Categories
அரசியல் தேசிய செய்திகள்

மக்களவையின் முதல் கூட்டம் இன்று தொடங்குகின்றது….!!

இன்று மக்களவையின் மழைக்கால கூட்டத்தொடர் மற்றும் புதிய மக்களவையின் முதல் கூட்டம் நடைபெறுகின்றது.  நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறையாக  நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த 30_ஆம் தேதி பதவி ஏற்றது. இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த 31_ஆம் தேதி கூடிய மத்திய மந்திரிசபையின் முதல் கூட்டத்தில் நாடாளுமன்றத்தின்  மழைக்கால கூட்டத்தொடரை ஜூன் 17-ஆம் தேதி கூட்ட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று  முதல் முறையாக  17-வது நாடாளுமன்ற […]

Categories
தேசிய செய்திகள்

“பிரதமர் மோடி தலைமையில்” அனைத்து கட்சியினர் ஆலோசனை கூட்டம்…!!

பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது  டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா, நிதின்கட்கரி, பியூஷ் கோயல் மற்றும் அதிமுக சார்பில் ரவீந்தரநாத் குமார் ஆகியோர் பங்கேற்றனர். 17-வது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடங்கி ஜூலை  26-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு, முத்தலாக் மசோதா உள்ளிட்ட பல்வேறு  மசோதாக்களை நிறைவேற்ற […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் குழந்தைகளுக்கு மூளை காய்ச்சல்…. பலி எண்ணிக்கை 84 ஆக உயர்வு..!!

பீகார் மாநிலத்தில் மூளை காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது  பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தைகளுக்கு மூளை காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டது. கண்டறியப்பட்ட  குழந்தைகள் அனைத்தும் முசாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த ஒருமாதத்தில் மட்டும் 66 குழந்தைகள் மூளை காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தனர். இதன் காரணமாக முசாபர்பூர் மாவட்டத்தில் 8-ம் வகுப்பு வரையில் […]

Categories
தேசிய செய்திகள்

 2022-ல் “விவசாயிகளின் வருமானம்” இரட்டிப்பாகும் – பிரதமர் மோடி..!!

பிரதமர் மோடி நிதி ஆயோக் கூட்டத்தில், 2022-ல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.  பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடைபெற்றது. இது 5வது நிதி ஆயோக் கூட்டமாகும். இதில் மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள், நிதி ஆயோக்கின் துணை தலைவர், தலைமை செயல் அதிகாரி மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர்களும் அழைக்கப்பட்டனர். இதில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா […]

Categories
தேசிய செய்திகள்

2024-ல் இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் என்ற நிலையை அடையும் – பிரதமர் மோடி..!!

நிதி ஆயோக் கூட்டத்தில், 2024-ல் இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் என்ற நிலையை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.  பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடைபெற்றது. இது 5வது நிதி ஆயோக் கூட்டமாகும். இதில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள், நிதி ஆயோக்கின் துணை தலைவர், தலைமை செயல் அதிகாரி மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர்களும் அழைக்கப்பட்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

விமானநிலையத்தில் கெடுபிடி “சலுகைகளை கட்” சோதனை செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் ..!!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு சலுகைகளை மறுத்த  விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கெடுபிடி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுக்கு மாவோயிஸ்டு அச்சுறுத்தல்கள் இருப்பதால் இசட்பிளஸ் பாதுகாப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர் எங்கு சென்றாலும் அவருக்கு பாதுகாப்பாக துப்பாக்கி ஏந்திய போலீசாரும் உடன் செல்வார்கள்.இந்நிலையில் நேற்று இரவு  விஜயவாடா விமான நிலையத்துக்கு சந்திரபாபு  நாயுடன்  ஆந்திர மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் சின்ன  ராஜப்பாவும் வந்திருந்தார். சந்திரநாயுடுக்கு இசட்பிளஸ் பாதுகாப்பு இருப்பதால் நேரடியாக வி.ஐ.பி.க்கள் […]

Categories
ஆட்டோ மொபைல் டெக்னாலஜி தேசிய செய்திகள்

25 நிமிடத்தில் 350km “உலக சாதனை படைத்த சென்னை இளைஞர்கள் “

ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் சார்ந்த அதிநவீன வாகனத்தை சென்னை ஐஐடி மாணவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப அடிப்படையிலான புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதிலும் இருந்து 1,500 குழுக்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் 21 குழுக்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். ஆசியாவிலேயே சென்னை ஐஐடியை சேர்ந்த மாணவர்கள் மட்டுமே தகுதிபெற்றுள்ளனர் என்பது பெருமைக்குரிய நிகழ்வாக  கருதப்படுகிறது . சென்னை ஐஐடியின் 9 மாணவர்களைக் கொண்ட   இந்த குழு ஹைப்பர் […]

Categories
தேசிய செய்திகள்

தொடரும் புல்வாமா தாக்குதல்…..2 தீவீரவாதிகள் சுட்டுக் கொலை..!!

