Categories
தேசிய செய்திகள்

டெல்லி ஏர்போர்ட்டில்…. “நடிகர் சூர்யா போல வேடமிட்ட இளைஞர்”…. நியூயார்க் செல்ல முயன்று சிக்கினார்..!!

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வயதான வேடமிட்டு நியூயார்க் செல்ல முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்வது வழக்கம். அதன்படி  கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அம்ரிக்சிங்  என்ற நபர் வீல்சேரில் அங்கு வந்தார். வெள்ளை தாடி, தலையில் தலைப்பாகை மற்றும் கண்ணாடி உடன் காட்சி அளித்துள்ளார். தனக்கு 81 வயது என்றும் விமான நிலைய அதிகாரிகளிடம்  நடக்க முடியாது என்று கூறி விமான நிலையத்துக்குள் […]

Categories
தேசிய செய்திகள்

அப்பூருவர் இந்திராணி முகர்ஜியிடம் விசாரணை தொடக்கம்…. கதிகலங்கும் சிதம்பரம் குடும்பத்தினர்…!!

INX மீடியா வழக்கில் அப்பூருவர் ஆன இந்திராணி முகர்ஜியிடம் மும்பை சிறையில் வைத்து விசாரணை நடைபெற இருக்கிறது. 2007 ஆம் ஆண்டு இந்திராணி பீட்டர் முகர்ஜி தம்பதிக்கு சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் 350 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடுகளை ஈட்டியது. இதற்கு மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இருந்த அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் விதிகளை மீறி முறைகேடாக அனுமதி வழங்கியதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் வலியுறுத்தலின் பெயரில் […]

Categories
தேசிய செய்திகள்

சுரங்ககளுக்கான ஒப்பந்தத்தில் முறைகேடு…. மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றசாட்டு..!!

இரும்புத்தாது மற்றும் பிற கனிம வளங்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்களுக்கான  மறு ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெறுவதாக மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இரும்பு  தாது உள்ளிட்ட  கனிம வளங்களை வெட்டி  எடுக்கும் 358 சுரங்கங்கள் ஒப்பந்தங்களை 50 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்து இருப்பதாக காங்கிரஸ் செய்தி  தொடர்பாளர் பவன் தெரிவித்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு அவசர சட்டம் என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட திருத்தம் மூலம் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாமல்  ஏலமும் நடத்தப்படாமல் சுரங்கங்களில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

3,325 சீக்கியர்கள் படுகொலை… விசாரணைக்கு அனுமதி… காங்கிரஸை வச்சு செய்யும் பிஜேபி…!!

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்கில் மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத் மீது மீண்டும் விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  காங்கிரஸ் கட்சியின்  முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து 1954 ஆம் ஆண்டு டெல்லி மற்றும் பஞ்சாப்பில் காங்கிரஸ் அபிமானிகள் நடத்திய  கலவரத்தில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அப்போது கமல்நாத் நிகழ்வு இடத்தில் இருந்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. அத்துடன் குற்றவாளிகள்  5 பேருக்கு தனது வீட்டில் அடைக்கலம் அளித்தார் என்ற மற்றொரு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

1 ஆண்டாக கல்லூரிக்குள் வைத்து பலாத்காரம்…. சிக்கிய பாஜக பிரபலம்…. ஆதாரங்களை வெளியிட தயார்… மாணவி பகிர் பேட்டி…!!

உத்திரப்பிரதேசத்தில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்தா மீது பாலியல் புகார் கூறியுள்ள சட்டக்கல்லூரி மாணவி அதற்கான ஆதாரத்தை ஒப்படைக்கத் தயார் என்று தெரிவித்துள்ளார். உத்திரபிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக பரபரப்பை ஏற்படுத்தி வரும் சட்ட கல்லூரி  மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக நேற்று டெல்லியில் பாதிக்கப்பட்ட மாணவி பத்திரிகையாளர்களை சந்தித்து உள்ளார். ஓராண்டாக சுவாமி சின்மயானந்தா கல்லூரிக்குள் வைத்து மாணவியை பலாத்காரம் செய்து வந்தார் என்று கூறிய மாணவி, அவர் பலாத்காரம் செய்ததற்கான ஆதாரங்கள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடியின் 100 நாள் சாதனை…. பட்டியலிட்டு விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்…!!

பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு நடுவே மத்திய அரசின் 100 நாள் ஆட்சி நிறைவுக் கொண்டாட்டங்கள் அவசியமா என்று எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து நூறு நாட்கள் நிறைவடைந்துள்ளது. இதற்கான  கொண்டாட்டங்கள் களைகட்டி வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மொத்த உள்நாட்டு உற்பத்தி 5% சரிந்து விட்ட நிலையில் கொண்டாட்டங்கள் அவசியமா என்று காங்கிரஸ் கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பொருளாதார மந்த […]

Categories
தேசிய செய்திகள்

 விக்ரம் லேண்டர் தொடர்பை மேற்கொள்ள முடியவில்லை- இஸ்ரோ தகவல்…!!

