Categories
தேசிய செய்திகள்

”விமானப்படை தயாராக இருக்கிறது” விமானப்படை தளபதி தனோவா பேச்சு…!!

இந்திய எல்லையி்ல் விமானப்படை தயாராக உள்ளது என்று விமானப்படை தளபதி தனோவா தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படையின் சுதேசமயமாக்கல் திட்டங்கள் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் மற்றும் இந்திய விமானப்படை  தலைவர் மார்ஷல் பி.எஸ்.தனோவா இணைந்து பாதுகாப்பு உபகரணங்களின் சுதேசமயமாக்கல் முயற்சி குறித்த புத்தகத்தை வெளியிட்டனர். இதில் அரசு அதிகாரிகள் , பல்வேறு துறையை சார்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்திய விமானப்படை  தலைவர் மார்ஷல் பி.எஸ்.தனோவா கூறும் போது , இந்திய எல்லை பகுதிகளில் எதிரி […]

Categories
தேசிய செய்திகள்

கைதாகும் ப.சிதம்பரம் ”’முன்ஜாமீன் மறுப்பு” பதறும் காங்கிரஸ்…!!

 ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வெளிநாட்டிலிருந்து ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்தினார். இந்த வழக்கின் முழுமையான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்து விசாரிக்க வேண்டும் சிபிஐ தயாராக […]

Categories
தேசிய செய்திகள்

என்ன கொடுமை சார் இது…”கழன்று சென்ற என்ஜின்” 10 KM_இல் நிறுத்தம்…!!

ஆந்திராவில் 25 பெட்டிகளை கழற்றிய நிலையில் இரயில் என்ஜின் மட்டும் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரில் இருந்து ஆந்திர மாநிலம் செகந்திராபாத்துக்கு விசாகா எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று வருகின்றது.நேற்று மாலை இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம்  மாவட்டத்தின் நார்சிபட்டினம் பகுதி வந்த போது  எதிர்பாராத வகையில் ரெயிலின் என்ஜின் பெட்டிகளை விட்டு தனியாக பிரிந்தது. என்ஜின் இழுத்துச் சென்ற 25 பெட்டிகளும் எந்த அசைவும் இல்லாமல் நடுவழியிலே தனியாக நின்றது. பின்னர் இரயிலில் இருந்த இரயில்வே துறை […]

Categories
தேசிய செய்திகள்

“வரலாறு காணாத வேலையின்மை” மத்திய அரசின் கொள்கைகளே காரணம்.. தொழிற்சங்கங்கள் குற்றசாட்டு..!!

மத்திய அரசின் தவறான கொள்கை காரணமாக பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்பதாக  தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  இந்தியாவில் பொருளாதார மந்த நிலையால் மோட்டார் வாகன தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மகேந்திரா, ashok leyland, மாருதி சுசுகி, போன்ற பெரிய நிறுவனங்கள் மாதத்திற்கு 8 முதல் 10 நாட்கள் வரை தொழிற்சாலையை  இயக்க வேண்டாமென முடிவெடுத்திருப்பதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றனர். வாங்குவதற்கான கேட்பு குறைந்து விட்டதே இதற்கு காரணம் என்றும், மத்திய மாநில அரசுகள் உடனடியாக […]

Categories
தேசிய செய்திகள்

”விமானப்படையை வலிமையாக்கி உள்ளோம்” ராஜ்நாத் சிங் பெருமிதம்….!!

இந்திய விமானப்படை வலிமையாக உள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதப் பட்டுள்ளார். இந்திய விமானப்படையின் சுதேசமயமாக்கல் திட்டங்கள் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் மற்றும் இந்திய விமானப்படை  தலைவர் மார்ஷல் பி.எஸ்.தனோவா இணைந்து பாதுகாப்பு உபகரணங்களின் சுதேசமயமாக்கல் முயற்சி குறித்த புத்தகத்தை வெளியிட்டனர். இதில் அரசு அதிகாரிகள் , பல்வேறு துறையை சார்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் இதில் பேசிய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  கூறுகையில் , இந்திய விமானப்படை தொழில்நுட்ப […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

வீடுகளை காலி செய்யுங்கள்… MPகளுக்கு நோட்டீஸ்..!!

முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் சுமார் 200 பேர் இன்னும் அரசு பங்களாவை காலி செய்யாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரலில் நடைபெற்ற மக்களவை தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் 16-ஆவது மக்களவையை கலைத்து மே மாதம் 25_ஆம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மக்களவைக்கு புதிய MP-க்கள் தேர்வாகி பொறுப்பேற்றனர். புதிய மக்களவை தேர்வாகி கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆகியும் முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் அரசு பங்களாவை காலி செய்யாமல் இருப்பது அதிர்ச்சியை […]

Categories
தேசிய செய்திகள்

சமூக வலைதளத்தால் குற்றம் : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி..!!

ஒரு குற்ற வழக்கிற்காக சமூக வலைதளத்தை குற்றஞ்சாட்ட முடியுமா?  என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வாட்ஸ் அப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று பல்வேறு வழக்குகள் தமிழ்நாடு , மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள நீதிமன்றத்தில்  நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கு அனைத்தையும் ஒரே வழக்காக எடுத்து உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞ்சர்கள் , சமூக வலைதளங்கள் அதிக நபர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“சந்திராயன்-2″தாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு சென்றுள்ளது… இஸ்ரோ தலைவர் கருத்து..!!

சந்திராயன்-2 விண்கலம்  தாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு சென்றுள்ளதாக  இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சந்திராயன் 2 விண்கலத்தை சுமார் ரூ 978 கோடி ரூபாய் செலவில் வடிவமைத்தது. ஜூலை 22 ஆம் தேதி மதியம்  2.43 மணி அளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இதையடுத்து புவி வட்டப்பாதையில் சுற்றி வந்த  சந்திராயன்-2 அவ்வவ்போது […]

Categories
தேசிய செய்திகள்

“EARTH TO MOON ” ட்ராக் மாறிய சந்திராயன்-2… மென்மேலும் சாதனை..!!

சந்திராயன்-2 விண்கலமானாது நிலவின் வட்டப்பாதையை சுற்ற தொடங்கி விண்வெளி ஆராய்ச்சியில் முக்கியமான கட்டத்தை எட்டி இருக்கிறது. நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சந்திராயன் 2 விண்கலத்தை சுமார் ரூ 978 கோடி ரூபாய் செலவில் வடிவமைத்தது. ஜூலை 22 ஆம் தேதி மதியம்  2.43 மணி அளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.   இதையடுத்து புவி வட்டப்பாதையில் சுற்றி […]

Categories
தேசிய செய்திகள்

“ராஜீவ் காந்தி பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி” பிரதமர் மோடி.!!

“நமது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின்  பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75 -ஆவது பிறந்த நாள்  இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இவரது பிறந்த தினத்தை முன்னிட்டு  காங்கிரஸ் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியின்  வீர் பூமியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா,  […]

Categories
தேசிய செய்திகள்

ராஜிவ் காந்தி 75 -ஆவது பிறந்த நாள்…. ராகுல், சோனியா, பிரியங்கா உள்ளிட்டோர் அஞ்சலி..!!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ராகுல், சோனியா, பிரியங்கா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75 -ஆவது பிறந்த நாள்  இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பிறந்த தினத்தை முன்னிட்டு  காங்கிரஸ் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியின்  வீர் பூமியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தியின்  நினைவிடத்தில் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

காஷ்மீர் விவகாரம் : ஏன் என்று கேட்டால் பதிலில்லை…. ப.சிதம்பரம் ட்வீட் ..!!

மெகபூபா முப்தியின் மகள் வீட்டுக்காவலில் உள்ளார்.ஏன் என்று கேட்டால் பதிலில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்ட பிறகு இந்திய ராணுவம் பாதுகாப்பு தொடர்ந்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. குறிப்பாக 144 தடை உத்தரவு , தொலைத்தொடர்பு சேவை இரத்து என பல்வேறு கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்க்கப்படு வருகின்றது. 2 வாரங்களுக்கு பின் இன்று அங்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

“பாராளுமன்றத்தின் சொத்து மன்மோகன் சிங்” பஞ்சாப் முதல்வர் புகழாரம்..!!

மன்மோகன் சிங், பல ஆண்டு அனுபவம் மற்றும் ஆழமான அறிவினால் பாராளுமன்றத்தின் ஒரு சொத்தாக இருப்பார் என்று முதல்வர் அமரிந்தர் சிங் பாராட்டியுள்ளார்.  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் (வயது 86)  கடந்த 18 ஆண்டுகளாக அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி. யாக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் ஜூன் மாதம் இவரது பதவிக் காலம் முடிவடைந்து விட்டது. பா.ஜ.க எம்.பி மதன்லால் சைனியின் மறைவுக்கு பிறகு ராஜஸ்தானில் காலியான மாநிலங்களவை […]

Categories
தேசிய செய்திகள்

மன்மோகன் சிங்கின் “பரந்த அறிவு ராஜஸ்தான் மக்களுக்கு பயனளிக்கும்” அசோக் கெலாட் வாழ்த்து..!!

