Categories
அரசியல் கட்டுரைகள் தேசிய செய்திகள் பல்சுவை

#HappyBirthdayModi : ”தொடக்க கால அரசியல்” பாஜகவில் மோடியின் முதல் பணி…!!

பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு அவரின் தொடக்க கால அரசியல் என்ற  கட்டுரைகளை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகின்றோம். பிரதமர் இந்திராகாந்தியின் எமர்ஜென்ஸி நாட்டையே உலுக்கியது. ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு தடை விதித்தது மட்டுமல்லாமல் அந்த அமைப்பின் முக்கிய தலைவர் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள சில முக்கியமான தலைவர்களை பாதுகாக்கும் பணி பிரதமர் மோடியிடம் கொடுக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் தான் சுப்பிரமணியசாமி , ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற தலைவர்கள் தலைமறைவாகி இருப்பதற்கும் உதவினார் மோடி. மேலும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் பல்சுவை

”பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர்” மோடியின் இளமை பருவம் …!!

பிரதமர் மோடியில் பிறந்தநாளான (17.09) முன்னிட்டு அதற்கான சிறப்பு கட்டுரை தொகுப்பை காண்போம். கிராமத்து ஒரு குக்கிராமத்தில் ஏழ்மையாக பிறந்து உலகின் மாபெரும் ஜனநாயக நாட்டின் பிரதமரான நமது பாரதப் பிரதமர் மோடி அவர்களின் சின்னஞ்சிறு வயதில் ரயில் நிலையத்திலிருந்து டீ விற்றது தொடர்ந்து இரண்டாம் முறையாக பாரத பிரதமராக வெற்றி பெற்றது வரை அவர் கடந்து வந்த பாதை எப்படிப்பட்டது என்பது குறித்து விவரிப்பதே இந்த செய்தி தொகுப்பு. மோடியின் பிறப்பு : நரேந்திர மோடி என்று எல்லோரும் […]

Categories
தேசிய செய்திகள்

“எங்களுக்கு கன்னடம் தான் முதன்மை மொழி”… கர்நாடக முதல்வர் எடியூரப்பா.!!

கர்நாடகத்தைப் பொருத்தவரை, கன்னடம் முதன்மை மொழியாகும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.   கடந்த 14ஆம் தேதி இந்தி தினம் கொண்டாடப்பட்டதையொட்டி  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டார். அதில்,  நாட்டின்   ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும். இந்தி மொழியால் மட்டுமே நாட்டையும் , நாட்டு மக்களையும் ஒன்றிணைக்க முடியும் என்று தெரிவித்தார். அமித்ஷாவின் இந்த கருத்துக்கு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தி பேசாத மாநிலங்களில்  கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்  கண்டனம் தெரிவித்து வருகின்றன. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

”ஊளையிடும் கமல் , ஸ்டாலின்” வெளுத்து வாங்கும் சுப்ரமணியசாமி…!!

இந்தி திணிப்பு என்று கமலும் , ஸ்டாலினும் ஊளையிட்டுக் கொண்டு இருக்கின்றார்கள் என்று பாஜகவின்  சுப்ரமணியசாமி விமர்சித்துள்ளார். இந்தி தினத்தில் மத்திய உள்துறை அமைச்சரும் , பாஜக_வின் தலைவருமான அமித்ஷா டுவிட்டரில்  வெளியிட்ட கருத்து பெரும் சர்சையை ஏற்படுத்தியது.  அதில் இந்தியாவில் பல மொழி இருக்கின்றது.ஆனாலும்  இந்தியாவின் அடையாளமாக , நாட்டை ஒருங்கிணைக்க ஒரு பொதுமொழி இருக்க வேண்டும்.நாட்டில் அதிக மக்களால் பேசப்படும் இந்தி மொழியால் நாட்டையும் , நாட்டு மக்களையும்  ஒன்றிணைக்க முடியும் என்று தெரிவித்தார். இதற்கு தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலம் எதிர்ப்பு தெரிவித்தது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கேக் வெட்ட வாங்க ”உங்களை தடுக்க முடியாது” கார்த்திக் சிதம்பரம் கடிதம்…!!

74 வயதான உங்களை 56 இஞ்ச் மார்பு மோடியால் எதுவும் செய்ய முடியாது என்று கார்த்திக் சிதம்பரம் ப.சிதம்பரத்திற்கு வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் சிதம்பரத்தின் 74 வது பிறந்தநாளான இன்று வரின் மகனும் , நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் தனது தந்தையின் பிறந்தநாள் வாழ்த்துகளை முன்னிட்டு ப.சிதம்பரத்திற்கு 2 பக்க கடிதத்தில் பாஜக அரசையும் , பிரதமர் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“ஓமனில் கோர கார் விபத்து”… 8 மாத குழந்தையுடன் இந்திய தம்பதி மரணம்… உயிருக்கு போராடும் மற்றொரு குழந்தை..!!

