Categories
அரசியல் தேசிய செய்திகள்

கேதார்நாத் குகையில் தியானம் செய்து வரும் மோடி.!!

பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள  கேதார்நாத் குகையில்  தியானம் செய்து வருகின்றார். பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நாளை 19-ம் தேதி  இறுதிக்கட்ட தேர்தல் நடக்க இருக்கின்றது. இதற்கான சூறாவளி பிரசாரம் நேற்று மாலை ஓய்ந்தது. நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில், பிரதமர் மோடி, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார் நாத் கோவிலுக்கு   ராணுவ ஹெலிகாப்டர் மூலம் சென்றார். இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள  பிரதமர் மோடி பாரம்பரிய உடையில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நாங்கள் 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்” பிரதமர் மோடி உறுதி..!!

மத்திய பிரதேசத்தில் நடந்த  கடைசி பேரணியில், நாங்கள் 300 இடங்களுக்கு மேல் கைப்பற்றுவோம் என்று பிரதமர் மோடி உறுதியுடன் தெரிவித்துள்ளார்.  மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு 6-கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தேர்தல்  பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 7-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு வருகின்ற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்றுடன் அதற்கான தேர்தல் பிரசாரம் முடிவடைந்துள்ளது. பிரதமர் மோடி தேசம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“வித்யாசாகர் சிலை உடைந்த தடயத்தை அழிக்கும் போலீசார்” பிரதமர் மோடி குற்றச்சாட்டு..!!

வித்யாசாகர் சிலை உடைக்கப்பட்டதில் தடயங்களை அழிப்பதற்கு  போலீஸ் முயற்சி செய்து வருகின்றனர் என  பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். மேற்குவங்காள மாநிலம் மதுராபூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசியபோது, கொல்கத்தாவில் நடந்த  வன்முறைக்கு காரணம்திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் குண்டர்கள் தான். கலவரத்தின் போது அவர்கள் தான் ஈஸ்வர் சந்திரா வித்யாசாகர் சிலையை உடைத்தனர். போலீஸ் அதிகாரிகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின்  குண்டர்களை பாதுகாப்பதற்காக, சிலை உடைந்துள்ள பகுதியில் தடயங்களை அழிக்க முயற்சி செய்கின்றார்கள். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், […]

Categories
தேசிய செய்திகள்

கோவா கடற்கரையில் செல்பி எடுக்க முயன்று உயிரை விட்ட பெண் டாக்டர்.!!

கோவா கடற்கரையில் செல்பி எடுக்க முயன்ற இளம் பெண் மருத்துவர்  ராட்சஅலையில் சிக்கி  உயிரிழந்தார்.  ஆந்திராவில் ஜக்கையா பேட்டையை  சேர்ந்தவரான இளம்பெண் மருத்துவர் ரம்யா கிருஷ்ணா,  கோவா அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மாலை கோவா கடற்கரைக்கு சென்றார். அங்கு அவர் கடலை பின்புலமாகக் கொண்டு  தமது செல்போனில் செல்பி எடுக்க முயன்றார். அப்போது திடீரென எழுந்த ராட்சத கடல் அலை அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றது. உடனே இதனை கண்ட மீனவர்கள் கடலில் குதித்து அவரை மீட்க போராடினர். போலீசாரும் அவர்களுடன் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் ஆணையம்” அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

இந்திய தேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். மக்களவை  தேர்தல் 7 கட்டமாக  நடைபெறும் என அறிவிக்கப்பட்டு  6 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் 7-வது மற்றும் கடைசி  கட்ட தேர்தல் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிந்து  வாக்கு பதிவு எண்ணிக்கைக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே  உள்ள நிலையில் யார் ஆட்சி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் பலமாக எழும்பியுள்ளது. இந்த தேர்தலில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“எங்களுக்கு பிரதமர் பதவி இல்லயென்றாலும் பரவாயில்லை” பா.ஜ.கவை ஆட்சியமைக்க விடமாட்டோம் – குலாம்நபி ஆசாத்.!!

பா.ஜ.க இல்லாத ஆட்சியை கொண்டு வருவோமென  ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார். மக்களவை  தேர்தல் 7 கட்டமாக  நடைபெறும் என அறிவிக்கப்பட்டு  6 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இறுதி கட்ட தேர்தல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிந்து  வாக்கு பதிவு எண்ணிக்கைக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே  உள்ள நிலையில் யார் ஆட்சி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் பலமாக எழும்பியுள்ளது. இதற்கிடையே  நாங்கள் தான் ஆட்சி அமைப்போம் என்று  பா.ஜ.க.வும், காங்கிரசும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“கலவரத்தில் ஈடுபட்டதற்கு ஆதாரம் காட்டுங்கள்” இல்லையென்றால் சிறையில் அடைப்பேன்….. மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!!