காங்கிரஸ் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பரந்த அறிவு  ராஜஸ்தான் மாநில மக்களுக்கு பயனளிக்கும் என்று அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.  முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (வயது 86)  கடந்த 18 ஆண்டுகளாக அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி. யாக பதவி வகித்து வந்த நிலையில் ஜூன் மாதம் இவரது பதவிக் காலம் முடிவடைந்து விட்டது. பா.ஜ.க எம்.பி மதன்லால் சைனியின் மறைவுக்கு பிறகு ராஜஸ்தானில் காலியான மாநிலங்களவை […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தை நம்பும் கேரளா ”மீண்டும் தமிழ் ட்வீட்” அசத்திய பினராய் விஜயன் ….!!

கேரளாவுக்கு உதவுங்கள் என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் மீண்டும் தமிழில் ட்வீட் செய்துள்ளார். தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கேரளாவில் கனமழை பெய்துவருகிறது. ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , மலப்புரம் , கோழிக்கோடு , கண்ணூர் , இடுக்கி , எர்ணாகுளம் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது.அதேபோல ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை கனமழை பெய்தது. […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலங்களவை எம்.பியானார் மன்மோகன் சிங்..!!

காங்கிரஸ் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலங்களவை எம்.பி ஆக தேர்வு செய்யப்பட்டார்.  முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (வயது 86)  கடந்த 18 ஆண்டுகளாக அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி. யாக பதவி வகித்து வந்த நிலையில் ஜூன் மாதம் இவரது பதவிக் காலம் முடிவடைந்து விட்டது. பா.ஜ.க எம்.பி மதன்லால் சைனியின் மறைவுக்கு பிறகு ராஜஸ்தானில் காலியான மாநிலங்களவை எம்பி பதவிக்கு கடந்த ஆகஸ்ட் 13-ம் […]

Categories
தேசிய செய்திகள்

1968-காணாமல் போன விமானம் “51 ஆண்டுக்கு பிறகு” கண்டுபிடிப்பு..!!

1968- காணாமல் போன இந்திய விமானப்படை விமானத்தின் பாகங்கள் தற்போது 51 வருடங்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என் – 12 பி. எல் – 534 என்ற விமானம் கடந்த 1968-ம் ஆண்டு பிப்ரவரி 7 -ஆம் தேதி சண்டிகரில் இருந்து லே பகுதிக்கு பறந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 98 வீரர்களும் 6 பணியாளர்களும் பயணம் செய்தனர். விமானம் தரையிறங்க உள்ள நிலையில் மோசமான வானிலை காரணமாக புறப்பட்ட இடத்துக்கே விமானத்தை திருப்புமாறு விமானிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கேரள வெள்ளத்தில் இதுவரையில் 121 பேர் உயிரிழப்பு..!!

கேரளா வெள்ளத்தில் இதுவரையில் 121 பேர் உயிரிழந்ததாக அம்மாநில தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , மலப்புரம் , கோழிக்கோடு , கண்ணூர் , இடுக்கி , எர்ணாகுளம் ஆகிய 9 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது. அதேபோல ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை கனமழை பெய்தது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்முவில் அடுத்து என்ன…?அமித்ஷா -அஜித் தோவல் ஆலோசனை…!!

உள்துறை அமைச்சர் அமித்ஷா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்_லுடன் ஆலோசனை நடத்துகின்றார். காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்ட பிறகு இந்திய ராணுவம் பாதுகாப்பு தொடர்ந்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. குறிப்பாக 144 தடை உத்தரவு , தொலைத்தொடர்பு சேவை இரத்து என பல்வேறு கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்க்கப்படு வருகின்றது. 2 வாரங்களுக்கு பின் இன்று அங்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பெரும்பாலும் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர்.இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

கலக்கத்தில் காங்கிரஸ் ”ப.சிதம்பரத்திற்கு சம்மன்” அமலாக்கத்துறை அதிரடி…!!

