Categories
அரசியல் தேசிய செய்திகள்

மத்திய அமைச்சரவையில் “21 பேர் மீது கிரிமினல் வழக்கு” தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தகவல்..!!

மத்திய அமைச்சரவையில் 51 பேர் கோடிஸ்வரர்களாகவும் , 21 பேர் கிரிமினல் வழக்கு உள்ளவர்களாகவும் இருப்பதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து பிரதமராக மோடி இரண்டாவது முறையாக பொறுப்பேற்றார். அப்போது அவரது தலைமையிலான புதிய மத்திய  அமைச்சரவையில் 25 கேபினட் அமைச்சர்களாகவும் , 24 இணையமைச்சர்களாகவும் மற்றும் 9 பேர் தனிப்பொறுப்புடன் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுக்கான  இலாகாகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து இந்திய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு பொறுப்பேற்ற 56 அமைச்சர்களின் வேட்புமனுக்களை ஆராய்ந்தது. இதில் 22 அமைச்சர்கள்  […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி தேர்வு

பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட மக்களவை எம்.பி.க்களின் முதல் கூட்டம் டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் உள்ள 52 மக்களவை எம்.பி.க்களுடன் சேர்த்து  மாநிலங்களவை எம்.பி.க்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறுகின்ற  இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் பொறுப்புக்கு சோனியா காந்தியின் பெயரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மக்களவையின் காங்கிரஸ் தலைவர்” தொடங்கியது M.P_க்கள் கூட்டம்…!!

மக்களவையின் காங்கிரஸ் கட்சி தலைவரை தேர்வு செய்யும் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட மக்களவை எம்.பி.க்களின் முதல் கூட்டம் டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்று வருகின்றது. இந்தக் கூட்டத்தில்காங்கிரஸ் கட்சியின் சார்பில் உள்ள 52 மக்களவை எம்.பி.க்களுடன் சேர்த்து  மாநிலங்களவை எம்.பி.க்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டத்தின்போது மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரை காங்கிரஸ் கட்சியின் MP_க்கள் தேர்வு செய்கின்றனர். இதில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறுகின்ற  இந்தக் கூட்டத்தில், வரும் பாராளுமன்ற  கூட்டத் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கேரள முதல்வருக்கு ராகுல் கடிதம்….!!

வயநாடு மக்களவை தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார். கேரள மாநிலத்தின் பனமரம் என்ற பகுதியில் தினேஷ்குமார் என்ற விவசாயி கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் அறிந்து வேதனை அடைந்தேன். கேரளாவில் கடன் தொல்லை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இத்தனைக்கும் கேரள அரசு விவசாயிகள் கடனை திருப்பி செலுத்தும் காலத்தை டிசம்பர் மாதம் வரை நிறுத்திவைத்து இருக்கின்றது. விவசாயி தினேஷ்குமார் தற்கொலை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“வயநாட்டிற்கு புறப்படும் ராகுல்” வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றார்…!!

வயநாடு மக்களவை தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க 7, 8 ஆகிய தேதிகளில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேசத்தின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய இரண்டு மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் ராகுல் காந்தி அமேதியில் மக்களவை தொகுதியில்  தோல்வி அடைந்தார். அதே நேரம் கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றார். வயநாடு மக்களவை தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.பி.சுனீரைவிட 4 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடுவது கிரிமினல் குற்றமல்ல” பாஜக MP எச்சரிக்கை…!!

“ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடுவது கிரிமினல் குற்றமல்ல” ஜெகதால் போலீஸ் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளேன் என்று பாஜக MP எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வந்தார். பாஜக_வும் எப்படியாவது மேற்கு வங்கத்தில் கால் ஊன்றிவிட வேண்டுமென்று தீவிரமான அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 18 இடங்களில் வெற்றி பெற்றது. அம்மாநிலத்தில் திரிணாமுல் , கம்யூனிஸ்ட் என்று சொல்லப்பட்ட நிலையில் பாஜக தனக்கான […]

Categories
தேசிய செய்திகள்

முதல்வர் முன்பு “ஜெய் ஸ்ரீராம் கோஷம்” பாஜகவினர் 10 பேர் கைது…!!