திரிணாமுல் காங்கிரஸ் வன்முறையில் ஈடுபட்டதற்கு சரியான  ஆதாரங்களை காட்டுங்கள் மோடி ஜி இல்லையெனில் சிறையில் அடைப்பேன் என்று மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். கொல்கத்தா நகரில் பாஜக தலைவர் அமித் ஷா நடத்திய பேரணியில் பாஜக தொண்டர்களுக்கும், எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இந்த கலவரத்தின் போது  வித்யாசாகர் கல்லூரி வளாகத்தில் இருந்த ஈஷ்வர் சந்திரா வித்யாசாகரின் மார்பளவு சிலை உடைக்கப்பட்டது. இந்த சிலையை உடைத்தது பா.ஜ.கவினர் தான் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“சிலையை கட்டமைக்க பா.ஜ.கவின் பணம் தேவையில்லை” நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் – மம்தா பானர்ஜி தாக்கு.!!

வித்யாசாகர் சிலையை கட்டமைக்க பாஜகவின் பணம் எங்களுக்கு தேவையில்லை என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.  கொல்கத்தா நகரில் பாஜக தலைவர் அமித் ஷா நடத்திய பேரணியில் பாஜக தொண்டர்களுக்கும், எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இந்த கலவரத்தின் போது  வித்யாசாகர் கல்லூரி வளாகத்தில் இருந்த ஈஷ்வர் சந்திரா வித்யாசாகரின் மார்பளவு சிலை உடைக்கப்பட்டது. இந்த சிலையை உடைத்தது பா.ஜ.கவினர் தான் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. ஆனால் பா.ஜ.க வினர் திரிணாமுல் காங்கிரஸ் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ராகுல் பீரங்கி, நான் AK 47…. நவ்ஜோத் சிங் சித்து அனல் பறக்கும் பிரச்சாரம்!!

பஞ்சாப் மாநில மந்திரி  நவ்ஜோத் சிங் சித்து பிரசாரப்பொதுக் கூட்டத்தில் இன்று உரையாற்றிய போது ராகுல் காந்தி பீரங்கி, நான் AK  47 என பேசினார். மக்களவை தேர்தலில்  6 கட்ட தேர்தல் நிறைவடைந்து விட்டது.  இமாச்சலப்பிரதேசத்தில் வருகின்ற  19-ம் தேதி மக்களவை தேர்தல் 7வது கட்ட தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து பா.ஜக, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பஞ்சாப் மாநில மந்திரியும், […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“கொல்கத்தா கலவரத்தில் சேதமடைந்த வித்யாசாகர் சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும்” பிரதமர் மோடி உறுதி..!!

கொல்கத்தா கலவரத்தில் உடைக்கப்பட்ட வித்யாசாகர் சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும் என பிரதமர் மோடி உறுதியுடன் தெரிவித்தார்.  சுதந்திரத்திற்கு முன் வெள்ளையர்கள் இந்தியாவை ஆட்சி செய்த காலத்தின் போது வங்காளம் என்றழைக்கப்பட்ட பெரும்பகுதியின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர், ஈஷ்வர் சந்திரா வித்யாசாகர். இவர் சிறந்த கல்வியாளராகவும்,  தத்துவவாதியாகவும், மொழிபெயர்ப்பாளராகவும், பேராசிரியராகவும், பெரும் கொடையாளராகவும் திகழ்ந்துள்ளார். இவரை மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் சமூக சீர்திருத்தவாதியாக பெருமையுடன் போற்றி, மதித்து வருகின்றனர். இதற்கிடையே கொல்கத்தா நகரில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மம்தா டெல்லி வரும்போது “வெளிநபர்” என்று சொல்லலாமா? – அமித்ஷா கேள்வி!!

மேற்கு வங்காளத்தில் என்னை ‘வெளிநபர்’ என்று கூறும் போது மம்தா டெல்லிக்கு வரும்போது அவரை வெளிநபர் என்று சொல்லலாமா? என்று அமித் ஷா கேட்டுள்ளார். பிரதமர் மோடி, பா.ஜ.க  தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோருக்கும், மேற்கு வங்காள மாநிலத்தின்  முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கும் இடையில்  அடிக்கடி வார்த்தைப்போர் நடந்து வருகிறது. வெளிநபரான அமித் ஷா மேற்கு வங்காளத்துக்குள் நுழைந்து   மக்களிடையே பிளவை உண்டாக்க முயற்சிக்கிறார்” என்று மம்தா அடிக்கடி கூறி வருகிறார். இந்நிலையில், கொல்கத்தா நகரில் சிந்தனையாளர்கள் கூட்டம் ஒன்றில் அமித் ஷா […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சீர் திருத்தவாதி சிலை உடைப்பு..!! ட்விட்டரில் புகைப்படத்தை மாற்றிய தலைவர்கள்..!!

பாஜகவினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ட்விட்டரில் புகைப்படத்தை மாற்றியுள்ளனர்.   கொல்கத்தாவில்  நேற்று  மாலை பா.ஜ.க தலைவர் அமித் ஷா பேரணி நடத்தினார். கொல்கத்தா  பல்கலைக்கழகத்தை கடந்து வந்த அமித்ஷா, கல்லூரி சாலைக்குள் பேரணியுடன்  நுழைந்தபோது கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் தத்துவ மேதை ஈஷ்வர் சந்திரா வித்யாசாகர் மார்பளவு சிலை உடைக்கப்பட்டது. இந்த சிலையை உடைத்தது பா.ஜ.கவினர் தான் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. ஆனால் பாஜகவினர் திரிணாமுல் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டுகின்றனர். இதற்கிடையே திரிணாமுல் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“அமித்ஷா ஒரு பொய்யர்” பதிலடி கொடுத்த திரிணாமுல் காங்கிரஸ்.!!

கொல்கத்தா நகரில் நடந்த வன்முறைக்கு திரிணாமுல் காங்கிரஸ் தான் காரணம் என்ற அமித்ஷாவின் குற்றசாட்டுக்கு அக்கட்சி மறுப்பை தெரிவித்துள்ளது.    கொல்கத்தாவில்  நேற்று  மாலை பா.ஜ.க தலைவர் அமித் ஷா பேரணி நடத்தினார். கொல்கத்தா  பல்கலைக்கழகத்தை கடந்து வந்த அமித்ஷா கல்லூரி சாலைக்குள் பேரணியுடன்  நுழைந்தபோது கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் தத்துவ மேதை வித்யாசாகர் மார்பளவு சிலை உடைக்கப்பட்டது.  இதையடுத்து அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டு தடியடி நடத்தியதால்  கூட்டம் கலைந்து சென்றது. இதையடுத்து அப்பகுதியில் இயல்பு நிலை திரும்பியது. இந்த வன்முறை குறித்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

புதிய ஆட்சியில் “நானே மீண்டும் வருவேன்” பீகாரில் பிரதமர் பேச்சு…..!!

வளர்ச்சி திட்டத்துடன் புதிய ஆட்சியில் மீண்டும் நானே வருவேன் என்று பிரதமர் மோடி பீகார் தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்துள்ளார். 7 கட்டமாக நடைபெற்று வருகின்ற மக்களவை தேர்தலின் 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதன் 7_ஆம்  மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு வருகின்ற மே 19_ஆம் நடைபெற இருக்கின்றது . ஆட்சியை தக்க வைக்க பிஜேபியும் , ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும்  தீவிரமாக இறுதிக்கட்ட பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலத்தின் பாடலிபுத்ராவில் பிரதமர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

 “அமித் ஷா பேரணியில் வித்யாசாகர் சிலை உடைப்பு” கொல்கத்தாவில் அரசியல் கட்சியினர் போராட்டம்..!!

கொல்கத்தாவில் நடந்த கலவரத்தில் வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திரிணாமுல் மற்றும் கம்யூனிஸ்ட்  தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுதந்திரத்திற்கு முன் வெள்ளையர்கள் இந்தியாவை ஆட்சி செய்த காலத்தின் போது வங்காளம் என்றழைக்கப்பட்ட பெரும்பகுதியின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர், ஈஷ்வர் சந்திரா வித்யாசாகர். இவர் சிறந்த கல்வியாளராகவும்,  தத்துவவாதியாகவும், மொழிபெயர்ப்பாளராகவும், பேராசிரியராகவும், பெரும் கொடையாளராகவும் திகழ்ந்துள்ளார். இவரை மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் சமூக சீர்திருத்தவாதியாக பெருமையுடன் போற்றி, மதித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று கொல்கத்தா நகரில் பாஜக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மார்பிங் செய்ததற்காக மன்னிப்பு கேட்க முடியாது” ஜாமீனில் வெளிவந்த பாஜக நிர்வாகி பேட்டி…!!

மம்தா பனர்ஜியை மார்பிங் செய்தற்காக மன்னிப்பு தெரிவிக்க முடியாது என்று ஜாமீனில் வெளிவந்த பாஜக நிர்வாகி பிரியங்கா சர்மா தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முகத்தினை  மெட்காலாவில் பிரியங்கா சோப்ரா அணிந்துள்ள உடையுடன் இணைத்து மார்பிங் செய்து அவதூறு பரப்பும் வகையில் வகையில் மீம்ஸ் வெளியிட்ட பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்த பெண் நிர்வாகி பிரியங்கா சர்மா கடந்த 10_ஆம் கொல்கத்தா கொல்கத்தா போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் மேற்கு வங்க மாநில அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியது. மேலும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“கொல்கத்தா கலவரத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே காரணம்” அமித்ஷா குற்றச்சாட்டு!!

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற கலவரத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே காரணம் என்று அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.    கொல்கத்தாவில்  நேற்று  மாலை பா.ஜ.க தலைவர் அமித் ஷா பேரணி நடத்தினார். கொல்கத்தா  பல்கலைக்கழகத்தை கடந்து வந்த அமித்ஷா கல்லூரி சாலைக்குள் பேரணியுடன்  நுழைந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ்  மாணவ அமைப்பினர் கருப்பு கொடி காட்டி அமித்ஷா திரும்பி போ என்று கோஷமிட்டனர். பல்கலை கழக மாணவர்கள் விடுதி அருகே திரிணாமுல் காங்கிரஸ்  மாணவர்கள் அமித்ஷா   இருந்த  பிரசார வாகனத்தின் மீது […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியின் பிறப்புறுப்பில் “ஹேண்டில்பார்” சொருகி சித்ரவதை….கொடூர கணவன் கைது!!

