Categories
தேசிய செய்திகள்

“ஒடிசாவில் நிலக்கரி சுரங்கத்தில் நிலச்சரிவு” 4 தொழிலாளி பலி ….!!

ஒடிசாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் உயிரிழந்திருக்க கூடும் என்று  அஞ்சப்படுகிறது. ஒடிசா மாநிலத்தின் பாரத்பூர்  பகுதியில் மகாநதி நிலக்கரி சுரங்கம் உள்ளது. இதில் தினம்தோறும் சுமார்  20,000 டன் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகின்றது. வழக்கம் போல நேற்று நள்ளிரவில் இந்த சுரங்கத்தில் 15 ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டு இருந்தனர். அப்போது தீடிரென சுரங்கத்தின் ஒரு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பணியாற்றிய ஊழியர்கள் நிலச்சரிவில் சிக்கினர். இந்நிலையில் இதுகுறித்து  உயரதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட தகவலையடுத்து ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்களுடன் நிலச்சரிவில் சிக்கிய தொழிலாளிகளை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிரசுடன் கூட்டணி தொடர்பாக குமாரசாமி கருத்து …..!!

கூட்டணி தொடர்பான எந்த விவகாரத்தையும் எங்களுடன் காங்கிரஸ் ஆலோசிக்கவில்லை என்று கர்நாடக காபத்து முதல்வர் குமாரசாமி தெரிவித்தார். கர்நாடக மாநில சட்டசபையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங் – மஜத கூட்டணி அரசு தோல்வி அடைந்த நிலையில் முதல்வர் குமாரசாமி  கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். குமாரசாமியின் ராஜினாமாவை ஏற்பதாக அறிவித்த  கர்நாடக  ஆளுநர் வஜூபாய் வாலா  புதிய அரசு அமையும் வரை குமாரசாமி  காபந்து முதல்வராக தொடர வேண்டும் என்று ஆளுநர் அறிவுறுத்தினார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எனக்கு நாளை என்ன நிகழ்ந்தால் இரங்கல் தீர்மானம் வேண்டாம் …. மைத்ரேயன் MP உருக்கம் …!!

நாளை எனக்கு ஏதேனும் நிகழ்ந்தால் கூட இந்த அவை எனக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டாம் என்று மைத்ரேயன் MP உருக்கமாக பேசியுள்ளார். பாராளுமன்றத்தில் உள்ள  மாநிலங்களவையின் தமிழக MP_க்கள் ரத்தினவேல், கனிமொழி, மைத்ரேயன், டி.ராஜா, கே.பி.அர்ஜுனன். ஆர்.லட்சுமணன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகின்றது. இந்நிலையில் ஓய்வு பெற இருக்கும் நிலையில் இன்றைய மாநிலங்களவையில் மைத்ரேயன் எம்.பி.  உருக்கமாக பேசினார். அப்போது அவர் கூறுகையில் , இந்த நேரத்தில், என் மீது  மிகுந்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“டெல்லி உத்தரவுக்காக காத்திருக்கின்றேன்” எடியூரப்பா பேட்டி …!!

டெல்லியில் இருந்து உத்தரவு வரும் வரை காத்திருக்கின்றேன் என்று கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில சட்டசபையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங் – மஜத கூட்டணி அரசு தோல்வி அடைந்த நிலையில் முதல்வர் குமாரசாமி  கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். குமாரசாமியின் ராஜினாமாவை ஏற்பதாக அறிவித்த  கர்நாடக  ஆளுநர் வஜூபாய் வாலா  புதிய அரசு அமையும் வரை குமாரசா காபந்து முதல்வராக தொடர வேண்டும் என்று ஆளுநர் அறிவுறுத்தினார். இந்நிலையில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜக சட்டமன்ற கட்சி தலைவராக எடியூரப்பா தேர்வு ….!!

கர்நாடக மாநில  பாஜக சட்டமன்ற கட்சி தலைவராக எடியூரப்பாவை தேர்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கர்நாடக சட்டப்பேரவையில் 3 நாட்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெற்று வந்த நிலையில் நேற்று  விவாதம் நடந்து முடிந்து, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இரவு 7.15 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில்  மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கட்சிக்கு  99 வாக்குகள் மட்டுமே பதிவானது. குமாரசாமி அரசுக்கு எதிராக 105 வாக்குகள் பதிவானது. இதனால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது.   இதையடுத்து பாஜக […]

Categories
தேசிய செய்திகள்

“குழந்தைகளுக்கு கழிவறையில் வைத்து சமைத்தால் தவறு இல்லை” இமார்த்தி தேவி சர்ச்சை பேச்சு..!!