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்றபோதுஏர் இந்தியா நிறுவனத்திற்கு , இந்தியன் ஏர்லைன்ஸ்   நிறுவனத்திற்கு ஏர்பஸ் விமானங்கள் வாங்கப்பட்டன. இந்த விமானங்களை வாங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரித்து வருகின்றனர். இதையடுத்து இந்த முறைகேட்டில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கின்றது. யாரெல்லாம் இதில் முக்கிய பங்கற்றியுள்ளார்கள் என்று ஆராய்ந்து , இடைத்தரகர் உட்பட அனைவரையும்  சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

காஷ்மீர் விவகாரம் : ”டெல்லிக்கே சென்று போராட்டம்” திமுக அறிவிப்பு..!!

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து இரத்து செய்து கடந்த 6_ஆம் தேதி மத்திய அரசு அதற்கான மசோதாவை நிறைவேற்றியது. மேலும் ஜம்மு-காஷ்மீர் மற்றும்  லடாக் என்ற யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் வரும் 22ஆம்  டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் அனைத்து கட்சி எம்பிக்களும் பங்கேற்கும் ஆர்ப்பாட்டத்தை திமுக நடத்துகின்றது. இதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் […]

Categories
தேசிய செய்திகள்

ஆட்டம் போட்ட வன்முறை…. ”அடக்கியது அரசாங்கம்”….4,000 பேர் கைது …!!

ஜம்முவில் வன்முறையில் ஈடுபட்ட 4000 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு சட்டப்பிரிவை இரத்து செய்த மத்திய அரசு ஜம்முவை இரண்டு யூனியன் பிரதேஷமாக பிரித்தது.இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளும் முன்பாக அதிக இராணு படை வீரர்களை குவித்து , பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து விட்டு , 144 தடை உத்தரவை பிறப்பித்ததோடு முக்கிய தலைவர்கள் மற்றும் முன்னாள் முதல்வர்களை வீட்டுக் காவலில் வைத்து விட்டு இந்த நடவடிக்கையை மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

அருண் ஜெட்லி ”இதயம் , நுரையீரல் இயங்கவில்லை” எய்ம்ஸ் வளாகம் பரபரப்பு…!!

அருண் ஜெட்லியின் இதயம் மற்றும் நுரையீரல் சரிவர இயங்கவில்லை என்று தகவல் வெளியாகியதை அடுத்து டெல்லி எய்ம்ஸ் வளாகம் பரபரப்பாக காணப்படுகின்றது. முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு அவர் அரசிலிருந்து விலகி இருந்தார். மேலும் அவரின் உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்ததையடுத்து கடந்த 9ம் தேதி அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரின் உடல் நிலையானது மிகுந்த கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கர்நாடகாவில் நாளை அமைச்சரவை பதவி ஏற்பு…..!!

கர்நாடகாவில் நாளை அமைச்சர்கள் பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபித்ததில் தோல்வியை தழுவியதை அடுத்து முதல்வராக எடியூரப்பா கடந்த மாதம் 26ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.ஆனால் கர்நாடக அமைச்சரவை இதுவரை பதவி ஏற்கவில்லை.இந்நிலையில் நாளை மறுநாள் புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக டெல்லி சென்றுள்ள கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா கட்சித் தலைவர் அமித் ஷாவுடன் அமைச்சரவை பட்டியல் குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

திறந்துடுச்சு….. ”ஜம்முவில் 190 பள்ளிகள் திறப்பு”….. இயல்பு நிலையில் ஸ்ரீநகர் …!!

ஜம்முவில் இயல்பு நிலை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பிக் கொண்டு இருக்கும் நிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு சட்டப்பிரிவை இரத்து செய்த மத்திய அரசு ஜம்முவை இரண்டு யூனியன் பிரதேஷமாக பிரித்தது.இதையடுத்து ஜம்முவில் இணைய சேவை துண்டிப்பு முன்னாள் முதல்வர்கள் வீட்டு சிறையில் அடைப்பு என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ஏதேனும் வன்முறை சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக் கொண்டது. இதோடு இல்லாமல் ஆகஸ்ட் 15-தை ஜம்மு மற்றும் லடாக் பகுதியில் முதல் சுதந்திர தினமாக சிறப்பாக […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் போகல….. ”200 MP_க்கள் இராஜ வாழ்க்கை”…. அரசு பணம் ஸ்வாகா …!!

முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் சுமார் 200 பேர் இன்னும் அரசு பங்களாவை காலி செய்யாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரலில் நடைபெற்ற மக்களவை தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் 16-ஆவது மக்களவையை கலைத்து மே மாதம் 25_ஆம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மக்களவைக்கு புதிய MP-க்கள் தேர்வாகி பொறுப்பேற்றனர். புதிய மக்களவை தேர்வாகி கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆகியும் முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் அரசு பங்களாவை காலி செய்யாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புதிதாக மக்களவைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

”வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு” தேர்தல் ஆணையம் கடிதம்…!!