மத்தியபிரதேசம் மாநிலத்தில் நினைத்து கூட பார்க்க முடியாத  வகையில் மனைவியை சித்ரவதை செய்த கொடூர கணவர் கைது செய்யப்பட்டார். மத்தியபிரதேசம் மாநிலம் தார் பகுதியைச் சேர்ந்தவர் ராமா. 35 வயதான இவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு  திருமணமாகி,  தற்போது 6 குழந்தைகள் இருக்கிறது. ராமா கடந்த 2 ஆண்டுகளாகவே  தனது மனைவியை கொடூரமாக சித்தரவதை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 6 குழந்தைள்  இருக்கின்ற போதிலும், தனது மனைவியை ஒரு பெண் என்று நினைத்து  கூட பார்க்காமல்,  வெளியில் சொல்லமுடியாத அளவுக்கு கடும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“கமலுக்கெதிராக வழக்கு தள்ளுபடி” டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி…!!

கமலுக்கெதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அரவக்குறிச்சி சட்ட பேரவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த கமல் , சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து என்றும் , அது  நாதுராம் கோட்சே என்று கூறினார். இவரின் இந்த பேச்சுக்கு சர்சையை ஏற்படுத்தியது. மேலும் இதற்க்கு பாஜக , அ.தி.மு.க. மற்றும்  இந்து அமைப்புகள் கடும் கண்டனம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

யார் தலைமையில் ஆட்சி..? “மே 23_ஆம் தேதி ஆலோசனை” சோனியா அழைப்பு….!!

நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 7 கட்டமாக நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின் 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் , கடைசி மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு மே 19_ஆம் நடைபெற இருக்கின்றது. இந்தியா முழுவதும் பதிவான வாக்குகள்  அனைத்தும் வருகின்ற மே 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மத்தியில் ஆட்சியமைக்க எந்த தேசிய கட்சிகளுக்கும் பெரும்பான்மை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மோடிக்கு ஆதரவாக , தனக்கு எதிராக கோஷம்” கைகொடுத்து வாழ்த்திய பிரியங்கா….!!

தனக்கு எதிராக கோஷமிட்டவர்களை சந்தித்து கைகுலுக்கி சிரித்து பேசியபடி பிரியங்கா காந்தி செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 7 கட்டமாக நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின் 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் , கடைசி மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற இருக்கும் மக்களவை தொகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“பாஜகவை கைவிட்ட RSS” அச்சத்தில் மோடி…. மாயாவதி பரபரப்பு தகவல்…!!

பாஜகவை RSS கைவிட்டுவிட்டதால் பிரதமர் மோடி அச்சத்தில் இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார். மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 7 கட்டமாக நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின் 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் , கடைசி மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற இருக்கும் மக்களவை தொகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்தியாவில் அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பிஜேபி_க்கு மாற்றாக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மக்கள் மோடி மீது இப்போதும் நம்பிக்கை வைத்துள்ளனர்” அருண் ஜெட்லி கருத்து…!!

மக்கள் பிரதமர் மோடி மீது இன்னும் நம்பிக்கை வைத்துள்ளனர் என்று மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி பேட்டியளித்துள்ளார். மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 7 கட்டமாக நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின் 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் , கடைசி மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற இருக்கும் மக்களவை தொகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருவதால் தேசிய அரசியல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மீண்டும் காங்கிரஸ் ஆட்சி ஆமைக்குமா ? பாஜக தனது ஆட்சியை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“3_இல் 2 பங்கு வெற்றி பெற்று பாஜக ஆட்சியமைக்கும்” அருண் ஜெட்லி பேட்டி…!!

தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு வெற்றி பெற்று ஆட்சியமைக்குமென்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 7 கட்டமாக நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின் 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் , கடைசி மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற இருக்கும் மக்களவை தொகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருவதால் தேசிய அரசியல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மீண்டும் காங்கிரஸ் ஆட்சி ஆமைக்குமா ? பாஜக […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“இரயில் நிலைய பராமரிப்பு” குப்பையை கொட்டினால் ரூ 5,000 அபராதம்…ரெயில்வே நிர்வாகம் அதிரடி …!!

ரயில் நிலையத்தில் யாரும் குப்பையை கொட்டினால் 5000 அபராதம் விதிக்கப்படுமென்று  ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள இரயில் நிலையங்கள் பராமரிப்பின்மை குறித்து பல்வேறு புகார்கள் எழுந்ததையடுத்து நாடுமுழுவதும் உள்ள  ரெயில் நிலையங்களை தூய்மையாக பராமரிக்க ரெயில்வே நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு , ரெயில் நிலையங்களில் இருக்கும் குடிநீர், தூய்மை மற்றும் எரிபொருள் போன்றவற்றை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் குழு அமைத்ததோடு இந்தியா முழுவதும்  உள்ள சுமார் 720 ரெயில் நிலைய […]

Categories
தேசிய செய்திகள்

“மோடியின் பாஜக மூழ்கும் கப்பல்” மாயாவதி விமர்சனம்….!!