மேற்கு வங்க முதல்வர் முன்பு ஜெய் ஸ்ரீராம் கோஷம் கோஷம் போட்டதாக பாஜகவினர் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. பெருவாரியான மாநிலங்களில் பாஜக_வின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகவே இந்த தேர்தல் காட்டுகின்றது. மேற்குவங்கம் எப்போதும் திரிணாமுல் மற்றும் 35 ஆண்டுகள் ஆட்சி செய்த இடதுசாரிகள் கோட்டை என்று கருத்தப்பட்டதை பாஜக தகர்த்துள்ளது.வாக்கு எண்ணிக்கை முடிவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 இடங்களையும் ,  பாஜக  பா.ஜனதா 18 […]

Categories
தேசிய செய்திகள்

“S -400 ஏவுகணை வாங்கும் இந்தியா” எச்சரிக்கும் அமெரிக்கா..!!

ரஷ்யாவிடம் இருந்து S -400 ஏவுகணையை  இந்தியா வாங்குவதால்  அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய விமான படை  ரஷ்யாவிடமிருந்து, 400 கி.மீட்டர் தூரத்தில்  வரும் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லாத குட்டி விமானங்களை வழியில் மறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்ட  எஸ்.400 ரக அதிநவீன வான்வழி பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்க உள்ளது. சீனா மற்றும்   பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு இந்தியா ரஷ்யாவிடமிருந்து அதிநவீன S -400 ரக ஏவுகணைகளை வாங்க கடந்த சில ஆண்டுகளாகவே  பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“புதிய அமைச்சரவை கூட்டம்” மோடி தலைமையில் நடைபெற்றது…!!

பதவியேற்ற புதிய மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கூட்டணி மத்தியில் மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தது. இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி தலைமையில் 58 பேர் கொண்ட புதிய மத்திய அமைச்சரவை பொறுப்பேற்றது. இந்நிலையில் புதிதாக பதவியேற்ற மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று  நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“சோபியானில் துப்பாக்கி சண்டை” 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!!

சோபியான் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில்  இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு- காஷ்மீரின் சோபியான் பகுதியிலுள்ள சாய்னாபோரா என்ற இடத்தில்  பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் சென்று அங்கு அதிரடி சோதனையை மேற்கொண்டனர். பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்ட போது அப்பகுதியில் மறைந்து இருந்த பயங்கரவாதிகள் தீடிரென தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதனால் இருதரப்புக்கு இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் மாலை நடைபெறும்…!!

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது  மக்களவை தேர்தலில் 542 தொகுதிகளில் பாரதிய ஜனதா  தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி  353 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இதில் பாரதிய ஜனதா மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று  தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து மோடிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று ஜனாதிபதி மாளிகையில் கோலாகலமாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் சேர்த்து 24 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அணுசக்தி மற்றும் விண்வெளி துறையை பெற்றுக்கொண்ட மோடி ….!!

அணுசக்தி, விண்வெளி, ஓய்வூதியம் ஆகிய துறைகளை பிரதமர் நரேந்திர மோடி தன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக தொடர்ந்து இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியை அமைத்தது. நேற்று மாலை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவைக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தற்போது புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மத்திய அமைச்சர்களுக்கு தனி தனி இலாகாக்களும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்களில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“உள்துறை அமைச்சரானார் அமித்ஷா” இலாகாக்கள் ஒதுக்கீடு…!!

நேற்று புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட அமைச்சர்களுக்கு இலாகாக்கள் வழங்கப்பட்டு வருகின்றது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றியது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களில் அபார வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தது. இதைத்தொடர்ந்து நேற்று மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று பொறுப்பேற்றுக்கொண்டது. இதில்  57 அமைச்சர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதை தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மத்திய அமைச்சர்களுக்கு ஒவ்வொரு இலாகாக்களும் வழங்கப்பட்டு வருகின்றது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லியில் இன்று நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ரத்து..!!