ஓமனில் நடந்த கார் விபத்தில்  ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர், மனைவி மற்றும் அவரது 8 மாத குழந்தை உயிரிழந்த நிலையில், மற்றொரு குழந்தை உயிருக்கு போராடி வருகிறது.   ஹைதராபாத்தைச் சேர்ந்த 30 வயதான கவுசல்லா அஸ்மத்துல்லா கான் என்பவர் துபாயில் வசித்து வருகிறார். இவருக்கு ஆயிஷா என்ற 29 வயது மனைவி இருக்கிறார். இந்த ஜோடிக்கு 3  வயதில் ஹனியா என்ற மகளும், 8 மாதமான ஹம்சா கான்  என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் இவர்கள் நேற்று முன்தினம் காரில் ஓமன் […]

Categories
தேசிய செய்திகள்

”என்ன நடக்கிறது ஜம்முவில்” அமித்ஷா ஆலோசனை…..!!

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செய்த மத்திய அரசு அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.இதனையடுத்து காஷ்மீர் விவகாரம் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. எல்லையில் தொடர்ந்து அத்துமீறி வரும் பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு படை வீரர்களுக்கு இந்திய இராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திர முன்னாள் சபாநாயகர் தூக்கு போட்டு தற்கொலை..!!

ஆந்திர முன்னாள் சபாநாயகர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆந்திரபிரதேச மாநிலத்தின்  முன்னாள் சபாநாயகர் கோடல சிவபிரசாத் ராவ். தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த சிவபிரசாத் கடந்த 2016 ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது சட்டப்பேரவை சபாநாயகராக இருந்துள்ளார். இந்நிலையில்   ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் சிவபிரசாத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலை செய்துள்ளதால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர். தற்கொலை குறித்த காரணம் தெரியவில்லை.  முன்னதாக இவர் மீது சட்ட பேரவையில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஃபரூக் அப்துல்லா எங்கு இருக்கிறார்?… அவர் இங்கே இருக்கிறார்… காஷ்மீர் நிர்வாகம் பதில்..!!

ஃபரூக் அப்துல்லா எங்கு இருக்கிறார் என்று வரும் 30ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்  கூறப்பட்டுள்ளதாவது, சென்னையில் வரும் 15ஆம் தேதி நடைபெறும் அண்ணா மாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் ஃபரூக் அப்துல்லாவை அழைக்க  முயன்றபோது அது என்னால் முடியவில்லை என்றும் கூறியிருந்தார். அவர் எங்கே இருக்கிறார் என்பதும் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“சவுதியில் கச்சா உற்பத்தி ஆலையில் தாக்குதல்”…. இந்தியாவில் எகிறப்போகும் பெட்ரோல், டீசல்..!!

சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி ஆலையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் இந்தியாவியில் பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்புள்ளது.  சவுதி அரேபியாவில் இருந்து தான் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இங்கிருந்து ஒவ்வொரு நாளும் உலகின் பிற நாடுகளுக்கு 98 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. உலகின் மொத்த எண்ணெய் வள நாடுகளில் ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கு அளவு சவூதி அரபியாவில் தான் நடைபெறுகிறது.  பல நாடுகள் கச்சா எண்ணெயை […]

Categories
தேசிய செய்திகள்

கோதாவரியில் படகு கவிழ்ந்ததில் மிகுந்த வேதனை…. சோகத்தில் பிரதமர் மோடி..!!

ஆந்திராவின் கிழக்கு கோதாவரியில் ஒரு படகு கவிழ்ந்ததில் மிகுந்த வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.    ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டணம் பகுதியில்  கோதாவரி ஆற்றின் அருகே பாபிகொண்டலு மலைகளைப் பார்க்க 61 சுற்றுப்பயணம் சென்றிருந்தனர். அவர்களில் 50 பேர் சுற்றுலாப் பயணிகள் மற்றும் 11 பேர் படகு ஊழியர்கள். 61 பேரை ஏற்றி சென்றதால் எடை தாங்காமல் படகு கவிழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இதில் 28 பேர் நீந்தி கரை வந்து சேர்ந்தனர். இதையடுத்து தகவலறிந்த […]

Categories
தேசிய செய்திகள்

கோதாவரி படகு விபத்தில் 13 பேர் பலி…. “குடும்பத்திற்கு ரூ.10,00,000 லட்சம்”… முதல்வர் ஜெகன் மோகன் அறிவிப்பு..!!

முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கோதாவரி படகு விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ .10 லட்சம் நிதி உதவியை அறிவித்தார். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டணம் பகுதியில்  கோதாவரி ஆற்றின் அருகே பாபிகொண்டலு மலைகளைப் பார்க்க 61 சுற்றுப்பயணம் சென்றிருந்தனர். அவர்களில் 50 பேர் சுற்றுலாப் பயணிகள் மற்றும் 11 பேர் படகு ஊழியர்கள். 61 பேரை ஏற்றி சென்றதால் எடை தாங்காமல் படகு கவிழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இதில் 28 பேர் நீந்தி கரை வந்து சேர்ந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் சோகம்… “கோதாவரி ஆற்றில் மூழ்கி 13 பேர் பலி”… மீட்பு பணிகள் தீவிரம்.!!

 ஆந்திராவின் கோதாவரி ஆற்றில் பிற்பகல் 61 பயணிகளுடன் சென்ற  சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில்  13 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டினம் பகுதியில் உள்ளவர்கள் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு கோதாவரி ஆற்றின் அருகே பாபிகொண்டலு மலைகளைப் பார்க்க அவர்கள் சுற்றுப்பயணம் சென்றிருந்தனர். படகில் 61 பேர் இருந்தனர். அவர்களில் 50 பேர் சுற்றுலாப் பயணிகள் மற்றும் 11 பேர் படகு ஊழியர்கள். இந்நிலையில்  61 பேரை ஏற்றி சென்றதால் எடை தாங்காமல் படகு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ”படகு கவிழ்ந்து 60 பேர் நீரில் மூழ்கினர்”ஆந்திராவில் சோகம்…!!

ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து 60 பேர் நீரில் மூழ்கியதாக தகவல் வெளியாகியிருக்கிறது ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டினம் பகுதியில் உள்ளவர்கள் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு கோதாவரி ஆற்றில் படகு மூலம் சவாரி செய்துள்ளனர். படகில் 60க்கும் மேற்பட்டோர் ஏற்றுக் கொண்டு சென்றதால் படகு எடை தாங்காமல் ஆற்றில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 60 பேரும் நீரில் மூழ்கி உள்ளனர். இதை கண்ட அங்குள்ள கோதாவரி கரையோர பாதுகாப்பு வீரர்கள் நீரில் மூழ்கியவர்களை  மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். […]

Categories
திருச்சி தேசிய செய்திகள் மாநில செய்திகள்

”கத்தி பட பாணியில் தப்பிய கைதி” தீரன் பட பாணியில் பிடித்த போலீஸ்…!!

கத்தி பட பாணியில் தப்பிய நைஜீரிய கைதியை தீரன் பட பாணியில் தமிழக போலீஸ் கைது செய்தது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. கத்தி படத்தில் விஜய் சிறையில் இருந்து தப்பிப்பது போல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நைஜீரிய குற்றவாளி ஒருவர் தப்பினார். சிறை மற்றும் சிறைக்கு வெளியே உள்ள எந்த கண்காணிப்பு கேமராவிலும் சிக்காமல் தப்பிய அவரை தமிழக போலீசார் தீரன் பட பாணியில் கைது செய்தனர்.திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் […]

Categories
கல்வி தேசிய செய்திகள் பல்சுவை மாநில செய்திகள்

மகிழ்ச்சி….. ”தமிழில் தேர்வை எழுதலாம்”RRB அறிவிப்பு…!!

மண்டல அளவிலான தேசிய வங்கி தேர்வுகளை மாநில மொழிகளில் எழுதிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டல அளவிலான தேசிய வங்கிகளுக்கு உள்ள பல்வேறு பணியிடங்களை  நிரப்புவதற்கான தேர்வை RRB  அமைப்பு தான்  நடத்துகின்றனது. பொதுவாக IBPS நடத்தும் தேர்வை போல வினாத்தாள்கள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் வடிவமைத்து இது வரை நடத்திவரபட்ட   மண்டல ஊரக வங்கித் தேர்வுகளை இனிமேல் அந்தந்த மாநில மொழிகளிலும் எழுதிக் கொள்ளலாம் என்று RRB அறிவித்துள்ளது. இதனால் இனி இந்த தேர்வு வினாக்கள் அந்தந்த மாநில மொழிகளிலும்இடம்பெறும். மேலும் மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

“தெலங்கானா முதல்வர் வீட்டு நாய் மரணம்”…. இவர்கள் தான் காரணம்… மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு..!!

தெலங்கானா முதல்வர் வீட்டு நாய் மரணமடைந்ததையடுத்து சிகிச்சை அளித்த கால்நடை மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.   தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அங்குள்ள அரசு பங்களா பிரகதி பவனில்  வசித்து வருகிறார். இந்த பவனில் 11  நாய்கள் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டு வருகின்றன. இதில் ஹஸ்கி வகையை சேர்ந்த 11 மாதமான அந்த நாய்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனுடைய உடல் கடுமையாக கொதித்தது.  அந்த நாய் அப்போதும் சைவம் மட்டுமே சாப்பிட்டு வந்துள்ள நிலையில் அதனால் பால் […]

Categories
தேசிய செய்திகள்

கதிகலங்கும் இந்தியா ”2,60,00,000 பேர் பாதிப்பு”ஆய்வில் தகவல்….!!

உலகளவில் 40 % இதய நோயாளிகள் இந்தியாவில் இருக்கின்றனர் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரபல செய்தி நிறுவனமான டைம்ஸ் ஆப் இந்தியா  , நொவர்டிஸ் என்ற மருந்து நிறுவனத்துடன் இணைந்து பொதுமக்களிடையே இதய நோய் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்  நோக்கத்தில் ‘பீட் ஹார்ட் ஃபெயிலியர்’ என்ற நிகழ்ச்சியை முக்கிய பல நகரங்களில் நடத்தியது.மும்பையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மருத்துவதுறையை சார்ந்த பல்வேறு கல்வியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் உலகளவில் 40 %  இதய நோயாளிகளில் இந்தியாவில் உள்ளார்கள் என்றும் , 2.60 […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

அரண்டு போன பாஜக…. #தமிழ்வாழ்க, #Tamil….. ட்வீட்ட_ரை தெறிக்கவிடும் தமிழர்கள்….!!