புல்வாமா பகுதியில் தீவீரவாதிகளுக்கும் இந்தியா ராணுவ வீரர்களுக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 2 தீவீரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் . கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று புல்வாமா தாக்குதலானது இந்தியாவில் நடைபெற்றது. இதில் ஒரே நேரத்தில் 44 crpf ராணுவ வீரர்கள் குண்டு வெடித்ததில் வீரமரணம் அடைந்தனர் . இச்சம்பவமானது இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு இந்தியாவில் முக்கிய பகுதிகளில் குண்டு வெடிப்பு அச்சுறுத்தல்களும், அவ்வப்போது பயங்கரவாத […]

Categories
தேசிய செய்திகள்

“தமிழ் மொழியில் பேசலாம்” எதிர்ப்புக்கு பின் முடிவை மாற்றிய தெற்கு ரயில்வே..!!

இரயில் நிலைய அதிகாரிகள் தங்களுக்கு புரியும் மொழியில் பேசலாம் என்று தெற்கு ரயில்வே புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது  சமீபத்தில் மதுரை திருமங்கலம் அருகே இரண்டு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே வந்ததால் விபத்து ஏற்படும் நிலை உருவானது. ஆனால் சரியான நேரத்தில் தகவல் கொடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக இரயில் நிலைய அதிகாரிகள் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் மொழி பிரச்னையால் தகவல்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது தெரியவந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

“விண்வெளி ஆராய்ச்சிக்கு காங்கிரஸ் அங்கிகாரம் அளிக்கவில்லை “முன்னாள் இஸ்ரோ தலைவர் பகிரங்க குற்றசாட்டு ..!!

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் விண்வெளி ஆராய்ச்சிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று பாஜக முன்னாள் இஸ்ரோ தலைவரும் , பாஜக உறுப்பினருமான மாதவன் நாயர் குற்றம் சாட்டியுள்ளார் . வருகின்ற ஜூலை 15ம் தேதி சந்திராயன்-2 விண்கலமானது விண் வெளியில் செலுத்தப்பட இருக்கிறது. இதுகுறித்து இஸ்ரோவின் முன்னாள் தலைவரும் மற்றும் பாஜகவின் உறுப்பினருமான மாதவன் நாயர் கூறியதாவது, ஜூலை 15ம் தேதி இஸ்ரோ சார்பில்  விண்வெளியில் செலுத்தப்பட உள்ள சந்திராயன்-2 விண்கலம் ஆனது சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறோம்.. […]

Categories
தேசிய செய்திகள்

5 வயது சிறுமி “பாலியல் வன்கொடுமை” குற்றவாளிக்கு மரண தண்டனை…!!

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது  ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் மாவட்டம் ரேவாலி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் அடித்து கொலை செய்தார். இது குறித்து பெஹ்ரார் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளி ராஜ்குமாரை கைது செய்தனர். இவர் மீது பிரிவு 302 -ன் கீழ் (கொலை) , 363 […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

ரஷ்ய அதிபர் புதினுடன் மோடி பேச்சு வார்த்தை..!!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில்  இரு நாட்டு உறவுகள் குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் மோடி பேச்சு வார்த்தை நடத்தினார். கிர்கிஸ்தானின் தலைநகர் பிஷ்கேக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில்  பிரதமர் மோடி விமானம் மூலம் புறப்பட்டு சென்று பங்கேற்றார். இதையடுத்து நடைபெற்ற மாநாட்டுக்கிடையே பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது   இரு நாட்டு தலைவர்களும் சிரித்த முகத்துடன்  கை குலுக்கி கொண்டனர். இருவரும் இரு நாட்டு உறவுகள் குறித்தும், பல்வேறு முக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

“ஏ.என்- 32 விமான விபத்து” 13 பேரின் சடலங்களும், கருப்பு பெட்டியும் மீட்பு..!!

இந்திய விமான படையின் ஏ.என்- 32 விமானம் விபத்துக்குள்ளானதில் 13 பேரின் சடலங்களும், கருப்பு பெட்டியும் மீட்கப்பட்டன  இந்திய விமான படையின் விமானம் ஏ. என்- 32 ஜூன் 3-ம் தேதி அசாம் மாநிலத்தின் ஜோர்கட்டிலிருந்து மதியம் 12.25 மணியளவில் அருணாச்சல பிரதேசதின் மேசூகா பகுதிக்கு புறப்பட்டு சென்றது. இதில் 13 பேர் பயணம் செய்தனர்.  இதையடுத்து விமானம் 1 மணியளவில் கட்டுப்பாடு அறையுடனான தொடர்பை இழந்தது. அதை தொடர்ந்து விமானத்தை தேடுவதற்கு இந்திய விமான படை மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு…. சீன அதிபருடன் மோடி பேச்சுவார்த்தை..!!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில்  இரு நாட்டு உறவுகள் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் மோடி பேச்சு வார்த்தை நடத்தினார். கிர்கிஸ்தானின் தலைநகர் பிஷ்கேக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி இன்று  விமானம் மூலம் புறப்பட்டு சென்று பங்கேற்றார். இதையடுத்து நடைபெற்ற மாநாட்டுக்கிடையே பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். சந்திப்பில்  இரு நாட்டு தலைவர்களும் சிரித்த முகத்துடன்  கை குலுக்கி கொண்டனர். இந்த சந்திப்பின் போது இரு நாட்டு உறவுகள் […]