மோடி தலைமையிலான பாஜக அரசு மூழ்கும் கப்பல் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார். மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 7 கட்டமாக நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின் 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் , கடைசி மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற இருக்கும் மக்களவை தொகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்தியாவில் அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பிஜேபி_க்கு மாற்றாக சமஜ்வாதியும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கொல்கத்தாவில் அமித்ஷாவின் பிரச்சார வாகனம் மீது தாக்குதல்…. தடியடி, தீ வைப்பினால் போலீசார் குவிப்பு.!!

கொல்கத்தா நகரில்  பேரணியின் போது அமித்ஷா வந்த பிரச்சார வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவியது.  இந்தியா முழுவதும் ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்கி 6 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள மக்களவை  தேர்தலில்  வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தொண்டர்களுக்கிடையே கடுமையான மோதல்கள் நடந்தது. பிரதமர் மோடியும் மேற்கு வங்காளம் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் காரசாரமாக ஒருவரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர். இந்நிலையில், பா.ஜ.க தலைவர் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை வானிலை

கேரளாவில் ஜூன் 4-ம் தேதி தென்மேற்கு பருவமழை – இந்திய வானிலை ஆய்வு மையம்!!

தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 4-ம் தேதி தொடங்குமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிக மழை பொழிவை தரும் தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் கோடை காலமான மே மாதம் முடிந்த பிறகு  வெயிலுக்கு சூட்டை தணிப்பது போல்  ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை பெய்கிறது. இந்த மழையினால் பசுமை இந்தியாவில் உள்ள அணைகள் நிரம்பி வழிகிறது. இந்தியாவின் விவசாய உற்பத்தியை நிர்ணயிப்பதில் தென்மேற்கு பருவமழை முக்கிய பங்கு வகிக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

“காஷ்மீரில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை” கல்லூரி மாணவர்கள் போராட்டம்!!

ஜம்மு-காஷ்மீரில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை  செய்யப்பட்டதையடுத்து  கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் பந்திபோரா (Bandipora) மாவட்டத்தின் அருகே உள்ள சும்பல் (Sumbal) பகுதியில் 3 வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி, ஸ்ரீநகரைச் சேர்ந்த இரு கல்லூரிகளின் மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்கு வெளியே வந்து போராட்டம் நடத்த முயன்றதால் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அவர்களை தடுத்தனர். இதனால்  இரு தரப்புக்கும் இடையே கடுமையான  மோதல் ஏற்பட்டது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஆந்திர மாநில முதல்வர் துரைமுருகன் சந்திப்பு” உறுதியாகிறதா 3_ஆவது அணி…!!

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திமுக_வின் பொருளாளர் துரைமுருகன் இன்று சந்தித்து பேசியுள்ளது அரசியலில் கவனிக்கத்தக்கதாக பார்க்கப்படுகின்றது. மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு நிறைவடையும் சூழலில் பல்வேறு முக்கிய திருப்பமாக அரசியல் சந்திப்பு நடைபெற்று வருகின்றது. அதில் ஆந்திர மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திமுக_வின் பொருளாளர் துரைமுருகன் இன்று சந்தித்து பேசியுள்ளது அரசியலில் கவனிக்கத்தக்கதாக பார்க்கப்படுகின்து. நேற்றைய தினம் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் திமுக தலைவர் முக. ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இது நட்பு ரீதியிலான சந்திப்பு என்று […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“பாதுகாப்பு தடுப்புகளை தாண்டி குதித்த பிரியங்கா” வைரலாகும் வீடியோ…..!!

தேர்தல் பிரசாரத்தில்பாதுகாப்புக்காக  போலீசார் அமைத்திருந்த தடுப்பை தாண்டிக் குதித்துச் சென்று பிரியங்கா காந்தி மக்களைச் சந்தித்த வீடியோ வைரலாகி வருகின்றது. மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 7 கட்டமாக நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின் 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் , கடைசி மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற இருக்கும் மக்களவை தொகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய ராணுவத்தினர் அணியும் சீருடையில் மாற்றம்.!!

வானிலை மற்றும் சில காரணங்களால்  இந்திய ராணுவத்தினர் அணியும் சீருடையில் சில மாற்றங்கள் கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய ராணுவ வீரர்கள்  முன்னதாக காட்டன் துணியால் தைக்கப்பட்ட ராணுவ சீருடைகளை பயன்படுத்தி வந்தனர். பின்னர்  காட்டன் துணிகளை பராமரித்து வருவதில் சிரமம் ஏற்பட்டதால் டெர்ரிகோட் துணியாலான சீருடைகளை தற்போது ராணுவத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சீருடை  கோடை காலத்திலும், ஈரப்பதம் அதிகமாக இருக்கும் போதும் சரியாக பொறுந்துவதில்லை என்று கூறப்படுகிறது. எனவே போர் சூழல் மற்றும்  வானிலையை கருத்தில் கொண்டு அதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

“மம்தாவை விமர்சித்து மீம்ஸ்” பாஜகவின் பிரியங்கா சர்மா_வுக்கு ஜாமீன்…. உச்ச நீதிமன்றம் அதிரடி…!!