நிலவில் இருக்கும் விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதனுடனான தகவல் தொடர்பை மேற்கொள்ள முடியவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவில் இருக்கும் விக்ரம் லேண்டர் தகவல் தொடர்பை மேற்கொள்ள முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பை மேற்கொள்ள முடியவில்லை. விக்ரம் லேண்டர் நிலவில் இருக்கும் என கண்டுபிடிக்கப்பட்டாலும் அதனுடைய தகவல் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை. தகவல் தொடர்பை மேற்கொள்ள முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று இஸ்ரோ தனது ட்வீட்_டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.   #VikramLander has been located by the […]

Categories
தேசிய செய்திகள்

பயங்கரவாதிகள் ஊடுருவல்….. தக்க பதிலடி கொடுத்த இராணுவம்….!!

ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சியை தாக்குதல் நடத்தி இந்திய இராணுவம் முறியடித்துள்ளது. காஷ்மீர் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரில் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட பாகிஸ்தான் தீவிரவாத இயக்கம் தொடர்ந்து முயற்சித்து வருகின்றது. இந்திய இராணுவம் மற்றும் உளவு துறையும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அந்நாட்டு ராணுவத்தால் துப்பாக்கி சுடுதல், வெடிகுண்டுகள் வேட்டையாடுதல் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டு இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஊடுருவ முயற்சி […]

Categories
தேசிய செய்திகள்

“டியர் விக்ரம்”… ப்ளீஸ் பதிலளியுங்கள்… வேடிக்கையாக பதிவிட்ட நாக்பூர் காவல்துறை.!!

  நீங்கள் சிக்னலை மீறியதற்காக நாங்கள் அபராதம்  விதிக்கமாட்டோம்’ என்று நாக்பூர் காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வேடிக்கையாக பதிவிட்டுள்ளது.  கடந்த சனிக்கிழமை அதிகாலை சந்திரயான் 2 திட்டப்படி விக்ரம் லேண்டர் நிலவை நோக்கி தரையிறங்கியது.  லேண்டர் நிலவில் தரையிறங்க 2.1 கிமீ தூரத்தில் இருக்கும்போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு லேண்டரில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை. இதனால்  இஸ்ரோ மையமே நிசப்தமானது. அதை தொடர்ந்து விக்ரம் லேண்டர் சிக்னலை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை அடுத்த 14 நாட்களுக்கு மேற்கொள்ளப்போவதாகவும், அதில் வெற்றி கிடைத்தால் நிலவிலிருந்து பல […]

Categories
தேசிய செய்திகள்

மொத அங்க போங்க…. அப்பறம் இங்க வாங்க…. மத்திய பாதுகாப்பு பணிக்கு செக்…!!

பாதுகாப்பு படைக்கு பணியில் சேர விரும்புவோர் கட்டாயம் 2 ஆண்டுகள் தேசிய பேரிடர் மீட்பு படையினரோடு பணி செய்திருக்க வேண்டுமென்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மழை , வெள்ளம், நிலச்சரிவு ஆகிய பணிகளை மேற்கொண்டு வரும் தேசிய பேரிடர் மீட்புப்படையினரின் மீட்புப்பணி அளப்பரியது. தமிழ்நாட்டில்  சென்னை பெரு வெள்ளம் கேரளா , வில் பெருவெள்ளம் , ஒரிசா உள்ளிட்ட பகுதிகளில் புயல் போன்ற சமயங்களில் இத்தகைய வீரர்களின் தங்களது பணியை செய்தமைக்காக உலகம் முழுமைக்கும் மக்களின் பாராட்டை […]

Categories
தேசிய செய்திகள்

படகுகளில் தீவிரவாதிகள்….. ஊடுருவி தென்னிந்தியாவில் தாக்குதல்…. எஸ்.கே ஷைனி எச்சரிக்கை ..!!

தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக ராணுவ கமாண்டர் எஸ்.கே ஷைனி எச்சரிக்கை விடுத்துள்ளார். காஷ்மீர் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரில் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட பாகிஸ்தான் தீவிரவாத இயக்கம் தொடர்ந்து முயற்சித்து வருகின்றது. அந்த வகையில் தான் கடல் மூலமாக தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சி செய்து தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக ஊடுருவி தாக்குதல் நடத்த முயற்சிக்கலாம்  என்று இந்திய உளவுத்துறை […]

Categories
தேசிய செய்திகள்

முத்தம் கொடுக்க முயன்ற நண்பர்…. மறுப்பு தெரிவித்த பள்ளி மாணவி… பின் அரங்கேறிய சம்பவம்..!!

மத்திய பிரதேசத்தில் முத்தம் கொடுக்க மறுத்ததால் பள்ளி மாணவியை கீழே தள்ளி கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர்.  மத்திய பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் பகுதியைச் சேர்ந்த பிங்கி என்ற பள்ளி மாணவி (18 வயது) 12-ஆம் வகுப்பு படித்து வருகின்றார்.இந்நிலையில் இவர் கடந்த வியாழக்கிழமை அன்று தனது ஆண் நண்பருடன் பிஜாபுரி  கிராமத்தில் இருக்கும்  வனப்பகுதிக்குள் சென்றுள்ளார். வனப்பகுதியில் சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என சொல்லப்படுகிறது. இதையடுத்து பதறிப்போன அவரது குடும்பத்தினர்  […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

யார் பெஸ்ட் ? Jio Fiber ஆ…. Airtel ஆ…. BSNL ஆ….. ப்ராட்பேண்ட் திட்டத்தின் ஒப்பீடு..!!