Categories
தேசிய செய்திகள்

கிர்கிஸ்தானுக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டார் மோடி..!!

பிரதமர் மோடி கிர்கிஸ்தானுக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்  கிர்கிஸ்தானின் தலைநகர் பிஷ்கேக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு 13 மற்றும் 14 இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். முன்னதாக இந்திய விமானங்கள் எல்லை  பாகிஸ்தானின்  பாலக்கோடு பகுதியில் தாக்குதல் நடத்தியதையடுத்து இந்திய விமானங்கள் தங்கள் எல்லைக்குள் பறப்பதற்கு பாகிஸ்தான் தடை விதித்தது. இதனால் பிரதமர் மோடி பாகிஸ்தான் வான் பரப்பு வழியாக செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து  பிரதமர் அவ்வழியாக செல்வதற்கு இந்தியா […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டயர் திடீரென வெடித்தது..!!

ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டயர் திடீரென வெடித்ததால் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது  ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் இந்தியாவின் பல பகுதிகளுக்கு விமானங்களை இயக்கி வருகிறது. இந்நிறுவனம் இந்தியா மட்டுமில்லாமல் துபாய், இலங்கை, தாய்லாந்து உட்பட வெளி நாடுகளுக்கும் விமானத்தை இயக்கி வருகிறது. இந்நிலையில் இன்று எஸ் ஜி 58 என்ற விமானம் துபாயில் இருந்து ஜெய்ப்பூருக்கு வந்து கொண்டிருந்தது. இதில் 189 பயணிகள் பயணித்தனர். விமானம் ஜெய்ப்பூர் விமான நிலையம் அருகே வந்த போது […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவில் இ-சிகரெட்_க்கு தடை” மத்திய அரசிடம் பரிந்துரை ….!!

இ-சிகரெட்_டை இந்தியாவில் தடை செய்ய போதைப்பொருள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் பரிந்துரை செய்துள்ளது. சிகரெட் பழக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விடுபட சில நாடுகளில் இ-சிகரெட் என்ற எலெக்ட்ரானிக் சிகரெட்களை பயன்படுத்தப்படுகிறது. இதனை இந்தியாவில் பயன்படுத்தலாமா ? என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவின்பேரில் போதைப்பொருள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் இ-சிகரெட்கள் புகைப்பதால் உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிய வந்துள்ளது.போதைப்பொருள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியத்தின் ஆய்வு முடிவின் அடிப்படையில் , […]

Categories
தேசிய செய்திகள்

உ.பியில் 3 வயது சிறுமி “பாலியல் வன்கொடுமை” செய்து கொலை – உடற்கூறு ஆய்வு அறிக்கை..!!

உத்திர பிரதேசத்தில் சிறுமி கொலை தொடர்பான உடற்கூறு ஆய்வு அறிக்கையில், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது   உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகார் பகுதியில் வசித்து வரும் பன்வாரிலால் சர்மா என்பவரின் டுவிங்கிள் சர்மா என்ற 2 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குழந்தையின் பெற்றோர்  10,000 ரூபாய் பணத்தை கடனாக வாங்கியதால் கடன் கொடுத்தவர்கள் கொடூரமாக கொலை செய்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. சிறுமியை […]

Categories
தேசிய செய்திகள்

“ராகுல் பிறந்த போது உடனிருந்த நர்ஸ்” வைரலாகும் புகைப்படம்…!!

ராகுல் காந்தி பிறந்த போது மருத்துவமனையில் தன்னுடனிருந்த பெண் செவிலியரை சந்தித்து பேசிய போட்டோ வைரலாகி வருகின்றது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி 3 நாள் பயணமாக கேரள மாநிலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வயநாடுக்கு வருகை தந்துள்ளார். மேலும் முதல் நாள் நடைபெற்ற ராகுல் பயணத்தில் அக்கட்சியின் தொண்டர்களுடன் பேரணியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் வயநாட்டின் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்.பி.க்கான அறைக்கு வந்த ராகுல் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் கேரள மாநில […]

Categories
தேசிய செய்திகள்

“பிரதமர் மோடி கிர்கிஸ்தான் பயணம்” பாகிஸ்தானிடம் அனுமதி கேட்கும் இந்தியா..!!