இந்தியை எதிர்த்து  #தமிழ்வாழ்க ,  #Tamil  என்ற ஹாஷ்டாக்_கள் இந்தியளவில் ட்ரெண்டாகி வருவதால் பாஜகவினர் அதிச்சியடைந்துள்ளனர். இந்தி மொழி நாளை கொண்டாடும் வகையில் இன்று மத்திய  உள்துறை அமைச்சர் அமித்ஷா அனைவரும் இந்தியை கற்கவேண்டும் என்றும் , இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு. ஆனால் முழு நாட்டிற்கும் ஒரு மொழி இருப்பது மிகவும் முக்கியம். இது உலகில் இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும். இன்றைய தேதிக்கு இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், அது அதிகம் பேசப்படும் இந்தி […]

Categories
தேசிய செய்திகள்

அமித்ஷா கருத்து…. ”ஆடி போன பாஜக”….. உலகளவில் எதிர்ப்பு…..!!

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால் பாஜகவினர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இந்தியாவின் பல மொழிகளுள் ஒன்றான இந்தி மொழி நாள் இன்று கொண்டாடப்படுகின்றது. இதற்காக இன்று காலை மத்திய  உள்துறை அமைச்சர் அமித்ஷா அனைவரும் இந்தியை கற்கவேண்டும் என்றும் , இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு. ஆனால் முழு நாட்டிற்கும் ஒரு மொழி இருப்பது மிகவும் முக்கியம். இது உலகில் இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும். […]

Categories
தேசிய செய்திகள்

#தமிழ்வாழ்க.. ”இந்தி vs தமிழ்” தொடங்கியது மொழிப்போர்…… ட்வீட்_டரில்..!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹிந்தி குறித்து பேசிய கருத்துக்கு எதிராக  #தமிழ்வாழ்க என்ற ஹாஸ்டக் ட்ரெண்டாகி வருகின்றது. மக்களவை தேர்தலில் இரண்டாவது முறையாக பாஜக பொறுப்பேற்றதை தொடர்ந்து ஒரே நாடு , ஒரே மதம் , ஒரே மொழி கொள்கையை பின்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. மத்திய அரசின் தேர்வுகளில் இந்தி மொழி , புதிய கல்வி கொள்கையில் இந்தி மொழி என மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிக்கு எதிராக பல்வேறு மாநிலங்கள் தங்களின் எதிர்ப்பை […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

”அந்த பயம் இருக்கணும் டா”என்னடா இது இந்திக்கு வந்த சோதனை….!!

இந்தி திணிப்பு எதிராக ட்வீட்_டரில் ஹாஷ்டாக் வைரலாகி வருவதால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். மக்களவை தேர்தலில் இரண்டாவது முறையாக பாஜக பொறுப்பேற்றதை தொடர்ந்து ஒரே நாடு , ஒரே மதம் , ஒரே மொழி கொள்கையை பின்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. மத்திய அரசின் தேர்வுகளில் இந்தி மொழி , புதிய கல்வி கொள்கையில் இந்தி மொழி என மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிக்கு எதிராக பல்வேறு மாநிலங்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். குறிப்பாக தமிழகம் […]

Categories
தேசிய செய்திகள்

“வாய் கொடுத்து மாட்டிய அமித்ஷா”…. இந்திக்கு வந்த சோகம்.!!

 அமித்ஷாவின் கருத்துக்கு இந்தி தினத்தில் இந்திக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.  இந்தியாவில் இந்தி தினம் கொண்டாடப்படுகிறது . இந்தி தினத்தையொட்டி ஒரே நாடு ஒரே மொழி என்ற அடிப்படையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,  இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு. ஆனால் முழு நாட்டிற்கும்  ஒரு மொழி இருப்பது மிகவும் முக்கியம்.   மேலும் இது உலகில் இந்தியாவின் அடையாளமாக […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தி மொழியால் தான் இந்தியாவை ஒருங்கிணைக்க முடியும்”… சர்ச்சையில் சிக்கிய அமித்ஷா..!!

இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழியால் மட்டுமே முடியும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிவிட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.  இந்தியாவில் இந்தி தினம் கொண்டாடப்படுகிறது .இந்தி தினத்தையொட்டி ஒரே நாடு ஒரே மொழி என்ற அடிப்படையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,  இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு. ஆனால் முழு நாட்டிற்கும்  ஒரு மொழி இருப்பது மிகவும் முக்கியம். இது உலகில் இந்தியாவின் அடையாளமாக மாற […]

Categories
தேசிய செய்திகள்

செப்.14 முதல் ஆன்லைனில்…. 20 நாள் ஏலம்….மோடியின் பரிசு ….!!

பிரதமர் மோடியின் நினைவு பரிசுக்கள் செப்டம்பர் 14 தொடங்கி 20 நாட்கள் நடைபெறுமென்று மத்திய அமைச்சர் பிரகலாத் படேல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ஒவ்வொரு முறையும் அரசு முறை பயணமாக வெளிநாடு செல்வார். அப்போது அவருக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்று , சந்தித்து பரிசுப்பொருட்களை வழங்குவார்கள். இந்த பரிசுப்பொருட்களை ஏலம் விட்டு இதில் இருந்து வரும் வருவாயை கங்கையை சுத்தம் செய்வதற்கான திட்டத்தின் செலவிற்க்கு வழங்குகின்றது.ஏற்கனவே மோடிக்கு கிடைத்த பரிசுப்பொருட்களை மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் ஏலம் விட்டது.14 நாட்கள் […]

Categories
தேசிய செய்திகள்

செத்து விட்டார்… அடக்கம் செய்தாச்சு…. உறவினர்கள் முன் நின்ன அதிசயம்…!!

