டன.  புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளின்  தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக  இந்திய விமானப் படை விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து  தாக்குதல் நடத்தியது.இந்த தாக்குதலில்   ஜெய்ஷ் -இ -முகமது தீவிரவாத இயக்கத்தின் முகாம்கள் அழிக்கப்பட்டன. இதனையடுத்து  இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானங்கள் தாக்குதல்  நடத்த முயன்ற போது இந்திய விமானப்படை அந்நாட்டு விமானங்களை  விரட்டியடித்தது. இதையடுத்து எல்லையோரப் பகுதிகளில் இந்திய விமானப் படையும், விமானத் தாக்குதல் தடுப்பு அமைப்புகளும் தயார் […]

Categories
தேசிய செய்திகள்

மேம்பாலம் இடிந்து 3 பேர் பலி…! படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு..!!

மும்பையில் நடைபாதை மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். மும்பை மாநிலம் அந்தேரி கிழக்கு -மேற்கு ரயில் நிலையங்களை இணைக்கும் பாலமாக அமைந்துள்ளது. இந்நிலையில் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே ஏற்பட்டிருக்கும் கோர விபத்து நடைபாதை மக்களிடையே பெரும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து குறித்து ரயில்வே போலீசார் கூறுகையில் நடைமேம்பாலம் சத்திரபதி சிவாஜி நிலையத்தின் .பிளாட்பாரத்தில் பி.டி. லேன் அமைந்திருக்கும் பகுதியுடன் இணைகிறது. அந்த […]

Categories
தேசிய செய்திகள்

கர்தார்பூர் சிறப்பு வழித்தட திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையே பேச்சு வார்த்தை….!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே கர்தார்பூர் சிறப்பு வழித்தட திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக முதல்கட்ட பேச்சுவார்த்தை இன்று சுமுகமாக நடைபெற்றது.    சீக்கிய பக்தர்களுக்காக பஞ்சாப்பின் குருதாஸ்பூர் மாவட்டத்திலிருந்து குருத்வாரா தர்பார் சாஹிப் அமைந்துள்ள பாகிஸ்தானின் கர்தார்பூருக்கு சிறப்பு வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. சீக்கிய பக்தர்கள் விசா இன்றி சென்று வர இந்த சிறப்பு வழித்தடம் அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த ஏற்கனவே இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளது. இந்நிலையில் புல்வாமா தீவிரவாத தாக்குதலை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

100% வாக்களிப்பை உறுதிப்படுத்த பிரபல நடிகர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களிடம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் …

நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய மக்கள் அனைவரும் வாக்கினை செலுத்தி இம்முறை நூறு சதவீதம் வாக்கு கொடுத்து விட்டோம் என்ற நிலையை கொண்டுவர வேண்டிய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிரபல நடிகர்கள் மற்றும் இந்திய மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் வாக்களிப்பதற்கான  விழிப்புணர்வு பிரச்சாரம் என்பது  நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது இதனை தொடர்ந்து பல்வேறு சமூக இயக்கங்கள் இது குறித்து விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தி வருகின்றனர் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்கு பயந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைமேற்கொண்டுள்ளது பாகிஸ்தான் அரசு

இந்தியா தாக்குதல்களுக்கு பயந்து பாகிஸ்தான் ராணுவ வீரர்களை எல்லையில் குவித்து பாகிஸ்தான் அரசு இதனைத் தொடர்ந்து காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவமும் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளது…                                              சில வாரங்களுக்கு முன்பு காஷ்மீர் பகுதியில் புல்வாமா என்னும் இடத்தில் பயங்கரவாதிகள்  இந்திய துணை ராணுவத்தின் மீது தாக்குதல் […]

Categories
அரசியல் டெக்னாலஜி தேசிய செய்திகள்

தேர்தல் முறைகேடுகளை சரி செய்ய செயலி அறிமுகம்….. தேர்தல் ஆணையம் வெளியிட்டது…!!

மக்களவை தேர்தலையடுத்து பல்வேறு புகார்கள் மற்றும் முறைகேடுகளை தடுக்க தேர்தல் ஆணையம் தொழில்நுட்ப வாயிலாக பல்வேறு செயலி மற்றும் இணையத்தை அறிமுகம் செய்துள்ளது. வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட்து முதல் தேர்தல் நடத்தை விதிமுறை அமுலுக்கு வருகின்றது. இது குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது . இந்நிலையில் வாக்காளர்கள் , வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் பயன்பெறும் வகையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் செயலிகள் மற்றும் இணைய […]

Categories
தேசிய செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி – சுனில் அரோரா…!!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம், 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக அறிவித்துள்ள தேர்தல் ஆணையம் இந்த முறை 8 கோடியே 40 லட்சம் புதிய  வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. டெல்லியில் தேர்தல் அறிவிப்பை வெளியிட்ட இந்திய தேர்தல் அதிகாரி சுனில் அரோரா பள்ளித் தேர்வுகள்,மத ரீதியான விழாக்களை  கவனத்தில் கொண்டு தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். வாக்காளர் பட்டியல் சரியாக இருக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வரை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

” 7 கட்டமாக மக்களவை தேர்தல் ” தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவித்தது தேர்தல் ஆணையம்…!!

வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். 17_ஆவது மக்களவை தேர்தல் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படுமென ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று மாலை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இந்த சந்திப்பு நடைபெற்ற பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் […]

Categories

Tech |