மத்திய பிரதேச அமைச்சர் இமார்த்தி தேவி அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறையில் வைத்து சமைத்தால் தவறு இல்லை என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது  மத்திய பிரதேச மாநிலத்தின் சிவபுரி மாவட்டம் கரோராவில் உள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு கழிவறையில் வைத்து உணவு சமைத்துக் கொடுக்கபடுவதாக புகார் எழுந்தது. உணவு சமைப்பது  பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், சமையல் பொருள்கள் சிலிண்டர் மற்றும் ஸ்டவ் போன்றவைகளும் கழிவறையில் வைக்கப்படுவதாகவும் புகார் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறையில் வைத்து சமைத்தால் தவறு இல்லை என்று […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

மோடியை தொடர்ந்து அத்வானியை சந்தித்த வைகோ …..!!

பிரதமர் மோடியை சந்தித்த நிலையில் வைகோ இன்று பாஜகவின் மூத்த தலைவர் அத்வனியை சந்தித்துள்ளார். மக்களவை தேர்தலில் தமிழகத்தின் திமுக கூட்டணியில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்குப் பின் MP ஆகியுள்ள வைகோ நேற்று முன்தினம் நாடாளுமன்றத்திற்கு சென்ற நிலையில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். இதை தொடர்ந்து இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாஜகவின் மூத்த தலைவர்  எல்.கே.அத்வானியை டெல்லியில் சந்தித்தார்.நாடாளுமன்ற புலி என்று […]

Categories
தேசிய செய்திகள்

”மும்பையில் கனமழை”அடுத்தடுத்து 3 கார்கள் விபத்து..!

மும்பையில் கனமழையின் காரணமாக அந்தேரி பகுதியில் அடுத்தடுத்து 3 கார்கள் மோதியதில்   8 பேர் படுகாயமடைந்தனர். மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையில் கடந்த சில வாரங்களாக பருவமழையானது பொழிந்து வருகின்றது. இதனால் தாழ்வான பகுதிளில்  நீர்த்தேக்கம் சூழ்ந்துள்ளது. சாலைகளில் நீரோட்டம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாயின. சியான் ரெயில்வே தண்டவாளம் நீரில் மூழ்கியதால் ரெயில் போக்குவரத்தானது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கனமழையின் காரணமாக இன்று மும்பையின் அந்தேரி  பகுதியில்  தெளிவற்ற வானிலை ஏற்பட்டது. இதனால் அங்குள்ள இடங்கள் பணிமண்டலமாக காட்சியளித்தது. இந்நிலையில் சாலையில் 3 கார்கள்  அடுத்தடுத்து மோதி கொண்டது. இச்சம்பவத்தில் 8 பேர் படுகாயமடைந்தனர். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”நம்பிக்கை வாக்கெடுப்பு புறக்கணிப்பு” கட்சியை விட்டு நீக்கிய மாயாவதி …!!

கர்நாடக மாநில நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்த பகுஜன் சமாஜ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரை அக்கட்சியின் தலைவர் மாயாவதி நீக்கியுள்ளார். கர்நாடக மாநில அரசியலில் கடந்த இரண்டு வாரமாக நடந்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ்ந்ததோடு தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர் ஆதரவாகவும் , 105 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இந்நிலையில் அங்குள்ள பகுஜன் சமாஜ் கட்சி சட்டமன்ற  உறுப்பினர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”குமாரசாமியின் ராஜினாமா ஏற்பு” கர்நாடக ஆளுநர் அறிவிப்பு ….!!

கர்நாடகாவின் குமாரசாமி அரசு கவிழந்த நிலையில் அவரின் ராஜினாமாவை கவர்னர் ஏற்பதாக அறிவித்துள்ளார். கர்நாடகாவில் கடந்த 14 மாதங்களாக நடைபெற்ற காங்கிரஸ் கட்சி மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தின் கூட்டணி ஆட்சி கடந்த 2 வார பரபரப்புக்கு பின் முடிவுக்கு வந்தது. இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி ஆட்சிக்கு  99 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவாகவும் , 106 சட்டமன்ற உறுப்பினர்கள்  ஆட்சிக்கு எதிராகவும் வாக்களித்தனர். இதையடுத்து  நம்பிக்கை வாக்கெடுப்பில் காங் – மஜத கூட்டணி அரசு தோல்வி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ரூ 25 கோடி , 30 கோடி , 50 கோடி எங்கிருந்து வந்தது..? சித்தராமையா கேள்வி …!!

ரூ 25 கோடி , 30 கோடி , 50 கோடி பணம் எங்கிருந்து வந்தது என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார். இன்று கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் குமாரசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. இதில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது. குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும் , எதிராக 105 வாக்குகளும் பதிவாகின. இதனால் 6 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமி அரசு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“கவிழ்ந்தது குமாரசாமி அரசு” ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார் எடியூரப்பா..!!

கர்நாடகாவில் குமாரசாமி அரசின் ஆட்சி கவிழ்ந்ததைடுத்து எடியூரப்பா ஆளுநர் வஜூபாய் லாலாவை சந்தித்து  ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார். கர்நாடக சட்டப்பேரவையில் 3 நாட்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெற்று வந்த நிலையில் இன்று விவாதம் நடந்து முடிந்து, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 7: 15 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில்  மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கட்சிக்கு  99 வாக்குகள் மட்டுமே பதிவானது. குமாரசாமி அரசுக்கு எதிராக 105 வாக்குகள் பதிவானது. இதனால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”ஆதரவாக 99 , எதிராக 105” வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி…..!!