டெல்லியில் இன்று நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி  353 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இதில் பாரதிய ஜனதா மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று  தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. பாரதிய ஜனதாவை  எதிர்த்த கட்சிகள் அனைத்தும் மோசமான தோல்வியை சந்தித்தன. இதையடுத்து மக்களவை தேர்தலில் அடைந்த படுதோல்வி குறித்து ஆலோசனை நடத்துவதற்காக  டெல்லியில் இன்று எதிர்கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்திற்கு  பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 9_ஆம் தேதி இங்கை செல்கிறார் பிரதமர் மோடி…!!

பிரதமர் மோடி வருகின்ற ஜூன் 9_ஆம் தேதி இங்கை செல்ல இருப்பதாக அந்நாட்டு நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக மகத்தான வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் பொறுப்பை பெற்று நேற்று நடைபெற்ற பதவி ஏற்பு நிகழ்ச்சியில் இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து 2வது முறையாக பதவியேற்றார். அவருக்கு இந்திய குடியரசு தலைவர் பதவி பிரமாணமும் , ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்நிலையில் வருகின்ற ஜூன் 9-ம் தேதி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மக்களை பிரித்தாளும் பாஜக” மேற்கு வங்க முதல்வர் குற்றசாட்டு …!!

பாஜக ஆளும் மாநிலத்தில் மொழிகள் அடிப்படையில் மக்களை பிரித்து ஆள முயற்சிக்கிறார்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. பெருவாரியான மாநிலங்களில் பாஜக_வின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகவே இந்த தேர்தல் காட்டுகின்றது. மேற்குவங்கம் எப்போதும் திரிணாமுல் மற்றும் 35 ஆண்டுகள் ஆட்சி செய்த இடதுசாரிகள் கோட்டை என்று கருத்தப்பட்டதை பாஜக தகர்த்துள்ளது.வாக்கு எண்ணிக்கை முடிவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 இடங்களையும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“இனிமேல் நான் அமைச்சர் இல்ல தலைவர்” பாஜகவின் தலைவராக ஜெயப் பிரகாஷ் நட்டா…!!

பாஜகவின் அடுத்த தலைவராக அமைச்சரவையில் இடம் கிடைக்காத  ஜெயப் பிரகாஷ் நட்டா தேர்வு செய்யபட இருப்பது உறுதியாகியுள்ளது. நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக ஆட்சி பிடித்தது . நேற்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் குடியரசு தலைவர் பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பாஜகவின் தேசிய தலைவராக இருந்த அமித்ஷா இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கடந்த முறை பதவி “இந்த முறை அம்போ” பாஜகவின் முக்கிய தலைகள்…!!

நேற்று நடைபெற்ற மோடியின் பதவி ஏற்பு விழாவில் மத்திய அமைச்சரவையில் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பெயர் இடம் பெறவில்லை. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க இருந்ததையடுத்து பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக  குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பதவியேற்றார். இதில் அவருடன் சேர்த்து பல்வேறு துறைகளை சார்ந்த அமைச்சர்களுடன் பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா_வும் பதவி ஏற்றார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

முதல்வர் முன்பு “ஜெய் ஸ்ரீராம் கோஷம்” மம்தாவுடன் மோதும் பாஜகவினர்…!!

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதையடுத்து அம்மாநில முதல்வரிடம் ஆக்கட்சியினர் மோதலில் ஈடுபட தொடங்கியுள்ளனர். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. பெருவாரியான மாநிலங்களில் பாஜக_வின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகவே இந்த தேர்தல் காட்டுகின்றது. மேற்குவங்கம் எப்போதும் திரிணாமுல் மற்றும் 35 ஆண்டுகள் ஆட்சி செய்த இடதுசாரிகள் கோட்டை என்று கருத்தப்பட்டதை பாஜக தகர்த்துள்ளது.வாக்கு எண்ணிக்கை முடிவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 இடங்களையும் ,  பாஜக  பா.ஜனதா […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிரதமர் பதவி ஏற்பு “கைதட்டி மகிழ்ந்த மோடியின் தயார்” வைரலாகும் புகைப்படம்..!!