பிரதமர் மோடியின் விமானத்தை தங்கள் வான்பரப்பில் பறக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது  இந்திய விமானங்கள் எல்லை தாண்டி சென்று பாகிஸ்தானின்  பாலக்கோடு பகுதியில் தாக்குதல் நடத்தியதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் இந்திய விமானங்கள் தங்கள் எல்லைக்குள் பறப்பதற்க்கு பாகிஸ்தான் தடை விதித்தது. அந்த தடையை சமீபத்தில் தான் வரும் 15-ம் தேதி வரை பாகிஸ்தான் நீட்டித்தது. இந்த நிலையில் பிரதமர் மோடி வரும் 13ம் தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் பங்கேற்க கிர்கிஸ்தானுக்கு விமானம் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் மூளை காய்ச்சலால் 14 குழந்தைகள் பலி…!!

பீகார் மாநிலத்தில் மூளை காய்ச்சல் பாதிப்பால் 14 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது  பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் மாவட்டத்தில் 38 குழந்தைகளுக்கு மூளை காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டது. கண்டறியப்பட்ட 38 குழந்தைகளும் முசாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் சிகிச்சை பலனின்றி 14 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் மற்ற குழந்தைகள் தனி வார்டில் வைக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பலியான பெரும்பாலான […]

Categories
தேசிய செய்திகள்

பா.ஜ.க VS திரிணாமுல் மோதலில் 4 பேர் பலி…. மேற்கு வங்கத்தில் நீடிக்கும் பதற்றம்…!!

பா.ஜ.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் 4 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. நடைபெற்ற மக்களவை தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு சரிக்கு சமமாக பாஜக வென்றதையடுத்து அங்கே தொடர் வன்முறை அரங்கேறி வருகின்றது. அங்குள்ள 24 பர்கானாஸ் மாவட்டம் கந்தேஷ்கலி என்ற இடத்தில் பா.ஜ.க சார்பில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பம் மற்றும் பதாகைகளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அகற்றியதாக கூறப்படுகின்றது. இதனால் நேற்று இரவு இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருவருக்கும் முற்றிய […]

Categories
தேசிய செய்திகள்

உ.பியில் புழுதி புயல், மின்னல் தாக்குதலில் 19 பேர் பலி… 48 பேர் காயம்..!!

உத்தரபிரதேசத்தில் பயங்கர புழுதி சூறாவளி மற்றும்  மின்னல் தாக்கியதில் 19  பேர் பலியாகியுள்ளனர்.  உத்தரபிரதேச மாநிலத்தில் பல  இடங்களில் நேற்று மாலை திடீரென புழுதியுடன் சூறாவளி காற்று பயங்கர வேகமாக வீசியது. அப்போது அதனுடன் சேர்ந்து இடி–மின்னலும் தாக்கியது. இந்த கோர  சூறாவளி தாக்குதலில் மாநிலத்தின் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதோடு மட்டுமில்லாமல் பல வீடுகள், கடைகள், கட்டிட சுவர்களும் இடிந்து விழுந்தன. இதில் இடிந்து விழுந்த சுவரில் மாட்டிக் கொண்டும், மின்னல் தாக்கியும் 19 பேர் இறந்துள்ளனர். மேலும் 48 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

“ரூ 10,000 த்தை திருப்பி கொடுக்காத பெற்றோர்” 2 வயது சிறுமி கொடூர கொலை…. நாடு முழுவதும் அதிர்ச்சி…!!

அலிகாரில் 10,000 ரூபாய் பணத்தை பெற்றோர் திருப்பி தராததால் 2 வயது சிறுமி டுவிங்கிள் கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகார் பகுதியில்வசித்து வரும் பன்வாரிலால் சர்மா என்பவருக்கு டுவிங்கிள் சர்மா என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை கடந்த மே மாதம் 31-ம் தேதி திடீரென காணாமல் போனது. உடனே குழந்தை மாயமானதை பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து குழந்தையின் முகம் யாரென்று அடையாளம் தெரியாத அளவிற்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மோடியின் முதல் வெளிநாட்டு பயணம்” வெளியுறவுத் துறை அறிவிப்பு…!!

இரண்டாவது  முறையாக பிரதமராக  பொறுப்பேற்றுள்ள மோடி மேற்கொள்ள இருக்கும் முதல் வெளிநாட்டு பயணத்தை வெளியுறவுத் துறை செயலாளர் வெளியிட்டுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற பாஜக ஆட்சி அமைத்து பிரதமர் மோடி இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவி பிரமாணம் செய்து  கொண்டார். இந்நிலையில் 2வது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பிறகு பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணத்தின் திட்டத்தை வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே வெளியிட்டுள்ளார். அதில் பிரதமர் மோடி  […]

Categories
தேசிய செய்திகள்

“860 மரங்களை வெட்டி மகளின் திருமணம்” மரம் வளர்க்க சொல்லி தண்டனை…!!