கர்நாடக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம்(எஸ்) கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்றது.இதில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 16 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது MLA பதவியை  ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர். இதில் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கரெட்டி அவரின் ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற்று விட்டார். மற்ற 15 MLA_க்களும் எந்த காரணத்தைக் கொண்டும் ராஜினாமா முடிவிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்று உறுதியாக இருந்தனர். இதையடுத்து கடந்த 18-ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

“6 கோடி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” குமாரசாமி உருக்கம்..!!

கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று பேரவையில் குமாரசாமி உருக்கத்துடன் பேசியுள்ளார்  கர்நாடக மாநிலத்தில் ஆளுகின்ற மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கட்சிகளின் 16 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததையடுத்து, குமாரசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்து. இதையடுத்து சட்ட பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான தீர்மானம் கடந்த வியாழன் கிழமை தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற விவாதத்தில் பேசிய குமாரசாமி, நான் முதல்வராக […]

Categories
தேசிய செய்திகள்

செக்ஸ் வீடியோ வெளியிட்டது ”எனது கட்சியினர் தான்” பாஜக MLA குற்றச்சாட்டு ..!!

தன்னை தொடர்புபடுத்திய ஆபாச வீடியோ வெளியிட்டதுக்கு என்னுடைய கட்சிகாரர்கள் தான் காரணம் என்று பாஜக MLA குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் , பெங்களுர் மகாதேவாபுரா தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அரவிந்த் லிம்பாவனி. ஒரு பெண்ணுடன் சேர்ந்து இருப்பது போன்ற செக்ஸ் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து நேற்று நடைபெற்ற   கர்நாடகா மாநில சட்டசபையில் அரவிந்த் லிம்பாவனி கதறி அழுதார். என்னை தொடர்புபடுத்தி, எனது பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் […]

Categories
தேசிய செய்திகள்

”வேலைவாய்ப்பில் ஆந்திரா மக்களுக்கே முன்னுரிமை” அசத்தும் ஜெகன்மோகன் ரெட்டி…..!!

ஆந்திர மாநிலத்திலே உள்ள தனியார் நிறுவங்களில் 75 சதவீத பணி இடங்களை உள்ளூர்  மக்களுக்கே வழங்க வேண்டுமென்ற மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றியுள்ளனர். கடந்த மே மாதம் நடைபெற்ற ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றிபெற்று ஆட்சி அரியணையில் ஏறியது. அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றார்.முதல்வராக பதவியேற்றது முதல் பல்வேறு வளர்ச்சி மற்றும் அதிரடி திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவே பாராட்டும் முதல்வராக திகழ்கின்றார். இந்நிலையில் ஆந்திர மாநில சட்டசபையில் YSR காங்கிரஸ் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் சட்ட பேரவை 10 நிமிடம் ஒத்திவைப்பு..!!

காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ்  கட்சியைச் சேர்ந்த 15 அதிருப்த்தி எம்எல்ஏக்கள் திடீரென்று தங்களது பதவியை ராஜினாமா செய்தது, ஆளும் குமாரசாமி அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. தொடர்ந்து அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவி வந்த நிலையில், அதற்கு முடிவு கட்டும் விதமாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த தயார் என குமாரசாமி தெரிவித்தார். அதன்படி, […]

Categories
தேசிய செய்திகள்

மும்பை டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் கட்டடத்தில் தீ விபத்து…. 100 பேரை மீட்டு வரும் தீயணைப்பு படையினர்..!!

மும்பையின் பந்த்ரா பகுதியில் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் கட்டடத்தில் தீ விபத்தில் சிக்கியவர்களை தீயணைப்பு படையினர் மீட்டு வருகின்றனர்.   மகாராஷ்ட்டிர மாநிலம் மும்பையின்  பந்த்ரா பகுதியில் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் (MTNL )கட்டடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் யாரும் எதிர்பாராத நிலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ளவர்கள் பதறிப்போயினர். அவர்கள் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து  14 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர். அவர்கள் தீயை அணைத்து வருகின்றனர். கட்டிடத்தின் மேல் உச்சியில் 100க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதால்  அவர்களை […]

Categories
தேசிய செய்திகள்

“சந்திராயன்-2″நாடே பெருமை கொள்கிறது… பிரதமர் நரேந்திர மோடி மனம் நெகிழ ட்விட்…!!