மோடியின் பதவி ஏற்பு விழாவை TV கண்டு மகிழ்ந்த அவரின் தயார் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க இருந்ததையடுத்து பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக  குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பதவியேற்றார். இதில் அமைச்சர்களும் பதவி ஏற்றனர். பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவை தனது வீட்டில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் தயார் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“2_ஆவது முறையாக மோடி” இந்தியா கண்ட 15 பிரதமர்கள் பட்டியல்…!!

இதுவரை இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட பிரதமர் குறித்தும் அவரின் ஆண்டு குறித்தும் காண்போம்.  இந்திய நாட்டின் மிக பெரிய ஜனநாயக திருவிழாவாக பார்க்கப்படும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19_ஆம் தேதி வரை நடைபெற்று வாக்குப்பதிவு எண்ணிக்கை மே 23_ஆம் தேதி எண்ணப்படட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தேசியளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக மகத்தான வெற்றி ஆட்சி அமைக்கும் பொறுப்பை பெற்றுள்ளது. பாஜகவின் 17-வது புதிய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“புதிய மத்திய அமைச்சரவை” 24 கேபினட் , 25 இணை அமைச்சர்கள் பட்டியல்…!!

பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பொறுப்பேற்றுக் கொண்டது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க இருந்ததையடுத்து பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக  குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பதவியேற்றார்.  அதே போல அவருடன் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, சதானந்த கவுடா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டு 25 கேபினட் அமைச்சர்கள் மற்றும் 24  இணையமைச்சர்கள் பெறுப்பேற்றுக்கொண்டனர். புதிதாக பொறுப்பேற்ற பிரதமர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிரதமர் பதவி ஏற்பு “டெல்லியியை நோக்கி தலைவர்கள்” பலத்த பாதுகாப்பு…!!

மோடி பதவியேற்பையடுத்து தலைநகர் டெல்லியில் பல்வேறு தலைவர்கள் குவிந்த வண்ணம் உள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்று மாலை பதவி ஏற்க  இருக்கிறது.இந்த நிகழ்ச்சியில் மோடி மற்றும் புதிய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும் , ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். இன்று மாலை 7 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையின் முகப்பு பகுதியில் இதற்கான பிரமாண்ட விழா ஏற்பாடு நடைபெற்று வருகின்றது. பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடியின் புதிய அமைச்சரவையில் 70 அமைச்சர்கள்…..!!

பிரதமர் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் 65 முதல் 70 பேர் வரை மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்க இருக்கின்றனர். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350_க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உரிமை பெற்று இருக்கிறது. இன்று மாலை 7 மணிக்கு பிரதமராக நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும் , ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கிறார். அதே போல பல்வேறு துறைகளை சார்ந்த அமைச்சர்களும் […]

Categories
தேசிய செய்திகள்

“முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டி” ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த ராகுல்..!!

ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்றதற்கு ராகுல் காந்தி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்   மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திராவில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிக்கும்  தேர்தல் நடைபெற்றது. இதில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. ஆனால் சந்திரபாபு நாயுடுவின் ஆளும் தெலுங்கு தேசம் வெறும் 23 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே வென்று படுதோல்வியடைந்தது. சட்ட மன்ற தேர்தலில் வென்றதையடுத்து ஜெகன் மோகன் ரெட்டிக்கு தெலுங்கானா ஆளுனர் நரசிம்மன்  பதவி பிரமாணம் செய்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“மத்திய அமைச்சராகும் OPS மகன்” பிரதமர் அலுவலகம் அழைப்பு…!!

தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்குவது குறித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350_க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உரிமை பெற்று இருக்கிறது. இன்று மாலை 7 மணிக்கு பிரதமராக நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும் , ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கிறார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக பதவியேற்பு…!!

ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டிக்கு  ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்   மக்களவை தேர்தலுடன் சேர்த்து நடைபெற்ற ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. இதில் ஆளும் தெலுங்கு தேசம் வெறும் 23 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று தோல்வியை தழுவியது. இதையடுத்து ஜெகன்மோகன் ரெட்டி  வருகின்ற 30_ஆம்  தேதி பிற்பகல் 12.30 மணிக்கு விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

“முதல்வராகிய ஜெகன்மோகன்” இந்தியளவில் ட்ரெண்டிங்…..!!

ஆந்திர மாநில புதிய முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பொறுப்பேற்றதையடுத்து ஹாஸ்டக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றது. நடைபெற்று முடிந்த ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இன்று 12.30 மணிக்கு விஜயவாடா இந்திராகாந்தி மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநில முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கும் ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மேலும் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின் அதிரடி முடிவாக மது விலக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நினைவிடங்களில் மரியாதை செலுத்திய பிரதமர் மோடி..!!

தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள பிரதமர் மோடி காந்தி ,வாஜ்பாய் நினைவிடங்களுக்கு சென்று மரியாதையை செலுத்தினார் . மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 7 மணி அளவில் மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். அதற்கு முன்பாக அவர் டெல்லியில் உள்ள போர் நினைவு இடங்களுக்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு ,அதன்பின் மகாத்மா காந்தி மற்றும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“தொடர்ந்து 5_ஆவது முறையாக முதல்வர்” பொறுப்பேற்றார் நவீன் பட்நாயக்…!!

ஒடிசா மாநில முதல்வராக நவீன் பட்நாயக் தொடர்ந்து 5_ஆவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவை தேர்தலோடு சேர்த்து ஆந்திர , ஒடிசா போன்ற மாநிலங்களின் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆளும்  பிஜூ ஜனதாதளம்  112 தொகுதிகளை கைப்பற்றி தொடர்ந்து 5_ஆவது முறையாக வெற்றி பெற்றது. அதே போல மக்களவையில் உள்ள 21 தொகுதிகளில் 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சட்டசபையில்  பிஜூ ஜனதாதளம் வெற்றியை தொடர்ந்து அக்கட்சியின் சட்டசபை தலைவராக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மத்திய அமைச்சரை நியமிப்பதில் குழப்பம் “பாஜக தீவிர ஆலோசனை..!!

தேர்தல் முடிந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் பாஜக தலைவர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மே 30ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவியேற்க உள்ள நிலையில் மத்திய அமைச்சர்களாக யார் யாரெல்லாம் நியமிப்பது என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில் பாஜக தலைவரான அமித்ஷாவிற்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கலாம் என்ற விவாதம் எழுந்துள்ளது. ஆனால் அமித்ஷாவிற்கு மத்திய அமைச்சர் பதவியை கொடுத்தால் பாஜக தலைவர் பதவியில் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியுள்ளது……!!

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகின்றது.   கர்நாடகா மாநிலம் தமிழகத்துக்கு ஆண்டுதோறும், காவிரியில் இருந்து 177.25 டி.எம்.சி., அளவு தண்ணீரை திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தண்ணீர் பங்கீட்டு அளவை  உறுதிப்படுத்துவதற்கு மற்றும்  தண்ணீரின் அளவு சரியாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காகவும்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு இரு மாநில பிரதிநிதிகளுடன்  ஆலோசனை கூட்டம் நடைபெறும். இந்நிலையில்  மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே டெல்லியில் மசூத் ஹூசைன் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் தொடங்கியது. இதில்  தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக கர்நாடக […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

காவிரி ஆணையத்தில் தமிழகம் கோரிக்கை….!! 

டெல்லியில் நடைபெறும் காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு காவிரி நீர் தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளது.  கர்நாடகா மாநிலம் தமிழகத்துக்கு ஆண்டுதோறும், காவிரியில் இருந்து 177.25 டி.எம்.சி., அளவு தண்ணீரை திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தண்ணீர் பங்கீட்டு அளவை  உறுதிப்படுத்துவதற்கு மற்றும்  தண்ணீரின் அளவு சரியாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காகவும்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு இரு மாநில பிரதிநிதிகளுடன்  ஆலோசனை கூட்டம் நடைபெறும். இந்நிலையில்  மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே டெல்லியில் மசூத் ஹூசைன் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் தொடங்கியது. […]

Categories
தேசிய செய்திகள்

பெயரை கேட்ட போதை ஆசாமி… சுடப்பட்ட முஸ்லிம் வாலிபர்…!!