மேற்கு வங்க முதல்வர் மம்தாவை விமர்சித்து மீம்ஸ் வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட பாஜக கட்சியை சார்ந்த பெண் நிர்வாகிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மேற்குவங்க மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முகத்தினை மெட்காலாவில் பிரியங்கா சோப்ரா அணிந்துள்ள உடையுடன் இணைத்து, அவதூறு பரப்பும் வகையில் வகையில் மீம்ஸ் வெளியிட்ட பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்த பெண் நிர்வாகி பிரியங்கா சர்மா கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் மேற்கு வங்க மாநில அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியது. கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி பிரியங்கா […]

Categories
தேசிய செய்திகள்

எண்ணெய் வர்த்தகம் பற்றி பேச இந்தியா வந்த ஈரான் வெளியுறவு அமைச்சர்.!!

ஈரான் எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா அளித்த விலக்கு முடிவடைந்துவிட்ட நிலையில், இந்தியாவுடன் பேச்சு வார்த்தை  நடத்துவதற்காக ஈரான் வெளியுறவு அமைச்சர் டெல்லி வந்துள்ளார். அமெரிக்கா ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. இதையடுத்து அந்நாட்டிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு  இந்தியா, சீனா, தைவான், இத்தாலி, கிரீஸ் உள்ளிட்ட 8 நாடுகளுக்கு மட்டும் அமெரிக்கா விலக்கு அளித்திருந்தது. இந்த விலக்கு கடந்த மே ஒன்றாம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. அதேசமயம், அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளால், ஈரானின் சர்வதேச கச்சா […]

Categories
தேசிய செய்திகள்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் துணை சி.இ.ஓ திடீர் ராஜினாமா.!!

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் துணை சி.இ.ஓ அமித் அகர்வால் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். விமான போக்குவரத்து துறையில் தனியார் நிறுவனங்கள் இறங்கிய பின்னர் தொழில் போட்டி மனப்பான்மையில் பயணிகளுக்கு ஆதரவாக சில நிறுவனங்கள் பயண கட்டணங்களை குறைத்தும், சிறப்பு சலுகைகள்  அறிவித்தும் வாடிக்கையாளர்களை கவர்ந்தன. புதிதாக தனியார் நிறுவனங்கள் பல தொழில் போட்டியில் இறங்கியுள்ளதால் கிங் பிஷர் உள்ளிட்ட சில நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்தது. அந்த வரிசையில்  ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனமும் நின்று, கடுமையான பொருளாதார நெருக்கடியில் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

விடுதலைப்புலிகள் மீதான தடை கூடுதலாக 5 ஆண்டுகள் நீடிப்பு….!!

விடுதலைப்புலிகள் அமைப்பு மீது விதிக்கப்பட்ட தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு இந்திய உள்துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது. விடுதலைப்புலிகளின் ஆதரவு இயக்கங்கள் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சியை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது எனவும், தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவை பெருக்க தொடர்ந்து முயற்சிகள் நடக்கின்றன எனவும் பல்வேறு தகவல் வந்தது. மேலும்  1991_ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, கொல்லப்பட்ட பிறகு இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கம் மீது தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்திய உள்துறை அமைச்சகம் சர்ப்பில் வெளியிடப்படட அறிக்கையில்  , இந்தியாவில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

”மே 23 ஆம் தேதிக்கு பிறகே எல்லாம் தெரியவரும்”… மு.க.ஸ்டாலின் பேட்டி …!!

”இந்தியாவில் 3-வது  அணி அமையுமா? என்பது மே 23 ஆம் தேதிக்கு பிறகே தெரியவரும்” என மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார் . பாராளுமன்ற தேர்தலுக்கான  6_ஆம் கட்ட  வாக்குப்பதிவு நேற்று முன்தினம்  முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட  7-வது  வாக்குப்பதிவு வருகின்ற 19_ஆம் தேதி நடைபெற்று 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்ற நிலையில் மத்தியில் ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா […]

Categories
தேசிய செய்திகள்

“காங்கிரஸ் வேட்பாளர் மீது கற்பழிப்பு புகார்” பாதிக்கப்பட்ட இளம்பெண் மாயம்…!!