அடக்கம் செய்யப்பட்டதாக உறவினர்கள் கருதப்பட்டவர் மீண்டும் உயிரோடு வந்த சம்பவம்பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ் குமார். 49 வயதான இவர் மனநோயால் பாதிக்கப்பட்டராவார். கடந்த மாதம் 26ஆம் தேதி  சஞ்சீவ் குமார் காணாமல் போயுள்ளார். இதனால் அக்கம்பக்கத்தில் தேடிய இவரின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். வழக்கு பதிவு செய்த காவல்துறையும் தேடி வந்த நிலையில் உறவினர்களும் காத்திருந்தனர்.ஒரு நாள்  சஞ்சீவ் குமார் வீட்டிற்கு அருகில் இருந்த ஆற்றில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கிடைத்தது. […]

Categories
தேசிய செய்திகள்

“எனக்கு பெண் கிடைக்கவில்லை”…. மன உளைச்சலில் பதவியை ராஜினாமா செய்த கான்ஸ்டபிள்..!!

தெலுங்கானாவில் 29 வயதான கான்ஸ்டபிள் ஒருவர் திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை என்று கூறி மன உளைச்சலுடன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.     தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 29 வயதான சித்தாந்தி பிரதாப் என்பவர் கடந்த 2014-ஆம் ஆண்டு  காவல்துறையில் கான்ஸ்டபிளாக  பணியில் சேர்ந்துள்ளார். பொறியியல் பட்டதாரியான இவர் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.இது தொடர்பாக அவர் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அதில் குறிப்பிட்டதாவது, சார்மினார் காவல் நிலையத்தில் சித்தாந்தி பிரதாப் என்னும் நான் சில கோரிக்கைகளை உங்களின் கவனத்திற்கு முன் […]

Categories
தேசிய செய்திகள்

“ஓட்டு மொத்த குடும்பத்தினருக்கு விஷம்”…. காதலனுடன் தப்பி ஓடிய சிறுமி… வலை வீசும் போலீசார்…!!

உத்திரப் பிரதேச மாநிலத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த குடுத்பத்தினருக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து விட்டு காதலனுடன் சிறுமி தப்பி ஓடிவிட்டார்.  உத்திரப் பிரதேச மாநிலம் மொரதாபாத்  மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அதே பகுதியில் வசித்து வரும் அரவிந்த் குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார். 18 கூட ஆகாத அந்தப் பெண்ணின்  காதலை பெற்றோர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். கடந்த ஆண்டு தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக  காதலனான அரவிந்த் […]

Categories
தேசிய செய்திகள்

முதன்முறையாக…. “2020 உலக தரவரிசை பட்டியலில்” அண்ணா பலக்லைக்கழகம்…!!

உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முதன்முறையாக இடம்பெற்றுள்ளது. ஆராய்ச்சி கட்டுரைகள், ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அறிவுசார்ந்த திறன்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் உலக அளவில் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியல் தர வரிசைப் படுத்தி ஒவ்வொரு ஆண்டும் டைம்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. 2020 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இந்நிறுவனம் இன்று வெளியிட்டது. அதில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் முதலிடத்தையும், அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும், மூன்றாவது இடத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இடம்பெற்றுள்ளன. முதல் 10 […]

Categories
தேசிய செய்திகள்

இனி போன் தொலைந்தால் கவலையில்லை…. புதிய தொழில்நுட்பம் அறிமுகம்…. மத்திய அரசு அதிரடி…!!

திருடுபோன ஸ்மார்ட்போன்களை கண்டுபிடிப்பதற்காக புதிய தொழில்நுட்பம் ஒன்றை இந்திய அரசு கண்டுபிடித்துள்ளது.  இனிமேல் உங்களது ஸ்மார்ட் போன் திருடு போனால் அது பற்றி அதிகமாக கவலை கொள்ள வேண்டாம். ஏனென்றால் அதை கண்டு பிடித்து ஒப்படைக்கப் தான் இந்திய அரசு தற்போது புதிய தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கலாம் ஆனால் அதுதான் உண்மை. வழக்கமாக ஸ்மார்ட் போன் திருடு போனால் காவல்நிலையத்தில் புகார் அளிப்போம். ஆனால் நவீன உலகில் உள்ள திருடர்கள் நாம் காவல் […]

Categories
தேசிய செய்திகள்

“அடிக்கடி செல்போனில் பேசும் பெண்”… பாம்புகள் மீது அமர்ந்து உயிரிழந்த சோகம்..!!

உத்திர பிரதேச மாநிலத்தில்  செல்போனில்  பேசியபடியே பெண் ஒருவர் பாம்புகள்  மீது அமர்ந்ததால் பரிதாபமாக உயிரிழந்தார்.   உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள ரியானவ்  கிராமத்தை சேர்ந்த ஜெய் சிங் யாதவ் தாய்லாந்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீதா என்பவர் தாய்லாந்தில் இருக்கும் தன்னுடைய கணவன் ஜெய்சிங்கிடம் அடிக்கடி போனில் பேசி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இவர்கள் பேச ஆரம்பித்து விட்டாலே மணிக்கணக்கில் பேசுவார்கள். அதேபோல நேற்றும் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்த கீதா பேச்சு சுவாரஸ்யத்தில் அப்படியே […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்முவில் தாக்குதல்….. 250 பயங்கரவாதிகள்….. 30 முகாம்கள்…. உளவுத்துறை எச்சரிக்கை…!!

ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்த சுமார் 250 பயங்கரவாதிகள் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே முகாமிட்டு உள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அண்மையில் ரத்து செய்தது.  இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் இந்தியாவுடனான உறவை குறைத்துக் கொண்டது.மேலும் சீனாவின் உதவியுடன் ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடம் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியது. ஆனால் பெரும்பாலான நாடுகள் காஷ்மீர் பிரச்சனை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என தெரிவித்து விட்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

”பயங்கர ஆயுதங்களுடன் லாரி பறிமுதல்” ஜம்முவில் பரபரப்பு…!!

பயங்கர ஆயுதங்களுடன்  ஜம்முவின் கத்துவா பகுதியில் லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் சர்வதேச கவனத்தை திசை திருப்புவதற்காக பயங்கரவாதத்தை கையில் எடுத்திருக்கிறது.கஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதலை நடத்த பயங்கரவாத முகாம்கள் பாகிஸ்தானில் அமைக்கப்பட்டிருப்பதாகவும் , பயங்கரவாதிகள் இந்திய எல்லையில் முகாமிட்டு இருப்பதாகவும் செய்தி வெளியாகியது. இந்நிலையில் இதை உறுதி செய்யும் விதமாக தற்போது லாரி ஒன்று பிடிபட்டுள்ளது.ஜம்முவின் கத்துவா பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது . இது தீவிரவாதிகளின் சதி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சின்ன தப்புனா பனிஷ்மென்ட் கிடையாது… அபராதம் கிடையாது… மத்திய அமைச்சர் ட்விட்…!!

சிறிய விதிமீறல்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுப்பத்தை தவிர்க்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு  அளித்திருப்பதாக நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டிருந்தார். வருமான வரித்துறையினர் கூடுதலாக வசூலித்த தொகையை திரும்ப பெறுவதற்கு வருமான வரி செலுத்தாதவர்கள் மீதான நடவடிக்கை விதிகளை தளர்த்த மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக வருமான வரித் துறைக்கு செப்டம்பர் ஒன்பதாம் தேதி அனுப்பிய சுற்றறிக்கையில் வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயம் செய்துள்ளது. பிடித்தம் செய்த தொகையை செலுத்த நிறுவனங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

”கண்டுபிடித்து தாருங்கள்” வைகோ மனு- நீதிமன்றம் மறுப்பு…!!

பரூக் அப்துல்லா-வை கண்டுபிடித்து தரக்கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது இலிருந்து அங்கு மிகவும் பதட்டமான சூழலில் நீடிக்கின்றது.இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அண்ணா பிறந்தநாளையொட்டி காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை அழைக்கும் விதமாக வைகோ  தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கண்டுபிடித்து தர கோரி மதிமுக பொதுச்செயலாளர் […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

3 கோப்பை வென்ற போதிலும்… அங்கீகாரம் இல்லை…. பிசிசிஐ மீது பயிற்சியாளர் பகீர் குற்றசாட்டு…!!

பார்வையற்ற வீரர்களுக்கு பிசிசிஐ முக்கியத்துவம் அளிப்பதில்லை என பயிற்சியாளர் பேட்ரி ராஜ்குமார் குற்றம்சாட்டி இருக்கிறார். சென்னை கிழக்கு ரோட்டரி கிளப் சார்பில் இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பேட்ரி ராஜ்குமாருக்கு துரோணாச்சாரியா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதையடுத்து நிகழிச்சியில் பேசிய  ராஜ்குமார் இரண்டு மூன்று உலகக் கோப்பைகளை வென்ற மற்ற வீரர்களை போல தங்கள் வீரர்களை பிசிசிஐ அங்கீகரிக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது என்றார். பேட்ரி ராஜ்குமார் கடந்த 2012ல் பயிற்சியாளராக பொறுப்பேற்றார்.  இதையடுத்து பார்வையற்ற இந்திய […]

Categories
தேசிய செய்திகள்

“தீவிரவாத அச்சுறுத்தல்” இந்திய ராணுவ அதிகாரி மாயம் …. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

திடீரென மாயமான  இந்திய ராணுவ அதிகாரி சோலிங்கை  தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததிலிருந்து தொடர்ந்து தீவிரவாத அச்சுறுத்தல்கள் இந்தியாவிற்கு அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவின் முக்கிய இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து எல்லைப்பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அவ்வப்போது வெளியிடும் கருத்துக்களும் தீவிரவாத அச்சுறுத்தலை மென்மேலும் இந்திய மக்களிடையே […]

Categories
தேசிய செய்திகள்

5 நாளில் 72,50,000 கலெக்ஷன் … காவல்துறை காட்டில் பணமழை ..!!