மகளின் திருமண செலவுக்கு 860 மரங்களை வெட்டிய நபருக்கு வனத்துறையினர் மரம் வளர்க்க சொல்லி தண்டனை விதித்துள்ளனர். 1000 பொய்களை சொல்லி ஒரு கல்யாணம் முடிக்கலாம் என்பது பழமொழி ஆனால் 1000 மரங்களை வெட்டி தனது மகளின் கல்யாணத்தை முடித்து வைத்த சம்பவம் விநோதத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தை சேர்ந்த தஷரத் குர்ஹதே , தனது மகளின் திருமண செலவிற்காக 860 மரங்களை வெட்டியுள்ளார். அனுமதி இல்லாமல் மரங்களை வெட்டி விற்பதாக வனத்துறை_ யினருக்கு கிடைத்த தகவலை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“முழுமையாக காலியாகும் காங்கிரஸ்” தெலுங்கானா அரசியலில் பரபரப்பு..!!

தெலுங்கானா மாநிலத்தில் 12 காங்கிரஸ் கட்சி MLA_க்கள் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியுடன் இணைவதாக செய்தி  வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி 88 தொகுதிகளில் வெற்றி ஆட்சி செய்து வருகின்றது.சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் உத்தம் குமார் ரெட்டி, நல்கொண்டா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மக்களவையில் வெற்றிபெற்றதால் MLA_வாக இருந்த அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதனால் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பலம் 18 ஆக […]

Categories
தேசிய செய்திகள்

“நெருங்கும் சட்டமன்ற தேர்தல்” மெட்ரோ ரயில், பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் – அரவிந்த் கெஜ்ரிவால்..!!

டெல்லி அரசு மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடந்து முடிந்த பாராளுமன்ற  தேர்தலில்  டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளிலும் பாஜக வென்றது. இதனால் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அதிர்ச்சியில் உள்ளது. இதனை சரியாக பயன்படுத்தி டெல்லி மாநிலத்தையும் கைப்பற்ற பாஜக வியூகம் வகுத்து வருகிறது. இந்நிலையில் அடுத்தமுறையும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு செயல்படுத்த வியூகங்களை செயல்படுத்த உள்ளதாக டெல்லி […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

“கிரிக்கெட் வீரர்கள் அதிர்ச்சி” உலக கோப்பை கேப்டனின் பயிற்சியாளர் மரணம்….!!

இந்திய அணியின் முதல் உலக கோப்பை நாயகன் கபில் தேவ்வின் பயிற்சியாளர் தர்மலிங்கம் மரணமடைந்துள்ளது கிரிக்கெட் வீரர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்திய விமானப்படையில் முன்னாள் அதிகாரியாகவும், தமிழ்நாடு மற்றும் அகில இந்தியளவில் பல வீரர்களுக்கு பயிற்சியாளராகவிளங்கியவர் தர்மலிங்கம். இவர் இந்திய கிரிக்கெட் அணி  முதல்முறையாக உலகக்கோப்பை வெல்வதற்கு காரணமாக இருந்த அப்போதைய இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ்க்கு பயிற்சியாளராக பணியாற்றியவர்.1983_ஆம் ஆண்டில் இவரின் பயிற்சியின் கீழ் தான் இந்திய கிரிக்கெட் அணி அணி உலகக்கோப்பையை வென்றது. ரஞ்சி கிரிக்கெட் கோப்பை போட்டியை  பலமுறை விளையாடியுள்ள தர்மலிங்கம்  29 போட்டி விளையாடி 1132 ரன்களும்  […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“தமிழ் மக்களின் உண்மையான தலைவர் கருணாநிதி” ராகுல் காந்தி ட்வீட் …!!

தமிழ் மக்களின் உண்மையான தலைவர் கருணாநிதி என்று ராகுல் காந்தி ட்வீட் செய்து கருணாநிதியின் பிறந்தநாளை நினைவு கூர்ந்துள்ளார். ஜூன் 3_ஆம் தேதியான இன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் , திமுகவின் தலைவருமான  கருணாநிதியின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் திமுக_வினர் சார்பில் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரது சிலைக்கும், நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினர். இந்நிலையில் கருணாநிதியின் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்மிரிதி இரானி, ரவி சங்கர் பிரசாத் மத்திய அமைச்சராக பொறுப்பேற்பு..!!