சந்திராயன்-2 ஆராய்ச்சியால் இந்திய  நாடே பெருமை கொள்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சந்திராயன்-2 விண்ணில் செலுத்தப்படுவதை நாடே எதிர்பார்த்து காத்திருந்தது. அதன்படி போனமுறை தொழில்நுட்ப கோளாறுகளால் நிறுத்தி வைக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் ஆனது, கோளாறு சரிசெய்யப்பட்ட பின் விண்ணில் ஏவுவதற்கும் தயாராகியது. இதையடுத்து இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து GSLV மார்க்-3 ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்வதை காண பொதுமக்கள் ஆர்வமுடன் ஸ்ரீஹரிகோட்டா பகுதிகளுக்கு வருகை தந்தனர். இதனை […]

Categories
தேசிய செய்திகள்

இஸ்ரோ மட்டுமல்ல… இந்தியா மட்டுமல்ல… உலகமே காத்திருந்தது…. சிவன் பேட்டி …!!

சந்திராயன் 2 வெற்றிக்காக இஸ்ரோ மட்டுமல்ல , இந்தியா மட்டுமல்ல , உலகமே காத்திருந்தது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சந்திராயன் 2 விண்கலத்தை சுமார் ரூ 978 கோடி ரூபாய் செலவில் வடிவமைத்தது. இன்று மதியம்  2.43 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.பின்னர் 16 நிமிடங்களில் சந்திராயன்-2 விண்கலம் புவி வட்டப் பாதையை சென்றடைந்தது. இதைத் […]

Categories
தேசிய செய்திகள்

“விண்ணில் பாய்ந்த சந்திராயன் 2 ” கைதைட்டி மகிழ்ந்த விஞ்ஞானிகள் …!!

சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் கைதட்டி மகிந்து கொண்டாடினர். நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சந்திராயன் 2 விண்கலத்தை சுமார் ரூ 978 கோடி ரூபாய் செலவில் வடிவமைத்தது. இன்று மதியம்  2.43 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. அப்போது அங்கு கூடி இருந்த விஞ்ஞானிகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர் விண்ணில் ஏவப்பட்ட 16 நிமிடங்களில் சந்திராயன்-2 விண்கலம் புவி […]

Categories
தேசிய செய்திகள்

“8வழி சாலை”மத்திய அரசின் நிலைப்பாடு என்ன..?உச்சநீதிமன்றம் கேள்வி..!!

8  வழி சாலை தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் சேலம் to சென்னை எட்டு வழி சாலை அதிவேக சாலை என சட்டமன்றத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். மேலும் 8 வழி சாலை அமைக்க மனமுவந்து நிலங்களை அளிக்குமாறு அவர் தெரிவித்தார். ஆனால் 8 வழிச்சாலைக்கு  தொடர் எதிர்ப்புகளை தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அடுத்தடுத்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“நம்பிக்கை வாக்கெடுப்பு” 2 நாள் கால அவகாசம் கேட்டு முதல்வர் குமாராசாமி கோரிக்கை..!!

நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த புதன்கிழமை வரை கால அவகாசம் வழங்குமாறு சபாநாயகரை நேரில் சந்தித்து குமாரசாமி  கோரிக்கை வைத்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ்  கட்சியைச் சேர்ந்த 15 அதிருப்த்தி எம்எல்ஏக்கள் திடீரென்று தங்களது பதவியை ராஜினாமா செய்தது, ஆளும் குமாரசாமி அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. தொடர்ந்து அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவி வந்த நிலையில், அதற்கு முடிவு கட்டும் விதமாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த தயார் என குமாரசாமி தெரிவித்தார். அதன்படி, ஜூன் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“நம்பிக்கை வாக்கெடுப்பு” அவசரமா விசாரிக்க முடியாது, நாளை பார்க்கலாம்… மனுவை மறுத்த உச்சநீதிமன்றம்..!!

நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்தக்கோரி கர்நாடகா சுயேட்சை எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கர்நாடகாவில் அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேர் திடீரென ராஜினாமா செய்தது ஆளும் குமாரசாமி அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்படுத்தியது. தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் குழப்பத்திற்கு முடிவு கட்டும் வகையில் ஜூலை 18ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த தயாராக இருப்பதாக குமாரசாமி தெரிவித்தார். ஆனால் ஜூலை 18 அன்று நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான விவாதங்கள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“குதிரை பேரம்”கர்நாடகா,கோவாவை தொடர்ந்து மே.வங்கத்திலும் பாஜக சீட்டிங்… மம்தா பேனர்ஜி குற்றசாட்டு…!!

கர்நாடகாவை போல் மேற்கு வங்கத்திலும் குதிரை பேரம் பேசி எம்.எல்.ஏக்களை  பாஜகவில் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.  மேற்கு வங்கத்தில் தியாகிகள் தினத்தை முன்னிட்டு கொல்கத்தாவில் நடைபெற்ற பொது கூட்டத்தில் பேசிய அவர், கர்நாடகாவில் நடப்பதை போல் மேற்கு வங்கத்திலும் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார். சாரதா சீட்டு நிறுவனம் முறைகேட்டை தொடர்புபடுத்தி சிறையில் தள்ளிவிடுவதாக தங்களது கட்சி  பிரதிநிதிகளை மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் பாஜக மிரட்டுவதாக மம்தா பானர்ஜி புகார் கூறினார். […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக, ஆர்.எஸ்.எஸ் சேர்ந்து “இந்துத்துவா நாடாக மாற்ற முயற்சி” பொதுச் செயலாளர் து.ராஜா குற்றச்சாட்டு..!!