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்களை இணைப்பது குறித்து மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் மத்திய அரசின் சட்ட அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் இந்தியாவில் ஒருவர்  ஒன்றுக்கும் மேற்பட்ட , பல இடங்களில் வாக்காளர்களாக இருந்து வருகின்றார்.இதனால் சில குளறுபிடிகள் நடைபெறுகின்றது.எனவே வாக்காளர்களை முறையாக சீர்படுத்துவர்க்கு வாக்காளரின் ஆதார் எண்கள் அவசியமாகின்றது. எனவே புதிய மற்றும் பழைய வாக்காளர்களின் ஆதார் எண்களை பெறுவதற்கு அனுமதி வேண்டும். இதற்க்கு அரசு மக்கள் பிரதிநிதித்துவ […]

Categories
தேசிய செய்திகள்

யாருமே இல்ல……”4,12,000 வீடுகளை வாங்குவதற்கு”…ஆய்வில் அதிர்ச்சி…!!

நாடு முழுவதும் 4.12 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு விற்பனையாகாமல் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் 9 பெருநகரங்களில் கட்டிமுடிக்கப்பட்டு 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் விற்காமல் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.பிராப் டைகர் என்ற கட்டுமான இணையதளம் நடத்திய ஆய்வில் 45 லட்ச ரூபாய்க்கு உட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கணக்கில் கொள்ளப்பட்டன. மொத்தம் 4 லட்சத்து 12 ஆயிரம் வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு விற்காமல் உள்ளதாகவும் , மும்பையில் அதிகபட்சமாக 1 லட்சத்து 40 ஆயிரம் […]

Categories
தேசிய செய்திகள்

புதைந்து போன மக்கள்…”தோண்டி எடுக்கும் ரேடார்”… தீரா வலியில் கேரளா….!!

கேரளாவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை ரேடார் உதவியுடன் தேடும் பணி நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கேரளாவில் கனமழை பெய்துவருகிறது. சென்ற ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , மலப்புரம் , கோழிக்கோடு , கண்ணூர் , இடுக்கி , எர்ணாகுளம் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

 ”அருண் ஜெட்லி கவலைக்கிடம்” எக்மோ கருவி பொருத்தம் …!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அருண் ஜெட்லிக்கு   எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு அவர் அரசிலிருந்து விலகி அருண் ஜெட்லியின்  உடல் நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்ததை தொடர்ந்து  கடந்த 9ம் தேதி அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரின் உடல் நிலையானது மிகுந்த கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றது. தொடர்ச்சியாக அருண் ஜெட்லிக்கு தீவிரமாக உயிர் காக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ”எய்ம்ஸ் வருகின்றார் மோடி”அருண் ஜெட்லிக்கு என்ன ஆச்சு..?

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அருண் ஜெட்லியை நலம் விசாரிக்க பிரதமர் மோடி வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு அவர் அரசிலிருந்து விலகி அருண் ஜெட்லியின்  உடல் நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்ததை தொடர்ந்து  கடந்த 9ம் தேதி அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரின் உடல் நிலையானது மிகுந்த கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றது. தொடர்ச்சியாக அருண் ஜெட்லிக்கு தீவிரமாக […]

Categories
தேசிய செய்திகள்

நான் ஒரு தொழிலதிபர்…. 20 பெண்களை ஏமாற்றிய நபர் கைது.!!

உத்தரபிரதேசத்தில் தான் ஒரு தொழிலதிபர் என கூறி 20 பெண்களிடம் பண  மோசடி செய்து வந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.  உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கௌரவ் தமிஜா (வயது 46) வாகனத்தின் உதிரி பாகங்களை விற்பனை செய்து வருகின்றார். ஆனால் இவர் தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்டுள்ளார். அதாவது இணையதளத்தில் உள்ள திருமண தகவல் பக்கங்களில் இணைந்த இவர் தான் ஒரு தொழிலதிபர் என பதிவேற்றம் செய்து பெண்களை ஏமாற்றி இவரது வலையில் வீழ்த்தி நெருக்கமாக பழகி வந்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

பேச்சுவாத்தைக்கு வாங்க ”இத பத்தி பேச கூடாது” அசிங்க படும் பாகிஸ்தான்….!!