மத்திய அமைச்சர்களாக ஸ்மிரிதி இரானி, ரவி சங்கர் பிரசாத், வி. கே சிங் ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர்.  மக்களவை தேர்தலில் வென்றதையடுத்து மோடி மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். அவருடன் 25 கேபினட் அமைச்சர்கள், 09 தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சர்கள், 24 இணை அமைச்சர்கள் பதவி ஏற்றனர். இதையடுத்து அமைச்சரவையில் இடம்பெற்றவர்களுக்கு அவர்களுக்கான இலாக்கா ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அந்தந்த துறைகளை சேர்ந்தவர்கள் பதவியேற்று வருகின்றனர். காங்கிரஸ் கோட்டை என  அனைவராலும் கூறப்படும் அமேதி தொகுதியில் போட்டியிட்டு  பாஜகவின் ஸ்மிரிதி […]

Categories
தேசிய செய்திகள்

“அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்து இன்று ஆலோசனை கூட்டம் “

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்து ஆலோசிப்பதற்கான  சாதுக்களின் விவாத  கூட்டம் இன்று நடைபெறுகிறது. உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் இருக்கக்க்கூடிய  சர்ச்சைக்குரிய இடம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது . இதனிடையே  மனுதாரர்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறு உச்ச நீதிமன்றம் சார்பில்  அறிவுறுத்தபட்டதையடுத்து , ஓய்வு பெற்ற நீதிபதியான  கலிபுல்லாஹ், வாழும் கலை அமைப்பின் நிறுவனரான  ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் மூத்த வழக்கறிஞரான  ஸ்ரீராம்  ஆகியோர் அடங்கிய  சமரச குழு ஒன்று அமைக்கப்பட்டது.  […]

Categories
தேசிய செய்திகள்

சைக்கிளில் சென்று சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் ஹர்ஷ்வர்தன்..!!

ஹர்ஷ்வர்தன் டெல்லியில் உள்ள அமைச்சகத்திற்கு சைக்கிளில் சென்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். மக்களவை தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து கடந்த 30-ம் தேதி டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றது. பிரதமர் மோடிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 25 கேபினட் அமைச்சர்கள், 09 தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சர்கள், […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“8 வழிச்சாலை திட்டம்” மத்திய அரசின் மேல் முறையீட்டு மனு இன்று விசாரணை….!!

8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றம் விதித்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகின்றது. மத்திய அரசு கொண்டு வந்த பாரத்மாலா என்ற திட்டத்தின் கீழ் சென்னை முதல் சேலம் வரை 276 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுமார் ரூ.10 ஆயிரம் கோடி செலவிவு செய்து 8 வழி சாலை அமைக்கும் திட்டம் முடிவு செய்யப்பட்டது.  இந்த திட்டத்தை செயல்படுத்த சேலம், தர்மபுரி, காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் […]

Categories
தேசிய செய்திகள்

“3-வது மொழியை தேர்வு செய்து படிக்கலாம்” இந்தி மொழி கட்டாயமில்லை..!!

கடும் எதிர்ப்புக்கு பிறகு இந்தி மொழி  பயிற்றுவிப்பது கட்டாயம் என்ற பரிந்துரை நீக்கப்பட்டு புதிய கல்வி வரைவு கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.  பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு இரண்டாவது முறை பொறுப்பேற்றது. இதையடுத்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை புதிய கல்வி வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநிலங்களிலும் ஹிந்தியை பயிற்று விக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. இதற்கு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தி பேசாத பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது எதிர்ப்பை காட்டினர். […]

Categories
தேசிய செய்திகள்

“பாதுகாப்புபடையினர் அதிரடி” 5 மாதத்தில் 101 பயங்கரவாதிகள் காலி…!!

காஷ்மீரில் கடந்த 5 மாதத்தில் மட்டும் 101 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் காஷ்மீரில் உள்ள உள்ளூர் இளைஞர்கள் பயங்கரவாத அமைப்புகளில் சேரும் தொடர்ந்து பெருகி கொண்டே வருகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை சுமார் 50 இளைஞர்கள் வரை அங்கு மறைமுகமாக செயல்படும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளில் சேர்ந்துள்ளனர். கடந்த 5 மாதங்களில் பாதுகாப்பு படையினரின் அதிரடி 101  பயங்கரவாதிகள் உள்பட 101 பயங்கரவாதிகள் இறந்துள்ளதாக கூறப்படுகின்றது. காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியன் பகுதியில் 25 பேரும், […]

Categories
தேசிய செய்திகள்

“எந்த மொழியாக இருந்தாலும் விருப்ப பாடமாக இருக்க வேண்டும்” சித்தராமையா ட்விட்..!!

தாய்மொழி அல்லாத எந்த மொழியாக இருந்தாலும் அது விருப்ப பாடமாக இருக்கவேண்டும்  என்று கர்நாடக முன்னாள் முதல்வர்  சித்தராமையா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்  பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு இரண்டாவது முறை பொறுப்பேற்றவுடன் கஸ்தூரி ரங்கன் குழு தேசிய கல்வி கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்  ரமேஷ் போகிரியால் நிஷாங்கிடம் ஒப்படைத்தது. இதையடுத்து மாநில கல்விகளில் தாய்மொழி மற்றும் ஆங்கில மொழியை பயிற்று விக்கும் வகையிலுள்ள இரு மொழி கொள்கைக்குப் பதிலாக ஹிந்தியை […]

Categories
தேசிய செய்திகள்

காவலர் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்தினார் அமித்ஷா…!!