பாஜக, ஆர்.எஸ்.எஸ் சேர்ந்து “இந்துத்துவா நாடாக மாற்ற முயற்சி செய்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் து. ராஜா தெரிவித்துள்ளார்.   இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளராக இருக்கும் சுதாகர் ரெட்டி, உடல்நிலை காரணமாக தனது பதவியிலிருந்து விலக முடிவு செய்து, தனக்கு பதிலாக து. ராஜாவின் பெயரை பொதுச் செயலாளராக பரிந்துரை செய்தார். இதையடுத்து டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கூட்டத்தில் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதில் கேரளாவைச் சேர்ந்த பினோய் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய கம்யூனிஸ்ட் பொது செயலாளராக து.ராஜா அதிகாரபூர்வமாக தேர்வு..!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளராக து.ராஜா அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டார்  தற்போது இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளராக இருக்கும் சுதாகர் ரெட்டி, உடல்நிலை காரணமாக தனது பதவியிலிருந்து விலக முடிவு எடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அவர் தனக்கு பதிலாக து. ராஜாவின் பெயரை பொதுச் செயலாளராக பரிந்துரை செய்துள்ளார். இந்நிலையில் டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கூட்டத்தில் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதில் கேரளாவைச் சேர்ந்த பினோய் விஷ்வம், அக்கட்சியின் மூத்த தலைவர் […]

Categories
தேசிய செய்திகள்

“அசாம் மாநிலத்தில் கனமழை” 141 வன விலங்குகள் உயிரிழப்பு..!!

அசாம் மாநிலத்தில் பெய்து வரும் தீவிர கனமழையால் காசிரங்கா தேசிய வனவிலங்கு பூங்காவில் இதுவரை 141 வன விலங்குகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.  அசாம் மாநிலத்தில்  தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த தீவிர மழையால் பல மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அம்மாநிலத்தில் இருக்கும் காசிரங்கா வனவிலங்கு பூங்காவில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் வன விலங்குகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளன. மேலும் வெள்ளத்தில் சிக்கி இதுவரையில் 141 வனவிலங்குகள் உயிரிழந்துள்ளது. காசிரங்கா பகுதியில் காணப்படும் அரியவகை காண்டாமிருகம் பெரிதும் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்முவில் பெண் காவற்படையினருக்கு நவீன பாதுகாப்பு உடை… CRPF தலைமை இயக்குனர்…!!!

ஸ்ரீ  நகரில்  அடிக்கடி நடைபெறும் கல்வீச்சை  எதிர்கொள்ள CRPF பெண் காவல் அதிகாரிகளுக்கு அதிநவீன பாதுகாப்பு உடை  வழங்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பாதுகாப்புப் பணியில் மத்திய ரிசர்வ் காவற்படையைச் சேர்ந்த 300 பெண் காவல் அதிகாரிகள்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஸ்ரீநகரில் அடிக்கடி நடைபெறும் கல் வீச்சு மற்றும் தாக்குதலை தடுக்கும் போது பெண் காவற்படையினர் காயம் அடைகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.   இதை அடுத்து கல்வீச்சு காயத்திலிருந்து தடுக்க பெண் காவற்படையினருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“TIKTOK புகார்” சட்டதிட்டங்களுக்கு உட்படுவோம்…. மத்திய அரசிற்கு பதில் கடிதம்..!!

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு தொடர்பான  கேள்விகளுக்கு TIKTOK செயலி நிர்வாகம் உடனடி பதிலை அனுப்பி உள்ளது. இந்தியாவில் மிக வேகமாக பிரபலமான செயலிகளில் ஒன்றாக TIKTOK இருக்கிறது. இந்தியாவில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் TIKTOK செயலி தடை செய்யப்பட்டு பின் கடும் நிபந்தனைகளுடன் தடை நீக்கப்பட்டது. இதன்பின் TIKTOK பயனாளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகமாகி உள்ளது. இந்நிலையில் TIKTOK குறித்த புகார்களை அடுத்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள்

ராணுவத்தில் தோனி… கிரிக்கெட்டில் தோனி விளையாடுவாரா? மாட்டாரா? குழப்பத்தில் ரசிகர்கள்..!!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் தோனி பங்கேற்க மாட்டார் என்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா-நியூசிலாந்து ஆணிகளுக்கிடையிலான போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியை தழுவியது. இந்திய அணியின் தோல்வியை விட தோனியின் ரன் அவுட் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிகழ்விற்கு பின் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் பரவி வந்தது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் செய்தி குறிப்பில் கூறியதாவது,  இந்திய-மேற்கிந்திய […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் “அன்பு மகள் ஷீலா தீட்சித்” உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்த ராகுல்..!!

