இன்று மதியம் 1.30_க்குள் கர்நாடக முதலவர் குமாரசாமி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று மாநில ஆளுநர் வஜூபாய் வாலா கெடு விதித்துள்ளார். கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளை சேர்ந்த 16 MLA_க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அதே போல ஆளும் அரசுக்கு ஆதரவளித்து வந்த சுயேச்சை MLA_க்களான நாகேஷ், சங்கர் ஆகியோரும் தங்களின் ஆதரவை திரும்ப பெற்றுக் கொண்டதால் ஆளும் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்தது.இதையடுத்து கர்நாடகாவில் கடந்த இரண்டு வாரங்களாக அரசியல் குழப்பம் ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்றது. பரபரப்பான சூழலில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு […]