பெங்களூரில் போக்குவரத்து காவல் துறையினர் சாலை விதியை மீறியவர்களிடமிருந்து அதிரடி அபராத வசூலில் ஈடுபட்டது. இந்தியாவில் சாலை போக்குவரத்து விதிகளை மீறுவோரிடம் அதிகளவு அபராதம் வசூலிப்பதற்கான சட்டம் கடந்த வாரம் அமலான நிலையில் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் போக்குவரத்து அதிகாரிகள் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடமிருந்து அதிக அளவு அபராதம் வசூலித்து வருகின்றனர். குறிப்பாக சில இடங்களில் இந்த புதிய அபராத தொகை அடிதடிகளுக்கும் காரணமானது. இதில் குறிப்பாக பெங்களூரு போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் கடந்த 5 நாட்களில் சாலை […]

Categories
தேசிய செய்திகள்

“மோட்டார் வாகனச் சட்டத்தை”…. இப்போது செயல்படுத்த முடியாது… மம்தா பானர்ஜி அதிரடி .!!

மோட்டார் வாகனச் சட்டத்தை என்னால் இப்போது செயல்படுத்த முடியாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.  இந்தியா முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டத்தை  கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்தது. அதன்படி வாகன விதிகளை மீறுபவர்களுக்கு பல மடங்கு அபராதம் விதிக்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் விதியை மீறும் வாகன ஓட்டிகள் ஆயிரக்கணக்கில் அபராதம் செலுத்தி  வருகின்றனர். இந்த புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு ஒரு சிலர் ஆதரவாகவும் பலர் எதிர்ப்பையும் […]

Categories
தேசிய செய்திகள்

”பப்ஜி விளையாட எதிர்ப்பு” தந்தையை கொன்ற மகன்….!!

பப்ஜி கேம்_மை விளையாட எதிர்ப்பு தெரிவித்த தந்தையை மகன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இரக்கம் , கருணை , மன்னிப்பு , அன்பு போன்றவையே மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டிய குணங்கள் என காலம் காலமாக அரசியல் தலைவர்கள் முதல் ஆன்மிகம் வரை அறிவுறுத்தி வருகின்றனர்.ஆனால் இந்தக் குணங்களுக்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்காமல் கொடூர மனதோடு விளையாடுவது தான் பப்ஜி. இந்த குணம் இருந்தால் தான் இந்த விளையாட்டை ஜெயிக்க முடியும். நீங்கள் பிறரை கொலை செய்வது […]

Categories
தேசிய செய்திகள்

வெளியான விக்ரம் லேண்டர் போட்டோ உண்மையா..?? போலியா..?? குழப்பத்தில் நெட்டிசன்கள்..!!

நிலவில் கண்டுபிடிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் புகைப்படம் என்று சமூக வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படங்கள் போலியானவை என தெரியவந்துள்ளது.  கடந்த சனிக்கிழமை நிலவரப்படி ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் விக்ரம் லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து நிலவை சுற்றி வரும் சந்திராயன்-2 ஆர்பிட்டர் இருக்கும் இடத்தை கண்டறிந்து புகைப்படம் எடுத்துள்ளதாகவும் அவர் உடன் தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவரின் புகைப்படத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இந்த நிலையில் விக்ரமின் புகைப்படத்தையும் […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

கலை-அறிவியல் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு…. தமிழக அரசு ஒப்புதல்…!!

பொறியியல் படிப்புகளை போன்று கலை அறிவியல் படிப்புகளுக்கும் ஆன்-லைனில் கலந்தாய்வு நடத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.  கலை அறிவியல் படிப்புகளுக்கு கலந்தாய்வு நடத்துவது குறித்து உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் உயர்கல்வித் துறை தொடர்புடைய பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது குறித்த வழிமுறைகள், கல்லூரிகளை நவீனப்படுத்துதல், தொழில்நுட்ப மயமாக்கல், தானியங்கி மயமாக்கல், உள் கட்டமைப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவை […]

Categories
தேசிய செய்திகள்

பொறுக்கிகளிடம் இருந்து மீள ”நவீன உள்ளாடை” அசாம் பொறியாளர் கண்டுபிடிப்பு…!!

பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்கள் தப்பிப்பதற்கான நவீன உள்ளாடையை அசாம் பொறியாளர் உருவாக்கியுள்ளார். இந்தியா முழுவதும் பெண்கள், மாணவிகளுக்கு பணியிடம் , பொது இடங்கள் மட்டுமின்றி பேருந்து ரயில் போன்ற வாகனங்களிலும் கூட பெண்கள் மீதான பாலியல் வன்முறை நாளுக்கு நாள் பெருகி வருகின்றது.இந்நிலையில் பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்கள் தப்பிக்கும் வகையில் அதிநவீன பாதுகாப்பு அம்சங்களை கொண்ட உள்ளாடையை அசாம் மாநிலம் கவ்காத்தியை சேர்ந்த பொறியாளர் உருவாக்கியுள்ளார். இந்த உள்ளாடை அணிந்திருக்கும் பெண்ணிடம் பொறுக்கிகள் யாரேனும் பாலியல் வன்கொடுமை செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ”சாலை விதிமீறல் அபராதம் குறைப்பு” மத்திய அமைச்சர் அறிவிப்பு…!!