3 முறை முதல்வராக தன்னலமின்றி  ஷீலா தீட்சித் பணியாற்றியுள்ளார் என்று  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்  1998-ஆம் ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லியின் காங்கிரஸ் ஆட்சியில்  முதலமைச்சராக பதவி வகித்தவர் 81- வயதான ஷீலா தீட்சித் ஆவார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினரான இவர் காங்கிரஸ் கட்சிக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். டிசம்பர் 2013-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஷீலா தீட்சித்  ஆம் ஆத்மி […]

Categories
தேசிய செய்திகள்

”கட்சி தாண்டி மதிக்கதக்கவர் ஷீலா தீட்சித்” ராஜ்நாத் சிங் இரங்கல் ….!!

டெல்லி முன்னாள் முதல்வர்  ஷீலா தீட்சித் மரணத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். 1998-ஆம் ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லியின் காங்கிரஸ் ஆட்சியில்  முதலமைச்சராக பதவி வகித்தவர் ஷீலா தீட்சித் ஆவார். இவர் காங்கிரஸ் கட்சியின் டெல்லி மாநில கமிட்டியின் தலைவராகவும் இருந்துள்ளார். மேலும் 2014_ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை கேரள மாநிலத்தின் ஆளுநராக பொறுப்பு வகித்தார். 81 வயதான இவர் இன்று காலை தீடிரென ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு , சிகிச்சை  பலனின்றி […]

Categories
தேசிய செய்திகள்

”முன்னாள் முதல்வர்  ஷீலா தீட்சித் மரணம்” மோடி இரங்கல் …!!

டெல்லி முன்னாள் முதல்வர்  ஷீலா தீட்சித் மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 1998-ஆம் ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லியின் காங்கிரஸ் ஆட்சியில்  முதலமைச்சராக பதவி வகித்தவர் ஷீலா தீட்சித் ஆவார். 81 வயதான இவர் காங்கிரஸ் கட்சியின் டெல்லி மாநில கமிட்டியின் தலைவராக இருந்தார்.  இன்று உடல்நலக்குறைவால் ஷீலா தீட்சித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் ஷீலா தீட்சித் மறைவுக்கு பிரதமர் மோடி தனது ட்வீட்_டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் […]

Categories
தேசிய செய்திகள்

” டெல்லி முன்னாள் முதல்வர் மரணம் ” கட்சியினர் அதிர்ச்சி …!!

டெல்லியில் மூன்று முறை முதலமைச்சராக பதவி வகித்த , காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஷீலா தீட்சித் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1998-ஆம் ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லியின் காங்கிரஸ் ஆட்சியில்  முதலமைச்சராக பதவி வகித்தவர் ஷீலா தீட்சித் ஆவார். 81 வயதான இவர் 2014_ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை கேரள மாநிலத்தின் ஆளுநராக பொறுப்பு வகித்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த இவர் காங்கிரஸ் கட்சியின் டெல்லி மாநில கமிட்டியின் தலைவராக இருந்தார். சமீபத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

“நடிகர் மோகன்லால் வீட்டில் யானை தந்தங்கள்” நீதிமன்றத்தில் விளக்கம் அளித்த வனத்துறை..!!

நடிகர் மோகன் லால் வீட்டில் யானை தந்தங்களை வைத்து கொள்ள கேரள அரசு சட்ட படியே உரிமம் வழங்கியிருப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது.  கொச்சியில் உள்ள நடிகர் மோகன் லால் வீட்டில் கடந்த 2012-ம் ஆண்டில் வருமானவரித்  துறையினர் சோதனையிட்டனர். அப்போது அவரது வீட்டில் 4 யானைத்தந்தங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மோகன்லால் மீது சட்ட விரோதமாக யானைத்தந்தங்கள் வைத்ததாக கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது. கேரள உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், மோகன் […]

Categories
தேசிய செய்திகள்

” பல்வேறு மாநில ஆளுநர்கள் மாற்றம் ” ஜனாதிபதி அதிரடி ….!!

பல்வேறு மாநில ஆளுநரை மாற்றி இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அதிரடி உத்தரவு பிறப்பித்த்துள்ளார். இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மாநில ஆளுநர்களை மாற்றி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் மத்திய பிரதேச மாநிலத்தின் ஆளுநராக இருந்து வந்த ஆனந்திபென் படேல் உத்தரபிரதேச மாநில ஆளுநராகவும், பீகார் மாநில ஆளுநராக இருந்த லால் ஜி தாண்டன் மத்திய பிரதேச மாநில ஆளுநராகவும் மாற்றம்ப்பட்டுள்ளனர். மேலும் மேற்கு வங்காள மாநில ஆளுநராக ஜகதீப் தாங்கரும் , பீகார் மாநில ஆளுநராக பிரகு சவுகானும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளராக து.ராஜா தேர்வு..!!

அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளராக து.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளராக இருக்கும் சுதாகர் ரெட்டி, உடல்நிலை காரணமாக தனது பதவியிலிருந்து விலக முடிவு எடுத்துள்ளார். இதையடுத்து அவர் தனக்கு பதிலாக து. ராஜாவின் பெயரை பொதுச் செயலாளராக பரிந்துரை செய்துள்ளார். இந்நிலையில் டெல்லியில் நேற்று நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கூட்டத்தில் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பது பற்றி பேசப்பட்டது. இதில் கேரளாவைச் சேர்ந்த பினோய் விஷ்வம், அக்கட்சியின் மூத்த […]

Categories
தேசிய செய்திகள்

“விமானம் கடத்தப்பட்டது” அதிகாரிகளை பதற வைத்த விமானி..!!

விமானம் கடத்தப்பட்டது விட்டது என்று தவறாக தகவல் அனுப்பியதால் கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் அதிர்ந்து போயினர்.  டெல்லியில் இருந்து காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு கடந்த 8-ம் தேதி ஏர் ஏசியா விமானம் புறப்பட்டு சென்றது. அப்போது வழியில் என்ஜினில் சிறிய பழுது ஏற்பட்ட நிலையில் தகவலை  தரை கட்டுப்பாட்டு மையத்துக்கு தெரிவிக்க முயன்றார். விமானி  தகவல் அனுப்ப 7700 என்ற சமிஞ்சை கோடை அழுத்தாமல் தவறுதலாக 7500 என்ற கோடினை அழுத்தினார். இந்த கோடானது விமானம் கடத்தப்பட்டு விட்டது என்பதை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடி அரசு “சூட்கேஸ்” தூக்கும் அரசு அல்ல…. நிர்மலா சீதாராமன் பேட்டி..!!

சூட் கேஸ் தூக்கும் அரசியலை மோடி அரசு செய்வதில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி மீண்டும் பதவியேற்றதை அடுத்து ஜூன் மாதம் 17ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது. பின் ஜூலை 5ஆம் தேதி இவ்வாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் ஜூலை 18ஆம் தேதி  மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும் 26 ஆம் தேதி வரை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அதிருப்தி MLA_க்கள் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மனுதாக்கல் …..!!

அதிருப்தி MLA_க்கள் வர வேண்டுமென்று கட்டாயப்படத்தக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் தினேஷ் குண்டுராவ் வழக்கு தொடுத்துள்ளார். கர்நாடக மாநில அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் கர்நாடக  சட்டசபையில் ஆளும் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில்  பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று அம்மாநில கவர்னர் வஜூபாய் வாலா முதல்வர் குமாரசாமிக்கு 2 முறை கெடு விதித்தும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கவில்லை. மேலும் அனைத்து அதிருப்தி உறுப்பினர்களும் பங்கேற்காமல் வாக்கெடுப்ப்பு நடத்த முடியாது என்று கூறி கர்நாடக சட்டப்பேரவையை திங்கட்கிழமை காலை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கவர்னர் உத்தரவை எதிர்த்து முதல்வர் குமாரசாமி மேல்முறையீடு …..!!

கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கெடு விதித்த அம்மாநில ஆளுநர் உத்தரவை எதிர்த்து முதலவர் குமாரசாமி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். கர்நாடக மாநில அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் கர்நாடக  சட்டசபையில் ஆளும் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில்  பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று அம்மாநில கவர்னர் வஜூபாய் வாலா முதல்வர் குமாரசாமிக்கு 2 முறை கெடு விதித்தும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கவில்லை. இதனால் வருகின்ற 22-ஆம் தேதி ( திங்கட்கிழமை ) நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் தொடரும் என்று அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி […]

Categories
தேசிய செய்திகள்

”அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்” ரிக்டர் அளவு கோளில் 5.5_ஆக பதிவு ….!!

அருணாச்சல பிரதேச ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 5.5_ஆக பதிவாகியுள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள கிழக்கு காமங் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. இன்று அதிகாலை 4.24 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தல் கட்டிடங்கள் , வீடுகள் ஆதித்ததாக உணரப்படுகின்றது. மக்கள் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்த வேளையில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தால் மக்கள் பீதியில் உறைந்தனர். இது ரிக்டர் அளவு கோளில் 5.5_ஆக பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”இரவு 12 மணி ஆனாலும் விவாதத்தை முடியுங்கள் ” எடியூரப்பா கோரிக்கை …!!

இரவு 12 மணி ஆனாலும் இன்றே விவாதத்தை முடித்து விடுங்கள் என்று கர்நாடக மாநில எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார். கர்நாடக மாநில அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் கர்நாடக  சட்டசபையில் ஆளும் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில்  பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று அம்மாநில கவர்னர் வஜூபாய் வாலா முதல்வர் குமாரசாமிக்கு 2 முறை கெடு விதித்தும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கவில்லை. இதனால் வருகின்ற 22-ஆம் தேதி ( திங்கட்கிழமை ) நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் தொடரும் என்று அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”கர்நாடக சட்டசபை ஒத்திவைப்பு” சபாநாயகர் அதிரடி உத்தரவு ….!!