கோவா மாநில பனாஜி சட்டசபை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மீது கற்பழிப்பு புகார் கூறிய இளம்பெண் மறுவாழ்வு மையத்தில் இருந்து காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவா மாநிலத்தின் பனாஜி சட்டசபை தொகுதிக்கான வாக்கு பதிவு வருகின்ற 19_ஆம் தேதி நடைபெறுகின்றது.  இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின்  சார்பில் வேட்பாளராக அடானேசியோ மோன்செரட்டே போட்டியிடுகிறார்.  முன்னாள் அமைச்சராக இருந்த இவர் மீது கடந்த 2016_ஆம் ஆண்டு மே மாதத்தில் இளம்பெண் ஒருவர் கற்பழிப்பு புகார் கொடுத்திருந்தார். பாதிக்கப்பட்ட […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“காங்கிரஸ் அரசு பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்களை ஏ.டி.எம் இயந்திரமாக பயன்படுத்தியது” பிரதமர் மோடி குற்றச்சாட்டு!!

முந்தைய ஆட்சியில் காங்கிரஸ் அரசு பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்களை ஏ.டி.எம் இயந்திரம் போல பயன்படுத்தியது என்று பிரதமர் மோடி குறை கூறியுள்ளார். மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு  6 கட்ட தேர்தல் நடந்து முடிந்தது.  இந்நிலையில் இறுதி கட்ட தேர்தலுக்காக பிரதமர் மோடி மத்திய பிரதேசத்தின் ராட்லம், இமாச்சலபிரதேசத்தின் சோலன், பஞ்சாப்பின் பத்திண்டா ஆகிய ஊர்களில் நடைபெற்ற கூட்டங்களில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சி அமைத்த காலத்தின் போது பாதுகாப்பு படைகளின் தேவைகள்  70 சதவிகிதம் வெளிநாடுகள் மூலமே […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

சந்திரசேகர் ராவ் -ஸ்டாலின் சந்திப்பு மரியாதை நிமித்தமானது…..திமுக அறிக்கை …!!

சந்திரசேகர் ராவ் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று திமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது . பாராளுமன்ற தேர்தலுக்கான  6_ஆம் கட்ட  வாக்குப்பதிவு நேற்று முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட  7-வது  வாக்குப்பதிவு வருகின்ற 19_ஆம் தேதி நடைபெற்று 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்ற நிலையில் மத்தியில் ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகின்றார். […]

Categories
தேசிய செய்திகள்

“நான் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழங்குகிறேன்” முடிந்தால் கைது செய்யுங்கள் மம்தா… சவால் விடும் அமித்ஷா..!!

நான்   ‘ஜெய் ஸ்ரீராம்’  என்று முழங்குகிறேன் முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என்று மம்தாவுக்கு அமித் ஷா சவால் விட்டார்.   இந்தியா முழுவதும் ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்கி 6 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள மக்களவை  தேர்தலில்  வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தொண்டர்களுக்கிடையே கடுமையான மோதல்கள் நடந்தது. பிரதமர் மோடியும் மேற்கு வங்காளம் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் காரசாரமாக ஒருவரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர். இந்நிலையில், […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

3_ஆவது அணி தானா..? “சந்திரசேகர் ராவ்-முக.ஸ்டாலினுடன் சந்திப்பு” தேசியளவிலான விவாதம்…!!

திமுக தலைவர் முக ஸ்டாலினுடன் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருவது பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கான  6_ஆம் கட்ட  வாக்குப்பதிவு நேற்று முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட  7-வது  வாக்குப்பதிவு வருகின்ற 19_ஆம் தேதி நடைபெற்று 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்ற நிலையில் மத்தியில் ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“சந்திரசேகரராவ் – முக.ஸ்டாலின் சந்திப்பு” தொடர் ஆலோசனையால் அதிரும் தேசிய அரசியல்…!!

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் திமுக தலைவர் முக.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். பாராளுமன்ற தேர்தலுக்கான  6_ஆம் கட்ட  வாக்குப்பதிவு நேற்று முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட  7-வது  வாக்குப்பதிவு வருகின்ற 19_ஆம் தேதி நடைபெற்று 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்ற நிலையில் மத்தியில் ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகின்றார். 3_ஆவது அணியை […]

Categories
தேசிய செய்திகள்

ரூ 10,000 த்திற்கு விதவை மகளை விற்ற தந்தை…. பலமுறை கற்பழித்த கொடூரம்…. தீக்குளித்து தற்கொலை முயற்சி.!!

உத்தரபிரதேசத்தில்  ரூபாய் 10,000 த்திற்கு  தந்தையால் விற்கப்பட்ட விதவை பெண் பல முறை கற்பழிக்கப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின்  ஹாபூர் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணின் கணவர்  மறைவுக்கு பின்னர்  அந்த பெண்ணை அவரது தந்தையும், சித்தியும் ஒரு நபருக்கு ரூ.10,000 த்துக்கு  விற்றனர். வாங்கியவர் தனது நண்பர்கள் மற்றும்  பல்வேறு நபர்களிடம் கடன் வாங்கி கொண்டு அந்த பெண்ணை வீட்டு வேலை உள்பட பல்வேறு பணிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார் வீட்டு வேலைக்கு சென்ற அந்த விதவை பெண்ணை அங்குள்ள கும்பல் கற்பழித்தது. இதே போல் பல முறை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“அரசியலுக்காக மனைவியை கைவிட்ட மோடி” மாயாவதி கடும் விமர்சனம்…!!