பீகாரில் பெயரை கேட்ட குடிபோதை ஆசாமி  முஸ்லிம் என தெரிந்ததும் வாலிபரை  துப்பாக்கியால் சுட்டுள்ளார். பீகார் மாநிலத்தில் பெகுசராய் மாவட்டம் கும்பி கிராமத்தில் 30 வயதான முகமது காசிம் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இந்த வாலிபர் தள்ளுவண்டியில் சலவை தூள் வைத்து விற்பனை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறார். இந்த நிலையில், விற்பனை செய்து கொண்டிருந்த அவரை குடிபோதையில் வந்த ஆசாமி ஒருவர்  வழிமறித்துள்ளார். அதன் பின்  உனது பெயரென்ன? என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் பெயரை சொன்னதும், முஸ்லிமாகிய நீ இங்கு என்ன […]

Categories
தேசிய செய்திகள்

“ஜம்முவில் வெடி பொருள் கண்டெடுப்பு” பூஞ்ச் நெடுஞ்சாலை பரபரப்பு…!!

ஜம்மு பூஞ்ச் பகுதியில் வெடி பொருள் கண்டெடுக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் காஸ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 துணை இராணுவப்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் அதிரடி நடவடிக்கைகளை மேகொண்டது. இந்த சம்பவம் நிகழ்ந்தது முதல்  ஜம்மு பகுதியில் இந்திய இராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றது.இந்நிலையில் இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் கல்லார் சவுக் என்ற இடத்தில் உள்ள ஜம்மு பூஞ்ச் நெடுஞ்சாலையில் […]

Categories
தேசிய செய்திகள்

“உலகின் தலை சிறந்த மாநிலம் மேற்கு வங்காளம்” மம்தா பானர்ஜி..!

மேற்கு வங்காளம்  ஒருநாள் உலகின் தலை சிறந்த மாநிலமாக  உருவாகும் என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டு மேற்கு வங்காள மாநிலத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தலைமையிலான இடது சாரி அரசை வீழ்த்தி   திரிணாமுல் காங்கிரஸ்  ஆட்சிக்கு வந்தது.  பின்னர் மீண்டும் 2016-ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்து கொண்டது. இந்நிலையில் மேற்கு வங்காள முதல்வர்  மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில்  இன்று செய்தி ஓன்று வெளியிட்டார்.  அந்த செய்தியில், கடந்த 2016ம் ஆண்டு இதே நாளில், […]

Categories
தேசிய செய்திகள்

“கண்ணெதிரே மரணம்” மகளின் திருமணத்தில் பாட்டு பாடிய தந்தைக்கு நிகழ்ந்த துயரம்…!!

திருமண நிகழ்வில் இன்னிசை கச்சேரியுடன் இணைந்து பாடிக்கொண்டு இருந்த பெண்ணின் தந்தை தீடிரென கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் திருமண நிகழ்வு நல்ல படியாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. திருமண விழாவிற்கு வருகை தந்துள்ள விருந்தினர்களை மகிழ்விக்க பாட்டு இன்னிசை கச்சேரி நடைபெற்றுக்கொண்டு இருந்தது.அதை விருந்தினர்கள் ரசித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். அப்போது பெண்ணின் தந்தை மேடையில் பாடிக்கொண்டு இருந்தார். கீழே இருந்த விருந்தினர்கள் பெண்ணின் தந்தை […]

Categories
தேசிய செய்திகள்

“மோடி பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு” கலந்து கொள்வாரா கமல்..?

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்கு கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.இதில் பாரதிய ஜனதா  மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து டெல்லியில்  நடைபெற்ற பா.ஜ.க எம்.பிக்கள் கூட்டத்தில் மோடியே  மீண்டும் பிரதமராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரினார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மோடி” தொண்டர்களிடையே பிரதமர் பேச்சு…!!