Jio Fiber vs Airtel vs BSNL ஆகிய ப்ராட்பேண்ட் திட்டங்களின் ஓர் ஒப்பீடு அனைத்து பயனாளர்களையும் கவர்ந்துள்ளது. தொலைத்தொடர்பு துறையில் வேகமாக வளர்ந்து வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிவேக ப்ராட்பேண்ட் சேவையான ஜியோ பைபர் சேவையை ரூ 699_க்கு இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதனுடன் பல சலுகைகளுடன் சேர்த்து இணைய சேவையை வழங்குகின்றது. ஜியோ பைபர் 1Gbps வரையிலான அதிவேக இணைய சேவையை வழங்குகிறது. Jio Fiber திட்டம் :  ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பைபர் சேவையை ஆறு […]

Categories
தேசிய செய்திகள்

பேன்ஸி நம்பருக்கு ஆப்பு…. லட்சக்கணக்கில் செலவு…. விழிபிதுங்கும் வாகன உரிமையாளர்கள்…!!

வாகனத்திற்கு கவர்ச்சிகரமான பேன்ஸி நம்பர் வாங்கவேண்டுமென்றால் 1 லட்சம் வரை செலவாகுமென்று திருத்தப்பட்ட வாகனசட்டத்தின் மூலம் தெரிகின்றது. புதிதாக திருத்தப்பட்ட வாகன மோட்டார் சட்டத்தின் படி வாகனங்களுக்கு வழங்கும் பேன்ஸி வாகன பதிவு எண்களுக்கான விலைகளை உத்தர பிரதேச மாநில அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி வாகனங்கள் முக்கியமான, கவர்ச்சிகரமான எண்களை பெற வேண்டுமென்றால் ரூ.15,000 முதல் ரூ.1 லட்சம் வரை செலவாகும் என்று தெரிகிறது. இதற்கு முன்பு வாகனத்திற்கு வாங்கும் பேன்ஸி நம்பர் பிளேட்டுகளுக்கு ரூ.3000 முதல் 20,000 வரை மட்டுமே செலவாகியது. வாகன பதிவு எண் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

100 நாட்கள் ஆகிட்டு… வளர்ச்சி இல்லை… அடக்குமுறை…. சூறையாடல்….ராகுல் ட்வீட்…!!

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகியும் எந்த வளர்ச்சியும் ஏற்பட்டவில்லை என்று ராகுல் காந்தி ட்வீட் செய் துள்ளார். நடந்து முடிந்த மக்களை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து 2_வது  முறையாக பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வருகின்றது. புதிதாக தேர்வாகிய மோடி அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில் அதை பாகவினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். ஆனால் ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்கள் ஆகியும் மோடி அரசு […]

Categories
தேசிய செய்திகள்

சிக்னல் கிடைக்காத “விக்ரம் லேண்டர் இருப்பிடம் கண்டுபிடிப்பு”…. இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்..!!

நிலவுக்கு அருகே தொலைத்தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரின் இருப்பிடம்  கண்டறியப்பட்டது என இஸ்ரோ தலைவர் சிவன் இன்று தெரிவித்தார். பூமியிலிருந்து கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட்டது. திட்டமிட்டபடி பூமியின் வட்டப்பாதையிலிருந்து சந்திரயான் 2 விண்கலம், ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி நிலவின் பாதைக்கு திருப்பி விடப்பட்டது. அதைத் தொடர்ந்து சந்திராயன்- 2 விண்கலத்தின் வேகம் நிலவின் வட்டப்பாதையில் இருந்து படிப்படியாக குறைக்கப்பட்டது. அதன்பின் ஆகஸ்ட் 2-ம் தேதி ஆர்பிட்டரிலிருந்து விக்ரம் லேண்டர் பிரிக்கப்பட்டது.   நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

தெலங்கானா ஆளுநராக பதவியேற்றார் தமிழிசை.!!

தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக பதவியேற்றார்  தமிழகத்தின்  பாஜக தலைவராக இருந்து வந்த தமிழிசை சௌந்தரராஜனை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்  தெலங்கானா ஆளுநராக  நியமனம் செய்தார். இதையடுத்து  தமிழிசை சௌந்தரராஜன் வருகின்ற செப்.08 ம்  தேதி ஆளுநராக பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11 மணியளவில் ஹைதராபாத் ராஜ்பவனில்  உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநராக பொறுப்பேற்றார்.  இவருக்கு அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரகுவேந்திரா எஸ். சவுகான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்ற தமிழிசைக்கு தெலங்கானா […]

Categories
தேசிய செய்திகள்

”ஊடுருவும் 200 பயங்கரவாதிகள்” அஜித் தோவால் எச்சரிக்கை…..!!

200க்கும் அதிகமான பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சி செய்கின்றனர் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ-வை நீக்கி மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து காஷ்மீரில் அசாம்பாவித சம்பவம் எதுவும் நடக்காமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படை வீரர்கள் ஜம்மு முழுவதும்  குவிக்கப்பட்டுள்ளனர்.அங்கு பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு , செல்போன், இணையதள சேவை இரத்து செய்து அரசியல் கட்சி  […]

Categories
தேசிய செய்திகள்

“தேசம் ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞரை இழந்துவிட்டது” குடியரசு தலைவர் இரங்கல்..!!

