பா.ஜ.க தலைவர் அமித் ஷாவின் பிரம்மாண்ட பேரணிக்கு மேற்கு வங்காளம் அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்தியா முழுவதும் ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்கி 6 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தொண்டர்களுக்கிடையே கடுமையான மோதல்கள் நடந்தது. பிரதமர் மோடியும் மேற்கு வங்காளம் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் காரசாரமாக ஒருவரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர். இந்நிலையில், பா.ஜ.க தலைவர் அமித் ஷாவின் […]