தேர்தல் வெற்றிக்காக ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மோடி தேர்தல் பனி செய்துள்ளதாக பிரதமர் மோடி வாரணாசியில் தொண்டர்களிடம் பேசியுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று வருகின்ற 30_ஆம் தேதி ஆட்சி பொறுப்பை ஏற்க இருக்கின்றது. மீண்டும் இரண்டாவது முறையாக மோடி பிரதமராக தனது பதவியை தொடர்கிறார். பிரதமர் மோடி உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாராணாசி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு சுமார் 4.80 லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் தனக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள ரஜினிகாந்துக்கு அழைப்பு…!!

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்கு ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.இதில் பாரதிய ஜனதா  மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. கடந்தமுறை போலவே கூட்டணி கட்சிகளை சேர்த்துக்கொண்டு கூட்டணி ஆட்சி அமைக்கிறது. இதையடுத்து டெல்லியில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) நடைபெற்ற பா.ஜ.க எம்.பிக்கள் கூட்டத்தில்  நரேந்திரமோடியே  மீண்டும் பிரதமராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ராகுலின் பேச்சு, ஆளுமை வாக்காளர்களை கவரவில்லை” சிவசேனா விமர்சனம்…!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சு மற்றும் ஆளுமை  வாக்காளர்களை கவரவில்லை என்று சிவசேனா விமர்சித்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி  மோசமான படு தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் காங்கிரஸ் கடந்த   2014ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பெற்ற தோல்வியை விட மிக மோசமான தோல்வியை இம்முறை சந்தித்துள்ளது. இந்த தோல்விக்கு காரணம், ராகுல் காந்தியின் பேச்சு மற்றும் ஆளுமை வாக்காளர்களைக் கவரவில்லை என்பதே ஆகும் என […]

Categories
தேசிய செய்திகள்

“3-ஆவது குழந்தைக்கு வாக்குரிமை அளிக்க கூடாது” பாபா ராம்தேவ் சர்ச்சை பேச்சு..!!

குடும்பத்தில் 3-ஆவதாக பிறக்கும் குழந்தைக்கு வாக்குரிமை இல்லை என சட்டம் கொண்டுவர வேண்டும் என்று பாபா ராம்தேவ் பேசியது சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது.  மக்கள் தொகையை கட்டுப்படுத்த 3-ஆவது குழந்தைக்கு வாக்குரிமை கிடையாது என்று சட்டம் கொண்டுவர வேண்டும் என பாபா ராம்தேவ் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் யோகா குரு பாபா ராம்தேவ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்  “ குடும்பத்தில் 2  குழந்தைகளுக்கு மேல் யாரும் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது. 3-ஆவது குழந்தைக்கு வாக்குரிமை  இல்லை என சட்டத்தை கொண்டுவர வேண்டும். […]

Categories
தேசிய செய்திகள்

வாரணாசியில் பிரதமர் மோடி “வழிநெடுகிலும் மலர் தூவி வரவேற்பு”

வாரணாசி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வந்த பிரதமர்  மோடிக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட்து. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று வருகின்ற 30_ஆம் தேதி ஆட்சி பொறுப்பை ஏற்க இருக்கின்றது. மீண்டும் இரண்டாவது முறையாக மோடி பிரதமராக தனது பதவியை தொடர்கிறார். பிரதமர் மோடி உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாராணாசி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு சுமார் 4.80 லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் தனக்கு வாக்களித்து வெற்றி […]

Categories
தேசிய செய்திகள்

முதல்வர் சந்திரசேகர ராவ் குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம்..!!

தெலுங்கானா முதல்வர்  சந்திரசேகர ராவ் அவரது குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் அவரது குடும்பத்தினர், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஐதராபாத் பேகும்பேட்டை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம்  புறப்பட்டு நேற்று மாலை ரேணிகுண்டா வந்தடைந்தனர். பின்னர்  அவர்கள் அங்கிருந்து காரில் திருமலைக்கு வந்தனர். திருமலைக்கு வந்தவுடன்  முதல்வர் சந்திரசேகர ராவை, திருமலை- திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை அதிகாரி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“வாக்களித்த மக்களுக்கு நன்றி” வாரணாசி செல்கிறார் பிரதமர் மோடி …..!!