உள்துறை அமைச்சர் அமித்ஷா காவலர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். மக்களவை  தேர்தலில் பாரதிய ஜனதா மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து மோடி மீண்டும் இரண்டாவது முறையாக நேற்று முன்தினம் பிரதமராக பதவி ஏற்றார். அவருடன் 25 கேபினட் அமைச்சர்கள், 09 தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சர்கள், 24 இணை அமைச்சர்கள் பதவி ஏற்றனர். இதையடுத்து அமைச்சரவையில் இடம்பெற்றவர்களுக்கு  இலாக்கா  ஒதுக்கப்பட்டது. இதன்படி அமித்ஷாவுக்கு உள்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து அமித்ஷா, நேற்று  முறைப்படி தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பின்னர் […]

Categories
தேசிய செய்திகள்

முதல் பயணமாக சியாச்சின் செல்லும் ராஜ்நாத் சிங்..!!

ராஜ்நாத் சிங் முதல் பயணமாக நாளை சியாச்சின் பனிமலை பகுதிக்கு செல்கிறார்   மக்களவை தேர்தலில் வென்றதையடுத்து மோடி மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். அவருடன் 25 கேபினட் அமைச்சர்கள், 09 தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சர்கள், 24 இணை அமைச்சர்கள் பதவி ஏற்றனர். இதையடுத்து அமைச்சரவையில் இடம்பெற்றவர்களுக்கு  இலாக்கா ஒதுக்கப்பட்டது. இதில் ராஜ்நாத் சிங்குக்கு பாதுகாப்பு துறை ஒதுக்கப்பட்டது. இதையடுத்து  ராஜ்நாத்சிங் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அவருடன் சேர்ந்து பாதுகாப்பு துணை இணை அமைச்சராக  ஸ்ரீபத் எஸ்ஸோ நாயக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

“திவ்யா ஸ்பந்தனா ட்விட்டரில் இருந்து விலகல்” இது தான் காரணமா..?

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திவ்யா ஸ்பந்தனா ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறியுள்ளார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திவ்யா ஸ்பந்தனா ட்விட்டரில் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டு வருபவர். இவர் அவ்வப்போது பாஜக பற்றி ட்விட்டரில் கருத்து பதிவிட்டு பரபரப்பை ஏற்படத்தக்கூடியவர். சமீபத்தில் கூட பிரதமர் மோடியையும், ஹிட்லரையும் ஒப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.  நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமனுக்கு திவ்யா ஸ்பந்தனா தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்து செய்தி காங்கிரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

“மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கி சண்டை” ராணுவ வீரர் ஒருவர் பலி…!!

ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஜார்க்கண்டின் தும்கா பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு வந்த ராணுவ வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.  இந்த நிலையில், அங்கிருந்த மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான  துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இந்த துப்பாக்கி சண்டையில்  ராணுவ வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும்  4 வீரர்கள் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த வீரர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கி சண்டையில் காயமடைந்துள்ள […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“இந்தியாவிற்கு வரி விதித்தது அமெரிக்கா “அமெரிக்கா அதிபருக்கு எம்.பிக்கள் கடிதம் ..!!

வளர்ந்த ,பயனடைந்த நாடு என்ற அந்தஸ்தை ரத்து செய்து ,ஏற்றுமதி பொருளுக்கு வரிகள் விதிப்பை  அமெரிக்கா உறுதி செய்துள்ளது . 2020க்குள் இந்தியா வல்லரசு நாடாக மாறும் என்று ஐந்து வருடங்களுக்கு முன்பாக கூறி வந்த நிலையில், தற்போது வளரும் நாடுகளின் பட்டியலில் இருந்தே இந்தியா வெளியேற்றப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அமெரிக்காவானது பயனடைந்த வளர்ந்த நாடு என்ற அந்தஸ்தை இந்தியாவிற்கு வழங்கி இருந்தது. இந்நிலையில் அந்த அந்தஸ்தை அமெரிக்கா நாடு இந்தியாவிற்கு ரத்து செய்யப்போவதாகவும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்றார் ராஜ்நாத்சிங்..!!

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக ராஜ்நாத்சிங் பொறுப்பேற்றுக் கொண்டார்   மக்களவை தேர்தலில் வென்றதையடுத்து மோடி மீண்டும் இரண்டாவது முறையாக நேற்று முன்தினம் பிரதமராக பதவி ஏற்றார். அவருடன் 24 பேர் கேபினட் அமைச்சர்களாகவும் , 09 பேர்  தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சர்களாகவும், 24 பேர் ராஜாங்க அமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர். இதையடுத்து நேற்று அமைச்சரவையில் இடம்பெற்றவர்களுக்கு நேற்று இலாக்கா ஒதுக்கப்பட்டு, அந்தந்த துறைகளின் அமைச்சர்களாக பொறுப்பேற்று வருகின்றனர். இந்நிலையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் அமித்ஷா…!!