 ஸ்ரீ ராம் ஜெத்மலானி காலமானது வருத்தமளிக்கிறது என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.   ராம்ஜெத்மலானி (95 வயது) பாகிஸ்தானில் சிந்து பகுதியில் பிறந்து சொந்த ஊரில் வழக்கறிஞராக பணியாற்றியவர். இவர் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் மும்பைக்கு வந்து வழக்கறிஞர் பணி புரிந்து வந்தார். 1996 -ஆம் ஆண்டு வாஜ்பாய் அமைச்சரவையில் சட்ட மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக பணியாற்றினார். இவர் இந்திரா காந்தி , ராஜீவ் காந்தி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக வாதாடியுள்ளார். மேலும் இவர் 2 ஜி , […]

Categories
தேசிய செய்திகள்

ராம்ஜெத்மலானி உடலுக்கு அமித்ஷா , வெங்கையா நேரில் அஞ்சலி….!!

மறைந்த மூத்த வழக்கறிஞ்சர் ராம்ஜெத்மலானி உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர், துணை குடியரசுத் தலைவர் அஞ்சலி செலுத்தினர். மூத்த வழக்கறிஞரும் , முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்ஜெத்மலானி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் உடல்நலக் குறைவால் காலமானார். 95வயதான இவர் 1996 வாஜ்பாய் அமைச்சரவையில் சட்ட மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக பணியாற்றினார். மறைந்த ராம் ஜெத்மலானி உடலுக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு , மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நேரில் அஞ்சலி அஞ்சலி செலுத்தினர்.

Categories
தேசிய செய்திகள்

“தமிழ் மகளாக பதவியை ஏற்கப்போகிறேன்” தமிழிசை பேட்டி.!!

தமிழ் மகளாக தெலங்கானா ஆளுநர் பதவியை ஏற்கப் போகிறேன் என்று தமிழிசை சௌந்தரராஜன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.    தமிழக பாஜக தலைவராக இருந்து வந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக  நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து  தமிழிசை சௌந்தரராஜன் வருகின்ற செப்.08 ம்  தேதி ஆளுநராக பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11 மணிக்கு ஹைதராபாத் ராஜ்பவனில்  உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநராக பொறுப்பேற்பதற்காக  தமிழிசை வந்துள்ளார். அவரை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். இவருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி காலமானார்…..!!

மூத்த வழக்கறிஞரும் , முன்னாள் அமைச்சருமான ராம்ஜெத்மலானி காலமானார். மூத்த வழக்கறிஞரும் , முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்ஜெத்மலானி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் உடல்நலக் குறைவால் காலமானார்.  95வயதான அவர்  பாகிஸ்தானில் சிந்து பகுதியில் பிறந்த இவர்  சொந்த ஊரில் வழக்கறிஞராக பணியாற்றினார். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் மும்பைக்கு வந்து வழக்கறிஞர் பணி புரிந்து வந்தார். 1996 வாஜ்பாய் அமைச்சரவையில் சட்ட மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக பணியாற்றினார். இந்திரா , ராஜீவ் படுகொலையில் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று  தெலங்கானா ஆளுநராக பதவியேற்கிறார் தமிழிசை..!!  

தமிழிசை சௌந்தரராஜன் இன்று  தெலங்கானா ஆளுநராக பதவியேற்கிறார்  கடந்த 2014ம் ஆண்டு முதல் தமிழக பாஜக தலைவராக இருந்து வந்தவர்  தமிழிசை சௌந்தரராஜன். இவரை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்  தெலங்கானா ஆளுநராக  நியமனம் செய்தார். இதையடுத்து  தமிழிசை சௌந்தரராஜன் வருகின்ற செப்.08 ம்  தேதி ஆளுநராக பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11 மணிக்கு ஹைதராபாத் ராஜ்பவனில்  உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநராக பொறுப்பேற்க உள்ளார். இவருக்கு அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராகவேந்திரா எஸ். சவுகான் பதவி […]

Categories
தேசிய செய்திகள்

கவலைப்படமாட்டோம்… “நிலவின் ஆய்வில் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம்”… இஸ்ரோ உறுதி!!

பின்னடைவு குறித்து கவலைப்படாமல் நிலவின் ஆய்வில் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம் என்று இஸ்ரோ உறுதியாக தெரிவித்துள்ளது. சந்திரயான் 2 திட்டத்தின்படி இன்று அதிகாலை விக்ரம் லேண்டர் தரையிறங்கும் என ஒட்டு மொத்த இந்தியாவும் காத்திருந்தது.  நிலவின் தென் துருவ பகுதியில் எந்த ஒரு நாடும் இதுவரை லேண்டரை தரையிறக்கியதில்லை என்பதால்  பிரதமர் மோடி  இஸ்ரோ மையத்திற்கு  ஆர்வமுடன் இதனை காண வந்திருந்தார். ஆனால் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க 2.1 கிமீ தூரத்தில் இருக்கும்போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு சிக்னல் கிடைக்கவில்லை. […]

Categories
தேசிய செய்திகள்

”நமது விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது” கேரள முதல்வர் வாழ்த்து..!!