அரசியல் ஆதாயத்திற்காக தனது மனைவியை கைவிட்டனர் மோடி என்று மாயாவதி கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 26_ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் கணவனின் கண்ணெதிரே 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல்  வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அதை வீடியோ எடுத்து  சமூக வலைதளத்தில் பதிவேற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் ஏப்ரல் 30_ஆம் புகார் அளித்தும் வழக்கு பதிவு செய்யாமல் மே 7_ஆம் தேதி தான் வழக்கு பதிவு செய்யப்பட்ட்து. […]

Categories
தேசிய செய்திகள்

ரம்ஜானை முன்னிட்டு வாக்குப் பதிவை அதிகாலை தொடங்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்.!!

ரம்ஜான் பண்டிகையை  முன்னிட்டு தேர்தல் வாக்குப் பதிவை காலை 7 மணிக்குப் பதில் 5 மணிக்கே தொடங்க உத்தரவிடக் கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ரம்ஜான் மாதம் தொடங்கிய பிறகு கடந்த மே 6 மற்றும்  12 ஆம் தேதிகளில் 2  கட்ட வாக்குப் பதிவுகள் நடைபெற்று, வருகின்ற  19-ஆம் தேதியன்று  இறுதிக்கட்டவாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்தநிலையில் ரம்ஜான் நோன்பு இருப்பவர்களுக்கு  வசதியாக காலை 7 மணிக்குப் பதில் 5 மணிக்கே வாக்குப்பதிவை தொடங்குவதற்கு  உத்தரவிடுமாறு வழக்கறிஞர் நிசாமுதீன் பாஷா என்பவர்  வழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவில் ISIS அமைப்பின் முதல் கிளை” ISIS பயங்கரவாத அமைப்பு தகவல் …!!

இந்தியாவில் ISIS பயங்கரவாத அமைப்பின் முதல் கிளை உருவாகியுள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2013_ஆம் ஆண்டின் இறுதியில் மத்திய கிழக்கு ஆசியாவில் உள்ள சிரியா நாட்டு அரசுப் படையை எதிர்த்து போரிட்ட அல்நுஸ்ரா முன்னணி என்கின்ற அமைப்பும், அல்கொய்தா அமைப்பின் ஈராக் பிரிவும் ஒன்றிணைந்து ISIS  என்கின்ற புதிய பயங்கரவாத அமைப்பு உருவாகியது. இந்த பயங்கரவாத அமைப்பு, தெற்கு சிரியாவின் பெரும்பகுதிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. கடந்த 2014_ஆம் ஆண்டின்  தொடக்கத்தில்  ஈராக்கிற்குள் நுழைந்த ISIS  தீவிரவாதிகள் சுமார் 30 ஆயிரம் வீரர்களை தங்களது  இயக்கத்தின் கட்டுப்பாட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

அந்நிய செலாவணி மோசடி வழக்கு…. எழும்பூர் கோர்ட் விசாரணையில் சசிகலா ஆஜராகவில்லை!!

சென்னை எழும்பூர் கோர்ட்டில் நடைபெற்றுவரும் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவால் இன்றைய விசாரணையில் ஆஜராக முடியவில்லை . ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாட்டிலிருந்து உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா, பாஸ்கரன் ஆகிய இருவர்  மீது 1996-ம் ஆண்டு அந்நிய செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு  சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் விசாரணை நடத்தப்பட்டு  வருகிறது. இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருவதால், குற்றம் சுமத்தப்பட்ட சசிகலா, பாஸ்கரன் ஆகியோரிடம் குற்றச்சாட்டு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“நட்பின் அடிப்படையிலேயே சந்திப்பு” 3_ஆவது அணிக்கு வாய்ப்பில்லை…கே.எஸ் அழகிரி பேட்டி….!!

நட்பின் அடிப்படையிலேயே ஸ்டாலினை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திக்கிறார்  3வது அணி அமைய வாய்ப்பு இல்லை என்று கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலுக்கான  6_ஆம் கட்ட  வாக்குப்பதிவு நேற்று முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட  7-வது  வாக்குப்பதிவு வருகின்ற 19_ஆம் தேதி நடைபெற்று 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்ற நிலையில் மத்தியில் ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

மீண்டும் 3_ஆவது அணி…. ஸ்டாலின் சந்திரசேகர் ராவ் சந்திப்பு…. மாற்றம் காணும் தேசிய அரசியல்…!!

இன்று மாலை திமுக தலைவர் மு.க ஸ்டாலினை, தெலுங்கானா மாநில முதல் முதல்வர்  சந்திரசேகர் ராவ் சந்திக்க இருக்கின்றார். பாராளுமன்ற தேர்தலுக்கான  6_ஆம் கட்ட  வாக்குப்பதிவு நேற்று முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட  7-வது  வாக்குப்பதிவு வருகின்ற 19_ஆம் தேதி நடைபெற்று 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்ற நிலையில் மத்தியில் ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் […]

Categories

Tech |