அமித்ஷா உள்துறை அமைச்சராக இன்று தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மக்களவை  தேர்தலில் பாரதிய ஜனதா மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து மோடி மீண்டும் இரண்டாவது முறையாக நேற்று முன்தினம் பிரதமராக பதவி ஏற்றார். அவருடன்  கேபினட் அமைச்சர்களாக  24 பேரும்,   தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சர்களாக 09 பேரும்,  ராஜாங்க அமைச்சர்களாக 24 பேரும் பதவி ஏற்றனர். இதையடுத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடிக்கும்,  அமைச்சர்களுக்கும் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அமைச்சரவையில் இடம்பெற்றவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

சோனியா காந்தி நாடாளுமன்ற குழு தலைவராக தேர்வு..!!

டெல்லியில் நடந்த கூட்டத்தில் சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மக்களவை தேர்தலில் 52 தொகுதியில் மட்டும் வென்று காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்து. இதையடுத்து ராகுல் காந்தி தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக முன்வந்தார். ஆனால் காங்கிரஸ் காரிய கமிட்டி இதனை நிராகரித்து, ராகுலுக்கு கட்சியின் கட்டமைப்பை முழுவதுமாக மாற்றியமைக்க அதிகாரம் அளித்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை எம்.பி.க்களின் முதல் கூட்டம் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற மைய அறையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“வெறும் 30 % பெற்ற பாஜக” மக்களவையில் எப்படி வென்றது….காங்கிரஸ் தலைவர் கேள்வி..!!

உள்ளாட்சியில் 30 சதவீதம் வென்ற பாஜக மக்களவையில் எப்படி வெற்றி பெற்றிருக்க முடியுமென்று காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் கேள்வியெழுப்பியுள்ளார் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான 353 இடங்களை கைப்பற்றி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. பல்வேறு மாநிலங்களில் பாஜக முழுமையான வெற்றியை பெற்றது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள 28 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக 25 இடங்களை கைப்பற்றியது. அம்மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி செய்து கொண்டு இருக்கின்ற சூழலில் பாஜகவின் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

“மோடி கோயில் சென்றால் நாங்கள் மசூதி செல்வோம்” – அசாதுதின் ஓவைசி..!!

மோடி கோயில் சென்றால் நாங்கள் மசூதி செல்வோம் என்று அசாதுதின் ஓவைசி தெரிவித்துள்ளார். மக்களவை தொகுதியில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளதால் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.இந்நிலையில் ஐதராபாத் மக்களவை தொகுதியில் தொடர்ச்சியாக  4-வது முறை வெற்றி பெற்றுள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசி, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது “ மோடியால்  கோவிலுக்குள்  சென்று வணங்க  முடியும் என்றால், நாமும் நம்முடைய மசூதிகளுக்கு செல்லலாம். மோடி  குகைக்குள் அமர்ந்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கர்நாடகாவில் “மக்களவை முடிவை புரட்டி போட்ட உள்ளாட்சி” காங்கிரஸ் 509 , பிஜேபி 366 …..!!

கர்நாடகாவில் மக்களவை தேர்தலில் படு தோல்வி அடைந்த காங்கிரஸ் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 28 நாடாளுமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியான மதசார்பற்ற ஜனதா தளம் தலா ஒரு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.பாஜக 25 இடங்களையும் அதன் ஆதரவு சுயேச்சை ஒரு இடத்தையும் கைப்பற்றினர்.மக்களவைத் தேர்தல் தோல்வியை அடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

அதிகரிக்கும் வேலையின்மை …வெளியாகும் அதிர்ச்சி தகவல் ..!!

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது . கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 6.1% வேலைவாய்ப்பின்மை அதிகரித்து உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் ஜிடிபி என்னும் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆனது 6.5 சதவீதம் குறைந்துள்ளதாகவும், கடந்த 17 ஆண்டுகளில் மிகவும் பின்தங்கிய சரிவை  இந்தியா சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஜிடிபி அளவானது சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவை விட […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

போர் நினைவுச் சின்னத்தில் ராஜ்நாத்சிங் மரியாதை..!!

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தேசிய போர் நினைவுச்சின்னத்தில் மரியாதை செலுத்தினார். மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் வென்றதையடுத்து நேற்று முன்தினம் தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி மீண்டும் இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சேர்ந்து 24 கேபினட் மந்திரிகள் மற்றும் 33 ராஜாங்க மந்திரிகளும் பதவியேற்றுக்கொண்டனர். பிரதமர் உள்பட 54 அமைச்சர்களுக்கான துறைகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இதற்கு முன் உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங்குக்கு தற்போது பாதுகாப்பு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராஜ்நாத் சிங் இன்று […]

Categories

Tech |