சந்திரயன்-2  திட்டத்தில் பணியாற்றிய  நமது விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.  இன்று அதிகாலை விக்ரம் லேண்டர் தரையிறங்கும் பணி தொடங்கப்பட்டது. நிலவின் தென் துருவ பகுதியில் எந்த ஒரு நாடும் இதுவரை லேண்டரை தரையிறக்கியதில்லை என்பதால் இந்த அரிய நிகழ்வை காண நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் தொலைக்காட்சியில் பார்க்க காத்திருந்தனர். பிரதமர் மோடி  பெங்களூரு இஸ்ரோ மையத்திற்கு  ஆர்வமுடன் இதனை காண வந்திருந்தார். விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க 2.1 கிமீ தூரத்தில் இருக்கும்போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

கண்ணீர் விட்டு அழுத சிவன்… கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார் பிரதமர் மோடி… கண் கலங்க வைத்த நெகிழ்ச்சி சம்பவம் ..!!

இஸ்ரோ தலைவர் சிவன் பிரதமர் மோடியிடம் கண்ணீர் விட்டு அழுத போது பிரதமர் மோடி கட்டிப்பிடித்து அவரை தேற்றி ஆறுதல் கூறினார். சந்திரயான் 2 திட்டத்தின்படி  இன்று அதிகாலை விக்ரம் லேண்டர் தரையிறங்கும் பணி தொடங்கப்பட்டது. நிலவின் தென் துருவ பகுதியில் எந்த ஒரு நாடும் இதுவரை லேண்டரை தரையிறக்கியதில்லை என்பதால் இந்த அரிய நிகழ்வை காண நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் தொலைக்காட்சியில் பார்க்க காத்திருந்தனர். பிரதமர் மோடி  பெங்களூரு இஸ்ரோ மையத்திற்கு  ஆர்வமுடன் இதனை காண வந்திருந்தார். நாடு முழுவதும் பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

“அறிவியல் ஆராய்ச்சியில் தோல்வி என்பதே கிடையாது”… விஞ்ஞானிகளுக்கு ஆதரவாக நாடே துணை நிற்கும்… பிரதமர் மோடி ஆறுதல்.!! 

அறிவியல் ஆராய்ச்சியில் தோல்வி என்பதே கிடையாது என்று பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு  ஆறுதல் உரை நிகழ்த்தினார்.  சந்திரயான் 2 திட்டத்தின்படி  இன்று அதிகாலை விக்ரம் லேண்டர் தரையிறங்கும் பணி தொடங்கப்பட்டது. நிலவின் தென் துருவ பகுதியில் எந்த ஒரு நாடும் இதுவரை லேண்டரை தரையிறக்கியதில்லை என்பதால் நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் திக் திக் 15 நிமிடத்தில் காத்திருந்தனர். பிரதமர் மோடியும் இஸ்ரோ மையத்தில் ஆர்வமுடன் காத்திருந்தார். ஆனால் லேண்டர் நிலவில் தரையிறங்க 2.1 கிமீ தூரத்தில் இருக்கும்போது தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

“கடைசி நிமிட பின்னடைவு  நிரந்தரமானதல்ல”… நிலவை தொடும் முயற்சி நிச்சயம் வெற்றியடையும்… விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி ஊக்க உரை.!!

கடைசி நிமிட பின்னடைவு  நிரந்தரமானதல்ல. நிலவை தொடும் முயற்சி நிச்சயம் வெற்றியடையும் என்று பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு ஊக்க உரையாற்றினார்.  சந்திரயான் 2 திட்டத்தின்படி  இன்று அதிகாலை விக்ரம் லேண்டர் தரையிறங்கும் பணி தொடங்கப்பட்டது. நிலவின் தென் துருவ பகுதியில் எந்த ஒரு நாடும் இதுவரை லேண்டரை தரையிறக்கியதில்லை என்பதால் நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் திக் திக் 15 நிமிடத்தில் காத்திருந்தனர். பிரதமர் மோடியும் இஸ்ரோ மையத்தில் ஆர்வமுடன் காத்திருந்தார். லேண்டர் நிலவில் தரையிறங்க 2.1 கிமீ தூரத்தில் இருக்கும்போது தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

2.1 கிமீ தூரத்தில் விக்ரம் லேண்டர்… “தொடர்பு துண்டிப்பு”… இஸ்ரோ தலைவர் சிவன்..!!

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க 2.1 கிமீ தூரத்தில் இருக்கும்போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.  பூமியிலிருந்து கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட்டது. திட்டமிட்டபடி பூமியின் வட்டப்பாதையிலிருந்து சந்திரயான் 2 விண்கலம், ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி நிலவின் பாதைக்கு திருப்பி விடப்பட்டது. அதைத் தொடர்ந்து சந்திராயன் 2 விண்கலத்தின் வேகம் நிலவின் வட்டப்பாதையில் இருந்து படிப்படியாக குறைக்கப்பட்டது. அதன்பின் ஆகஸ்ட் 2ம் தேதி ஆர்பிட்டரிலிருந்து விக்ரம் லேண்டர் பிரிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

”அப்பா_வுடன் மகனுக்கும் ஆப்பு”முன்ஜாமீனுக்கு எதிராக சிபிஐ மேல்முறையீடு…!!

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிதம்பரம் கார்த்தி சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மனு செய்துள்ளது. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்தியநிதி அமைச்சர் சிதம்பரம் மாற்றும் கார்த்தி சிதம்பரத்திற்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைனி முன்ஜாமீன் வழங்கினார். இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் முன் ஜாமீனை ரத்து செய்ய கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் தான் இவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

விண்வெளிக்கு மனிதர்கள்…. வீரர்கள் தேர்வு தொடங்கியது…..!!

ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கான ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகின்றது. விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தை வரக்கூடிய 2022ஆம் ஆண்டு செயல்படுத்த இருப்பதாக இஸ்ரோ ஏற்கனவே அறிவித்திருந்தது.அமெரிக்கா , ரஷ்யா , சீனா உள்ளிட்ட நாடுகள்  விண்வெளிக்கு வீரர்களை அனுப்பியுள்ளனர். அந்த வரிசையில் இந்தியாவும் இணைய உள்ளது. இஸ்ரோ_வின் ககன்யான் திட்டத்தின் மூலம்  வருகின்ற 2022-ஆம் ஆண்டு 3 வீரர்கள் விண்வெளிக்கு செல்ல இருக்கின்றார்கள். அதற்காக விண்வெளி ஆய்வாளர்களை தேர்வு செய்வதற்காக முதற்கட்ட பணி நிறைவடைந்துள்ளது. மொத்தம் 30 […]

Categories
தேசிய செய்திகள்

சோஃபா வேண்டாம்…. நாற்காலியே போதும்… பிரதமர் மோடி புகைப்படம் எடுத்த  வீடியோ வைரல்.!!

பிரதமர் நரேந்திர மோடி சோபாவை தவிர்த்து நாற்காலியில் அமர்ந்து கொண்டு புகைப்படம் எடுத்த  வீடியோ வைரலாக பரவி வருகிறது.  ரஷ்யாவின் விளாடிவாஸ்டாக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் சின்சோ அபே, மலேசியப் பிரதமர் மகாதிர் முகமது ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர்  மாநாட்டில் இந்தியா சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கைப் பிரதமர் நரேந்திர மோடியும், அவருடன் சென்றுள்ள பிரதிநிதிகளும் பார்வையிட்டனர். இதனிடையே  […]

Categories
தேசிய செய்திகள்

74 வயது….. 2 குழந்தை….. சாதனை படைத்த மூதாட்டி…..!!

ஆந்திராவில் 74 வயதில் குழந்தை பெற்ற மங்கம்மா மூதாட்டி இந்தியாவிலே புது சாதனை நிகழ்த்தியுள்ளார். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இருக்கும் நெலபார்த்திபாடு கிராமத்தைச் சேர்ந்த 74 வயதுடைய எர்ராமட்டி மங்கம்மா என்ற மூதாட்டி 1962 ஆண்டு மார்ச் 22_ஆம் தேதி எர்ராமட்டி ராஜா ராவ் என்பவரை மணந்தார். அவருக்கு தற்போது வயது 80 ஆகின்றது. பல ஆண்டுகளாக இந்த தம்பதிக்கு குழந்தைகள் பிறக்கவில்லை. எனவே ஒரு குழந்தையாவது பெத்தெடுக்க வேண்டுமென்று அவர்கள் பல மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை பெற்றார். கடவுள் கொடுத்த வரமாக […]

Categories
தேசிய செய்திகள்

காணாமல் போன பாஜக தலைவர் மகன் இங்கிலாந்தில் சடலமாக மீட்பு..!!

தெலுங்கனா கம்மம் மாவட்டத்தை  சேர்ந்த பாஜக தலைவர் மகன் இங்கிலாந்தில் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.   தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்மம் மாவட்டத்தில் பாஜக தலைவராக இருக்கும் உதய் பிரதீப் என்பவரின் 23 வயதான மகன் உஜ்வால் ஸ்ரீஹர்ஷா, இங்கிலாந்தின் இயந்திர கற்றல்  மற்றும்  செயற்கை நுண்ணறிவியலில்  எம்.எஸ் பயின்று வருகிறார். இவர் இங்கிலாந்திற்கு படிக்க  சென்றதில் இருந்து தினமும் பெற்றோருடன் தொலைபேசி வாயிலாக பேசி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதியிலிருந்து பேசவே இல்லை.   இதையடுத்து சந்தேகமடைந்த உதய் பிரதீப், மகன் மாயமானது […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

பிரதமர் காஷ்மீர் பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டாம்…. பொருளாதாரத்தில் கவனம் செலுத்துங்கள்… பாக்., இளைஞரின் பேச்சு வைரல்.!!

பாக்.பிரதமர் காஷ்மீர் பிரச்சினையில் கவனம் செலுத்தாமல் பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என அந்நாட்டு  வாலிபர் தெரிவித்துள்ளார்.  மத்திய அரசு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியதிலிருந்து பாகிஸ்தான் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு பதிலளித்த இந்தியா காஷ்மீர் விவகாரம் உள்நாட்டு விவதாரம் என்று தெரிவித்துள்ளது. ஆனால் இதனை ஏற்க மறுத்த பாகிஸ்தான் இந்த விவகாரத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சில் வரைக்கும் எடுத்து சென்றது. ஆனால் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் முயற்சி தோல்வி […]

Categories
தேசிய செய்திகள்

“மும்பை ஓ.என்.ஜி சி ஆலையில் பயங்கர தீ விபத்து”… தீயணைப்பு வீரர் உட்பட 7 பேர் பலி.!!

மும்பை அருகே ஓ.என்.ஜி சி நிறுவன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில்  7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து 45 கி.மீ தூரம் உள்ள  யுரானில்  ஓ.என்.ஜி சிக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இந்த ஆலையில் இன்று காலை ஒரு பகுதி திடீரென தீ பிடித்து பரவியது. இதையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் 2 மணி […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் கட்டடம் இடிந்து விபத்து… பெண் உட்பட 2 பேர் பலி..!!