சாலை விதிமீறலை மீறி வசூல் செய்யும் தொகையை மாநில அரசு விரும்பினால் குறைந்த்துக் கொள்ளலலாம் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்காரி  தெரிவித்துள்ளார். புதிய மோட்டார் வாகன சட்டப்படி சாலை விதிகளை மீறுவோருக்கு அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ 10,000_ஆக அதிகரிப்பு, ஹெல்மெட் அணியாமல் செல்வதற்கான அபராதம் 1000_ஆம்  அதிகரிப்பு ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டினால் விதிக்கப்படும் அபராதம் ரூ 5000 ஆயிரமாக மத்திய அரசு உயர்த்தி இருந்தது. இந்தியா முழுவதும் உயர்த்தப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

11 நாட்கள் தான்…. லேண்டருடன் தொடர்பு கொள்ள செய்யப்படும் யுக்திகள்… வெற்றி பெறுமா சந்திராயன்-2…!!

இன்னும் 11 நாட்களுக்குள் விக்ரம் லேண்டருடன் தொடர்பை மேற்கொள்ள விஞ்சானிகள் மேற்கொள்ளும் யுக்திகள் குறித்து காண்போம்: இப்பொழுது விக்ரம் லேண்டர் நிலவில் எங்கே லேண்ட் ஆக வேண்டும் என்று எதிர்பார்த்தோமோ அதற்கு அருகிலேயே சாய்ந்த நிலையில் கிடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விக்ரம் லேண்டர் இரண்டு விதமான சப்ளை செய்து வருகிறது. ஒன்று அதன் வெளிப்புறத்தில் சோலார் பேனல்கள் சூரிய கதிர்கள் அதன் மேல் விழும் பொழுது அது ஒரு மின்சார ஆற்றலை வெளிப்படுத்தும். இரண்டாவது அதனுள்ளேயே […]

Categories
தேசிய செய்திகள்

3,10,00,000 பேர் கஞ்சா அடிமைகள்….. இடம் பிடித்த 2 இந்திய நகரம்… ஆய்வில் அதிர்ச்சி…!!

உலக அளவில் கஞ்சா பயன்படுத்துவதில் இந்தியாவின் இரண்டு நகரங்கள் முதல் 10 இடங்களில் உள்ளன. உலகம் முழுவதும் நடத்தப்பட்ட கஞ்சா குறித்த ஆய்வில் இந்தியா_வின் இரண்டு முக்கிய நகரங்களை 10 இடங்களுக்குள் இருக்கின்றது என்று தெரியவந்துள்ளது. ஒரே ஆண்டில் 77.4 டன் கஞ்சா பயன்படுத்திய நியூயார்க் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் பாகிஸ்தானின் கராச்சி உள்ளதாகவும் இங்கு 42 டன் கஞ்சா பயன்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்த டெல்லியில் கடந்த ஆண்டு மட்டும் 39 […]

Categories
தேசிய செய்திகள்

“வீட்டுக்காவலில் வைப்பதால் என்னை கட்டுப்படுத்த முடியாது”… சந்திரபாபு நாயுடு பேட்டி.!!

வீட்டுக்காவலில் வைப்பதால் என்னை கட்டுப்படுத்த முடியாது என்று தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு பேட்டியளித்துள்ளார்.  ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன்மோகன் ரெட்டி  தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியினர் ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சியினரை தாக்குவதாகவும்,  அரசியல்வன்முறையில் ஈடுபடுவதாகவும்  புகார் தெரிவித்து இன்று பேரணி நடத்த தெலுங்கு தேசம் அழைப்பு விடுத்திருந்தது.   இந்நிலையில் இன்று காலை ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் நரலோகேஷையும் […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வீட்டுக்காவலில் வைப்பு..!!

முன்னாள் ஆந்திர முதல்வரும், தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.    ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன்மோகன் ரெட்டி  தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியினர் ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சியினரை தாக்குவதாகவும்,  அரசியல்வன்முறையில் ஈடுபடுவதாகவும்  புகார் தெரிவித்து இன்று பேரணி நடத்த தெலுங்கு தேசம் அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். சந்திரபாபு நாயுடுவின் மகன் நரலோகேஷையும் ஜெகன்மோகன் […]

Categories
தேசிய செய்திகள்

இலவச ஹெல்மெட்…. “ரூ.500 அபராதம்”…. ஒடிசா போலீசார் புதிய முயற்சி.!!

புவனேஸ்வரில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.500 அபராதம் விதித்து  காவல்துறையினர்  இலவச ஹெல்மெட் வழங்குகின்றனர்.  இந்தியா முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா கடந்த செப்டெம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதன்படி வாகன விதிகளை மீறுபவர்களுக்கு பல மடங்கு அபராதம் விதிக்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் விதியை மீறும் வாகன ஓட்டிகள் ஆயிரக்கணக்கில் அபராதம் செலுத்தி  வருகின்றனர். இந்த நிலையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு காவல்துறையினரால் இலவச […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சந்திராயன்-2 வை கைவிடமாட்டோம்…. மோடிஜியின் 100 நாள் சாதனை பேட்டியில் நிர்மலா சீதாராமன் உறுதி..!!

மோடி தலைமையிலான மத்திய அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற 100 நாட்கள் சாதனைகள் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். 370வது சட்டபிரிவு நீக்கம்: தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி 370 பிரிவை ரத்து செய்தது பாஜக அரசு. 370-வது சட்டப்பிரிவை நீக்கயதன் மூலம் காஷ்மீரில் தொழில் முதலீடுகள் பெருகும் என்றும், இதன்மூலம் தொழில் தொடங்க ஏற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா 77 வது இடத்துக்கு முன்னேறி இருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர்: […]

Categories

Tech |