இனி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு குறித்து மட்டும் தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்தை இரத்து செய்ய  370 வது சட்டப்பிரிவை நீக்கிய மசோதாவை மத்திய அரசு மக்களவையில் ஒப்புதல் பெற்றது. இதை தொடர்ந்து காஷ்மீர்  2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரித்து , இந்தியாவுடனான தூதரக மற்றும் வர்த்தக உறவை முறித்துக் கொண்டது.மேலும் இந்த பிரச்சனையை சர்வதேச பிரச்சனையாக மாற்ற பாகிஸ்தான் முயன்று […]

Categories
தேசிய செய்திகள்

”பூடான் பயணம் நிறைவு” இந்தியா வந்த பிரதமர்…..!!

இரண்டு நாட்கள் அரசு பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடி இந்தியா திரும்பினார். பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் அரசு பயணமாக பூடான் சென்றார். அங்கு இரு நட்டு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பூடான் தலைவர்களுடன் பேசிய பிரதமர் மோடி ,இந்தியா-பூடான் நாடுகளுக்கிடையே 50 ஆண்டு நீர் மின்சக்தி ஒத்துழைப்பு நினைவுவாக தபால்தலை வெளியீடு நிகழ்ச்சி, அங்குள்ள தலைவர்களுடன்  உயர்மட்ட கூட்டங்கள்,  அந்நாட்டு பிரதமருடன்  பேச்சுவார்த்தை நடத்தி இந்தியாவுடன் 10 ஒப்பந்தங்கள் என அசத்தினார் பிரதமர் மோடி. பின்னர் அங்குள்ள ராயல் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் பங்கேற்று […]

Categories
தேசிய செய்திகள்

தனிமைபடுத்துவோம் ”பயங்கரவாதிகளுக்கு ஆப்பு” ஜம்மு DGP அதிரடி ….!!

ஜம்முவில் பயங்கரவாதிகளை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்த போலீஸ்க்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக ஜம்மு டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டதை அடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டன. அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர். பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடுமுறை விடப்பட்டன.இந்நிலையில் காஷ்மீரில் 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள  அரசு அலுவலகங்கள் பள்ளி கல்லூரிகள் தொடங்கியுள்ளதால் இயல்பு நிலை […]

Categories
தேசிய செய்திகள்

மோடி கருத்தை ஆதரிக்க வேண்டிய “ஏதோ ஓர் நிர்பந்தம் ப.சிதம்பரத்திற்கு இருக்கிறது”… முத்தரசன் பரபரப்பு கருத்து..!!

“மோடி கருத்தை ஆதரிக்க வேண்டிய ஏதோ ஓர் நிர்பந்தம் ப.சிதம்பரத்திற்கு இருப்பதாக  கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.  ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றிய பின் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் மூன்று கருத்துக்களை அறிவித்தார். இந்நிலையில் பிரதமர் வெளியிட்ட மூன்று அறிவிப்புகளை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். அதில்,  சிறிய குடும்பம் ஒரு தேசபக்தி கடமை, […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் இயல்பு நிலை தொடங்கியது….!!

காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் தொலைத் தொடர்பு சேவைகள் மீண்டும் செயல்படத் தொடங்கின. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டதை அடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டன. அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர். பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடுமுறை விடப்பட்டன.இந்நிலையில் காஷ்மீரில் 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள  அரசு அலுவலகங்கள் பள்ளி கல்லூரிகள் தொடங்கியுள்ளதால் இயல்பு நிலை திரும்பி […]

Categories
தேசிய செய்திகள்

”மழையால் வந்த முதலைகள்” வழியனுப்பி வைத்த வனத்துறை…!!

கர்நாடக மாநிலம் பெல்காமில் கிணற்றுக்குள் விழுந்த முதலையை வனத்துறையினர் பத்திரமாக உயிருடன் மீட்டனர். கர்நாடக மாநிலத்தில் கடந்த கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறு கரைபுரண்டு ஓடுகின்றன. நீர்நிலைகளில் நிறைந்து வருகின்றன.வெள்ளத்தில் முதலைகளும் அடித்து வரப்பட்டது.இந்நிலையில் பெல்காமில் உள்ள நாகூரில் இருந்த ஒரு கிணற்றில் முதலை ஒன்று இருந்தது. இதனால் அச்சம் அடைந்த அந்த பகுதி மக்கள் இது குறித்த தகவலை வனத்துறை மற்றும் தீயணைப்பு படையினருக்கு தெரிவித்தனர். உடனடியாக விரைந்து வந்த அவர்கள் முதலையை கயிறு […]

Categories
தேசிய செய்திகள்

செப்டம்பர் மாதம் நிலவில் தரையிறங்கும் சந்திரயான்-2…!!!