டெல்லியில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.  டெல்லியின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் சிலம்புரில்  4 மாடி கட்டிடம் ஒன்று  கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று இரவு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்காக ஏராளமானோர் அங்கு வந்திருந்தனர். நிகழ்ச்சி நடைபெறும் போது திடீரென கண் இமைக்கும் நொடியில் கட்டிடம்  இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதையடுத்து தீயணைப்பு துறையினர்  மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்ட அவர்கள் ஹீனா என்ற […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

தெலுங்கானா ஆளுநரான தமிழிசைக்கு தமிழக முதல்வர் வாழ்த்து…!!!

தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தெலுங்கானா, கேரளா, இமாச்சலப்பிரதேசம், மகாராஷ்டிரா, மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து  ஜனாதிபதி  ராம் நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜனுக்கு, வெளிநாட்டில் உள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி தொலைபேசியின் வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: நீட்டிப்பு இல்லை ”நாளை கடைசி நாள்’ வருமான வரி துறை எச்சரிக்கை

வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீடிக்கவில்லை என்று வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே வருமானவரி கட்ட செப்டம்பர் 30 வரை கட்டலாம் என்ற செய்தி சமூகவலைத்தளம் மூலமாக பரவியது. உண்மைத்தன்மை இல்லாத இந்த செய்தியை தடுக்கும் வகையில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு இல்லை என்று வரித் துறை விளக்கம் அளித்துள்ளது. வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு நாளையோடு நிறைவடைகிறது என்றும் செப்டம்பர் 30ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

பிறந்த நாளன்று துயர சம்பவம்…. நண்பர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம்… இளம்பெண் மரணம்..!!

பிறந்த நாளன்று 4 நண்பர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.    மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாதை சேர்ந்த இளம் பெண் (19 வயது) ஒருவர் தன்னுடைய நண்பர்கள்  அழைத்ததாக  கூறி கடந்த  கடந்த ஜூலை மாதம் 7-ஆம் தேதி மும்பை சென்றிருந்தார். அங்கு செம்பூரில் தனது நண்பர்களுடன்  தங்கியிருந்த அவர் அன்று தனது பிறந்தநாளை கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். பின்னர் அங்கிருந்த 4 நண்பர்களும் அப்பெண்ணை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன்பின் அங்கிருந்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு : ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்…!!

ஐ.என்.எக்ஸ் வழக்கில் உச்சநீதிமன்றம் கேட்ட அனைத்து ஆவணங்களையும்  அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர். ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய கூடாது என்று அவருக்கு முன்ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் நேற்றைய  விசாரணையில் ப.சிதம்பரம் தரப்பு ,  அமலாக்கத்துறை  தரப்பு வாதங்கள் முழுமையாக முடிவடைந்தது. வழக்கின் தீர்ப்பை செப்டம்பர் முதல் வாரத்துக்கு ஒத்தி வைத்த உச்சநீதிமன்றம். அமலாக்கத்துறை சார்பில் ப.சிதம்பரத்திடம் என்ன கேள்விகள் கேட்கப்பட்டது , எத்தனை கேள்விகள் கேட்கப்பட்டது ,எத்தனை முறை ஆஜரானார் உள்ளிட்ட விவரங்களை சீலிடப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

“ஏர் இந்தியாவை தனியாரிடம் விற்க மத்திய அரசு உறுதி”… ஹர்தீப் சிங் புரி.!!

ஏர் இந்தியா விமானத்தை தனியாரிடம் விற்க மத்திய அரசு உறுதியுடன் இருப்பதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.  ஏர் இந்தியாவின் விமான கடன் திருப்பி செலுத்த முடியாத அளவிற்கு அதிகரித்து இருப்பதால் அந்நிறுவனத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி நாடாளுமன்றத்தில் விமான நிலையங்கள் பொருளாதார ஒழுங்கு முறை ஆணைய திருத்த மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்தது. முக்கிய விமான நிலையங்களில் இருந்து […]

Categories
இராணுவம் உலக செய்திகள் தேசிய செய்திகள்

பாக். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை … ஒரு பொருட்டாக மதிக்காத இந்தியா ..!!

பாகிஸ்தான் கண்டம் விட்டு கண்டம் பாயும் கஷ்ணவி ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது .  பாகிஸ்தான் 300 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் கஷ்ணவி  ஏவுகணையை பலுசிஸ்தானில் உள்ள சான்மியானி ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது . இந்த கஷ்ணவி ஏவுகணை சோதனையை முன்னிட்டு கராச்சி விமான நிலையத்தில் இருந்து மூன்று சர்வதேச மார்கங்களுக்கான  வான்வழி சேவை  வரும் 31-ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது . மேலும் , காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்கி  உலகநாடுகளின் ஆதரவை பெற பாகிஸ்தான் செய்த முயற்சிகள் […]

Categories
தேசிய செய்திகள்

“ஃபேஸ்புக்கால் விபரீதம் ” 10 -ஆம் வகுப்பு மாணவி கொலை… இளைஞர் கைது..!!