கர்நாடக மாநில சட்டப்பேரவை வருகின்ற திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்து சபாநாயகர்  ரமேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். கர்நாடக மாநில அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் கர்நாடக  சட்டசபையில் ஆளும் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில்  பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று அம்மாநில கவர்னர் வஜூபாய் வாலா முதல்வர் குமாரசாமிக்கு 2 முறை கெடு விதித்தும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கவில்லை. இதனால் வருகின்ற 22-ஆம் தேதி ( திங்கட்கிழமை ) நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் தொடரும் என்று அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் கொடூரம் ”கால்நடை திருடர்கள்” சந்தேகத்தின் பெயரில் அடித்துக் கொலை…..!!

கால்நடைகளை திருட முயன்றதாக சந்தேகத்தின் பெயரில் மூன்று பேரை அடித்துக் கொன்ற சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின்  சரண் மாவட்டத்தில் உள்ள பைகம்பர்பூர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை காலை வீடுகளில் உள்ள கால்நடைகளை திருட முயன்றதாக கூறப்படுகின்றது. இதையடுத்து சந்தேகம் அடைந்த ஊர் மக்கள் அந்த மூன்று பேரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். ஊர் மக்களில் கொடூரமான தாக்குதலில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த  சம்பவ இடத்துக்கு வந்த பனியாபூர் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“நம்பிக்கை வாக்கெடுப்பு”சபாநாயகர் தான் என்னை காப்பாற்ற வேண்டும்…. பேரவையில் குமாரசாமி வேண்டுகோள்…!!

கர்நாடக சட்ட பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து சபாநாயகர் சரியான முடிவெடுத்து தன்னை காப்பாற்ற வேண்டும் என்று முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேர்  ராஜினாமா செய்ததை அடுத்து சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பாஜகவினரால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தது. ஆனால் ஆளுகின்ற அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதில் காலம் தாழ்த்தி வருகிறது. ஆகையால் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு சபாநாயகரை உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்துமாறு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஆளுநர் எனக்கு உத்தரவிட முடியாது” கர்நாடக சபாநாயகர் அதிரடி ….!!

ஆளுநர் எனக்கு உத்தரவிட முடியாது என்று கர்நாடக மாநில சபாநாயகர்  கே.ஆர்.ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளை சேர்ந்த 16 MLA_க்கள்  தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.  அதே போல ஆளும் அரசுக்கு ஆதரவளித்து வந்த சுயேச்சை MLA_க்களான  நாகேஷ், சங்கர் ஆகியோரும் தங்களின் ஆதரவை திரும்ப பெற்றுக் கொண்டதால் ஆளும் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்தது.இதையடுத்து கர்நாடகாவில் கடந்த இரண்டு வாரங்களாக அரசியல் குழப்பம் ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்றது. பரபரப்பான சூழலில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.  இதில் பங்கேற்க எதிர்க்கட்சியான பாஜகவை சேர்ந்த 105 MLA_க்களும் சட்டசபைக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

வெளிநாடு சென்ற போது பல விஷயங்கள் நடந்துள்ளது…. முதல்வர் குமாரசாமி …!!

நான் வெளிநாடு சென்றிருந்த சமயம் பார்த்து இங்கு பல விஷயங்கள் அரங்கேற்றப்பட்டு விட்டன என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி பேரவையில் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில அரசியலில் தற்போது உச்சக் கட்ட குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று மதியம் 1.30 மணிக்குள் குமாரசாமி அரசு தன்னுடைய ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் வஜூபாய் வாலா கெடு விதித்துள்ளார். இந்நிலையில் இரண்டாவது நாளாக நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான விவாதம் கர்நாடக மாநில சட்டசபையில் நடைபெற்று வருகின்றது. இதில் பேசிய மாநில முதல்வர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“கவர்னர் மூலம் நெருக்கடி கொடுக்கும் பாஜக” கர்நாடக அமைச்சர் குற்றசாட்டு …!!

கவர்னர் மூலமாக அரசுக்கு பா.ஜனதாவினர் நெருக்கடி கொடுக்கின்றனர் என்று அமைச்சர்  டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகாவில் நிலவும் அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் அரசின் பெரும்பான்மையை இன்று மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பில் நீருபித்துக் காட்ட வேண்டுமென்று கர்நாடக ஆளுநர் வஜூபாய் கெடு விதித்துள்ளார். இது குறித்து கர்நாடக மாநில அமைச்சர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில் , முதலவர்  குமாரசாமி மதியம் 1.30 மணிக்குள் அரசின் பெரும்பான்மையை நிரூபித்து காட்ட வேண்டுமென்று கவர்னர் வஜூபாய் உத்தரவிட்டுள்ளார்.  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் […]

Categories

Tech |