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி நிலவில் தரையிறங்க உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக 1000 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ நிறுவனம் கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி விண்ணில் செலுத்தியது. புவி சுற்றுவட்டப்பாதையில் 23 நாட்களாக சுற்றி வந்த விண்கலம் கடந்த புதன்கிழமை அப்பாதையில் இருந்து விலகி  நிலவை நோக்கி தன் பயணத்தை தொடங்கியது. […]

Categories
தேசிய செய்திகள்

”அருண் ஜெட்லி_க்கு எக்மோ சிகிச்சை” உடல் நிலை மேலும் பின்னடைவு….!!

அருண் ஜெட்லி உடல்நிலை மேலும் கவலைக்கிடமாகி  எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ஆகஸ்ட் 9_ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் , பெரு நிறுவன விவகார துறை அமைச்சராகவும் இருந்தவர் அருண் ஜெட்லி. கடந்த தேர்தலில் கூட உடல்நலகுறைவு காரணமாக தனக்கு ஓய்வு வேண்டுமென்று தேர்தலில் போட்டியிடாமல் இருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பாஜக_வின் முக்கிய தலைவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்து […]

Categories
தேசிய செய்திகள்

முதல் நாள் விருது “அடுத்த நாள் லஞ்சம்” சிக்கிய காவலர்..!!

தெலுங்கானாவில் முதல் நாள் விருது வாங்கி, 2-ஆவது நாள் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் பல்லே திருப்பதி ரெட்டி. இவர் காவல் துறையில் சிறப்பாக அர்ப்பணிப்புடன் கடுமையாக பணி செய்தற்காக கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று  இவரது பணியைப் பாராட்டி சிறந்த காவலர் விருதை தெலுங்கானா அரசு வழங்கி கவுரவித்தது. இந்நிலையில் விருது வாங்கிய  அடுத்த நாளே ரமேஷ் என்பவரிடம் காவலர் ரெட்டி ரூ […]

Categories
தேசிய செய்திகள்

”டெல்லி எய்ம்ஸ்ஸில் தீ விபத்து” மும்மரமாக கட்டுப்படுத்தும் வீரர்கள் …!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் பல்வேறு சிறப்புப் பிரிவுகள் உள்ளன. இதில் அமைச்சர்கள் , அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் இந்த உயர் சிறப்பு  பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் மருத்துவமனையில் முதன்மை கட்டிடத்தின் முதல் தளம் , இரண்டாம் தளம் ஆகியவற்றில் தீடிரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் எழுந்த புகை மூட்டத்தால் அந்த பகுதியே புகை மண்டலமாக […]

Categories
தேசிய செய்திகள்

தங்கைகளுடன் பைக்கில் சென்ற அண்ணன்… ‘மாஞ்சா கயிறு’ அறுத்து உயிரிழந்த சோகம்..!!

டெல்லியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி பைக்கில் சென்ற போது மாஞ்சா கயிறு கழுத்தில் பட்டு அறுத்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.  டெல்லியை சேர்ந்த 28 வயதான மாணவ் ஷர்மா (பொறியியல் பட்டதாரி) தனது தங்கைகளுடன் ரக்ஷாபந்தன் பண்டிகை கொண்டாட டெல்லியில் உள்ள ரோகினி பகுதிக்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது வழியில் அவர்கள் மீது பட்டத்தின் மாஞ்சா கயிறு உரசியதால்  வாகனத்தை ஓட்டிய மாணவ் ஷர்மா கழுத்து அறுபட்டு உயிரிழந்தார் என்று இருந்த காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு- காஷ்மீரில் அத்துமீறி தாக்குதல்… இந்திய வீரர் ஒருவர் வீர மரணம்..!!

ஜம்மு- காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கி  சண்டையில் இந்திய வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.   ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதிலிருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையே எல்லையில்  போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தின்  ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷரா செக்டாரில் இன்று காலை 6: 30 மணியளவில்   பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய தரப்பிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் […]

Categories
தேசிய செய்திகள்

”அருண் ஜெட்லி கவலைக்கிடம்” மிகுந்த சோகத்தில் பாஜகவினர்…!!

அருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 9_ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் , பெரு நிறுவன விவகார துறை அமைச்சராகவும் இருந்தவர் அருண் ஜெட்லி. கடந்த தேர்தலில் கூட உடல்நலகுறைவு காரணமாக தனக்கு ஓய்வு வேண்டுமென்று தேர்தலில் போட்டியிடாமல் தவிரத்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பாஜக_வின் முக்கிய தலைவர்கள் நேரில் சென்று நலம் […]

Categories
தேசிய செய்திகள்

”ஜம்முவில் மீண்டும் இணைய சேவை” தளர்க்கப்படும் கட்டுப்பாடுகள்…!!

ஜம்மு உள்ளிட்ட பகுதிகளில்  இணையதளசேவை மீண்டும்  கொடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீருக்கு வாழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு இரத்து செய்து அதன் மசோதாவை மாநிலங்களவை மற்றும் மக்களவையில் நிறைவேற்றியது. இதையடுத்து காஷ்மீர் மாநிலம் இரண்டு  யூனியன் பிரதேசங்களாக  மாறியது. இதனால் அங்கு நடக்கும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த மசோதா நிறைவேற்றுவதற்கு முன்னதாக விடுமுறை அளிக்கப்பட்ட்து. 144 தடை உத்தரவு […]

Categories
தேசிய செய்திகள்

இராணுவம்… விமானப்படை…. பாதுகாப்பு படை….. உஷார் நிலை….!!

காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற குழுக்கள் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு பெரிய அளவு வன்முறை ஏதும் நடக்காத சூழ்நிலையில் தீவிரவாதிகளை அதிகளவில் ஊடுருவ வைத்து அவர்கள் மூலமாக வன்முறையை கட்டவிழ்த்து விட வேண்டும் என்பது பாகிஸ்தானின் முயற்சியாக இருக்கிறது என்று இந்திய ராணுவம் அரசுக்கு எச்சரிக்கை அனுப்பி இருந்தது. இந்த இந்த நிலையில் பல்வேறு பகுதிகள் தீவிரவாதிகள் அத்துமீறல் நடந்து வருகிறது. இந்திய ராணுவமும் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே குடும்பம்… “4 பேரை சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை…!!

கர்நாடகாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  கர்நாடக மாநிலத்தின் மைசூர் அருகே உள்ள தட்டாஹள்ளியை சேர்ந்த ஓம்பிரகாஷ் (வயது 36) என்பவர் நிறுவனம் ஒன்றை  நடத்தி வந்துள்ளார். இவரது தந்தை நாகராஜ் பட்டாச்சார்யா (65) ஜாதகம் பார்த்து வருகிறார். அம்மா ஹேமலதா, மனைவி நிகிதா (28),  மகன் ஆர்ய கிருஷ்ணா (4) ஆகியோர் குடும்பத்தினராவர். கடந்த சில மாதங்களாகவே  ஓம்பிரகாஷ் தொழிலில்  நஷ்டம் ஏற்பட்டு மிகவும் மன வேதனையுடன் இருந்து வந்து இருந்துள்ளார்.. இந்நிலையில் ஓம் பிரகாஷ் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்முவில் 19-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரி திறப்பு ….!!

ஜம்முவில் வருகின்ற 19-ஆம் தேதி பள்ளி கல்லூரிகள் திறக்கபட்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5_ஆம் தேதி நடைபெற்ற பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்த மசோதாவை தாக்கல் செய்தார். பின்னர் இது மக்களவையிலும் , மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஜம்மு மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேஷமாக பிரிக்கப்பட்டது. மத்திய அரசு இந்த விவகாரத்தை மிகவும் துணிச்சலுடன் எடுத்தது. ஆகஸ்ட் 5_ஆம் தேதிக்கு 1 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நீதிமன்றங்கள் எல்லை மீறுகின்றன… சட்ட அமைச்சர் அதிருப்தி..!!

உயர் நீதிமன்றங்கள் பொது நல  மனுக்களை பயன்படுத்தி அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விமர்சித்துள்ளார். டெல்லியில் ரஞ்சன் கோகோய் உள்ளிட்டோர்  அடங்கிய மேடையில் பேசிய அவர் நீதித்துறையை ஒழுங்குபடுத்த உள் சீர்திருத்தங்கள் அவசியம் என்று வலியுறுத்தினார். நீதிபதிகளின் தீர்ப்பு பொறுப்பு மிகுந்தவையாக இருப்பது அவசியம் என்று அவர் தெரிவித்த அவர், இது உயர் நீதிமன்றங்களுக்கு மட்டுமின்றி உச்ச நீதிமன்றத்திற்கும் பொருந்தும் என்றும்  ரவிசங்கர் பிரசாத் கூறினார். சில நீதிபதிகள் சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை […]

Categories

Tech |