தெலுங்கானாவில் பேஸ் புக் நண்பரான  10 ஆம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    தெலங்கானா மாநிலம் மகபூப் நகரில் உள்ள ஒரு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வரும் ஹர்ஷினி மாணவி பேஸ்புக் மூலம் 27 வயதான நவீன் ரெட்டி என்பவரிடம் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதையடுத்து ஒருநாள் இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். அதன்படி இருவரும் கடந்த 27-ஆம் தேதியன்று சங்கரய்ய பள்ளி குடியிருப்புக்கு அருகே இருக்கும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

8 நாடுகள்….. பாஜக உறுப்பினர் …. பெருமை கொள்ளும் பிஜேபி …!!

பா.ஜ.க_வின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட பெரிய மக்கள் தொகை கொண்ட 8 நாடுகளே உள்ளன என்று அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். தலைநகர் புதுடெல்லியில் உள்ள பா.ஜ.க. கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயல்தலைவர் ஜே.பி. நட்டா செய்தியாளர்களை சந்தித்தார். கட்சியின் தேசிய தலைவருக்கான தேர்தல் இந்த வருடம்  டிசம்பரில் நடைபெறும் என்று கூறிய ஜே.பி. நட்டா கட்சியின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 18 கோடியாக உள்ளது.நாடு முழுவதும்   பா.ஜ.க கட்சிக்கு அதிக அளவில் ஆதரவு இருந்தது வருகின்றது. தொடர்ந்து எங்கள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

புதிதாக 7,00,00,000….. மொத்தமாக 18,00,00,000…. ஜே பி நட்டா பெருமிதம்…!!

பாஜகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 18 கோடியாக அதிகரித்துள்ளது என்று பாஜகவின் செயல் தலைவர் ஜே பி நட்டா தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க_வின் செயல் தலைவர் ஜே பி நட்டா கூறும் போது , கடந்த ஜூலை மாதம் 6-ம் தேதி முதல் நாடு முழுவதும் பாஜகவின் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் முகாம் நடைபெற்றது.இதுவரை நடைபெற்ற உறுப்பினர் பதிவில் புதிதாக 7 கோடி பேர் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர். மேலும்  அவர் பேசுகையில் , இதனால் பா.ஜ.க கட்சியின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 18 […]

Categories
தேசிய செய்திகள்

“மாணவர்கள் டாய்லெட்டை சுத்தம் செய்வதில் எந்த தவறும் இல்லை” மீண்டும் சர்ச்சையை கிளப்பும் கலெக்டர்..!!

மத்தியபிரதேசத்தில்  மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்வதில் எந்த தவறும் இல்லை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தது ,மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.   மத்திய பிரதேச மாநிலத்தின் கந்துவா மாவட்டத்தில் உள்ள சின்ஹாரா  கிராமத்தில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அரசு பள்ளியில் மாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பள்ளி மாணவர்கள் சுத்தம் செய்யும் இந்த வீடியோவ பார்த்த பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ”செப்.4 வரை சிதம்பரத்தை கைது செய்ய தடை” உச்சநீதிமன்றம் உத்தரவு…!!

ப.சிதம்பரத்தை  செப்.4 வரை கைது செய்ய தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய கூடாது என்று அவருக்கு முன்ஜாமீன் கேட்டு  உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை சார்பில் துஷார் மேத்தா வாதங்களை முன் வைத்தார்.அதில் , சிதம்பரம் மழுப்பலான பதில்களையே அளிக்கிறார்.  வழக்கின் உண்மை தகவலை மறைத்து வழக்கில் இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார். இவருக்கு முன்ஜாமீன் வழங்கினால் வங்கி பணத்தை மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி […]

Categories
தேசிய செய்திகள்

இவரை விட்டுறாதீங்க…. திருடர்கள் தப்பி விடுவார்கள்…. கேவலப்படுத்திய அமலாக்கத்துறை…!!

ஐ.என்.எக்ஸ் வழக்கில் முன்ஜாமீன் கோரிய  ப.சிதம்பரத்தை வங்கி பண மோசடிகள் மலையா , நீரவ் மோடியுடன் ஒப்பீட்டு அமலாக்கத்துறையினர் வாதங்களை முன்வைத்தனர்.  ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய கூடாது என்று அவருக்கு முன்ஜாமீன் கேட்டு  உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணையில் ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞ்சர்கள் கபில் சிபில் , அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் தங்கள் வாதங்களை முன்வைத்து முடித்த நிலையில் நேற்றும் இன்றும்  அமலாக்கத்துறை சார்பில் வாதங்கள் முன்வைக்கப்ட்டு […]

Categories
தேசிய செய்திகள்

1…. 2….3….. ”எல்லாமே வேஸ்ட்” நொந்து போன ராகுல் …!!

கேரளா வயநாட்டில் ராகுல் காந்தி  மக்களிடம் பேசும் போது அடுத்தடுத்து மைக் வேலை செய்யாததால் அவர் நொந்து போயினார். தென்மேற்கு பருவமழையால் கேரளாவில் ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை கனமழை பெய்தது.இதனால் 150 பேர் வரை உயிரிழந்தனர். கடுமையாக ஏற்பட்டுள்ள நிலச்சரிவை சரி செய்து தற்போது நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றது. அங்குள்ள வயநாடு மக்களவை தொகுதியும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கன மழை பெய்த தொடக்கத்திலேயே ராகுல் காந்தி கடந்த 11 – […]

Categories

Tech |