மக்களவை தேர்தலில் வெற்றிபெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று வருகின்ற 30_ஆம் தேதி ஆட்சி பொறுப்பை ஏற்க இருக்கின்றது. மீண்டும் இரண்டாவது முறையாக மோடி பிரதமராக தனது பதவியை தொடர்கிறார். பிரதமர் மோடி உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாராணாசி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு சுமார் 4.80 லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் தனக்கு வாக்களித்து வெற்றி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“தேர்தலில் காங்கிரஸ் தோல்வி” 10 நாட்களுக்குள் நடவடிக்கை…!!

தேர்தல் தோல்விக்கு பொறுப்பான நிர்வாகிகள் மீது அடுத்த 10 நாள்களுக்குள்  நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.  7 கட்டங்களாக நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. இதில் பாரதிய ஜனதா  மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. ஆனால் காங்கிரஸ் வெறும் 52 இடங்களை மட்டுமே  கைப்பற்றியது. இதையடுத்து இந்த படுதோல்விக்கான காரணங்கள் குறித்து  விவாதிப்பதற்காக கடந்த சனிக்கிழமை காங்கிரஸ் செயற்குழு […]

Categories
தேசிய செய்திகள்

“நேருவின் நினைவு தினம்” சோனியா , ராகுல் அஞ்சலி செலுத்தினர்….!!

நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளையொட்டி சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினர். இந்தியா விடுதலை அடைந்ததும் நாட்டின் முதல் பிரதமராக பொறுப்பு வகித்த  ஜவஹர்லால் நேரு  1964_ஆம் ஆண்டு மே  மாதம் 27_ஆம் தேதி காலமானார். நேரு காலமான நாள் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில் இன்று  நேருவின் 55-வது நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. நேருவின் நினைவு தினத்தையொட்டி சாந்திவன் பகுதியில் இருக்கும் அவரின்  நினைவிடத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மாநிலத்தில் ஆட்சி மாற்றம் “கவிழ்கிறது கர்நாடக மாநில அரசு” ஆட்டத்தை தொடங்கும் பாஜக…!!

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்துள்ளதால் மீண்டும் கர்நாடக மாநில ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் அம்மாநில பாஜக ஈடுபட்டு வருகின்றது. கர்நாடக மாநிலத்தில் இறுதியாக நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில் தனி கட்சியாக 104 இடங்கள் பெற்ற பாஜக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகின்றது. மாநிலத்தின் முதலமைச்சராக மதசார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி இருந்து வருகின்றார். இந்த ஆட்சி காங்கிரஸ் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“எந்த தியாகமும் செய்ய தயார்”  நீங்கள்தான் எனது குடும்பம் , எனது சொத்து…சோனியா மக்களுக்கு கடிதம்…!!

எந்த தியாகமும் செய்ய தயார்  நீங்கள்தான் எனது குடும்பம் , நீங்கள்தான் எனது சொத்து என்று சோனியா காந்தி ரேபரேலி மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியை சந்தித்தது. தேசியளவில் பாஜக தனி மெஜாரிட்டியுடன் தனது ஆட்சியை தக்க வைத்து கொண்டது.  உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தோல்வி அடைந்த்தர். இப்படி மோசமான தோல்வியை காங்கிரஸ் கட்சி இந்தியா முழுவதும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிரதமர் மோடி 30 -ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு பதவி ஏற்கிறார்..!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை வரும் 30 -ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு பதவியேற்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  7 கட்டங்களாக நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.இதில் பாரதிய ஜனதா  மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து டெல்லியில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற பா.ஜ.க எம்.பிக்கள் கூட்டத்தில்  நரேந்திரமோடியே  மீண்டும் பிரதமராக […]

Categories

Tech |